Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும்.

முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும். மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும்.

http://oorukai.com/?p=1602

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு...  7 மணிக்கு,  செய்ய இருந்த அலுவல் எல்லாவற்றையும் நிறுத்தி,
சம்பந்தன், சுமந்திரனுக்கு... தமிழ் மக்கள், தமது வாக்குகளால்...  கொடுக்கப் போகும்  மரண அடியை,
ரசித்து பார்க்க.... ஆவலாக உள்ளேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாளைக்கு...  7 மணிக்கு,  செய்ய இருந்த அலுவல் எல்லாவற்றையும் நிறுத்தி,
சம்பந்தன், சுமந்திரனுக்கு... தமிழ் மக்கள், தமது வாக்குகளால்...  கொடுக்கப் போகும்  மரண அடியை,
ரசித்து பார்க்க.... ஆவலாக உள்ளேன். :)

ஜாக்பொட் விழப்போகின்றது என்று வாங்கி வைத்த ஐம்பது லொட்டரி ரிக்கெட்களையும், வென்றதைக் கொண்டாட வாங்கிய 24 பியர் கான்களையும்  வரிசையாக அடுக்கி வைத்துக் காத்திருந்த நண்பனின் நினைவுதான் வந்தது.

அடுத்தநாள் 24 பியர் கான்களும் காலியாக இருக்க சிங்கன் பித்தம் தெளிய இரண்டு நாள் எடுத்தது. 

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜாக்பொட் விழப்போகின்றது என்று வாங்கி வைத்த ஐம்பது லொட்டரி ரிக்கெட்களையும், வென்றதைக் கொண்டாட வாங்கிய 24 பியர் கான்களையும்  வரிசையாக அடுக்கி வைத்துக் காத்திருந்த நண்பனின் நினைவுதான் வந்தது.

அடுத்தநாள் 24 பியர் கான்களும் காலியாக இருக்க சிங்கன் பித்தம் தெளிய இரண்டு நாள் எடுத்தது. 

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

Bild könnte enthalten: Text

கிருபன் ஜீ....  புலிகள் ஆயுதத்தை,  கீழே வைத்த பின், 
தமிழ் மக்களுக்கு...  சம்பந்தன் கும்பல் செய்த துரோகங்களை, வரலாறு மன்னிக்காது.

நாளைக்கு... சம்மந்தன் கும்பல் தோற்றால், 
கிடாய் வெட்டி, ஊருக்கே... விருந்து வைக்க வேணும் போல் உள்ளது.
எக்ஸ்ராவாக... பியரும் கொடுக்கலாம். அவ்வளவு சந்தோசமாக இருக்கும் எனக்கு.
ஆனால்.... தமிழ் மக்கள்,  "கூழ்  பானையில், விழும், "பல்லி "  தானே...". :grin:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

இது உள்ளூராட்சித் தேர்தல்தானே. கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத மற்றைய கட்சிகள் வைகுண்டம் போகமுடியுமா என்ன? தமிழ் மக்கள் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத்தான் தேர்வார்கள். என்ன கொஞ்ச சீட் குறையலாம்.?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

நான் லொட்டரி எடுப்பதில்லை?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது கஜேந்திரகுமாராவது வெல்லக்கூடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் இருந்து எடைபோடமுடியாது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கக்கூடிய வசீகரமான தலைவர்கள்  வரும்வரை சம்பந்தரையும் சுமந்திரரையும் மக்கள் தூக்கியெறியமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

அது... அமெரிக்காவில், உள்ள ஈழப் பிரியனுக்கு  தெரியுறது. :grin:

2 hours ago, கிருபன் said:

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

இங்கிலாந்தில் உள்ள, கிருபனுக்கு.... தெரியவில்லையோ..... :grin:
நாங்கள் இப்ப,  டயட்டில் இருக்கிறோம். :D:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இது உள்ளூராட்சித் தேர்தல்தானே. கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத மற்றைய கட்சிகள் வைகுண்டம் போகமுடியுமா என்ன? தமிழ் மக்கள் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத்தான் தேர்வார்கள். என்ன கொஞ்ச சீட் குறையலாம்.?

பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போன்றவர்கள் தான்.... சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டி.
அவர்கள்.... மகிந்தவுக்கும், மைத்திரிக்கும்..... மாறி, மாறி   தலை ஆட்டும்,  தற் குறிகள்.

அதிலும்... பார்க்க, நாங்கள் நேரடியாகவே.....
ஸ்ரீலங்கா  ஐக்கிய தேசிய  கட்சியிலோ, ஸ்ரீமாவோவின்  சுதந்திர கட்சியிலிலோ இணைந்தால்....
நேரடி பலன், எமக்கு கிடைக்கும் தானே....   என்ன.... மாதிரி, உங்கள் ஐடியா?   

பிறகு என்ன... இழவுக்கு,  சம்பந்தனும், சந்திரனும் ... புறோக்கர்  வேலை பார்க்க வேணும். 
நான்... ரெடி, நீங்கள்... ரெடியா...? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

வளவன் அண்ணா....  பகிடி, விடுகின்றீர்களா?
சிவனே... என்று இருந்த எனக்கு,  நீங்கள் இரண்டு பேரும்  தான், பிரஷர் ஏத்திநீங்கள்.
ஐ... திங்க்,   சம்  திங்க்  ரோங்.....   (நாங்களும்  இங்கிலீஸ் கதைப்பம்) :love:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நான் லொட்டரி எடுப்பதில்லை?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது கஜேந்திரகுமாராவது வெல்லக்கூடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் இருந்து எடைபோடமுடியாது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கக்கூடிய வசீகரமான தலைவர்கள்  வரும்வரை சம்பந்தரையும் சுமந்திரரையும் மக்கள் தூக்கியெறியமாட்டார்கள்.

அவர்களை தூக்கியெறிக்கூடாது ...ஆனால்  நாங்கள்(தாயகமக்கள்)நினைத்தால் தூக்கியெறிவோம் என ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அதிலும்... பார்க்க, நாங்கள் நேரடியாகவே.....
ஸ்ரீலங்கா  ஐக்கிய தேசிய  கட்சியிலோ, ஸ்ரீமாவோவின்  சுதந்திர கட்சியிலிலோ இணைந்தால்....
நேரடி பலன், எமக்கு கிடைக்கும் தானே....   என்ன.... மாதிரி, உங்கள் ஐடியா?   

பிறகு என்ன... இழவுக்கு,  சம்பந்தனும், சந்திரனும் ... புறோக்கர்  வேலை பார்க்க வேணும். 
நான்... ரெடி, நீங்கள்... ரெடியா...? 

எனக்கும் சம்பந்தரையும் சுமந்திரரையும் அவர்கள் செய்யும்/செய்யாத அரசியலுக்காகப் பிடிப்பதில்லை.  தெரிந்தே தமிழ் மக்களை அரசியல் படுகுழியில் கொண்டுசென்று தள்ளுகின்றார்கள்.  

பிறரின் மகுடிக்கு ஆடும் பாம்புகள் அவர்கள். ஆனால் மக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.