Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பிரச்சினையில் லாபம் அடைந்தது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களவர்களின் ஆதிக்கமும், தமிழர்களின் மீதான அடக்குமுறைகளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு வந்தது. அன்றிருந்த சிங்கள அரசாங்கங்கள் இது சிங்கள நாடு என்று நிரூபிக்கும் வண்ணம் பல சட்ட திட்டங்களை காலத்துக்கு காலம் அமுல்படுத்திக்கொண்டே வந்தார்கள். இதனை எதிர்த்துவந்த சிறுபாண்மை சமூகங்களை பல வழிகளிலும் சிங்கள ஆட்சியாளர்கள் நசுக்கியே வந்தார்கள் என்பது வரலாறாகும். இந்த அத்துமீறல்களை செய்யும் இலங்கை அரசாங்கத்தை எந்தநாடுகளும் அந்தநேரம் தட்டிக்கேட்க முன்வரவில்லை,அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளைத்தான், அன்று இலங்கை பிரதமராக இருந்த சிறிமாவோ அம்மையார் அவர்களும் பின்பற்றி வந்தார்கள்,அதன் காரணமாகவே அன்று இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா அவ்வளவு அக்கறைகாட்ட முன்வரவில்லை.

1977ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிக்கொண்ட ஐ.தே.கட்சியின் தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் மூடிய பொருளாதார கொள்கையை கைவிட்டு திறந்த பொருளாதார கொள்ளைகளை கொண்டுவரும் முகமாக அன்று இந்தியாவுக்கு எதிரிகளாக இருந்த அமெரிக்கா, சீனா, இஸ்ரவேல்,பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவுகளைப்பேண முயற்சித்து வந்தார். இலங்கையின் இந்த போக்குகள் இந்தியாவின் நலன்களுக்கு பேராபத்தாக வந்துவிடும் என்றுணர்ந்த இந்திய அரசு இலங்கை அரசின் மீது பல அழுத்தங்களை பிரயோகிக்க முன்வந்தது,இதன் காரணமாகவே நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலங்கை அரசை இந்தியாவின் காலடியில் விழவைக்கவேண்டும் என்ற என்னத்தின் காரணமாகவே,அன்று தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க இந்தியா முன்வந்தது.

இந்தியாவின் இந்த நாடகத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியாது,அவர்களின் உதவி தமிழ்மக்களின் மேல்கொண்ட அனுதாபத்தின் காரணமாகத்தான் கிடைக்கின்றது என்று நம்பிய தமிழ் இளைஞர்கள் அவர்களின் திட்டத்துக்கு பழியானார்கள் என்றே கூறவேண்டும். பிற்காலத்தில் தமிழ் இளைஞர்களின் தியாகத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தனது தவறை உணரத்தொடங்கியது,இந்தியாவை திருப்திபடுத்தினால் இந்த ஆயுதபோராட்டத்தை இந்தியா மூலம் முடிவுக்கு கொண்டுவரலாம் என்று உணர்ந்த ஜே.ஆர்.அவர்கள் இந்தியாவிடம் சரணடைந்தார். இதனை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த இந்தியா, தமிழர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன் தங்களது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இலங்கையின் எந்த நடவடிக்கைகளும் இந்தியாவுக்கு குந்தகமாக வந்துவிடக்கூடாது என்றும், இலங்கையின் வெளிநாட்டு கொள்கைகள் அனைத்தும் இந்தியாவின் பார்வைக்கு வந்தபின்பே நடைமுறைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனைகளையும், அதனோடு இன்னும் பல அனுகூலங்களையும் இந்தியா அந்த ஒப்பந்தத்தின் மூலம் அடைந்து கொண்டது.

அதன் பிற்பாடு இந்தியா இலங்கை தமிழர்கள் விடயத்தில் எப்படி நடந்து கொண்டது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.அதே இந்தியாதான் பின்நாளில் தமிழர்களுடன் யுத்தம் செய்தது என்பது மட்டுமல்ல பல அப்பாவி உயிர்கள் பலியாவதற்கும் காரணமாக இருந்தது.அதுமட்டுமல்ல இறுதி யுத்தத்திலும் முழு பங்களிப்பையும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கி இருந்ததையும் நாம் அறிவோம். ஆகவே, இந்தியாவின் சுய தேவைக்காகவே தமிழர்களுடைய பிரச்சினையை இந்தியா பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையாகும்,ஒருவேளை சிறிமாவோ அம்மையார் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களும் அன்று இந்தியாவின் பாதையில் சென்றிருந்தால் இவ்வளவு உயிர்களும் காவு கொள்ளப்பட்டிருக்கமாட்டாது என்பதே யதார்த்தமாகும்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், இலங்கை தமிழர்களின் மீது கொண்ட பரிதாபத்தின் காரணமாக இந்தியா தமழர்களுக்கு ஆயுதம் வழங்கவில்லை,மாறாக தங்களது சுய லாபத்துக்காகவே தமிழ் இளைஞர்களை பயன்படுத்தினார்கள் என்பதே ஆகும். இன்றும் தமிழர்களுடைய பிரச்சினையை உலகநாடுகள் தங்களுடைய நலனுக்காகவே பயன்படுத்திவருகின்றது என்பதை, எத்தனை பேர் அறிந்திருக்கின்றார்களோ தெரியாது என்பதே வேதனையான விடயமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=151477 .

 

  • கருத்துக்கள உறவுகள்

நானா லாபமடைந்தது உங்கடை இனம்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

நானா லாபமடைந்தது உங்கடை இனம்தான்...

நானா தமிழர் அரசியலில் phd எடுத்திருக்கிறார் போல....எது எப்படியோ நீங்கள் அடைந்த லாபம் இந்தியா அடைந்த லாபத்தைவிட அதிகம்...

34 minutes ago, putthan said:

நானா தமிழர் அரசியலில் phd எடுத்திருக்கிறார் போல....எது எப்படியோ நீங்கள் அடைந்த லாபம் இந்தியா அடைந்த லாபத்தைவிட அதிகம்...

இனி அதே இந்தியா தான் இப்பொழுது இஸ்லாமிய மாகாண கனவுக்கும் ஆப்படிக்க தொடங்கியுள்ளது என நானாவுக்கு தெரியுமா !!!

கிழக்கு மாகாணத்தில் நடப்பவற்றை பார்த்தால் தெரியும், RSS/VHP போன்ற அமைப்புக்கள் முழு வீச்சுடன் இறங்கி விட்டன !!!

மாட்டிறைச்சி தடை விரைவில் வந்தாலும் வரலாம், பிறகு நானாமார்  கத்தரிக்காய் குழம்பு தான் சோத்துடன் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Dash said:

இனி அதே இந்தியா தான் இப்பொழுது இஸ்லாமிய மாகாண கனவுக்கும் ஆப்படிக்க தொடங்கியுள்ளது என நானாவுக்கு தெரியுமா !!!

கிழக்கு மாகாணத்தில் நடப்பவற்றை பார்த்தால் தெரியும், RSS/VHP போன்ற அமைப்புக்கள் முழு வீச்சுடன் இறங்கி விட்டன !!!

மாட்டிறைச்சி தடை விரைவில் வந்தாலும் வரலாம், பிறகு நானாமார்  கத்தரிக்காய் குழம்பு தான் சோத்துடன் !!!!!

திருமலையில் லட்சுமிநாராயணன் கோவில் அமைத்தமையும் அதில் உள்ளடக்கமோ

8 minutes ago, putthan said:

திருமலையில் லட்சுமிநாராயணன் கோவில் அமைத்தமையும் அதில் உள்ளடக்கமோ

இருக்கலாம், குறிப்பாக அங்கு இருக்கும் ஜயர்ருக்கு தமிழ் தெரியாதாம், ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டுமாம்.

அது மட்டுமல்ல முகபுத்தகத்தில் இவர்களின் கூத்துக்கள் ஆதாரத்துடன் வெளிவருது, இவற்றையெல்லம் சாதாரண வங்குரொது தமிழனால் செய்யமுடியாது, பின்னால் ஏதோ சக்தி இருக்கு.

முஸ்லிம்களின் முக புத்தகத்தை பார்த்தாலே கலோபரம் தெரிகிரது !!

முல்லைத்தீவு ஆர்பாட்டத்துக்கு பிறகு அக்குரன டுடே ஒவ்வொரு நாளும் தமிழ் முஸ்லிம் உறவை பற்றி கட்டுரை எழுதீனம், தூசன பிக்கு கூட தமிழர் பக்கம் நிக்கிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நானாக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது போல் உள்ளது !!

 

Edited by Dash

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் பிரச்சனை பிரேமதாச இருக்கேக்கையே முடிஞ்சிருக்க வேண்டிய பிரச்சனை எண்டு  முந்தநாள் நடந்த கோயில் திருவிழாவிலை இரண்டுபேர் கதைச்சுக்கொண்டிருந்தவை....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் பிரச்சனை பிரேமதாச இருக்கேக்கையே முடிஞ்சிருக்க வேண்டிய பிரச்சனை எண்டு  முந்தநாள் நடந்த கோயில் திருவிழாவிலை இரண்டுபேர் கதைச்சுக்கொண்டிருந்தவை....

அதுதானே ..பிரேமதாசவுடன் முடிந்திட்டுதே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.