Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் அரசமைப்பு தேவையா? மஹிந்த!

Featured Replies

வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் அரசமைப்பு தேவையா? மஹிந்த!

 

வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் அரசமைப்பு தேவையா? மஹிந்த!

வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பொன்று தற்காலத்தில் தேவைதானா என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இறுதிநாள் விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்கின்றனர், இளைஞர்கள் தொழில்வாய்ப்பு கோரி போராட்டம் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட தருணத்தில் புதிய அரசியலமைப்பு தேவைதானா? அவர்களுக்குரிய தீர்வுகளையே வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

சமஷ்டி தீர்வும், வடக்கு – கிழக்கு இணைப்பும் கொண்டுவருவதன் ஊடாக அந்த மாகாண மக்களிடையே, இனங்களிடையே முறுகலும் கோபதாபங்களையே அரசாங்கம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் கொள்கையான அறிவிக்கப்பட்டதொன்றுதான் வட-கிழக்கு இணைப்பை நிராகரிப்பதாகும். இப்படியிருக்க, இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற கிழக்கு மக்களின் பிரதிநிதிகளும்கூட வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கின்ற நிலையில் அதனை எவ்வாறு செய்யமுடியும்? என்று தெரிவித்தார்.

தூக்கு மரத்தில் கழுத்தை வைக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறிய மஹிந்த ராஜபக்ச, தாம் இந்தியாவுக்குச் சென்று 13க்கும் மேலான தீர்வுக்கு செல்வதற்கும் தயார் என்று கூறியதன் அர்த்தம் இன்று திரிபுபடுத்தப்பட்டு சிலர் கூறிவருவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை 13க்கும் மேலான என்பதை தாம் கூறியதற்கான காரணத்தையும் அவர் சபையில் இன்று விளங்கப்படுத்தினார்.

அதாவது, அந்த தீர்வை தாம் கூறியது நாட்டைப் பிரிப்பதற்காக அல்ல என்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் மக்கள் தங்களது அதிகாரங்களை அதிகரித்து, மத்திய அரசுடன் நேரடி பேச்சு நடத்தும் பலத்தை அவர்களுக்கு வழங்கவே என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மனசாட்சிக்கு உகந்த வகையில் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பில் அரச தரப்பு அமைச்சர்களுக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் அரசாங்கம் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விருப்பம் என்றால் அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள் தமது பக்கம் வந்து இணைந்து கொள்ளலாம் என்ற அழைப்பையும் விடுத்தார்.

 

https://news.ibctamil.com/ta/politics/mahinda-comment-on-new-constitution-

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பிணக்குவியலை உருவாக்கியவர்... பார்ரா இவர்.. எதுக்கு வருந்தினாருன்னு. சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 பார்ரா

கடன் வாங்கிய அல்ல, கடன் கொடுத்த குடும்பம் விஷம் குடித்து மடிந்து விட்டது.

இதுக்கும், அரசியலமைப்புக்கும் என்ன தொடர்பு?

  • கருத்துக்கள உறவுகள்

 ஏது ஏது இந்த ஓநாய்க்கு இப்போ புதுசா வடக்கு நோக்கி    ஞானோதயம் பிறக்குது. வாள்வெட்டு, கஞ்சா, துப்பாக்கிச்சூடு  என்று குழுக்களை உருவாக்கி அன்றாட வாழ்க்கையை நிம்மதியில்லாமல் அலையவிட்டிட்டு கண்ணீர் வடிக்கிறார். குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, வடக்கையும் குழப்பி, தெற்கையும் பயமூட்டி காரியம் பார்க்க  எப்பிடியெல்லாம் நாடகம் எழுதி நடிக்கிறார்கள். தொலையமுதல் ஏதாவது செய்யுங்கள். பலிக்குதோ இல்லையோ புதுசு புதுசாய் தேடுங்கோ ஐடியாக்களை.

வடக்கு குடும்பங்கள் தொலைந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களை பல ஆண்டுகளாகத் தேடுகிறார்கள். அதுகுறித்த இன்னும் ஒரு  விளக்கமுமில்லை.  புதுசாய் ஒரு பிரச்சனையை கண்டு பிடிச்சிட்டார்.

 

  • தொடங்கியவர்

அதிகார பகிர்வு யோசனையை மாத்திரம் உடன் கைவிடுங்கள்

5-614dccb1f3dda93facdb87b0f72b4e34c3c28e1b.jpg

 

ஐ.தே.க.விடம் நேர்மையில்லை; மஹிந்த குற்றச்சாட்டு 
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

நாம் இனவாதிகள் அல்ல. அவ்வாறான இடத்தில் வைத்து எம்மை பார்க்க வேண்டாம். இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும். அதிகாரம் பகிரப்பட வேண்டும். இதனால் வடக்கிற்கு பிரயோசனம் இருக்  

கும். எனினும் இதனால் அப்பகுதியில் வாழும் ஏனைய குழுக்க ளுக்கு அநீதி ஏற்படும். இதன்படி தற்போது நாட்டில்

அனைத்து மக்களிடையும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் புதிய அரசியலமைப்பிற்கான தருணம் இதுவல்ல. ஆகவே அதிகார பகிர்வு யோசனையை மாத்திரம் உடன் கைவிடுங்கள். தேர்தல் மற்றும் ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை செய்யுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

அத்துடன் தேசிய பிரச்சினை விடயத்தில் நாம் நேர்மையாகவே தொடர்ந்து செயற்பட்டோம். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் நேர்மையில்லை. நாம் தீர்வு திட்டம் கொண்டு வந்த போது எதிர்ப்பினை வெளியிட்டனர். எனினும் நாம் நேர்மையாக அரசியலமைப்பு பணிகளில் கலந்து கொண்டுள்ளோம். மேலும் புதிய அரசியலமைப்புக்கான வாக்கெடுப்பின் போது உறுப்பினர்களுக்கு மனசாட்சியுடன் வாக்களிக்க இடமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சபையில் நேற்று வியாழக்கிழமை இடைக்கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறக்ணடவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் சந்தேகம் மேலோங்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஜனநாயகம் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்ந்தும் தாமதம் செய்யப்படுகின்றது. மாகாண அதிகாரத்தை கோருவோர் தற்போது கிழக்கு மாகாண சபை, ஆளுநரின் கைவசம் சென்றுள்ளமை தொடர்பில் பேசுவதில்லை. இன, மதங்களுக்கிடையில் என்றுமில்லாத அளவிற்கு சந்தேகமும் முரண்பாடுகளும் தலைதூக்கியுள்ள நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குதவதற்கு இது உரிய தருணம் அல்ல.

புதிய அரசியலமைப்புக்கான பணிகள் சுமார் 20 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறு உப குழுக்கள் நிறுவப்பட்டன. அத்துடன் தற்போது இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் சபைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

நேர்மையான போக்கு

இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டில் நாம் நேர்மையான முறையிலேயே செயற்பட்டோம். இதன்பிரகாரமே அரசியலமைப்பு சபையில் இணைந்தோம். வழிநடத்தல் குழுவிலும் அங்கம் வகித்தோம். தேசிய பிரச்சினை விடயத்தில் நாம் எப்போதும் நேர்மையுடனே செயற்பட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியிடமே நேர்மை இருக்கவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாம் திட்டமிட்டு செயற்பட்டோம். யுத்தம் நிறைவடைந்த போது சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டது. வடக்கு மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். எனினும் அப்போது புலம் பெயர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் எமக்கு ஆதரவு வழங்கவில்லை.

நாம் இதற்காக தெரிவுகுழுவினையும் நியமித்தோம். எனினும் அதில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் நேர்மை இல்லை. அத்துடன் சந்திரிக்கா அம்மையார் தீர்வு திட்டபொதி கொண்டு வந்த போது ஐக்கிய தேசியக் கட்சியினர் அந்த ஆவணத்தை பாராளுமன்றத்தில் எரித்தனர். எனினும் நாம் எரிக்கவில்லை. நேர்மையாக கலந்து கொண்டோம். இதன்போது எமது கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டு அறிக்கையை முன்‍வைத்தோம். எனினும் அரசியலமைப்பு செயற்பாடுகளில் எமக்கு சந்தேகம் உள்ளது.

யோசனைகள் நிராகரிப்பு

அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என கூறினர். எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினை சமர்ப்பித்து அதிகாரத்தை குறைத்தனர். எனவே இதனை நாம் மோசடி என்றே கூற வேண்டும். இந்நிலையில் மக்கள் மத்தியில் சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இந்த அரசியலமைப்பு செயல் முறை என்ன? எப்படி பட்டது?. நாம் உப குழுவிலும் கலந்து கொண்டோம். எமது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று படுபாடுபட்டனர். ஆனாலும் எம்மவர்களின் யோசனைகள் எதனையும் உள்ளடக்கவில்‍லை. எனினும் நாம் தொடர்ந்து அரசியலமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றோம்.

அநீதி

எனினும் அரசியலமைப்பு சபையில் வழங்கப்படும் காலத்தை பார்க்கும் போது அதிலும் எமக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. இதன்படி இன்றைய கூட்டதொடரை பார்த்தேன். முதலில் ஆளும் கட்சியினர் பேசினர். அதன்பின்னர் எதிரணி சார்பாக கூட்டமைப்பினர் பேசினர். அதன்பின்னர் ஆளும் கட்சி ஒருவர். மீண்டும் எதிரணி சார்ப்பாக மக்கள் விடுதலை முன்னணி ஒருவர் பேசினர். அதன்பின்னரே எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன்படி எமக்குதான் அதிகளவிலான பிரதிநிதித்துவம் எதிரணியில் உள்ளது. எனினும் நல்லாட்சியிலும் அநீதியே இழைக்கப்படுகின்றது.நான் நேற்று வந்திருந்தேன். எனினும் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இல்லாத பிரச்சினையின் தோற்றம்

இந்நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். இதனால் ஐக்கியமாக வாழும் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. பெளத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படும் போது ஏற்படும் நிலைமை என்னவாகும். இல்லாத பிரசசினையே உருவாகும். நாம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரும் போது நாட்டை பிளவுப்படுத்த முனைய வில்லை. மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழும் வகையிலான சூழலை உருவாக்கவே முனைந்தோம். எனினும் அதற்கு இடமளிக்கவில்லை.

மக்கள் ஆணையில்லை

அத்துடன் புதிய அரசியலமைப்பிற்கான பணிகளை முன்னெக்கின்றனர். என்றாலும் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இல்லை. பொது கூட்டத்தில் ஒன்றை தெரிவித்தாலும் தேர்தல் கொள்கையில் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே கூறினர். புதிய அரசியலமைப்பு உருவாக்க போவதாக கூறவில்லை. எனவே இதற்கு மக்கள் ஆணை இல்லை. முன்னைய காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கும் போது சிறிமாவோ பண்டாரநாயக்கவும், ஜே.ஆர்.ஜயவர்தனவும் தமது தேர்தல் கொள்கையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்க போவதாக தெளிவாக குறிப்பிட்டனர். அந்த காலப்பகுதியில் நானும் வாசுதேவ நாணயக்கார எம்.பியுமே இருந்தோம். அதன்படி மக்கள் ஆணை வழங்கினர். ஆனால் இந்த அரசாங்கம் தேர்தல் கொள்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவாதாகவே குறிப்பிட்டது. அத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத அரசியலமைப்பினை செய்ய மாட்டேன் என்று ஜனாதிபதி தேர்தல் கொள்கையில் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பினை கொண்டு வர மக்கள் ஆணை இல்லை.

மாகாணங்களுக்கு அதியுச்ச அதிகாரம்

அத்துடன் தற்போதைய இடைக்கால அறிக்கையின் படி பார்க்கும் போது பாராளுமன்றத்தை விடவும் மாகாணத்திற்கு அதிகளவில் அதிகாரம் வழங்கவே திட்டமிட்டுள்ளனர். இதன்படி காணி, பொலிஸ், நிதி தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் மாகாண சபைக்கே செல்லும். இதன்படி மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மீள பெறமுடியாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி பார்க்கும் போது இனிமேல் பாராளுமன்றத்திற்கு வேலை இல்லை. மாகாணத்திற்கான அதிகாரத்தை மீள பெறுவேண்டுமானால் மாகாண அங்கீகாரம் வேண்டும். அத்துடன் தற்போது பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் பிரயோசனமில்லை. மாகாண சபைக்கே போட்டியிடவேண்டும். அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியினர் கிராமத்திற்கு வேலை செய்வதற்காக அதில் போட்டியிடுவர். ஏனெனில் தற்போது வேலை செய்ய முடியாத காரணத்தினால் மாகாண சபைகளில் போட்டியிடுவர்.

ஐ.தே.கவின் அறிக்கை

இந்நிலையில் தற்போது பெளத்த சங்கபீடம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்ட வண்ணமுள்ளனர். இதன்காரணமாகவே அரசியலமைப்பு தொர்பான அறிக்கை வெளியாவதற்கு இவ்வளவு காலம் எடுத்தது. அத்துடன் தற்போது இடைக்கால அறிக்கையை பார்க்கும் போது 15 பேர் மாற்றுயோசனைகைளை முன்வைத்துள்ளனர். இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்தது. ஹெல உறுமய முன்வைத்தது. எனவே பெரும்பாலானோர் இடைக்கால அறிக்கைக்கு இணக்கப்பாடு இல்லாத மாற்று யோசனைகளை முன்வைத்தனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவில்லை.இதன்படி பார்க்கும் போது இது ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனை என்றே எம்மால் கூற முடியும்.

ஐந்தாம் ஷரத்தின் பாரதூரம்

அத்துடன் இடைக்கால அறிக்கையின் ஐந்தாம் ஷரத்தினை பார்க்கும் போது இது மிகவும் பாரதூரமானது. இதன்படி தேசத்தின் எல்லையை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரம் சர்வதேசத்திற்கு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசியலமைப்பிலும் இல்லை. புதிய ஒரு விடயமாகும். இந்த ஷரத்தானது மிகவும் பாராதூரமாகும். எனவே இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன்.

வடக்கு -கிழக்கு இணைப்பு

எனினும் நான் அதிகார பகிர்வு யோசனை ஏற்கின்றேன்.இதன்மூலம் வடக்கு மாகாணத்திற்கு பிரயோசம் உள்ளது. எனினும் இதனால் ஏனைய இன தரப்பினருக்கு ஏற்படுவது பெரும் அநீதியாகும். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு விடத்தில் கிழக்கு மாகாணத்தின் அபிப்பராயம் அவசியமாகும். நான் பிரத்தியேகமாக முஸ்லிம்களுடன் பேசினேன். இதன்போது வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அவர்கள் இணக்கமில்லை. இது தொடர்பில் முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடு எவ்வாறு என்று தெரியாது. எனினும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராகவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. யுத்த காலத்தின் போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களை இராணுவமே பாதுகாத்தது. அது முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும். ஏனெனில் தமிழ் இனவாத சிந்தனை கொண்டவர்களினால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். எனவே வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் இணக்கம் இல்லை.

ஹிஸ்புல்லாஹ்விற்கு மஹிந்த பராட்டு

இதன்போது ஹிஸ்புல்லாஹ் எம்.பி எழுந்து வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நாம் ஆதரவு இல்லை என கூறிய போது, கூட்டு எதிர்கட்சியினர் கைதட்டி வரவேற்றனர். மஹிந்த ராஜபக்ஷவும் நன்றி கூறினார்.

மனோவையும் பாராட்டிய மஹிந்த

இதனையடுத்து தனது உரையை தொடர்ந்த மஹிந்த ராஜபக்ஷ,

அத்துடன் இவ்வாறு மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிரப்படும் போது மலையக தமிழர்களின் நிலைமை என்னவாகும். அவர்கள் எப்போதும் மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர்கள். இவ்வாறான நிலைமை ஏற்படுமாயின் மலையக தமிழர்களின் சிக்கல் நிலையை பார்க்க எவரும் இல்லை.அவர்களின் துயரங்களை எவரும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள் என கூறியதனை அடுத்து, அமைச்சர் மனோ கணேசன் எழுந்து நாங்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றோம் என்றார். இதன்போது மஹிந்த ராஜபக்ஷ நன்றி கூறி தனது உரையை தொடர்ந்து பேசுகையில்,

எனவே பாருங்கள். இவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும் போது எப்படி இதனை சாதகமாக மாற்ற முடியும். இதனை பற்றி அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

13 பிளஸ்

அத்துடன் நான் 13க்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவதற்கு சம்மதித்து இருந்ததாக கூறினர். எனினும் 13 க்கு அப்பால் என்றதன் அர்த்தம் நாட்டை பிளவுப்படுத்துவது அல்ல. இரண்டாம் சபையாகும். மாகாணத்தில் இருக்கும் பிரச்சினை தீர்க்க மத்திய அரசுடன் இணைந்து செயற்படும் பொறிமுறையே அதுவாகும். எனினும் அப்போது பிரச்சினை தீர்க்க அன்று முன்வந்திருந்தால் அநீதி ஏற்படாமல் இருந்திருக்கும். அந்த தருணம் சிறந்ததாகும். ஏனெனில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏற்பட்ட சிறந்த சந்தர்ப்பமாகும். எனினும் நாம் அரசியல் தீர்வுக்கு அப்பால் அப்போது வடக்கில் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைத்தோம். அனைத்து வசதிகளை வழங்கினோம். அபிவிருத்தியை அங்கு கொண்டு சென்றோம். கல்வி, சுகாதார வசதிகளை வழங்கினோம். அதுமாத்திரமின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரை நாம் புனர்வாழ்வளித்து விடுவித்தோம். எனவே நாம் இனவாதிகள் அல்ல. அவ்வாறான இடத்திற்கு எம்மை தள்ளிவிட வேண்டாம். மத்திய அரசாங்கத்துடன் பேசுவதற்கான சந்தர்ப்பமாக இரண்டாம் சபை சிறந்ததாகும். எனினும் தற்போது உருவாக்க முனையும் இரண்டாம் சபை முற்றிலும் வேறுப்பட்டது. எமக்கு அன்று இலக்கொன்று இருந்தது.

அத்துடன் இந்தியாவில் அதிகளவிலான தமிழ் மக்கள் வாழும் இடமாக தமிழ் நாட்டை குறிப்பிட முடியும். எனினும் இங்கு அப்படியில்லை. வடக்கிலா பெரும்பான்மை தமிழ் மக்கள் உள்ளனர். வடக்கு மாகாணத்திற்கு வெளியே தமிழர்கள் பெரும்பான்மையினர் உள்ளனர். அதேபோன்று முஸ்லிம்களும் நாட்டில் பரவலாக இருந்தனர். எனவே இதனை நாம் சிந்திக்க வேண்டும்.

இனவாத நோக்குடன் சுய நிர்ணய கோரிக்கையினால் அங்குள்ள ஏனைய இனதரப்பினருக்கு ஏற்பட போவது பெரும் அநீதியாகும். எனவே அதிகார பகிர்வதற்கான முயற்சியை உடன் நிறுத்தி விட்டு தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இரு திருத்தங்களை மாத்திரம் செய்ய வேண்டும். ஏனெனில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான தருணம் இதுவல்ல. இதன்படி தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும். அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடு இல்லை. ஆகவே முதலில் அரசாங்கம் பொது இணக்கப்பாட்டு வர வேண்டும். அதன்பின்னர் எம்முடைய தீர்மானத்தை நாம் குறிப்பிடுவோம்.

எனவே எமக்கு பல சிக்கல் நிலை உள்ளன. இதன்படி மாகாண , உள்ளூராட்சி மன்ற விடயங்களிலும் அரசாங்கம் முன்னெடுத்த அணுகுமுறை புதிய அரசியலமைப்பிலும் இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடையேயும் பிக்குகளிடையேயும் எமக்கும் உள்ளது.

அத்துடன் அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 40 பேர் வரை உள்ளனர். புதிய அரசியலமைப்புக்கு வாக்களிக்கும் போது எதிர்த்து வாக்களிக்கவும் முடியும். எமது பக்கம் வர முடியும். வாக்களிக்காமல் இருக்கவும் முடியும். எனவே நாம் அரசாங்கத்திடமும் அவை தலைவரிடம் கோருவது உறுப்பினர்களுக்கு மனசாட்சியின் பிரகாரம் வாக்களிக்க இடமளிக்க வேண்டும். அந்த தீர்மானத்தை எடுங்கள். எமது கட்சியில் 55 பேர் உள்ளனர்.அதுதான் உண்மையான எதிர்க்கட்சியாகும். எனினும் எமது கட்சியிலும் அரசியலமைப்புக்கு ஆதரவளித்தால் எமக்கு பிரச்சினை இல்லை. மனசாட்சி படி வாக்கு அளிக்க இடமளிக்க வேண்டும. அதற்கு நாம் இடமளித்துள்ளோம். நாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தை தோற்கடிக்கவே போராடினோம். வடக்கில் மக்கள் அரசியலமைப்பு கோரவில்லை. உணவின்றி கஷ்டப்படுகின்றனர். நஞ்சு உண்டு உயிரிழக்கின்றனர். புதிய அரசியலமைப்பு உருவாக்குவதனையிட்டு நான் கவலை அடைகின்றேன்.

இந்த அரசியலமைப்புக்கான பணிகள் தமக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு கடன் வழங்குவ‍து போன்றதற்கு சமமாகும். இன நல்லிணக்கம் எமக்கு அவசியமாகும். எனவே தேவையற்ற முறையில் மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றார். 

http://epaper.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 2.11.2017 at 11:13 PM, satan said:

 ஏது ஏது இந்த ஓநாய்க்கு இப்போ புதுசா வடக்கு நோக்கி    ஞானோதயம் பிறக்குது. வாள்வெட்டு, கஞ்சா, துப்பாக்கிச்சூடு  என்று குழுக்களை உருவாக்கி அன்றாட வாழ்க்கையை நிம்மதியில்லாமல் அலையவிட்டிட்டு கண்ணீர் வடிக்கிறார். குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, வடக்கையும் குழப்பி, தெற்கையும் பயமூட்டி காரியம் பார்க்க  எப்பிடியெல்லாம் நாடகம் எழுதி நடிக்கிறார்கள். தொலையமுதல் ஏதாவது செய்யுங்கள். பலிக்குதோ இல்லையோ புதுசு புதுசாய் தேடுங்கோ ஐடியாக்களை.

வடக்கு குடும்பங்கள் தொலைந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களை பல ஆண்டுகளாகத் தேடுகிறார்கள். அதுகுறித்த இன்னும் ஒரு  விளக்கமுமில்லை.  புதுசாய் ஒரு பிரச்சனையை கண்டு பிடிச்சிட்டார்.

 

நஞ்சருத்தக்காரணமே தான்தானென்பதை  மறந்தவிட்டாரோ!

ஒரு தமிழினப்படுகொலையாளனின் அக்கறையா? அரசியல்தீர்வுத்திட்டமானது துளியளவிலாவது தமிழருக்குப்போகக்கூடாதென்ற அக்கறை. எப்படி ஈழச்சிங்களத்தலைமைகளுக்கு இப்படியொரு துணிவு. தமிழரை அழிப்பது. அவர்களிடம் வாக்குக்கேட்பது. ஆட்சியமைப்பது. கொல்வது. இவர்களுக்கு துளியளவாவது மனச்சாட்சியிருக்கிறதா? இத்தனை அழிவுகளையும் துன்பத்தையும் துயரத்தையும் அழிவுகளையும் விதைத்தோமே அதற்கொரு பிராயச்சித்தம் செய்யுமெண்ணம் உள்ளதா? 
வெற்றிமமதையின் வார்த்தைகளே. இன்றைய இந்த அத்தனை துயரநிலையினதும் கதாநாயகனே தானென்பதை அடிக்கடி மறந்துபோகின்றார். 2006லே ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டு இனஅழிப்பை மேற்கொண்டு துயரத்தைவிதைத்தவனே தானென்பதை நினைவூட்டவேண்டியுள்ளது. 


சிறந்த நிர்வாகத்தோடு தமது சக்திக்கப்பாற்ப்பட்டு பிச்சைகாரர்களென்றில்லாத தேசமாக வைத்திருந்தவர்களைக் கொன்றொழித்துவிட்டு, இப்போது ஒரு அரைகுறைத் தீர்வையே ஏனென்று கேட்கும் இவரொரு சனாதிபயாக இருந்தவரா என்று சிந்திக்கவேண்டிள்ளது. தமிழினத்தை ஏழ்மையில் தள்ளிக் கடன்காரராக்கிவிட்டதோடு வெளிநாட்டுச் சுரண்டலாளர்களுக்குக் கட்டுபாடற்றுச் சந்தையைத் திறந்துவிடப்பட்டிப்பதன் விளைவே. இதனையே இந்தநாடுகளும் விரும்பின. தமது பையைநிரப்பிக்கொள்ள. சீ! வெட்கம் கெட்ட நாடுகள். தமிழரது குருதியில் தமது வளம் தேடும் நாடுகள். வந்தேறுகுடிகளான நீங்கள் எமது தேசத்தை விட்டுவெளியேறினாலேபோதும். எமது மக்கள் தம்மை எப்படி வளப்படுத்துவதென்பதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.    
 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சித்த சுவாதீனமற்றவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு எப்படி வெட்கம் வரும்? எங்களை  கொலை செய்தவனுக்கு நாங்களே பிரதியீடாக  எதையும் கேட்க்காமலே தேர்தலில்  வாக்கு கேக்கிறோம், போடுறோம். சர்வதேசத்திடம் அவனுக்காக வாதாடுகிறோம்  பின் கைகூப்பி பிச்சை கேக்கிறோம். வெட்க உணர்வை விட அவன் செய்வது எல்லாம் சரி என்றே சொல்லாமல் சொல்லுகிறோம். எங்களுக்கும் வெட்கமில்லை, அவனுக்கும் குற்ற உணர்வில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.