Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் 
[Saturday 2017-12-30 19:00]
தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளதுடன் தற்போதும் ஆசிரியர் தலையங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றது. இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும். இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.

அதனை படித்து பார்த்து மக்களிற்கு சொல்ல முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கின்ற ஊடகங்கள் தான் எங்கள் மத்தியில் இருக்கின்றன.112 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுவிடுங்கள் முதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள். சமஸ்டி, ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது, ஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எங்களது பின்னனைப்பில் இல்லை. அனைத்து கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது என்று எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் இதைபற்றி பொய் பரப்புரை செய்யப்படுகிறது.

இந்த பொய் பரப்புரையை வைத்துக்கொண்டு ஒரு கட்சி மக்களிடத்தே கோருகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற வாக்காக இந்த உள்ளுராட்சி தேர்தலை பாவியுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்தான் ஒற்றையாட்சி நிலைப்பாட்டை கொண்ட கட்சியினர். நாங்கள் சமஸ்ஸ்டியை கோருகின்ற கட்சியினர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒற்றையாட்சி கோட்பாடு கொண்ட கட்சி. சரித்திர பூர்வமாக சமஸ்டி தீர்வை எதிர்த்த கட்சி. இன்று கூறுகிறார்கள் நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுவிட்டோம்.

அதனால் இந்த தேர்தலிலே இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கின்றனர். அவர்களது ஒற்றையாட்சி கொள்கை பொருத்தமற்றது என்றுதான் இந்த இடைக்கால அறிக்கை கூறுகிறது. 2010இல் இரு தேசம் ஒரு நாடு என்றனர் பின்னர் 2015இல் குறைத்து வாசித்தனர்.பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இதைதான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம்.

சமஸ்டியை பாட்டன், தகப்பன், மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள். இப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள்தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர். படிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். படித்தவர்கள் என சொல்பவர்கள் பல தீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். ஒருமணித்தியாலயத்தின் பின் சொல்கிறார்கள் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். படித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள். அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று பதிநான்கு ஆகியதால் மறதி வந்துவிட்டதா என தெரிவித்தார்.

.http://www.seithy.com/breifNews.php?newsID=196594&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

இது எங்களது பின்னனைப்பில் இல்லை

இதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது தெரிந்தால் தயவு செய்து விளக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 பண்டாரநாயக்கா காலந் தொடங்கி இன்றுவரை கூடிக்கூடி பேசுறதும் திட்ட வரைபு, சட்ட  வரைபு உருவாக்குகிறோம்   என்று  காலத்தை இழுத்தடிக்கிறதும்,  ஏமாத்திறதும்  கிழிச்சு எறியிறதும், அடிச்சு விரட்டிறதும்  தானே  கடந்த பல தசாப்தங்களாக நடைபெறுகிறது. வரைந்த திட்டங்களே  அமுலாகாமல் குப்பைதொட்டிக்கை போட்டுது. புதுசு புதுசாய் உருவாக்குகினமாம். இவையளும் தேர்தலில் வெல்வதற்காக புதுப் புது கரடி விடுகினம். அவங்களுக்கு தெரியும் தாங்கள் எந்தக் கட்சி ஆட்ச்சிக்கு ட் வந்தாலும் தங்கட நாடகத்தை நீங்கள் காட்டிக்கொடுக்க மாட்டீர்கள் முண்டு குடுத்து தாங்குவீர்கள் என்று. மாறி மாறி ஆட்ச்சிக்கு வரும் கட்சிகள் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் வேறு. நீங்கள் ஆட்ச்சிக்கு வரும் எல்லாக் கட்சிகளோடும் எதிர்க்கேள்வி கேட்க்காமல் கை குடுக்கிறீர்களே, மூடி மறைத்து காப்பாற்றுகிறீர்களே. தேர்தல் முடிய நீங்களும் வேறொரு கதை சொல்லிக்கொண்டு காணாமற் போய்விடுவீர்கள்.

நன்றி நுணா.

அதே பக்கத்தில் சமஸ்டி ஆட்சியே பொருத்தம் என்று பொருத்தமான தீர்வை சுட்டிக்காட்டத் தவறியதாலும், இல்லையெனில் எது பொருத்தம் என்று சொல்லப்படாததாலும் ஒற்றையாட்சி பொருத்தமில்லை என்று சொல்வது இழுத்தடிப்பு, ஏமாற்றல் தந்திரம்.

மேலும் உள்ளே பல இடங்களில் "ஏக்கிய" என்ற சொல் ஒற்றையாட்சியையே வலியுறுத்துகிறது.

சுமந்திரன் தனது பாரம்பரிய ஏமாற்றுத் தொழிலை செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனிப்பட்ட  எவரினதுமோ அல்லது கட்சியினதோ ஆதரவலனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல.

சுமந்திரனின் மிகவும் மெதுவான, நவீன தாராளவாத அணுகுமுறை, அவதானிக்கப்படக்கூடிய ஆனால் வெட்டு ஒன்று துண்டு என்னு இல்லாமல், கடிகாரத்தின் விநாடி நிலை மாறுவைத்து போல் நிலைபாட்டுகளை மாற்றுவது  சரியானதே.

ஆயினும், தமிழ் தரப்பில் முதல்வர் விக்னேஸ்வரன் இருப்பதுவும் வேண்டும், ஆனால் அத்தகைய அணுகுமுறையை சுந்திரன் விரும்பினாலும் பிரயோகியாமுடியாத நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் எதிர்பை சமாளிக்க ஏக்கய ராக்சிய என்ற சொல்லை புதிதாக சேர்த்தும் 

பெடரல் யுனிற்ரி ஸ்ரேற் என்ற ஏற்கனவே இருந்த சொற்களும் இல்லாமல் போய்விட்டதாகவே இடைக்கால ஒப்பந்தம் சொல்வதாக கூறுகிறார்கள்.

சிங்களத்தில் ஏக்கய ராக்சிய என்றால் ஒரு நாடு என்கிறார்கள்.

இதையே தமிழில் ஒரு நாடு என்றால் தமிழர் மத்தியில் கேள்வி எழும் என்பதால் ஒருமித்த நாடு என்று எழுதி தமிழர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.