Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்டதில் பிடித்தவை

Featured Replies

  • தொடங்கியவர்
என்ன நடக்குது இஞ்சை........... ஆஆஅ :angry: ********* பாட்டு போடுறதெண்டால் பாட்டு போடோணும் இல்லாட்டி படமாவது காட்டோணும் ஒரு இழவுமில்லை சும்மா நியாயம் புறிச்சுக்கொண்டிருக்கிறியள
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://media.putfile.com/29973007299530162...015299229903006

மனக்கவலைகளை மறக்க.............. ;)

Edited by குமாரசாமி

ஆகா அனிக்கு பிடிக்கும்

எனக்கும் பிடிக்கும்..

அசின் என்றதால மட்டுமே...பிடிக்கும்...

:P

http://media.putfile.com/29973007299530162...015299229903006

மனக்கவலைகளை மறக்க.............. ;)

ஆகா இந்த பாட்டு மனக்கவலைகளை மறக்கவா..... இது என்ன பாட்டுங்க ..... ஒண்டுமே விளங்குதில்லை .... :angry: :huh:

Edited by அனிதா

  • தொடங்கியவர்

அங்கிள் விளையாட இது நேரமா? :huh:

பாட்டை போட்டால்..வீட்டில எல்லாரும் ஒரு மாதுரி பாக்கினம் என்னை:rolleyes:

இன்னொரு முருகன் பாட்டு இருக்கெல்லோ..பாடகி சுசீலா அவங்க பாடினது..சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா?? நாம வீட்டில எதிர்த்து கதைச்சால் பேச்சு விழும்..ஆனால் திருவிளையாடல் படத்துல முருகன் தகப்பனை எதிர்த்து கதைக்க பாராட்டு விழுது..பாட்டு வேற பாடுறாங்க சாவித்திரியம்மா... :lol:

Edited by ப்ரியசகி

மாயக்கண்ணாடி படப்பாடல் வரிகள் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி பேசு............... & உலகிலே அழகி நீதான் எனக்குதான் பாடல்வரிகள் இருக்குதா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Download AVSEQ04.DAT

சொல்லச்சொல்ல இனிக்குதடா

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா

மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா

சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்ல வா

சொல்லால் சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்ல வா

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா

ஏனோ நம் பொய் வார்த்தை தான்..

ஏன் அதில் உன் என் மௌனமே தான்

உதட்டில் சிரிப்பை தந்தாய்.. மனதில் கனத்தை தந்தாய்

ஒரு முறை உன்னில் எனக்கென்று சுவாசிக்க வா… மறுமுறை உன்னை புதிதக சாசிக்க வா

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா

மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா

தீ போல்.. தேன் போல்.. சலனமpதா

மதி என் நிம்மதி சிதையவேதான்

நிழலை விட்டுச் சென்றாயே.. நினைவை வெட்டிச் சென்றாயே

இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திட வா..

அது வரை என்னை காற்றோடு சேர்திட வா

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா

மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா

சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்ல வா

சொல்லால் சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்ல வா

ரணமும் தேன் அல்ல வா ரணமும் தேன் அல்ல வா

ஏன் ராசா உமக்கு எங்கையும் முட்டுதே?????? :):unsure:

ஏனப்பு பிடிக்கப் போறீங்களா.........?

  • 4 weeks later...

pachaikilibi8.jpg

படம் - பச்சைக் கிளி முத்துச்சரம்

பாடியவர் - Bombay Jayashree

கேட்டதில் பிடித்த பாடல்

உன் சிரிப்பினில் பொன் சிரிப்பினில்

என் மனதின் பாதியும் போக

உன் இமைகளின் கண் இமைகளின்

மின் பார்வையில் மீதியும் தேய ..ம்ம்

இன்று நேற்று என்று இல்லை

என் இந்த நிலை .. ம்ம்

உன்னைக் கண்ட நாளில் நின்றே

நான் செய்யும் பிழை..!

( உன் சிரிப்பினில் )

உனக்குள் இருக்கும் மயக்கும்

அந்த உயரத்து நிலவை அழைக்கும்

இதழின் விளிம்பு துளிர்க்கும்

என் இரவினை பனியில் நனைக்கும்

எதிரினில் நான் எரிகிற நான்

உதிர்ந்திடும் மலர்சரம் நீயே

ஒரு முறையல்ல முதல் முறையல்ல

தினம் தினம் என்னை சூழும் தீ

( உன் சிரிப்பினில் )

முதல் நாள் பார்த்த வனர்ப்பு

துளி குறையவும் இல்லை உனக்கு

உறக்கம் விழிப்பில் கனவா

உனைக் காண்பதே வழக்கம் எனக்கு

அருகினிலே வருகையிலே

துடிப்பதை நிறுத்தது நெஞ்சம்

முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று

நடிப்பதில் கொஞ்சம் பஞ்சமே

( உன் சிரிப்பினில் )

பாடல்: கண்ணீரே கண்ணீரே

குரல்: ஏ ஆர் ரஹ்மான், அனுராதா, ஃபெபி

வரிகள்: வைரமுத்து

இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே

உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...

இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே

உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...

தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...

தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா

பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...

பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு

பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்

கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்

நம் காதல் அது போல மீறும்

கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்

நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே...

தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

கண்ணீரே...

பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ

பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே...

பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு

இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு

ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மௌளன வார்த்தை சொல் சொல்

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்

காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்

காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...

தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே

பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

கண்ணீரே...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

படம்: ராம்

பாடகர்: KJ ஜெசுதாஸ்

பாடல்: ஆராரிராரோ

இசை: யுவன் சங்கர்ராஜா

ஆராரிராரோ நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

ஆராரிராரோ நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே..

தாயின் பாதம் சொர்க்கமே

வேதம் நான்கு சொன்னது...

அதை நான் அறிவேனே!!

அம்மா என்னும் மந்திரமே ..

அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

வேர் இல்லாத மரம்போல்

என்னை நீ பூமியில் நட்டாய்..

ஊரு கண் என் மேல் பட்டால்

உன் உயிர் நோக துடித்தாயே

உலகத்தின் பந்தங்கள் எல்லாம்

.. நீ சொல்லி தந்தாயே

பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்

வழி நடத்தி சென்றாயே

உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..

நானே.... தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்

.. நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா

மண் பொன் மேல் ஆசை துறந்த

கண் தூங்காத உயிர் அல்லவா

காலத்தின் கணக்குகளில் செலவாகும்

வரவும் நீ......

சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத

பூமி நீ.........

இறைவா நீ ஆணையிடு

தாயே நீ எந்தன் மகளாய் மாற........

ஆராரிராரோ நான் இங்கு பாட

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து

படம் : காதல்

பாடல் :உனக்கென இருப்பேன்

இயக்கம்: பாலாஜி சக்திவேல்

தயாரிப்பாளர்: சங்கர்

இசை: ஸ்ரீதர்

பாடகர் : -கரிஷ்சந்திரன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே... கண்மணியே

அழுவதே...கண்மணி....

வழித்துனையாய் நான் இருக்க

உனக்கென இருப்பேன்...

உயிரையும் கொடுப்பேன்....

உன்னைநான்பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....

காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...

கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....

என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்

.....நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வருங்காலம் காயம் மாற்றும்

...நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல

மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...

இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோழிலே நீயுமாமே சாயும் போது...

எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...

உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னைபிரியாமல் நான் இருப்பேன்

கனவுக்குள் காவல் இருப்பேன்

...நான் என்றால் நானே இல்லை நீ தானேநானாய் ஆனேன்

...நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே...கண்மணியே

அழுவதேன்...கண்மணி....

வழித் துனையாய் நானிருக்க(3)

படம் : ராம்

பாடகர் : விஜய் ஜெசுதாஸ்

பாடல் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா

இசை : யுவன் சங்கர்ராஜா

.... நிழலினை நிஜமும் பிரிந்திடுமா

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா

கருவறை உனக்கும் பாரமா அம்மா

மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

லெக் கி லக கி அயேஏஏஎ.........

.... நிழலினை நிஜமும் பிரிந்திடுமா

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா

கருவறை உனக்கும் பாரமா அம்மா

மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

.. நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க

விதி செய்த சதியா தெரியல அம்மா

கடலுக்கும் அலையும் கடலில் தான் செரும்

அது போல என்னையும் சேத்துக்கம்மா

உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொது

எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்

ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா

மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா

பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா

பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ..ஆ..ஆஆ

லெக் கி லக கி அயேஏஏஎ.........

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு

எங்கேயோ பயணம் தொடருதம்மா

என்னோட மனசும் பழுதாகி போச்சு

சரி செய்ய வழியும் தெரியலம்மா

சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா

ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா

என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா

கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா

தூக்கத்திள்ள உன்னை நானும் தொலைச்சேன் அம்மா

தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

லெக் கி லக கி அயேஏஏஎ.........

.... நிழலினை நிஜமும் பிரிந்திடுமா

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா

கருவறை உனக்கும் பாரமா அம்மா

மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

பாடல் : மேகங்கள் என்னைத் தொட்டு

பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்

வரிகள் : வைரமுத்து

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல

என்னை யாரும் மூச்சுவரை

கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி

அமிலத்தை வீசியவர் யவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே

என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்

எரியும் உடலென்று தெரியும் பெண்ணே

என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்

என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்

துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்

அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே

அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்

அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்

அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்

என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்

மண்ணை முட்டி முட்டி முளைப்பது

உயிரின் சாட்சி ஓடி ஓடிப் போகாதே

ஊமைப்பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை

யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல

எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

படம் : கஜினி

பாடியவர் : எஸ். பார்த்தசாரதி, ஜெஸ்ரீ

ஆண் :

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே

என் உலகம் உன்னைச் சுற்றுதே....

சட்டைப் பையில் உன் படம்

தொட்டுத்தொட்டு உரச

என் இதயம் பற்றிக் கொள்ளுதே

உன் விழியில் விழுந்தென்

விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொப்பனம் கண்டேன்

உன்னாலேகண்விழித்து சொப்பனம் கண்டேன்

ஏசுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே

என் உலகம் உன்னைச் சுற்றுதே....

சட்டைப் பையில் உன் படம்

தொட்டுத்தொட்டு உரச

என் இதயம் பற்றிக் கொள்ளுதே

உன் விழியில் விழுந்தென்

விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொப்பனம் கண்டேன்

உன்னாலேகண்விழித்து சொப்பனம் கண்டேன்....

(இசை)

ஆண் :

மெல்லினம் மார்பில் கண்டேன்

வல்லினம் விழியில் கண்டேன்

இடையினம் தேடியில்லை என்றேன்...

பெண்:

தூக்கத்தில் உளறல் கொண்டேன்

தூறலில் விரும்பி நின்றேன்

தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்....

ஆண் :

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா

உன் கண்ணில் நான் கண்டேன்

உன் கண்கள் வண்டை உன்னும் பூக்கள் என்றேன்

உன் கண்கள் வண்டை உன்னும் பூக்கள் என்றேன்...

பெண் :

சுட்டும் விழிச்சுடரே.... சுட்டும் விழிச்சுடரே

என் உலகம் உன்னைச் சுற்றுதே....

சட்டைப் பையில் உன் படம்

தொட்டுத்தொட்டு உரச

என் இதயம் பற்றிக் கொள்ளுதே

உன் விழியில் விழுந்தென்

விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொப்பனம் கண்டேன்

உன்னாலேகண்விழித்து

சொப்பனம் கண்டேன்

(இசை )

பெண்:

மரங்கொத்தி பறவை ஒன்று

மனங்கொத்தி போனதின்று

உடல் முதல் உயிர் வரை தந்தேன்

ஆண் :

தீயின்றி திரியும் இன்றி

தேகங்கள் எரியும் என்று

இன்றுதாதே நானும் கண்டுகொண்டேன்

பெண் :

மழை அழகா வெயில் அழகா

கொஞ்சும் போதுமழை அழகு கண்ணாலே

கோபப்பட்டால் வெயில் அழகு

கண்ணாலேகோபப்பட்டால் வெயில் அழகு

ஆண் ;

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே

என் உலகம் உன்னைச் சுற்றுதே....

சட்டைப் பையில் உன் படம்

தொட்டுத்தொட்டு உரச

என் இதயம் பற்றிக் கொள்ளுதே

பெண் :

உன் விழியில் விழுந்தென்

விண்வெளியில் பறந்தேன்

கண்விழித்து சொப்பனம் கண்டேன்

உன்னாலேகண்விழித்து சொப்பனம் கண்டேன்

கண்விழித்து சொப்பனம் கண்டேன்

உன்னாலேகண்விழித்து சொப்பனம் கண்டேன்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.