Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டு, திருட்டுகள் தொடர்பில் சிறப்புக் கூட்டம்! – இராணுவ தளபதி தலைமையில்

Featured Replies

வாள்வெட்டு, திருட்டுகள் தொடர்பில் சிறப்புக் கூட்டம்! – இராணுவ தளபதி தலைமையில்

 

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது.

துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

http://newuthayan.com/story/23043.html

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு போலிசுடமிருக்கிறது ஏன் இராணுவத்தளபதி அவிங்க அவ்வளவு மோசமானவர்களளா?

  • தொடங்கியவர்

யாழில் 100 பேரை கைதுசெய்ய அதிரடி நடவடிக்கை

 
 
 
59a1153c83c40-IBCTAMIL.jpg
59a107f50f59e-IBCTAMIL.jpg
 
 
 
 
59a1153c83c40-IBCTAMIL.jpg
59a107f49f302-IBCTAMIL.jpg
59a107f50f59e-IBCTAMIL.jpg

யாழ்குடா நாட்டில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டொ தலைமையில் இன்று  விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – துன்னாலை கலிகை முருகன்   கோவிலடியில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் 1.45  மணிவரை  இடம்பெற்றது.

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டொ தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி, மற்றும் பரித்தித்துறை  பொலிஸ் அத்தியட்சகர்கள், துன்னாலை பிரதேசத்தைச் சேர்ந்த 200 பொதுமக்கள்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் யாழ்குடா நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டொவினால் துன்னாலை பிரதேச மக்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது.

அதன்பின்னர் மக்கள் பிரதிநிதிகள் மூவரிடம் கருத்துக்கள் பெற்றப்பட்டது. 

இதன்போது யாழ்குடா நாட்டில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு  வழங்குமாறு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டொவிடம்  மக்கள் பிரதிநிதிகள்  கேட்டுக்கொண்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டொ, யாழ்குடா நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட நபர்களில் இதுவரை 30 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட 100 பேரை கைதுசெய்யவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை  சரணடையுமாறு   வலியுறுத்திய வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டொ, இவ்வாறு சரணடையாதவர்களை அவர்களது உறவினர்கள்  பொலிஸ்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு குற்றவாளிகள் குற்றங்களை ஒப்புக்கொள்ளாவிடில்  பொலிஸார், விசேட  அதிரடிப்படையினரால்   கைதுசெய்யப்படுவார்கள்  எனவும்  அவர் எச்சரித்தார்

IBC

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

இவ்வாறு குற்றவாளிகள் குற்றங்களை ஒப்புக்கொள்ளாவிடில்  பொலிஸார், விசேட  அதிரடிப்படையினரால்   கைதுசெய்யப்படுவார்கள்  எனவும்  அவர் எச்சரித்தார்

நல்ல விடயம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்....

  • தொடங்கியவர்

துன்னாலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தே தீருவோம்

 

54 பேர் எஞ்சியுள்ளனர் என்கிறார் பிரதி பொலிஸ் மாஅதிபர்

ரி.விரூஷன், வட­ம­ராட்சி நிருபர்

வட­ம­ராட்சி துன்­னாலை பகு­தியில் கடந்த காலங்­களில் சட்­ட­விரோத மணல் கடத்தல், பொலிஸ் வாக­னங்கள் மீது தாக்­குதல் போன்ற குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட எவ­ரையும் கைது செய்­யாது விடப்­போ­வ­தில்லை. இச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­ பட்ட 100பேர் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். 

அவர்­களில் 54பேர் இன்­னமும் கைது செய்­யப்­பட வேண்­டி­யுள்­ளார் கள். இவர்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்ப டுத்­தப்­ப­டு­வார்கள் என வட­மா­காண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்­னாண்டோ உறு­தி­யாக தெரி­வித்­துள்ளார். இச் சம்­ப­வங்­க ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு இந்த ஒரு தடவை மாத்­திரம் 

பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு மக்கள் கண்­ணீ­ருடன் பிரதி பொலிஸ்மா அதி­பரை கோரி­யி­ருந்த போதும், எவ­ருக்கும் மன்­னிப்பு வழங்­கு­வ­தற்கு எமக்கு அதி­காரம் இல்லை எனவும் அனை­வ­ருக்கும் சட்­ட­மென்­பது சமன் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரி­வித்­துள்ளார்.

வட­ம­ராட்சி துன்­னாலை பகு­தியில் கடந்த காலங்­களில் சட்­ட­வி­ரோத மணல் கடத்தல் மற்றும் மணல் கடத்­தலில் ஈடு­பட்­ட­வர்கள் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து இடம்­பெற்ற மக்கள் போராட்­டத்தில் பொலி­ஸா­ரது வாக­னங்கள், பொலிஸ் காவ­ல­ரண்கள் போன்­றவை பொது­மக்­களால் அடித்­து­டைக்­கப்­பட்­டி­ருந்­தன. இச் சம்­ப­வத்­தை­ய­டுத்து இக் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­காக விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும், பொலி­ஸாரும் இணைந்து தொடர்ச்­சி­யாக சுற்­றி­வ­ளைப்பு தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு 34 பேரைக் கைது செய்­தி­ருந்­தார்கள்.

பொலி­ஸா­ரதும் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரதும் தொடர்ச்­சி­யான சுற்­றி­வ­ளைப்­புக்­களால் பீதி­ய­டைந்த துன்­னாலைப் பகுதி பொது­மக்கள் வடக்கு முத­ல­மைச்சர், வட­மா­காண ஆளுநர் ஆகி­யோரை சந்­தித்து இது தொடர்­பாக கூறி­யி­ருந்­தார்கள். இதன்­கா­ர­ண­மாக நேற்­றைய தினம் அப் பகுதி மக்­க­ளுடன் வட­மா­காண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்­னாண்டோ யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்­னாண்டோ காங்­கே­சன்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் மார­சிங்க, யாழ்.இரா­ணுவ கட்­டளைத் தள­பதி ஹெட்­டி­யா­ராச்சி ஆகியோர் சந்­தித்து பேசினர்.

இச் சம்­ப­வ­மா­னது பொலிஸார் துப்­பாக்கி சூட்டில் ஒரு­வரை கொலை செய்­ததன் கார­ண­மாக உணர்ச்சி வசப்­பட்ட மக்­களே பொலிஸார் மீதும் பொலிஸ் வாக­னங்கள் மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளார்கள். எனவே இந்த ஒரு தடவை அவர்­களை மன்­னித்து விடு­மாறு பிரதி பொலிஸ் மா அதி­ப­ரிடம் பிர­தேச மக்கள் கண்­ணீ­ருடன் கோரி­யி­ருந்­தார்கள்.

மேலும் தற்­போது பொலிஸார் தொடர்ச்­சி­யான சுற்­றி­வ­ளைப்பு கைது­களை மேற்­கொள்­வதால் வீட்டில் ஆண்கள் இருக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. நாளாந்தம் உழைத்து சாப்­பிடும் எங்­க­ளுக்கு உங்­க­ளது கைது நட­வ­டிக்­கையால் ஆண்கள் வேலைக்கு செல்ல முடி­யாது ஒளிந்து வாழ வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். அத்­துடன் ஒருவர் இருவர் செய்த தவ­றுக்­காக தவ­று­களே செய்­யா­த­வர்­களை கைது செய்து சென்­றுள்­ளீர்கள். எனவே இந்த ஒரு தட­வை­யேனும் அனை­வ­ருக்கும் பொது மன்­னிப்­ப­ளித்து அவர்­களை விட்டு விடுங்கள் என பல பெண்கள் கண்­ணீ­ருடன் பிரதி பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரி­னார்கள்.

இதற்கு வட­மா­காண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதி­ல­ளிக்­கையில்,

நாட்டில் சட்­ட­மென்­பது அனை­வ­ருக்கும் சம­னா­ன­தே­யாகும். பொலிஸார் இருவர் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­ய­தற்கு அவ்­விரு பொலி­ஸா­ரையும் கைது செய்து தடுத்து வைத்­துள்ளோம். அதே­போன்று பொலிஸார் மீதும் தாக்­குதல் நடத்தி பொலி­ஸா­ரது வாக­னங்கள் மீதும் தாக்­குதல் மேற்­கொண்­ட­வர்­களை கைது செய்தே தீருவோம். இச் சம்­பவம் தொடர்­பாக 100 பேர் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களில் 34 பேரே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். மீதி­யா­க­வுள்ள அனை­வ­ரையும் கைது செய்வோம். ஆனால் இனி முன்னர் இடம்­பெற்­றது போன்று சுற்­றி­வ­ளைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்டு சாதா­ரண பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் வகையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது. ஆனால் குற்றம் செய்­த­வர்கள் கைது.செய்­யப்­ப­டு­வார்கள்.

இத்­த­கைய செயற்­பா­டு­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்க அனு­ம­தித்தால் அது பயங்கரவாத செயற்பாட்டிற்கு இட்டுசெல்லும். எனவே, இச் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அத்துடன் எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட முறையில் கோபமில்லை. 

நாங்கள் அரச கடமையை செய்யவே வந்துள்ளோம். எவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எமக்கு இல்லை. யாராவது தவறு செய்யவில்லையாயின் அது தொடர்பாக நீதிமன்றத்தில் கூறட்டும். அது தொடர்பாக நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-08-27#page-1

முப்படை முகாம்களில் ஒழித்துள்ள வாள்வெட்டு, திருட்டு குழுக்களை யார் கைது செய்வது? அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தான் வேண்டுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎8‎/‎27‎/‎2017 at 8:14 AM, Rajesh said:

முப்படை முகாம்களில் ஒழித்துள்ள வாள்வெட்டு, திருட்டு குழுக்களை யார் கைது செய்வது? அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தான் வேண்டுமோ?

எங்கிருந்து இந்த செய்தி உங்களுக்கு கிடைத்தது?

அங்குள்ள மக்களோ, செய்தியாளர்களோ இப்படி சொல்லவிலையே?

நீங்கள் இவ்வாறான வாள்வெட்டு குழுவுடன் தொடர்புள்ளவராக இருப்பதால் உங்களுக்கு இந்த விடயம் தெரிந்து இருக்கிறதா?

அல்லது இது நீங்கள் உருவாக்கிய செய்தியா?

On 8/29/2017 at 6:17 AM, Jude said:

எங்கிருந்து இந்த செய்தி உங்களுக்கு கிடைத்தது?

அங்குள்ள மக்களோ, செய்தியாளர்களோ இப்படி சொல்லவிலையே?

நீங்கள் இவ்வாறான வாள்வெட்டு குழுவுடன் தொடர்புள்ளவராக இருப்பதால் உங்களுக்கு இந்த விடயம் தெரிந்து இருக்கிறதா?

அல்லது இது நீங்கள் உருவாக்கிய செய்தியா?

பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது என்பது பழமொழி!

  • கருத்துக்கள உறவுகள்
On 8/31/2017 at 8:49 AM, Rajesh said:

பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது என்பது பழமொழி!

 

மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது முதுமொழி.

  • 4 weeks later...
On 9/2/2017 at 7:33 PM, Jude said:

மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது முதுமொழி.

அப்பாடா! ஒருமாதிரி உங்களை கொஞ்சம் அறிய தொடங்கியிருக்கீங்கள்!!!

கிளிநொச்சியில் பதற்றம்

கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐ.பி.சி. தமிழ்  செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக  இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுபோதையில் நின்ற  நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம்  காரணமாக  இந்த வாள்வெட்டு சம்பவம் ஏற்பட்டதாக  கிளிநொச்சி பொலிஸார்  குறிப்பிட்டனர்.

இந்நிலையில் வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யுமாறு கோரியும் பரந்தன் சந்தியில்  மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இதனையடுத்தே அங்கு பதற்றமான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tense-situation-near-Kilinochchi-Paranthan-

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தமிழ் விளங்காது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.