Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடவை கட்டும் பெண்களுக்காக புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழனின் ஒரு புதிய கண்டுபிடிப்பு!

தமிழ் பொப் அப் - Tamil Pop Up 17 members have voted

  1. 1. தமிழ் பொப் அப் - Tamil Pop Upபை நீங்கள் கட்ட அல்லது சிபாரிசு செய்ய தயாரா?

    • ஆம்!
      10
    • இல்லை!
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சாரி மடிப்பதைவிட ஒரு நிமிடத்தில் சாரி எப்படிக் கட்டுவது எப்படி என்று காட்டினால் இன்னும் பிரயோசனமாக இருக்கும்.

அனைத்து பெண்களும் ஒரு செக்கனில் புடவை கட்ட புதிய வழி!

இந்தக் காலத்தில் பெண்களைப் புடவையைக் கட்ட வைப்பதற்கு பல ஆண்கள் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி எடுத்திருக்கும் அதேநேரம், பல பெண்கள் புடவையை கட்ட மனதில் ஆசையிருந்தும் நேரம் போதாமையாலும், புடவையை எவ்வாறு கட்டுவது என்ற செயன்முறை தெரியாததாலும் புடவையைக் கட்ட முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

யாழ் கள பெண்களிற்காக கவலைப்பட்டு, இந்தப் புடவைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசித்து பார்த்ததில் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி வந்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பு March 8, 2007 அன்று யாழ் கள நேரம் YST (Yarl Standard Time) பிற்பகல் சுமார் 02.00 மணியளவில் என்னால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கான எனது உரிமையைக் கோரும் Patent ஏற்கனவே சர்வதேச விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் சம்மேளனத்திற்கு Fax ல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பிற்கு தமிழ் பொப் அப் - Tamil Pop Up என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாம் கணணியைப் பாவிக்கும் போது திடீர் திடீர் என்று பல பொப் அப் கள் (Pop Up Windows) தோன்றி எமக்கு அதிர்ச்சியூட்டுவதன் தன்மையை அடிப்படையாக வைத்தே மேற்குறித்த பெயர் இக்கண்டுபிடிப்பிற்கு வைக்கபட்டுள்ளது. அதாவது இந்த அருமையான Tamil Pop Up கண்டுபிடிப்பின் காரணமாக விரைவில் தமிழ்ப் பெண்கள் திடீர் திடீர் என்று புடவையை அணிந்து கூட்டம் கூட்டமாகக் காட்சி தருவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு.

சர்வதேச மகளிர் தினமன்று எனது இந்த Tamil Pop Up கண்டுபிடிப்பை யாழ் களத்தினூடாக உலகத்திற்கு பகிரங்கப்படுத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். இந்த கண்டுபிடிப்பு யாழ் களத்திலுள்ள புடவை கட்டத் தெரியாத பெண்களிற்கு சமர்ப்பணம்.

தமிழ் பொப் அப் பின் அறிமுகம் - Tamil Pop Up Intro

tamilpopupaa3.jpg

மிகுதி பின்...... :mellow::mellow: :P :mellow::blink::huh:

ஓய் மாப்பு!

அநுபவம் தந்த அறிவோ?

  • தொடங்கியவர்

ஹி ஹி அப்படியெல்லாம் இல்லை! அறிவு தந்த அனுபவம்! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளைக்கு என்ன நடந்தது

  • தொடங்கியவர்

எனக்கு ஒன்றும் நடக்கவில்லை, நன்றாகத்தான் இருக்கின்றேன். ஏதோ உங்களைப் போன்ற பெண்களிற்கு மகளிர் தினமன்று ஏதாவது நல்ல காரியம் செய்யலாமே என்று பார்த்தேன், அவ்வளவுதான்! :mellow::mellow::mellow:

மாப்பிளைக்கு என்ன நடந்தது

ஒண்டுமில்லை கப்பி!

சீலை கட்டிவிடத் தெரியும் என்று சொன்னாத்தன்னும் யாரேனும் திரும்பிப்பாக்க மாட்டாங்கள் என்ற நப்பாசை :mellow:

  • தொடங்கியவர்

கடவுளே உனக்கு நன்றி! ஆதி வாசிக்கவாவது(வாசிக்காவது) எனது பிரச்சனையை தெரியப்படுத்தியுள்ளாயே! :3d_039: :3d_039: :3d_039:

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் மாப்பிள்ளையாக இருந்து இன்று சயண்டிஸ்ற் மாப்பிள்ளையாக உயர்ந்து நிற்கும் மாப்பிள்ளையை பார்க்கும் பொழுது (து சகிக்கமுடியல்ல) பெருமையா இருக்கு,

புறம்***க்கு மாப்பிள்ளையாக களத்தில் உள்ளுட்ட மாப்பிள்ளை... :blink:

சிறிய இடைவெளிக்குள் செல்வன் மாப்பிள்ளை என்ற அந்தஸ்ற்றை பெற்ற மாப்பிள்ளை.... :)

அதிரடியாக டொக்டர் மாப்பிள்ளை பெற்ற மாப்பிள்ளை... :)

தற்பொழுது சயண்டிஸ்ற் மாப்பிள்ளையை பெற்றிருக்கிறார். :)

சகிக்கமுடியவில்லை சீ நம்பமுடியவில்லை!!!! :lol:

  • தொடங்கியவர்

கீழ் வரும் நபர்களிற்கு தமிழ் பொப் அப் - Tamil Pop Up பை உலகில் உற்பத்தி செய்யும், மற்றும் விற்பனை செய்யும் உரிமத்துவம் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது

தூயா - அவுஸ்திரேலியாக் கண்டம்

யாழ் கள புலனாய் - ஆபிரிக்கா கண்டம்

சாணக்கியன் - இந்தியா, சிறீ லங்கா

ஜனார்த்தனன் - தமிழீழம்

ப்ரியசகி - ஹோலந்து, ஜேர்மனி, டென்மார்க்

நோர்வேஜியன் - நோர்வே

சஜீவன் - சுவிஸ்லாந்து

சினேகிதி - கனடா ஈஸ்ட் கோஸ்ட் - Canada East Coast

ரசிகை - கனடா வெஸ்ட் கோஸ்ட் - Canada West Coast

ஈழப்பிரியன் - அமெரிக்கா

கிருபன்ஸ் - இங்கிலாந்து

ஏனைய ஐரோப்பிய நாடுகள் - அனிதா, கறுப்பி

ஏனைய ஆசிய நாடுகள் - ஆட்டுப்பால் அத்தாஸ், சின்னப்பு, கந்தப்பு

தென் அமெரிக்காக் கண்டம் - மூக்கி, லீசா, தூயவன், ஈழவன்

ஆர்ட்டிக், அண்டாட்டிக்கா கண்டம் - பென்டிங் - யாழ்வினோ, அரவிந்தன்

தேவலோகம் - நாரதர்

அசுரலோகம் - விது, மக்ஸிமஸ், பிரசு

இணையத் தளத்தினூடான ஒன்லைன் விற்பனை - கடுவன், காவடி, கானாபிரபா

Edited by மாப்பிளை

கீழ் வரும் நபர்களிற்கு தமிழ் பொப் அப் - Tamil Pop Up பை உலகில் உற்பத்தி செய்யும், மற்றும் விற்பனை செய்யும் உரிமத்துவம் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது

இணையத் தளத்தினூடான ஒன்லைன் விற்பனை - கடுவன், காவடி, கானாபிரபா

இணையதள முகவரியை கொடுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனாண்ணா இது ரொம்ப ஓவர், பின்ன என்ன கடுவனின் பெயரை பார்த்துமா இனையத்தின் முகவரியை கேட்டீங்க? :angry:

அதுதாப்பா தினமும் 5மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிடுவதால் அடிக்கடி சேவரில் தடங்கள் ஏற்பட்டு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிதர்சனம். :angry: :angry:

  • தொடங்கியவர்

உங்களிற்கு தமிழ் பொப் அப் - Tamil Pop Up சம்மந்தமாக ஏற்படும் கேள்விகளிற்கு பதில் சொல்ல நாம் ஆயத்தமாக இருக்கின்றோம். தமிழ பொப் அப் -Tamil Pop Up ஐ விளம்பரம் செய்யும் Marketing Campaign விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதன் மூலம் யாழ் களத்திலுள்ள பல வேலை வெட்டி இல்லாத இளைஞர்களிற்கு வேலை கிடைக்கவுள்ளது.

FAQ - பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் - Frequently Asked Questions

FAQ 1 - Jamuna - தமிழ் பொப் அப் ஐ ஒன்லைன் மூலம் வாங்குவதற்குரிய இணையதள முகவரி என்ன?

கடுவன், காவடி, கானாபிரபா ஆகியோர் இது சம்மந்தமாக தீவிரமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். விரைவில் www. TamilPopUp.com என்ற முகவரியில் நீங்கள் தமிழ் பொப் அப் ஐ ஒன்லைன் மூலம் ஓடர் செய்யக்கூடியதாக இருக்கும்.

இதைவிட www.TamilPopUp.Co.Uk, www.TamilPopUp.Au, www.TamilPopUp.Us, www.TamilPopUp.Ca, www.TamilPopUp.Lk, www.TamilPopUp.In, www.TamilPopUp.Dk போன்ற முகவரிகளிலும் நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள உள்நாட்டு முகவர்களின் மூலம் தமிழ் பொப் அப் ஐ ஒன்லைன் மூலம் வாங்கக்கூடியதாக இருக்கும்.

Edited by மாப்பிளை

மாப்பு டிஸைன் எல்லாம் நல்லாத்;தானிருக்கு ஆனால் உது ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டினமெல்லோ.சா

  • தொடங்கியவர்

FAQ 2 - சினேகிதி - தமிழ் பொப் அப் ஏற்கனவே பஞ்சாபி காரரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்னென்ன நிறங்களில், அளவுகளில் தமிழ் பொப் அப் கிடைக்கிறது?

இது மிகவும் வேடிக்கையான கேள்வி ஆகும். தமிழ் பொப் அப் களை எவ்வாறு ஒரு பஞ்சாபி கடையில் கண்டிருக்க முடியும்? சில வேளைகளில் நீங்கள் கண்ட புடவை பஞ்சாபி பொப் அப்பாக இருக்கலாம். தமிழரும், பஞ்சாபியினரும் வேறு, வேறு துருவங்களில் வாழும் இரு வேறுபட்ட இனத்தினர் ஆவார்கள். தமிழர்கள் புடவை கட்டும் முறைக்கும் பஞ்சாபிகாரர் புடவை கட்டும் முறைக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளது. எனினும் எம்மீது எதிர்காலத்தில் தமிழ் பொப் அப் காப்புரிமை சம்மந்தமாக ஏதாவது சட்டப்பிரச்சனைகள் - LawSuit வந்தால், LawSuit தொடுக்கப்பட்டால் அதை எமது சர்வதேச அனுபவம் மிக்க திறமையான தமிழ் சட்டத்தரணிகள் மூலம் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம்.

இப்போது கடைகளில் புடவைகள் எந்தெந்த நிறங்களில், டிசைன்களில் கிடைக்கின்றதோ அதே மாதிரியான வகையில் தமிழ் பொப் அப் களும் உருவாக்கப்படும். இதற்காக யாழ் கள சுட்டி தலைமையில் ஒரு குழு தமிழ் பொப் அப் டிசைன்களை கணணியில் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதைவிட எமது தமிழ் பொப் அப் பிலுள்ள இன்னொரு விஷேசம், தமிழ் பொப் அப் வெவ்வேறு இடுப்பு அளவுகளில், உயரங்களில் உருவாக்கப்படவுள்ளது. எனவே எவ்விதமான உடலமைப்புடைய பெண்களும் தமிழ் பொப் அப் பை அணிந்து மகிழக்கூடியதாக இருக்கும்.

இதை விட சினேகிதி, ரசிகை போன்ற பள்ளி செல்லும் பெண்களை கவருவதற்காக கீழ்வரும் Brand களிலும் தமிழ் பொப் அப் உருவாக்கப்படவுள்ள்ளது.

1. திரிசா தமிழ் பொப் அப்

2. அசின் தமிழ் பொப் அப்

3. சினேகா தமிழ் பொப் அப்

அலம்பல் கூடிப்போச்சு :blink::):):)

இப்பொழுது எல்லோரும் கவுண்டர், செந்தில், வடிவேல் ரேஞ்சில் நிற்கிறார்கள். மாபிள்ளை சார் டாக்டர் ரேஞ்ச்சில இருந்து இப்ப கமெடியன் ரேஞ்ச் ஆகிட்டார்.

Edited by mathuka

  • தொடங்கியவர்

FAQ 3 - மாதுகா - தமிழ் பொப் அப் பில் அலம்பல் கூடிவிட்டதா? அதாவது இதை சலவை செய்து, சுத்தம் செய்து மினுக்குவது எவ்வாறு?

உண்மையில் மற்றைய புடவைகளுடன் ஒப்பிடும் போது தமிழ் பொப் அப் பை சலவை செய்து, மினுக்குவது மிகவும் இலகுவானதாகும். ஏனெனில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் போதே தமிழ் பொப் அப் கச்சிதமான முறையில் மினுக்கப்பட்டு விடுவதால் இது விரைவில் கசங்கல் அடையாது. வாசிங் மிசினில் போட்டு எடுத்தாலும் மடிப்பு களையாமல் அப்படியே புதுசாகக் காட்சியளிக்கும். தமிழ் பொப் அப்பை பராமரிப்பது எவ்வாறு என்ற Demonstration விரைவில் யாழ் கள பெண்களால் செய்து காண்பிக்கப்படும்.

FAQ 3 - மாதுகா - தமிழ் பொப் அப் பில் அலம்பல் கூடிவிட்டதா? அதாவது இதை சலவை செய்து, சுத்தம் செய்து மினுக்குவது எவ்வாறு?

உண்மையில் மற்றைய புடவைகளுடன் ஒப்பிடும் போது தமிழ் பொப் அப் பை சலவை செய்து, மினுக்குவது மிகவும் இலகுவானதாகும். ஏனெனில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் போதே தமிழ் பொப் அப் கச்சிதமான முறையில் மினுக்கப்பட்டு விடுவதால் இது விரைவில் கசங்கல் அடையாது. வாசிங் மிசினில் போட்டு எடுத்தாலும் மடிப்பு களையாமல் அப்படியே புதுசாகக் காட்சியளிக்கும். தமிழ் பொப் அப்பை பராமரிப்பது எவ்வாறு என்ற Demonstration விரைவில் யாழ் கள பெண்களால் செய்து காண்பிக்கப்படும்.

மனுசிகிட்ட வாங்கிக் கட்டினதுல மண்ட கழன்டு போச்சு போல இருக்கு, யாரச்சும் ஒரு நல்ல இடமா பாத்து கூட்டிட்டும் போய் சேத்துவிடுங்கப்பா.......

  • தொடங்கியவர்

மனுசிகிட்ட வாங்கிக் கட்டினதுல மண்ட கழன்டு போச்சு போல இருக்கு, யாரச்சும் ஒரு நல்ல இடமா பாத்து கூட்டிட்டும் போய் சேத்துவிடுங்கப்பா.......

நீங்கள் உங்களைப் பற்றித்தானே கதைக்கிறீங்கள்? நீங்கள் எங்கு இருக்கிறீங்கள் என்று உங்கள் விலாசத்தை தந்தால் உங்களை ஒரு நல்ல இடமாக கூட்டிக் கொண்டு போய் சேர்க்க முடியும்! :blink: :P :P

நீங்கள் உங்களைப் பற்றித்தானே கதைக்கிறீங்கள்? நீங்கள் எங்கு இருக்கிறீங்கள் என்று உங்கள் விலாசத்தை தந்தால் உங்களை ஒரு நல்ல இடமாக கூட்டிக் கொண்டு போய் சேர்க்க முடியும்! :blink: :P :P

:angry: :angry: :angry: நான் என்ன உம்மல போல ஐடியாமணியா.....? நீர்தான் மனுசிக்க்கு சேல கட்டத் தெரியாம பிஞ்சு போன தும்புத்தடியால வாங்கிட்டு இப்பாடி ஐடியா எல்லாம் போடுறீர், ஆண்டவந்தான் காப்பாத்தனும் உம்மள :P :P :P

  • தொடங்கியவர்

அதென்ன ஜாடி மணி? புது டமிழ் Vocabulary ஆக இருக்கிறது?

கோயில் மணி தெரியும், நேரம் பார்க்கும் மணி தெரியும், குன்றுமணி தெரியும், கண்மணியையும் தெரியும். அதுவென்னப்பா ஜாடி மணி?

அதென்ன ஜாடி மணி? புது டமிழ் Vocabulary ஆக இருக்கிறது?

கோயில் மணி தெரியும், நேரம் பார்க்கும் மணி தெரியும், குன்றுமணி தெரியும், கண்மணியையும் தெரியும். அதுவென்னப்பா ஜாடி மணி?

மனுசிகிட்ட வாங்கினதில கழண்டு போச்சு ஐ கும் ஜ க்கும் விதியாசம் தெரியல :angry: :angry: . இங்க யாரச்சும் இருந்தா நம்ம மாப்புக்கு தமிழ் படிப்பியுங்கோ :blink::):)

அதானே...என்ன மாப்பு மப்பா?? வித்தியாசம் தெரியேல்லயா? :-)))))

  • தொடங்கியவர்

அட, சிந்தனைச் செல்வன் என்று ஒழுங்கான தமிழில் எழுதி இருந்தால் எனக்கு முதல் தரமே விளங்கியிருக்குமே?

நீர் ஏதோ ஐடியாமணி என்று எழுத நானும் அது என்ன கண்றாவியோ என்று நினைத்து நீர் என்னை ஏதோ கெட்ட வார்த்தையால் திட்டுவதாகவும் நினைத்து பயந்து போனன்!

அதானே...என்ன மாப்பு மப்பா?? வித்தியாசம் தெரியேல்லயா? :-)))))

மாப்பு எப்பத்தான் மப்பு இல்லாம இருந்த்திருக்காரு :blink::):):)

  • தொடங்கியவர்

அதானே...என்ன மாப்பு மப்பா?? வித்தியாசம் தெரியேல்லயா? :-)))))

ஐடியாமணி என்ற சொல்லை இப்பத்தான் வாழ்க்கையில் முதன் முதலாகக் கேள்விப்படுறன். இது ஒரு டமிழ் Vocabulary என்று எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

மாப்பு எப்பத்தான் மப்பு இல்லாம இருந்த்திருக்காரு :blink::):):)

எல்லாம் நீர் வந்து சேர்ந்த நேரம்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.