Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

             பட்டது + படிச்சது + பிடித்தது - 215                                        1980 ஆரம்ப காலம்.   நான் பாடசாலை விடுமுறையில் ஊர் வந்தால் இவருடன் தான் அதிகம் யாழ்ப்பாணத்தில் சுற்றியதுண்டு. எனக்கு ஒன்று விட்ட அண்ணர் இவர் என்ற போதும் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள். தம்பி என்று இவர் என்னை அழைப்பதே தேனூறும்.                          இவருக்கு சின்னக்கடை பகுதியில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அது அதிகாலை நான்கு மணியளவில் திறக்கப்பட்டு பின்னேரம் நான்கு மணியளவில் பூட்டப்படும். அதன் பின்னர் குளித்து விட்டு வெளிக்கிட்டால்  நேரே ஜந்து லாம்புச்சந்தியிலுள்ள வாப்பா கடையில் நல்ல மாட்டிறைச்சி சாப்பாட்டு. (முதல் முதலில் இந்த கடையை எனக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான்). அதன் பின்னர் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு கடைசி பஸ் இல் என்னை ஏற்றிவிட்டு கடையில் போய் படுத்துக் கொள்வார். அடுத்த நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்தில் அலுவல் இருக்கு நானும் உங்களுடன் கடையில் தங்குகின்றேன் என்றால் அங்கு உனக்கு வசதி காணாது தம்பி இந்த வாழ்க்கை எங்களோட போகட்டும் நீ நன்றாக படி என்று  கடைசி பஸ்வரை வந்து ஏற்றி அனுப்புவார்.      அங்கேயே சொந்த தொழில் செய்து நன்றாக வாழ்ந்தவர் வெளிநாடு வரவேண்டிய எந்த தேவையும் அற்றவர். அவரது மரணம் ஒரு அண்ணனை நல்ல நண்பனை இழந்த இரட்டிப்பு சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் இதை எழுதாமல் விட்டால் எப்போதும் எழுதமுடியாது போகலாம்.   ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன் அண்ணா நண்பா.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       (புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்).    

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா !

  • Replies 339
  • Views 51k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு, 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை "பால்குடி" எனும் திரு. சதாசிவம் லோகநாதன் அவர்கள் இன்றையதினம் சுவிஸ் ரப்பேர்ஸ்வில் எனும் பகுதியில் காலமாகி உள்ளார்).    

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.... உங்களின் துயரத்தில் நாங்களும் பங்கு பற்றுகின்றோம் விசுகு .....!

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 216.                     

தலைவர் இருப்பு???

மே மாதம் அல்லது கார்த்திகை மாதம் வந்தாலே தலைவர் இருப்பு பற்றியும் பேசத் தொடங்கி விடுவதும் ஒரு சம்பிரதாயமாகி வருகிறது. ஒரு போராளியின் இழப்பை எவ்வளவு தூரம் தமிழர்கள் பெறுமதியாக நினைந்து கனம் செய்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களுக்கு தலைவரே தனது உயிரையும் கொடுத்து இருந்தால் எவ்வளவு தூரம் தமிழர்கள் பெறுமதியாக எடுத்துக் கொள்வார்கள் அதனை எவ்வளவு தூரம் மரியாதை செலுத்துவார்கள் என்பது நாம் அறியாத தல்ல. 

2009 இலிருந்து என்னிடம் தலைவரின் இருப்பு சம்பந்தமாக கேட்கப்படும் போது எனது பதிலும் வேண்டுகோளும் இவ்வாறு இருக்கும்.

தலைவரை நாம் தான் கடவுள் என்றோம் அவர் தன்னை எப்போதும் அப்படி சொன்னதில்லை. ஆதலால் முள்ளிவாய்க்காலில் எந்த அதிசயமும் நடந்திருக்கமுடியாது. 

தலைவர் இறந்து இருந்தால் அதற்கான முதல் விளக்கேற்றல் தாயகத்தில் இருந்து செய்யப்செய்யப்படணும். தாயகத்தில் தலைவர் இறந்து விட்டார் என அடையாளம் காட்டியதாக சொல்லப்படும் முரளிதரன் உட்பட போராளிகள் கட்சி வரை எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால் அவர்கள் எவரும் இதுவரையில் அவ்வாறு செய்ய முயற்சிக்கவே இல்லை.

புலத்தில் (பிரான்ஸில்) தலைவர் இருப்பு சார்ந்து இரு பிரிவுகளாக மாவீரர்கள் நாளை செய்த போது அதில் உடன்பாடு இல்லை என்றபோதும் இரண்டுக்கும் சென்று பார்த்தபோது அங்கே எங்கும் தலைவருக்கு வணக்கம் செலுத்தப்படாததை சுட்டிக் காட்டி பின்னர் எதற்கு இரு மாவீரர்கள் நாளை செய்கிறீர்கள் என கேட்டுவிட்டு வந்தேன். 

தாயகத்திலும் முடியாது புலத்திலும் முடியாது என்பதை வைத்து பார்த்தால் மக்கள் மனதில் அவர் வேறு ஒரு வடிவில் வாழ்கிறார் என்பது புரியும்.

தாயக மக்களின் மனநிலைக்கு ஒரு உதாரணம் மூலம் இதனை முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.

எனது அண்ணர் கிளிநொச்சியில் வாழ்ந்தவர். அத்தனை இயக்கங்களையும் போர்களையும் வலிகளையும் கண்டவர் எதிர் கொண்டவர். மூத்த மகனையும் மாவீரராக கொடுத்தவர். புலிகளின் அதிதீவிர பற்றாளனாகவும் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களால் பிற்காலத்தில் வெறுப்பாளனாகவும் இருந்தபோதும் முள்ளிவாய்க்கால் வரை புலிகளுடன் சென்று தனது வாழ்நாள் தேடுதல்கள் அனைத்தையும் முள்ளிவாய்க்காலில் இழந்து விட்டுவிட்டு வவுனியா முகாம் வரை வந்து சில மாதங்களுக்கு பின்னர் வெளியே வந்தபோது என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டேன்.

பதில்: நான் என்றாவது ஒருநாள் பிரபாகரனை சந்திப்பேன். அப்போது அவரிடமிருந்து ஒரேயொரு கேள்விக்கு தான் எனக்கு பதில் தெரிஞ்சாகணும். வைத்திருந்த இவ்வளவு ஆயுதத்தையும் ஏன் கடைசிவரை   பாவிக்கவே இல்லை என்பது தான். 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 217

இன்று மே 18

ஒரு கனவோடு ஓடிய நாம் அதன் கடைசி அத்தியாயத்தில் அதன் எல்லை மீறிய சுமைகளையும் வலிகளையும்  வஞ்சகங்களையும் துரோகங்களையும்  தாங்க முடியாமல் அந்தக் கனவை இறக்கி வைத்த நாள். 

அதற்காக இந்த நாளில் எம் இனம் கொடுத்த விலை இதுவரை விடுதலைக்காக எந்த இனமும் கொடுக்காதது. 

மாற்று வாழ்வு அல்லது மாற்று வழி தெரியாமல் இன்றும் எம் இனம் தத்தளித்த வண்ணமே உள்ளது. 

ஆனால் எம்மிடையே இன்றும் திருந்தாத சிலர் போராட்டத்தை கடைசி வரை காட்டிக்கொடுத்து விட்டு இன்று தமிழ் மக்கள் மேல் பற்றுள்ளவர்கள் போன்று வேசம் அணிந்து போராட்டத்தை அங்கே முடித்திருக்கலாம் இங்கே நிற்பாட்டி இருக்கலாம் என வேதம் ஓதுவதையும் பார்க்க முடிகிறது.  அமைதியாக தியானித்திருக்கும் எம்மை இன்றைய நாளில் கூட கட்சி ரீதியாக, இயக்க ரீதியாக பார்க்கும் இவர்களுக்கு ஒன்றை மட்டுமே சொல்லமுடியும். நாம் விதைத்து இருக்கிறோம். கொஞ்சம் ஓரமாக நின்று விளையாடுங்க.

Edited by விசுகு

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 218

பிரெஞ்சு தேசம்

போன ஞாயிற்றுக்கிழமை  பிரெஞ்சு ஐனாதிபதி மக்களுக்காற்றிய உரையில் 

மிகவும் கடினமான பாதிப்பை கண்ட காண இருந்த பிரேஞ்சு தேசம் 

தனது  சுய கட்டுப்பாடுகளாலும் மக்களது ஒத்துழைப்பாலும்

பெரும் அழிவை தவிர்த்து  மீண்டிருக்கிறது என்றார்.

வீட்டில் இருக்க சொன்னதுடன் நிற்காமல் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவும்

பூட்டப்பட்ட நிறுவனங்களுக்கும் இழப்பீடு  கொடுக்கப்பட்டது.

உண்மையில் பிரான்சில் வாழ்வதென்பது மிகவும் கடினமானது

அதேநேரம் பாதுகாப்பானது 

ஆகக்கூடிய மனிதாபிமான  உதவிகளையும் தனிமனித  வாழ்வு  சார்ந்த அதி உத்தரவாதங்களையும் கொண்டது

ஒருவர் நடைப்பிணமாகி எத்தனை  வருடங்களானாலும்  அவரது  உயிர் தானாக  பிரியும்வரை அவரை எத்தனை  வருமாயினும் கவனித்து பாதுகாக்கும்  நாடு இது.

இங்கே வருமானம்  குறைந்த அல்லது வலது  குறைந்தவர்களுக்கு அத்தனை மருத்துவமும் வைத்தியசாலைச்செலவுகளும் பராமரிப்பும் இலவசம். கல்வியும் இலவசம் மட்டுமல்ல கட்டாயம் (படிப்புக்கு வயதெல்லை கிடையாது)

கொரோனா தொற்றுக்கு ஒருவர் உள்ளானால் அத்தனையும் இலவசம்  இங்கு.

செய்தி - அமெரிக்காவில் 62 நாட்கள் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி. ஒரு மில்லியன் டொலர் பணத்தை  கட்டும்படி வைத்தியசாலை அறிவித்தல்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 219

நேற்று அம்மாவின் பிறந்தநாளுக்காக எனது சின்ன மகனின் சிநேகிதர் ஒருவர் தானே தெரிவு செய்து
வடிவமைத்து அனுப்பிய பரிசு.

L’image contient peut-être : 1 personne
L’image contient peut-être : 1 personne
 
  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 220

பூவும்  நாரும்

தற்பொழுது தேர்தல் நேரம்

அரசியலும் பேரமும் வீரப்பேச்சுக்களும்  சவால்களும் முதுகு  சொறிதலும்

திடீர் ஞானோதியங்களும் வீரவணக்கங்களும் 

குறையின்றி நடக்கும் நடக்கிறது

தமிழர்கள்  கூறுகளாக பிரதேச ரீதியாக பிரிக்கப்படுவதும்

பலம் சிதைக்கப்படுவதும்

நடக்கும் நடக்கிறது

தேசியத்தலைவர்  அவர்கள் தூர  நோக்கோடு

கிழக்கு  சார்ந்து அதிக  அக்கறையையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்தார் என்றும்

முரளிதரனுக்கு கூட இதனாலேயே அதிக கால  அவகாசம் கொடுத்தார் என்ற பழிச்சொல்லுமுண்டு

இன்று  முரளிதரனுக்கு அரசு அதிக கால  அவகாசமும்

விட்டுக்கொடுப்புக்களையும் செய்கிறது

அவரது வீரப்பேச்சுக்களை மன்னித்து தொடரவிடுகிறது

என்றால்  வேறொன்றுமில்லை

தலைவர் செய்ததற்கு  எதிர்  மாறான  விடயத்தை  அவர்  செய்கிறார்

தலைவரது அக்கறையும் தூரநோக்கோடு அவர்  சிந்தித்த

வடகிழக்கின்  ஒற்றுமைக்கு ஆப்பு  வைக்கும் வழிகள் அனைத்தையும் முரளிதரன் செய்கிறார்

செய்வார் செய்யவேண்டும்

அதற்கான  கால  அவகாசங்களையும் சலுகைகளையும் பதவிகளையும்

அரசு தாராளமாக அவருக்கு தரும் வழங்கும்.

தற்சமயம் இணைய  மற்றும் முகநூல் பதிவுகளை  பார்க்கும் போது

தம்பியின் கிழக்குத்தம்பிகள் சிலரும் முரளிக்கு பலம் சேர்க்க தொடங்குவதை பார்க்கமுடிகிறது

இதெல்லாம் எதிர்பார்த்தவை  தான்.

நார் எதனோடு  சேர்கிறதோ அதையே தனது மணமாக மாற்றிக்கொள்கிறது

ஆனால் மாலை  அணிவித்து கோயிலுக்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளுக்கு

இறுதி  நிமிடம் வரை  தமது கழுத்து போகப்போவது தெரிய வருவதில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 220

பூவும்  நாரும்

தற்பொழுது தேர்தல் நேரம்

அரசியலும் பேரமும் வீரப்பேச்சுக்களும்  சவால்களும் முதுகு  சொறிதலும்

திடீர் ஞானோதியங்களும் வீரவணக்கங்களும் 

குறையின்றி நடக்கும் நடக்கிறது

தமிழர்கள்  கூறுகளாக பிரதேச ரீதியாக பிரிக்கப்படுவதும்

பலம் சிதைக்கப்படுவதும்

நடக்கும் நடக்கிறது

தேசியத்தலைவர்  அவர்கள் தூர  நோக்கோடு

கிழக்கு  சார்ந்து அதிக  அக்கறையையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்தார் என்றும்

முரளிதரனுக்கு கூட இதனாலேயே அதிக கால  அவகாசம் கொடுத்தார் என்ற பழிச்சொல்லுமுண்டு

இன்று  முரளிதரனுக்கு அரசு அதிக கால  அவகாசமும்

விட்டுக்கொடுப்புக்களையும் செய்கிறது

அவரது வீரப்பேச்சுக்களை மன்னித்து தொடரவிடுகிறது

என்றால்  வேறொன்றுமில்லை

தலைவர் செய்ததற்கு  எதிர்  மாறான  விடயத்தை  அவர்  செய்கிறார்

தலைவரது அக்கறையும் தூரநோக்கோடு அவர்  சிந்தித்த

வடகிழக்கின்  ஒற்றுமைக்கு ஆப்பு  வைக்கும் வழிகள் அனைத்தையும் முரளிதரன் செய்கிறார்

செய்வார் செய்யவேண்டும்

அதற்கான  கால  அவகாசங்களையும் சலுகைகளையும் பதவிகளையும்

அரசு தாராளமாக அவருக்கு தரும் வழங்கும்.

தற்சமயம் இணைய  மற்றும் முகநூல் பதிவுகளை  பார்க்கும் போது

தம்பியின் கிழக்குத்தம்பிகள் சிலரும் முரளிக்கு பலம் சேர்க்க தொடங்குவதை பார்க்கமுடிகிறது

இதெல்லாம் எதிர்பார்த்தவை  தான்.

நார் எதனோடு  சேர்கிறதோ அதையே தனது மணமாக மாற்றிக்கொள்கிறது

ஆனால் மாலை  அணிவித்து கோயிலுக்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளுக்கு

இறுதி  நிமிடம் வரை  தமது கழுத்து போகப்போவது தெரிய வருவதில்லை.

உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள் அண்ணா 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள் அண்ணா 

நன்றி சகோதரி

அது  எனது கனவல்ல

ஆயிரம்  ஆயிரம் மாவீரர்களின்  கனவு

உயிர் உடல் அவயங்களை உடமைகளை தந்த  லட்சோப லட்சம்  தமிழர்களின் கனவு

என்னைப்போல்  தமிழையும்  மண்ணையும்  நேசிக்கும்  பல கோடி தமிழர்களின்  கனவு

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 221

தேர்தலும் புத்திசாலிகள் என  தம்மைத்தாமே சொல்லிக்கொள்வோரும்....

இலங்கையில்  தேர்தல் நடக்க  இருக்கிறது

இராமன்  ஆண்டால் என்ன  ராவணன் ஆண்டாலென்ன? என்ற  மனநிலையில்தான்  தமிழர்கள் அதிகம் சாய்ந்து  வருகிறார்கள்.  காரணம் ஏமாற்றம் பலமுறை நம்பி  நம்பி தேசியம் சார்ந்தும் ஒற்றுமை  சார்ந்தும் அதுவே பலம் தேவை என்ற கோரிக்கைகளுக்கு   தொடர்ந்து வாக்களித்து தலைவர்கள் கட்சியினர் வளர்ந்ததை  தவிர வேறெதுவும் கிடைக்காத நிலையில் .....????

ஆனாலும்  இந்த  புத்திசாலிகள் அல்லது  அறிவுயீவிகள்  என்று  தம்மை தாமே சொல்லிக்கொள்வோரும் அப்புக்காத்துமாரும் எப்படியும் வென்று  விடுவார்கள்.  80 ஆண்டுகளாக இவர்கள் தமிழர்கள்  தலையில் அரைப்பதும் தமிழர்கள்  ஏமாறுவதும்  மீண்டும் மீண்டும்  அதே ஆட்கள் அதே வீர வசனங்கள் ஒரே வாக்குறுதிகள் ஒரே முழக்கங்களை  வைத்து இவர்களால் வெல்லமுடிவதற்கு  யாழ்ப்பாணத்தை  பொறுத்தவரை அங்கிருக்கும் ஒருவகை சுயநலவாத படித்தவர்கள் எனச்சொல்வோரது ஓட்டுக்களே  காரணம்.

தற்போது புலிகளது  தோல்வியும் (புலிகளையும்  அவர்களது போராட்டத்தையும் எதிர்த்தவர்களே  இவர்கள்)

தமிழருக்கென்று வேறு  எவருமற்ற சூழலும் இவர்களது நாடகங்களுக்கும் தொடர்  ஏமாற்றுக்களுக்கும் தொடரவும் தமிழக அரசியலைப்போல தேசியக்கட்சிகளுடன்  சேர்ந்தால் தவிர தனியே பிரதிநிதிகளை  பெறமுடியாத  சூழலை  விரைவில் கொண்டு  வரும்.

இந்த 11 வருடத்தில் கூட்டமைப்பு எதைச்சாதித்தது என்றால்  தேசியக்கட்சிகளின் பின்னால் மக்களை அனுப்பி எங்களைப்போல நீங்களும் தருவதைப்பெற்று பெருவாழ்வு  வாழுங்கள்  என்பது  தான்.  தமிழர் பிரதேசமாவது நாடாவது ஒற்றுமையாவது இழப்பாவது???????

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 222

திலீப தியாகம்

இன்று தியாகி  திலீபனின் இறுதி நாள்

அவனது தாகம் தீராது  வைத்த கோரிக்கைகளும் நிறைவேறாது கண்ணை மூடிய நாள்.

அவனது  தாகமும் கோரிக்கைகளும்  இன்றும் 

அப்படியே கவனிப்பாரற்று காவுவாரற்று

அதைவிட  வேதனை அவனது தியாகத்தையே கொச்சைப்படுத்துவோரின் புதுபுதுமுகத்தோற்றங்கள்.

கண்ணாடி வீட்டில்  நின்று கல்லெறிவதை  அறியாதோர் இவர்

ஆகக்குறைந்தது திலீபனைத்தன்னும் ஏற்காதவர்  எவரும் 

தமிழர் தாயகத்துக்காக போராடப்போனோம் எனும் தகுதியையே  இழப்பதை  அறியார்

அது  சரி  பணம் தருகிறோம் வேலை  தருகின்றோம் பதவி  தருகின்றோம்  என்று  புறப்பட்டவர்கள்  என்பதை வேறெப்படி நிரூபிப்பது??? இன்றும்  தமிழ்மக்கள் முன் இவர்கள் வைக்கும் கொள்கை  முழக்கங்கள்  இவை  தானே???

ஆனால் தாயக மக்களின் தாகத்துக்கு  தடைகள்  வந்தபோதெல்லாம்

அடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்காக புலிகள் எடுத்து  நகர்த்திய ஒவ்வொரு நகர்வும் மக்கள்  மேல் அவர்கள் வைத்த பெரும் பற்றால் ஆனதும் வேறு எவரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத மனதிடத்தினால் ஆனவையும் கூட.

அது திலீபனின் உண்ணாவிரதமாக  இருக்கலாம்  கரும்புலிகளாக இருக்கலாம்.

இவற்றை சுயநல அரசியல் செய்பவர்களாலோ வளைந்து குனிந்து வாழப்பழகியவர்களாலோ நினைத்துக்கூட  பார்க்கமுடியாது.

அதனால் தான் கொஞ்சம் ஓரமாக  நின்று  விளையாடும் படி புலிகள் இவர்களை  கேட்டார்கள்.  என்ன  செய்வது  ஒரு  தோல்வி எதையெல்லாம் கேட்க வைக்கிறது

தூங்கு திலீபா தூங்கு

என்றும் உன் பசித்த  வயிறோடு......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காந்திய தேசமே கண்டு கொள்ளாதது மிகுந்த வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

காந்திய தேசமே கண்டு கொள்ளாதது மிகுந்த வேதனை.

காந்திய தேசமெண்டு எவ்வளவுநாளைக்கு தான் சொல்லப்போறியள் அது காவாலி தேசமாகி கன காலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.