Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு

Featured Replies

மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு

 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி  காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/archives/53078

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு நாளும் ஆவா வை பிடிக்கிறன் வாள்வெட்டு குழுவை பிடிக்கிறம் என்று ஆரை பிடிச்சு உள்ள போட்டாங்களோ இந்த சொரிலங்கன் போலிஸ் கூட்டம் .

  • தொடங்கியவர்

யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

valvettu.jpg

மீசாலை கிழக்கு - மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

 

அதனையடுத்து அதே வாள் வெட்டுக் குழுவினர் மீசாலை மாவடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் “கரம் ”விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது  வாள்களால் வெட்டிவிட்டு அங்கிருந்தது தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதன்போது மீசாலை மேற்கைச் சேர்ந்த அல்பிரட் டிலச்சன் (17) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

 

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.virakesari.lk/article/27853

  • தொடங்கியவர்
“ஆவா”வை அடுத்து ”அஜித்” குழுவின் அட்டகாசம்
 

image_3d79d6b190.jpgயாழ்ப்பாணம்-மீசாலை பிரதேசத்தில் இரண்டு பேர் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று (4) இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்த இரண்டு இளைஞர்களும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான செல்வராஜ் கஜீவதன் மற்றும் 17 வயதான அல்பட் அலெக்ஸ் ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன்,சாவகச்சேரியில் இயங்கிவரும் “அஜித்” குழுவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று(4) பகல் 11.15 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம்(5) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆவா-வை-அடுத்து-அஜித்-குழுவின்-அட்டகாசம்/71-208425

  • கருத்துக்கள உறவுகள்

 எய்தவனை விட்டிட்டு அம்பை பிடித்தால்??? ஒரு தமிழ் இளைஞனும் இல்லாமல் போகும் வரை உந்த ஆவா குரூப்  வாள்வெட்டு தொடரும் கண்டியளோ. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நவீனன் said:

யாழில் வாள்வெட்டு......

யாழ்ப்பாண பக்கம் போறபோக்கை பாத்தால்....
"யாழில் வாள்வெட்டு" எண்டொரு தனித்திரியே திறக்கலாம் போலை கிடக்கு...tw_confused:

On 12/5/2017 at 5:42 AM, பெருமாள் said:

அப்ப இவ்வளவு நாளும் ஆவா வை பிடிக்கிறன் வாள்வெட்டு குழுவை பிடிக்கிறம் என்று ஆரை பிடிச்சு உள்ள போட்டாங்களோ இந்த சொரிலங்கன் போலிஸ் கூட்டம் .

சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் வட-கிழக்கில் உள்ளவரை இது போன்ற சமூகவிரோத கும்பல் இயங்கிக் கொண்டே இருக்கும்.

இது இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் என்று சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தயாரித்து வெளிவிட்ட "பேஸ்-புக்" நாடகம் பிசுபிசுத்த நிலையில், இப்போது பழியை சுவிஸ் கும்பல் மீது போட நினைக்கிறது.

8 hours ago, போல் said:

"பேஸ்-புக்" நாடகம் பிசுபிசுத்த நிலையில்

அது அரைகுறையாக கொச்சைத்தமிழில் இருந்த போதே அது சொறிலங்கா அரசின் ஒரு நாடகம் என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.