Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்

Featured Replies

வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்

 


வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்
 

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் நேற்று மாலை போகம்பறை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்…

குற்ற ஒப்புதலுக்கு அமைவாக மாத்திரமே இவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகின்றது. சட்டத்திற்கமைய ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என நாங்கள் கோருகின்றோம். அனைத்து வழக்குகளிலும் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே சாட்சியங்களாக உள்ளன.

http://newsfirst.lk/tamil/2017/09/வட-மாகாண-முதலமைச்சர்-அஸ்/

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டையிண்ட பார்வை சரியில்லையே.

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மொட்டையிண்ட பார்வை சரியில்லையே.

அது எப்பவும் இப்படித்தான் இருக்கும்.அதுதான் மொட்டடை.:unsure::)

  • தொடங்கியவர்

சமஷ்டி என்பது பிரிவினை : வடக்கு முதல்வரிடம் அஸ்கிரிய தேரர்கள்

 

 

சமஷ்டி முறைமை என்­பது பிரி­வி­னை­யே­யாகும். இது  தொடர்பில் எம்­மிடம்  மாற்­றுக்­க­ருத்­துக்கு  இட­மில்லை என்று  அஸ்­கி­ரிய பீடத்தைச் சேர்ந்த  தேரர்கள்   வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னிடம்  மிகவும் திட்­ட­வட்­ட­மாக  நேற்று  தெரி­வித்­துள்­ளனர்.  

இதே­வேளை  இந்த சந்­திப்­பின்­போது மேலா­திக்க நிலைப்­பாட்டில் இருந்தே  தேரர்கள் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்­த­தாக வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். சிலர் நல்­லெண்­ணத்­துடன் 

செயற்­பட்ட போதிலும் சில­ரது மனங்­களில்   விரோ­தங்கள் மேலோங்­கி­யுள்­ளன எனவும் அஸ்­கி­ரிய பீடத்­து­ட­னான சந்­திப்பின் பின்னர் வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்  குறிப்­பிட்டார். 

வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன்  நேற்று  அஸ்­கி­ரிய  பீடத்தின் உப பீடா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே இவ்­வாறு கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.    இந்த சந்­திப்பில் அஸ்­கி­ரிய  பீடத்தின்    தேரர்கள் அனை­வரும்  கலந்து கொண்­டனர். இதன்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு  அதி­கார பர­வ­லாக்கல் மற்றும் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு குறித்தும் தேரர்கள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.  

இதன்­போது   சமஷ்டி  தீர்வின் அவ­சியம்   தொடர்பில்   வடக்கு முதல்வர் தேரர்­க­ளுக்கு  விளக்­க­ம­ளித்­த­போதும்  தேரர்கள்  அவற்றை ஏற்­றுக்­கொள்ளும் மனப்­பான்­மையில் இருக்­க­வில்லை    என  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

இந்­நி­லையில் இந்த சந்­திப்பு தொடர்பில்  வடக்கு முதல்வர் தெரி­விக்­கையில், 

கண்டி அஸ்­கி­ரிய தேரர்­களை நல்­லெண்ண அடிப்­ப­டையில் நாம் சந்­தித்­தி­ருந்தோம். நேற்று (நேற்று முன்­தினம்) நாம் மல்­வத்து மாநா­யக்க தேரரை சந்­தித்தோம். அவர் என்­னுடன் தனிப்­பட்ட பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்­தி­ருந்தார். மிகவும் புரிந்­து­ணர்வு ரீதியில் நல்­ல­தொரு பேச்­சு­வார்த்­தை­யாக இது அமைந்­தது. ஆனால் இன்று ( நேற்று ) அஸ்­கி­ரிய பீட தேர­ருடன் சந்­திப்­பா­னது சற்று மாறு­பட்ட சங்­க­டத்­துக்­கு­றிய வகையில் அமைந்­தது. குறிப்­பாக அவ­ருடன் நான் தனிப்­பட்ட ரீதியில் கருத்­துக்­களை பகி­ரவே விரும்­பினேன். ஆனால் இந்த சந்­திப்பில் மாநா­யக்க தேர­ருடன் மேலும்  12 தேரர்­களும்  கலந்­து­கொண்­டனர். அவர்­களின் பிரித் பிரார்த்­த­னை­களை செய்த  பின்­னரே என்­னுடன் பேச்­சு­வார்த்­தைக்கு வந்­தனர். 

 இந்த சந்­திப்­பின்­போது  ஏற்­க­னவே அவர்கள் இருந்த நிலைப்­பாட்டில் இருந்தே என்­னுடன் பேச்­சு­வார்த்­தைக்கு வந்­தார்­களே தவிர எனது நிலைப்­பாட்டை முழு­மை­யாக செவி­ம­டுக்கும் நோக்கம் இருக்­க­வில்லை என நான் உணர்ந்தேன் . எனினும் இவர்கள் என்ன நிலைப்­பாட்டில் இருந்து என்­னுடன் பேசி­னார்கள் என்­பதை என்னால் உணர்ந்­து­கொள்ள முடியும். ஆனால்  எனது தரப்பின் கார­ணி­களை முன்­வைத்தேன். குறிப்­பாக எமது உரி­மை­களை நாம் பெற்­றுக்­கொள்ள போரா­டு­வது குறித்தும், எம்­மிடம்    பிரி­வி­னை­வாதம் , மத­வாதம், இன­வாத கொள்­கைகள் இல்லை என்­ப­தையும்   கூறினேன். மேலும் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்வு மட்­டுமே சாத­க­மாக அமையும். அர­சியல் தீர்வு குறித்து நாம் மிகவும் ஆழ­மான எதிர்­பார்ப்பை கொண்­டுள்ளோம் என்­ப­தையும்   தெரி­வித்தோம். 

மேலும் நாட்டில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக  இருந்த போதிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்­களே பெரும்­பான்­மை­யான மக்­க­ளாக உள்­ளனர். எனவே எமது சுய கௌரவம், அடை­யா­ளத்தை பாது­காக்க நாம் முயற்­சிக்­கின்றோம். சிங்­கள மேலா­திக்கம் எம்­மத்­தியில் திணிக்­கப்­பட கூடாது என்­பதை நான் தெரி­வித்தேன். அதேபோல் அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் இவர்கள் மத்­தியில் மாற்றுக் கருத்­துக்கள் உள்­ளன. நாடு பிரியும் வகையில் அல்­லது ஒரு­சி­ல­ரது தேவைக்கு அமைய புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர். மாறு­பட்ட கருத்தில் இவர்கள்  இருப்­பதால்    எமது தரப்பு நியா­யங்­களை நாம் முன்­வைக்க கிடைத்­தது. 

எனினும் இவர்கள் கூறும் அனைத்­தையும் எம்மால் ஏற்­று­கொள்ள முடி­யாது. ஒரு­சில விட­யங்­களில் எம்மால் இணக்கம் தெரி­விக்க முடியும்.  ஆனால் வடக்கு மற்றும் தமி­ழர்கள் விட­யத்­திலும் சமஷ்டி விட­யத்­திலும் இவர்­களின் நிலைப்பாடு மாறுபட்ட ஒன்றாகும்.   இந்த பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டமையை   மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றுகொள்ள இவர்களின் தலையீடுகள் மற்றும் நடுநிலைத்தன்மை  கிடைக்கும்  என நம்புகின்றோம்.  நல்ல மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன  என்றார்.  

http://www.virakesari.lk/article/24244

மகாநாயக்க தேரர்களுடனான வடக்கு முதல்வரின் சந்திப்பு

கண்டியில் அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தமிழ் மக்கள் குறிப்பாக வட, கிழக்கை வரலாற்று பூர்வ வாழ்விடமாகக் கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துரைத்திருக்கின்றமை ஆக்கபூர்வமான முன்னகர்வாகத் தோன்றுகிறது.

வட மாகாண சபை நிர்வாகத்தை தன்வசம் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் விளங்குகின்ற போதிலும் தென்னிலங்கையில் குறிப்பாக கடும்போக்கு பௌத்த சிங்கள மேலாதிக்கவாத சிந்தனையுடையவர்களின் பார்வையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவராக தென்படுவதுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கம் விரைவில் நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் தருணத்திலும் மகா நாயக்கர்களை சந்தித்து களநிலைவரத்தை எடுத்துக் கூறியதுடன் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் தொடர்பாக விபரித்துமிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை மல்வத்த மகாநாயக்க தேரர் அதிவண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையும் ஞாயிற்றுக்கிழமை வரகாகொட ஞானரத்ன தேரர் தலைமையிலான பிக்குமார் குழுவினரையும் வடக்கு முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் குழு சந்தித்திருக்கின்றமையும் இடம்பெற்றிருக்கும் கலந்துரையாடல்களும் இரு தரப்பினர் மத்தியில் பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு அதிகளவுக்கு உதவக்கூடும். 


அதேவேளை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வாக சமஷ்டி முறைமையிலான அரசியல் இணக்கப்பாட்டையே நாடி நிற்கின்றார்கள் என்பதையும் முதலமைச்சர் உறுதியான முறையில் மகாநாயக்கர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பதுடன், சமஷ்டி என்பது நாட்டைப் பிளவுபடுத்துவதை  இலக்காகக் கொண்டதல்ல எனவும் ஒரே நாடாக வைத்திருப்பதற்கு உதவக்கூடிய முறைமையென்றும் எடுத்துரைத்திருப்பதை அறிய முடிகிறது. பிரிட்டிஷாரிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் சமஷ்டி முறைமையிலான தீர்வையே வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், சமஷ்டி முறைமையானது நாட்டைப் பிளவுபடுத்தி விடுமெனவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் கடந்த காலத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்தவையும் தற்போது பிரதான பங்காளிகளாக கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருப்பவையுமான ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் கூறி வருகின்றன. அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவுக்கு கடந்த வாரம் வழங்கியிருந்தது.

அந்த அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமெனவும் தற்போது நடைமுறையிலிருக்கும் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம்  அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபையே அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அலகாக இருக்க வேண்டுமெனவும்  ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்கக்கூடாதெனவும் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.


அதேவேளை, தமிழ்த் தரப்பின் சமஷ்டிக் கோரிக்கை பிரிவினைக்கு அத்திபாரமிடுவதெனவும் உத்தேச அரசியலமைப்பு புலம்பெயர்ந்த புலிகள் 
சார்பு குழுவினரின் தேவையை நிறைவேற்றவே என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொது எதிரணியினர் 
சாடி வரும் நிலையில் கடந்த ஆகஸ்டில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சமஷ்டி முறைமையூடாக அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதனால் நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாதென தீர்ப்பளித்திருந்தது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர் உபாலி அபேரட்ண, நீதியரசர் அனில் குணரட்ன ஆகிய மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஆகஸ்ட் 4 இல் வழங்கிய தீர்ப்பில் சமஷ்டி முறைமையிலான ஆட்சி தொடர்பாக தெளிவான குறிப்பை வழங்கியிருந்தது.

1949 இலிருந்து பெடரல் பார்டியென ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி (தற்போது தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைப் பங்காளி) சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி வந்த நிலையில் நாட்டைப் பிரிப்பதை அக்கட்சி ஆதரிப்பதாக அன்று முதல் இன்றுவரை தென்னிலங்கையில் கடும் குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 4 இல் உயர்நீதிமன்றம் வெளியிட்டிருந்த தீர்ப்பில் அரசியலமைப்பின் சரத்து 157ஏ யின் பிரகாரம் இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனியான நாடொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவோ மேம்படுத்தவோ நிதியளிக்கவோ ஊக்குவிக்கவோ இல்லையென தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் வடக்கு முதலமைச்சர் பௌத்த சிங்கள மக்களால் அதிகளவுக்கு மதிப்பளிக்கப்படும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்திருப்பது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பாக இருந்து வரும் பாரிய இடைவெளியை குறைப்பதற்கு உதவக்கூடும். 

http://www.thinakkural.lk/article.php?editorial/wv0cialuff645067ed94744413442kyeaa26295f96268f4ac1881b46iqrwa

 

மாற்றத்திற்கான மார்க்கம் – செல்வரட்னம் சிறிதரன்

இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த மத பீடத் தலைவர்கள் கொண்டுள்ள முரண்பாடான நிலைமைக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அரசியல் எதிர்பார்ப்பையும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். கண்டியில் மல்வத்த மகாநாயக்கரான திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரரையும், அதன் பின்னர் அஸ்கிரிய மகாநாயக்கரான வரகாகொட ஞானரத்ன தேரர் தலைமையிலான அஸ்கிரிய பீடத்தின் தேரர்களையும் அவர் சந்தித்தபோதே, இந்த விடயங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மல்வத்த மகாநாயக்க தேரருடனான சந்திப்பில் அவர் அரசியல் பேச விரும்பவில்லை. இருந்த போதிலும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதியாகவும், பிரிவினை கோருபவராகவும் தான் பிழையாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதை விக்னேஸ்வரன் மல்வத்த மகாநாயக்க தேரரிடம் எடுத்துரைத்திருந்தார்.

அத்துடன் போர் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுடைய நிலைமைகளையும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளையும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களையும் அவர் மல்வத்த மகாநாயக்கரிடம் தெரிவித்திருந்தார்.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே பொருத்தமானது. அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வல்லது என்பதையும் விக்னேஸ்வரன் அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. நாடு பிரிவுபடாமல் இருப்பதற்கான அரசியல் வழிமுறை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

பௌத்த பீடத்தினரின் நிலைப்பாடும் முதலமைச்சரின் நோக்கமும்

எனினும், அரசியல் தீர்வுக்கான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு மல்வத்த மகாநாயக்க தேரர் நேரடியாகப் பதிலேதும் கூறவில்லை. மாறாக ஒரு புன்சிரிப்பையே பதிலாக அளித்திருந்தார். அந்தப் புன்சிரிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பது மறுநாள் முலமைச்சர் விக்னேஸ்வரன் கண்டி அஸ்கிரிய பீடத்தைச்சேர்ந்த தேரர்களைச் சந்தித்தபோது, தெளிவாகியிருந்தது. இந்தச் சந்திப்பின்போது, சமஷ்டி ஆட்சி முறைமையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதைக் கண்டிப்பாக, கடுந்தொனியில் அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தனர். இந்தச் சந்திப்பு சங்கடமானதொன்றாக அமைந்திருந்தது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் இருந்து அந்தச் சந்திப்பு எத்தகையது என்பது புலனாகியிருக்கின்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டையும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் பௌத்த மத பீடாதிபதிகளுக்கு எடுத்துரைப்பதற்காகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கண்டிக்கான தமது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல், தான் ஓர் இனவாதி என்றும் வடமாகாண சபையானது இனவாதப் போக்கில் நாட்டைத் துண்டாடுவதற்காகச் செயற்படுகின்றது என்று சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தியிருப்பதும், அதே கருத்தை பௌத்த மத பீடாதிபதிகளும் கொண்டிருப்பதும் தவறானது, உண்மைக்கு மாறானது என்பதை எடுத்துரைப்பதற்காகவே விக்னேஸ்வரன் பௌத்த பீடத்தைச் சேர்ந்த மதத் தலைவர்களைச் சந்திப்பதற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் மற்றும் அவருடைய செயற்பாடுகள் என்பன தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கொள்கை மற்றும் இலட்சியப் போக்கை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், தென்னிலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் அவர் நாட்டைத் துண்டாடுவதற்கான செயற்பாடுகளிலேயே அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றார் என்ற கருத்துருவாக்கத்தையே சிங்கள தீவிரவாதிகளான அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதேவேளை, பௌத்த மதத்தின் உயர் பீடமாகிய நான்கு பீடாதிபதிகளும், அவற்றைச் சேர்ந்தவர்களும்கூட முதலமைச்சரை ஓர் இனவாதியாகவும் நாட்டைத் துண்டாடுபவராகவுமே கருதுகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுடைய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய பௌத்த மத பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகளை அவர் சந்தித்திருந்தார்.

பேரின அரசியலின் அச்சாணி

பௌத்த மதத்தைப் பொருத்தமட்டில் அதன் தலைமையகமாக நான்கு பௌத்த பீடங்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. அதேபோன்று அரசியல்வாதிகள் மத்தியிலும் இந்த பீடங்களின் பீடாதிபதிகள் அபரிமிதமான செல்வாக்கைப் பெற்றிருக்கின்றார்கள். சிங்கள பொதுமக்களாயினும்சரி, அரசியல் தலைவர்களாயினும்சரி, இந்த மத பீடங்கள் கூறுவதே அவர்களுக்கு தெய்வாக்காகும். அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் மற்றும் அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடுகளுக்கு மாறாகச் செயற்படுவதற்கு எவருமே முற்படமாட்டார்கள்.

சிங்கள அரசியல் களத்தின் அடிநாதமாகிய வாக்குப் பலமானது பௌத்த மதத் தலைவர்களின் விரலசைவுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது. ஆகவே, எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் பௌத்த மத பீடத் தலைவர்களின் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் எதிராகச் செயற்படத் துணிவதில்லை. அவ்வாறு துணிபவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் என்பதே தென்னிலங்கை அரசியலின் யதார்த்தமாகும்.

இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே, பௌத்த மதத்தின் மேன்மைக்காகவே சிங்களத் தலைவர்கள் செயற்பட்டிருந்தார்கள். அதேபோன்று அரசர் காலத்து ஆட்சி முறைப் பண்புக்கு அமைவாக பௌத்த மதத் தலைவர்கள் அரசியலிலும் நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகளிலும், பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள். நாடு சுதந்திரமடைந்து ஜனநாயக முறைப்படி ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், முக்கியமான விடயங்களிலும் தேசிய அளவிலான பிரச்சினைகள் விவகாரங்களிலும் பௌத்த மதத் தலைவர்களின் முடிவையொட்டியே ஆட்சியாளர்களும் தீர்மானங்களை, மேற்கொண்டும், கொள்கைகளை வகுத்தும் செயற்பட்டு வருகின்றார்கள்.

கடுமையான நிலைப்பாடு

இத்தகைய ஒரு பின்னணியில் நல்லாட்சி அரசாங்கமும்கூட, பௌத்த மதத் தலைவர்களின் விருப்பத்திற்கும் தீர்மானத்திற்கும் எதிராகச் செயற்பட முடியாத நிலையில் இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் நல்லவர்களாக இருக்கலாம். தேசிய சிறுபான்மை இன மக்களாகிய தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் ரீதியான ஆர்வத்தைக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவர்கள் பௌத்த மதத் தலைவர்களின் தீர்மானம் என்ற கடிவாளத்துக்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றார்கள். அந்தக் கட்டுப்பாட்டில் இருந்து அவர்களால் விடுபட்டு ஆட்சி நடத்தவோ அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ முடியாது. இத்தகைய ஒரு நிலையில்தான் கண்டி மல்வத்த மற்றும்அஸ்கிரிய பீடாதிபதிகளைத் தனிப்பட சந்தித்து தமிழ் மக்களின் நிலைமைகளையும் அவர்களுடைய அபிலாசைகளையும் எடுத்துக் கூறுவதற்கான முயற்சியில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஈடுபட்டிருந்தார்.

மல்வத்த மகாநாயக்கரை அவரால் தனிப்பட சந்திக்க முடிந்தது. தனது கருத்துக்களை அவரிடம் எடுத்துக் கூறுவதற்கும் இயலுமாக இருந்தது. அவர் அரசியல் விவகாரம் குறித்து முதலமைச்சருடன் பேசுவதற்குத் தாயராக இருக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைமைகளை எடுத்துரைத்து, சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வின் அவசியம் குறித்து வலியுறுத்தியபோதிலும், மல்வத்த மகாநாயக்க தேரர் அதுபற்றிய தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், கண்டி அஸ்கிரிய மகாநாயக்கரை முதலமைச்சர் விக்னேஸ்வரனால் தனிப்பட சந்திக்க முடியவில்லை. அவருடன் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த 12 தேரர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். முதலமைச்சரின் கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு அவர்கள் தாயாராக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பௌத்தர்கள் மத்தியில் தாங்கள் எவ்வாறு உதிஉயர் நிலையில் இருக்கின்றோம் என்பதையும், தாங்கள் எந்த அளவுக்கு சக்திவாய்ந்தவர்கள் என்பதையும் வெளிக்காட்டும் வகையிலான ‘மேல் நிலையில்’ இருந்தவாறே தமது கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

நாட்டைப் பிரிப்பதற்கே சமஷ்டி ஆட்சிமுறை கோரப்படுகின்றது என்ற தமது நிலைப்பாட்டை அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சரிடம் கூறியுள்ளனர். சமஷ்டி என்பது பிரிவினை என்ற தங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்பதையும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஒற்றையாட்சி முறையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமது இறுக்கமான நிலைப்பாட்டை அவர்கள் முதலமைச்சரிடம் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

மாற்றத்திற்கான முயற்சி

சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற தமிழர் தரப்பின் தேசிய ஒற்றுமை சார்ந்த நிலைப்பாட்டை பௌத்த மதத்தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புதிய விடயமல்ல. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் ஊடாக நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை என்பதும் ஏற்கனவே தெரிந்த விடயமே.

பௌத்த மத மேலாதிக்கம் கொண்ட ஒற்றையாட்சியின் கீழ் தேசிய அந்தஸ்து பெற்றுள்ள சிறுபான்மை இன மக்கள் இரண்டாந்தர குடிமக்கள் என்ற நிலையிலான ஓர் அரசியல் தீர்வையே சிங்கள பௌத்த தீவிரவாதிகள் விரும்பியிருக்கின்றார்கள். அதனை ஆதரிக்கும் வகையிலேயே பௌத்த மதத்தின் உயர்நிலை தலைவர்களின் கருத்துக்களும் வெளிப்பட்டு வந்துள்ளன. இந்த வகையிலேயே பௌத்த மத பீடங்களைச் சேர்ந்த மதத்தலைவர்கள் புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை. வேண்டுமானால் இருக்கின்ற அரசியலமைப்பில் சில திருத்தங்களைச் செய்யலாம் என எற்கனவே கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள். இந்தக் கருத்தை கண்டி அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் பகிரங்கமாக உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள், தாங்கள் நாட்டின் முக்கிய மதத் தலைவர்களாக இருப்பதன் காரணமாகவே வேற்று மதம் ஒன்றைச் சேர்ந்தவரும், இந்த நாட்டின் சக பிரஜைகளாகிய தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு மாகாண முதலமைச்சருமாகிய விக்னேஸ்வரன் தங்களைச் சந்தித்து ஆசி பெறவும், அரசியல் ரீதியான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தவும் வந்துள்ளார் என்பதை, அதன் உள்ளார்ந்த நிலையில் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அவர்கள் அவ்வாறு புரிந்து கொள்வதற்கு விரும்பியிருக்கவில்லை.

மதத் தலைவர்கள் என்போர் கருணையும், இரக்கமும் மிகுந்தவர்களாக, தம்டை நாடி வருபவர்களுடைய கஸ்டங்களையும், துன்பங்களையும், மன ஆதங்கங்களையும் பொறுமையாகச் செவிமடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுடைய வரலாற்றிலேயே முதல் தடவையாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரைச் சந்திப்பதற்காகச் சென்ற போதிலும், அவரால் அவரைத் தனிப்பட சந்திக்க முடியவில்லை. ஏனைய தேரர்களையும் உள்ளடக்கி இடம்பெற்ற அந்தச் சந்திப்பானது, பொதுவான எதிர்பார்ப்புக்கு அப்பால் சங்கடமான உணர்வை ஏற்படுத்தத் தக்க வகையில் அமைந்திருந்தது என்பது கவலைக்குரியது.

இருப்பினும் அந்த சங்கடமான ஒரு நிலையிலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும், அவரகளுடைய அரசியல் அபிலாசைகளையும், அரசியல் தீர்வு தொடர்பிலான அவர்களுடைய எதிர்பார்ப்பையும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கருக்கு மட்டுமல்லாமல், அந்த பீடத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட தேரர்களுக்கு எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பியிருக்கின்றார்.

thuliyam-post-3.pngநாட்டின் தேசிய சிறுபான்மை இனமக்களின் மீது, சிங்கள பேரினவாத சக்திகள் கொண்டுள்ள இன மத ரீதியான மேலாதிக்க சிந்தனைப் போக்கில் சிறிதளவேனும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் ஆரம்ப முயற்சியாகவே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கான விஜயம் அமைந்திருக்கின்றது.

அடிப்படையில் மாற்றம் அவசியம்

தேசிய சிறுபான்மை இன மக்களின் இனத்துவ மற்றும் மத ரீதியான சுதந்திரத்தை மறுத்துச் செல்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் போக்கில் கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம். இந்த நாடு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு. பல மதங்களைப் பின்பற்றுகின்ற இனக் குழுமங்கள் இந்த நாட்டைத் தமத தாய்நாடாகக் கொண்டிருக்கின்றார்கள். எனவே எல்லோரும் இணைந்து வாழ வேண்டும் என்ற தேசியப் பற்றும், ஐக்கியமும் கொண்டதோர் அரசியல் சிந்தனை இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களாகிய பௌத்த சிங்கள மக்களுடைய மனங்களில் எழ வேண்டும்.

அத்தகைய கொள்கை ரீதியான மாற்றமும், சிந்தனை மாற்றமும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டியது அவசியம். மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர், நாட்டின் மக்கள் அனைவரும் உளரீதியாக ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாடு முன்னேற்றமடைய முடியும்.

பேரினவாதப் போக்கைக் கொண்டுள்ள தலைவர்களும், சுயநலவாதிகளும் சாதாரண சிங்கள மக்களைத் தங்களுடைய வழியில் திசைதிருப்பி, சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒரு கொள்கைப் போக்கில் செல்வதைத் தடுப்பதற்கு புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும் முயற்சிக்க வேண்டும். அதேவேளை, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த முயற்சியில் இறங்க வேண்டும். அந்த முயற்சி அரசியல் ரீதியாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எந்தெந்த வகைகளில் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் சாதாரண மக்களுடைய மனங்களில், தாங்கள் இந்த நாட்டவர்கள், இந்த நாடு எமது தாய்நாடு, சக இனத்தவர்கள் எமது சகோதரர்கள் என்ற சிந்தனை ஆழமாகப் பதிய வேண்டும். இன ரீதியான மத ரீதியான வெறுப்புணர்வும், வேற்றுமை மற்றும் பகை உணர்வும் மறைய வேண்டும். அதற்கான முயற்சிகளும் நீண்டகால அடிப்படையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கண்டி பௌத்த மத பீடங்களுக்கான விஜயம் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்குரிய ஒரு பிள்ளையார் சுழியாக அமைய வேண்டும்.

இலங்கையைப் பொருத்தமட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமே, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் அரசியல் மூலதனமாகும். இனவாதம் மட்டுமல்லாமல் அப்போதைக்கு அப்போது தேவைக்கு ஏற்ற வகையில் சிறுபான்மை இனமக்களுக்கு எதிராக மதவாத்தையும் அவர்கள் தாராளமாகக் கையில் எடுத்துக்கொள்வார்கள்.

இனவாதத்தைப் பயன்படுத்தியே சிங்கள அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் இதுகால வரையிலும் அரசியல் நடத்தி வந்துள்ளார்கள். இனவாதம் இல்லாவிட்டால் அவர்களால் அதிகாரத்தைக் கைப்பற்றவோ ஆட்சி நடத்தவோ முடியாது என்பதே வரலாற்றுப் பதிவாகும்.

இனவாத அரசியல் போக்கின் காரணமாகவே, இந்த நாடு முப்பது வருடங்களாக ஒரு மோசமான யுத்த்த்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், யுத்தம் தந்த படிப்பினையைக் கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியாதிருப்பதற்கு இனவாதமும் மதவாதமும் அரசியலில் கோலோச்சுவதே முக்கிய காரணமாகும். இனரீதியாக மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதுவும் நாட்டின் பின்னடைவுக்கு மறறுமொரு காரணமாகும்.

எனவே, மோசமானதோர் இனவாத அரசியல் போக்கிற்கு எதிராக சிறுபான்மை இனமக்கள் போராட வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே, சிறுபான்மை இன மக்களின் தலைவர்கள் பேரினவாதத்தின் இவாத அரசியல் போக்கை முறியடிப்பதற்கான வழிகளில் கவனம் செலுத்துவதன் ஊடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் காண முடியும்.

சிங்கள மக்களினதும், பௌத்த மதத் தலைவர்களினதும் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பிரசாரச் செயற்பாடுகள், கருத்துருவாக்கச் சந்திப்புக்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சிறுபான்மை இன மக்களின் தலைவர்கள் முன்வர வேண்டும்.

இது வடமாகாண முதலமைச்சருடைய கண்டி விஜயத்தின் வெளிப்பாடுகளில் ஒரு முக்கிய விடயமாகும்.

http://thuliyam.com/?p=78652

 

On 9/12/2017 at 1:23 PM, Athavan CH said:

மகாநாயக்க தேரர்களுடனான வடக்கு முதல்வரின் சந்திப்பு

கண்டியில் அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தமிழ் மக்கள் குறிப்பாக வட, கிழக்கை வரலாற்று பூர்வ வாழ்விடமாகக் கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துரைத்திருக்கின்றமை

சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதத்தின் தலைமைப்பீடங்களில் ஒன்றை நேரடியாக முதலமைச்சர் சந்தித்தது நல்லதொரு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் பிக்கு அரசியல் :அன்றும், இன்றும் என்றும் - என். சரவணன் 'நமதுமலையகம்' இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரையில் சில......
 
2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச தனிப்பட்ட சட்டப் மூலமொன்றை முன்மொழிந்தார். அதாவது அரசியலமைப்பின் 91ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம் இனிமேல் மதத்தலைவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட முடியாதபடி திருத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்றார். அரசியலமைப்பின் 91ஆம் பிரிவானது பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி பற்றி பேசுகிறது. ஜாதிக ஹெல உறுமய விஜயதாசவின் பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. போதிய ஆதரவற்ற நிலையில் அந்த பிரேரணை கிடப்பில் போடப்பட்டது.
 
1946ஆம் ஆண்டு ஜனவரி 13அன்று மாத்தளையில் டீ. எஸ்.சேனநாயக்க ஆற்றிய உரையொன்றின் போது “சமீபகாலமாக பிக்குமார் அரச சபை கலரியில் நடமாடுகிறார்கள். அரசியல் கூட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு அவர்கள் தமக்குரிய மரியாதையை கெடுத்துக்கொள்கிறார்கள்.” என்று கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை பௌத்த சங்கத்துக்குள் பலவித விவாதங்களை ஏற்படுத்தியது.
 
1953ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவல பிக்கு அரசியல் குறித்து கூறியவை இன்றும் பலர் மேற்கோள் காட்டுவது உண்டு. “மோசடிப் பிக்குகளின் காவியைக் கழற்றி பின் பகுதியில் தாரை பூசுவேன்” என்றார்.
 
1956 மார்ச் 03அன்று இந்த ஐக்கிய பிக்கு முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கூட்டத்திற்கு சிறப்பதிதியாக அழைக்கப்பட்டவர் அப்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பண்டாரநாயக்க. அந்த கூட்டத்தில் தான் தான் பதவிக்கு வந்தால் தனிச் சிங்கள சட்டத்தை கொண்டுவருவதாக அங்குள்ள பிக்குகளுக்கு வாக்குறுதி அளித்தார்  56இல் பண்டாரநாயக்க பெற்ற பெருவவெற்றியின் பின்புலத்தில் பௌத்த அமைப்புகளின் பாத்திரம் அளப்பெரியது. அந்தத் தேர்தலில் ஐ.தே.க 8 ஆசனங்களை மட்டுமே பெற்றது. பின்னர் புத்த ரக்கித்த தேரோவால் பிரதமர் பண்டாரநாயக்க 1959 சுட்டுக்கொல்லப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.