Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’

Featured Replies

’இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’
 

image_e64cadd2a3.jpg

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக, நேரடியாக பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று 03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரைநிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"இலங்கை சுதந்திரம் பெற்றபோது, நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகள் இன்றி வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவே விரும்பியிருந்தோம்.

கடந்த 70 வருடகாலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.

என்றாலும், அது குறைகாணப்படாத, பூரணத்துவமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்குச் சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது. பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்" என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கைக்கு-சுதந்திரம்-வழங்கப்பட்ட-நிகழ்வை-பெருமையுடன்-அவதானித்தேன்/150-204911

  • தொடங்கியவர்

போலி நாட்டுப் பற்றினால் யுத்தம் ஏற்படும் அபாயம்

 

 

தேர்தல் வழிமுறை மாத்திரம் ஊடாக ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும் அதற்கு மதிப்பளிக்கும் வகையில்  மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள்,  தலைவர்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் துர்அதிஸ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உள்நாட்டு உருவாக்கம் என உரிமை கோரப்பட்ட அரசியலமைப்புக்கள் சுயசேவைக்கு அப்பால் பன்முகத்தன்மையின் தேவைகளை நிறைவு செய்வதற்குச் சேவையாற்ற முடியாதவைகளாகவும், மாறாகப் பெரும்பான்மைவாதத்தை மேலும் உறுதிப்படுத்துபவையாகவுமே அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலி நாட்டுப் பற்றினால் யுத்தம் ஏற்படும் அபாயம்

நீண்டகால ஆயுதப் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளினால் தமிழ் மக்களே மிகவும் பாதிக்கப்பட்டதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலமாக போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர்.

இதனால் அவற்றிற்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும். நாட்டுப்பற்று என்ற பெயரில் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும் என சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே முயற்சிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/risk-of-war-with-false-patriotism

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிகழ்வில் இருந்து ஐயா இன்னமும் மீளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நவீனன் said:

போலி நாட்டுப் பற்றினால் யுத்தம் ஏற்படும் அபாயம்

நீண்டகால ஆயுதப் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளினால் தமிழ் மக்களே மிகவும் பாதிக்கப்பட்டதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலமாக போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர்.

இதனால் அவற்றிற்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும். நாட்டுப்பற்று என்ற பெயரில் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும் என சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தர் ஐயாவுக்கு முன்பு இருந்த தலைவர்கள் எல்லோருமே போலி நாட்டுப்பற்றோடுதான் போராடினார்கள் என்றால்..... அதற்குள்தான் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் அடங்குகிறார்கள்.   

சம்பந்தருக்கு அறளைபேர்ந்து விட்டதா..... ?? :shocked: 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

அதன்பின் சிங்கள தமிழ் இனகலவரங்கள் எப்படி நோக்கினார் அதையும் கூறினால் நல்லது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, நவீனன் said:

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன்’

இந்த மனிசன் அரசியல் செய்யுதா? இல்லை ஆருக்கும் பின்பக்கம் கழுவுதா?:cool:
ஒரு சம உரிமைக்கான போராட்டத்துக்கு 70 வருசம் ரூமச் சம்பந்தன்.tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.