Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

`மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் சிஎஸ்கே!’ பெங்களூர் அணி பேட்டிங்

 
 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூர் வீரர் டிவிலியர்ஸ்

புனே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், காயத்திலிருந்து மீண்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் டிவிலியர்ஸ் மீண்டும் களமிறங்குவதால், அந்த அணி உற்சாகமாகக் களமிறங்குகிறது. டிகாக்குக்குப் பதிலாக அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மனன் வோராவுக்குப் பதிலாக பார்த்திவ் படேலும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக முருகன் அஷ்வினும் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அதேபோல், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டூபிளசிக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியும், கரண் ஷர்மாவுக்குப் பதிலாக துருவ் ஷோரேவும், கே.எம்.ஆசிஃபுக்குப் பதிலாக ஸ்ரதுல் தாக்குரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில், இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே பிளே - ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைக்க முடியும். மேலும், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ளும். எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம். 

Vikatan

Edited by நவீனன்

  • Replies 592
  • Views 76.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

61 ரன்னுக்குள் கோலி, ஏபிடி, மெக்கல்லத்தை இழந்து ராயல் சேலஞ்சர்ஸ் திணறல்

 

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்னுக்குள் மெக்கல்லம், கோலி, டி வில்லியர்ஸை இழந்து ஆர்சிபி திணறி வருகிறது. #IPL2018 #CSKvRCB

 
61 ரன்னுக்குள் கோலி, ஏபிடி, மெக்கல்லத்தை இழந்து ராயல் சேலஞ்சர்ஸ் திணறல்
 
ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் நடைபெற்ற வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பார்தீவ் பட்டேல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பவர் பிளே வரை நின்று விளையாடியது. பார்தீப் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது.

201805051654526884_1_rcb001-S._L_styvpf.jpg

பவர் பிளேயின் அடுத்த ஓவரான 7-வத ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 11 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் 8-வது ஓவரில் ஸ்டம்பிங் ஆனார்.

மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திணறி வருகிறது. 11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் அடித்துள்ளது. பார்தீவ் பட்டேல் 49 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/05165452/1161143/IPL-2018-CSKvRCB-royal-challengers-bangalore-loss.vpf

123/8 * (19.2/20 ov)
  • தொடங்கியவர்

`சுழலில் வீழ்ந்த விராட் கோலியின் படை!’ - சிஎஸ்கேவுக்கு 128 ரன்கள் இலக்கு #CSKvsRCB

 
 

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 

சென்னை வீரர் ஜடேஜா

Photo Credit: Twitter/IPL

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணிகள் தரப்பில் தலா 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சென்னை அணியில், டூபிளசிக்குப் பதிலாக டேவிட் வில்லியும்,  கரண் ஷர்மாவுக்குப் பதிலாக துருவ் ஷோரேவும், கே.எம்.ஆசிஃபுக்குப் பதிலாக ஸ்ரதுல் தாக்குரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஐபிஎல் தொடரில் டேவிட் வில்லி விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அதேபோல், பெங்களூரு தரப்பில் டிக்காக்குப் பதிலாக டிவிலியர்ஸும், மனன் வோராவுக்குப் பதில் பார்த்திவ் படேலும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக முருகன் அஸ்வினும் சேர்க்கப்பட்டனர். 

பெங்களூரு அணியின் இன்னிங்ஸை பார்த்திவ் படேலும், பிரெண்டன் மெக்கல்லமும் தொடங்கினர். இந்த ஜோடியை இரண்டாவது ஓவரிலேயே இங்கிடி பிரித்தார். அவரது ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த மெக்கல்லம் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி, ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை. அப்போது, ஜடேஜா மற்றும் விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

விராட் கோலிக்குப் பின்னர் களமிறங்கிய `மிஸ்டர். 360’ டிவிலியர்ஸும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹர்பஜன் பந்துவீச்சில் தோனியின் அசத்தல் ஸ்டம்பிங்கில் அவர் வெளியேறினார். காயத்திலிருந்து மீண்டுவந்து இன்றைய போட்டியில் களமிறங்கிய டிவிலியர்ஸ் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு ரன்னில் வெளியேறினார். மன்தீப் சிங் 7 ரன்களில் வெளியேற பெங்களூர் அணி, 11 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பார்த்திவ் படேல், 37 பந்துகளில் அரைசதமடித்து ஆறுதல் அளித்தார். சிறப்பாக விளையாடிவந்த அவர், 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பார்த்திவ் படேலின் விக்கெட்டுக்குப் பின்னர் பெங்களூர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டிகிராந்தோமை அறிமுக வீரர் டேவிட் வில்லி, பெவிலியனுக்கு அனுப்பினார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட உமேஷ் யாதவ், வில்லியின் துல்லிய த்ரோவில் வெளியேறினார். டிம் சவுத்தி 36 ரன்கள் குவிக்க பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

https://www.vikatan.com/news/sports/124201-ipl-2018-rcb-sets-128-runs-target-to-csk.html

42/1 * (6/20 ov, target 128)
  • தொடங்கியவர்

`கோலியின் விக்கெட்டைக் கொண்டாடாமல் இருந்ததற்கு இதுதான் காரணம்!’ - ஜடேஜாவின் அடடே பதில்

 
 

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின்போது, விராட் கோலியை விக்கெட் எடுத்த பின் ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

DcbbiP2VQAAN-Br_18328.jpg

பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தடுமாறியது. ஏழாவது ஓவரை வீசிய ஜடேஜாவின் முதல் பந்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதனை உற்சாகத்துடன் கொண்டாட வந்த ஜடேஜா பின்பு அமைதியானார். அப்போது, விராட் கோலியின் முகம் கோபத்தில் இருந்தது.

அந்த நேரத்தில், அவர்கள் இருவரும் கொடுத்த ரியாக்ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஐ.பி.எல்-லின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படம் பகிரப்பட்டது. பெங்களூர் அணியின் இன்னிங்ஸ் முடிந்தபின்னர் இதுகுறித்து ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஜடேஜா, `நான், உண்மையில் இன்று என்னுடைய பந்துவீச்சு குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஏனென்றால் நான், சரியான இடத்தில் பந்து வீசினேன். விராட் கோலியை விக்கெட் எடுத்தது என்னுடைய முதல் பந்து. அதனால், நான் கொண்டாட்டத்துக்குத் தயாராகவில்லை. அப்போது நான், ஒரு முக்கியமான விக்கெட் எடுத்ததாக உணர்ந்தேன். எங்கள் அணியில் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. நாங்கள், வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/sports/124205-jadeja-happy-about-for-took-virat-kohlis-wicket.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- ஆர்சிபி-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது சென்னை

 

புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvRCB

 
ஐபிஎல் 2018- ஆர்சிபி-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது சென்னை
 
ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் இன்று முதல் ஆட்டமாக நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா (3) மற்றும் ஹர்பஜன் சிங் (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பார்தீவ் பட்டேல் 53 ரன்னும், டிம் சவுத்தி 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள்.

பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வாட்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். அம்பதி ராயுடு 25 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் அறிமுகமான த்ருவ் ஷோரே 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

5-வது விக்கெட்டுக்கு எம்எஸ் டோனியுடன் வெயின் பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. 18-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் டோனி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். இதற்குப் பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

201805051928501518_1_rayudu-s452._L_styvpf.jpg


இந்த ஓவரின் கடைசி பந்தில் பிராவோ ஒரு ரன் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி 23 பந்தில் 31 ரன்னும், பிராவோ 17 பந்தில் 14 ரன்களும் எடுத்து கடைவி வரை களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 9 போட்டிகளில் 7 வெற்றி மூலம் 14 புள்ளிகள் பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/05192850/1161166/IPL-2018-chennai-super-kings-beats-royal-challengers.vpf

  • தொடங்கியவர்

இரண்டாவது முறையாக பெங்களூரை வீழ்த்திய சென்னை! புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் #CSKvsRCB

 
 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. 

சென்னை கேப்டன் தோனி

புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சென்னை அணி பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக, ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். இந்த ஜோடி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் பார்த்திவ் படேல் 53 ரன்கள் எடுத்தார்.  குறிப்பாக, கோலியின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அதன்பின்னர், ஜடேஜா மற்றும் கோலியின் ரியாக்‌ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு சுமாரான தொடக்கமே அமைந்தது. ஸ்கோர் 18ஆக இருந்தபோது வாட்சன் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த ரெய்னா, அம்பாதி ராயுடுவுடன் இணைந்து சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரெய்னா, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 25 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த சிறிதுநேரத்திலேயே, அம்பாதி ராயுடு மற்றும் துருவ் ஷோரே ஆகியோர் அவுட் ஆகி வெளியேறினர். அப்போது, சென்னை அணி 12.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து கைகோத்த கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் பிராவோ சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெங்களூர் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை சென்னை அணி 18 ஓவர்களில் எட்டியது. தோனி, 31 ரன்களுடனும், பிராவோ 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சாஹல் வீசிய 18வது ஓவரில் தோனி 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். பெங்களூர் அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சென்னை அணி பேட்டிங்கின் போது பெங்களூரு வீரர்கள், முருகன் அஷ்வினின் ஒரே ஓவரில் பிராவோ-வுக்கு 2 கேட்சுகளைத் தவற விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடம் பிடித்தது. 

https://www.vikatan.com/news/sports/124212-ipl-2018-csk-beat-rcb-by-6-wickets.html

  • தொடங்கியவர்

கோலியின் விக்கெட்டை வீழ்த்தியும் கொண்டாடாத ஜடேஜா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

 

 
jade

விராட் கோலி ஆட்டமிழந்துபோனபோது அதை கொண்டாடமல் பார்க்கும் ஜடேஜா   -  படம்உதவி: ட்விட்டர்

புனேயில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி, கொண்டாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிந்திர ஜடேஜாவை நெட்டிசன்கள் விமர்சனத்தால்,வறுத்தெடுத்து வருகிறார்கள்.

புனேயில் இன்று 11-வது ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 128 இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து, 128 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கே அணியில் ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அவர் இந்த 3 துறைகளிலும் சிறப்பாக செயல்படாத நிலையிலும், தோனி தொடர்ந்து அவரை அணியில் நீடித்து வைத்திருக்க காரணம் என்ன என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்தன.

இதில் உச்ச கட்டமாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நரேனுக்கு 2 கேட்சுகளை அடுத்தடுத்து ஜடேஜா கோட்டைவிட்டதால், ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றனர். ஜடேஜாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

இந்தசூழலில், புனேயில் இன்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டு இருந்தார்.

ஆனால், ஜடேஜா வீசுவது சுழற்பந்துவீச்சு என்றபோதிலும், அதிகமாக “டர்ன்” ஆகாது. ஆனால், ஜடேஜா வீசிய 6-வது ஓவரின் முதல்பந்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி “க்ளீன் போல்டாகி” வெளியேறினார். பெங்களூரு அணியின் மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அணியில் மற்ற வீரர்கள் கொண்டாட ரவிந்திர ஜடேஜா மட்டும் விராட் கோலியைப் பார்த்துக்கொண்டே தலையில் கைவைத்து அமைதியாக வந்தார். விராட் கோலி ஒருபுறம் இறுகிய முகத்துடன் முறைத்துக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

jadegajpg

கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் மகிழ்ச்சியின்றி காணப்பட்ட ஜடேஜா

 

ஐபிஎல்

பெங்களூரு அணியின் மிகப்பெரிய விக்கெட் வீழ்த்திய பின்பும் ஜடேஜா கொண்டாடது அனைத்து தரப்பினருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஐபிஎல் அமைப்பு ட்விட்டரில் விடுத்த செய்தியில், ‘ஆர்சிபி அணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியும் ஜடேஜாவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லையா’ என்று கிண்டல் செய்து ட்வீட் செய்தது.

ஐசிசி

ரவிந்திர ஜடேஜாவை கிண்டல் செய்ய ஐசிசி அமைப்பும் தவறவில்லை. அந்த அமைப்பு செய்த ட்விட்டில், ‘இந்திய அணியின் கேப்டனையே வீழ்த்திவீட்டீர்கள் ஜடேஜா ஆனால், மகிழ்ச்சி இல்லையே’ என்று தெரிவித்துள்ளது.

நெட்டிசன்கள்

கோலியை ஆட்டமிழக்கச் செய்தபின்பும் ரவிந்திர ஜடேஜா கொண்டாடாமல் இருந்தது கண்டு நெட்டிசன்களும் அவரை விமர்சித்துள்ளனர். அதில் ‘கோலியை ஆட்டமிழக்கச்செய்து கொண்டாடினால், எதிர்காலத்தில் ஜடேஜாவுக்கு இந்திய அணியில் இடம் இருக்காது அதனால், கொண்டாடாமல் இருந்திருப்பார்’ என்று ஒருசிலர் தெரிவித்தனர்.

ஒரு சிலர் ‘அய்யோ, ஜடேஜா தெரியாமல் உங்கள் இந்திய அணியின் பாஸை(கேப்டனை) ஆட்டமிழக்கச் செய்துவிட்டீர்களே’ எனக் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் விராட் கோலிக்கு ஜடேஜா கடிதம் எழுதுபோல் குறிப்பிட்டுள்ளனர். அதில் ‘விராட், எனக்கு உங்களை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை. மன்னித்துவிடுங்கள், அணியில் இருந்து நீக்கிவிடாதீர்கள்; என்று தெரிவித்துள்ளனர்.

‘ஜடேஜா முதல் முறையாக அதிர்ச்சி அடைந்துள்ளார் ‘என்றும், ‘ அணியின் கேப்டனை ஆட்டமிழக்கச்செய்து எப்படி கொண்டாட முடியும்; என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

ஜடேஜா விளக்கம்

இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிந்தபின், ஜடேஜாவிடம் வர்ணணையாளரிடம் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறுகையில், ‘நான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் கொண்டாடும் மனநிலையிலும் இல்லை. விராட் கோலியின் விக்கெட் மிகப்பெரிய விக்கெட். பந்துவீசுவதற்கு ஏற்றார்போல் ஆடுகளமும் நன்கு ஒத்துழைத்தது’ எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23786238.ece?homepage=true

  • தொடங்கியவர்

‘வில்லன்’ ஜடேஜா ஆட்ட ‘நாயகன்’; சிக்சர்களில் கெய்லைக் கடந்த தோனி: ஆர்சிபியை ஊதியது சென்னை ‘சூப்பர்’ கிங்ஸ்

 

 
dhoni2

வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை வாழ்த்தும் கோலி.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஐபிஎல் 2018-ன் 35வது போட்டியில் ஆர்சிபி அணியை முதலில் பேட் செய்ய அழைத்த தோனி அருமையான பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து அந்த அணியை 127 ரன்களுக்கு மட்டுபடுத்தி பிறகு 18 ஓவர்களில் 128/4 என்று தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.

சாஹலை கடைசியில் ஸ்பின்னுக்கு எதிர்த்திசையில் விளாசி மிட் விக்கெட்டில் ஒரு சிக்சரையும், நோ-பாலில் தோனி எல்பி போல் தெரிந்தது, ஆனால் சாஹல் ஏன் நோ-பால் வீசினார் தெரியவில்லை, அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தில் லாங் ஆஃபில் மீண்டும் தோனி சிக்ஸ். மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப் பாணி சிக்ஸ் 23 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் தோனி 31 நாட் அவுட். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் கெய்ல் அடித்த அதிகபட்ச சிக்சர்களான 25 சிக்சர்களைக் கடந்து 27 சிக்சர்களுடன் தோனி இப்போதைக்கு முன்னிலை வகிக்கிறார்.

 
 

எப்படிப்பார்த்தாலும் ஆர்சிபி அணி வெற்றி பெறப்போவதில்லை என்று நாம் நினைக்கும்படியாகவே அந்த அணி ஆடியது, மீண்டும் கோலியின் கேப்டன்சி உத்வேகமற்று, ஒன்றுமேயில்லாமல் மங்கிப்போனது.

கேப்டன் விராட் கோலி (8), அதிக ஆர்சிபி ஸ்கோரை எடுத்த பார்த்திவ் படேல் (53), மந்தீப் சிங் (7) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்கள் 18 ரன்களுக்கு 3 விக்கெட் என்று ஜடேஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், நேற்று வரை அவர் மீது கடும் கேலிகள், கிண்டல்கள் எழுந்தன, காரணம் அவர் சரியாக ஆடவில்லை, தனது பலமான பீல்டிங்கிலும் கேட்ச்களை விட்டார், ஆனால் இன்று நன்றாக வீசினார். ஆர்சிபியின் சொதப்பல் பேட்டிங்கும் ஒரு காரணம். ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 22 ரன்களுடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்ற மிகப்பெரிய விக்கெட்டுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவரும் ஜடேஜாவும் 8 ஓவர்களை தொடர்ந்து வீசி முடித்து 40 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது ஆர்சிபியை மூழ்கடித்தது.

இந்த வடிவத்தின் முக்கியமான அம்சமே இதுதான் 9.19 என்ற சிக்கனவிகிதம் வைத்திருந்த ஜடேஜா திடீரென மேட்ச் வின்னராகப் பொங்கி எழுந்தார்.

ஆர்சிபியைக் காலி செய்த ஜடேஜா, ஹர்பஜன் சிங்:

பிரெண்டன் மெக்கல்லம், பார்த்திவ் படேல் தொடக்கத்தில் இறங்க, மெக்கல்லம் 5 ரன்களில் இங்கிடி பந்தை சற்றே இறங்கி வந்து ஆட முயன்றார், அவர் ஆஃப் கட்டரை வீச பந்தைத் தொட கொஞ்சம் பிரத்யனப்பட வேண்டியிருந்தது கடைசியில் ஷாட் சரியாக சிக்காமல் தாக்கூரிடம் கேட்ச் ஆனது, இவர் தடுமாறித்தான் இதைப் பிடித்தார்.

ஒரு முனையில் பார்த்திவ் படேல் நன்றாக ஆட விராட் கோலி 3ம் நிலையில் இறங்கினார். ஆனால் அவர் 8 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா வீசிய அவரது முதல் பந்து ரவுண்ட் த விக்கெட்டில் ஆர்ம் பாலாக விழ கோலி கட் செய்ய முயன்று பந்தை விட்டார், பந்து திரும்பும் என்று தவறாக நினைத்தார் கோலி, பவுல்டு ஆகி வெளியேறினார். மந்தீப் சிங் முழு ஆக்ரோஷ ஸ்வீப் ஆடினார் ஆனால் நேராக டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆனது.

virat%20kohli%20bowledjpg

ஜடேஜாவின் நேர் பந்துக்கு பவுல்டு ஆன கோலி.   -  படம். | ரகு.

 

ஹர்பஜன் சிங் ஒரு பந்தை டிவில்லியர்ஸுக்கு பிளைட் செய்ய லேசாக ஆஃப் பிரேக் ஆனது, டிவில்லியர்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு ஆயத்தமானது போல் தெரிந்தது, ஆனால் பந்துக்காக அவர் நீள மட்டையை நீட்ட வேண்டியிருந்தது இதில் அவரது பின் கால் கிரீசைத் தாண்ட பந்து அவரைத் தாண்டி தோனியிடம் சென்றது தோனி அருமையான ஸ்டம்பிங்கைச் செய்தார். ஹர்பஜன் சிங்கை சரியான முனையில் தோனி பயன்படுத்தினார். அதேபோல் ஜடேஜாவுக்கும் துல்லியமான களவியூகம், ஆனால் இருவருமே பந்தை அருமையான முறையில் ஆஃப் ஸ்டம்பில் பேட்ஸ்மென் ரீச்சுக்கு வீசாமல் பிட்ச் செய்தனர். துல்லியமாகவும் வீசினர். ஆனால் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்து திரும்பாததே நடந்தது. இருவரும் 8 ஓவர்கள் வீசி 2 பவுண்டரிகளையே கொடுத்தனர். 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் காலி செய்தனர்.

இத்தனை நாட்களாக ஒதுக்கப்பட்ட பார்த்திவ் படேல் பவர் பிளேயில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசினார். டேவிட் வில்லே, லுங்கி இங்கிடியைப் பதம் பார்த்தார். ஒரு சிக்சர் நேராக சிஎஸ்கே வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு விஜய்யை நோக்கிச் சென்றது. ஆனாலும் பார்த்திவ் படேல் 41 பந்துகளில்தான் 53 ரன்களை எடுத்தார், இடையிடையே பந்துகளை விரயம் செய்ததும் நடந்தது. இவருக்கு அடுத்தபடியாக இரட்டை இலக்கம் எடுத்த வீரர் டிம் சவுதி, இவர் 89/8லிருந்து ஆர்சிபியின் ஸ்கோரை இல்லையில்லை மதிப்பை உயர்த்தினார், 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் டிம் சவுதி. 20 ஓவர்களில் 127/9.

எளிய இலக்கை விரட்டும் சம்பிரதாயம்: சிக்சர்களுடன் முடித்த ‘தல’

பொதுவாக எந்த வித பரிசோதனை முயற்சிகளையும் செய்யாதவர் தோனி, இந்த முறையும் வாட்சன், ராயுடுவே தொடக்கத்தில் களமிறங்கினர். வாட்சன் 11 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ராக்கெட் யார்க்கருக்கு பவுல்டு ஆகி வெளியேறினார்.

ராயுடு மீண்டும் நேர்த்தியான பேட்டிங்கில் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள். துருவ் ஷோரி 8 ரன்களில் அதிசிக்கனமாக வீசிய கொலின் டி கிராண்ட்ஹோமிடம் (4-0-16-1) அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு இதற்கு முன் முக்கியமான போட்டிகளில் பவுலிங் தராதது ஏன்? (உஷ்! கண்டுக்காதீங்க). சிஎஸ்கேவுக்கு எதிரான முந்தைய போட்டியில் சரியாக தோனி பேட் செய்யும் போது பவன் நெகி போன்ற ஒன்றுமேயில்லாத பவுலர்களுக்கு கொடுத்ததும்... உஷ்!

இன்று எப்படியிருந்தாலும் தோல்விதான் என்ற போட்டியில் கொலினுக்குப் பவுலிங்!!

தோனி இறங்கினார் ‘தல’ ரசிகர்களின் உற்சாகத்திற்கு இணங்க சிலபல அதிரடி சிக்சர்களுடன் போட்டியை முடித்து வைத்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம், ஜீரோவிலிருந்து ஹீரோவான ஜடேஜா ஆட்ட நாயகன்.

http://tamil.thehindu.com/sports/article23786591.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018 - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 
அ-அ+

ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #SRHvDD #VIVOIPL

 
 
 
 
ஐபிஎல் 2018 - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
 
ஐதராபாத்:
 
ஐபிஎல் தொடரின் 35-வது லீக்கும், இன்றைய 2-வது ஆட்டமும் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் ப்ரித்வி ஷா, மேக்ஸ்வெல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் ப்ரித்வி ஷா 36 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.
 
201805052341544232_1_PTI5_5_2018_000155B._L_styvpf.jpg
 
ப்ரித்வி ஷா ஆட்டமிழந்ததும் டெல்லி அணியின் ஸ்கோர் வேகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. 16-வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இவர் 36 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 13 பந்தில் 23 ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
201805052341544232_2_DccfXXlU0AAdby-._L_styvpf.jpg
 
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். அவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் ஹேல்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மேக்ஸ்வெல் தவறவிட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹேல்ஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். 
 
5 ஓவர்களில் ஐதராபாத் அணி 34 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஒவரை அனேஷ் கான் வீசினார். முதல் பந்தையே அவர் நோ-பாலாக வீசினார். இதையத்து பிரி ஹிட்டில் தவான் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து அந்த ஓவரின் 3,4 மற்றும் 6-வது பந்துகளில் ஹேல்ஸ் சிக்ஸர் அடித்தார். இதனால் ஆறு ஓவர்களில் ஐதராபாத் அணி 61 ரன்கள் குவித்தது. 
 
8-வது ஓவரை மிஷ்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹேல்ஸ் கிளின் போல்டானார். ஹேல்ஸ் 31 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்தது. மிஷ்ரா வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டானார். அதன்பின் மணிஷ் பாண்டே களமிறங்கினார்.
 
201805052341544232_3_PTI5_5_2018_000172B._L_styvpf.jpg
 
வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஐதராபாத் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பிளங்கீட் வீச அந்த ஓவரின் முதல் பந்திலேயே மணிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார்.
 
கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பதான் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து மூன்றாவது பந்தில் பதான் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டேன் கிறிஸ்டேன் வீசினார். அந்த ஓவரில் யூசுப் பதான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 
 
201805052341544232_4_PTI5_5_2018_000185B._L_styvpf.jpg
 
இறுதியில் ஐதராபாத் அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 32 ரன்களுடனும், யூசுப் பதான் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய அமித் மிஷ்ரா 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/05234154/1161191/IPL-SunRisers-Hyderabad-beat-Delhi-Daredevils-by-7.vpf

  • தொடங்கியவர்

பிராவோ மீது இறுதி ஓவர்களை வீசும் ‘பிரஷர்’ உள்ளதா? - தோனியின் புரிதலுடைய விளக்கம்

 

 
Dhoni21

தோனி. | ஏ.எஃப்.பி.

ஜடேஜாவை ஏன் அணியில் வைத்திருக்கிறார் தோனி? என்ற பரவலாக கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவர் மீது தோனி வைத்த நம்பிக்கைக்கு இன்று ஜடேஜா முக்கியப் பாத்திரமாகத் திகழ்ந்தார். அதுவும் கோலியை பவுல்டு செய்தது திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ஹர்பஜன், ஜடேஜா இருவரும் 8 ஓவர்களில் வெறும் 2 பவுண்டரிகளையே கொடுத்து 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நீண்ட ஒற்றை இலக்க ஸ்கோர்களுக்குப் பிறகு டிம் சவுதியின் 36, பார்த்திவ் படேலின் அரைசதம் காரணமாக 127 ரன்களை ஆர்சிபி எட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் தல தோனியின் அதிரடி சிக்சர்களில் ‘விசில்போடு’ வெற்றியை ஈட்டி முதலிடம் பிடித்தது.

 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரும் இன்றைய வர்ணனையாளருமான முரளி கார்த்திக் சில நல்ல கேள்விகளை தோனியிடம் எழுப்பியபோது தோனி கூறியதாவது:

ஸ்பின்னர்களுக்கு பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை, பிட்சும் கொஞ்சம் ஏற்றத்தாழ்வான பவுன்ஸ் கொண்டதாக இருந்தது. அதனால் ஸ்பின்னர்கள் உண்மையில் நன்றாக வீச வேண்டும் என்று உணர்ந்தேன். இங்குதான் ‘பஜ்ஜிபாஜி, ஜடேஜா நன்றாக வீசினர், என்றார் தோனி.

பிறகு முரளி கார்த்திக், நீங்கள் அதிகம் அணிகளில் மாற்றம் செய்யாதவர், ஆனால் இம்முறை மாற்றங்கள் வருகிறதே என்று கேட்ட போது தோனி, “எங்களுக்கு பவுலிங் மீதுதான் சிறிய கவலை இருந்து வந்தது. சில முந்தைய ஆட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால் எந்த ஒரு தனிப்பட்ட வீரரும் தங்கள் கையில் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது இறுதி ஓவர்களை நான் வீசுகிறேன் என்று ஒருவரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை.

ஆகவே நாக் அவுட் சுற்றுக்கு முன் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசும் பவுலர்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் சில மாற்றங்களைச் செய்து பார்த்தோம்” என்றார்.

உடனே முரளி கார்த்திக், பிராவோ மீது இறுதி ஓவர்களுக்கான முழு பொறுப்பு என்பது அழுத்தம் இருக்கிறதே என்று கேட்டார், அதற்குத் தோனி சிரித்தபடியே இன்று 2 ஓவர்கள்தான் வீசினார் என்றார்.

மேலும், “நாங்கள் 2 ஸ்பின்னர்கள், மீதி வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற சேர்க்கையில் ஆடுகிறோம். இது மற்றவர்களின் அழுத்தத்தைக் குறைத்து பிராவோ இறுதி ஓவர்களை வீசுவதற்கு அனுமதிக்கிறது. அவர் ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆனாலும் எப்போதும் 4 ஓவர்களை அவர் கடைசியில் வீச வேண்டியிருக்காது. அனைவரின் மீதும் அழுத்தம் உள்ளது. 9-10 ஆண்டுகளில் ஒருவரும் ஆட்டத்தை மேம்படுத்தி சீரான முறையில் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற பிட்ச்கள் ஜடேஜாவுக்கு சாதகமானது. விராட், ஏபிடி அவுட் ஆனது அவருக்கு உதவியது. ஆனாலும் அவர் நன்றாகவே வீசினார். அணியும் மொத்தமாக நன்றாகவே வீசியது” என்றார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article23787479.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரும் இன்றைய வர்ணனையாளருமான முரளி கார்த்திக் சில நல்ல கேள்விகளை தோனியிடம் எழுப்பியபோது தோனி கூறியதாவது:

ஸ்பின்னர்களுக்கு பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை, பிட்சும் கொஞ்சம் ஏற்றத்தாழ்வான பவுன்ஸ் கொண்டதாக இருந்தது. அதனால் ஸ்பின்னர்கள் உண்மையில் நன்றாக வீச வேண்டும் என்று உணர்ந்தேன். இங்குதான் ‘பஜ்ஜிபாஜி, ஜடேஜா நன்றாக வீசினர், என்றார் தோனி.

பிறகு முரளி கார்த்திக், நீங்கள் அதிகம் அணிகளில் மாற்றம் செய்யாதவர், ஆனால் இம்முறை மாற்றங்கள் வருகிறதே என்று கேட்ட போது தோனி, “எங்களுக்கு பவுலிங் மீதுதான் சிறிய கவலை இருந்து வந்தது. சில முந்தைய ஆட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால் எந்த ஒரு தனிப்பட்ட வீரரும் தங்கள் கையில் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது இறுதி ஓவர்களை நான் வீசுகிறேன் என்று ஒருவரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை.

ஆகவே நாக் அவுட் சுற்றுக்கு முன் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசும் பவுலர்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் சில மாற்றங்களைச் செய்து பார்த்தோம்” என்றார்.

உடனே முரளி கார்த்திக், பிராவோ மீது இறுதி ஓவர்களுக்கான முழு பொறுப்பு என்பது அழுத்தம் இருக்கிறதே என்று கேட்டார், அதற்குத் தோனி சிரித்தபடியே இன்று 2 ஓவர்கள்தான் வீசினார் என்றார்.

மேலும், “நாங்கள் 2 ஸ்பின்னர்கள், மீதி வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற சேர்க்கையில் ஆடுகிறோம். இது மற்றவர்களின் அழுத்தத்தைக் குறைத்து பிராவோ இறுதி ஓவர்களை வீசுவதற்கு அனுமதிக்கிறது. அவர் ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆனாலும் எப்போதும் 4 ஓவர்களை அவர் கடைசியில் வீச வேண்டியிருக்காது. அனைவரின் மீதும் அழுத்தம் உள்ளது. 9-10 ஆண்டுகளில் ஒருவரும் ஆட்டத்தை மேம்படுத்தி சீரான முறையில் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற பிட்ச்கள் ஜடேஜாவுக்கு சாதகமானது. விராட், ஏபிடி அவுட் ஆனது அவருக்கு உதவியது. ஆனாலும் அவர் நன்றாகவே வீசினார். அணியும் மொத்தமாக நன்றாகவே வீசியது” என்றார் தோனி.

 

தோனிக்கு இந்திய கப்டன் பதவி சும்மா வந்ததாக பலர் நினைக்க கூடும்.மிகப்பொறுப்பானதும் கெட்டித்தனமானதுமான பதவி என்பதை பலர் தமது பேட்டிகளில் மறந்து போயுள்ளனர்.
தோனியின் தரமே சிறிய சிரிப்புடன் கள நிலமையை சாதுரியமாக பயன்படுத்துவதே.
அவரின் தலைமைத்துவ திறமை உலகின் வெகு சிலருக்கே உண்டு என்பதை பல பேட்டியாளர்கள் மறந்து விடுகிறார்கள்.
பல போட்டிகளில் அவரின் விக்கட் காக்கும் திறமையும் ஒவ்வொரு ஓட்டமாக தனது நாட்டை காப்பாற்றும் நிலைமையாகட்டும் திறமையாட்டும் ,அல்லது கள தடுப்பு நிலைமையாகட்டும் தொனியின் திறமை தனித்தே தெரியும்.
ஆனாலும் சில பேட்டியாளர்கள் அவரை கடுப்பேத்தி தமது சுயநலத்தை காட்டுபவர்களையும் தோனி மிக திறமையாக கையாண்டுள்ளார்.

  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்கள், ஸ்டம்பிங்குகளில் தோனி புது சாதனை!

 

 
dhoni

 

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 35-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53, டிம் சௌத்தி 36* ரன்கள் சேர்த்தனர். சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 32, தோனி 31* ரன்கள் எடுத்தனர். இப்போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனி இரு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்தவர்கள் பட்டியலில் ராபின் உத்தப்பாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பர்கள் விவரம் பின்வருமாறு:

  • ராபின் உத்தப்பா, மகேந்திர சிங் தோனி - 32
  • தினேஷ் கார்த்திக் - 28
  • ரித்திமான் சாஹா - 18
  • ஆடம் கில்கிறிஸ்ட் - 16
  • பார்திவ் படேல் - 14

 

அதுபோல நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசி புது சாதனையைப் படைத்துள்ளார். ஒரு சீசனில் தோனியின் அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

  • 2018 (நடப்பு சீசன்) - 27 சிக்ஸர்கள் (இந்த சீசனில் இன்னும் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், அவரது சிக்ஸர்களின் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது).
  • 2013 - 25 சிக்ஸர்கள்
  • 2011 - 23 சிக்ஸர்கள்
  • 2014 - 20 சிக்ஸர்கள்

http://www.dinamani.com/sports/special/2018/may/05/most-stumpings-in-ipl-most-sixes-in-an-ipl-season-for-dhoni-2913927.html

  • தொடங்கியவர்

வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: கொல்கத்தாவை சமாளிக்குமா மும்பை?

 

 
06CHPMUROHITSHARMA

ரோஹித் சர்மா   -  AFP

 
 

ரோஹித் சர்மா   -  AFP

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் மறுஎழுச்சி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நேற்றுமுன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அந்த அணியின் நம்பிக்கையானது இன்னும் ஊசலாடிய நிலையில்தான் உள்ளது. அதேவேளையில் கடைசியாக கிடைத்த வெற்றியானது அந்த அணியை புள்ளிகள் பட்டியலில் கணிசமான இடத்துக்கு முன்னேறச் செய்துள்ளது. 9 ஆட்டங்களில், 3 வெற்றி, 6 தோல்விகள் கண்டுள்ள மும்பை அணி கடைசி இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தாவியுள்ளது.

எனினும் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு வசப்படும். பஞ்சாப் அணிக்கு எதிராக இறுதிக்கட்டத்தில் கிருணல் பாண்டியா, ரோஹித் சர்மா ஜோடி 21 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இதேபோல் தொடக்க வீரரான சூர்யகுமார் யாதவும் அரை சதம் விளாசி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான எவின் லீவிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். சொந்த மைதானத்தில் அவர், அதிரடி பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜேபி டுமினி ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். பந்து வீச்சில் இறுதிகட்ட ஓவர்களில் அதிக ரன்ளை வாரி வழங்குவது இன்னும் தொடர்கதையாக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக மெக்லீனகன் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை வாரி வழங்கினார். அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஜஸ்பிரித் பும்ரா, பென் கட்டிங், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம். இவர்களுடன் பாண்டியா சகோதரர்களும் பந்து வீச்சில் வலுசேர்க்க முயற்சிக்க வேண்டும். மும்பை அணி இந்த சீசனில் தனது சொந்த அணியில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடிய ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சொந்த மண்ணில் விளையாடினாலும் அந்த அணி கூடுதலாக மெனக் கெட வேண்டியதுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது பாணியில் சிறப்பாக வழி நடத்தி வருகிறார் தினேஷ் கார்த்திக். 9 ஆட்டத்தில் விளையாடிய உள்ள அந்த அணி 10 புள்ளிகளை பெற்று வலுவாகவே உள்ளது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. தினேஷ் கார்த்திக் 280 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதேபோல் 260 ரன்கள் சேர்த்துள்ள கிறிஸ் லின், 207 ரன்கள் எடுத்துள்ள ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர்.

டாப் ஆர்டரில் சுனில் நரேன் தனது அதிரடியால் சிறப்பான தொடக்கம் கொடுப்பது பலமாக உள்ளது. இளம் வீரரான சுப்மான் கில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 36 பந்தில் 57 ரன்கள் விளாசிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ராபின் உத்தப்பாவிடம் இருந்து மட்டுமே இதுவரை பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். முதுகுவலியில் இருந்து குணமடைந்துள்ள நித்திஷ் ராணா இன்று களமிறங்கும் பட்சத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். வேகப்பந்து வீச்சில் டாம் குர்ரன், மிட்செல் ஜான்சன், சிவம் மாவி ஆகியோர் கூடுதல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23791445.ece

  • தொடங்கியவர்

ஐந்து ஓவர்கள் பவுண்டரியே இல்லை... , சேஸிங்கில் இது பெஸ்ட்... ஹைதராபாத் வென்றது எப்படி?! #SRHvDD

 
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிரட்டும் பேட்டிங் பட்டாளம் இல்லை; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. 30 பந்துகளில் பவுண்டரியே இல்லை. ஆனாலும், ஹைதராபாத் வெற்றிபெற்றுள்ளது. இந்த சீசனில் முதன்முறையாக அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்துள்ளது. பெளலிங் மட்டுமல்ல பேட்டிங் மூலமும் ஜெயிக்க முடியும் என நிரூபித்துள்ளது. #SRHvDD

#SRHvDD

சன்ரைசர்ஸ்– டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. டெல்லி அணியில் காலின் முன்ரோ, ஷபாஸ் நதீம் ஆகியோருக்குப் பதிலாக கிறிஸ்டியன், நமன் ஓஜா வாய்ப்பு பெற்றனர். முதுகு வலியில் இருந்து குணமடைந்த புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்பி ஹைதராபாத் அணியின் பெளலிங் யுனிட்டுக்குப் பலம் சேர்த்தார். முதலில் பேட் செய்த போட்டிகளில் எல்லாம் வெற்றிபெற்றிருப்பதால், டாஸ்  வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ். இளம் புயல் பிரத்வி ஷா உடன் ஓப்பனிங் இறங்கினார் மேக்ஸ்வெல்.

விளையாட்டு என்பது கலை அல்ல. அதில் நளினம் வெளிப்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாறாக, விளையாட்டில் நளினம் சேரும்போது ரசனை இரட்டிப்பாகிறது. இன்றைய டி-20 யுகத்தில், ரசனையுடன் கூடிய நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய ஜென்ஸி பேட்ஸ்மேன்கள் அரிதினும் அரிது. டெல்லி அணியின் பிரித்வி ஷா அவர்களில் ஒருவர்.

#SRHvDD

சந்தீப் ஷர்மா குட் லென்த்தில் வீசிய பந்தை அலட்டாமல் லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிட்டு, அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் வந்த பந்தை பாயின்ட் – பேக்வார்ட் பாயின்ட்டுக்கு இடையே கட் ஷாட் மூலம் பெளண்டரி அடித்து, ஷாகிப் அல் ஹசன் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸர் பறக்கவிட்டு, லெக் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஃப்ளிக் செய்து வெரைட்டி விருந்து படைத்தார் பிரித்வி ஷா. இது அதீத மிகைப்படுத்தல் என்றாலும், இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். பெளலர் சந்தீப் ஷர்மாவின் கைகளில் பட்டு, மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகக் காரணமாக இருந்தது, ஒரு அற்புதமான ஸ்ட்ரெய்ட் டிரைவ் என்பது சோக முரண்.  

ஆட்டத்துக்கு ஆட்டம் பிரித்வி ஷா தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு, சித்தார்த் கவுல் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசியதை எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸருக்கு அனுப்பியதும் அடுத்தடுத்த மூன்று பந்துகளை ஹாட்ரிக் பவுண்டரி அடித்ததுமே சான்று. மூன்று  பவுண்டரிகளுமே வெவ்வேறு ரகம். ஃபிளிக், கட், புல் ஷாட் என பக்கா கிரிக்கெட் ஷாட்கள். இந்த சீசனில் பெஸ்ட் பெளலிங் யுனிட்டுக்கு எதிராக கவனமாகவும், நேர்த்தியாகவும் அதேநேரத்தில் பவர்பிளேவில் ரன் ரேட் குறையாமலும் பார்த்துக்கொண்ட பிரித்வி, அரைசதம் அடித்தது 25 பந்துகளில்... எந்த இடத்திலும் தொய்வே இல்லை. அதனால்தான், பிரித்வி ஷா ஆட்டத்தைப் பார்த்த, ஹர்ஷா போக்ளே `இன்றைய இளம் தலைமுறை பேட்ஸ்மேன்கள் செட்டிலாக அதிக பந்துகளை எடுத்துக்கொள்வதில்லை’ என ட்விட்டரில் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.

#SRHvDD

கேப்டன் என்ற முறையில் பொறுப்புணர்ந்து பிரித்வியின் ஆட்டத்தை எதிர்முனையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தனக்கான சந்தர்ப்பம் வரும்போது அதைப் பயன்படுத்தவும் தவறவில்லை. ஷகிப் அல் ஹசனின் பந்தில் ஃபிரன்ட் ஃபுட்டில் தான் ஸ்ட்ராங் என்பதை நிரூபிக்க லாங் ஆனில் ஒரு சிக்ஸரும், பேக் ஃபுட்டில் அதைவிட ஸ்ட்ராங் என்பதைச் சொல்ல பேக்வார்ட் பாயின்ட் – ஷார்ட் தேர்ட் மேனுக்கு இடையே கட் ஷாட் மூலம் பெளண்டரியும் தட்டிவிட்டபோது ரன்ரேட் பத்துக்கும் குறைவில்லாமல் போய்க்கொண்டிருந்தது. பிரித்வி – ஷ்ரேயாஸின் பக்கா பார்ட்னர்ஷிப்பில் டெல்லி 10 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்திருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கூக்ளி, லெக் ஸ்பின் என பந்துக்குப் பந்து வேரியேஷன் காட்டும் ரஷித் கான் வீசிய முதல் ஓவரை நேர்த்தியாக எதிர்கொண்ட பிரித்வி, ரஷித் வீசிய இரண்டாவது ஓவரில் ஏமாந்தார். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஸ்வீப் செய்ய முயல, அது டாப் எட்ஜாகி ஷார்ட் தேர்ட் மேன் திசையில் இருந்த சித்தார்த் கெளல் கையில் சிக்கியது. பிரித்வி ஷா 65 ரன்களில் (35 பந்து) அவுட். Excellent innings comes to an end.

ரிஷப் பன்ட் உடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ், பொறுப்பாகத்தான் ஆடினார். ஆனால், சித்தார்த் கவுல் பந்தில் ஃபிளிக் செய்ய முயன்று டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஷிகர் தவனிடம் கேட்ச் கொடுத்து, 44 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து, இந்த சீசனின் முதல் போட்டியில் களமிறங்கிய நமன் ஓஜா, களத்தில் இருந்த சுவடே தெரியாமல் அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் திரும்பினார். அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரிஷப் பன்ட், ரஷித் கான் சுழலில் கொஞ்சம் திணறினார். தவிர, சன்ரைசர்ஸ் பெளலர்கள் ரிஷிப் பன்ட்டுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என பக்கா ஹோம்வொர்க் செய்திருந்தனர். கடைசியாக, ரஷித் பந்தில் எல்பிடபுள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் ரிஷப் பன்ட். பவர்பிளேவில் நன்றாக ஆடிய டெல்லி, மிடில் ஓவரில் ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொண்ட டெல்லி, 15-வது ஓவருக்குப் பின் ரொம்பவே தடுமாறியது. 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

#SRHvDD

இமாலய சிக்ஸர்கள் பறக்க விட வேண்டிய கடைசி இரண்டு ஓவர்களில் விஜய் சங்கர், கிறிஸ்டியன் இருவரும் தடவிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக புவி வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டார் விஜய் சங்கர். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது டெல்லி.

சன்ரைசர்ஸ் இந்த சீசனில் 126, 148, 139 ரன்களை சேஸ் செய்துள்ளது. 194, 183 ரன்களை சேஸ் செய்தபோது தோல்வியடைந்துள்ளது என்பதால், டெல்லி நிர்ணயித்த 164 ரன்கள் என்பது அவர்களுக்கு சவாலான இலக்குதான். அதை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தது ஷிகர் தவன் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி. மேக்ஸ்வெல்லுக்கு நேற்று கட்டம் சரியில்லை. பேட்டிங்கின்போது எதிர்பாரா முறையில் ரன் அவுட்டானவர், அலெக்ஸ் ஹேல்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்சை மிஸ் செய்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்ல பேட்ஸ்மேனுக்கு அழகு. ஹேல்ஸ் நல்ல பேட்ஸ்மேன். ஒரு காலத்தில் டி-20 தரவரிசையில் நம்பர் -1 இடத்தில் இருந்தவர். அவேஷ் கான் வீசிய ஓவரில் நான்கு சிக்ஸர்கள் பறக்கவிட்டு, தான் யார் என்பதை நிரூபித்தார். பவர்பிளே முடிவில் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தது.

#SRHvDD

சன் ரைசர்ஸ் ஸ்பின்னர்களை வைத்தே மிரட்டியது. இதைப் புரிந்து ஆரம்பத்தில் இருந்தே அமித் மிஸ்ராவுக்கு ஓவர் கொடுத்திருக்க வேண்டும். கொஞ்சம் லேட்தான் என்றாலும், மிஸ்ரா தான் ஒரு பிரமாதமான லெக் ஸ்பின்னர் என்பதை அந்த ஒற்றைப் பந்தில் நிரூபித்தார். லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சான பந்து அலெக்ஸ் ஹேல்ஸ் உடம்பை முற்றிலுமாக கிராஸ் செய்து, ஆஃப் ஸ்டம்ப்பைத் தகர்த்தது. அற்புதமான டர்ன். அழகான ஸ்பின். இந்த டோர்னமென்ட்டின் சிறந்த பந்து. லெக் ஸ்பின்னர்களின் கனவு பந்து. டிபிக்கல் ஷேன் வார்ன் ஸ்டைல். ஆபத்தான ஹேல்ஸ் 45 ரன்களில் அவுட். டெல்லிக்கு ஒரு பிரேக்த்ரோ.

தன் அடுத்த ஓவரில் ஹைதராபாத் ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி கொடுத்தார் மிஸ்ரா. டி-20 பேட்ஸ்மேன்களுக்கான கேம். அதில் பெளலர்கள் வெல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு பந்திலும் வேரியேஷன்களைப் புகுத்த வேண்டியது அவசியம். அமித் மிஸ்ரா அதில் தேர்ந்தவர் போல தெரிந்தார் நேற்று. ஷிகர் தவன் விக்கெட்டை எடுக்க அவர் தேர்ந்தெடுத்த யுத்தி பாராட்டுக்குரியது. தவன் அவுட்டாவதற்கு முன் அமித் மிஸ்ரா வீசியது Wide. மிடில் ஸ்டம்ப் லைனில் குட் லென்த்தில் விழுந்த பந்து, தவன் ஃபிளிக் செய்ய முடியாத அளவு சுழன்று, wide ஆனது. அப்போதே தவன் சுதாரித்திருக்க வேண்டும். சுதாரிக்கத் தவறிவிட்டார். அடுத்த பந்தை தடுக்கத் தவறிவிட்டார். கடந்த முறையை விட சற்று முன்னதாக, ஆனால் அதே மிடில் லைனில் பிட்ச்சான பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் தவன். பந்து அவரை ஏமாற்றி மிடில் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. 33 ரன்களில் ஷிகர் தவன் அவுட்.

#SRHvDD

மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் இருவருமே செட்டிலாக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வர். 48 பந்துகளுக்கு 72 ரன்கள் தேவை என்ற நிலையிலும் அவர்கள் சிங்கிள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். டவுன் தி லைன் வந்து அட்டகாசமாக சிங்கிள் தட்டினர். டெல்லி இறுக்கிப் பிடித்தது. 30 பந்துகள் வரை ஒரு பவண்டரி கூட அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது. நெருக்கடி ஹைதாபராத் பக்கம் எட்டிப் பார்த்தது. 6 ஓவர்களில் 62 ரன்கள் தேவை. ரன்ரேட் 10.33 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், அப்போதும் வில்லியம்சன் – மணிஷ் ஜோடி பதற்றமின்றி இருந்தனர்.

#SRHvDD

 

ஒரு வழியாக கிறிஸ்டியன் வீசிய 15-வது ஓவரில் மணிஷ் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாச, அவேஷ் கானின் அடுத்த ஓவரில் பேக்வார்ட் பாயின்ட்டுக்கு மேலே வில்லியம்சன் சிக்ஸர் விரட்டினார். ஹைதராபாத் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால், 16-வது ஓவரை அட்டகாசமாக வீசினார் போல்ட். தன் முதல் இரு ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்திருந்த அவர், தன் மூன்றாவது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை. 18-வது ஓவரில், வழக்கம்போல, மணிஷ் பாண்டே (21 ரன்) தூக்கிக் கொடுத்து அவுட்டானார். யுசுஃப் பதானை மலையென நம்பினர் ஹைதராபாத் ரசிகர்கள். அவரை டக் அவுட்டில் அனுப்பியிருக்கலாம். டீப் ஸ்கொயர் லெக்கில் அவர் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் விஜய் சங்கர். அப்போதே மேட்ச் ஹைதராபாத் பக்கம் வந்துவிட்டது.

பிளெங்கெட் 18-வது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே கொடுக்க, டென்ஷனில் நகத்தைக் கடித்துத் துப்பினர் ரசிகர்கள். 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை. போல்ட் வீசிய 19-வது ஓவரில் முதல் பால் சிக்ஸர் அடித்தார் யுசுஃப். அடுத்த பந்தில் எல்பிடள்யு. சன்ரைசர்ஸ் ரிவ்யூ கோரியது. கேன் வில்லியம்சனின் கணிப்பு சரி. யுசுஃப் நாட் அவுட். அடுத்த பந்தில் பேக்வார்ட் பாயின்ட்டில் உருண்டது பவுண்டரி. அடுத்த பந்து வைடு. 19 ஓவர் முடிவில் ஸ்கோர் 153.

கடைசி ஓவர். தேவை: 14 ரன்கள். பெளலர்: பிளெங்கெட்

முதல் பந்து – யுசுஃப் – 2 ரன்

2-வது பந்து - யுசுஃப் – சிக்ஸர்

3-வது பந்து – யுசுஃப் - 4 ரன்

4-வது பந்து – யுசுஃப் - 1 ரன்

5-வது பந்து – வில்லியம்சன் – 1 ரன்

 

ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. யுசுஃப் 12 பந்துகளில் 27 ரன்களும், வில்லியம்சன் 32 ரன்களும் எடுத்து கடைசிநேரத்தில் வெற்றிக்கு வழிவகுத்தனர். ரஷித் கான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ். பத்தில் ஏழு போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

https://www.vikatan.com/news/sports/124244-srh-wins-dd-in-a-steady-chase.html

  • தொடங்கியவர்

வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் பஞ்சாப் அணி: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

18CHPMUCHRISGAYLE

பயிற்சியில் ஈடுபட்ட பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில்.   -  படம்: அகிலேஷ் குமார்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் அடுத்தடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் முதல் சீசனில் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் 8 ஆட்டங்களில், 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளன. எனினும் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கக்கூடிய அணிகளுள் ஒன்றாகவே இருந்து வருகிறது.

அந்த அணி கடைசி ஆட்டத்தில் நேற்றுமுன்தினம் சொந்த மைதானத்தில் மும்பை அணியிடம் வீழ்ந்த போதிலும் மீண்டெழும் திறனை கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. தொடக்க வீரரான கிறிஸ் கெயில் சிறந்த பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. மும்பை அணிக்கு எதிராக அரை சதம் விளாசிய அவர், மீண்டும் ஒரு முறை மட்டையை வலுவாக சுழற்றக்கூடும். மும்பை அணிக்கு எதிராக இறுதி கட்ட ஓவர்களில் பஞ்சாப் அணி அதிக ரன்களை தாரைவார்த்தது. இதனால் இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

ராஜஸ்தான் அணியில் கவனிக்கப்பட கூடிய வீரராக திகழ்கிறார் ஜாஸ் பட்லர். டெல்லி அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரை சதம் விளாசிய அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ராஜஸ்தான் அணி கடைசியாக ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் ஹைதராபாத், டெல்லி அணிக்கு எதிராக வீழ்ச்சி கண்டிருந்தது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென்றால் பேட்டிங்கில் ரஹானே, டி ஆர்சி ஷாட், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் ஒருங்கிணைந்த செயல்திறனை வெளிப்படுத்துவது அவசியம். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், குல்கர்னி, கவுதம் ஆகியோர் நெருக்கடி தரக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23791442.ece

  • தொடங்கியவர்

எட்டாவது ஓவரிலேயே ஆர்.சி.பி-யின் கதை முடிந்தது, எப்படி?! #CSKvsRCB

 
 

 

சென்றமுறை சொந்த புற்றிலேயே அடிவாங்கி ஓடிய ஆர்.சி.பி எனும் பாம்பு, `டேய், பாம்புக்கு பாயா போட்டாலும் சரி, பனியாரம் போட்டாலும் சரி, அது என்னைக்குமே பணியாது. இந்த பாம்பு பலநாள் தேக்கி வெச்சிருக்க விஷத்தை உன் மேல இந்தமுறை கக்கியே தீரும்' என வெறியோடு புனேவுக்கு ஃபிளைட் ஏறியது. ஃப்ளைட்டில் கூடவே ஏபிடி வில்லியர்ஸும் ஆரோக்கியமாய் ஏற, இன்னும் நம்பிக்கையுடன் சென்னையோடு களமாட கிளம்பிவந்தார்கள். முந்தைய போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவிய சென்னை அணியும், இந்தப் போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வண்டியை வெற்றிப்பாதைக்கு திருப்பிவிட வேண்டுமென திடமாய் இருந்தது.  டேவிட் வில்லி மற்றும் துருவ் ஷோரியை கேப்டன் கூல் அணிக்குள் அழைத்தது ரசிகர்களுக்கு நிறைய புத்துணர்ச்சி ஊட்டினாலும், `இந்த மேட்ச்லேயும் ஜடேஜா ஆட்றாப்லயா, ஆத்தி' என கொஞ்சம் அதிர்ச்சியும் அடைந்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் ஜெயித்து, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் பிறகு நடந்தவை... #CSKvsRCB

#CSKvsRCB

`சோட்டா ஹைடன்' பார்த்தீவ் படேலும் பிரென்டன் மெக்கலும் ஆர்.சி.பி அணிக்கு ஓபன் செய்தனர். தனது முதல் ஐ.பி.எல் போட்டியை டாட் பாலோடு ஆரம்பித்தார் டேவிட் வில்லி. முதல் ஓவரின் கடைசி பந்தை, பேக்வார்ட் பாயிண்ட் மற்றும் ஷார்ட் தர்ட் மேனுக்கு இடையிலிருந்த கேப்பை பயன்படுத்தி பவுண்டரிக்கு தட்டிவிட்டார் மெக்கலம் - 5 (3). அடுத்த ஓவரிலேயே, இங்கிடியின் ஆஃப் கட்டரில் தாகூரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். `எல்லா சீசன்லேயும் ஒரு நாலு மேட்ச் மட்டும் நல்லா அடிப்பார். அந்த நாலு மேட்ச்ல இந்த மேட்ச் இல்லை. ஈ சாலா கப்பும் நம்மளுதில்லை' என தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். அதே ஓவரில் பார்த்தீவ் படேல், இரண்டு பவுண்டரிகளை விரட்டி கொஞ்சம் நம்பிக்கையளிக்க, `வந்துட்டார்யா சிங்கக்குட்டி, ஈ சாலா கப் நம்தே' என மறுபடியும் ஆரவாரமானர்கள். பார்த்தீவ் - கோலி பார்டனர்ஷிப்பில் அணிக்கு 38 ரன்கள் கிடைத்தது. அந்த நேரத்தில்தான் ஏழாவது ஓவரை வீச, ஜடேஜா வந்தார். போட்ட முதல் பந்திலேயே கேப்டன் கோலி - 8 (11) க்ளீன் போல்டு. அவுட்டான கோலியைவிட, அவுட்டாக்கிய ஜடேஜாதான் அதிகமாய் அதிர்ச்சியானார். மனிதரின் முகத்தில் சென்டிமீட்டர் சைஸ்கூட சிரிப்பில்லை. அதற்கடுத்த ஓவரிலேயே ஹர்பஜன் வீசிய பந்தைப் பிடித்து ஏபிடி வில்லியர்ஸை - 1 (4) ஸ்டம்பிங் செய்தார் தோனி. ஹர்பஜன் வீசிய ஆஃப் ஸ்பின்னை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் ஏபிடி மிஸ் செய்ய, அந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பெயில்களை மின்னல் வேகத்தில் தோனி தட்டிவிட்டார் . அடுத்தடுத்த ஓவர்களில் கோலியையும் ஏபிடியையும் இழந்து 8வது ஓவரிலேயே தவழ்ந்து கொண்டிருந்தது ஆர்.சி.பி.

#CSKvsRCB

ஒருபுறம் ரன்ரேட் குறைந்து கொண்டுபோக, மறுபுறம் மந்தீப் - 7 (13) மற்றும் பார்த்தீவ் - 53 (41) விக்கெட்டுகளை கழட்டிக் கொண்டிருந்தார் ஜடேஜா. எப்போதும் ஃப்ளாட்டாக `வ்ரூட் வ்ரூட்' என வீசும் ஜடேஜா, இந்த போட்டியில் பந்தைக் கொஞ்சம் தூக்கிப்போட்டு பேட்ஸ்மேன்களுக்கு அடித்தாட ஆசையைத் தூண்டினார். அதற்கேற்றார்போல் தோனியும் லாவகமாக ஃபீல்ட் செட் செய்ய, `ஒருத்தனை ஏமாத்தனும்னா அவனுக்கு ஆசையை தூண்டனும்' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு சதுரங்கவேட்டை ஆடினார்கள் இருவரும். 'ஜடேஜா ஃபேன்டஸி லீக் விளையாடினால் அவரே அவரை டீம்ல எடுக்கமாட்டார், அவரை ஏன் தோனி ஒவ்வொரு மேட்ச்சிலும் ஆடவைக்கிறார்' எனும் பெரும் குழப்பத்துக்கு இன்று பதில் கிடைத்தது. ஆனால், எந்த விக்கெட்டிற்கும் துளியளவுகூட அவர் முகத்தில் புன்னகையில்லை, ஒருவித ஜென் நிலையிலேயே இருந்தார். அவரின் சுழலில் சிக்கிய ஆர்.சி.பி பிறகு மீளவேயில்லை. பார்த்தீவ், சவுதி எனும் இரண்டு வீரர்களை தவிர அணியில் யாருமே இரண்டு இலக்க ஸ்கோரை தொடவில்லை. சவுதியின் கடைசி நேர அதிரடியில் 127 எனும் ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்டியது ஆர்.சி.பி.

`127-தானே. இரண்டு பாயிண்ட் நமக்குத்தான்' என ஆசுவாசமானார்கள் சென்னை ரசிகர்கள். ஏதோ பத்து ஓவரிலேயே மேட்சை முடித்துவிட்டு செல்ல முடிவெடுத்தாற்போல், சவுதி வீசிய முதல் பந்தையே ஸ்வீப்பர் கவர் திசையைப் பார்த்து `பளார்'  என வைத்தார் வாட்சன். முதல் ஓவரில் ஒன்பது ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி முன்னேற ஆரம்பித்தது சி.எஸ்.கே. அதற்கடுத்த ஓவரிலேயே அதற்கு முட்டுக்கட்டைப் போட்டார் சாஹல். மெய்டன் ஓவர்! பவர் ப்ளேயில் ஒரு மெய்டன் ஓவர். அரங்கமே அரண்டுபோனது! மூன்றாவது ஓவரில் உமேஷ் வீசிய புயல்வேக யார்க்கருக்கு ஆஃப் ஸ்டெம்ப்பை காவு கொடுத்துவிட்டு கிளம்பினார் வாட்சன் - 11 (14). இரண்டாவது விக்கெட்டுக்கு, ராயுடுவும் ரெய்னாவும் இணைந்து 44 ரன்கள் சேர்த்தனர். சவுதி வீசிய ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசி கெத்து காட்டினார் `ஆரஞ்சு கேப்' அம்பதி ராயுடு. ஒன்பதாவது ஓவரில் ரெய்னாவின் - 25 (21) விக்கெட்டையும் சாய்த்தார் உமேஷ். பவுண்டரி லைனில் வைத்து `ஆக்குபாக்கு வெத்தலைபாக்கு' கேட்ச் பிடித்து தாறுமாறு காட்டினார் சவுதி. பிறகு, அறிமுக வீரர் ஷோரி களமிறங்கினார். 

#CSKvsRCB

 

முருகன் அஸ்வின் வீசிய 12-வது ஓவர், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை சென்னையின் பக்கம் பிரகாசமாய் டாலடித்துக் கொண்டிருந்த வெற்றி வாய்ப்பு, கொஞ்சமாய் டல்லடிக்க ஆரம்பித்தது. அஸ்வினின் ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து, அம்பதி ராயுடுவின் - 32 (25) விக்கெட்டையும் இழந்தது சி.எஸ்.கே. அதற்கடுத்த ஓவரிலேயே ஷோரியும் - 8 (9) கிராந்தோம் பந்தில் அவுட்டாக, `எங்கடா அந்த பிரஷ்ஷர் மாத்திரை' என சி.எஸ்.கே ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். தோனியும் பிராவோவும் கட்டையைப் போட்டு, மேட்ச்சை உருட்ட ஆரம்பிக்க, மைதானத்தில் இருந்தவர்கள் தலையில் கைவைத்தார்கள். 17-வது ஓவரின் முடிவில் 18 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில், நிறைய நம்பிக்கையோடு பந்துபோட வந்த சாஹலை நொந்து போகவைத்தார் தோனி. சாஹல் போட்ட ஒரே ஓவரில் 22 ரன்களையும் அடித்து ( 3 சிக்ஸர்கள் அடக்கம் ) மேட்ச்சை முடித்து வைத்தார்கள்.  ஆட்டநாயகனாக 'ஜென் துறவி' ஜடேஜா ( 4 - 18 - 3) தேர்ந்தெடுக்கபட்டார். சி.எஸ்.கே முன்பு படமெடுத்து ஆடவேண்டுமென வந்த ஆர்.சி.பி, மறுபடியும் சி.எஸ்.கே காட்டிய படத்தில் ஆடிப்போனார்கள். இந்த சீசனில் கோலி ஆர்.சி.பி டீமை அல்ல, அவெஞ்சர்ஸ் டீமையே கூட்டிவந்து விளையாடினாலும் கப் அவருக்கில்லை என்பது தெள்ளத்தெளிவாய் தெரிகிறது. வெஞ்சன கின்னம் கூட கிடைக்காது!

https://www.vikatan.com/news/sports/124262-it-seems-rcb-can-never-win-csk.html

https://www.vikatan.com/news/sports/124262-it-seems-rcb-can-never-win-csk.html

  • தொடங்கியவர்

`தொடர்ந்து 7வது தோல்வி!’ - கொல்கத்தாவைத் துரத்தும் மும்பை ராசி #MIvsKKR

 
 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி

Photo: Twitter/IPL

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் எல்வின் லீவிஸ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தது. லீவிஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், 59 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் பாண்ட்யா 35 ரன்கள் எடுக்க மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ரஸல், நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

 

182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. 28 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி தொடக்க வீரர்கள் லின் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை இழந்தது. இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா - நிதிஷ் ராணா ஆகியோர் கொல்கத்தா அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. உத்தப்பா 54 ரன்களிலும், ராணா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களின் விக்கெட்டை அடுத்தது இழந்த கொல்கத்தா அணிக்கு பிரஷர் அதிகமானது. சிறிதுநேரத்தில் அதிரடி வீரர் ரஸலும் நடையைக் கட்ட, மொத்த பிரஷரும் கேப்டன் தினேஷ் கார்த்திக் மீது விழுந்தது. வழக்கமாக தொடக்க வீரராகக் களமிறங்கும் சுனில் நரேன், இந்த போட்டியில் 7-வது வீரராகக் களமிறங்கினார். ஆனால், அவரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் கொல்கத்தா அணியில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சுழற்பந்து வீச்சாளர் குர்ணால் பாண்ட்யாவை பந்துவீச அழைத்தார் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. கடைசி ஓவரில் கொல்கத்தா அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கெதிராக மும்பை அணி தொடர்ச்சியாகப் பதிவு செய்யும் 7-வது வெற்றி இதுவாகும்.  

https://www.vikatan.com/news/sports/124285-ipl-2018-mi-beat-kkr-by-13-runs.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018 - ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. #VIVOIPL #IPL2018 #KXIPvRR

ஐபிஎல் 2018 - ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
 
இந்தூர்:
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டமும், 38-வது லீக்கும் இந்தூரில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
201805062334231071_1_PTI5_6_2018_000161B._L_styvpf.jpg
 
நம்பிக்கை வீரர்களான சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் ஓரளவிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 24 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 2 விக்கெட்டும், அஸ்வின், ராஜ்பூட், அக்சார் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 
 
201805062334231071_2_PTI5_6_2018_000185B._L_styvpf.jpg
 
தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி இதுவரை களமிறங்கிய ஐந்து போட்டிகளிலும் 50 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ளது. இந்த போட்டியில் இருவரும் நிதானமாக விளையாடினர். மூன்றாவது ஓவரை கவுதம் வீசீனார். அந்த ஓவரில் ராகுல் மூன்று பவுண்டரிகள் அடித்தார். அதனால் அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. 
 
4-வது ஓவரை ஜோப்ரா ஆர்சர் வீசீனார். அந்த ஓவரின் முதல் பந்தை கெய்ல் பவுண்டரிக்கு துரத்தினர். அடுத்த பந்திலேயே கெய்ல் 8 ரன் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சனிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மயன்க் அகர்வால் களமிறங்கினார். அதற்கு அடுத்த ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் மயன்க் அகர்வால் 2 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கருண் நாயர் களமிறங்கினார். 
 
பஞ்சாப் அணி ஆறு ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர், ராகுல் இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை அனுரீத் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கருண் நாயர் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து வீசப்பட்ட 5-வது பந்தில் கருண் நாயர் கிளின் போல்டானார். அதன்பின் அக்ஸார் பட்டேல் களமிறங்கினார்.
 
201805062334231071_3_Dch3P47UwAE9jjr._L_styvpf.jpg
 
கவுதம் வீசிய 13-வது ஓவரின் ஐந்தாவது பந்தை அக்ஸார் பட்டேல் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். அந்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகில் ஷார்ட் கேட்ச் பிடித்து, அக்ஸார் பட்டேலை ஆட்டமிழக்க செய்தார். அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டோயின்ஸ் களமிறங்கினார். பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சர் வீசிய 17-வது ஓவரில் பஞ்சாப் அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது. கடைசி கட்டத்தில் இரு பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
சிறப்பாக விளையாடிய ராகுல் 44 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 54 பந்தில் 84 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஸ்டோயின்ஸ் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில், 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/06233423/1161310/IPL-Kings-XI-Punjab-beat-Rajasthan-Royals-by-6-wickets.vpf

  • தொடங்கியவர்

பிளே ஆஃப் சுற்றில் கால் பதிக்கும் முனைப்பில் ஹைதராபாத் அணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் இன்று மோதல்

 

 
07CHPMUKANEWILLIAMSON

வில்லியம்சன்   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் இன்று இரவு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பிளே ஆஃப் சுற்றுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

வலுவான பந்து வீச்சு குழுவால் குறைந்த ரன்களை எடுத்தாலும் வெற்றியை வசப்படுத்தும் அணியாக அறியப்பட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்றுமுன்தினம் டெல்லி அணிக்கு எதிராக 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நெருக்கமான ஆட்டத்திலும் தங்களால் விரட்டலை எட்டிப்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. 9 ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி 7 வெற்றிகளுடன் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை ஏறக்குறைய உறுதி செய்துவிடும்.

அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் ஹைதராபாத் அணிக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றாலும் அந்த அணி ஒரு சில சிக்கல்களை சரிய செய்ய வேண்டியதுள்ளது. தொடக்க வீரரான ஷிகர் தவணிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. 8 இன்னிங்ஸ்களில் அவர், 185 ரன்களையே சேர்த்துள்ளார். மேலும் மிடில் ஆர்டர் பேட்டிங்கும் சீரற்ற தன்மையுடன் உள்ளது. கேப்டன் வில்லியம்சன் மட்டுமே சீராக ரன்கள் குவித்து வருகிறார். இந்த சீசனில் 354 ரன்கள் குவித்துள்ள அவரிடம் இருந்து மேலும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். டெல்லி அணிக்கு எதிராக அலெக்ஸ் ஹெல்ஸ் 31 பந்துகளில் 45 ரன்கள் விளாசியது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ஷகிப் அல்ஹசன் ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை செய்தால் கூடுதல் வலுசேர்க்கலாம்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் 6 தோல்வி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. 5 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்று 16 புள்ளிகளை எட்டினாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே பெங்களூரு அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு முடிவாகும்.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் தங்களது மட்டையின் மூலம் ஏதேனும் மாயாஜாலம் காட்டினால் மட்டுமே வலுவான தாக்குதல் பந்து வீச்சை கொண்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியும். ஏனெனில் இந்த சீசனில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு குழு கடும் சவால்களை அளித்துள்ளது. ரஷித் கான், ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகியோருடன் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள புவனேஷ்வர் குமாரும் இணைந்துள்ளது பந்து வீச்சை மேலும் வலுவாக்கி உள்ளது.

அதிரடி பட்டாளங்களை கொண்ட பெங்களூரு அணி இதுவரையிலும் பேட்டிங்கில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் இதுதான் அவர்கள் எழுச்சி காண வேண்டிய நேரம். ஏனெனில் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இந்த சீசனில் முதன்முறையாக சென்னை அணிக்கு எதிராக களமிறக்கப்பட்ட பார்த்தீவ் படேல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 41 பந்தில் 53 ரன்கள் சேர்த்த அவரிடம் இருந்து மேலும் ஒரு நிலையான ஆட்டம் வெளிப்படக்கூடும். கடந்த இரு ஆட்டங்களிலும் சீராக ரன்கள் சேர்க்கத் தவறிய பிரண்டன் மெக்கலம் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மன்தீப் சிங், காலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோரும் மட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கும் பிரச்சினை பெங்களூரு அணியை வெகுவாக பாதித்து வருகிறது.

எனினும் ஹைதராபாத் அணியில் பெரிய அளவிலான ஹிட்டர்கள் இல்லை என்பதால் பெங்களூரு அணிக்கு இறுதிக்கட்ட ஓவர்கள் பிரச்சினை இருக்காது என்றே கருதப்படுகிறது. உமேஷ் யாதவ், யுவேந்திரா சாஹல் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் முகமது சிராஜ் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஆட்டத்தில் முருகன் அஸ்வின், காலின் டி கிராண்ட் ஹோம் பந்து வீச்சு சற்று ஆறுதல் அளிக்கும் விதத்தில் அமைந்தது கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23799330.ece

  • தொடங்கியவர்

ஷார்ட் பால்களில் கொல்கத்தாவைச் சாய்த்த மும்பை இந்தியன்ஸ் #MIvKKR

 
 

அருமையான பேட்டிங் பிட்ச். 181 என்ற இலக்கை டிஃபண்ட் செய்ய வேண்டும். சுழல் பெரிதாக எடுபடாது. ஸ்பின்னர்களையே நம்பியிருக்கும் நைட்ரைடர்ஸுக்கே இந்த ஆடுகளம் பெரிய ஏமாற்றம்தான். இத்தனைக்கும் இந்தப் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். என்ன செய்வது? ஒரு சிம்பிள் ஆயுதத்தைத்தான் மும்பை இந்தியன்ஸ் கையில் எடுத்தது - ஷார்ட் பால்! ஷார்ட் பால்களால் கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது ரோஹித் அண்ட் கோ. #MIvKKR

#MIvKKR

ரோஹித் அண்ட் கோ-வின் வின்னிங் மொமன்ட்ஸ்! -படங்கள்

ஃபீல்டிங்கின்போது இரண்டு ஓவர்கள் களத்திலிருந்து வெளியேறியிருந்ததால் சுனில் நரைன் ஓப்பனிங் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கிறிஸ் லின் உடன் சுப்மான் கில் களமிறங்கினார். முதல் ஓவரில் இருந்தே அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள் மும்பை பௌலர்கள். மெக்லனகன் வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து 4 டாட் பால்கள் வைத்தார் லின். அடுத்த ஓவர் பும்ராவும் அதையே தொடர்ந்தார். ஆனால், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசியதால் அடுத்தடுத்து பௌண்டரிகள் கிடைத்தன.

அடுத்த ஓவர் மீண்டும் மெக்லனகன்... முதல் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார் கில். 3-வது பால் - இடுப்பு உயரத்தில் ஒரு ஷார்ட் பால்... பௌண்டரி. நான்காவது பந்து - இடுப்புக்கு மேலே ஷார்ட் பால்... பௌண்டரி. கொஞ்சம் கூட அசரவில்லை மெக்லனகன். மீண்டும் ஷார்ட் பால். இந்த முறை மார்பளவு எழுந்தது. ஃபைன் லெக்கில் நின்ற பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் லின். ஹர்டிக் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவசரப்பட்டு ஆடிய கில் வெளியேறினார். 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா.

இந்தப் போட்டிக்கு முன்பு ஹர்டிக் பாண்டியாவின் எகானமி 9.55. இதுவரை ரன்களை வாரி வழங்கிய அவரின் ஓவரில் நைட்ரைடர்ஸ் தடுமாறியதுதான் உச்சகட்டக் கொடுமை. சும்மாவே ஷார்ட் பால் மட்டுமே வீசும் ஹர்டிக், இன்று அனைவரும் அதையே பயன்படுத்தியதால் ஜாலியாகப் பந்துவீசினார். பவர்பிளேயிலேயே மெக்லனகனுக்கு 3-வது ஓவரைக் கொடுத்தார் ரோஹித். காரணம் - இந்த முறை டார்கெட் நித்திஷ் ராணா. பாயின்ட், பேக்வேர்ட் பாயின்ட் போன்ற திசையில் பௌண்டரி அடிப்பதால் ராணா கில்லி. அதைவைத்தே அவரைத் தூக்கத் திட்டமிட்டது மும்பை. பாயின்ட்டில் ஒரு ஃபீல்டர், பேக்வேர்ட் பாயின்ட்டில் ஒரு ஃபீல்டர், தேர்ட் மேனில் ஒருவர் என பக்காவாக ஃபீல்டிங் செட் செய்தார்கள். இப்படி ஃபீல்டிங் நிற்கவைத்து ஷார்ட் பாலாகப் போட்டுத் தள்ளினார் மிட்ச். ஆனால், அதிலும் ஒரு பந்தை 'அப்பர் கட்' மூலம் சிக்ஸராக்கி மாஸ் காட்டினார் ராணா. 

ஒரு கேட்ச் = 50 ரன்கள்
அடுத்த ஓவர் ஹர்டிக்... அதே ஸ்லோ ஷார்ட் பால்கள்தான். இரண்டாவது பந்தை (5.2-வது ஓவர்) உத்தப்பா சரியாக அடிக்காமல் போக, மிட் ஆன் திசையில் நின்றிருந்த மயாங்க் மார்கண்டே கையிலேயே விழுந்தது பந்து. ஆனால், அதை அவர் தவறவிட, தப்பித்தார் உத்தப்பா. அப்போது அவர் அடித்திருந்தது வெறும் 4 ரன்கள். 43 பந்துகள் கழித்து (12.3-வது ஓவர்) அதே மார்கண்டே பந்துவீச்சில் உத்தப்பா அவுட்டானபோது அவர் அடித்திருந்தது 54 ரன்கள். ஆம், இந்த இடைப்பட்ட 43 பந்துகளில்தான் ஆட்டத்தை நைட்ரைடர்ஸ் பக்கம் எடுத்துச் சென்றார் ராபின்!

#MIvKKR

முதல் 12 பந்துகளில் அவர் எடுத்திருந்தது 6 ரன்கள். குருனால் பாண்டியா பந்தில் நேராக ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு கியரை மாற்றினார் உத்தப்பா. மார்கண்டே வீசிய அடுத்த ஓவரில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் அடித்து ஐபிஎல் வரலாற்றில் 6-வது வீரராக 4,000 ரன்களைக் கடந்தார். அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க, மும்பையின் சிறந்த பௌலர் ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. அடுத்து பும்ரா, ஹர்டிக் ஓவர்களில் கொஞ்சம் அடக்கி வாசித்தவர், பென் கட்டிங் ஓவரில் தொடர்ந்து 4 பௌண்டரிகள் அடித்து அமர்க்களப்படுத்தினார். அடுத்த ஓவரில், கொஞ்சம் டைமிங் மிஸ்ஸான ஒரு ஷாட்டால், மார்கண்டேவுக்குப் பலியாகி வெளியேறினார். 

மும்பை கம்பேக்
அதுவரை கொல்கத்தாவின் கையிலிருந்த ஆட்டம் மெல்ல மும்பை பக்கம் திரும்பியது. 14-வது ஓவர், ஹர்டிக் - 5 ரன்கள், 1 விக்கெட் (நித்திஷ் ரானா - 31 ரன்கள்). 15-வது ஓவர் மெக்லனகன் - 4 ரன்கள். 16-வது ஓவர், மார்கண்டே - 6 ரன்கள். ஸ்பின்னர் மார்கண்டே உள்பட அனைவரும் ஷார்ட் பால்களாக வீச ரஸ்ஸல், கார்த்திக் இருவரும் ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். இடுப்பு, மார்பு உயரத்துக்கு எழுந்த பந்துகளை அவர்களால் சரியாகக் கணிக்க முடியவில்லை. டாட் பால்களின் எண்ணிக்கை அதிகமானது. தேவையான ரன்ரேட் அதிகமானது. 

#MIvKKR

17-வது ஓவரை வீசினார் பும்ரா. டெத் ஓவர்களில் தன் பெர்ஃபெக்ட் யார்கர்களால் மிரட்டக்கூடியவரான பும்ரா, ஒரு யார்க்கர் கூட முயற்சி செய்யவில்லை. ஷார்ட் பால்கள்தான். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள். அடுத்த பந்தில், டாப் எட்ஜாகி அவுட்டானார் ரசல். 20 பந்துகளில் 51 ரன்கள் தேவை. அடுத்த இரண்டு பந்துகளையும் ஃபுல் லெந்த்தில் வீச, நைட்ரைடர்சுக்கு 8 ரன்கள் கிடைத்தது. 18-க்கு 43 தேவை. ஹர்டிக், பும்ரா ஆகியோருக்கு தலா 1 ஓவர்தான் இருக்கிறது. கட்டிங் மோசமாகப் பந்துவீசியதால் அவருக்கு ஓவர் கொடுப்பது ஆபத்து. மிச்சம் இருப்பது இரண்டு ஸ்பின்னர்கள். அவர்களுள் ஒருவருக்கு 1 ஓவர் கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை.

பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் பல கேப்டன்கள் அந்த 3-வது பந்துவீச்சாளரையே அப்போது பயன்படுத்துவார்கள். ஆனால், ரோஹித் அப்படிச் செய்யவில்லை. ஹர்டிக், பும்ரா இருவருக்கும் அடுத்தடுத்து ஓவர் கொடுத்தார். இரண்டு ஓவர்களிலும் சேர்த்து 20 ரன்கள்தான். 6 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது கே.கே.ஆர். இப்போது குருனால் கையில் பந்தைக் கொடுத்தார் ரோஹித். ஒன்பதே ரன்கள், 1 விக்கெட்... கூலாக ஆட்டத்தை முடித்துவைத்தார். 16 ரன்களில் வெற்றி பெற்றது மும்பை.

#MIvKKR

ரோஹித் அண்ட் கோ-வின் வின்னிங் மொமன்ட்ஸ்! -படங்கள்

மும்பை பயன்படுத்திய இந்த யுக்தியைக் கையாண்டிருந்தால் கொல்கத்தா அணி 180 ரன்கள் விட்டுக்கொடுத்திருக்காது. ஸ்பின்னர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் டி.கே பவர்பிளேவிலேயே 5 பௌலர்களைப் பயன்படுத்தினார். ரோஹித் 6 ஓவர்களுக்கு மட்டுமே ஸ்பின் பயன்படுத்தினார். ஆனால், கார்த்திக் 11 ஓவர்கள் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார். அதைப் பயன்படுத்திய ஓப்பனர்கள் ஈவின் லூயிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய சூர்யா 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். 

 

பந்துவீச்சில் கலக்குவதற்கு முன்பே பேட்டிங்கிலும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார் ஹர்டிக். 4 பௌண்டரி, 1 சிக்ஸர் உள்பட 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல்ரவுண்டராக அசத்தியதால் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

https://www.vikatan.com/news/sports/124320-mumbai-indians-registered-their-4th-victory-by-beating-kkr.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- 14 விக்கெட் உடன் பர்பிள் தொப்பியை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா

கொல்கத்தாவிற்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார். #IPL2018 #MIvKKR #hardikPandya

 
ஐபிஎல் 2018- 14 விக்கெட் உடன் பர்பிள் தொப்பியை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய பாதி சீசன் முடிவடைந்த நிலையில் பரபரப்பான நிலையில் லீக் ஆட்டங்கள் சென்று கொண்டிருக்கிறன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறவில்லை. அந்த அணி ஒரு போட்டியில் தோற்றாலும் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகிய முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹர்திக் பாண்டியா, கொல்கத்தா அணியை 168 ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

201805071523525390_1_pandya001-s._L_styvpf.jpg

20 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த சீசனி்ல் பேட்டிங்கை விட பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் 9 ஆட்டங்களில் 27.4 ஓவர்கள் வீசி 235 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் இதுவரை அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரருடன், அதற்கான பர்பிள் தொப்பியையும் கைப்பற்றியுள்ளார்

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/07152353/1161462/IPL-2018-Hardik-Pandya-14-wicket-gest-purple-cap.vpf

  • தொடங்கியவர்

சுழலில் சுருட்டிய பஞ்சாப் புயல்... ராங் ரூட்டிலேயே பயணிக்கும் ராயல்ஸ்! #KXIPvRR

 
 

ஒரு பெரிய வெக்கேஷனுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமைதான் திரும்ப ஐ.பி.எல்லில் களமிறங்கியது பஞ்சாப். எண்ணெய்க்குளியல், வெரைட்டி சாப்பாடு எல்லாம் வெளுத்துக்கட்டிவிட்டு புத்துணர்ச்சியோடு களமிறங்கினாலும் வெற்றி என்னவோ அந்த ஆட்டத்தில் மும்பைக்குத்தான். அதனால் நேற்று நடந்த ஆட்டத்தில் வென்றால் கிடைக்கும் இரண்டு புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இன்னும் நெருக்கமாக்கும் என்ற நெருக்கடியை சுமந்துதான் களமிறங்கியது. மறுபக்கமோ, கடைசி நான்கு இடங்களில் இருக்கும் டீம்கள் அனைத்தும் மாறி மாறி தொட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் லாங் ஜம்ப்பில் முன்னேற நேற்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம். இப்படி சூழ்நிலையில்தான் சுண்டிவிடப்பட்டது டாஸ் காயின்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி வழக்கம்போல பீல்டிங்கையே தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் ஓபனர்களாக பட்லரும் டார்சி ஷார்ட்டும் களமிறங்கினார்கள். தொடர் ஆரம்பிக்கும் முன் 'அவர் அடிச்சா பந்து பறக்காது, கிழியும்' என்றெல்லாம் பில்டப் தரப்பட்ட டார்சி ஷார்ட் வழக்கம்போல இந்த மேட்சிலும் பொசுக்கென முதல் ஓவரிலேயே அவுட்டானார். ஒன்டவுனில் இறங்கினார் ரஹானே. ஆனாலும் அவருக்கு வேலையே வைக்காமல் அடித்து ஆடினார் பட்லர். 'எப்பா நீயே ஆடுறதுன்னா அப்புறம் நான் என்னத்துக்கு இங்க' என நினைத்தாரோ என்னவோ, அக்சர் படேல் பாலில் கெயிலிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் ரஹானே. கெயில் குனிந்து பந்தை எடுப்பதைப் பார்ப்பதே அதிசயம். இதில் படுத்துப் பந்தை பிடித்ததெல்லாம் 'வாவ்'! அதுக்காகவே ஹைலைட்ஸ் பாருங்க பாஸ்!

பஞ்சாப்

இரண்டு பெரிய விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால், கட்டாயம் ஒரு பார்ட்னர்ஷிப் தேவையாக இருந்தது ராஜஸ்தானுக்கு. வந்தார் மேஜிக் சாம்சன். இருவரும் மெதுவாக ஸ்கோரை உயர்த்தினார்கள். 11 ஓவர்களுக்கு 84 ரன்கள் என்பது கவுரவமான நிலைதான். ஆனால் தன் வீக்னஸான ஷார்ட் பாலை லெக் சைடில் இழுத்தடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்துக் கிளம்பினார் சாம்சன். களத்தில் இறங்கினார் 'பதினோரு கோடிப்பே' புகழ் பென் ஸ்டோக்ஸ். வந்ததுக்கு இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு இளம்புயல் முஜீப் ரஹ்மானின் பந்தையும் தூக்கியடித்தார். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் சிக்ஸ். பந்தை பவுண்டரி லைன் அருகே பிடித்த அகர்வால் பேலன்ஸ் தடுமாறுவதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் லாங் ஆனில் நின்றிருந்த மனோஜ் திவாரியிடம் எறிய, 'இணைந்த கைகள்' ராம்கி அலெக்ஸ்பாண்டியன் போல அவுட்டாக்கினார்கள் ஸ்டோக்ஸை!

பஞ்சாப்

ஒத்தையாக நின்று ஒருமணிநேரமாக வெள்ளையடித்துக்கொண்டிருந்த பட்லரையும் தன் அடுத்த ஓவரின் முதல் பாலில் வெளியேற்றினார் முஜீப். ஆட்டத்தின் டர்னிங் பாயின்ட் இதுதான். 'யூத்துக்கு யூத்து' என எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சரோ அடுத்த பாலிலேயே கோல்டன் டக். அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் என விழ, ஒன்பதாவது ஆளாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 24 ரன்கள் அடித்து 20 ஓவர்களில் 152 ரன்கள் என்ற கவுரவமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தினார். இளம்புயல் முஜீப் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று மெயின் விக்கெட்களை சாய்த்திருந்தார்.

பஞ்சாப் அணியின் பிரச்னையே அதன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதுதான். ஓபனர்களாக களமிறங்கும் ராகுலும் கெயிலும் அதிரடி காட்டி முதலிலேயே ஸ்கோரை உயர்த்தினால்தான் பஞ்சாப் வண்டி ஸ்டெடியாக ஓடுகிறது. ஆனால், நேற்றோ, 'அதான் டைவ் எல்லாம் அடிச்சு கேட்ச் பிடிச்சேன்ல, ரன்னும் அடிக்க சொன்னா எப்படிப்பா? காலு வேற நோவுது' என்ற ரீதியில் சாம்சன் கைக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார் கெயில். பாவம் பிடித்த சாம்சனுக்கு கை செக்கச் சிவந்த வானம் போலாகியிருக்கும். 'ஒன் டவுனும் மிடில் ஆர்டர்லதான வரும்? அப்புறம் அவுட்டாகாம எப்படி?' என அதற்கடுத்த ஓவரில் வெளியேறினார் மயாங் அகர்வால். 

கிட்டத்தட்ட ராஜஸ்தானுக்கு நடந்த அதே கதி! அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள். பார்ட்னர்ஷிப் அவசியம். பொறுப்புணர்ந்து கருண் நாயரும் ராகுலும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினார்கள். 10 ஓவர்கள் முடிவில் 68 ரன்கள்தான். அதற்கடுத்த ஓவரில் கருண் நாயரும் அவுட்! ஆனாலும் பதட்டமில்லாமல் பொறுமையாக சில க்ளாஸிக் ஷாட்கள் ஆடினார் ராகுல். நாயருக்குப் பின் இறங்கிய அக்‌ஷரும் 4 ரன்களில் அவுட். 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிறகு 87 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். மிட் ஓவர்கள் முழுக்க ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார்கள் ராஜஸ்தான் அணியின் பவுலர்களும் பீல்டர்களும். ஆனால் ஐ.பி.எல்லின் விதியே ஸ்லாக் ஓவர்களில் நடக்கும் எகிடுதகிடு மாற்றங்கள்தானே!

பஞ்சாப்

கடைசி ஐந்து ஓவர்களில் 51 ரன்கள் தேவை. முதல் ஓவரில் வெறும் எட்டு ரன்கள்தான். 'ம்ஹூம் இது சரிப்படாது' என மாணிக்கமாக இருந்த ராகுல் மாணிக் பாட்ஷாவாக மாறினார். 17-வது ஓவரில் 16 ரன்கள், 18-வது ஓவரில் 15 ரன்கள், 19-வது ஓவரில்... இன்னும் என்னத்த பார்த்துகிட்டு? மேட்ச் முடிஞ்சது பாஸ்! 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார் ராகுல். மேன் ஆஃப் தி மேட்ச் விருது சுழலில் சுருட்டிய முஜிப் ரஹ்மானுக்குத் தரப்பட்டது.

 

ஐ.பி.எல்லில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. கம்பேக் சீசன் என்பதைத் தாண்டி, சாம்சன், உனட்கட், த்ரிபாதி, ஸ்ரேயாஸ் கோபால், கெளதம், ஷார்ட், ஆர்ச்சர் என முழுக்க முழுக்க இளம் வீரர்கள் என்பதால் வந்த ஹைப் அது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் தத்தளிக்கிறார்கள் அவர்கள். அதிலும் சீசனின் காஸ்ட்லி பிளேயர்களான ஸ்டோக்ஸும் உனட்கட்டும் இன்னும் ஒரு மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் கூட தரவில்லை. மறுபக்கம், கிடைத்தவரை லாபம் என ஏலத்தில் எடுக்கப்பட்ட கெயிலும் முஜிப் ரஹ்மானும் பஞ்சாபுக்கு ஏகப்பட்ட ஆட்டங்களை வென்று கொடுத்துவிட்டார்கள். ஐ.பி.எல்லின் டிசைன் இதுதான்! 

https://www.vikatan.com/news/sports/124343-youngster-mujeeb-shines-as-the-kings-defeated-royals-by-six-wickets.html

 

 

 

செல்பேசியில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்; போதுமான உடற்பயிற்சி கிடையாது: விராட் கோலி வேதனை!

 

 
Kohli_RCB_(2)xx

 

செல்பேசியில் வீணாக நான்கு, ஐந்து மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தொழில்முறையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் உடல் உழைப்பில் ஈடுபடாமல் என்னால் இருக்கமுடியாது. ஒரு கருத்துக் கணிப்பில், மக்கள் ஒவ்வொரு நாளும் செல்பேசியில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பமும் சமூகவலைத்தளங்களும் நமக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக கெடுதலாக மாறிவருகின்றன. முக்கியமாகச் செய்யவேண்டியவை குறித்த உணர்வை மக்கள் இழக்கிறார்கள். மன ரீதியான, உடல் ரீதியான மேம்பாட்டுக்குத் தேவையானவை குறித்தும் யோசிக்க மறுக்கிறார்கள்.  

எது முக்கியம் என்பதை மாணவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவரவேண்டும். உடல்பயிற்சிக்கு என்ன செய்யவேண்டும், எப்போது சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழிக்க வேண்டும், எப்போது வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும், எப்போது வீட்டுப்பாடம் செய்யவேண்டும் போன்றவை குறித்த சரியான திட்டமிடல் வேண்டும்.  

நல்ல உடற்தகுதியுடன் இருக்கும்போது என்னால் நன்கு யோசிக்க முடிகிறது. ஒரு தெளிவு உள்ளது. கவனத்துடன் ஈடுபடமுடிகிறது. உடல் பலத்துடன் இருக்கும்போது உங்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். உங்களைப் பற்றி நல்லவிதமாக எண்ணவைக்கும். நல்ல எண்ணங்களுக்கு நீங்கள் நல்லவிதமாக உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/sports/special/2018/may/07/virat-kohli-too-much-phone-time-not-enough-exercise-2915068.html

 

 

பிளேஆஃப் வாய்ப்பு: நான்காம் இடத்துக்குக் கடுமையாகப் போட்டியிடும் நான்கு அணிகள்!

 

 
Mumbai(991

 

ஐபிஎல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவதற்காக எல்லா அணிகளும் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றன.

இதில் ஹைதராபாத், சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெறுவதற்குப் பிரச்னையே இல்லை.

ஏனெனில் ஹைதராபாத் அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் வென்றால் போதும். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளோடு பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

சென்னை அணி மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் வென்றால் போதும். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளோடு பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

பஞ்சாப் அணி மீதமுள்ள 5 ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் வென்றால் போதும். 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளோடு பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும்.

இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப் செல்ல அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. இதனால் பிளேஆஃப்-புக்கு 3 இடங்கள் உறுதிசெய்யப்பட்டுவிட்டன என்று இதைக் கொண்டு கூறமுடியும்.

மீதமுள்ள ஒரு இடத்துக்குத்தான் 4 அணிகள் தற்போது போட்டியிட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி 4 அணிகளுக்கும் வாய்ப்புள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று இரு முக்கியமான ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் மும்பை அணியின் வெற்றி ஐபிஎல் போட்டியை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது.

மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 37-வது ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 37-வது ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்திருந்தது. ஹார்திக் பாண்டியா 35 ரன்களுடனும், டூமினி 13 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன், ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களையே எடுத்தது. இதனால் கொல்கத்தா 13 ரன்களில் தோல்வியைத் தழுவியது. மும்பை தரப்பில் ஹார்திக் 2 விக்கெட்டையும், மெக்ளேனகன், பும்ரா, க்ருணால், மார்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா தொடர்ந்து 3-வது இடத்திலும், மும்பை 5-வது இடத்திலும் உள்ளன.

மற்றொரு ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 84 ரன்களைக் குவித்தார். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜோஸ்பட்லர் அதிகபட்சமாக 51 ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணியின் முஜிப்பூர் ரஹ்மான் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டை வீழ்த்தினார். 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 84 ரன்களுடன் லோகேஷ் ராகுலும், 23 ரன்களுடன் ஸ்டாய்னிஸும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ராஜஸ்தான் தரப்பில் கெüதம், ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், அனுரீத் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் அருகில் சென்றுள்ளது பஞ்சாப் அணி. 

தில்லி அணி 10 ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள நான்கு ஆட்டங்களை வென்றாலும் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவது மிகக்கடினம். அதுவும் அந்த அணியின் நெட்ரன்ரேட் -0.411 என்று மோசமாக உள்ளது. உலக அதியசம் ஏதாவது நிகழ்ந்தால் மட்டுமே தில்லி அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும்.

கொல்கத்தா மீதமுள்ள 4 ஆட்டங்களில் 3-ல் வென்றால் பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடும். 4 அணிகளில் இந்த அணிக்கு மட்டுமே அதிக வாய்ப்புள்ளது. ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை என்கிற நிலைமை உண்டு.

ஆனால் மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். இது கடினமானது என்றாலும் இதற்கு முன்பு சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் இதுபோன்ற ஒரு சவாலைக் கடந்து வந்து பிளேஆஃப்-புக்குத் தகுதிப் பெற்றுள்ளன. எனவே இந்த மூன்று அணிகளுக்கும் இன்னமும் வாய்ப்புண்டு என்று உறுதியாகக் கூறமுடியும்.

கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான்... இந்த நான்கு அணிகளில் எது நான்காம் இடத்தைப் பிடிக்கப்போகிறது? பார்க்கலாம்...

 

ipl1.jpg

ipl2.jpg

http://www.dinamani.com/sports/special/2018/may/07/which-teams-can-still-qualify-for-the-playoffs-2915035.html

டோனியின் ஆட்டம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும் -விராட்கோலி

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் டோனி சிறப்பாக விளையாடி வருவது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும் என விராட் கோலி கூறியுள்ளார்.#MSdhoni #Viratkohli #IPL2018

 
டோனியின் ஆட்டம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும் -விராட்கோலி
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் டோனி சிறப்பாக விளையாடி வருவதை, பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘டோனி அடித்து ஆடுவதை பார்க்க அருமையாக இருக்கிறது.
 
201805071045410678_1_j2jegc2j._L_styvpf.jpg


அவருடைய இத்தகைய ஆட்டத்தை எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். அவரது ஆட்டம் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். #MSdhoni #Viratkohli #IPL2018

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/07104541/1161374/MS-Dhonis-IPL-form-great-sign-for-Indian-cricket-says.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்

 

கேன் வில்லியம்சன் அரைசதத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvRCB

 
ஐபிஎல் 2018- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்
 
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஹேல்ஸ், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 5 ரன்னிலும், தவான் 13 ரன்னிலும், மணிஷ் பாண்டே 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

8.2 ஓவரில் 48 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் ஷாகிப் அல் ஹசன் உடன் இணைந்து அணியை மீட்டார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 150-ஐ தொடும் நிலை ஏற்பட்டது.

201805072153130464_1_yadav001-s._L_styvpf.jpg

கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 32 பந்தில் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். அதன்பின் வந்த யூசுப் பதான் 12 ரன்னில் வெளியேறினார். 19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் யூசுப் பதான், சகா ஆகியோரை க்ளீன் போல்டாக்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஒவர் முடிவில் 143 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். இந்த ஓவரில் ஐதராபாத் 3 ரன்களே எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முகமது சிராஜ், டிம் சவுத்தி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/07215313/1161542/IPL-2018-sun-risers--runs-target-to-royal-challengers.vpf

  • தொடங்கியவர்

முகமது சிராஜ் வீட்டில் ஹைதராபாத் பிரியாணியை ருசித்துச் சாப்பிட்ட விராட் கோலி (விடியோ)

 

 
a_kohli_biriyani1

 

ஹைதராபாத் சென்றாலே நம் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி ஞாபகம் வராமல் இருக்காது. 

2014-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிக்காக ஹைதராபாத் வந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு தன்னுடைய வீட்டிலிருந்து பிரியாணியை அனுப்பினார் அம்பட்டி ராயுடு. ஆனால் வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்கமுடியாது என்று வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நிர்வாகம் கண்டிப்பாகக் கூறியதால் வேறொரு ஹோட்டலுக்கு இடம்மாறினார்கள் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள். அந்தளவுக்கு ஹைதராபாத் பிரியாணிக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். 

இந்நிலையில் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் - ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி ஹைதராபாத்துக்கு வந்திருந்த பெங்களூர் அணி வீரர்களுக்குத் தன்னுடைய வீட்டில் விருந்தளித்துள்ளார் ஆர்சிபி வீரரான முகமது சிராஜ். கோலி, பார்தீவ் படேல் உள்ளிட்ட ஆர்சிபி வீரர்களுக்குச் சுவையான ஹைதராபாத் பிரியாணியும் ஹைதராபாத் பாரம்பரிய உணவுகளும் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளன. 

தொலைக்காட்சியில் ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் அமர்ந்து உணவு உண்டுள்ளார் விராட் கோலி. விருந்துக்கு வந்திருந்த ஆர்சிபி வீரர்கள் இரண்டு மணி நேரம் சிராஜ் வீட்டில் தங்கி, பிறகு ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார்கள்.

சிராஜை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.60 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி.

விடியோ: Telangana Today

http://www.dinamani.com/sports/special/2018/may/07/virat-kohli-parthiv-patel-feast-at-mohammed-sirajs-house-2915096.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018 - ஆர்.சி.பி.யை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvRCB

 
 
 
 
ஐபிஎல் 2018 - ஆர்.சி.பி.யை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றறது. சன்ரைசர்ஸ் இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் ஹேல்ஸ், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ஹேல்ஸ் 5 ரன்னிலும், தவான் 13 ரன்னிலும், மணிஷ் பாண்டே 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேன் வில்லியம்சன் - ஷாகிப் அல் ஹசன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
 
கேன் வில்லியம்சன் 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
201805072352269528_1_williams-2._L_styvpf.jpg
 
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 146 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் முகமது சிராஜ், டிம் சவுத்தி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா, பர்திவ் படேல் இறங்கினர்.
 
வோரா 8 ரன்னிலும், பர்திவ் படேல 20 ரன்னிலும் அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். டி வில்லியர்ஸ் 5 ரன்னிலும், மொயின் அலி 10 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
 
இவர்களை தொடர்ந்து ஆடிய மன்தீப் சிங்கும், கிராண்ட்ஹோமும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvRCB

 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/07235227/1161552/sun-risers-hyderabad-beat-royal-challangers-bangalore.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.