Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்

Featured Replies

:lol: :lol: :lol::huh: :huh: :huh:

முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது பழைய கதை,

முழுக்கெலியையே கருத்தால் மறைப்பது புதிய கலை!

சோற்றை பூசணிக்காயுக்குள் மறைப்பது இனிவரப்போகும் கதை! :P :P :P

  • Replies 152
  • Views 22.4k
  • Created
  • Last Reply

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007, 06:38 ஈழம்] [அ.அருணாசலம்]

"மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ“ பிளேக், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். எனவே அவர் நேற்றைய தாக்குதலின் மூலம் பாடங்களை கற்கவேண்டும்"

ஆம் பிரச்சனைக்குறிய பகுதிகளில் மின்னறிவிப்பு இல்லாமல் போககூடாது என்ற பாடத்தை கற்க்கவேண்டும்.

post-3672-1172649130_thumb.jpg

ஆட்லறி தாக்குதலில் காயப்பட்டவரை சிறிலங்கா இராணுவத்தினர் காப்பாற்றுகிறார்களாம். நடித்து எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது.

படம் யாகூவிலிருந்து

Edited by vishal

படம் சின்னதாக வருகிறது :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே எமலோகத்திற்கா? :blink::icon_mrgreen:

உவன் போக வேண்டிய இடம்தான். உவனை வச்சுதானே பல கொலைகள் நடக்குது. :icon_mrgreen:

காட்டப்பொம்மன் படத்தில எட்டப்பனுக்கு வெள்ளையன் வைன் பாட்டி வைத்து குஷிபடுத்துவது போல, சிங்கள தொலைக்காட்சி ஒன்று தண்ணிப்பாட்டி வச்சு, பேட்டி எடுத்து இருக்கு, இந்த கரிநாய் ஒப்புதல் வாங்கு மூலம் கொடுக்குது பாத்தியளோடா அப்பா? :angry: :angry: :angry:

Edited by சித்தன்

மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். :blink:

யாழ் களம் ஈழத்தமிழர்களின் உத்தியோக பூர்வ தகவல் களமாக எல்லோ உலகத்தில கருதினம். அதிலும் இங்குள்ள ஆய்வாளர்கள் உலக தரத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை சிலர் அடிக்கடி மறந்திடுறார்கள்..! எனி அவதானமா வையுங்கோ கருத்தை.

இப்பிடியான ஒரு களத்திலைதான் நீங்களும் குப்பை கொட்டுறீங்கள். இப்பிடி கேவலம் கெட்ட ஒரு களத்திலை அங்கத்தவராக இருக்கிறதிலும் பாக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தி

( வேற பேரிலை மீண்டும் வந்தாலும்) வெளியில போகலாம் போல இருக்கு இல்லையா. ??? :P :P :P :P

post-3672-1172649130_thumb.jpg

ஆட்லறி தாக்குதலில் காயப்பட்டவரை சிறிலங்கா இராணுவத்தினர் காப்பாற்றுகிறார்களாம். நடித்து எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது.

படம் யாகூவிலிருந்து

உதைப்பாக்கேக்கை ஏதோ காப்பாத்துற மாதிரி தெரியேல்லையே.? கொல்ல கொண்டு போறமாதிரி எல்லோ கிடக்கு.! :P

ஐயா எங்கட புலிகளுக்கு எல்லாம் தெரியும்! புலிகளின் புலனாய்வு வலையமைப்பு எப்படிப் பட்டது எண்டு தெரியும் தானே??? ஐயா தெரிஞ்சபடியால தான் அமரிக்கனும், இத்தாலிக்காரனும் சிறு சிறு சிராய்ப்போட தப்பீட்டினம்.

அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் எண்டு நான் அடித்துச் சொல்லுறன்!!!!

அண்ணை வணக்கம்.!

நீங்கள் நிதர்சனம். கொம் எண்ட இணையத்தை பாக்கிறனீங்களோ தெரியாது. முடிஞ்சால் ஒருக்கா பாருங்கோ. சிங்கள செய்தி சேவைகள் எல்லாம் அதை புலிகளின் இணையம் எண்டுவினம், ஏனெண்டால் அதிலை தீவிரமான கருத்துக்கள்தான் அதிகமாய் வாறது. நீங்கள் தமிழ் தேசியத்தின் வெறித்தனமான ஆதரவாளராய் எப்பிடி ( சிங்கள உறுமய, JVP மாதிரி) இருக்கிறீங்களோ அப்பிடித்தான் அந்த இணையமும். அவர்களையோ உங்களையோ பிழை சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை.

ஆனால் நீங்கள் சொல்லும் செய்திகள் மட்டுமே புலிகளில் செய்தியாக்க படும் செயலை எப்போதுமே அரச தரப்பு ஊடகங்கள் செய்து வருகின்றன. உங்களை ஒரு புலியாக சித்தரிக்கிறது உங்களுக்கும் பெருமையானது. ஆனால் புலிகள் உண்மையில் சொல்ல வரும் செய்தி இருட்டடிப்பு செய்யப்படும் நிலையை பொதுவான இணையங்களில் நீங்கள் வைக்கும் கருத்துக்கள் கொண்டுவரலாம்.

யாழ் இணையத்தில் புலிகளின் சார்பில் பேச வல்ல ஒருவர் சொன்னார் எண்டு துரோக இணையங்களின் வரலாம். அதையே அரச சிங்கள ஊடகங்களும் செய்தியாக உலகுக்கு சொல்லும் அபாயம் இருக்கிறதையும் ஒருக்கா உணர்ந்து கொள்ளுங்கோ.

அதோடை உலக இராஜதந்திரிகளை கொல்ல முயலும் கொலைகாற பட்டம் இப்போ அவசியமா.? உங்களின் விடுதலைக்கு இது எந்தளவு உதவும் எண்டுறீர்கள்.??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 எறிகணைகளுக்கே இந்த ?#8220;ட்டம் எடுப்பவர்கள் எப்படி தமிழரின் இறுதிப்போரை சமாளிக்கப் போகின்றார்கள்.?

http://www.tamilvoice.dk/video/srilanka270207.wmv

Edited by Vasan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசான் அப்படி சொல்லுங்கோ முதலில் நிங்கள் தந்தகாட்சிக்கு நன்றிஃஇப்படியான காட்சிள் பலவற்றை உங்களிடம் இருந்துஎதிர்பார்கின்றோம்ஃஅ

அண்ணை வணக்கம்.!

நீங்கள் நிதர்சனம். கொம் எண்ட இணையத்தை பாக்கிறனீங்களோ தெரியாது. முடிஞ்சால் ஒருக்கா பாருங்கோ. சிங்கள செய்தி சேவைகள் எல்லாம் அதை புலிகளின் இணையம் எண்டுவினம், ஏனெண்டால் அதிலை தீவிரமான கருத்துக்கள்தான் அதிகமாய் வாறது. நீங்கள் தமிழ் தேசியத்தின் வெறித்தனமான ஆதரவாளராய் எப்பிடி ( சிங்கள உறுமய, JVP மாதிரி) இருக்கிறீங்களோ அப்பிடித்தான் அந்த இணையமும். அவர்களையோ உங்களையோ பிழை சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை.

ஆனால் நீங்கள் சொல்லும் செய்திகள் மட்டுமே புலிகளில் செய்தியாக்க படும் செயலை எப்போதுமே அரச தரப்பு ஊடகங்கள் செய்து வருகின்றன. உங்களை ஒரு புலியாக சித்தரிக்கிறது உங்களுக்கும் பெருமையானது. ஆனால் புலிகள் உண்மையில் சொல்ல வரும் செய்தி இருட்டடிப்பு செய்யப்படும் நிலையை பொதுவான இணையங்களில் நீங்கள் வைக்கும் கருத்துக்கள் கொண்டுவரலாம்.

யாழ் இணையத்தில் புலிகளின் சார்பில் பேச வல்ல ஒருவர் சொன்னார் எண்டு துரோக இணையங்களின் வரலாம். அதையே அரச சிங்கள ஊடகங்களும் செய்தியாக உலகுக்கு சொல்லும் அபாயம் இருக்கிறதையும் ஒருக்கா உணர்ந்து கொள்ளுங்கோ.

அதோடை உலக இராஜதந்திரிகளை கொல்ல முயலும் கொலைகாற பட்டம் இப்போ அவசியமா.? உங்களின் விடுதலைக்கு இது எந்தளவு உதவும் எண்டுறீர்கள்.??

ஆயிரத்தில் ஒரு வார்த்தை ஆனால் இப்படி எளுதுபவர்கள் உண்மையில் தமில் தேசிய ஆதரவளர்கலாய் இருக்க மாட்டர்கள் உங்களுக்கு புரியும்தானே.....

அண்ணை வணக்கம்.!

நீங்கள் நிதர்சனம். கொம் எண்ட இணையத்தை பாக்கிறனீங்களோ தெரியாது. முடிஞ்சால் ஒருக்கா பாருங்கோ. சிங்கள செய்தி சேவைகள் எல்லாம் அதை புலிகளின் இணையம் எண்டுவினம், ஏனெண்டால் அதிலை தீவிரமான கருத்துக்கள்தான் அதிகமாய் வாறது. நீங்கள் தமிழ் தேசியத்தின் வெறித்தனமான ஆதரவாளராய் எப்பிடி ( சிங்கள உறுமய, JVP மாதிரி) இருக்கிறீங்களோ அப்பிடித்தான் அந்த இணையமும். அவர்களையோ உங்களையோ பிழை சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை.

ஆனால் நீங்கள் சொல்லும் செய்திகள் மட்டுமே புலிகளில் செய்தியாக்க படும் செயலை எப்போதுமே அரச தரப்பு ஊடகங்கள் செய்து வருகின்றன. உங்களை ஒரு புலியாக சித்தரிக்கிறது உங்களுக்கும் பெருமையானது. ஆனால் புலிகள் உண்மையில் சொல்ல வரும் செய்தி இருட்டடிப்பு செய்யப்படும் நிலையை பொதுவான இணையங்களில் நீங்கள் வைக்கும் கருத்துக்கள் கொண்டுவரலாம்.

யாழ் இணையத்தில் புலிகளின் சார்பில் பேச வல்ல ஒருவர் சொன்னார் எண்டு துரோக இணையங்களின் வரலாம். அதையே அரச சிங்கள ஊடகங்களும் செய்தியாக உலகுக்கு சொல்லும் அபாயம் இருக்கிறதையும் ஒருக்கா உணர்ந்து கொள்ளுங்கோ.

அதோடை உலக இராஜதந்திரிகளை கொல்ல முயலும் கொலைகாற பட்டம் இப்போ அவசியமா.? உங்களின் விடுதலைக்கு இது எந்தளவு உதவும் எண்டுறீர்கள்.??

ஐயா அகிலன்,

நிதர்சனம்.காம் என்பது சேதுஎனும் தனி மனிதனால் நடாத்தப்படுவது. அதற்கு புலிச்சாயம் பூசுவதன் காரணம் வேறு.

புலிகளிடம் நிதர்சனம் எனும் ஒரு அமைப்பு உண்டு. பலர் அதுவும் இதுவும் ஒன்று என எண்ணினம்.

நான் ஒன்றும் வெறித்தனமன கருத்துக்களை கூறவில்லை ஐயா.

உலங்குவானூர்தி மீது மோட்டார் தாக்குதலுக்கும் நிதர்சனம் இணையத்திற்கும் என்ன சம்மந்தம்? :blink::icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சரியா? பிழையா? என்று தெரியவில்லை

ஆனால் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

கிட்டத்தட்ட 25 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்துவருகின்றேன்

அனேகமாக இங்கு நடந்த அனைத்து ஊர்வலங்கள்

பேரணிகள்கலந்துகொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்புச் சம்பவம் வெளிப்படுத்தும் உண்மைகள்

மட்டக்களப்பில் இராஜதந்திரிகள் உட்பட சில அதிகாரிகளை ஏற்றிவந்த ஹெலிக்கொப்டர் நேற்றுக் காலை தரை இறங்கிய சமயம் நேர்ந்த அனர்த்தம் பலத்த சர்ச்சையையும் வாதப்பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தை ஒட்டி, காலதாமதம் செய் யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் தமிழீழ விடு தலைப் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.

இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியிருக் கின்றார்கள் என்பதை விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளத் தவறவில்லை.

இவ்விவகாரத்தை ஒட்டி விடுதலைப்புலி களும், இலங்கை அரசுத் தரப்பும் மாறி மாறி ஒரு வர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பெரும் இராஜதந்திர சர்ச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.

இந்தச் சம்பவத்தின் விளைவு இராஜதந்திர ரீதி யிலும், போரியல் நடவடிக்கைப் போக்கிலும் எத் தகைய பெறுபேறுகளை அல்லது பிரதிபலன் களையோ, பாதிப்புக்களையோ தரப்புகளுக்கு ஏற்படுத்தப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால் இந்தச் சம்பவம் சில அடிப்படை உண் மைகளைத் தெளிவுபடுத்தத் தவறவில்லை என் பதையும் நாம் நோக்கவேண்டும்.

கிழக்கின் பெரும் பகுதியை விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டோம், அவர்களைத் தொப்பிகலைக் காட்டுக்கு அப்பால் விரட்டியடித்துவிட்டோம் என்றெல்லாம் தென்னி லங்கை மார்தட்டி வரும் பின்னணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

அதுவும் மட்டக்களப்பு நகரை அண்டி விமா னப்படையின் பிரதான தளத்தின் மூல மையப் பிர தேசமான விமான ஓடுபாதைப் பகுதி மற்றும் மட் டக்களப்பு நகரின் மையத்தில் உயர் பாதுகாப்பு பிர தேசத்தில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கு ஆகியவற்றை குறிதவறாது இலக்குவைத்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது 122 எம். எம். ரக ஷெல்கள் என இராணுவ வட்டா ரத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்புச் செய்தி கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை, கரடியனாறு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அண்டிய சில பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டிலேயே இன்னும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

புலிகளின் மைய நிலையமான வன்னிப் பெரு நிலப்பரப்புடன் பாதுகாப்பான தரைவழிப் பாதையோ, கடல்வழித் தொடர்போ அற்ற நிலையிலும் இப் பிராந்தியத்தில் கணிசமான பிரதேசம் இவ்வாறு புலி களால் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கும் நிலை யில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்டி ருக்கக்கூடிய 122எம்.எம். மோட்டார் ஷெல்களின் பொதுவான அதிகூடிய வீச்செல்லை 17 கிலோ மீற்றராகும். அப்படியானால், கொக்கட்டிச்சோலை யில் இருந்தோ அல்லது அதை அண்டிய பிரதேசம் ஒன்றிலிருந்தோ மட்டக்களப்பு விமானத் தளத்தின் மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலைப் புலிகள் நடத்தியிருக்கக்கூடும்.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் முடிவு கட்டி, அதன் மூலம் இனப்பிரச்சினையை அடக்கி, ஒடுக்கும் எண்ணம் கொண்டிருக்கும் தென்பகுதித் தீவிரப் போக்காளர்களுக்கு இச்சம்பவம் ஒரு செய் தியை எடுத்தியம்பத் தவறவில்லை.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் சில தினங்களுக்கு முன்னர் தெளிவு படுத்திய செய்திதான் அது.

""சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்ட தென்னிலங்கை, இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு சாத்தியம் என உணர்கிறது. ஆனால் நான் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. தமிழ் சமூ கத்தின் நியாயமான ஆதங்கங்களைக் கவனத்தில் கொள்ளும் சமாந்தர அரசியல் தந்திரோபாயம் இல் லாமல் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது.

""இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என நாம் நம்பவில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன் படுத்தித் தாக்குவதில் புலிகளுக்குக் குறிப்பிடத் தக்க வலிமை உண்டு. அதை நாம் குறைத்து மதிப் பிட்டு விடக்கூடாது.''

இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் சில தினங் களுக்கு முன்னர் கூறியவை, நிஜமாகவே அவரது கண் முன்னால் ஏனையோருக்கு ருசுப்படுத்தப் பட்டி ருக்கின்றன.

பயங்கரவாத முறையில் அல்லாமல், அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விமானப் படை யின் மையத்தளத்தின் மீது இராணுவ இலக்கு மீது மரபு ரீதியான யுத்தத் தாக்குதல் நடவடிக்கை முறை மூலம் தமது வலிமையை இச்சந்தர்ப்பத்தில் புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றார

தாக்குதலின் நேரடி ஒளிபரப்பு

அடி விழும் போது வேட்டியை தூக்கி கொண்டு ஓடுறார் கவச வாகனத்துக்குள் அமைச்சர் சமரசிங்கா :P :o

செல்லடி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பேயறைந்தது போல இருக்கீனம் அந்தக்கனத்தில் எம் கொல்லப்பட்ட உறவுகளினதும் யாழ் திறந்த வெளி சிறைச்சாலையிலும் தமிழர் தாயகமெங்கும் எம்மவர் படும் இன்னல்கள் கொஞ்ச நேரம் கண்ணுக்குள்ள வந்து மறைஞ்சிருக்கும் :o

Edited by ஈழவன்85

ஓடிவந்து பதுங்கும்போது மணிக்கூட்டில் நேரம் 9.25 சொச்சம் காட்டுகிறது. ஆனால் தாக்குதல் 8.30 க்கு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவ்வாறாயின் தாக்குதல் இடத்தில் இருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கிறது? இந்த கலவரங்களின் போதும் ஒரு சிறீ லங்கா குண்டர்படை தளபதி வெளிநாட்டு இராஜந்தந்திரிகளிற்கு பிரசங்கம் வேறு செய்கிறானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்க்கும்போது தெட்டத்தெளிவகவேதெரிகின்றது இவர்கள் பிளான்செய்துகொன்டுதான் வந்திருக்கின்றார்கள்ஃஇந்தவ

ஓடிவந்து பதுங்கும்போது மணிக்கூட்டில் நேரம் 9.25 சொச்சம் காட்டுகிறது. ஆனால் தாக்குதல் 8.30 க்கு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவ்வாறாயின் தாக்குதல் இடத்தில் இருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கிறது? இந்த கலவரங்களின் போதும் ஒரு சிறீ லங்கா குண்டர்படை தளபதி வெளிநாட்டு இராஜந்தந்திரிகளிற்கு பிரசங்கம் வேறு செய்கிறானே?

ஹிஹி அதுவும் கொச்சை ஆங்கிலத்தில் அவர் புலம்பிறார் அவர் புலம்பிறதை கேட்கும் நிலையில் அவங்கள் இல்லை பேயறந்த மாதிரியல்லா இருகிறாங்கள்

ஆகா என்னமா பிச்சுக்கொண்டு ஓடுகிறார் அமைச்சர் சமரசிங்க.

மகிந்த சமரசிங்கவ கொண்டு போய் சண்டைல விட்டா இப்பிடியாண நேரதில எப்படி வேகம ?#8220;டித் தப்புறது என்று சொல்லிக் கொடுப்பாரு

Edited by Prashanna

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாம்களில் தஞ்சமடைந்துள்ளவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொள்வதற்காக எனது தலைமையிலான வெளிநாட்டு தூதுவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் இன்று (நேற்று) காலை 8.40 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலமாக குறித்த மைதானத்தை சென்றடைந்து ஹெலியிருந்து இறங்கி 20 மீற்றர் தூரம் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் குண்டு ஒன்று வெடித்து வீழ்ந்தது என அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் தலைமையிலான தூது குழுவினர் விசேட ஹெலிகெப்டர் மூலமாக கொழும்பு இராணுவ மைதானத்தை நேற்று பிற்பகல் 3 மணியளவில் வந்திறங்கிய பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;மட்டக்களப்பு மைதானத்தில் ஹெலிகெப்டரை விட்டு இறங்கி சுமார் 20 மீற்றர் தூரத்திற்கு சென்றவேளை பாரிய சத்தத்துடன் மோட்டார் குண்டு ஒன்று வந்து வீழ்ந்து வெடித்தது . அப்போது அங்கிருந்தவர்கள் என்னையும் எங்களுடன் வந்த தூதுவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளையும் ஹெலியை விட்டு தூர ஒடுங்கள் ஓடுங்கள் என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் மைதானத்தை விட்டு தூரத்திற்கு சென்று விட்டனர்.

மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் மண் மேல் எழுந்து எங்குமே மண் புகைமண்டலமாக காட்சியளித்தது.இந்த விஜயத்தின் போது நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றுவதற்காக நான் தயாராகி கொண்டிருந்த போது மற்றுமொறு குண்டு அதே மைதானத்தில் வெடித்து வீழ்ந்தது.

இச்சம்பவத்தில் பலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன என்னுடன் வருகைதந்திருந்த தூதுவர்களில் இத்தாலிய தூதுவருக்கு தலையின் பின் புறத்திலும் எனது அமைச்சில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டிருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மகிந்த சமரசிங்க நல்லாத்தான் லைவ் ரிப்போட் கொடுக்கிறார், பேசாமல் இலங்கை கிரிக்கட் அணி கூட அனுப்பியிருக்கலாம், மட்ச்ல நல்லா கொமன்ட்றி கொடுத்து இருப்பாரு

மட்டக்களப்புச் சம்பவம் வெளிப்படுத்தும் உண்மைகள் - காலதாமதம் செய்யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.

மட்டக்களப்பில் இராஜதந்திரிகள் உட்பட சில அதிகாரிகளை ஏற்றிவந்த ஹெலிக்கொப்டர் நேற்றுக் காலை தரை இறங்கிய சமயம் நேர்ந்த அனர்த்தம் பலத்த சர்ச்சையையும் வாதப்பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தை ஒட்டி, காலதாமதம் செய்யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் தமிழீழ விடு தலைப் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.

இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியிருக் கின்றார்கள் என்பதை விடுதலைப் புலிகள் ஒப்புக்கொள்ளத் தவறவில்லை.

இவ்விவகாரத்தை ஒட்டி விடுதலைப்புலி களும், இலங்கை அரசுத் தரப்பும் மாறி மாறி ஒரு வர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பெரும் இராஜதந்திர சர்ச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.

இந்தச் சம்பவத்தின் விளைவு இராஜதந்திர ரீதி யிலும், போரியல் நடவடிக்கைப் போக்கிலும் எத் தகைய பெறுபேறுகளை அல்லது பிரதிபலன் களையோ, பாதிப்புக்களையோ தரப்புகளுக்கு ஏற்படுத்தப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால் இந்தச் சம்பவம் சில அடிப்படை உண் மைகளைத் தெளிவுபடுத்தத் தவறவில்லை என் பதையும் நாம் நோக்கவேண்டும்.

கிழக்கின் பெரும் பகுதியை விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டோம், அவர்களைத் தொப்பிகலைக் காட்டுக்கு அப்பால் விரட்டியடித்துவிட்டோம் என்றெல்லாம் தென்னி லங்கை மார்தட்டி வரும் பின்னணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

அதுவும் மட்டக்களப்பு நகரை அண்டி விமா னப்படையின் பிரதான தளத்தின் மூல மையப் பிர தேசமான விமான ஓடுபாதைப் பகுதி மற்றும் மட் டக்களப்பு நகரின் மையத்தில் உயர் பாதுகாப்பு பிர தேசத்தில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கு ஆகியவற்றை குறிதவறாது இலக்குவைத்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது 122 எம். எம். ரக ஷெல்கள் என இராணுவ வட்டா ரத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்புச் செய்தி கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை, கரடியனாறு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அண்டிய சில பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டிலேயே இன்னும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

புலிகளின் மைய நிலையமான வன்னிப் பெரு நிலப்பரப்புடன் பாதுகாப்பான தரைவழிப் பாதையோ, கடல்வழித் தொடர்போ அற்ற நிலையிலும் இப் பிராந்தியத்தில் கணிசமான பிரதேசம் இவ்வாறு புலி களால் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கும் நிலை யில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்டி ருக்கக்கூடிய 122எம்.எம். மோட்டார் ஷெல்களின் பொதுவான அதிகூடிய வீச்செல்லை 17 கிலோ மீற்றராகும். அப்படியானால், கொக்கட்டிச்சோலை யில் இருந்தோ அல்லது அதை அண்டிய பிரதேசம் ஒன்றிலிருந்தோ மட்டக்களப்பு விமானத் தளத்தின் மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலைப் புலிகள் நடத்தியிருக்கக்கூடும்.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் முடிவு கட்டி, அதன் மூலம் இனப்பிரச்சினையை அடக்கி, ஒடுக்கும் எண்ணம் கொண்டிருக்கும் தென்பகுதித் தீவிரப் போக்காளர்களுக்கு இச்சம்பவம் ஒரு செய் தியை எடுத்தியம்பத் தவறவில்லை.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் சில தினங்களுக்கு முன்னர் தெளிவு படுத்திய செய்திதான் அது.

கேள்வி:கேள்வி:சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்ட தென்னிலங்கை, இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு சாத்தியம் என உணர்கிறது. ஆனால் நான் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. தமிழ் சமூ கத்தின் நியாயமான ஆதங்கங்களைக் கவனத்தில் கொள்ளும் சமாந்தர அரசியல் தந்திரோபாயம் இல் லாமல் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது.

கேள்வி:கேள்வி:இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என நாம் நம்பவில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன் படுத்தித் தாக்குவதில் புலிகளுக்குக் குறிப்பிடத் தக்க வலிமை உண்டு. அதை நாம் குறைத்து மதிப் பிட்டு விடக்கூடாது.கேள்வி இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் சில தினங் களுக்கு முன்னர் கூறியவை, நிஜமாகவே அவரது கண் முன்னால் ஏனையோருக்கு ருசுப்படுத்தப் பட்டி ருக்கின்றன.

பயங்கரவாத முறையில் அல்லாமல், அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விமானப் படை யின் மையத்தளத்தின் மீது இராணுவ இலக்கு மீது மரபு ரீதியான யுத்தத் தாக்குதல் நடவடிக்கை முறை மூலம் தமது வலிமையை இச்சந்தர்ப்பத்தில் புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றார

உதயனின் ஆசிரியர் தலையங்கத்தை எந்த குற்ற உணர்வும் இன்றி வழமை போல் வெட்டி ஒட்டியிருக்கிறது தமிழ்வின்.

தமிழ்ன்வின் எப்பவும் மேலதிகமாக ஒன்றையும் தருவதில்லை மூலத்தைக் குறிப்பிடாது திருட்டுத்தனமாக தினக்குரல் வீரகேசரி உதயன் என்று களவெடுத்து சொந்த தயாரிப்பு போல் போடுவது தான் பாணி. தமிழ்வின் இல் இருந்து யாழிற்கு வெட்டி ஒட்டுவதை நிறுத்தவும்.

எடுப்பது களவு அதிலும் கள்ளன் வீட்டில் களவெடுக்கக் கூடாதாம்!!!!!

யாரோ ஒரு புண்ணியவான் முந்தி சொன்னதாக ஞாபகம் "செய்தி இணையத்தளம் நடத்தும் கஸ்டம் நடத்துனருக்குத்தான் தெரியும்", "யாருமே தாங்களாக செய்தியாளர்களை வைத்து செய்தி சேகரிப்பதில்லை" என்றெல்லாம்.

ஏன் இந்த திடீர் கோபம்? உண்மையான காரணத்தை சொல்லக்கூடாதா?

சிங்கத்தின் குகையில் இருந்து (சா)நக்கியர்கள் சொல்லுவதில் சிலவேளைகளில் உண்மையும் இருப்பதுண்டு. :rolleyes: :P :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.