Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், விக்கினேஸ்வரன் நாளை சந்தித்துப் பேச்சு

Featured Replies

சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் நாளை சந்­தித்துப் பேச்சு

Page-01-376501d7417db063fbb1eea2473778cbf57e950e.jpg

 

 (நமது நிருபர்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வ­ர­  னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்­கி­ழமை கொழும்பில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. 

வட­மா­காண சபை அமைச்­சர்கள் மீது முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுத்­ததை அடுத்து அவ­ருக்கு எதி­ராக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் பெரும் முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற சம­ரச பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாடு எட்­டி­யி­ருந்த போதிலும் வட­மா­காண சபை விவ­கா­ரத்தில் தொடர்ந்தும் இழு­பறி நிலை இருந்து வரு­கின்­றது.

இந்த நிலை­யி­லேயே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.விக்­னேஸ்­வ­ரனும் இன்று மாலை கொழும்பில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

வட­மா­காண சபை அமைச்­சர்கள் இரு­வரை பதவி வில­கு­மாறு கோரிய முத­ல­மைச்சர் ஏனைய இருவர் மீதும் விசா­ரணை நடை­பெறும் என்று அறி­வித்­தி­ருந்தார். இந்த அமைச்­சர்கள் மீதான விசா­ரணை மற்றும் புதி­தாக அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வேஸ்­வரன் மற்றும் அனந்தி சசி­தரன் ஆகி­யோரின் பதவி நீடிப்பு விவ­காரம் தொடர்பில் இன்­றைய பேச்­சு­வார்­தையின் போது ஆரா­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்தை அடுத்து மாற்றுத் தலை­மையின் அவ­சியம் குறித்தும் ஆராய்ப்­பட்டு வந்தது. ஆனாலும் தமிழ்க் கூட்டமைப்பின் ஒற்றுமையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் இன்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெறுகின்றது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-22#page-1

  • தொடங்கியவர்

சாமுடன் பேசவுள்ளார் விக்கி:-

Wigneswaran-with-Sambanthan.jpg

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,   எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தன் உள்ளிட்டோர் விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண ஆளுனரிடம் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டது. எனினும் தொடர்ந்தும் வட மாகாண சபையில்  இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையிலேயே சம்பந்தன், விக்னேஸ்வரனை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/33731

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் எதிர்ப்பைக்காட்ட முடியாது மன அழுத்தத்தில் தவிக்கும் தலைவரின் மன அழுத்தங்களைக் குறைப்பதற்கு, விக்கினங்கள் தீர்க்கும் விக்னேசுவரப் பெருமான் நிச்சயம் அருள்புரிவார். :grin: :grin: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் நாளை சந்­தித்துப் பேச்சு

ஏதோ இரண்டு பெரிய உலகத்தலைவர்கள் சந்திச்சு பேசுறமாதிரி பில்டப் வேறை.....tw_blush:


இனிமேல் கட்சியைவிட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் முன்னுரிமை குடுக்க வேண்டும்...:unsure:

கட்சி என்ற பெயரிலை வந்து திருகுதாளம் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஏதோ இரண்டு பெரிய உலகத்தலைவர்கள் சந்திச்சு பேசுறமாதிரி பில்டப் வேறை.....tw_blush:

அவங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா..? :grin:

ஒரு செய்தியும் இல்லையென்றால் மக்கள் அவர்களை மறந்துவிட மாட்டார்களா?

52 minutes ago, குமாரசாமி said:

ஏதோ இரண்டு பெரிய உலகத்தலைவர்கள் சந்திச்சு பேசுறமாதிரி பில்டப் வேறை.....tw_blush:


இனிமேல் கட்சியைவிட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் முன்னுரிமை குடுக்க வேண்டும்...:unsure:

கட்சி என்ற பெயரிலை வந்து திருகுதாளம் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.:cool:

ஆனால் அந்த 2 மந்திர வார்த்தைகள் இருக்கும் வரை இவர்களை அசைக்க முடியாது.

தமிழ் தேசியம்

8 hours ago, ராசவன்னியன் said:

அவங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா..? :grin:

ஒரு செய்தியும் இல்லையென்றால் மக்கள் அவர்களை மறந்துவிட மாட்டார்களா?

அதுதானே வன்னியர்

பேசாம மானாட மயிலாட பாக்க சொல்லுவமா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஜீவன் சிவா said:

அதுதானே வன்னியர்

பேசாம மானாட மயிலாட பாக்க சொல்லுவமா 

இல்லை பாருங்கோ....அவையள் மான் ஆட மயில் ஆட ஒண்டும் பாக்கிறேலை கண்டியளோ...
ஒன்லி நியூஸ் பேப்பர் மட்டும் தான்..:grin:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.