Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!!

Featured Replies

பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!!

 
 
பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ். கொக்குவில் பொற்பதியின், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அறுவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது

http://newuthayan.com/story/17099.html

  • தொடங்கியவர்

யாழில் அதிரடி; பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சற்று முன் ஆறுபேர் கைது!

 

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வாள்வெட்டுக் கும்பலின் முக்கியஸ்தர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணக் குடா நாட்டில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே பயங்கரவாதப் பிரிவினரால் இந்தக் கைது இன்றைய தினம் இடம்பெற்றதாக எமது களநிலைச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

நந்தாவில் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 க்கும் மேற்பட்ட குழுவினரால் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள் குற்றத்தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று வருகின்றது. 

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 6 இளைஞர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் சற்று முன் கொழும்பில் வைத்து முக்கிய சந்தேக நபர் (விக்டர்) உட்பட 4 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது. 

அண்மையில் பொலிஸார் மீது வாள்வெட்டில் ஈடுபட்டவர்களில் முக்கியஸ்தர் முன்னாள் போராளி என்றும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://news.ibctamil.com/ta/internal-affairs/TID-jaffna

  • தொடங்கியவர்

ஆவா குழுவின் முன்னணி உறுப்பினர்கள் கொழும்பில் கைது.!

 

 

எம்.எம்.பஸீர்

பொலிஸாரை வாளால் வெட்டிய ஆவா பாதாள குழுவின் முக்கிய உறுப்பினரான விக்டர் உள்ளிட்ட சிலர் இன்றைய தினம் கொழும்பில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கில் யாழின் பல்வேறு பகுதிகளிலும் இரகசியப் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/22829

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலயே வாள் வெட்டுக்காரர்களாக இருப்பின்   வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!!

 
 
பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ். கொக்குவில் பொற்பதியின், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அறுவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது

http://newuthayan.com/story/17099.html

புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் வெளிவந்து அதனால் ஏற்படும் சலசலப்புகள் அடங்கி அது ஏற்றுக்கொள்ளப்படும் வரையிலும்,

சிங்களர் திருப்பதி அடையும் வரையில் தமிழர் நிலங்களில் விகாரைகளை நிர்மானித்து, போதியளவு சிங்களவர்களைக் குடியேற்றும் வரையிலும்.

மேற்கூறப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று, பல சம்பவங்கள் தோற்றுவிக்கப்பட்டு அரசின் அனைத்துப் படைகளும் தமிழ் மண்ணில் நின்று, தமிழர்கள் கைதுசெய்யப்படுவது தொடரும்.  

அரசின் இத்தகைய செயற்பாடுகளுக்குத் தேவையான ஆயுதங்களான கோடாரிக் காம்புகளைச் சில தமிழ்த் தலைவர்களிலிருந்து அடிமட்டத்  தொண்டர்கள்வரையில் பொறுக்கி எடுத்து அரசானது அடுக்கி வைத்துள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

உண்மையிலயே வாள் வெட்டுக்காரர்களாக இருப்பின்   வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.....

ஊரில இருந்து வரும் சாதாரண மக்களின் தகவல் படி... சாதிய ரீதியான கதை வருகுது. 

முன்னர் யாழ் நகரில் இயங்கிய சண்டியன் குழுக்கள் போன்ற ஒரு கதை...

அங்குள்ள பிற பிரதேச மக்கள் ஊடகங்கள் அளவுக்கு இது தொடர்பாக.. பெரிசாக அலட்டிக் கொள்வதாக இல்லை.:rolleyes:

ஆக இது நன்கு திட்டமிட்டு தமிழ் மக்களிடையே பிளவை உண்டு பண்ணும் நோக்கோடும்.. சிங்கள அரசின் பயங்கரவாத உச்சரிப்புக்கும்.. இராணுவ இருப்பிற்கும்.. என்று நடத்தப்படுகிறது. :rolleyes:

  • தொடங்கியவர்

ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கைது

 

 

ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கைது
 

குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ், கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவரை கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இன்று காலை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அதேபோன்று மட்டக்குளி பகுதியிலிருந்து நேற்றிரவு மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/08/ஆவா-குழுவின்-தலைவர்-உள்ள/

ஆங்கில ஊடகங்களின் தகவலின்படி கைது செய்யப்பட்டவர்கள்.

Police spokesman Ruwan Gunasekara said gang leader Sathayavel Nathan alias Nisha Victor, Raj Kumar Jey Kumar alias Vinod, Kulendran Manojith alias Manoj and Shiwa Suddhaniam Pool were arrested in Fort and Mattakuliya on Sunday night while two other members, Sri Kanthan Kukadas and Arjunam Prasanna were arrested in Jaffna

http://www.dailymirror.lk/article/-Awa-gang-leader-others-arrested-in-Colombo-Jaffna-134259.html

  • தொடங்கியவர்
புறக்கோட்டை, மட்டக்குளி, யாழில் ‘ஆவா’ வேட்டை
 

 

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேலும் அறுவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால், இவர்கள், நேற்றும் (07), நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்தே, அந்த அறுவரையும் பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஆவா குழுவின் பிரதித் தலைவர் என்று அறியப்பட்டுள்ளார். அவர், நிஷா விக்டர் என்றழைக்கப்படும் சக்திவேல் காந்தன் நிஷாந்தன் (வயது 22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், திருநெல்வேலி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  

பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர், புறக்கோட்டை பகுதியில் வைத்து, நேற்று (07) கைது செய்யப்பட்டனர். மற்றுமொருவர், மட்டக்குளிய பகுதியில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.  

இதேவேளை, மேற்படி கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவர், யாழ்ப்பாணத்தில் வைத்து, நேற்று (07) அதிகாலை கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  

புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரில், இருவரிடமிருந்து வாள்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவம் உட்பட யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இவருடன் சேர்த்து இதுவரையிலும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கைது செய்யப்பட்டோர் விவரம் 

1. நிஷா விக்டர் என்றழைக்கப்படும் சக்திவேல் காந்தன் நிஷாந்தன், புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  

2. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட வினோத் என்றழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயகுமார் என்பவர் புறக்கோட்டையில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 

3. யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த மனோஜ் என்றழைக்கப்படும் குலேந்திரன் மனோஜ் என்பவரும் புறக்கோட்டையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

4. யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவர் மட்டக்குளிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 

5. யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குணதாஸ் என்பவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 

6. யாழ்ப்பாணம், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுனம் பிரசன்னா என்வரும் யாழ்ப்பாணத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட இந்த அறுவர் மீதான மேலதிக விசாரணைகள், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புறக்கோட்டை-மட்டக்குளி-யாழில்-ஆவா-வேட்டை/175-201960

  • தொடங்கியவர்

வாள்­வெட்டு சூத்­தி­ர­தாரி உட்­பட ஆறு பேர் கைது

 

நால்வர் கொழும்­பிலும் இருவர் யாழிலும் சிக்­கினர்  இரு வாள்­களும் மீட்பு; தடுத்து வைத்து விசா­ரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

வடக்கை அச்­சு­றுத்தி வந்த ஆவா குழுவின் தற்­போ­தைய தலை­வ­னான நிஷா விக்டர் உள்­ளிட்ட ஆறு பேரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நேற்று கைது செய்­துள்­ளது.

 பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய, பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் சிறப்பு திட்­டத்தின் பிர­காரம் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இர­க­சிய விசா­ர­ணை­க­ளி­லேயே இவர்கள் அறு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கொழும்பின் மட்­டக்­குளி பகு­தியில் வைத்து ஆவா குழு உறுப்­பினர் ஒரு­வரைக் கைது செய்­துள்ள இந்த சிறப்புக் குழு, அவ­ரிடம் இருந்து பெற்­றுக்­கொண்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக புறக்­கோட்டை பஸ் நிலை­யத்தில் வைத்து பிர­தான சந்­தேக நப­ரான விக்டர் உள்­ளிட்ட மூவரைக் கைது செய்­த­தா­கவும் ஏனைய இரு­வ­ரையும் யாழில் வைத்து கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார். 

கைதான குறித்த சந்­தேக நபர்­க­ளிடம் இருந்து இரு வாள்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­படும் ஆவா பாதாள உலகக் குழுவின் உறுப்­பி­னர்­களைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் விசா­ரணை செய்யும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் உள்ள 6 பொலிஸ் குழுக்­களும் சிறப்பு ஆலோ­சனை வழங்­கப்­பட்ட பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் விஷேட குழுவும் விசா­ர­ணை­களை நடாத்தி வந்­தது.

அதன்­படி இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடாத்­தி­யமை தொடர்பில் ஆவா குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் என கரு­தப்­படும் நல்லூர் முத்து, மது உள்­ளிட்ட ஐவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என கரு­தப்­படும் பிர­தான சந்­தேக நப­ரான விக்டர் எனப்­படும் முன்னாள் விடு­தலைப் புலி உறுப்­பினர் அடை­யாளம் காணப்­பட்­ட­துடன் மேலும் 10 பேரை பொலிஸார் தேடி வந்­தனர்.

விக்டர் உள்­ளிட்ட ஐவர் முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் என வட பிராந்­திய பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்த நிலையில் பொலிஸார் மீது வாள் வெட்டு தொடர்பில் கைதா­னோரின் தக­வல்­க­ளுக்கு அமைய பல முக்­கிய விட­யங்கள் அம்­ப­லத்­துக்கு வந்­தன. இந் நிலையில், விக்டர் உள்­ளிட்­டோரைக் கைது செய்யும் நட­வ­டிக்கை மிக சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

 கடந்த 2016 நவம்பர் மாதம் ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மா­ரவின் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பல தக­வல்­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்கள் மேல­திக விசா­ரணைத் தொடர்பில் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஆவா குழுவின் உறுப்­பி­னரும் பொலிஸார் மீது தாக்­குதல் நடாத்­தி­யவர் என அடை­யாளம் காணப்­பட்­ட­வ­ரு­மான யாழ். கொக்­குவில் கிழக்கு பகு­தியைச் சேர்ந்த சிவ­சுப்­ர­ம­ணியம் போல் என்­ப­வரை மட்டக் குளியில் வைத்து பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வினர் கைது செய்­தனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவரை கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யது. இதன் போதே ஆவா குழுவை தற்­போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறி­யப்­படும் யாழ். திரு­நெல்­வேலி பகு­தியைச் சேர்ந்த சத்­தி­யவேல் நாதன் நிஷாந்தன் என்­பவர் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்தே நேற்று காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்­ப­டுத்திக் கொண்ட பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் புறக் கோட்டை பஸ் நிலை­யத்தில் வைத்து அவ­ரையும், அவ­ருடன் இருந்த யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த வினோத் எனப்­படும் ராஜ்­குமார் ஜெய­கு­மா­ரையும், மனோஜ் எனப்­படும் யாழ். கொக்­குவில் கிழக்கை சேர்ந்த குலேந்­திரன் மனோ­ஜித்­தையும் கைது செய்­தனர்.

அத்­துடன் யாழில் வைத்து, இனுவில் பகு­தியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்­குவில் பகு­தியைச் சேர்ந்த அர்­ஜுனன் பிர­சன்ன ஆகி­யோ­ரையும் கைது செய்­தனர். கைது செய்­யப்­பட்ட மேற்­படி அறு­வ­ரி­டமும் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வினர் தீவிர விசா­ர­ணை­களை நேற்று மாலை­யாகும் போதும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இந்த விசா­ர­ணை­களின் பின்னர் மேற்­படி அறு­வரும் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் சிறப்பு விசா­ர­ணை­க­ளுக்­காக ஒப்­ப­டைக்­கப்­ப­டலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது.

நேற்­று­மாலை வரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், தற்­போது இயங்கும் ஆவா குழு­வினை விக்­டரே வழி நடாத்­து­வது உறு­தி­யா­கி­யுள்­ள­துடன் அவர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட சில குற்றச் செயல்கள் தொடர்­பி­லான தக­வல்­களும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆவா குழுவை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு கைது செய்த நிலையில் அதன் தலை­வ­னாக செயற்­பட்ட பாதாள உலகக் குழுக்­களை வழி நடத்தி யாழ். மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் பொது மக்­களை அச்­சு­றுத்தி பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்டு வந்­த­தாக கூறப்­படும் ஞான­சே­கரம் தேவ­சுதன் எனப்­படும் தேவா, நல்­ல­லிங்கம் பிர­சன்னா எனப்­படும் சன்ன மற்றும் டேனியல் குண­சீலன் எனப்­படும் பிரகாஷ் ஆகியோர் இந்­தி­யா­வுக்கு கடல் மார்க்­க­மாக தப்பிச் சென்­றி­ருந்­தனர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் இந்­தி­யாவில் கைதும் செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே வெற்­றி­ட­மான ஆவா குழு தலைமை பொறுப்பை விக்டர் ஏற்று வழி நடாத்­தி­யுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

முன்­ன­தாக யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்ய சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் சத்­தி­யா­னந்­தன வீதியைச் சேர்ந்த 20 வய­து­டைய மதூ எனப்­படும் சிவ­ராஷா மதுஷன் மற்றும் 23 வய­து­டைய மானிப்பாய் ராஷா மதுஷன் மற்றும் 23 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ், 18 வய­து­டைய நல்லூர் வீதி, அர­ச­டியைச் சேர்ந்த நல்லூர் முத்து என அறி­யப்­படும் யோக­ராசா சதீ­சையும் கோப்பாய் மத்­தியைச் சேர்ந்த 18 வய­து­டைய அருள் சீலன் பெட்ரிக் தினே­ஸ், கொக்குவில் மேற்கை சேர்ந்த 18 வயதுடைய புஷ்பராசா டக்ஷன் ஆகியோரே இதுவரைக் கைது செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்தாவது சந்தேக நபர் யாழ். பிராந்திய பயங்கரவாத புலனயவுப் பிரிவினராலும் ஏனையோர் சிறப்பு பொலிஸ் குழுவினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.