Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தாலையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கின்றார் – சி.வி. விக்னேஸ்வரன்

Featured Replies

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தாலையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கின்றார் – சி.வி. விக்னேஸ்வரன்

 

Wicki_CI.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.  அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண  எதிர்க்கட்சித்தலைவர் அண்மைக்காலங்களில் தன்னைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கு எம்மைக் கையாலாகாதவர்கள் என்று சித்தரிக்கப்பார்க்கின்றார். தனது கட்சியில் வேண்டப்படாத ஒருவராக இருக்கும் அவர் பத்திரிகைகளில் தஞ்சம் புகுந்திருப்பது விளங்கக்கூடியதொன்றுதான்.

எமது கௌரவ அவைத்தலைவரின் சாதுரியத்தால் எதிர்க்கட்சித்தலைவர்  பதவியை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவர் கடந்த 45 மாதங்களில் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

ஒருவேளை அவர் அரசியலை விட்டு ஆத்மீகத்தினுள் நுழைந்துவிட்டாரோ என்று அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஆத்மீகத்தில்த்தான் நாம் எதுவுமே செய்யவில்லை, இறைவன்தான் செய்விக்கின்றான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால் அவரின் கேள்விகள் அந்த அர்த்தத்தில் எழுப்பப்படவில்லை என்று தெரிந்துகொண்டேன்.

அதாவது நாங்கள் சனி, ஞாயிறு பார்க்காமல் ஒவ்வொரு நாளும் 15 இலிருந்து 18 மணித்தியாலம் வரை ஓயாது வேலை செய்து கொண்டிருக்கின்றோம். பலவற்றைச் செய்துமுள்ளோம். ஆனால் அவை தனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பது தான் அவரின் பிரச்சனை. அதனால்த்தான் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

நாங்கள் பலதையும் செய்துள்ளோம். ஆனால் அவருக்கு அவற்றின் தாற்பரியமும் உண்மையும் தெரியாமல் செய்ததால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பது அவரின் முறைப்பாடு. அவருக்குத் தெரியாமல் நடந்த பலவற்றின் உண்மை நிலையை நான் இங்கெடுத்துரைப்பதற்கு முன்னர் என் நண்பருக்கு ஒன்று கூறவிரும்புகின்றேன்.

உங்கள் எதிர்பார்ப்புக்கள், உங்கள் சிந்தனைகள், உங்கள் ஊகங்கள் யாவும் உங்களின் அறிவின் வரையறைகள், உங்களின் வாழ்க்கையின் பாதிப்புக்கள், உங்கள் கட்சியின் கொள்கைகள் பாற்பட்டவையே. நாம் எதை, ஏன், எவ்வாறு செய்கின்றோம் என்பதை எம்முடன் கலந்தாலோசித்தே நீங்கள் அறியவேண்டும். நீங்களாக உங்கள் முடிவுகளுக்கு வந்து பாப்பாண்டவரின் பகர்வுகள் போல்ப் பலதையும் பத்திரிகைகள் ஊடாகப் பலரறியப் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்று கூறி வைக்க விரும்புகின்றேன். பத்திரிகையில் பெயர் வரவேண்டும் என்பது தான் உங்களின் குறிக்கோளாக உள்ளதே ஒளிய உண்மையைத் தெரிந்து கொள்வதல்ல என்று நம்புகின்றேன்.

ஒருவேளை உங்கள் கட்சி உங்களை அடுத்த தேர்தலுக்கு முன் கட்சியில் இருந்து துரத்திவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் பல கட்சித்தலைமைகளுக்கும் உங்களை விளம்பரப்படுத்த இந்த ஏற்பாடோ நான் அறியேன் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/37063

  • தொடங்கியவர்

வடக்கு முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவரிடையே முரண்பாடு

 

 

கட்சியில் வேண்டப்படாத ஒருவராக மாறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் சாதுரியத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு ஊடகங்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக, தங்களை கையாலாகாதவர்களாக காட்ட நினைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.

வடமாகாண சபையின் 102 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபைக் கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில், வடமாகாணசபையின் கடந்த 3 வருடங்கள் மற்றும் 9 மாதங்களின் செயற்பாடுகள் குறித்து இன்றைய அமர்வில் ஆராயப்படுகின்றது.

இதன்போது கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற விசேட அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இன்றைய அமர்வில் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.   

தாம் பல விடயங்களை செய்திருப்பதாக தெரிவிக்கின்ற போதிலும், அவை தமக்கு ஏற்றாற்போல் இல்லை என்பதால் அதனை விமர்சிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவரது எதிர்பார்ப்புக்களும் ஊகங்களும் அவர்களது வாழ்க்கை முறை மற்றும் கட்சியின் கொள்கைகளைத் தழுவியதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, கட்சியில் வேண்டப்படாத ஆளாக மாறியுள்ளதால், அடுத்த தேர்தலில் தனக்கு ஆசனம் பெறுவதற்காக ஊடகங்களில் விளம்பரம் தேடுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து ஆவேசமாக குரலெ் எழுப்பியதால் சபை சற்றுநேரம் காரசாரமாக காணப்பட்டது.

 

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Chief-Minister-Opposition-among-Opposition-Leader

599529353ecf8-IBCTAMIL.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எதிர்கட்சி தலைவருக்கு விளங்கிட்டு.. தன்ர கட்சியின் நிலைமை... பாவம். ஒட்டுக்குழு ஆயுத சனநாய் அகக் கட்சி என்று சொல்லி விடுங்கப்பா.  அல்லது இப்ப அவர் எந்தக் கட்சியிலும் இல்லைப் போல. டக்கி மாமா அடிச்சு விரட்டிட்டதாகவும் செய்தி வந்ததே.. அது தான் கட்சி என்றதும்.. கோபம் புத்துக்கிட்டு வருகிறது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

வடக்கு மாகாண சபையில் தன்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் சரியாக பதில் அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் விமர்சனங்கள் சுயவிளம்பரமானது என்பது விளங்குகிறது. டக்ளஸ் கட்சியை விட்டு கலைப்பார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இவர்களின் அரசியலும்.tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

இவர்களும் இவர்களின் அரசியலும்.tw_angry:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 9 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், தாடி
15 minutes ago, குமாரசாமி said:
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்
 
 
 
 

ஹிந்திய கொலைகாரக்கும்பலின் கைக்கூலிகள் சிலர்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.