Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச அழைத்து மகிந்த மிரட்­டல்!! உண்மையைப் புட்டுப்புட்டு வைத்தார் சம்­பந்­தன்

Featured Replies

  •  
  • பேச அழைத்து மகிந்த மிரட்­டல்!!
Sampanthan-60000-1-640x400.jpg

பேச அழைத்து மகிந்த மிரட்­டல்!!

உண்மையைப் புட்டுப்புட்டு வைத்தார் சம்­பந்­தன்

 

2011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும் என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யி­லேயே செயற்­பட்­டார்­கள்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் பர­ப­ரப்­புக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள் ளார்.

திரு­கோ­ண­ம­லை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
பேச்­சுக்கு கூட்­ட­மைப்பை அழைத்­த­போ­தும் கூட்­ட­மைப்பு பேச்­சுக்கு வர­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதற்­குப் பதில் வழங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது-,

மகிந்­த­வின் வாக்­கு­றுதி

 

இது தொடர்­பில் மக்­கள் உண்­மையை அறிந்து கொள்­ள­வேண்­டும். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த சில நாட்­க­ளின் பின்­னர் ஐ.நா. பொதுச் செய­லர் இலங்­கைக்கு வந்­தார். ஐ.நா. பொதுச் செய­ல­ருக்கு மகிந்த வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்.

பொறுப்­புக் கூறல் சம்­பந்­த­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும், அர­சி­யல் தீர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு அது நிறை­வேற்­றப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார். அவை நிறை­வேற்­றப்­ப­டாத கார­ணத்­தால் இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் அதை நிறை­வேற்ற வேண்­டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தார்­கள். மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு, இந்­திய தலைமை அமைச்­சர் மன்­மோ­கன் சிங் இது தொடர்­பில் பேசி­யி­ருந்­தார்.

மகிந்த மாற­மாட்­டார்

அமெ­ரிக்­கா­வின் இரா­ஜாங்க உத­விச் செய­லர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்­கைக்கு இந்­தக் காலத்­தில் வந்­தி­ருந்­தார். அவர் என்­னைச் சந்­திக்க வேண்­டும் என்­றார். ஒரு நாள் காலை­யில் சந்­தித்­தேன். அப்­போது பிளேக் கூறி­னார், சம்­பந்­தன் உங்­க­ளு­டைய அரச தலை­வர் (மகிந்த) ஒரு நாளும் மாற­மாட்­டார். அவரை நான் நேற்­றுப் பின்­னே­ரம் சந்­தித்­தேன்.

பழைய பாணி­யில்­தான் பேசு­கின்­றார். அவர் மாறு­வார் என்று நான் நினைக்­க­வில்லை என்று ரொபேர்ட் ஓ பிளேக் கூறி­னார். நான் பிளேக்­கு­டன் பல விட­யங்­கள் சம்­பந்­த­மா­கப் பேசி­னேன். எமது நிலைப்­பாட்டை அவ­ருக்­குத் தெளி­வா­கக் கூறி­னேன். சந்­திப்பை முடித்­துக்­குக் கொண்டு வந்­தேன்.

அன்று மாலை அப்­போ­தைய அரச தலை­வ­ராக இருந்த மகிந்த என்னை அலை­பே­சி­யில் அழைத்­தார். சம்­பந்­தன் இன்று நீங்­கள் பிளேக்­கைச் சந்­தித்­தா­கக் கேள்­விப்­ப­டு­கின்­றேன். என்ன பேசி­னீர்­கள் என்று கேட்­டார். பேச­வேண்­டிய எல்லா விட­யங்­க­ளை­யும் பேசி­னேன் என்று கூறி­னேன். அதன் பின்­னர் மகிந்த, அவரை (பிளேக்கை) நான் நேற்­றுச் சந்­தித்­தேன்.

அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மா­கப் பேசி­னார். அப்­போது நான் பிளேக்­கி­டம் கூறி­னேன், அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மான விட­யங்­க­ளில் உங்­க­ளின் உதவி தேவை­யில்லை. அதனை எங்­க­ளுக்கு கண்­டு­கொள்­ளத் தெரி­யும் என்று பிளேக்­கி­டம் தெரி­வித்­த­தாக என்­னி­டம் சொன்­னார்.

மகிந்­த­வுக்கு பாடம் படிப்­பிக்க அமெ­ரிக்கா முடிவு

அந்­தக் காலத்­தில்­தான் அமெ­ரிக்கா ஒரு முடிவு எடுக்க ஆரம்­பித்­தது. மகிந்த தரப்­புக்கு ஒரு பாடம் படிப்­பிக்­க­வேண்­டும் என்ற முடிவை எடுத்­தது.

2010ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் மகிந்­த­வுக்­கும் எனக்­கும் இடை­யில் தனிப்­பட்ட சந்­திப்பு இடம்­பெற்­றது. சுமார் 40 நிமி­டங்­கள் அவ­ரி­டம் நான் பல விட­யங்­க­ளைப்­பற்றி பேசி­னேன். குறிப்­பாக மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்­து­வது தொடர்­பில் பேசி­னேன். அமை­தி­யா­கப் பொறு­மை­யாக எல்­லா­வற்­றை­யும் கேட்­டுக் கொண்­டி­ருந்­தார். அர­சி­யல் தீர்வு காணப்­ப­டும் என்று நீங்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கின்­றீர்­கள்.

அது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும். அதைக் காண்­ப­தற்கு உங்­க­ளுக்­கும் எங்­க­ளுக்­கும் இடை­யில் பேச்சு நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தேன். ஒரு வார்த்­தை­கூட பதி­லுக்கு மகிந்த பேச­வில்லை.

தனது உத­வி­யா­ளரை அழைத்து, ஜி.எல்.பீரிஸ் வெளியே இருக்­கின்­றார். அவரை வரச் சொல்­லுங்­கள் என்று கூறி­னார். ஜி.எல்.பீரிஸ் வந்­த­தும், சம்­பந்­தன் அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மாக பேசு­கின்­றார். பேச்சை ஆரம்­பிக்­க­வேண்­டும் என்று சொன்­னார்.

பேச்சு ஆரம்­பம்

இது சம்­பந்­மாக அப்­போ­தைய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் அவ­ரு­டன் பேசி­யி­ருந்­தார். எங்­க­ளுக்­கும் அவர்­க­ளுக்­கும் இடை­யி­லான பேச்சு 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­னது. ஒரு­மித்த நாட்­டுக்­குள் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் முத­லா­வது பேச்சு மேசை­யி­லேயே நாங்­கள் கூறி­யி­ருந்­தோம்.

எழுத்­து­மூ­ல­மாக எங்­கள் கோரிக்­கை­க­ளைக் கேட்­டார்­கள். சமர்ப்­பித்­தோம். மார்ச் மாதம் கொடுத்­து­விட்டு அவர்­க­ளின் பதிலை நாங்­கள் கேட்­டோம். பதிலை தந்­தால்­தான் அடுத்­துப் பேச­லாம் என்­றும் சொன்­னோம்.

ஜூலை மாதம் வரை­யில் பதில் வழங்­க­வில்லை. ஓகஸ்ட் மாதம் நாம் அவர்­க­ளுக்­குச் சொன்­னோம், நான்கு மாதங்­க­ளாக நீங்­கள் பதில் தர­வில்லை. நாங்­கள் பொறு­மை­யா­கக் காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.

நீங்­கள் பதில் தரா­விட்­டால் என்ன செய்­வது என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும். பேச்சு முடி­வ­தற்­குள் பதில் வேண்­டும் என்று கேட்­டோம். உங்­கள் பதிலை தரா­மல் அடுத்த பேச்­சுத் திக­தியை நிர்­ண­யிப்­பதை நாங்­கள் விரும்­ப­வில்லை என்று சொன்­னோம். திகதி நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை.

மன்­னிப்­புக் கோரிய மகிந்த

அடுத்த நாள் காலை மகிந்த ராஜ­பக்ச என்­னி­டம், நீங்­கள் பேச்­சி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­டீர்­கள். தயவு செய்து நான் உங்­க­ளைச் சந்­திக்க விரும்­பு­கின்­றேன். வாருங்­கள் என்று அழைத்­தார். நான் சென்­றேன். பதில் தர­வேண்­டும். பதில் தரா­விட்­டால் பேச்சு நடத்­து­வ­தில் எந்­தப் பய­னும் இல்லை. எழுத்­தில் எமது நிலைப்­பாட்­டைக் கூறி­யி­ருக்­கின்­றோம். அதற்­குப் பதில் நீங்­கள் எழுத்­தில் தர­வேண்­டும் என்று நான் கூறி­னேன்.

பதில் தர­மு­டி­யாது என்­றும், தந்­தால் அது பல பிரச்­சி­னை­களை உரு­வாக்­கும் என்­றும் மகிந்த சொன்­னார். இதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அர­சும், நாங்­க­ளும் பேசு­கின்­றோம். எங்­கள் நிலைப்­பாட்டை தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கின்­றோம். அதற்­குப் பதில் வர­வேண்­டும். பதில் தர­மு­டி­யாது. என்னை மன்­னிக்க வேண்­டும் என்று மகிந்த சொன்­னார்.

சரி உங்­க­ளுக்­குப் பதில் தர­மு­டி­யா­விட்­டால், 13ஆவது அர­ச­மைப்­புத் திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னர் முன­சிங்க அறிக்கை, சந்­தி­ரிகா அம்­மை­யார் காலத்து தீர்­வுத் திட்­டம், தலைமை அமைச்­சர் ரணில் காலத்து திட்­டம், உங்­க­ளின் காலத்து அர­சி­யல் தீர்­வுத் திட்­டம் ஆகி­யவை எழுத்­தில் உள்­ளன.

அவை பேச்சு மேசைக்கு வர­வேண்­டும். நீங்­கள் பதில் தரா­விட்­டா­லும், அவை பேச்சு மேசைக்கு வந்­தால் பேச்­சைத் தொட­ரத் தயார் என்று கூறி­னேன். நீண்ட விவா­தத்­துக்­குப் பின்­னர் அத­னைச் செய்­யத் தயார் என்று கூறி­னார் மகிந்த.

தெரி­வுக் குழு அமைப்பு

அதன் பின்­னர் பேச்சு ஆரம்­ப­மா­னது. பேசி­னோம். ஒரு விட­யத்­தி­லும் இணக்­கப்­பாடு இல்லை. டிசெம்­பர் மாதம் வரை பேச்சு தொடர்ந்­தது. பின்­னர் பேச்சு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மூன்று நாள்­கள் பேச்சு திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டது. மூன்று தினங்­க­ளும் நாங்­கள் பேச்­சுக்­குச் சென்­றோம். அவர்­கள் வர­வில்லை. இது­தான் உண்மை.

தெரி­வுக்­குழு நிய­மித்து, தெரி­வுக் குழு­வுக்கு வரு­மாறு மகிந்த கேட்­டார். என்னை நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னார். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­மாறு அவர் கேட்­டார். நானும் நீங்­க­ளும் பேசி சில முக்­கி­ய­மான விட­யங்­க­ளில் ஓர் இணக்­கத்­துக்கு வர­மு­டி­யா­மல் இருக்­கின்ற சூழ­லில் நான் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்து என்ன பிர­யோ­ச­னம். அங்கே என்ன நடக்­கப் போகின்­றது.

நீங்­கள் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்­க­ளை­யும் தூண்­டி­விட்டு எதிர்க்­கச் சொல்­லிச் சொல்­வீர்­கள். ஒன்­றும் நடை­பெ­றாது. நானும் நீங்­க­ளும் பேசி சில முக்­கிய விட­யங்­கள் தொடர்­பில் உடன்­பாடு ஏற்­ப­டு­மாக இருந்­தால் நான் வரத் தயார் என்று மகிந்­த­வி­டம் கூறி­னேன். இல்­லை­யெ­னில் நான் வர­மாட்­டேன் என்­றும் தெரி­வித்­தேன்.

மிரட்­டல்

சில வாரங்­க­ளின் பின்­னர் என்னை மீண்­டும் மகிந்த அழைத்­தார். என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யில் அவ­ரது மாளி­கை­யில் இருந்த எல்­லோ­ரும் என்­னு­டன் நடந்­து­கொண்­டார்­கள். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரா­விட்­டால் உமக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம் என்று சொன்­னார். என்­னு­டைய கருத்தை நான் உங்­க­ளுக்­குச் சொல்­லி­யி­ருக்­கின்­றேன்.

நானும் நீங்­க­ளும் பேசி ஓர் ஒழுங்­குக்கு வரா­விட்­டால் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­வ­தில் என்ன பிர­யோ­ச­னம். ஆனால், இந்த விட­யம் சம்­பந்­த­மாக நான் முடி­வெ­டுக்க முடி­யாது. எனது கட்சி முடி­வெ­டுக்­க­வேண்­டும். எனது கட்­சி­யின் முடிவை மீறி நடக்க முடி­யாது என்று மகிந்த தரப்­பி­டம் கூறி­னேன்.

தெரி­வுக்­குழு ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் சில முயற்­சி­கள் நடந்­தன. அது­வும் கைகூ­ட­வில்லை. அர­சி­யல் கட்சி என்ற வகை­யில் எங்­க­ளால் முடிந்­த­வற்றை நாம் செய்­தோம். இதை மகிந்த ராஜ­பக்ச மறந்­தி­ருக்க முடி­யாது.

எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு ஏற்­பில்­லாத தீர்வை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யாத ஒரு தீர்வை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம் – என்­றார்.

http://newuthayan.com/story/66875.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சம்பந்தர்                  MR_Sampanthan_CI.jpg

                                     தேர்தலின்போது நாம் இருவர்                                                                                              தேர்தலின்பின் நாம் ஒருவர்

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan-60000-1-640x400.jpg

ஆள் நல்லாய்... பயந்து, போனார் உள்ளது.
அப்ப... சாணக்கிய அரசியல் எல்லாம்,  சுத்து மாத்துக்கு ... சொன்னதா... சம்பந்தன்  ஐயா.
அரசியல் என்றால், இதுகும்  இருக்கும் என்று... உங்களின் 85 வயது வரைக்கும்,  அறியாத மனிதரா நீங்கள்?

எல்லாவற்றுக்கும் மேலாக...   தேசியத் தலைவர் பிரபாகரனை டில்லியில் வைத்து, 
ராஜீவ் காந்தி மிரட்டிய போது... கூட,  அசராமல்... தமிழ் ஈழ மக்களின் நலத்தை விட்டுக்  கொடுக்காமல்,
நிதானத்துடன்... பதில் கொடுத்து,  தமிழ் ஈழம் வந்த.... எமது  பிரபாகரனின், கால் தூசிக்கும்....  
நீங்கள்,  பெறுமதி அற்றவர்கள்..... என்பதை,  சுய வாக்கு மூலம் நிரூபித்தமைக்கு நன்றி, சம்பந்தன் ஐயா.

பயந்த.... உங்களைப்  போன்றவர்களுக்கு,  அரசியல் இனி வேண்டாம். பென்ஷன்  எடுக்கிற வழியை பாருங்கப்பு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுவாதீனமற்றவரென்று (சும்-ஐ) சரியாக அறிந்துதான் மொழிபெயர்ப்பாளர் கூறியுள்ளார். இவர்கள் எப்படியாம் தமிழருக்கு தீர்வைக் கொண்டுவருவார்கள் என்று நம்புவது?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nochchi said:

சுவாதீனமற்றவரென்று (சும்-ஐ) சரியாக அறிந்துதான் மொழிபெயர்ப்பாளர் கூறியுள்ளார். இவர்கள் எப்படியாம் தமிழருக்கு தீர்வைக் கொண்டுவருவார்கள் என்று நம்புவது?

இன்னுமா இவர்கள் தீர்வு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.