Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி

Featured Replies

முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி

 
புத்தகம்

முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி விரிவாக கூறும் புத்தகம் அமேஸான் ஆன்லைன் வர்த்தக வலைதளத்தில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன.

'ஹலால் வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லிம்களுக்கான பாலியல் வழிகாட்டி கையேடு' என்ற பொருள் கொண்ட 'The Muslim's Guide to Sex Manual: A Halal Guide to Mind Blowing Sex' புத்தகத்தை, ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய கருப்பொருளை கொண்டிருப்பதால் தனது இயற்பெயரை வெளியிட விரும்பாத அவர் புனைபெயரை பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால் பிரிட்டன் ஊடகங்கள் அந்த எழுத்தாளரை பேட்டி கண்டுள்ளன.

'த அப்சர்வர்' நாளிதழின்படி, இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒரு முஸ்லிம் பெண்.

எழுத்தாளர் பற்றிய விவரங்கள் வேறு எந்த தகவல்களை வெளியிடவேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆண் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

புத்தக விமர்சனம்

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணத்தையும் தனது பேட்டியில் அந்த முஸ்லிம் பெண் கூறியிருக்கிறார்.

முஸ்லிம் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய உறவு பற்றிய தகவல்கள் தெரிவதில்லை என்கிறார்.

முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவரும் என்ற நம்பிக்கையிலேயே இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக எழுத்தாளர் கூறுகிறார்.

'முஸ்லிம் பெண்களிடையே பாலியல் குறித்த தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் மாற்றுவதோடு, மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிய இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என்பதால், புத்தகத்திற்கு வரவேற்பளிக்கவேண்டும்' என்று இந்த கட்டுரையின் ஆசிரியரான ஷெலீனா ஜன்மொஹம்மத், பிரிட்டன் நாளேடான `டெலிகிராஃப்`இல் தெரிவித்துள்ளார்.

புத்தகத்தின் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. பெண்களின் பாரம்பரிய நம்பிக்கைகளை குறிவைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருப்பதாகவும், பெண்களின் உடலை நுகர்வுப் பொருளாக பார்ப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பெண்களே பிரதானம்

இந்த விமர்சனங்களை இதனை எழுதிய ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. "புத்தகத்தை பாராட்டியும், ஆதரித்தும் மின்னஞ்சல் மூலம் பரவலாக ஊக்கம் கிடைத்துவருவதாக கூறுகிறார். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த புத்தகத்தை பரிசாக கொடுக்க விரும்புவதாக ஒரு மசூதியின் இமாம் எழுதியிருப்பதாக, `டெலிகிராஃப்`க்கு கொடுத்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

புதுமண தம்பதியர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருப்பதாக கூறும் எழுத்தாளர் அதுவும் ஒருவகையில் பாராட்டே என்கிறார். ஏன் தெரியுமா? 'இந்த புத்தகம் பெண்களை மட்டுமே மையப்படுத்துகிறது. ஆண்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல், புறக்கணித்தது ஏன்?' என்பதே அந்த எதிர்மறையான விமர்சனமாம்!

மகளிர் மன்றங்களும், அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்கு அமோக ஆதரவளித்திருப்பதாக கூறும் பிரிட்டன் நாளிதழ் 'த அப்சர்வர்', தாம்பத்யத்தில் ஏற்படும் அதிருப்தியால் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் திருமண உறவுகள் முறிந்து போகாமல் பாதுகாக்கவும், அவர்களின் பாலியல் உரிமையை புரிந்துக் கொள்வதற்கும் இதுபோன்ற புத்தகங்கள் அவசியம் என்றும் கூறுகிறது.

"நான் இந்த புத்தகத்திற்கு முழு மனதோடு ஆதரவளிக்கிறேன். ஏன் கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார் பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் தலைவர் ஷாயிஸ்தா கோஹிர். பாலியல் உறவைப் பற்றி பேசுவது புதுமையானது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பாலியல் உறவில் பெண்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவுறுத்தல்களையும் ஷாயிஸ்தா கோஹிர் சுட்டிக்காட்டுகிறார்.

http://www.bbc.com/tamil/global-40669910?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

மச்சம் சாப்பிடுவது என்றால் ........?
ஹலால் ஓதிய பின்புதான் சாப்பிட வேண்டுமா ?

முஸ்லீம்கள் காலால் கடைகளில்தான் அநேகமாக இறைச்சிகள் 
வாங்குகிறார்கள் ...
வேறு இடத்திலும் வாங்கலாமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோ.. அப்ப இப்ப விளக்கக் குறைவா இருந்தே இத்தனையைப் பெத்துப்போடுதுங்க.. எனி விளங்கிட்டா... நிலைமை...?! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Maruthankerny said:

மச்சம் சாப்பிடுவது என்றால் ........?
ஹலால் ஓதிய பின்புதான் சாப்பிட வேண்டுமா ?

முஸ்லீம்கள் காலால் கடைகளில்தான் அநேகமாக இறைச்சிகள் 
வாங்குகிறார்கள் ...
வேறு இடத்திலும் வாங்கலாமா ? 

Bildergebnis für Hassan Jameel: Some Things to Know About Rihanna Billionaire Boyfriend

அரபு/முஸ்லீம் பெருந்தகைகள் பலர் கலால் ஓதிய இறைச்சியைத்தான்விரும்பி உண்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் பிற மதக்களுடன் தான் பிரச்சினை என்று பார்த்தால், அவையளுக்குள் பெரும் பிரச்சனை.

சியா, சன்னி பிரச்சனை பெரும் பிரச்சனை.

இதுக்குள் லண்டனில் இந்திய முஸ்லீம் பெண், மத்திய கிழக்கு முஸ்லீம் நபரை காதலித்ததால், கடத்தப்பட்டு கொல்லப் பட்டுள்ளார்.

இதில் கொடுமை என்னெவெனில், இந்த கவுரவ கொலைக்கு ஆர்டர் கொடுத்தது தாய் தகப்பன்... குடுப்பத்தினர்.

பெண்ணையும் அவரது தோழியையும் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தே கொலை செய்துள்ளனர் கொலையாளிகள்.

மகள் இறந்துவிடடார். இறந்து விட்டதாக நினைத்து விட்டு செல்லப் பட்ட தோழி போலீசாரை அழைத்துள்ளார்.

கொல்லுறது என்று முடிவாகி விட்டது. பாலியல் பலாத்காரம் செய்துவிட்டே கொள்ளுவோம் என்று நினைத்து உள்ளனர்.

ஆனால் இதுவும் கவுரவக் கொலை செய்ய ஆர்டர் கொடுத்ததின் மேலதிக ஓர்டரா என்பதே, மில்லியன் டொலர் கேள்வி.

தமிழகத்தில் ஆணவக் கொலை நடக்கிறது தான். அது சாதி எனினும் பாலியல் பலாத்காரம் செய்யுமாறு ஆர்டர் போகுமா என்று தெரிய வில்லை. 

http://www.mirror.co.uk/news/uk-news/first-picture-teenager-raped-murdered-10865782

இதில் முதன்மைக் கொலையாளி பெண்ணின் சித்தப்பா என sun பத்திரிகை தெரிவிக்கிறது.tw_dissapointed_relieved:

இந்த சித்தப்பாவின் பாலியல் வன்கொடுமை கவுரவக் கொலையின் நோக்கத்தினையே சிதைத்து விடுவதாய் உள்ளதை பலரும் எழுதி, இவர்களது கலாச்சாரம் என்ன என எழுதுகின்றனர். 

இது கனடா கேஸ்

http://www.macleans.ca/news/canada/inside-the-shafia-killings-that-shocked-a-nation/

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:
 

இது இங்கு ஒரு அமெரிக்க தொலைகாடசியில் விபரண படமாக போடடார்கள் 

வீடியோ கிடைத்தால் இணைக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இது இங்கு ஒரு அமெரிக்க தொலைகாடசியில் விபரண படமாக போடடார்கள் 

வீடியோ கிடைத்தால் இணைக்கிறேன். 

 

ம்... அந்த காதலனும் முஸ்லீம் தான்.

இந்த குழந்தைகள் நல அமைப்பு சப்புக் கட்டுவது வழமைதான். இங்கு அதன் தலைமை அதிகாரியே பதவியை விட்டு ஓடும் நிலை வந்தது.

இருப்பினும் அவர்களது நிலை சிக்கலானது. ஒரு குடும்பத்தின் சில்லறைப் பிரச்சனைக்குள் மூக்கை நீட்டுவதும் ஆபத்தானது. நீட்டாமல் விடுவதும் ஆபத்தானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.