Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை

Featured Replies

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை

 
 

நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாக ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

bda01574-14d2-4ce0-b51d-3d76a4fca1e5_204


திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முன்னிருத்தி நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிகாந்த் கூறியதாக நிறைய விஷயங்களை தெரிவித்தார். அதில் பேசிய தமிழருவி மணியன், 'காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும் என்று ரஜினி என்னிடம் கூறினார். ஆட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரஜினிகாந்த் கூறினார்.

ac2280de-8afe-4de9-9188-47de10282c15_200

மக்களின் பிரச்னையை தீர்க்கவேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் காமராஜரின் ஆட்சியை மீண்டும் காணவேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் நதிகள் இணைப்பை பத்து ஆண்டுகளில் செய்து முடிக்கமுடியும் என்றும் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியதாக தமிழருவி மணியன் தெரிவித்தார்.

மேலும் பேசிய தமிழருவி மணியன், 'கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை சீரழித்துவிட்டன. ரஜினிகாந்தை தமிழகம் தவறவிட்டால் மக்கள் வாழ வழியில்லாமல் போகும். ரஜினிகாந்த் தூய்மையான அரசியல் செய்யப் புறப்பட்டுவிட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையில் அமரும் நாள்வரும். இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் கொண்டு புதைக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். வைகோ முதல்வராக வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், தற்போது அவருக்கு போதுமான வாக்கு வங்கி இல்லை. அரசியல் குறித்த முடிவுக்கு எடுப்பதற்கு முன்னதாகவே ரஜினிகாந்துக்கு 25 சதவீத வாக்கு வங்கி உள்ளது. அவர் அரசியல் வியூகம் அமைத்தால் 45 சதவீத வாக்கு வங்கி அமையும்' என்று தெரிவித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/99726-tamilzharuvi-manian-told-rajini-told-to-him-he-will-come-to-politics.html

  • தொடங்கியவர்

‘‘தமிழ்நாட்டுக்கான ப்ளூ பிரின்ட்டை ரஜினி தயாரித்துக்கொண்டிருக்கிறார்!’’

 

அடித்துச் சொல்லும் தமிழருவி மணியன்

 

‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார். அவர் வந்தால் இவற்றையெல்லாம் செய்வார் என்று விளக்கம் கொடுக்கிற மாநாடு இது’’ என்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.

‘ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் அவசியம்’ என்பதை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி திருச்சியில் அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த தமிழருவியிடம் பேசினோம்.

22p1.jpg

‘‘காந்தியையும் காமராஜரையும் பின்பற்றும் நீங்கள், திடீரென ரஜினி என்ற நடிகரை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்?’’

‘‘நேற்று வரை நான் ஏதாவது நடிகர் பின்னால் இருந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. இப்போது ரஜினிக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்பதால், மாறி மாறிப் பேசுகிறேன் என்கிறார்கள். நான் மாறவே இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒழித்துக்கட்டுவது என்பது எனக்கான வாழ்க்கைத் தவம். அதுதான் என் வேள்வி. காமராஜர் மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தார். அதனால், அவர் சொன்னதையெல்லாம் அன்றைய மத்திய அரசு செய்து கொடுத்தது. ஜெயலலிதாவுக்கு என தனிப்பட்ட ஆளுமை இருந்ததால், அவரைப் பார்த்து மத்திய அரசு பணிந்தது. ‘நீட்’ தொடங்கி எதுவாக இருந்தாலும் ஜெயலலிதாவை மீறி நடைமுறைப்படுத்துவதற்குத் தயங்கினார்கள். எனவே, இன்றைக்குத் தமிழகத்துக்குத் தேவை மிகப் பெரிய வசீகரத் தலைமை. மக்களைப் பெரும் திரளாக, தன் முதுகுக்கு பின்னால் நிறுத்தி வைக்கக்கூடிய மாபெரும் தலைமை தேவை. அந்தத் தலைமை மட்டுமே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ரஜினி மட்டுமே நம்பிக்கையாக இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்துகிறேன்.’’

‘‘கதிராமங்கலம் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், விவசாயிகள் போராட்டம் என எதற்குமே வாய் திறக்காத, ஒரு அறிக்கை கூட கொடுக்காத ரஜினிதான் இனி மக்களுக்காகப் பேசப்போகிறாரா?’’

‘‘அறிக்கை கொடுத்துவிட்டால் எல்லாம் முடிந்து விடுமா? அவர் களத்துக்கு வர நினைக்கிறார். சொல்வதை விட செயலில் காட்டத்தான் விரும்புகிறார் ரஜினி.’’

‘‘கமல்ஹாசன் கூட வெளிப்படையாகத் தமிழக அரசை விமர்சனம் செய்கிறார். ஆனால், ரஜினி அண்மைக் காலமாக எங்கேயும் அரசியல் பேசியதில்லையே?’’

‘‘கமல்ஹாசன் களத்தில் நின்று போராடினாரா? கதிராமங்கலத்தில் நின்றுகொண்டு குரல் கொடுத்தாரா? நெடுவாசலில் நின்றுகொண்டு கொடி பிடித்தாரா? அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ட்விட்டரில் இரண்டு வரி எழுதினார். அவ்வளவுதான். நான் மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்கிறேன். இந்த தமிழருவி மணியன் நாள் முழுவதும் நாயாகக் கத்தினாலும், எந்தத் தமிழனும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஆனால், கமல் இரண்டு வரி ட்விட்டரில் போட்டுவிட்டால் அத்தனை ஊடகங்களும் ஓடி ஓடி அவர் பின்னால் நிற்கும். காரணம், அந்த மனிதருக்குப் பின்னால் இருக்கும் சினிமா என்ற ஒளிவட்டம். ரஜினியும் இரண்டு வரி ட்விட்டரில் போட்டால் நிறைவடைந்து விடுவீர்களா? உங்களுக்குத் தேவை வெறும் நடிப்புதானா? களத்துக்கு யார் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.’’

‘‘சரி, ரஜினி என்ன செய்கிறார்?’’ 22p2.jpg

‘‘இந்தப் பிரச்னைகளை ரஜினி ஆழமாகப் பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் அவருக்குக் கிடைக்க கூடிய நேரத்தில், வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்களைச் சந்திக்கிறார். அவர் ஒரு ப்ளூ பிரின்ட்டைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு பிரச்னை என்றால், ‘இந்தப் பிரச்னைக்கு நிபுணர் யார்’ என அறிந்து அவரை அழைத்துப் பேசுகிறார். இதற்கு என்ன தீர்வு தர முடியும் எனச் சிந்திக்கிறார். இப்போது அவர் வெறும் நடிகராகத்தான் இருக்கிறார். அவர் தொழிலை அவர் பார்க்கிறார். அரசியலுக்கு வரும்போது எல்லாவிதமான பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான திட்டங்களோடுதான் அவர் வருவார்.’’

‘‘ஒருவேளை எதிர்காலத்தில் கமலும் அரசியலுக்கு வந்தால் அவரையும் ஏற்றுக்கொள்வீர்களா?’’

‘‘ஒவ்வொரு புகழ்பெற்ற நடிகரும் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கிவிட்டால், கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்கும் வித்தியாசமே தெரியாதே. கமலை  ஒருபோதும் நான் வரவேற்க மாட்டேன். இவர்களுக்கு உண்மையாகவே சமூக நேயம் இருக்கும் என்றால், மாற்று அரசியலை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ஊழலற்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், ரஜினியோடு கைகோத்து நிற்கட்டும்.’’ 

‘‘சில ஆண்டுகளுக்கு முன் வைகோவை முதல்வராக்க வேண்டும் என முன்னிறுத்தினீர்கள்?’’

‘‘ஆமாம். இன்றும் சொல்கிறேன். வைகோ முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்தான். நான் ரஜினியை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக, நேற்று கூட இரண்டு மணி நேரம் வைகோவிடம் பேசினேன். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல மாட்டேன். ரஜினியின் வசீகரத் தலைமையால், இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்துவிட முடியும் என்று நம்பித்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். ரஜினிகாந்த் காலத்தின் தேவையாக வந்து நிற்கிறபோது, அவரைப் புறம் தள்ளிவிட்டு, இன்னொரு அரசியல் தலைவரை முன்னெடுப்பது சரியாக இருக்காது. ரஜினிதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியைக் கொடுக்கப் போகிறார். பொறுத்திருந்து பாருங்கள்.’’

- நா.சிபிச்சக்கரவர்த்தி

http://www.vikatan.com/juniorvikatan

  • கருத்துக்கள உறவுகள்

8 கோடி மக்களின் பிரச்சனையினை தீர்க்க முன்னம், நம்பி வந்த 300 மாணவர்களின் பிரச்சனையினை தீர்க்க சொல்லுங்கள்.

10 கோடி வாடகை கொடுங்கள், நம்பி காணியை தந்த முதியவருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை

அய்யே எனக்கு ஒடெம்பெல்லாம் நடுங்குது..tw_yum:

  • கருத்துக்கள உறவுகள்

விசர்க்கூட்டம்!

வேற என்னத்தைச் சொல்ல....!:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னடன் அங்கே அடித்து உட்கார வைக்கிறான்!

DHtLMRvXcAQGxuE.jpg

கன்னடன் இங்கே நடித்து உட்கார வைக்கிறான்!

twitter.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கன்னடன் அங்கே அடித்து உட்கார வைக்கிறான்!

DHtLMRvXcAQGxuE.jpg

கன்னடன் இங்கே நடித்து உட்கார வைக்கிறான்!

twitter.

 

Bild könnte enthalten: 1 Person, Text

நல்லாய் கேட்டுக்கோங்க.... நான், ஒரு முறை... சொன்னால், 100 முறை சொன்னதற்கு சமன்.  :grin:

  • தொடங்கியவர்

“தி.மு.க - அ.தி.மு.க-வை வீழ்த்தவே ரஜினிக்கு ஆதரவு!” - தமிழருவி மணியன் ஒப்புதல்

“ரஜினி, அரசியலுக்குள் வருவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது” என்று திருச்சியில் 'போர் முரசு' கொட்டியிருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்! 

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார் தமிழருவி மணியன். அன்றைய தினத்திலிருந்தே தமிழக அரசியல் அரங்கில், தமிழருவி மணியனுக்கு எதிரான முணுமுணுப்புகளும் ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், ‘ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் அவசியமா?’ என்ற தலைப்பில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் தமிழருவி மணியனிடம் பேசினோம்...

தமிழருவி மணியன்

“ரஜினிகாந்த், பி.ஜே.பி-க்குப் பின்னால் போகமாட்டார் என்று எந்த நம்பிக்கையில் உறுதி கொடுக்கிறீர்கள்?”

“ரஜினி, பி.ஜே.பி-யோடு போகமாட்டார் என்று நான் சொல்லவில்லை. பி.ஜே.பி தலைமையில் ரஜினி இருக்கமாட்டார் என்றுதான் சொல்கிறேன். அவர் ஆரம்பிக்கவிருக்கிற கட்சியோடு கூட்டணியில் வேண்டுமானால், பி.ஜே.பி இருக்கலாம். இந்தக் கருத்தையும்கூட அவர் என்னிடம் பேசுகிற பேச்சை வைத்தும் எனக்குக் கிடைக்கிற தகவல்களின் அடிப்படையிலும்தான் கூறுகிறேன்.”

“ரஜினி, ஓர் ஆன்மிகவாதி. பி.ஜே.பி தலைவர்கள் தொடர்ச்சியாக அவரை சந்தித்துப் பேசுகின்றனர். ஆகவே, இதுகுறித்த செய்திகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறதே?”

“தமிழ்ப் பண்பாட்டைத் தலை மீது தூக்கிவைத்துக் காப்பதற்காகவே களம் கண்டிருக்கிற 'நாம் தமிழர்' நண்பர்கள்கூட, என்னைப்பற்றி வலைதளங்களில் எழுதுகிறபோது, 'ரஜினிகாந்திடம் 10 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார் தமிழருவி மணியன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள். அதுவெல்லாம் உண்மையாகிவிடுமா?

தமிழருவி மணியன்

அவரவர் அரிப்புக்கும், தினவுக்கும் எதையாவது சொல்லி, எவனையாவது கேவலப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழினப் பண்பாட்டுக் காவலர்களின் நடைமுறையாகிவிட்டது. ஆனால், அதைக்கூட அவர்களால் நல்ல தமிழில் எழுதமுடியவில்லையே... வல்லின 'ற' எங்கே வரும், இடையின 'ர' எங்கே வரும் என்பதைக்கூடத் தெரியாதவன்தான் தமிழைக் காப்பாற்றப் போகிறான். 'நாயே, பேயே' என்றெல்லாம் மிகக் கேவலமாக, தரக்குறைவாக எழுதுகிறவன்தான் தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கு 'நாம் தமிழர்' பின்னால் இருக்கிறான். இதெல்லாம் உண்மையாகிவிடுமா?

நான் சொல்ல வருவதெல்லாம் ரஜினி, அனைவருக்குமானவர். அந்த இமேஜைக் கெடுத்துக்கொள்ள அவர் விரும்பமாட்டார். எனவே, மத்திய அரசைப் பகைத்துக்கொண்டு, அவரது கனவுத் திட்டமான தென்னக நதிகளை இணைப்பதெல்லாம் சாத்தியமே கிடையாது.”

“அப்படியென்றால், ரஜினிகாந்துக்கு நீங்கள் ஆதரவளிப்பதன் நோக்கம்?”

“எடப்பாடி பழனிசாமி மாதிரி மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடப்பவர்களால் தமிழகத்துக்கு என்ன நன்மை வந்துவிடப்போகிறது? காமராஜர், ஜெயலலிதா போன்ற வசீகர - வலிமைமிக்கத் தலைவர்கள் மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் துணிச்சலாகப் பேசிப் பெற்றுக்கொடுத்தார்கள். அதே நேரம், மாநில உரிமைக்காக மத்திய அரசோடு உரசிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதும் தேவையில்லை. உரிமையைக் கேட்டு வாங்குவதற்கான வசீகரத் தலைமை ரஜினிகாந்திடம் இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வரவேற்கிறேன். மற்றபடி வகுப்புவாதத்துக்காகவோ, இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிப்பதற்காகவோ ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை. ஒருவேளை அப்படியிருந்தால், இந்த தமிழருவி மணியன் அவர் பின்னாடி போய் நிற்கமாட்டான்!”

ரஜினிகாந்த்

“தமிழக மூத்த அரசியல்வாதிகளால் இதுவரையிலும் சாதிக்கமுடியாத, ‘தமிழக நலன்’ சார்ந்த திட்டங்களை எல்லாம் ரஜினிகாந்த் சாதிப்பார் என்று நம்புகிறீர்களா?”

“நம்பிக்கைதான் வாழ்க்கை! ஒருவர் சாதிக்கவில்லை என்பதற்காக இன்னொருவரும் சாதிக்கமாட்டார் என்று சொன்னால், இதுவரை உலகத்தில் எந்தவொரு சாதனையும் நிகழ்ந்திருக்காது. எனவே, ஒருவர் விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் தொடர்வதுதான் முயற்சி. மாறாக, ஒருவர் செய்யமுடியவில்லை; அதனால் அடுத்தவரும் செய்யமுடியாது என்றிருந்தால், அதுதான் மனதளவில் வீழ்ச்சி. அதனால் இதுஒன்றும் பிரச்னையில்லை!

என்னைப் பொருத்தளவில், ஊழல் மிகுந்த தி.மு.க - அ.தி.மு.க என இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும். அதற்கு வாய்ப்பாக ரஜினிகாந்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்... அவ்வளவுதான்!.”

http://www.vikatan.com/news/tamilnadu/99796-this-is-why-i-am-supporting-rajini-says-tamilaruvi-manian.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி - யூரூப்

கள உறவுகளே  தமிழருவி மணியன் யாரெனத் தேடப்பார்க்க முனைய இந்தக்காணொளி என் கண்ணிற் பட்டது. இணைத்துளேன். 

தமிழக அரசியலென்பது பெரும்பாலும் திரைப்பிரபலங்களை மையம்கொண்டு சிலதசாப்தங்களைக் கடந்துவிட்டது.எனவே எதுவும் நடக்கலாம். என்னைப்பொறுத்தவரை   நாம்  யதார்த்தமான கருத்துகளை முன்வைப்பது நல்லது  என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DHyr6DeWsAEMNNm.jpg

தமிழ் நாட்டில வெள்ளம் வந்த போது விவசாயிகள் செத்த போதும் ஒன்னுமே பண்ணலேயே உன் சுயவிளம்பரத்துக்கு 10கோடியாடா!

DHvisIUUMAEufVy.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“தி.மு.க - அ.தி.மு.க-வை வீழ்த்தவே ரஜினிக்கு ஆதரவு!” - தமிழருவி மணியன் ஒப்புதல்.....

அரசியலுக்கு வரும் போது வரட்டும் இப்போதைக்கு கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று மட்டும் ரஜினியை சொல்ல சொல்லுங்க பார்ப்போம் மணியன்!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21.8.2017 at 1:18 PM, nochchi said:

நன்றி - யூரூப்

கள உறவுகளே  தமிழருவி மணியன் யாரெனத் தேடப்பார்க்க முனைய இந்தக்காணொளி என் கண்ணிற் பட்டது. இணைத்துளேன். 

தமிழக அரசியலென்பது பெரும்பாலும் திரைப்பிரபலங்களை மையம்கொண்டு சிலதசாப்தங்களைக் கடந்துவிட்டது.எனவே எதுவும் நடக்கலாம். என்னைப்பொறுத்தவரை   நாம்  யதார்த்தமான கருத்துகளை முன்வைப்பது நல்லது  என நினைக்கின்றேன். 

 

  • தொடங்கியவர்

“ரஜினிகாந்துக்கு நான் வழக்கறிஞர் இல்லை!” - தமிழருவி மணியன் விளக்கம்

 
 

“ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா?' என்ற தலைப்பில், திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்! ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு கிளம்பிவரும் அதேநேரத்தில், எதிர்ப்புகளும் வலுத்துவருகின்றன. 

இந்த நிலையில், ரஜினிகாந்த்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் தமிழருவி மணியன் குறித்தும் வலைதள விவாதங்கள் சூடு பறக்கின்றன. இவற்றுக்கு விளக்கம் கேட்டு தமிழருவி மணியனிடம் பேசினோம்...

தமிழருவி மணியன்

''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணிக்காக முயன்றபோதே, 'தமிழருவி மணியன் ஒரு புரோக்கர்' என்ற கடுமையான விமர்சனம் எழுந்தது. இப்போதும் 'ரஜினிகாந்திடம் பணம் பெற்றுக்கொண்டு மாநாடு நடத்தியிருக்கிறார் தமிழருவி மணியன்' என்றெல்லாம் இணையதளங்களில் விமர்சிக்கிறார்களே...?''

'' 'புரோக்கர்' என்ற சொல்லுக்குத் தமிழில் 'தரகன்' என்று பெயர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து அவர்களை ஒரே கூட்டணியில் ஒன்றாக இணைத்ததற்காக, திருமாவளவன் என்னைப் பார்த்து 'புரோக்கர்' என்று சொன்னார். மற்றபடி 'கமிஷன் வாங்கினார்' என்ற அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. ஆனாலும் அதே வேலையைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருமாவளவன் மக்கள் நலக்கூட்டணிக்காகச் செய்தார். அப்போது அவரை நான் 'தரகர்' என்று சொல்லவில்லை.
'ஆட்சியில் யார் இருப்பது சரியானது?' என்ற சமூக நலன் என்ற நோக்கத்தோடு செய்கிற ஒரு சீரிய முயற்சியை 'புரோக்கர்' என்று சொல்வது சரியல்ல. என்னைத் 'தரகன்' என்று சொல்லக்கூடிய எந்த மனிதனும் தமிழருவி மணியன் வாழக்கூடிய வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடத் தகுதி இல்லாதவர்கள். கையூட்டு பெற்று தமிழருவி மணியன் காரியம் செய்கிறான் என்று எவராவது சொன்னால், அவர்களுக்கு நரகத்தின் வாசலில்தான் இடம் கிடைக்குமே தவிர... வேறொன்றுமில்லை.

ரஜினிகாந்த்

1967-ல் மாணவனாக காமராஜர் காலில் விழுந்துதான் தமிழக அரசியலுக்குள் நுழைந்தேன். இப்போது 2017... முழுமையாக 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன். இந்த 50 ஆண்டுகளில் எந்தத் தலைவனிடமாவது தமிழருவி மணியன் கை நீட்டி 50 பைசா பெற்றான் என்று ஒரு மனிதனும் சொல்லமுடியாது. ஆனால், அப்படிச் சொல்லக்கூடிய மனிதர்கள் அத்தனைபேருமே ரொம்பவும் அருவருப்பான பின்னணி உடையவர்கள். விலைமகளாக இருக்கக்கூடிய ஒரு பெண், எந்தப் பெண்ணையும் கற்புள்ள கண்ணகியாகப் பார்க்கமாட்டாள்; சீதையாக சிந்திக்க மாட்டாள். எனவே, இதுபோன்ற தரம்தாழ்ந்த விமர்சனங்களுக்கெல்லாம் தமிழருவி மணியன் தலைதாழ்ந்துவிடுவான் என்று நினைக்கவேண்டாம். 'விமர்சனங்களுக்கு வீழ்ந்துவிடாதே' என்ற விவேகானந்தரின் வரிகளின்படிதான் நான் நடக்கிறேன். 'விமர்சனங்களில் வீழ்ந்தவன் சரித்திர சாதனைகளை நிகழ்த்தமுடியாது'.

'காமராஜர் பற்றிப் பேசிய, தமிழருவி மணியன் இப்படி ரஜினிகாந்த் பின்னாடி போய் நிற்பது சரியா?'  என்று என்னைக் கேட்பார்களேயானால், அந்த ஜனநாயகக் கருத்தை நானும் வரவேற்று பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், ரஜினிகாந்திடம் போய் 10 கோடி ரூபாய் வாங்கிவிட்டார், இவர் அரசியலில் விபசாரம் செய்கிறவர் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் அத்தனைபேருமே இறைவனால், ஒருகட்டத்தில் தண்டிக்கப்படுவார்கள்.

20 ஆயிரம் ரூபாய் பென்ஷனில்தான் வாழ்க்கையை நடத்திவருகிறேன். நான் வாழ்ந்து வருகிற வீட்டுக்கு இதுவரையிலும் இருந்துவந்த 5000 ரூபாய் வாடகையை, இப்போது திடீரென தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டது. இதில், மின்சாரம், தண்ணீர் கட்டணம் எல்லாம் போக மீதமுள்ள தொகையில் எப்படி வாழ்க்கையை நகர்த்துவது என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, 'அப்பா மாதந்தோறும் நான் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன்' என்று எனது மகன் முன்வந்து சொல்லியிருக்கிறான். ஆக,  நான் வாழ்வது சத்தியம் சார்ந்த தவ வாழ்க்கை!'

ரஜினி மாநாடு

''ரஜினிகாந்த், திரையுலகில் நேர்மையாகத்தான் சம்பாதிக்கிறார் என்று உறுதிகூற முடியுமா? என்றெல்லாம் எதிர்த்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்களே...?''

''நான் ரஜினிகாந்துக்கு வழக்கறிஞர் அல்ல... ஆதலால் ரஜினிகாந்தின் நேர்மையைப் பற்றியெல்லாம் இதுவரை நான் பேசியதே கிடையாது. 'ஊழலற்ற தூய்மையான ஆட்சியைக் கொடுப்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்' என்று என்னிடம் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். அதை நான் முன்னெடுக்கிறேன்... அவ்வளவுதான்! மற்றபடி ரஜினிகாந்தை உள்ளும் புறமுமாக அறிந்து வைத்திருக்கிற கடவுள் இல்லை நான். 

 

தமிழினத்தின் பொதுச்சொத்துகளை மாறி மாறி கொள்ளையடித்து கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கிற இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் எனக்கு வேண்டியது. அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெறக்கூடிய ஒரு மனிதனை முன்னிறுத்தவேண்டும். நடிப்புலகிலிருந்து வருகிறவர்கள் பின்னாடி போய் நிற்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், என்னுடைய சபதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ரஜினிகாந்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்... அவ்வளவுதான்!''

http://www.vikatan.com/news/tamilnadu/99996-i-am-not-a-lawyer-for-rajinikanth--description-of-tamilaruvi-manian.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலுக்கு வரும் போது வரட்டும் இப்போதைக்கு கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்று மட்டும் ரஜினியை சொல்ல சொல்லுங்க பார்ப்போம் மணியன்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DH_QDrmXsAA_zqC.jpg

பெங்களூர் களாசிபாலயம் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் ரஜினி..
வெளங்கிடும்!
தமிழருவி மணியனுக்கு தகவல் சொல்லுங்க!

DH_UjwPXoAE_RdL.jpg

குடி மக்களுக்கு ஏற்ற மக்கள் முதல்வர்!
நல்ல பார்த்து கொள்ளுங்கள் மக்களே... இவர் தான் காமராஜர் தந்த ஆட்சியை வரவிருக்கிறார்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.