Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம்

Featured Replies

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம்

 

தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக – முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.  தெரி­வித்­தார்.

தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெறக்­கூ­டிய சூழல் இருக்­கு­மா­யின் நாம் அந்­தச் சந்­தர்­பத்தை விட முடி­யாது. நிதா­ன­மாக – பக்­கு­வ­மாக விட­யங்­க­ளைக் கையாள வேண்­டும். வாயைப் பொத்­திக் கொண்டு விட­யங்­களை நகர்த்த வேண்­டும்.

அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வு­டன் பேசி­னேன். தமிழ் மக்­க­ளின் தீர்­வுக்கு பல்­வேறு உறு­தி­களை இந்­தி­யா­வுக்கு நீங்­கள் (மகிந்த) வழங்­கி­னீர்­கள் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னேன். அத­னைச் செய்­ய­வில்லை என்­ப­தை­யும் கூறி­னேன்.
தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டிய பெரும் பொறுப்பு இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. இந்­தியா எங்­க­ளைக் கைவிட முடி­யாது. கைவி­ட­வும் மாட்­டாது.

13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் எமக்கு உடன்­பாடு இல்­லை­யா­யி­னும், அதை முற்­றாக நிரா­க­ரிக் முடி­யாது. அது எமக்­கான இறு­தித் தீர்­வும் அல்ல. புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சி­யைக் கைவி­டு­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இணங்­கி­யுள்­ளது. 13ஆவது திருத்­தத்­தி­லி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் நாம் முன்­னேறி வந்­துள்­ளோம். புதிய அர­ச­மைப்­பில் நூறு வீதம் திருப்தி இல்­லை­யா­யி­னும், அதில் எவ்­வ­ளவோ முன்­னேற்­ற­மான விட­யங்­கள் உள்­ளன. தற்­போது நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வது இடைக்­கால அறிக்­கை­தான்.

கூட்­டாட்சி என்று நாம் சொற்­க­ளில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. உல­கில் பல நாடு­க­ளில் எந்­தப் பெய­ரும் இல்­லா­மல் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்­டி­ருக்­கின்­றன. நாம் கிடைத்­துள்ள சந்­தர்­பத்தை தவ­ற­வி­டக் கூடாது – என்­றார்.

http://newuthayan.com/story/30112.html

  • தொடங்கியவர்

தமிழ் மக்களை விற்க­மாட்­டோம் உரி­மை­க­ளை­யும் அட­கு­வை­யோம்

கூட்­ட­மைப்­பின் தலை­வர் உறுதி

 

“நாம் தமிழ் மக்­களை விற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் உரி­மை­களை அடகு வைக்க மாட்­டோம். மக்­கள் ஏற்­றுக் கொள்­ளும் தீர்­வையே நாம் ஏற்­றுக் கொள்­வோம்”

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

எதிர்­கட்­சித் தலை­வ­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில், தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளின் ஆசி­ரி­யர்­களை இரா.சம்­பந்­தன், நேற்று இரவு சந்­தித்­துப் பேசி­னார். இந்­தச் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மாகாண சபை­கள் தேர்­தலை ஒரே நாளில் நடத்­தும் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் நாம் அதி­ருப்தி வெளி­யிட்­டோம். அரசு எங்­கள் திருத்­தங்­களை ஏற்­றுக் கொண்­டது.
20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றம் வழங்­கிய வியாக்­கி­யா­னத்­தில், ஏன் பொது வாக்­கெ­டுப்­புக்­குச் செல்ல வேண்­டும் என்­ப­தற்கு முழு­மை­யான விளக்­கம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் உயர் நீதி­மன்­றம் சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­கின்­றது. கடந்த காலத்­தில் அவ்­வா­றான நிலமை இல்லை.

ஒரு சன­நா­ய­கக் கட்­சிக்­குள் பல்­வேறு கருத்து வேறு­பா­டு­கள் – விமர்­ச­னங்­கள் இருக்­கும். அதே­போன்­று­தான் கூட்­ட­மைப்­பி­னுள்­ளும் இருக்­கின்­றன. நாம் மற்­றை­ய­வர்­க­ளின் விட­யங்­க­ளில் – அவர்­க­ளு­டைய தீர்­மா­னங்­க­ளில் முட்­டுக்­கட்டை போடு­வ­தில்லை. ஆனா­லும் நாம் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­கின்­றோம். ஒவ்­வொரு விட­யத்­தை­யும் நாங்­கள் பகி­ரங்­கப்­ப­டுத்தி எல்­லோ­ருக்­கும் சொல்­லிச் செய்து கொண்­டி­ருக்க முடி­யாது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நிய­மித்த எனது முடிவு சரி­யா­னது. எங்­க­ளுக்­குள் பிரச்­சினை இருக்­க­லாம். அவர் முத­ல­மைச்­ச­ராக இருப்­பது எமக்­குப் பலம். விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­பது தொடர்­பில் கட்சி எந்த முடி­வும் இது­வரை எடுக்­க­வில்லை.

நான் விட­யங்­க­ளைச் செய்­ய­வில்லை என்று என்­மீது குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். என்­னால் செய்­யக் கூடி­ய­வற்றை நான் நாளையே செய்து முடிப்­பேன். நான் மற்­ற­வர்­க­ளைக் கொண்டு செய்து முடிக்க வேண்டி இருக்­கின்­றது. இத­னா­லேயே கால­தா­ம­தம் ஏற்­ப­டு­கின்­றது. கேப்­பா­பி­லவு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு, அரச தலை­வர் நாடு திரும்­பி­ய­தும் நிச்­ச­யம் தீர்­வைப் பெற்­றுக் கொடுப்­பேன்.

நாங்­கள் தமிழ் மக்­களை விற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் உரி­மை­களை அட­கு­வைக்க மாட்­டோம். இது அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும் தெரி­யும். தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் தெரியும் – என்­றார்.

http://newuthayan.com/story/30114.html

 

  • தொடங்கியவர்

''கோத்தபாயவின் 'எலிய' வெற்றி பெறும் என்று நான் நம்பவில்லை''

 

புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு அவ­சியம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆத­ரவை தெரி­விக்க வேண்டும் என அவ­ரிடம் கேட்­டுக்­கொண்டேன் எனவும் மாநா­யக்க தேரர்­களை விரைவில் சந்­தித்து அர­சியல் அமைப்பு குறித்து பேச­வுள்­ள­தா­கவும்  எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் தெரி­வித்தார்.

Local_News.jpg

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று பின்­னி­ரவு இடம்­பெற்ற செய்தி ஆசி­ரி­யர்கள் சந்­திப்பின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இடம்­பெற்ற சந்­திப்பு தொடர்பில் வின­வி­ய­போது  அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

"அவ­ரது இல்­லத்தில் நான் சந்­திப்பை முன்­னெ­டுத்தேன், அதன்­போது அவர் தன்னை சிறையில் தள்­ளு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்று கூறினார். அப்­போது ரணில் உங்­க­ளு­டைய நண்பர் தானே என்று நான் கூறினேன். அதன்­போது ரணில் நண்பர் தான். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கிறார் என்று சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் இந்த அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஆத­ரவு எமக்கு வேண்டும். அதற்கு ஆத­ர­வாக இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை எதிர்க்­காது  இருந்தால் அது எமக்கு உத­வி­யாக இருக்கும் என்றேன்,இவ்வாறு சிநே­க­பூ­ர்­வ­மாக இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது" 

கேள்வி:- தீர்வு திட்டம் தொடர்பில் மாநா­யக்க தேரர்­களை சந்­திக்க திட்டம் உள்­ளதா? 

பதில்; ஆம், அவ்­வா­றான ஒரு திட்டம் உள்­ளது, ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒரு அர­சியல் தீர்வு வேண்டும் என கோரு­கின்றோம், அதை ஏன் நீங்கள் ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­றீர்கள் என்­பதை அவர்­க­ளிடம் கேட்க வேண்டும். பெளத்த மதம் இந்த நாட்டில் பிர­தானம் என்­ப­தற்கு நாம் இணங்­கத்­தயார். ஆனால் ஏனைய மதங்­களும் ஏற்­று­க் கொள்­ளப்­பட வேண்டும்.  பாதகம் ஏற்­ப­டாத வகையில் சில விட­யங்­களை விட்­டுக்­கொ­டுப்­பதில் பாதிப்பு இல்லை. ஒட்­டு­மொத்­த­மாக நாம் தீர்வை நோக்கி சிந்­திக்க வேண்டும். தேசிய ரீதி­யிலும், மாகா­ண­மட்ட அதி­கார பகிர்வு, உள்­ளூ­ராட்சி மட்ட அதி­கா­ர­ங்கள் என மூன்று அடிப்­ப­டையில் அமையும். இந்த அதி­கா­ரங்­களை அந்­தந்த மட்­டத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு மக்­க­ளுக்­கான பூரண சுதந்­திரம் அமைய வேண்டும் என்­ப­தையே நாம் கோரு­கின்றோம். அவ்­வா­றான ஒரு தீர்வு வர­வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் அது தீர்வே அல்ல. 

கேள்வி:- கோத்­தா­பய ராஜபக்ஷவின் புதிய வியூகம் தொடர்பில் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்?

பதில்:- அவ­ரது கூட்­டத்தின் பின்னர் எந்த கருத்தும் வெளி­வ­ர­வில்லை, இந்த கூட்­டங்கள் மஹ­ர­கம பகு­தியில் இடம்­பெற்­றன. மக்கள் அதிகளவில் பங்குபற்றியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் எந்த காரணிகளும் இல்லை. ஆனால் இது குறித்து நாம் ஆராய்ந்த போது இது பெரிய வெற்றியை பெறாது என கூறுகின்றனர். ஆகவே பொறுத் திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.

http://www.virakesari.lk/article/24673

  • தொடங்கியவர்

"வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்"

 

 

"வட­மா­காண முதல்வர் விட­யத்தில் கருத்து முரண்­பா­டுகள் இருந்த போதிலும் அவர் வடக்கின் முதல்­வ­ராக இருப்­பதே எமக்கும் பல­மென்று நினை­கின்றேன்" என எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் நேற்று பின்­னி­ரவு இடம்­பெற்ற செய்தி ஆசி­ரி­யர்கள் சந்­திப்பின் போது தெரி­வித்தார்.  

Local_News.jpg

அவர் மேலும் கூறு­கையில், 

"தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும், நான்கு கட்­சி­களும் இணைந்து செயற்­பட வேண்டும், இதில் ஒரு கட்சி மட்­டுமே எம்மை விமர்­சிக்­கின்­றது, நாம் யாரையும் விமர்­சிக்­க­வில்லை, முட்­டுக்­கட்­டை­யா­கவும் இல்லை, இன்று தமிழ் மக்­களின் விசு­வா­சத்தை பெற்­றுள்ள கட்­சி­யாக உள்ள நிலையில் அதனை  நாம் குழப்­பக்­கூ­டாது, சர்­வ­தேச தரப்பும் தொடர்ந்தும் இந்த கேள்­வியை எழுப்­பு­கின்­றது, இதன்போதும் நாம் ஒற்­று­மை­யாக உள்ளோம் என்றே கூறி வரு­கின்றோம், கருத்து முரண்­பா­டுகள் உள்­ளது உண்­மையே. 

ஆனால் இதுதான் ஜன­நா­ய­க­மாகும், அதை நாம் தடுக்­க­வில்லை, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பை உதா­சீ­னப்­ப­டுத்த விரும்­ப­வில்லை, கூட்­டா­கவே  செயற்­ப­டுவோம், எமது கட்­சிக்குள் உள்ள விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொண்டு அதனை தாங்­கிக்­கொண்டு செயற்­பட நாம் தயா­ராக உள்ளோம்"என தெரிவித்தார். 

கேள்வி:- வட­மா­கா­ண­சபை விட­யத்தில் நீங்கள் எடுத்த முடி­வுகள் சரி­யா­னதா? 

பதில்:- ஆம், அவர் விட­யத்தில் எமது தீர்­மா­னங்கள் சரி­யா­னது. பிரச்­சி­னைகள் இருக்­கலாம் ஆனால் அவரை நாம் தீர்­மா­னித்­தமை சரி­யா­னதே, அவ­ரைப்­போல ஒருவர் வட­மா­காண சபையில் முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டி­யது அவ­சியம், தனிப்­பட்ட முறையில் அவ­ருக்கும் எமக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை, பொது­வான கருத்து முரண்­பா­டு­களே உள்­ளன, இன்னும் தொடர்ந்தும் அவர் முத­லமைச்­ச­ராக இருப்­பது எமக்கும் பல­மென்று நினை­கின்றேன்.

கேள்வி: அடுத்த தேர்­த­லிலும் அவரை முத­லமைச்­ச­ராக நிறுத்­து­வது கூட்­ட­மைப்பின் தீர்­மா­னமா? 

பதில்:- அவ்வாறு எந்த தீர்­மா­னமும் நாம் எடுக்­க­வில்லை. 

கேள்வி: இந்­தியா எமக்கு கொடுக்கும் அழுத்தம் குறை­வ­டைந்­துள்­ளதா?

பதில்:- இருக்­கலாம், அவர்கள் தனிப்­பட்ட ரீதியில் கால்­ப­திக்க முயற்­சித்து வரு­கின்­றனர், சீனா தனித்து இலங்­கைக்குள் செயற்­ப­டு­வது அவர்­க­ளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இந்தியா அமக்கு தேவை என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக நாம் செயற்படுவோம் பழைய சம்பவங்களை அவர்கள் மறக்கவில்லை. ஆனால் கைவிட மாட்டார்கள் என நம்புகின்றோம்.

http://www.virakesari.lk/article/24674

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது – சம்பந்தன்!

 

sampanthan-e1354460177963-415x260-415x26

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. எத்தனையோ உலக நாடுகளில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தீர்வு வரலாம்; வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்படவேண்டும். இனிமேல் தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறக்கூடிய சூழல் உருவாகக்கூடுமாயின் நாம் அச்சந்தர்ப்பத்தை நழுவவிடமுடியாது. நிதானமாக -பக்குவமாக வாயைப் பொத்திக்கொண்டு விடயங்களை நகர்த்தவேண்டும்.

அரசயிலமைப்புத் தொடர்பாக மகிந்தவுடன் பேசினேன். தமிழ் மக்களின் தீர்வுக்கு இந்தியாவிடம் பல உறுதிமொழிகளை வழங்கினீர்கள் எனத் தெரிவித்தேன். அதனை நீங்கள் செய்யவில்லையென்பதையும் கூறினேன். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

13ஆவது திருத்தச் சட்டத்தில் எமக்கு நம்பிக்கையில்லையாயினும் அதனை முற்றாக நிராகரிக்கமுடியாது. அது எமது இறுதித் தீர்வு இல்லை.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைவிடுவதாக அறிவித்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நாம் எவ்வளவோ முன்னேறியுள்ளோம். புதிய அரசியலமைப்பில் நூறு வீதம் திருப்தியில்லையாயினும் அதில் எந்தளவோ முன்னேற்றமான விடயங்கள் உண்டு. தற்போது நாடாளுமன்றத்திற்கு வருவது இடைக்கால அறிக்கை மாத்திரமே.

சமஷ்டி என்று நாங்கள் சொற்களில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. உலகில் பல நாடுகளில் எந்தப் பெயரும் இல்லாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் நாம்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79245

 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது வீடு வேலை செய்யுது....பாவி மனுசா....அந்தவயதும் வந்திட்டுது...மெத்தை வீடு கேட்குதோ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Athavan CH said:

இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

வரதராஜப் பெருமாள் தொடக்கம்....இந்தியா ஒருவரையும் கை விடவில்லை!

எல்லாரையும் கவனித்துக் கொண்டது என்பது உண்மை தான்!

சிங்களத் தலைவர்கள் உட்பட....எல்ல்லாரையும் கவனித்தது என்பது ....உண்மை தான்!

கவனிக்காமல் விட்டது....ஒன்றே ஒன்று தான்..!

அது தான்த மிழ் மக்களுக்கு அழித்த வாக்குறுதிகள்!

5 hours ago, Athavan CH said:

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது – சம்பந்தன்!

 

sampanthan-e1354460177963-415x260-415x26

நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. எத்தனையோ உலக நாடுகளில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தீர்வு வரலாம்; வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்படவேண்டும். இனிமேல் தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறக்கூடிய சூழல் உருவாகக்கூடுமாயின் நாம் அச்சந்தர்ப்பத்தை நழுவவிடமுடியாது. நிதானமாக -பக்குவமாக வாயைப் பொத்திக்கொண்டு விடயங்களை நகர்த்தவேண்டும்.

அரசயிலமைப்புத் தொடர்பாக மகிந்தவுடன் பேசினேன். தமிழ் மக்களின் தீர்வுக்கு இந்தியாவிடம் பல உறுதிமொழிகளை வழங்கினீர்கள் எனத் தெரிவித்தேன். அதனை நீங்கள் செய்யவில்லையென்பதையும் கூறினேன். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

13ஆவது திருத்தச் சட்டத்தில் எமக்கு நம்பிக்கையில்லையாயினும் அதனை முற்றாக நிராகரிக்கமுடியாது. அது எமது இறுதித் தீர்வு இல்லை.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைவிடுவதாக அறிவித்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நாம் எவ்வளவோ முன்னேறியுள்ளோம். புதிய அரசியலமைப்பில் நூறு வீதம் திருப்தியில்லையாயினும் அதில் எந்தளவோ முன்னேற்றமான விடயங்கள் உண்டு. தற்போது நாடாளுமன்றத்திற்கு வருவது இடைக்கால அறிக்கை மாத்திரமே.

சமஷ்டி என்று நாங்கள் சொற்களில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. உலகில் பல நாடுகளில் எந்தப் பெயரும் இல்லாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் நாம்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79245

 

இப்படியே மண்டையை போடும் வரைக்கும் பினாத்திகொண்டு சந்தர்பப்ப சூழலுக்கேற்ப நிறம்மாறும் ஓணானாக வாழவேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது 'வக்கீல்கள் காலம்' போலிருக்கிறது..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

 

இந்தத் தீபாவளிக்கும்... தீர்வு வராது போலுள்ளது. :unsure:

Edited by தமிழ் சிறி

அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்துவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் இல்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 


நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். 


இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக நடத்தப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் தங்களால் எடுக்கப்பட்ட முடிவு சரியானதா? என்பது தொடர்பாக  எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தன் தொடர்ந்து பதிலளிக்கையில்; 


அந்த முடிவு சரியானதுதான். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் . முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகின்றேன். பிரச்சினைகள் இருக்கலாம்.

ஆனால் அவரை ஏன் வடமாகாண சபை முதலமைச்சராக கொண்டுவந்திருந்தோம்? அவரைப் போல ஒரு முதலமைச்சர் வடமாகாணத்திற்கு வரவேண்டும் என்று நாம் உறுதியாக இருந்தோம். சில கருத்து வேறுபாடுகள் எம் மத்தியில் இருக்கலாம்.

எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பது எமக்கு பலமென்றே நான் நினைக்கின்றேன். எம்மை சமாளிக்கலாம் என்று எவரும் நினைத்துவிட முடியாது. நான் கதைக்காவிடிலும் வேறுசிலர் கதைக்க வேண்டும் என்றார்.


அவ்வாறெனில் அடுத்த தேர்தலிலும் முதலமைச்சராக விக்னேஸ்வரனை நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,  அவ்வாறு இல்லை; அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். 

http://www.thinakkural.lk/article.php?local/kycxedvdgj2563dbd22ba3bd18357cx9il0df8f385bdac3e9f8be207zostt

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.