Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலக்க போவது யாரு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னப்பா இன்டைக்கு வேலையால கெதியா வீட்டுக்கு வந்திட்டீங்கள்!

கணவன்: அதுவா? வந்து இன்டைக்கு வேலையில ஒரு தவறு செய்திட்டன். அதனால முதலாளி என்னைக் கோபமாகத் திட்டி கண் முன்னே நிக்காதே! எந்த நரகத்துக்காவது போய்த் தொலை என்றார்.

அதுதான் நேரா வீட்டைவந்துட்டன். :):unsure:

  • Replies 502
  • Views 74.7k
  • Created
  • Last Reply

சுவி பெரியப்பா இது உங்க கதை இல்லை தானே!! :)

அப்ப நான் வரட்டா!!

நோயாளி : நான் சீனி போட்டு தேனீர் குடிக்கும் போது மட்டும் கண் வழிக்குது டாக்டர்.

டாக்டர்: ( மருந்து சொல்லுவார்)

பின்பு சந்திக்கும் போது

நோயாளி சொல்வார்; நீங்கள் சொன்னது போல் செய்தேன் இப்போ வழி இல்லை என்று.

டாக்டர் என்ன சொல்லி இருப்பார்??? யாரவது....???? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊகப்படி.....

நோயாளி (ஜம்மு பேப்) : நான் சீனி போட்டு தேனீர் குடிக்கும் போது மட்டும் கண் வழிக்குது டாக்டர்.

டாக்டர்: பேக்கு பேக்கு சீனியை போட்டு தேனீரை வாய் வழியா குடி கண் வழிக்காது.

பின்பு சந்திக்கும் போது

நோயாளி சொல்வார்; நீங்கள் சொன்னது போல் செய்தேன் இப்போ வழி இல்லை என்று.

டாக்டர் என்ன சொல்லி இருப்பார்??? யாரவது....???? :lol::lol::lol:

ஜம்மு பேபி கிரியேட்டிங் சிட்டுவேசன்!! :o

இதில் டாக்டராக மேதை ஜம்மு பேபியும்..நோயாளியாக வேற யார் நம்ம டங்கு மாமாவும் இருந்தா!!இப்படி தான் நடந்திருக்கும்..... :lol:

நோயாளி (டங்கு மாமா) -டாக்டர் ஜம்மு பேப் சீனி போட்டு தேநீர் குடித்தா மட்டும் கண் வலிக்குது டாக்டர் என்னால முடியல!! :D

டாக்டர் (ஜம்மு பேபி )- இத்தோடா இதா மாட்டர் கண் இருகிறபடியா தானே வலிக்குது கண்ணை எடுத்து விட்டா வலிகாது தானே!! :lol:

நோயாளி (டங்கு மாமா) -அட இந்த யோசனை எனக்கு வரவில்லை!! :)

டாக்டர் (ஜம்மு பேபி) -அது தான் நான் டாக்டர் நீங்க நோயாளி!! :lol:

அப்ப நான் வரட்டா!!

டங்கு மாமாசிட்டுவேசன் சோங்-

""என்மனவானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளா என் கதையை கேட்டா உங்கள் சிறகுகள் தன்னால் மூடி கொள்ளும்"!! :(

  • கருத்துக்கள உறவுகள்
:o:o ஜம்மு ,உங்கள் ஜோக்கை ரசிக்க முடிந்தது.

."...........கொன்ச நெரம் பொறுத்து பார்த்தன். முடியொல்ல.

மொல்ல கோட்டன். தம்பி இயக்கமோ. இல்லை என்டார். அப்ப தம்பி தங்கச்சியாரும். அதுக்கும் இல்லை என்டார். அப்ப பக்கது வீட்டுகாரர் யாரவுது இயக்கமோ என்டு கோட்டன். அதுக்கு இல்லை என்டார்.

வந்த கோவத்துக்கு எடர காலை நாயொ என்ட்ன்....

உங்கடை துணிச்சல் உலகத்தில எவருக்கும் வராது!!! சும்மா சொல்லக்கூடாது!!! மறத்தமிழன்தான்!!!

கொஞ்சம் விட்டால் கவரிமான் தான் நோயாளி என்றும் சொல்லி விடுவீர்கள் போலும்... :o

டாக்டர் சொல்லி இருப்பார்.... சீனி போட்டு கலக்கியவுடன் கரண்டியை எடுத்துவிட்டு குடிக்க சொல்லி..... :o:lol:

ஒரு தம்பதிகள் சாத்திரியாரிடம் சென்ரனர் பலன் கேட்க..

சாத்திரியார் - உங்களுடைய சாதாக பலன் மிகவும் பொருந்தியுள்ளது. உன்களை சாவு கூட பிரிக்காது.

கணவன் - சாமி இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?

:lol::lol: ஜம்மு ,உங்கள் ஜோக்கை ரசிக்க முடிந்தது.

உண்மையாவா அப்ப எனி தந்து கொண்டிருகிறேன் :o !!அப்பாடா நம்ம ஜோக்கை கூட நுணாவிலன் அண்ணா நல்லா இருக்கு என்று சொல்லிட்டார் ரொம்ப தாங்ஸ்!! :o

அப்ப நான் வரட்டா!!

ஒரு தம்பதிகள் சாத்திரியாரிடம் சென்ரனர் பலன் கேட்க..சாத்திரியார் - உங்களுடைய சாதாக பலன் மிகவும் பொருந்தியுள்ளது. உன்களை சாவு கூட பிரிக்காது.கணவன் - சாமி இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?

ரவி மாமா என்னவோ உங்க கதை மாதிரி இருக்கு!! :lol:

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

கோன் பனேகா குரோர்பதி

சாந்தா சிங், அமிதாப்பின் கோன் பனேகா குரோர்பதியில் பங்கேற்கிறார்.

எல்.ஐ.சி. யில் உள்ள ‘சி’ எதைக் குறிக்கிறது.

(அ) கம்பெனி (ஆ) கார்ப்பரேஷன் (இ) காலனி (ஈ) செல்

சிங் : கார்ப்பரேஷன்

அமிதாப் : நிச்சயமாக

சிங் : ஆமாம்

அமிதாப் : உறுதியாக

சிங் : உறுதியாக

அமிதாப் : கம்ப்யூட்டரை ஆன் செய்யலாமா ?

சிங் : செய்யலாம்.

அமிதாப் : சரியான விடை, ஆயிரம் ரூபாய் ஆச்சு ?

அமிதாப் : இவ்வளவு கஷ்டமான கேள்விகளை சுலபமாக பதில் சொல்லிட்டீங்களே சாந்தாசிங், உங்கப்பா பெயர் என்ன?

சிங் : மௌனம்

அமிதாப் : வேணும்னா மூணு ஸாஃப்ட் லைன் இருக்கு பயன்படுத்திக்கலாம்.

சிங் : மௌனம்

அமிதாப் : வாபஸ் வாங்கிக்கிறீர்களா ?

சிங் : முதல் கேள்வி மாதிரி நாலு விடைகள் நீங்க கொடுக்கவில்லையே?

---------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்காரர்: அடடா சுவியா? இவ்வளவு ஆட்களைக் கூட்டிக்கொண்டு எங்க போறாய். நிறையப் பேர் வருகினம்.

சுவி;: இவர்கள் குருஜிஜிடம் ஆசீர்வாதம் பெற பக்கத்துக் கிராமத்திலிருந்து வருகினம். போதிமரத்தடிக்குக் கூட்டிப் போகிறேன்.

கடைக்காரர்: அப்ப நல்லதாய்ப் போச்சு! உங்கட வெண்ணிலா அம்மையார் வந்து ஆசிரமத்துக்கு 60 தேங்காய் கேட்டவ. எல்லாம் எடுத்து உரித்து மூட்டையாய்க் கட்டி வைத்திருக்கு , இதைக் கொண்டுபோய் அங்க குடுங்கோ.

சுவி: அதுக்கென்ன நாங்கள் கொண்டுபோகிறோம். ம்..ம் எல்லாரும் வாருங்கோ இந்தத் தேங்காய் மூட்டையைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வாங்கோ. (கொஞ்சக் கொஞ்சப் பேராக மாறி மாறித் தூக்கி தோளில் வைத்துக் களைத்தபடி வந்துகொண்டிருக்கிறார்கள்).

வழியில் ஜம்மு சைக்கிளில் வேகமாக வருகிறார்.

ஜம்மு: என்ன இவளவு நேரமாக உங்களைக் காணவில்லையென்றுதான் பாத்துவர குருஜி என்னை அனுப்பினவர். நீங்கள் என்ன அன்னநடையோடு வாறீங்கள். அதுசரி உதென்ன மூட்டை?

சுவி: இது தேங்காய்மூட்டை கடையில தந்தவை. சரியான பாரமாய்க் கிடக்கு அதுதான்... .

ஜம்மு: எங்க மூட்டையைப் பிரியுங்கோ. எவளவு தேங்காய்?

சுவி: 60வது தேங்காய் இருக்கெண்டு சொன்னவர். நீங்கள் என்ன எண்ணப் போறீங்களோ? கடைக்காரர் பொன்னி மிகவும் நல்லவர். அவர் ஒன்டும் ஏமாத்த மாட்டார்.

ஜம்மு: அவர் நல்லவரெண்டு உம்மைவிட எனக்கு நல்லாத் தெரியும். எல்லாரும் இஞ்சை வாங்கோ. ஆளுக்கொரு தேங்காயாய்த் தூக்கிக்கொண்டு வலுகெதியாய் மடத்துக்கு நடையைக் கட்டுங்கோ. இதைத்தான் 60 தேங்காயை 70 மூடர் மூட்டைகட்டி முக்கி முக்கித் தூக்கினவையென்டு சொல்லுறது. புறு புறுத்துக்கொண்டு விர்ரென்று சைக்கிளில் பறக்கிறார் ஜம்மு.

வந்த சனங்கள்: சுவி நீர் எப்போதும் மடத்தில சாணி பொறுக்கவும் மாடு குளிப்பாட்டவும்தான் லயக்கு.

சுவி : வெற்றுச் சாக்கைத் தலையில் போட்டுக்கொண்டு பின்னால போகிறார். :lol::lol:

யார் யாரைக் கலக்கிறது என்று புரியவில்லை அப்பா.....யாமறியோம் பாரபரமே...!!

  • கருத்துக்கள உறவுகள்

"அந்தப் புதுமுக நடிகை டைரக்டர்கிட்டே என்ன மரியாதை இல்லாம கால்ல பேப்பரை எடுத்துத் தர்றாங்க?"

"கால்சீட் தரச் சொன்னதைத்தான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்!"

-----------------------------------------------------------------------------------------------------------------------

"ராப்பிச்சை ஏன் சோகமா இருக்கான்?"

"ஒரு கிலோ சோறு பிச்சை எடுத்தா 200 கிராம் சங்கத்துக்கு குடுத்திடனும்னு பிச்சைக்காரர் சங்கத் தலைவர் சொல்லிட்டாராம்!"

----------------------------------------------------------------------------------------------------------------------------------

"படிச்சிக்கிட்டிருந்த உன் அக்காவ உங்க மாமா கல்யாணம் பண்ணி அமெரிக்கா கூட்டிப் போயிட்டாராமே? அங்கே உங்க மாமா என்னவா இருக்காங்க?"

"அங்கேயும் எங்கக்காவுக்குப் புருஷனாதான் இருக்கார்!"

----------------------------------------------------------------------------------------------------------------------------

"அம்மா அடிச்சா... நான் ஓ...ன்னு அழுவேன்!"

"அப்புறம் என்னாகும்?"

"அப்பா மாதிரி நீயும் நல்ல பிள்ளையா... அடிச்சா அழக்கூடாதுன்னு சமாதானப்படுத்துவாங்க!"

-------------------------------------------------------------------------------------------------------------------------

"உங்க மாமியாரோடு சண்டை போட்டதுல மறக்க முடியாதது எது?"

"ஒரு முறை நாங்க சண்டை போட்டபோது மாடியில நான் விழுந்திட்டேன்...! என் மாமியார் சந்தோஷமா கைதட்டி சிரிச்சாங்க...?"

"இதுல மறக்க முடியாதது என்ன இருக்கு?"

"கைதட்டி சிரிச்சிக்கிட்டே பின்னால போன என் மாமியார் படியில் உருண்டு விழுந்து கால ஒடிச்சிக்கிட்டாங்களே! அதை மறக்க முடியுமா?"

--------------------------------------------------------------------------------------------------------------------------------

"எவ்வளவு தைரியம் இருந்தா என் மகளை `சேட்'டுக்கிட்டே அடகு வச்சிருப்பே?"

"நீங்கதானே மாமா, என் மகளை `வச்சி'க் குடும்பம் நடத்துன்னு சொன்னீங்க!"

-----------------------------------------------------------------------------------------------------------------------------

காதலன் : உங்கப்பா கிட்ட நேத்து தைரியமா போய் நான் உங்க பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னேன்.

காதலி : கோபப்பட்டாரா?

காதலன் : இல்ல மலர் வளையத்தை கையிலயே கொடுத்தனுப்புனாரு.

---------------------------------------------------------------------------------------------------------------------------

சார் நீங்க என் சம்பளத்த உயர்த்தியே ஆகணும்... என் பின்னாடி 2 கம்பெனி நாயா அலையறாங்க!

அப்டியா? என்னன்ன கம்பெனி உன் பின்னாடி அலையறாங்க?

செல்ஃபோன் கம்பெனியும், க்ரெடிட் கார்ட் கம்பெனியுந்தான்...

--------------------------------------------------------------------------------------------------------------------------

வந்த சனங்கள்: சுவி நீர் எப்போதும் மடத்தில சாணி பொறுக்கவும் மாடு குளிப்பாட்டவும்தான் லயக்கு. சுவி : வெற்றுச் சாக்கைத் தலையில் போட்டுக்கொண்டு பின்னால போகிறார். :lol::lol:

பெரியப்பா நல்லா இருக்கு இதில என்னை வைத்து காமேடி பண்ணவில்லை தானே :wub: ......அது சரி பெரியப்பா ஏன் 60 தேங்காய் ஆச்சிரமதிற்கு ஏதாவது விசேசம் நடக்க இருக்கா :lol: ..........நிலா அக்கா தான் ஒடர் பண்ணி இருக்கா நிலா அக்கா என்ன விசேசம்......... :lol:

அப்ப நான் வரட்டா!!

யார் யாரைக் கலக்கிறது என்று புரியவில்லை அப்பா.....யாமறியோம் பாரபரமே...!!

ரவி மாமா உங்களுக்கே புரியவில்லையா...........அப்ப பேபியான எனக்கு!! :lol:

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ரமனன் : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?

சர்வர் : ஏன் அக்கறையா கேட்கறீங்க ?

ரமனன் : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.

---------------------------------------------------------------------

அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!

---------------------------------------------------------------------

நீதிபதி : "ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"

திருடன் : "இப்டி அனாவசியமா மாட்டிட்டுருக்க மாட்டேங்க."

---------------------------------------------------------------------

நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?

குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.

---------------------------------------------------------------------

ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே

--------------------------------------------------------------------

வக்கீல் : கொலை எங்கே நடந்தது?

சாட்சி : திருப்பதியிலே சார்.

வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?

-------------------------------------------------------------------

கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..

பாபு : ஏன்...

கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்

------------------------------------------------------------------

முட்டாள் கோபு : நேரு ரொம்ப மோசமான ஆளு..எப்படி சொல்றீங்க..?

முட்டாள் பாபு : அவர்தான் ரோஜாவை 'வச்சி'ருக்காறே..

-----------------------------------------------------------------

டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.

நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.

----------------------------------------------------------------

ரமனன் : ரெண்டு நாளா என் பையனைக் காணோம்

முராரி : அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.

----------------------------------------------------------------

கோபு : பையன் பட்டாசு கேட்டா அதுக்கு ஏன் அவனை இப்படி போட்டு அடிக்கிறீங்க?

பாபு : கார் குண்டுதான் வேணும்னு அடம் பிடிக்கிறான் ராஸ்கல்.

---------------------------------------------------------------

மகன் : அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்

தந்தை : அப்படியா..... மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.

--------------------------------------------------------------

திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

நீதிபதி : எப்படி ?

திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.

-------------------------------------------------------------

நண்பர் 1 : தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.

நண்பர் 2 : என்ன சீன்?

நண்பர் 1 : ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!

-------------------------------------------------------------

ஒருவர் : டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.

மற்றொருவர் : மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு

------------------------------------------------------------

நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?

போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.

------------------------------------------------------------

நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .

குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .

------------------------------------------------------------

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

------------------------------------------------------------

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?

ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

-----------------------------------------------------------

ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.

வேலு : ஏன்?

ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.

----------------------------------------------------------

வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?

பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.

---------------------------------------------------------

வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..

பாக்கி : ஏன் .. .. .. ?

வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..

--------------------------------------------------------

பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.

வேலு : எத வச்சு சொல்ற?

பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.

--------------------------------------------------------

பாக்கி : நேற்று ஏன் லீவு ?

ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

--------------------------------------------------------

நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?

ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

--------------------------------------------------------

ரசிகர் : ஏழை குடும்பக் கதை படம்னு சொன்னீங்க படம் ஒரே செக்ஸியா இருக்கே ?

இயக்குனர் : கதாநாயகி துணி வாங்கக்கூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க.. ..

-------------------------------------------------------

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

------------------------------------------------------

பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?

ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.

------------------------------------------------------

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..

நீதிபதி : ஆமா .. ..

குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

------------------------------------------------------

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.

சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

------------------------------------------------------

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.

------------------------------------------------------

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

  • தொடங்கியவர்

அந்தக் காலத்தில் திருமணமான பெண்கள், தாலி எடுத்து கண்ணில் ஓத்திக் கொள்வதை நீங்கள் கண்டிருக்க கூடும். ஆனால், இப்ப சிட்னியில் பொம்பிளையள், காதில தாலியை எடுத்து ஓத்திக் கொள்ளினம். ஏன் தெரியுமே, தாலில மொபைல் போனை கட்டி வைத்திருக்கினம்.

பொன்னி தாத்தா உண்மையாவா நேக்கு தெரியாம போச்சு நம்ம பாட்டி எப்படி அது தான் உங்க மனைவி தாத்தா அவாவும் அப்படி தானோ இல்லை!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

கள்ளர், காடையர் பயத்தில அவான்ர தாலி பாங் லொக்கரில....இது எப்படி இருக்கு????

கள்ளர், காடையர் பயத்தில அவான்ர தாலி பாங் லொக்கரில....இது எப்படி இருக்கு????

நான் இதை நம்மமாட்டேன் தாத்தா பொய் சொல்லுறீங்க போல இருக்கு உங்க வீட்ட கள்ளன் வருவானா!! :rolleyes:

  • தொடங்கியவர்

பின்ன அடைவு வைச்சதை வெளில என்னண்டு சொல்லுறது....சின்ன பிள்ளை தனமாய் இருக்காது..

பின்ன அடைவு வைச்சதை வெளில என்னண்டு சொல்லுறது....சின்ன பிள்ளை தனமாய் இருக்காது..

ஓ அதா மாட்டர் அப்ப சரி பொன்னி தாத்தா...நான் சின்ன பிள்ளை தான் தாத்தா உது தெரியாதோ!! :rolleyes:

  • தொடங்கியவர்

அண்மையில் எனது நண்பர் ஒருவர், என்னிடம் 1000 டொலர் கடன் கேட்க வந்திருந்தார். நான் என்னிடம் உடனடியாக அவ்வளவு பணம் இல்லை என்றேன். தனக்கு பணம் அவசரமாக தேவைப்படுவாதாகவும், வேறு யாரிடம் ஆவது வேண்டி தரும் படி எனது நண்பர் அழா குறையாக கேட்டார்.

நானும் பரிதாபப்பட்டு, என்னுடைய இன்னொமொரு நண்பரிடம் அவரை அழைத்து சென்றேன். அந்த நண்பர் சற்றே கோழுப்பு கூடிய மனிதன் ( நம்ம ஜம்பு மாதிரி). அவர் சொன்னார், காசு தாரலாம், ஆனால் என்னுடைய காலில விழுந்து கூம்பிட வேண்டும் என்று கெண்டிசன் போட்டார். நம்மடைய ஆள் சட்டு என்று விழுந்து கூம்பிட்டு காசை வேண்டிக் கொண்டு வந்து விட்டார்.

எனக்கு சரியான திகைப்பாய் போச்சு..என்னடா 1000 டொலருக்கு காலில எல்லாம் விழுறாய் என்று கேட்டேன். அவன் சொன்னான், நான் ஒருக்கா தான் காலில் விழுந்தான் சரியா, இந்தா 1000 த்தை திரும்பி வேண்ட அவர் எத்தனை தரம் என்ர காலில விழப் போறார் என்று இருந்து பாரேன் என்றான் எனது நண்பன்....

பொன்னி தாத்தா ஜம்முவிற்கு கொழுப்பா நல்ல பிள்ளை ஜம்மு இது தெரியாதோ :unsure: அது சரி காலில விழுந்தது நீங்க தானே சும்மா தானே உங்க நண்பர் என்று பில்டப் காட்டுறீங்க நேக்கு தெரியும் யார் விழுந்தது என்று எனி கொடுத்தவன் எத்தனை தரம் விழவேண்டும் என்றும்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜப்பானிய தூதுவர் அகாசி, மகிந்தாவிடம் - நீங்கள் உங்கள் நாட்டை எங்களிடம் தாருங்கள், 10 வருடத்தில் ஜப்பானாக மாற்றிக் காட்டுகிறோம்.

அதற்கு மகிந்த - இது என்ன பெரிய வேலை? நீங்கள், உங்கள் ஜப்பானை என்னிடம் தாருங்கள், நான் ஒரே வருடத்தில், சீறீ லங்காவாக மாற்றிக் காட்டுகிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.