Jump to content

அலைகள்


Recommended Posts

பதியப்பட்டது

அலைகள்

மணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.

மணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். பீற்றரும் ஜோர்ஜும் முத்துச் சேரியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐவரும் இணைபிரியாத உயிர்த் தோழர்கள். அதே பாடசாலையில்த்தான் வண்ணார்மலையைச் சேர்ந்த எழை விவசாயியின் மகள் மீனாட்சியும் உயர் தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தாள். அவள் அறிவு அழகு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.

ஒரு நாள் ராகேஷ் பாடசாலைக்குச் செல்லும் போது மீனாட்சியின் சைக்கிள் பழுதடைந்து பாதி வழியில் நின்றாள். ராகேஷ்தான் உதவி செய்து அவளைப் பாடசாலைக்குச் கூட்டிச் சென்றான். அன்று எற்பட்ட நட்பு காலப்போக்கில் ராகேஷின் மனதில் காதலாக மாறியது. ராகேஷ் தனது காதலை மீனாட்சியிடம் கூறினான், ஆனாலும் மீனாட்சி அவன் காதலை ஏற்கவில்லை. அவன் குடும்பம் ஊரிலே செல்வாக்கான பணக்காரக் குடும்பம், தானோ எழை என்று காரணம் சொல்லி அவனது காதலை மறுத்தாள். அவனது இடைவிடாத முயற்ச்சியினால் இருதியில் அவன் காதல் வலையில் அவள் வீழ்ந்தாள்.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள். பாடசாலையில், வகுப்பறையில், கோவில்,வயல் என்று இவர்கள் காதல் வளர்ந்த்து. காதல் வளர வளர சிறிது சிறிதாக வெளியே தெரியத் தொடங்கியது. முடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.

இந்த விசயத்தையறிந்த மீனட்சியின் பெற்றோர்கள் அவளிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிப்பார்த்தார்கள். காதல் வந்த பேதையின் மனம் மாறுமா....? இறுதியில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியது. ராகேஷின் பெற்றோர் அவனது மனதை பலவந்தமாக மற்றப் பர்த்தார்கள், மீனட்சியை கல்யாணம் பண்ணினால் அவனை ஊரை விட்டு விலக்கி விடுவதாக பயமுறுத்திப் பார்தார்கள். அவனோ அவனது காதலை கொஞ்சம் கூட விடத் தயாரில்லை என்று கூறி மறுத்து விட்டான்.

இறுதியில் ராகேஷின் பெற்றோர் மீனாட்சியின் பெற்றோரைப் போய் மிரட்டிப் பார்த்தார்கள். மீனாட்சி இனிமேல் ராகேஷைப் பார்க்கக்கூடாது என்று. அவர்களும் உயிருக்குப் பயந்து மீனாட்சியை சம்மதிக்க செய்தார்கள்.வெளியில் பெற்றோருக்காக ஒத்துக் கொண்டாள் மீனாட்சி, ஆனாலும் அவள் தன் மனதை மாற்றுவதாக இல்லை. இதையெல்லாம் அறிந்த ராகேஷ் நண்பர்கள் மூலமாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து நாளும் குறித்தனர்.

அந்த நாளும் வந்தது பல இன்னல்கள். கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கி, கடந்து, அவர்கள் நினைத்ததைச் சாதித்தனர். பக்கத்தில் உள்ள நகரத்தில் போய் பதிவுத் திருமணம் செய்து, கோவில் ஒன்றில் தாலியும் கட்டிக் கொண்டார்கள், அவர்களின் உயிர்த் தோழர்களின் உதவியுடன். இந்தப் பிரச்சினைகளிம் குகனும், பீற்றரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.

தைரியமாக முடிவெடுத்து கல்யாணம் பண்ணியவர்களுக்கு, இனிமேல் என்ன பண்ணுவது,எங்கே போவது என்று புரியவில்லை. அவர்களிண் ஊருக்குப் போகவே முடியாது. அவர்களின் காதலையும், நண்பர்களையும் தவிர வேறொன்றும் இல்லை. பீற்றர் கொடுத்த அறிவுரை அவர்களின் கிராமத்திற்க்கு வரும்படி, ஆனால் ஜோர்ஜ் அதை விரும்பவில்லை." ராகேஷ் பிராமணர் குடும்பதைச் சேர்ந்தவன் அவனால் மீனவர்களுடன் தங்குவது சிரமம்" என்று காரணம் காட்டினான். இறுதியில் பல வழிகளிலும் யோசித்து வேறு வழி எதுவும் இல்லாததால் அவர்களின் கிராமத்திற்கு போவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த ஊர் பெரியவர்களின் உதவியுடன் முத்துச்சேரியில் ஒரு சிறு வீடமைத்து குடியமர்த்தப் பட்டனர்

ராகேஷ் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்ந்ததால் அவன் எந்தத் தொழிலும் பழகாதவன். அந்தக் கிராமத்தில் மீன் பிடிப்பதைத்தவிர வேறு தொழில் எதுவும் கிடையாது. அவன் தன்னை நம்பி வந்த தனது உயிர் மனைவிக்காக அந்தத் தொழிலை செய்வதற்க்கு முடிவெடுத்தான். அவளிற்க்கோ அதில் சற்றும் விருப்பமில்லை. தனக்காகத் தன் கணவன் கஷ்டப்பட்டு தனது குலத்திற்க்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபடுவதை அவள் அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனாலும் அவன் தந்து அன்பால் அவளை சம்மதிக்க வைத்தான். அவளும் அரை மனதுடன் சம்மதித்தாள்.

மீன்பிடித் தொழிலில் முன் அனுபவமேதும் இல்லாத்தால் ராகேஷ் மிகவும் சிரமப்பட்டான். அவனின் நண்பர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேக்கவில்லை. அவனிற்க்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர்களின் உதவியுடன் மீன்பிடித் தொழிலை சிறிது சிறிதாக கற்று முன்னேறி தனியாகச் சென்று மீன்பிடிக்கும் அளவிற்கு முன்னேறினான்.

அப்படியாக அவர்களது வாழ்க்கை இன்பமாகப் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் தாண்டி. முன்னர் பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டார்கள், இப்போது அதுவும் படிப்படியாக குறைந்து விட்டது. மிகவும் இன்பமாகவும், எழிமையாகவும் வாழ்ந்தார்கள். அந்தக்காலத்தில் மீனாட்சி கருவுற்றாள். இப்போது அவர்கள் வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்றது. அவர்களின் நண்பர்கள் தான் அவர்களிற்கு உறவினர்களாக, தெய்வமாக உதவி செய்தார்கள். மீனாட்சி தான் கருவுற்றதிலிருந்து ராகேஷ் கடலிற்க்குப் போவதை விரும்பவில்லை, எனினும் அவர்கள்து பொருளாதார நிலமை காரணமாக அவன் போகவேண்டியிருந்தது. முதலில் கிழமைக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் போனவன் இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் குறைத்தான்.

மீனாட்சி எட்டு மாத நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அன்றுதான் 2004ம் ஆண்டுக்கான கிறுஸ்துவரின் நத்தார்ப்பண்டிகை வந்தது. அவர்களிருவரும் அவர்களுடைய நண்பர்களுடன் தேவாலயத்திற்க்குச் சென்று இறைவணை வணங்கினார்கள். கிறுஸ்துப்பாலனைப் போல ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவனை தரிசித்துவிட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்க்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.

அன்று இரவு ராகேஷ் கடலிற்குப் புறப்படத் தயாரனான். மீனாட்சியோ "இண்டைக்கு நத்தார்தானே ஜோர்ஜ், பீற்றர் அண்ணா யாரும் வரமாட்டாங்க நீங்க தனியா போகணுமா" என்று கேட்டாள். "இன்று நத்தார் அவங்க யாரும் போகமாட்டாங்க, உனக்கும் பிள்ளை பிறக்க நாள் கிட்டுது, நம்மகிட்டையும் பணம் சேமிப்பில இல்லை இன்றைக்கு போனால் வருமானம் கொஞ்சம் கூட வரும் என் பிள்ளைக்காக நான் போகவேண்டும்" என்று மீனாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு புறப்படத் தயாராகின்றான் ராகேஷ். அவளும் அரை மனதுடன் சம்மதம் சொல்கிறாள். ராகேஷிற்க்கு மீனாட்சியை தனியே விட்டுப் போக மனமில்லாமல் அவளைக் கூட்டிச்சென்று ஜோர்ஜ் வீட்டில் விட்டுவிட்டு, அவன் மறுத்தும் கேட்காமல் மறுத்துவிட்டு செல்கிறான்.

மறு நாள் விடிந்து விட்டது. வழமையாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்று மணி ஏழரையும் தாண்டி விட்டது என்னும் காணவில்லை. மீனாட்சி கரையில் அவளவனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளது மனதை பயம் பற்றிக் கொள்ள ஆரம்பிக்கின்றது. நேரம் எட்டு மணியும் ஆகிவிட்டது. விஷயம் அறிந்த பீற்றர் அங்கு வந்து விட்டான். வேறு இரு படகில் ராகேஷைத் தேடிப் புறப்படத் தயாராகும் போது தொலைவில் ராகேஷின் படகு வருவது அவனுக்குத் தெரிந்தது. அவன் கிட்டே வந்த போதுதான் மீனட்சியின் ஊசல் ஆடிக்கொண்டிருந்த உயிர் ஒரு நிலைக்கு வந்தது. அவன் வந்து சேர்ந்து படகை கரைக்கு கொண்டு வரும் போது நேரம் எட்டு நாற்பதைத் தாண்டியிருந்த்து.

அவன் வந்திறங்கியதும் அவள் நடக்க முடியாமல் ? ?#8220;டிப்போய் அவனைக் கட்டியணைத்து அழுகின்றாள் சிறு குழந்தை போல. அவன் அவளை சமாதனப் படுத்தி பக்கத்தில் இருந்த மரப்படகில் உட்கார வைத்து விட்டு பீற்றரின் உதவியோடு வலையைப் பிரிக்க ஆரம்பிக்கின்றான்.

அவள் மரப்படகில் இருந்து கொண்டு தன் கணவன் வலை பிரிப்பதை பார்த்து மனதில் கவலைப் படுகின்றாள். "எபபடி இருக்க வேண்டியவர் என்னால் கஷ்டப்படுகிறாரே"" என்று. அப்படியே அவள் தனது கவனத்தைச் சற்று திருப்புகிறாள். குழந்தைகள் சிறுவர்கள் என் பலர் ஆனந்தமாக் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருக்கிண்ரனர். தனது வயிற்றைத் மெதுவாகத் தடவிக் கொண்டே "என் பிள்ளையும் பிறந்து வளர்ந்து இப்படித்தான் விளையாடுவான்" என்று சந்தோஷமாக நினைத்துச் சிரிக்கிறாள். அப்போதுதான் அவளிற்க்கு தேநீர் கொண்டு வந்தது நினைவிற்க்கு வருகிறது ஆனால் தேநீர் ஆறிப் போயிருந்தது. "எழு மணிக்கு போட்ட தேநீர் ஒன்பதையும் தாண்டிவிட்டது ஆறாமல் இருக்குமா..?" எழும்பிப் போய் அவனிடம் சென்று "உங்களிற்க்கு தேத்தண்ணி கொண்டு வந்தேன் இப்ப ஆறிப் போயிற்று, வீட்டுக்குப் போய் சுடச் சுடத் தேத்தண்ணி கொண்டு வாறேன்" என்று சொல்கிறாள். அவன் சொல்கிறான் "வேலையை முடித்து விட்டு ஒரேயடியாக வீட்டுக்குப் போகலாம்" என்று. அவளோ "இல்லை நீங்க வர 11மணியாகும் நான் போய் போட்டு வாறேன்" என்று சொல்லுகிறாள். அவனும் சரி போய்ட்டு வா என்று கண்களால் சொல்கிறான்.

சாலைக்கு வந்து மெதுவாக ஒரு ஐந்து நிமிடம் நடந்து இருப்பாள், கடற்கரையில் பாரிய சத்தம் கேட்கிறது குண்டு வெடிப்பதைப் போல். திரும்பிப் பார்க்கிறாள் கடல் அலை வேகமாக மேல் எழும்புகிறது பனை மர உயரத்திற்க்கு, அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவள் வந்த பாதையால் சற்று வேகமாகச் சென்றால் அவள் தப்பலாம். ஆனாலும் அவளது உயிர் அவன் தானே அவள் தனது உயிரை நோக்கி ?#8220;டுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி ?#8220;டுகிறாள். கரையில் எழும்பிய அலை ஒன்று படகுகள், கற்கள், குப்பைகள் போன்ற ஆயுதங்களுடன் அவளது காலடியில் விழுகிறது. அவள் கத்துகிறாள் "ராகேஷ் ராகேஷ் ராகேஷ் ராகேஷ்.........." என்று. அவளிற்க்கு எதுவும் தெரியவில்லை. எங்கும் தண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து எழுந்து தானும் மேலே போவது தெரிகின்றது. அவளின் கால் ஒரு மரத்தில் மாட்டுப் படுகிறது. அத்துடன் அவளிற்க்கு சுயநினைவு அற்றுப் போகிறது.

இரு நாட்களின் பின்னர் அவளிற்க்கு நினைவு திரும்புகிறது. அவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை. படுத்திருந்த படியே அந்த இடத்தை சுற்றிப் பார்க்கின்றாள். எங்கும் மரண ?#8220;லம். காயம்பட்டவர்கள், அவர்களை காப்பாற்ற முயற்ச்சித்து கொண்டிருக்கும் வைத்தியர்கள். அவள் கண் எல்லா இடமும் பார்த்துக் கொண்டே தன் கையால் வயிற்றைத் தடவுகிறாள், அவ்விடத்தில் தன்க்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. தாங்க முடியாத சோகத்திலும், வலியிலும் தனது சக்தி எல்லவற்றையும் சேர்த்து வைத்திய சாலையே அதிருமளவிற்க்கு "ராகேஷ் .................." என்று கத்துகிறாள். அவளின் சத்ததைக் கேட்டு எல்லரும் அவள் அருகில் கூடிவிட்டனர். அவளாள் பேச முடியவில்லை, பெசும் அளவிற்க்கு சக்தியும் இல்லை. அழுகிறால் தன்னால் முடிந்தளவு பலமாக அழுகிறாள். "ராகேஷ்" என்று முணுமுணுக்கின்றாள். அப்போதுதான் ஜோர்ஜும் அர்வ்ந்தும் உள்ளே வருகின்றனர், அவளைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் அவளுடைய மணம் சிறிது மகிழ்கிறது. எனினும் அவனைக் காணத்தாள் மீண்டும் கலங்குகிறாள். அவர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றாள். அவர்கள் மீனாட்சியைப் பார்த்து சோகம் தாங்க முடியாமல் அழுகின்றனர். குகன் விஷயத்தைச் சொல்கின்றான் " கடல் நீரினால் அவள் அடித்துச் செல்லப் பட்டு மரத்தில் மோதியதில் அவள் வயிற்றில் பலமாக அடிபட்டதினால் அவளது குழந்தை குறைப் பிரசவமாக பிறந்து இறந்து விட்டது" என்று கூறினான்.

அவள் "ராகேஷ்" என்று மெதுவாக கேட்கிறாள், அவர்களிற்க்கு அத்ற்க்கு பதில் சொல்ல முடியவில்லை. ஜோர்ஜ் அழுதுகொண்டே "கடற்கரையில் வலை பறித்துக் கொன்டிருந்த ராகேச்சும்,பீற்றரும் கடலலையில் அடித்திச் செல்லப் பட்டுவிட்டார்கள்,அவர்களோடு சேர்த்து பல நூறுபேரைக் காணவில்லை, தேடுகிறார்கள்" என்று கூறினான். இதைக் கேட்டதும் படுந்திருந்து அழுதுகொண்டிருந்த அவள் கட்டிலில் எழுந்து இருக்க முயற்ச்சி செய்கிறாள் ஆனல் அவளால் அவள் காலை தூக்க முடியவில்லை மெதுவாக தனது காலை தொடுகிறால் அவளது இடது காலை காணவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்து விழுகின்றாள்.

அன்று மயங்கி விழுந்தவள் இரண்டு ஆண்டுகள்,ஆகியும் என்னும் நினைவு திரும்பவும் இல்லை, கடலோடு அடிபட்டுச் சென்ற ராகேஷும் திரும்பவில்லை.

"வைத்தியர்கள் சொல்கின்றனர் இது கோமா நிலையாம் எப்போ நினைவு திரும்பும் என்டு சொல்லேலாதாம்" என்று அழுதபடி ராகேஷின் தகப்பனார் மீனாட்சியின் தகப்பனிடம் கண்ணீர் வடித்தபடி கூறுகின்றார்.

அன்று காதலித்தபோது எதிர்த்து நின்று அந்த சிறிய பிஞ்சுகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்க்கு அவனும் உயிருடன் இல்லை, அவழும் சுயநினைவுடன் இல்லை.

அவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.

இந்த மீனாட்சி மட்டுமில்லை இவளைப் போல பல மீனாட்சிகள் இன்றும் நம் சமுதாயத்தில் உயிரில்லாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள

Posted

ம்ம் அப்ப இனுமல் தான் பிரச்சனை இருக்கு போல,

தொடர் கதையா ,..... நல்லாயிருக்கு , மிகுதியைதொடருங்கள்....! :P

Posted

வணக்கம் எல்லோருக்கும். இதுதான் எனது முதல் சிறுகதை. தவறுகள், பிழைகள் இருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டுங்கள். வருங்காலங்களிள் பிழைகளை தவிர்த்துக்கொள்கின்றேன். உஙக்ள் விமர்சனங்களை எதிர்பாக்கின்றேன்.

அன்புடன் பிரசன்னா

Posted

வணக்கம் பிரசன்னா,

கதை நன்றாக இருக்கு...நல்லொரு கருத்து சொல்லி இருக்கின்றீர்கள்.

மனிதர்களும் சரி....இயற்கையும் சரி..வாழ விடாத எத்தனையோ காதலர்கள் இப்படி உயிரோடும்,உயிரில்லாமலும் இருக்கிறார்கள்.

உங்கள் கதையை பற்றிய கருத்துக்கள் கதைகளில் அனுபவமுள்ள பெரியவங்க எப்பிடியும் வந்து சொல்லுவாங்க எண்டு நம்புறேன்..

Posted

உமது முதலாவது கதையிலேயே இப்படி கதையின் கதாநாயகி மீனாட்சியை அபலையாக்கிவிடுவது மகாபாவம்! நீர் செய்த இந்தக் குற்றத்திற்காக மீனாட்சிக்கு நீர்தான் மறுமணம் செய்து மறுவாழ்வு கொடுக்க வேண்டும்! :angry: :angry: :angry:

Posted

உமது முதலாவது கதையிலேயே இப்படி கதையின் கதாநாயகி மீனாட்சியை அபலையாக்கிவிடுவது மகாபாவம்! நீர் செய்த இந்தக் குற்றத்திற்காக மீனாட்சிக்கு நீர்தான் மறுமணம் செய்து மறுவாழ்வு கொடுக்க வேண்டும்! :angry: :angry: :angry:

:(:(:( மாப்பு எனக்கு ஆப்பு வைக்கணும் என்று கிளம்பியிருக்குறீங்க என்று மட்டும் எனக்குப் புரியுது, ஏன்ப்பா ஒருத்திகூஉட படுற கஷ்டம் போததுனு :lol::o:D என்னும் ஒன்றா...? இதை மட்டும் என் மனைவி பார்த்தால் அப்புறம் உமது நின்லைதன் எனக்கும் :rolleyes::blink::lol:

Posted

கதை நல்லாருக்கு

:D:D:D பொய்யெல்லம் சொல்லாக் கூடது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல்ல கதைக்கரு. கதையோட்டத்தில் இன்னமும் மெருகேற்றினால் வாசிப்பவர்களின் மனதை இலகுவில் தொட்டுவிடுவீர்கள். முதற்கதையில் குறைகளிருப்பினும் அவற்றைக் குறைகளாகக் காணமுடியாது. எதிர்காலத்தில் சிறந்த படைப்புக்களை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் கதையை வாசிக்கும்போது எனது இதயம் கனத்தது உண்மை நண்பரே. மீண்டும் வாழ்த்துக்கள்.

Posted

நல்ல கதைக்கரு. கதையோட்டத்தில் இன்னமும் மெருகேற்றினால் வாசிப்பவர்களின் மனதை இலகுவில் தொட்டுவிடுவீர்கள். முதற்கதையில் குறைகளிருப்பினும் அவற்றைக் குறைகளாகக் காணமுடியாது. எதிர்காலத்தில் சிறந்த படைப்புக்களை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் கதையை வாசிக்கும்போது எனது இதயம் கனத்தது உண்மை நண்பரே. மீண்டும் வாழ்த்துக்கள்.

நன்றி கஸ்தூரி உங்கள் விமர்சணங்களிற்க்கு, எதிர்காலங்களில் தாவறுகளை குறைப்பதிற்க்கு முயற்ச்சி செய்கின்றேன்

  • 2 weeks later...
Posted

இப்பத்தான் இந்தக்கதையை வாசித்தேன் பிரசன்னா என்கின்ற வானவில் :-)) அதுவும் நீங்கள் காதல் தியாகம் என்று லிங் குடுத்திருந்ததால இங்க வந்து சேர்ந்தன்.

ஒரு சில எழுத்துப்பிழைகள் இருக்கு கவனியுங்க.

சோகமான கதை ஆனால் நல்லா எழுதியிருக்கிறீங்கிள்.

மீனவக்கிராம மக்களை வச்சு வாற கதை எல்லாமே இப்பிடி சோகமா இருக்கிறதுதான் கவலையா இருக்கு.மயூரேசன் கூட இந்த சாயலில் ஒரு கதை எழுதியிருந்தார் அங்கயும் சோகம்தான்.

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் பாடல் ஞாபகம்தான் வருது.

Posted

இப்பத்தான் இந்தக்கதையை வாசித்தேன் பிரசன்னா என்கின்ற வானவில் :-)) அதுவும் நீங்கள் காதல் தியாகம் என்று லிங் குடுத்திருந்ததால இங்க வந்து சேர்ந்தன்.

ஒரு சில எழுத்துப்பிழைகள் இருக்கு கவனியுங்க.

சோகமான கதை ஆனால் நல்லா எழுதியிருக்கிறீங்கிள்.

மீனவக்கிராம மக்களை வச்சு வாற கதை எல்லாமே இப்பிடி சோகமா இருக்கிறதுதான் கவலையா இருக்கு.மயூரேசன் கூட இந்த சாயலில் ஒரு கதை எழுதியிருந்தார் அங்கயும் சோகம்தான்.

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் பாடல் ஞாபகம்தான் வருது.

உங்கள் கருத்திற்கு நன்றிகள், இதுதான் முதல் கதை. தவறுகளை மன்னிக்கவும். சிறுகதைகளை எடுத்து கொண்டால் பொதுவாக சோகமாகத்தன் முடிகிறது ஏனென்று தெரியவில்லை, தற்போது மாப்பிற்காக ஒரு பொண்ணிற்க்கு வாழ்க்கை கொடுத்து 1 கதை எழுதுகிறேன் அது முடிந்த்ததும் உமக்காக ஒரு சோகமில்லத கதை எழுத முயற்ச்சிக்கின்றேன் :P

Posted

யதார்த்தமான கதைக்கரு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Posted

முதல் கதை என்றாலும் நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். கதையின் சோகமான பின்ணணி தான் வருந்த வைக்கின்றது. யதார்த்தை நிஜ உலகில் நடப்பவற்றை மனம் ஏற்று கொள்ள மறுக்கின்றதோ ?

கதையை படிக்கும் போது என் மனதில் மாறி மாறி ஒரு விடயம் இது இந்திய பின்ணணியில் எழுதப்பட்டதா இலங்கை பின்ணணியில் எழுதப்பட்டதா என்பது. இரண்டின் கலவை போல தோன்றுகின்றது. அப்படியா எழுதினீர்கள்?

Posted

மதன் அண்ணா நான் இதற்கு எந்த பிரதேசததையும் பின்னனியாக்கவில்லை, 1 மீனவக்கிராமம் அதையடுத்து ஒரு விவசாயதன் அதிகமாக கொண்ட ஒரு ஊர் அதையே இலக்கான வைத்து எழுதினேன் மற்றும் படி எந்த ஒரு பிரதேசத்தையும் மையப்படித்தவில்லை

Posted

அருமையான கதை எனக்கே அழுகை வந்துவிட்டது தொடர்ந்து இவ்வாறான கதைகளை எங்களுக்கு தரவும்,

Posted

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

Posted

அருமையான கதை எனக்கே அழுகை வந்துவிட்டது தொடர்ந்து இவ்வாறான கதைகளை எங்களுக்கு தரவும்,

உமக்கு அதெல்லாம் வருமா............?

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

நன்றி

Posted

என்ன வானவில் உங்களிட்ட இந்த திறமையும் இருக்கா சொல்லவேயில்ல:rolleyes:

தொடர்ந்து எழுதுங்கள். பட் இனிமையான முடிவு வரக்கூடியமாதிரி எழுதுங்க பிளீஸ்ஸ்ஸ்

Posted

என்ன வானவில் உங்களிட்ட இந்த திறமையும் இருக்கா சொல்லவேயில்ல:o
:rolleyes:
தொடர்ந்து எழுதுங்கள். பட் இனிமையான முடிவு வரக்கூடியமாதிரி எழுதுங்க பிளீஸ்ஸ்ஸ்

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.