Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

Featured Replies

சாதனை படைத்த,  சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சாதனை படைத்த தமிழ் மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
 

சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

சாதித்துக்காட்டிய பழுகாமம் மாணவன் -பெருமைகொள்கின்றது படுவான்கரை

 

சாதித்துக்காட்டிய பழுகாமம் மாணவன் -பெருமைகொள்கின்றது படுவான்கரை

எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்கமுன்வரவேண்டும் என கா.பொ.த.உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தெரிவித்தார்.மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இருந்து முதன்முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தினை உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மாணவன் துதிசான் படைத்துள்ளார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் மூன்று பாடங்களில் பீ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாதாரணதரம் கற்றதுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாயத்தில் உயர் கல்வியையும் கற்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த அவர்,எதிர்காலத்தில் தமது சமூகத்திற்கு சிறந்த கல்வியினையும் சேவையினையும் வழங்கும் வகையில் ஒரு விரிவுரையாளராக வருவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்..

தான் எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்தபோதும் எனது இலக்கு கல்வியி; உச்ச நிலையினேயே அடையவேண்டும் என்பதாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

DSC06825DSC06829DSC06831

http://www.samakalam.com/செய்திகள்/சாதித்துக்காட்டிய-பழுகா/

  • கருத்துக்கள உறவுகள்
கல்விப் பொது தராதரப் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவர்கள்!

 

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவர்கள்!

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்,புனித மைக்கேல் கல்லூரி மாணவனான ராஜன் திபிகரன் ஆங்கில மொழிமூல விஞ்ஞானப்பிரிவில் முதல்நிலை பெற்றதோடு, மாவட்டத்திலும் முதல்நிலை பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

மட்டு.புனித மைக்கல் கல்லூரி மாணவன் சிவா மிதுசனன் எனும் மாணவன் இரு பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்று மாவட்டத்தில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா வணிகப் பிரிவில்,மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் உயிர்முறை தொழில்நுட்பவியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் பீ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த மீரா முகைதீன் அகமட் அபாஸ் எனும் மாணவன் விஞ்ஞானப்பிரிவில்,இப்பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 3ஏ சித்தி பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகி,சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Students-rank-in-Batticaloa-district

 

 

விசேட வைத்திய நிபுணராக வவுனியாவில் கடமையாற்ற வேண்டும் :சுந்தர் சுகிர்தன்!

 

விசேட வைத்திய நிபுணராக வவுனியாவில் கடமையாற்ற வேண்டும் :சுந்தர் சுகிர்தன்!

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த சுந்தர் சுகிர்தன் மாவட்ட மட்டத்தில் விஞ்ஞான பிரிவில் 3 ஏ பெற்று முதலிடம் பெற்றுள்ளாா்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்....

நான் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் 97 புள்ளியை பெற்று சித்தியடையவில்லை. அதே போன்று சாதாரண தர பரீட்சையிலும் 07ஏ சித்திகளையே பெற்றிருந்தேன். எனினும் விடா முயற்சி என்னிடம் காணப்பட்டது.

விஞ்ஞான பிரிவை கற்க சென்றபோது விஞ்ஞான பிரிவிலா கற்கப்போகின்றாய் என கேட்டார்கள். எனினும் எனக்கு நம்பிக்கை இருந்தது.

மாவட்ட ரீதியில் இடம்பெற்ற பரீட்சையில் 05ம் இடத்தை பெற்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதில் இருந்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் கற்று இன்று முதலாம் இடத்தை பெற்றுள்ளேன்.

இதற்கு உறுதுனையாக இருந்த பாடசாலை முன்னாள் அதிபர் த.அமிர்தலிங்கம்,அதற்போதைய அதிபர்,ஆசிரியர்கள்,எனது குடும்பத்தினர் மற்றும் சிரேஸ்ட மாணவர்களிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தோடு நான் விசேட வைத்திய நிபுணராக வவுனியா வைத்தியசாலையில் சேவை செய்வதோடு என்னை கல்வியில் இவ்விடத்தை அடைய உதவிய என் பாடசாலையை அபிவிருத்தி செய்வதோடு என் குடும்பத்தையும் பார்ப்பேன்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியலத்தை சேர்ந்த கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவரக்கான பல்கலைக்கழக செலவினை பொறுப்பெடுப்பதாக வடமாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் படி இன்று மாவட்டத்தில் விஞ்ஞான பீடத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றந சுந்தர் சுகிர்தனிற்கு நேரில் சென்றுவாழ்த்து தெரிவித்ததோடு அவரின் பல்கலைக்கழக் செலவு அனைத்தையும்தான் பொறுப்பெடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/al-result-in-vavuniya-student-sukirthan

  • தொடங்கியவர்

வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், இரு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவாகியுள்ளார்கள்.

 

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி நித்தியானந்தன் சங்கவி 3 ஏ சித்திகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 2017ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்கள் தொடர்பான விபரங்கைளப் பார்க்கலாம்.

 

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த சு.சுகிர்தன் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்.

 

யாழ் சென்.பற்றிக் கல்லூரி மாணவன் கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் 03 ஆம் இடம்

சாதனை படைத்த,  சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரீட்சையில் பங்கெடுத்த எமது மாணவ மணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்ச்சியின் சிறப்பு தமிழ் பிள்ளைகள் நல்ல பெறு பேறு எடுத்துள்ளார்கள் அந்த வகையில் மட்டு மாவட்டத்தில் அதிக தமிழ் பிள்ளைகள் நல்ல பெறு பேறுகளை பெற்றுள்ளார்கள் tw_blush:

  • தொடங்கியவர்
 
சாதனை மாணவனை சந்தித்தார் வடக்கு ஆளுநர்
 
 

சாதனை மாணவனை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

 

ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் பௌதீகவியல் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரனை வடக்கு ஆளுநர் சற்று முன்னர் சந்தித்தார்.

இச் சந்திப்பு மாணவனின் வீட்டில் இடம்பெற்றது. மாணவனைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தனது வாழ்த்துக்கைளைத் தெரிவித்தார்.

அத்துடன் மாணவனின் பெற்றோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும் மாணவனுக்கு அன்பளிப்புச் செய்தார்.

IMG-377b7ffd625507775925e26712c3eded-V.j

IMG-598c983bf926e312e3ad042909b579eb-V.j

http://newuthayan.com/story/58709.html

 

தேசிய ரீதியில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொப்பியடித்து சிக்கிய 205 பேரின் பெறுபேறுகளே இடைநிறுத்தம்

 

கொப்பியடித்து சிக்கிய 205 பேரின் பெறுபேறுகளே இடைநிறுத்தம்

205 பேரின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு அவர்கள் பரீட்சையின் போது கொப்பியடித்தல் என கூறப்படும் பிரதியடித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டமையே காரணமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளத.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் போது அந்த விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அது தொடர்பான விசாரணைகளுக்கு வருமாறு 3 தடவைகள் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் அந்த விசாரணைகளுக்கு வருகை தரவில்லையெனவும் இதனாலேயே அவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -

http://www.samakalam.com/செய்திகள்/கொப்பியடித்து-சிக்கிய-205-ப/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் கலந்து சிறப்பு பெறு பேறுகள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்ற புனித மைக்கேல் கல்லூரி

 

 
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்ற புனித மைக்கேல் கல்லூரி

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் அடிப்படையில் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் பெபேற்றின் அடிப்படையில் 10 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 05மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இவற்றில் கணிதப்பிரிவிலும் விஞ்ஞானப்பிரிவிலும் ஏனைய பாட விதானப்பிரிவிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் நிலையினைப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து கணிததுறையின் வளர்ச்சிக்கு பங்காற்றவிரும்புவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கனித பிரிவில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான சிவா விதுசனன் தெரிவித்தார்.

கடின உழைப்பினை கல்வியில் வெளிப்படுத்துவதன் மூலம் சிறந்த அறுவடையினை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என விஞ்ஞான துறையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் தோற்றி மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட இராஜன் திபிகரன் தெரிவித்தார்.

வித்தியாசமான தெரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வதன் மூலம் சிறந்த அடைவுகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் என ஏனைய துறைகளைக்கொண்ட பாட விதானத்தில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் யோகேந்திரன் தனுஷாந்த் தெரிவித்தார்.

இன்று பாடசாலைக்கு விஜயம் செய்த முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரனும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

DSC07060DSC07061DSC07062

http://www.samakalam.com/செய்திகள்/மட்டக்களப்பு-மாவட்டத்த-21/

  • தொடங்கியவர்
  • பாட­சாலை அனு­மதி மறுத்த மாணவி மாவட்­டத்­தில் முத­லி­டம்
625.0.560.320.160.600.053.800.700.160.90

பாட­சாலை அனு­மதி மறுத்த மாணவி மாவட்­டத்­தில் முத­லி­டம்

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தின் தங்­கா­லைப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மாணவி ஒரு­வ­ருக்கு உயர் தரத்­தில் கல்­வி­யைத் தொடர பாட­சா­லை­யில் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­யா­கத் தோற்றி மாவட்­டத்­தில் முத­லி­டம் பெற்­றுள்­ளார்.

வணி­கப் பிரி­வில் அம்­பாந்­தோட்டை மாவட்டத்­தில் ஹரினி நிஹாரா கஜ­சிங்க என்ற மாண­வியே இவ்­வாறு முத­லி­டம் பெற்­றுள்­ளார்.

தங்­காலை மக­ளிர் மகா வித்­தி­யா­ல­ யத்­தில் கல்வி கற்ற ஹரினி நிஹாரா என்ற மாணவி உயர்­த­ரத்­தில் ஆரம்­பத்­தில் உயி­ரி­யல் பிரிவைத் தெரிவு செய்­துள்­ளார். ஒன்­றரை ஆண்­டு­க­ளின் பின்­னர் உயி­ரி­யல் கற்­கையை தொடர அவ­ருக்குக் கடி­ன­மா­கி­யுள்­ளது. அதன் பின்­னர் வர்த்­தகப் பிரி­வை தெரிவு செய்­துள்­ளார். பாட­சாலை நிர்­வா­கம் அதற்கு அனு­மதி மறுத்­துள் ளது.

இத­னால் உயர் தரப் பரீட்­சையைத் தனிப்­பட்ட பரீட்­சாத்­தி­யா­கவே எதிர்­கொண்­டுள்­ளார். கடந்த 28ஆம் திகதி உயர்­த­ரப் பரீட்­சைப் பெறு­பே­று­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அதில், வணி­கப் பிரி­வில் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தில் முத­லி­டம் பெற்­றுள்­ளார் ஹரினி.

http://newuthayan.com/story/59650.html

  • தொடங்கியவர்

வடமாகாண கல்வி நிலை தொடர்பாக

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • வடக்­கில் 274 மாண­வர்­கள் – 3 பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தரச்­சித்தி
download-1-7.jpg

வடக்­கில் 274 மாண­வர்­கள் – 3 பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தரச்­சித்தி

ஜி.சி.ஈ உயர்­த­ரத்­தில் வடக்கு மாகா­ணத்­தில் இருந்து பாட­சா­லைப் பரீட்­சார்த்­தி­க­ளா­கத் தோற்­றிய 11 ஆயி­ரத்து 591 மாண­வர்­க­ளில் 274 மாண­வர்கள் மூன்று பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தரச் சித்தி பெற்­றுள்­ள­னர். அதேநேரம் 7 ஆயி­ரத்து 925 மாண­வர்­கள் மூன்று பாடங்­க­ளி­லும் சித்­தி­பெற்று பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர்.

அதா­வது 68.37 வீதத்­தி­னர் தகுதி பெற்­றுள்­ள­னர். அதே­நே­ரம் தோற்­றி­யோ­ரில் 816 மாண­வர்­கள் ஒரு பாடத்­தி­லும் சித்­தி­ய­டை­ய­வில்லை.

அண்­மை­யில் வெளி­யான ஜி.சி.ஈ உயர்­த­ரப் பரீட்­சைப் பெறு­பே­று­கள் தொடர்­பான பகுப்­பாய்வு அறிக்கை இலங்­கைப் பரீட்­சைத் திணைக்­க­ளத் தால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் உள்­ள­தா­வது:

நாட­ளா­விய ரீதி­யில் பாட­சாலை மாண­வர்­க­ளின் பரீட்சை பெறு­பே­று­க­ளில் வீத அடிப்­ப­டை­யில் மாகாண நிலை­யில் வடக்கு மாகா­ணம் முத­லாம் இடத்­தை­யும் சப்­பி­ர­க­முவ மாகா­ணம் இரண்­டாம் இடத்­தை­யும் ஊவா மாகா­ணம் மூன்­றாம் இடத்­தை­யும் பெற்­றுள்­ளன.

 

பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளை­யும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின்­படி தேசிய ரீதி­யில் வடக்கு மாகா­ணம் மூன்­றாம் இடத்­தை­யும் சப்­பி­ர­க­முவா மாகா­ணம் முத­லாம் இடத்­தை­யும் ஊவா மாகா­ணம் இரண்­டாம் இடத்­தை­யும் பெற்­றுள்­ளன.

ாாவடக்கு மாகா­ணத்­தில் இருந்து தோற்­றிய பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளை­யும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ரீதி­யில் 13 ஆயி­ரத்து 643 மாண­வர்­க­ளில் 8 ஆயி­ரத்து 956 மாண­வர்­கள் மூன்று பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டைந்­துள்­ள­னர். 65.65 வீத­மா­னோர் சித்­தி­ய­டைந்­துள்­ள­னர்.

மாவட்ட நிலை­யில் தேசிய ரீதி­யில் 25 மாவட்­டங்­க­ளி­லும் மன்­னார் மாவட்­டம் 1ஆம் இடத்­தை­யும், முல்­லைத்­தீவு மாவட்­டம் 5ஆம் இடத்­தை­யும் யாழ்ப்­பாண மாவட்­டம் 9ஆம் இடத்­தை­யும், வவு­னியா மாவட்­டம் 16ஆவது இடத்­தை­யும், கிளி­நொச்சி மாவட்­டம் 21ஆவது இடத்­தை­யும் பெற்­றுள்­ளன.

மன்­னார் மாவட்­டத்­தில் 68.41 வீதத்­தி­ன­ரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 66.47 வீதத்­தி­ன­ரும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 65.88 வீதத்­தி­ன­ரும், வவு­னியா மாவட்­டத்­தில் 64.51 வீதத்­தி­ன­ரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 62.30 வீதத்­தி­ன­ரும் சித்­திய­ டைந்­துள்ள னர். நாட­ளா­விய ரீதி­யில் உயர்­த­ரப் பரீட்­சைக்கு 2 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 330 மாண­வர்­கள் தோற்­றி­யி­ருந்­த­னர்.

மூன்று பாடங்­க­ளி­லும் ஒரு இலட்­சத்து 65 ஆயி­ரத்து 104 மாண­வர்­கள் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­க­ளில் 64.38 வீதத்­தி­னர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். (எ–11)

http://newuthayan.com/story/62855.html

13 hours ago, நவீனன் said:

அதே­நே­ரம் தோற்­றி­யோ­ரில் 816 மாண­வர்­கள் ஒரு பாடத்­தி­லும் சித்­தி­ய­டை­ய­வில்லை.

மிகவும் கவலை தரும் புள்ளிவிபரம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.