Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி

Featured Replies

அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி

 

கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Rajinikanth

 
அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி
 
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறிய ரஜினிகாந்த், கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘காலம் தான் பதில் சொல்லும் என்று கூறினார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார். “ஆன்மீக அரசியல் என்பது ரஜினியின் நம்பிக்கை. எனது அரசியல் வேறு. மக்கள் தங்களின் பலத்தை உணரச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. மக்கள் பிரச்சனையை மக்களிடமே எடுத்துச் செல்வதற்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/17214300/1140751/Kamalhaasan-accepts-rajinikanth-comments-on-joint.vpf

  • கருத்துக்கள உறவுகள்

"வௌவ்வால் வீட்ட வௌவ்வால் போனால் நீயும் தூங்கு நானும் தூங்கு" என்கிற மாதிரித்தான்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை யுகங்கள் இந்த கூத்தாடிகள் பின்னால் தமிழகம் அலைக்கழிக்கப்படுமோ?

38 minutes ago, ராசவன்னியன் said:

இன்னும் எத்தனை யுகங்கள் இந்த கூத்தாடிகள் பின்னால் தமிழகம் அலைக்கழிக்கப்படுமோ?

இவர்கள் நடிகர்களாக இருப்பதால் அரசியலுக்கு வர கூடாது என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. நடிப்பு ஒரு தொழில் மட்டுமன்றி சினிமாவும் ஒரு கலை வடிவம் என்பதால் அதில் இருந்து வருபவர்களை அரசியல் செய்ய கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கு என புரியவில்லை. அத்துடன் அவர்களை வெறுப்பவர்கள் அவர்களை  'கூத்தாடிகள்' என விழிப்பதன் ஊடாக 'கூத்தாடிகள்' எனும் பதத்தை ஒரு அவமான / வசைச் சொல்லாக பயன்படுத்துவது தமிழ் பாரம்பரிய கலையான கூத்தையே அவமானப்படுத்தும் செயல்.

ஆனால் கமல் / ரஜனி மற்றும் இவர்களை போன்ற இன்னும் பல நடிகர்கள்  வெறுமனே  சினிமாவில் காட்டிய கதாநாயக  பிம்பத்தை மட்டும்  அடிப்படியாக கொண்டு தனி மனித வழிபாட்டை நம்பி அரசியலுக்கு வருவதை வெறுக்கின்றேன். இவர்களது கதாநாயக  பிம்பத்தை அப்படியே நம்பி தலைவர்களாக எண்ணும் மக்களின் பாமரத்தனத்தையும் முட்டாள்தனத்தையும் ஏற்க முடிகின்றதும் இல்லை.

கமல் டுவீட்டரில் நாலு கருத்து, விகடனில் ஒரு தொடர் என்று மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து விட்டால் அரசியலுக்கு தன்னை தயார்படுத்தி விட்டதாக நினைக்கின்றார்.
ரஜனி, மக்கள் போராட்டங்கள் பிரச்சனைகள் எதற்கும் குரல் கொடுக்காது வெறுமனே தன் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களை சந்தித்து விட்டால் நேரடியாக தேர்தலில் குதித்து வாக்கு பெற்று விடலாம் என நம்புகின்றார். இவர்கள் எவரும் கட்சி ஆரம்பித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்களுடன் மக்களாக நின்று தோள் கொடுத்து மக்களுக்கான அரசியலை படிப்படியாக செய்ய எந்த விருப்பும் அற்று தேர்தலினூடாக பதவிகளை பிடிக்க பேராசையில் திரிகின்றனர். சனநாயகம் கொடுக்கும் சூழலை இவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலை தான் மிகவும் ஆபத்தானது. சனநாயகம் கொடுக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி சனநாயகத்தினூடாக அதிகாரங்களை பெறும் அரசியலையே கேலிக்குரியதாக மாற்றுகின்றது. இந்த காரணங்க்களால் தான் இவர்களது அரசியல் வருகையை எதிர்க்க வேண்டும். வெறுமனே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற காரணத்தினால் அல்ல என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 தென்னிந்திய சினிமாத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எங்கும் பேசப்படுவதாக இல்லை.

எத்துறை சார்ந்தவராக இருப்பினும்.. தமிழகத்தை தமிழர் ஒருவர் அதுவும்.. அந்த மக்கள் மண் அவர்களின் உரிமை மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ளவர் அரசியல் தெரிந்தவர் ஆளனும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

அதற்கு ரஜனியோ.. கமலோ தெரிவாக முடியாது. இது தான் இது விடயத்தில்.. எங்களின் சொந்தக் கருத்து.

இதனை இன்னும் பல தமிழ் மக்களுக்கும்  அங்கீகரித்து நிற்கனும் என்றால்.. அந்த மக்களுக்கு அரசியல் என்பது அவர்களின் வாழ்வியல் சார்ந்த ஒரு தெரிவு என்பதை புரிய வைக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சம் அல்ல.. பிற மொழி..  நடிகர்களால்.. நடிகைகளால்.. அவற்றை நிரப்பிக் கொள்ள. 

தொழில் தேடி வந்த பிறமொழியினர் எல்லாம்.. தமிழனை.. தமிழ்நாட்டை  ஆளனும் என்ற நிலையில்.. தமிழ் மக்கள் தம்மையும்.. தம் மண்ணையும் வைத்திருப்பதை... ஒரு இன அழிப்பை இந்த உலகில் கண்டுவரும் இனம் என்ற வகையில்.. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கூத்தாடியும்(நடிகனோ, நடிகையோ) தமிழ் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடட்டும், பிரச்சனைகளை தீர்க்கட்டும், தமிழ் மக்கள் மனதை வெல்லட்டும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள், ஆனால் அரிதாரம் பூசி, கவர்ச்சி அரசியல் மூலம் பேதைகளை போதையில் வைத்து ஆதாயம் தேடுபவர்களையே குற்றம் சொல்கிறோம்.

8 minutes ago, nedukkalapoovan said:

 

எத்துறை சார்ந்தவராக இருப்பினும்.. தமிழகத்தை தமிழர் ஒருவர் அதுவும்.. அந்த மக்கள் மண் அவர்களின் உரிமை மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ளவர் அரசியல் தெரிந்தவர் ஆளனும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

அதற்கு ரஜனியோ.. கமலோ தெரிவாக முடியாது. இது தான் இது விடயத்தில்.. எங்களின் சொந்தக் கருத்து.

எனக்கு தெரிந்து கமல் பரமக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழர் என்றே அறிந்து உள்ளேன். ஆனால் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவர். அதனால் அவர் தமிழ் இல்லை எனும் திராவிட அரசியலை ஒட்டி கருத்து சொல்கின்றீர்களா? நான் கமலை எதிர்க்கும் காரணத்தை மேலே தெளிவாக சொல்லியுள்ளேன்

அத்துடன் நான் மேலே சொன்ன கருத்து 'கூத்தாடிகள் பின்னால் தமிழகம் எத்தனை காலத்துக்கு அலைக்கழிக்கப்படுமோ' என்ற சொன்ன கருத்துக்கு; பின் வந்த உங்களின் பின்னூட்டத்துக்கு அல்ல

1 minute ago, ராசவன்னியன் said:

எந்த கூத்தாடியும்(நடிகனோ, நடிகையோ) தமிழ் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடட்டும், பிரச்சனைகளை தீர்க்கட்டும், தமிழ் மக்கள் மனதை வெல்லட்டும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள், ஆனால் அரிதாரம் பூசி, கவர்ச்சி அரசியல் மூலம் பேதைகளை போதையில் வைத்து ஆதாயம் தேடுபவர்களையே குற்றம் சொல்கிறோம்.

இதை முதலிலேயே குறிப்பிட்டு இருக்கலாம். என் பதிலின் பின் திருத்தி கொண்டமைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

..இதை முதலிலேயே குறிப்பிட்டு இருக்கலாம். என் பதிலின் பின் திருத்தி கொண்டமைக்கு நன்றி

கருத்தில் இன்னொரு எதிர்பார்ப்பை கவனிக்க தவறிவிட்டீர்கள், இதுவரை ஆண்ட எந்த கூத்தாடிகளும் தமிழர்களுக்கு நன்மை செய்யவில்லை( ஆட்சில் அமர்ந்து தங்கள் சொந்த சுகம் அனுபவித்தது தவிர்த்து)

இனியாவது படித்த புத்திஜீவிகளாவது ஆட்சிக்கு வரட்டும், தமிழ் இனம் மலரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புதான் எனது பதிவில் மேலோங்கியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிழலி said:

எனக்கு தெரிந்து கமல் பரமக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழர் என்றே அறிந்து உள்ளேன். ஆனால் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவர். அதனால் அவர் தமிழ் இல்லை எனும் திராவிட அரசியலை ஒட்டி கருத்து சொல்கின்றீர்களா? நான் கமலை எதிர்க்கும் காரணத்தை மேலே தெளிவாக சொல்லியுள்ளேன்

அத்துடன் நான் மேலே சொன்ன கருத்து 'கூத்தாடிகள் பின்னால் தமிழகம் எத்தனை காலத்துக்கு அலைக்கழிக்கப்படுமோ' என்ற சொன்ன கருத்துக்கு; பின் வந்த உங்களின் பின்னூட்டத்துக்கு அல்ல

 

44 minutes ago, nedukkalapoovan said:

எத்துறை சார்ந்தவராக இருப்பினும்.. தமிழகத்தை தமிழர் ஒருவர் அதுவும்.. அந்த மக்கள் மண் அவர்களின் உரிமை மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ளவர் அரசியல் தெரிந்தவர் ஆளனும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

நாங்களும் பொதுவாகச்  சொன்னம்.

கமல்.. அரசியல் தெரிந்த ஒருவரல்ல.. தமிழகத்தில் தமிழ் மக்களை ஆள. கமல் சினிமா பற்றி தெரிந்திருக்கலாம்.. ஆனால் தமிழகத்தை ஆளக் கூடிய அளவு அவருக்கு தமிழகத்தின் மீதும் அக்கறையும் இல்லை.. தமிழ் மக்கள் மீதும் அக்கறையில்லை.. அரசியல் அறிவும் இல்லை. ஹிந்திய எஜமான விசுவாசத்தில் ஊறித்திழைத்த ஒருவர் தான் கமல். அவரால்.. தமிழகத்தை.. தமிழர்களை ஆள முடியாது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட அபிப்பிராயம் , கண்டிப்பாக கமலும்,ரஜனியும் அரசியலுக்கு வரவேண்டும் அடுத்த தேர்தலை சந்திக்கவேண்டும்.

இருபது வருடங்களுக்கு மேலாக தலைவா அரசியலுக்கு வா, தமிழகத்துக்கு வழிகாட்டுஎன்பதும் கற்பனைக்கு மீறிய துதிபாடல்கள் செய்வதும் அடங்கிபோக ஒரு வாய்ப்பாக இருக்கும், வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்றவகையில் தேர்தல் முடிவுகள் அவர்களுக்காக உயிரை கொடுக்கும் தொண்டர்களுக்கு அமையும்.

தமிழக வரலாற்றிலெயே பல கட்சிகள் பிரிந்து நின்று சந்திக்கபோகும் முதல்தேர்தல் இனிமேல் வரபோவதாய் இருக்குமென்று நினைக்கிறேன். மிகபெரிய வாக்குவங்கிகளை கொண்ட அதிமுக மூன்றாகவும், திமுக ஸ்டாலின் அழகிரி என்று இரண்டாகவுமாகி பிரதான கட்சிகளே ஐந்தாக நிற்கும்போது புதிதாய் இவர்கள் ஆரம்பிக்கபோகும் கட்சிகளுக்கும் ஏற்கனவே இருக்கும் பிற கட்சிக்குகளுக்குமான போட்டியில் பெரும்பான்மை பெற்று யாராவது ஆட்சியமைப்பார்கள் என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்துவிடாது என்பதே பலர் எண்ணம்.

குரங்கு அப்பம் பங்கிட்டதுபோல் கட்சிகள் வெற்றிபெறும் எண்ணிக்கை அமைந்து கூட்டாட்சியும் இல்லாமல், கூடி பண்ணும் அரசியலும் இல்லாமல் ஜனாதிபதி ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

அவ்வாறான ஒரு நெருக்கடிமிக்க அரசியல்போட்டி தேர்தலில்

ஐந்து தொகுதியோ, பத்து தொகுதியிலோ அல்லது அதிலும் குறைவான இடங்களிலோ மட்டும் வெற்றி பெறப்போகும்

அவர்களது ஆதர்ச கதாநாயகர்களை பின்பு எந்த முகத்தை வைத்து , மீண்டும் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டு,மாற்றம் வேண்டும்,நீங்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று இவர்கள் இன்னொருமுறை கேட்பார்கள்?

சமூக வலைதளங்களில் அவர்களுக்கான கொந்தளிப்புகள் ,விவாதங்கள், பட்டாசு,பால்காவடி,மொட்டையடித்தல்,மண்சோறு,அலகு குத்துதல்,நாக்கை அறுத்தல் ,தற்கொலை முயற்சிகளாவது அடங்க வாய்ப்பிருக்கிறது.

தமிழக அரசியலும்,ஆட்சியும் என்பது வெறும் ரசிகர்மன்றங்களின் துணையுடன் சபையேறக்கூடிய காலமல்ல இது என்பதை அவர்கள் உச்சியில் ஆணியடித்ததுபோல் உணர்த்த மிக கிடைத்த அரியவாய்ப்பு, கண்டிப்பாக அவர்கள் போட்டியிடவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.