Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை!

Featured Replies

  • தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை!
தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை!
 
 

தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை!

 

ஆயு­தங்­கள் மௌனிக்­கப்­பட்­ட­வு­டன் தனி­நாட்டுக் கோரிக்­கை­யும் அத்­து­டன் மௌனிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். அந்த எண்­ணத்தைச் சிலர் இன்­ன­மும் தம் உள்­ளங்­க­ளில் சுமந்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள். அத­னால் நாட்டு மக்­க­ளி­டையே சுமுக உறவு ஏற்­பட முடி­யாது.

இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

வடக்கு முத­ல­மைச்­சர் நேற்று அனுப்­பி­யுள்ள கேள்வி – பதில் வடி­வி­லான ஊடக அறிக்­கை­யில் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

“எமது மக்­கள் தனி­நாடு கோரு­வ­தை­யும், அதற்­காக உணர்ச்சி மேலிட உரத்­துக் கத்­து­வ­தை­யும் இனி நிறுத்த வேண்­டும். அப்­ப­டி­யான கருத்­துக்­கள் அர­சைப் பல­ம­டை­யச் செய்­யுமே தவிர எம்­மு­டன் சுமு­க­மாக நடத்து கொள்ள உத­வாது.”- என்று அவர் அந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்ளார்.

வடக்கு -– கிழக்கு இணைப்பு என்­பது தனி­நாட்டை உரு­வாக்க நாம் செய்­யும் சதி என்று அரசு பிற நாடு­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்­குக் கூறு­கின்­றது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கருத்­துக்­கள் வடக்கு – கிழக்கு இணைப்­புக்கு எதி­ரா­கவே இருக்­கின்­றது.

தனி­நாடு என்­பது பிற வல்­ல­ர­சு­க­ளின் தய­வு­டனே இயற்­றப்­பட முடி­யும். நாம் கேட்­டுப் பெறக் கூடி­ய­தல்ல. அடித்­துப் பறிக்­க­மு­டி­யும் என்ற கருத்­தும் அண்­மை­யில் மௌனிக்­கப்­பட்­டு­விட்­டது. தனித்து நாம் வாழ முற்­பட்­டால் பிற நாடு­க­ளின் சார்­பா­ன­வர்­க­ளா­கவே மாற வேண்­டும்.

 

மாறாத பகை­மையை சிங்­கள சகோ­த­ரர்­க­ளு­டன் பாராட்ட வேண்­டிய நிலை ஏற்­ப­டும். தனி­நாட்­டுக் கோரிக்­கை­யால் நாட்டு மக்­க­ளி­டையே சுமுக உறவு ஏற்­பட முடி­யாது என்­பதை எம்­ம­வர்­கள் ஆய்ந்­து­ணர வேண்­டும்.

எமது மக்­கள் வெளி­நா­டு­க­ளில் இருந்து கொண்டு எமது நிலை­ய­றி­யாது பேசு­வதை நிறுத்த வேண்­டும். இங்கு இன ஒன்­றுமை வளர இடம்­கொ­டுக்க வேண்­டும் என்­றும் அவர் அந்த அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

அதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை இலங்­கைக்­கான ஆஸ்­தி­ரே­லி­யத் தூது­வர் சந்­தித்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

அந்­தச் சந்­திப்­பில் வடக்கு முத­ல­மைச்­சர், “ஆஸ்­தி­ரே­லியா போன்ற கூட்­டாட்சி அதி­கா­ரப் பகிர்­வையே தமிழ் மக்­கள் கோரு­கின்­ற­னர். அதை தமி­ழர்­க­ளுக்கு வழங்­கி­னால் தனி­நா­டா­கப் பிரிந்து சென்று விடு­வார்­களோ என்ற ஐயப்­பாடு தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் உண்டு. கூட்­டாட்­சித் தீர்வை வழங்­காது விட்­டால் தனி­நாடு கோரும் அவ­சி­யம் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­ப­டும்.”- என்று ஆஸ்­தி­ரே­லி­யத் தூது­வ­ரி­டம் கூறி­யி­ருந்­தார்.

http://newuthayan.com/story/52048.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரின் தலைமைத்துவம் நீடித்து மக்களுக்கு விடிவு பிறக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Jude said:

முதலமைச்சரின் தலைமைத்துவம் நீடித்து மக்களுக்கு விடிவு பிறக்க வாழ்த்துக்கள்.

முதலமைச்சரின் தலைமைத்துவத்தை... உங்களுக்கு பிடிச்ச எந்த தலைமைத்துவம் வாழ வைக்க வாய்ப்பிருக்கு எண்டு நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் பெரியவரே?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, valavan said:

முதலமைச்சரின் தலைமைத்துவத்தை... உங்களுக்கு பிடிச்ச எந்த தலைமைத்துவம் வாழ வைக்க வாய்ப்பிருக்கு எண்டு நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் பெரியவரே?

மற்ற தலைமைத்துவங்களில் தங்கி வாழும் தலைமைத்துவம் முதலமைச்சரின் தலைமைத்துவமல்ல சிறியவரே!

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Jude said:

மற்ற தலைமைத்துவங்களில் தங்கி வாழும் தலைமைத்துவம் முதலமைச்சரின் தலைமைத்துவமல்ல சிறியவரே!

மற்ற தலைமைத்துவங்களில் தங்கித்தான் , மற்ற தலைமைத்துவங்கள் ஏற்படுத்தித்தான் இந்த முதலமைச்சரே உருவானார் என்பது கேள்விப்பட்டதுண்டா மேன்மை தங்கியவரே?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகம் மக்கள் ஆட்சியைக் கொண்டிருந்தாலும்... ஆட்சியின் தலைமைக்கு வருபவர் ஒரு நல்ல சர்வ அதிகாரம் கொண்டவராக இருந்தால் மட்டுமே மக்களைப் பாதுகாப்பாக வாழவைக்க முடியும் என்பதைச் செயல்முலம் காட்டியவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இன்று அவர்போன்ற ஒருவர் இல்லாத நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இன்று தலைவர்களாக வந்தவர்கள்... எப்படிச் சிதறுண்டு தன்னலம் மட்டுமே கருத்தாகக் கொண்டு விலைபோகின்றனர் என்பதைக் கண்ணூடாகக் காண்கிறோம். இந்நிலையில் தமிழீழம் கிடைத்தால் அது குரங்கின்கை கிடைத்த பூமாலைபோல் ஆகிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஒரு நல்ல தலைமை தமிழர்களுக்கு ஏற்படும் வரையில்.... தனி­நாட்டுக் கோரிக்­கை­பற்றி முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேசு­வ­ரன் அவர்களின் கூற்று வரவேற்கக் கூடியதே.
 

  • கருத்துக்கள உறவுகள்

மணி கட்டின மாடுகளும் எங்கள் மத்தியில் வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாடு என்பது எமது இலக்கோ..... விருப்போ .... இல்லை 
இறுதி வழி அதுதான்.

யூத குடியிருப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது 
2 நாள் முன்பு கூட ஒரு பாலஸ்தீனிய விவசாயி இஸ்ரேலிய ஆக்கிரபிப்பு படையால் 
கொல்லப்பட்டு இருக்கிறார் இன்று அவருடைய நிலம் ஆக்கிரமிக்க பட்டு இருக்கிறது.
உங்கள் கண் முன்னேதான் இவை நடை பெறுகிறது.

பாலஸ்தீனத்தின் எதிர்காலம் என்ன ?
1993 பாலஸ்தீனியர்கள் நயவஞ்சக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடத்தில் இருந்து 
இட்ட அரபாத்தே வீட்டுக்காவலில் இருந்துதான் இறந்தார். 30 வீதமான நிலம் பறி போய்  இருக்கிறது 
மிகவும் கேந்திர முக்கியமான நிலப்பரப்புகள். பாலஸ்தீனம் முழு சுதந்திர நாடு ஆனால் கூட இனி 
இயங்க முடியாத பிரதேச வடிவாக மாறி இருக்கிறது.

ஜேசுவிடமும் ஒரு கொள்கைளை இருந்தது 
பிரபாகரனிடமும் ஒரு கொள்கை இருந்தது 
ஜேசுவை ஏற்றுக்கொண்ட பல தமிழ் கிறிஸ்தவர்கள் 
பிரபாகரனுக்கு விசுவாசமாக இருந்து உயிரையும் விட்டு  இருக்கிறார்கள்.
இறுதிவரை அவர்கள் ஜேசுவின் கொள்கை தவறு என்று சொன்னதாக நான் 
கேள்விப்படவில்லை. அவர்கள் என்ன சொல்ல முனைந்தார்கள் என்பதுதான் 
யதார்த்தமான இந்த உலகு! 

நீங்கள் தட்டி கேட்க்கிறீர்களோ ?
மவுனித்து படுக்கிறீர்களோ  ?
உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது உங்களை மட்டும் பொறுத்தது அல்ல 
நீங்கள் யாரிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் பொறுத்தது.

அரசியல்வாதி என்பவன் அல்லது ஒரு போராளி என்பவன் காத்திருப்பவன் அல்ல 
தனக்கான காலத்தையும் ..... சூழ்நிலையையும் உருவாக்குபவன்தான் சிறந்த அரசியல் போராளி.

விவாகரத்து செய்பவர்கள் பலர் 
இன்னொரு பெண்ணுடன் அல்லது ஆணுடன் கூடி பின்னாளில் 
மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் பெண்ணுடன் வாழ முடியாது என்று விவாகரத்து கோரவில்லை 
"இந்த" பெண்ணுடன் வாழ முடியாது என்றுதான் விவாகரத்து கோரினார்கள். 

இங்கு சேர்ந்து வாழ்தலில் பிரச்ச்னை இருக்கவில்லை 
யாருடன் வாழ்வது என்பதில்தான் பிரச்சனை இருந்தது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.