Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : வரபிரசாதம்(1976)
இசை: R.கோவர்த்தன்

இசை (உதவி) : இளையராஜா

வரிகள்: புலமைப்பித்தன்;
பாடியவர்கள்:வாணிஜெயராம், K.J.ஜேசுதாஸ்; 

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,
விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல,

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,  
உள்ளம் நெகிழ்ந்தான்,  
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
அன்பான தெய்வம்,  அழியாத செல்வம்,
பெண் என்று வந்தால் என்என்று சொல்வேன்???....

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,  
உள்ளம் நெகிழ்ந்தான்,

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்கை நலமாக வேண்டும்,
நடமாடும் கோவில், மணவாளன் பாதம்,
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்,
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்,
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை...

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்
ஆஹாஹஹஹா.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடும் குரல் இங்கே ......!  🌻

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மண்ணை நம்பி மரம் இருக்கு.....!  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : ஆடி பெருக்கு(1962)

இசை : AM ராஜா

பாடியோர் : AM ராஜா & P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் இரு
காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்

பெண்:
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
பண்ணறியா மனிதர் முன்னே வீணையை வைத்தார்
ஆண்:
பண்ணறிந்தும் மீட்டு முன்னே யாழைப் பறித்தார் யாழைப் பறித்தார்
பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்

பெண்:
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்

ஆண்:
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே

பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : குமாரவிஜயம் (1976)

வரிகள்: பூவை.செங்குட்டுவன்

இசை: G.தேவராஜன்

பாடியோர் : K.J ஜேசுதாஸ் & P.சுசீலா

கன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி...
ஆ...
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது  
பொறுந்தாவிட்டால் சன்யாசி

கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது  
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
ஒரு பக்க காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த பெண்மை இது
பெண்மை இது
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம் சமரசமா
சமரசமா
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு
மயங்க விடு

கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
பொறுந்தாவிட்டால் சன்யாசி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு.......!   😀

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : அச்சாணி(1978)

இசை : இளையராஜா

பாடியவர்: S.ஜானகி.

வரிகள்: வாலி

மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே ......
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
.மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோரும் வாழவேண்டும்........!    😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரைப்படம்: கைதி கண்ணாயிரம்
(1959)
இசை: K V.மகாதேவன்
வரிகள் : மருதகாசி
பாடியோர்:  P சுசீலா, மாஸ்டர் ஸ்ரீதர்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக்கொஞ்சி................

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்....

(கொஞ்சிக்கொஞ்சி)

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..

(கொஞ்சிக்கொஞ்சி)

தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம்: வீட்டுக்கு வீடு(1970)
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SPB & LR ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
              அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
               உங்கள் முகம் அதிசய கனவு
              நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில்
             பறவை பறக்கும் அழகோ
             தேவியின் வெண்நிற மேனியில்  
            விளையாடும் பொன்னழகு
பெண்: லாலாலா...லாலா....லாலாலா....
ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில்
             பறவை பறக்கும் அழகோ
             தேவியின் வெண்நிற மேனியில்  
             விளையாடும் பொன்னழகு
பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்  
              மயங்கி களிக்கும் அழகோ
              காதலின் ஆனந்த போதையில்  
             உறவாடும் உன்னழகு
ஆண்: லாலாலா...லாலா....லாலாலா....
பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்  
              மயங்கி களிக்கும் அழகோ
             காதலின் ஆனந்த போதையில்  
             உறவாடும் உன்னழகு  
ஆண்: கற்பனை அற்புதம்  
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்
ஆண் :கற்பனை அற்புதம்  
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என
              தேடி அணைக்கும் அழகே
              மைவிழி நாடகப் பார்வையில்
              கலை நாலும் சொல்லிவிடு
பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய
              பருவகால இசையே
             பார்த்தது மட்டும் போதுமா
            ஒரு பாடம் சொல்லிவிடு
ஆண்: வந்தது கொஞ்சமே
பெண்: வருவதோ ஆயிரம்
ஆண்: ஒவ்வொரு நினவிலும்
பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
             நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம்: குங்குமம் (1963)

வரிகள்:கண்ணதாசன்

இசை: K V மகாதேவன்

பாடியோர்:TMS & P சுசீலா

பெண்:-
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,

ஆண்:-

தூங்காத., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,

பெண்:- தூங்காத கண்ணென்று.., ஒன்று..,,

ஆண்:-

முற்றாத இரவொன்றில்.., நான்வாட..,
முடியாத..,கதையொன்று.., நீ.., பேச.., முற்றாத இரவொன்றில்.., நான்வாட.., முடியாத..,கதையொன்று.., நீ.., பேச..,

பெண்:-

முத்தாரம்தாளாமல்.., உயிரொன்று சேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,
முத்தாரம்தாளாமல்.., உயிரொன்றுசேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,

ஆண்:-
 
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

பெண்:-

யாரென்னசொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது.., யாரென்ன சொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது..,

ஆண்:-
 
தீராத.., விழையாட்டு.., திரைபோட்டு விழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று.., தீராத.., விழையாட்டு.., திரைபோட்டுவிழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று..,

பெண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

ஆண்:-

வெகுதூரம்.., நீசென்று.., நின்றாலும்..,
விழிமட்டும்.., தனியாகவந்தாலும்.., வெகுதூரம்.. நீசென்று.., நின்றாலும்., உன்.., விழிமட்டும், தனியாகவந்தாலும்..,

பெண்:-

வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று.., வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று..,

ஆண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,
ஆண்:- துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று..,

பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,

ஆண்:- தாங்காத.., மனம்என்று.., ஒன்று..,

பெண்:- ஆகா.., ஆ.., ஆகா.., ஆ..

ஆண்:- தந்தாயே.., நீஎனைக்கண்டு.., தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., -

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை பார்த்து .....!   😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வண்டொன்று வந்தது வா என்று சொன்னது.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனமே முருகனின் மயில் வாகனம்....!  😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.......!  😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் ....!   😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலத்தால் அழியாத பாடல்களை அன்றாடம் இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்.
தொடர்ந்தும் உங்கள் தெரிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் த‌வ‌றான‌ ஏரியாக்குள்ள‌ வ‌ந்திட்டேன் போல‌ , இந்த இட‌த்தை விட்டு ஓடி போரது தான் என‌க்கு ந‌ல்ல‌ம் , 

நீங்க‌ள் உங்க‌ளின் இள‌மைக் கால‌ பாட‌ல்க‌ளை கேட்டு சிரித்து மகிழுங்கள் , இஞ்சோய்  😁😉 /

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதவு திறந்தா காட்சி தெரிந்ததா....!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : நந்தா என் நிலா (1977)

வரிகள் : பழனிசாமி

இசை: V தட்சணாமூர்த்தி

பாடியோர்: SPB

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ ..
விழி,
மீனாடும் விழி மொழி,
தேனாடும் மொழி குழல்,
பூவாடும் குழல் எழில்,
நீயாடும் எழில்
மின்னிவரும் சிலையில், மோகன கலையே,
வண்ண வண்ண, மொழியில்
வானவர் அமுதே,
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே,
ஆடி நிற்கும் தீபம் நீயே,
பேசுகின்ற வீணை நீயே,
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ....

ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிலையாக வந்தவள் நீயே,
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே,
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே,
அருந்ததி போல பிறந்து வந்தாயே...

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ....

ஆகமம் தந்த சீதையும் இன்று,
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
ஆகமம் தந்த சீதையும் இன்று,
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன்
சோகத்தில் ஆட இறங்கி வந்தாளோ !!!

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திண்ணைப்பேச்சு வீரரிடம்....!   😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன் அத்தானும் நான்தானே ......!  😄

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொறக்கும்போது இருந்த குணம்......!  😄




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.