Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'' உலக வலையில் புலிகள் ''

Featured Replies

'' உலக வலையில் புலிகள் ''

அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப் படும் கப்பல்கள்

எவ்வாறு இலங்கை கடற்படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன என்ற விடையை தேடினால்

அதிர்ச்சி தரும் பல உண்மைகள் துளங்கும்.

இவ்வாறான நிகழ்வுகள் ஏன் செய்யப் படுகின்றன யாரால் செய்யப்படுகின்றன

என்பதை வெளிப்படையாக புலிகளறிவார்.

இது புலிகளிற்கு ஒரு எச்சரிக்கை...யாரால்...?? இதுவே தான் புதிர்...

தனது சுயநலன்களிற்காக ஒரு விடுதலை படையை அழித்து நசுக்கி

அந்த அரசகளுடன் கூட்டு வைத்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்ள

அந்த வல்லரசுகள் செய்யும் சதி நடவடிக்கைகள் தான் இவை...

இருவரும் சமதானத்தை நிலை நாட்டி போரை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென்ற

வெற்று கோசத்தை வெளியில் எறிந்து.

தமது நலன்களை காக்கும் விதத்தில் அந்த வல்லரசுகள் நடந்து கொள்கின்றன.

இனி வரும் போரியல் களங்கிலும் செய்மதி ஊடாக பல தகவல்களை

வழங்கி புலிகளின் நடமாட்டத்தை அல்லது அதன் படையணிகளை தாக்கயழிக்கும்

நிகழ்வுகளிலும் இந்த வல்லரசுகள் உதவலாம் என்பது புரிகிறது.

இவ்வாறான உளவு தகவல்களை அரச படைகளிற்கு வளங்கி தாம் நற்பெயர் எடுத்து

அந்த நாட்டில் அல்லது தமது இறையான்மைகளை கட்டிகாக்க சில நாடுகள்

போட்ட போட்டி போடுவதை இவ்வாறான செயல்கள் உடாக அனுமாணிக்க முடிகிறது.

இவ்வாறான நிகழ்வுகள் தற்காலத்தில் ஏற்ப்படலாம் என முன்னர் ஒரு தடவை

குறியிருந்தது நினைவுக்கு வருகிறது. புலிகளி;ன் வளங்கள் பாதைகளை முடக்குவதன் மூலம்

அவர்களுடைய படை பலத்தை குறைக்கலாம் என அவர்கள் நம்புவதே இதற்காண

அடிப்படை காரணம்.

அதற்கமைவாக புலம் பெயர் நாடுகளில் புலிகளிற்கு தடையை போட்டது

அதன் அடித்தளமாக அங்கு சேரும் நிதிகளை முடக்குவது. அதன் ஊடாக அவர்களை

அவர்களின் போரிடும் திறனை மழுங்கடிப்பது..என்ற நீண்டதொரு நிகழ்ச்சி நிரலின்

ஒரு பகுதியாகவே இவை கடந்த காலத்தில் நடந்து முடிந்தது..

அதன் அடுத்த கட்டமாக அவர்களின் கடல் போக்கு வரத்தை அதன் விநியோக வளிகளை

தடுப்பது என்ற அடுத்த கட்ட நகர்விற்குள் அவர்கள் நகர்ந்திருப்பது

இவ்வாறான சம்பவங்கள் ஊடாக தெளிவு படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக இனி பொருதும் கலங்களில் அவர்களின் நிலைகளை கண்காணித்து தகவல்களை வளங்குவது.

அவர்களின் நீண்ட தூர ஏவுகணைகளை தாக்கியளிப்பது என்ற உரு நிலையை எட்டலாம்.

இது அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு வரைபுகளாகவே இவை அமைந்துள்ளது.

இந்தியா. அமெரிக்கா. பாகிஸ்தான். இந்த மூன்று நாடுகளுமே அவை. இவை தான் தற்போது

இலங்கையில் அகல காலூன்ற அல்லது அகல கால்பதித்து இவ்வாறான நாசகார வேலைகளை

செய்து வருகின்றன.

இது வரை காலமும் இல்லாத பாரிய பல கடற்கலங்கள் அடுத்தடுத்து தாக்கியழிக்கப்படுவதானது

தனி ஒரு அரசால் முடியாது அது இலங்கையரசால் இயலாது.

ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களுடைய படை கட்டுமானங்கள் இல்லை அப்படி இருந்தாலும்

அதற்கேற்றவாறு புலிகள் போக்கு காட்டி தமது செயற்பாட்டை செவ்வனே செய்து வந்தார்கள்

முற் காலங்களில்.

தற்போது ஏற்ப்பட்ட சமரச காலத்தில் புலிகளின் களங்கள் பல தாக்கயிழிக்கப்பட்தை

இலங்கை அரசு தெரிவித்துள்ளது அதில் குறிப்பிடப்பட்டதை புலிகளும் அங்கிகரித்தனர்.

இவ்வாறன தொடர் தாக்குதலால் இராணுவ சமநிலையில் தாங்களே உயர்ந்திருப்பதாக

சிங்கள அரசு கூறுகிறது. கட்டி கொள்கிறது..!

அது வெளிப்படையான போரில் களத்தில் ஏற்று கொள்ளப்படதக்தொன்று.

ஆனால் இவ்வாறன தொடர் துற்பாக்கிய துன்பியல் நிகழ்விற்குள் தம்மைiயும்

தமது படைகளையும் படைக்கலங்களையும் புலிகள் வைத்து கொள்ள மாட்டார்கள்.

அதற்கான மாற்று ஏற்ப்பாடுகளை துரிதமாக செயற்படுத்த முனைவார்கள்.

அதற்கதாக தாம் பொருதும் களங்களிலிருந்து பெரும் தொகையிலான

போர் தளபாடங்களை அவர்கள் அபகரிக்க முயல்வார்கள். தமது இராணுவ சமநிலையை

சம படுத்த அல்லது மேலோங்கி நிறுத்த இவர்கள் முயல்வார்கள் .

அதற்கமைவாகவே தமது படையணிகளை ஒருங்கிணைத்து இறுக்கமானதும் நெருக்கமானதுமான

தடைகளை தகர்த்து தாண்டி தமது நிலைகளை நிலங்களை மீட்டெடுத்து தம்மீது

விழுந்த நிர்பந்தங்களையும் நெருக்கடிகளையும் தகர்த்தெறிய புலிகளணி திடசங்கற்பம் புண்டுள்ளதை

அங்கிருந்து வரும் செய்திகள் ஊடாக அறிய முடிகிறது.

அதன் ஒரு வெளிப்பாடாகவே அண்மை காலங்களாக தமது தாக்குதல் திறனை

எறிகணை தாக்குதல் ஊடாக சமபடுத்தி உள்ளதையும்..அடுத்த கட்ட தமது

நடிவடிக்கை எவ்வாறு அமையும் என்பதையும் சொல்லாமல் சொல்லி வைத்துள்ளனர்.

சமதான விதமுறைகளை மீற அரசபடைகள் செய்து வரும் எந்தவொரு நிகழ்வுகளையும்

கண்டிக்காத உலகம் புலிகள் செய்தால் மட்டும் முண்டியடித்து அறிக்ககைளையும் கண்டனங்களையும்

தொவிப்பதானது. அந்த நாடுகளினுடைய சுயநலத்தை வெளிப்படையாக கூறுகிறது.

அந்த நாட்டு படைகளிற்கு இராணுவ உதவிகளையும் பெரும்தொகையிலான நிதிகளை

அளிப்பதன் ஊடாகவும்.

புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இணைப்பதன் ஊடாகவும் இவை தெளிவாக தெரிகின்றன.

இந்த சமரசத்தை வைத்து பலிகளை மழுங்கடித்து அந்த விடுதலை போரை நசுக்க இந்த நாடுகள் போடும்

திட்டங்களே இவையாவும்.

இதை விளங்கி கொண்ட விடுதலைப்புலிகள் தமது விடுதலைப் போரை விரைவு படுத்தி

அந்த மண்ணையும் மக்களையும் பாரிய அழிவிலிருந்து மீட்டெடுக்கவும் . அந்ந

அன்னிய நாடுகளின் வலைக்குள் சிக்காது தம்மையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய ஒரு

நெருக்கடியிலும் நிர்பந்தத்திலும் உள்ளார்கள்.

எனவே தான் இந்த உலகம் விரித்த வலையில் இருந்த

தம்மை பாதுகாத்து கொள்ள புலிகள் செ;யய போகும் அடுத்த கட்ட

நகர்வு என்ன...???

என்பதை அந்த மக்களும் மண்ணும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறது...!!!

இவ்வாறான இந்த நிகழ்வுகளிற்கெல்லாம் சிங்கள மேசம் மக விரைவில்

அதன் தாக்கத்தை உணரும் என்பது அந்த படைத்துறை தளபதிகளின் கருத்துக்கள்

பறை சாறி நிற்கின்றன.

இனிவரும் காலஙகள் அதை உணர்த்தும் என நம்பலாம்....!!!

/color]

- வன்னி மைந்தன் -

Edited by vanni mainthan

கடைசியான கப்பல் தாக்குதல் உண்மை தெரியவில்லை. ஆனால் இலங்கைக்கு

கப்பல் சம்பந்தமான செய்மதி தகவல் முழுவதும் இந்தியாவே கொடுக்கிறது. தமிழ் நாட்டு அரசியல் காரணமாக வெளிப்படையாக ஒன்றும் கூறுவதில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் இப்படியான இழப்புகள் ஏற்படாமல் தந்திரோபயமான மாற்றுவழிகள் அல்லது பேய்காட்டல் எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறர்கள் மக்கள்........

உலக நாடுகளின் தயவில் தங்கியிருந் கொண்டு தங்களது இராணுவவெற்றிகளைக்

கொண்டாடும் நிலைதான் இலங்கை அரசின் நிலை. வன்னி மைந்தன் எழுதியுள்ள

விடயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட

நகர்வு எவ்வாறிருக்குமென தேசம் எதிர்பார்க்கின்றதென்பது உண்மையே.

இங்கு தேசம் மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த எதிர்பார்ப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரே சக்தி விடுதலைப்

புலிகளாகத்தானிருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக நாடுகளை நம்பி அவை இருக்கட்டும், தாக்கப்படும் கப்பல்களில் நூற்றுக்கு எத்தனை விகிதம் புலிகளுக்கு சொந்தமானது? அல்லது தாக்கப்பட்ட செய்தி எந்த அளவுக்கு உண்மை? இதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதிப்படுத்த முடியாது.

என்ன தான் நீங்கள் சொன்னாலும: புலிகள் நெருக்கடிக்கள் இருக்கினம் என்றதை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேசத்தின் குரல் பாலா அண்ணா ஒருக்கா சொன்ன நினைவு, ஐரோப்பிய ஒன்றியம், தடை செய்யும் என்று சொன்ன போது, என்ன நேர செய்யிறதை கொஞ்சம் உள்ளால செய்வம் என்று அது போலத் தான் இது. அமெரிக்காவின் சட்லைட் நெடுக இந்த கப்பல்க் காட்டிக்கொடுக்குது என்று வைப்பம். அப்பிடி காட்டிக்கொடுத்தால் அவைக்கும் அதில் நட்டம் இருக்கு. அதாவது நீங்கள் சொல்லுற அரச ஆதரவு நிலை என்றது, அமெரிக்காவை பொறுத்தவரை புலிகளை அழிப்பதற்காக அல்ல, போரினை தக்க வைத்து கொள்ள அதாவது இலங்கை தீவில் ஒரு பிரச்சினை யாருக்கும் வெற்றியுமின்றி தோல்வியுமின்றி இருக்க வேண்டும் என்பதையே அமெரிக்க விரும்புகின்றது. அதன் மூலம் அதற்க்கு பல அனுகூலமான விடையங்கள் கிடைக்கலாம். அதனால் அவையள் கப்பல்களை விட்டு வைக்க வேண்டிய நிலைக்கு திரும்ப வேணும்.

அதிலும் பார்க்க புலிகளின் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால் மட்டுமே இவர்களால் தாக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசு நாடுகளெல்லாம் சிறிலங்கா அரசிற்கு உதவி செய்கின்றன. எனவே சண்டை பிடிக்காமல் சமாதானமாகப் போகவேண்டும் என்று சொல்ல ஒருவர் ஓடிவருவாரே.. அவர் எங்கே போய்விட்டார்?

வல்லரசு நாடுகளெல்லாம் சிறிலங்கா அரசிற்கு உதவி செய்கின்றன. எனவே சண்டை பிடிக்காமல் சமாதானமாகப் போகவேண்டும் என்று சொல்ல ஒருவர் ஓடிவருவாரே.. அவர் எங்கே போய்விட்டார்?

எப்போது தமிழர்களின் கைகள் ஓங்குகின்றதோ அப்போது அவர் மட்டுமல்ல

இன்னும் பலபேர் ஓடி வருவார்கள். ஓடிவரும்போது கண்டுகொள்ளக் கூடாது.

உலக நாடுகளை நம்பி அவை இருக்கட்டும், தாக்கப்படும் கப்பல்களில் நூற்றுக்கு எத்தனை விகிதம் புலிகளுக்கு சொந்தமானது? அல்லது தாக்கப்பட்ட செய்தி எந்த அளவுக்கு உண்மை? இதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதிப்படுத்த முடியாது.

என்ன தான் நீங்கள் சொன்னாலும: புலிகள் நெருக்கடிக்கள் இருக்கினம் என்றதை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேசத்தின் குரல் பாலா அண்ணா ஒருக்கா சொன்ன நினைவு, ஐரோப்பிய ஒன்றியம், தடை செய்யும் என்று சொன்ன போது, என்ன நேர செய்யிறதை கொஞ்சம் உள்ளால செய்வம் என்று அது போலத் தான் இது. அமெரிக்காவின் சட்லைட் நெடுக இந்த கப்பல்க் காட்டிக்கொடுக்குது என்று வைப்பம். அப்பிடி காட்டிக்கொடுத்தால் அவைக்கும் அதில் நட்டம் இருக்கு. அதாவது நீங்கள் சொல்லுற அரச ஆதரவு நிலை என்றது, அமெரிக்காவை பொறுத்தவரை புலிகளை அழிப்பதற்காக அல்ல, போரினை தக்க வைத்து கொள்ள அதாவது இலங்கை தீவில் ஒரு பிரச்சினை யாருக்கும் வெற்றியுமின்றி தோல்வியுமின்றி இருக்க வேண்டும் என்பதையே அமெரிக்க விரும்புகின்றது. அதன் மூலம் அதற்க்கு பல அனுகூலமான விடையங்கள் கிடைக்கலாம். அதனால் அவையள் கப்பல்களை விட்டு வைக்க வேண்டிய நிலைக்கு திரும்ப வேணும்.

அதிலும் பார்க்க புலிகளின் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வந்தால் மட்டுமே இவர்களால் தாக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் வாய் திறந்தால் விபரங்கள் தெரியும். அல்லது கப்பலுக்குச் சொந்தமான

நாடுகள் வாய் திறக்க வேண்டும். அல்லது அழிக்கப்பட வேண்டிய கப்பல்களை நடுக்

கடலில் கொண்டு சென்று தாக்கியழித்த சிங்கள அரசு உண்மையைச் சொல்ல வேண்டும்.

இதை விடுத்து கப்பல் கப்பல் என்று எல்லோருமே கப்பல் பக்கமே பார்த்துக் கொண்

டிருக்கின்ற படியால் நீங்கள் சொல்வது போலவே

இது

உண்மையா?

பொய்யா?

ஊகமா?

அல்லது சோடிக்கப்பட்டதா?

ஆக்கிரமிப்புப் பேரினம் சும்மா கப்பல் கப்பல் என்று கப்பல் விடுகிறார்கள். யாருக்குத் தெரியும் கப்பலா மீன் பிடி வள்ளங்களா என்று. அவர்கள் தமது மனவுறுதியை வளர்ப்பதற்கு பொய்களைப் புனைந்து சொல்கின்றார்கள். அதை நம்பி நாம் ஏன் எம் மனவுறுதியைக் குலைத்தக் கொள்ள வேண்டும். கணனியின் மூலம் எதைத்தான் செய்ய முடியாது. இதுவும் ஒரு கப்சாவாக ஏன் இருக்கக் கூடாது.?

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மறுக்கவும் இல்லை இளந்திரையனிடம் கேட்ட பொழுது களத்தில் இருக்கும் தளபதிகளின்அறிக்கைகாள காத்து இருப்பதாக கூறி இருக்கின்றார் ஆக மொத்தம் இது புலிகளை பொருத்த வரை பாரிய இழப்பே......................

வன்னி மைந்தன் சொல்வதுபோன்று சர்வதேச சதிகள் மூலம் கப்பல்கள் அழிக்கப்படக் கூட வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் முற்று முழுதாக இதன் மூலம் அழிக்கப்பட்டவை விடுதலைப் புலிகளின் கப்பல் என்ற முடிவிற்கு வரமுடியாது.

களத்தில் நிற்கும் போராளிகளினதும், போராட்டத்திற்கு உதவும் மக்களினதும் மனவுறுதியைக் குலைக்க வேண்டுமென்ற நோக்குடனும் தனது வேண்டப்படாத அல்லது பழைய கடற் கலங்களை அழித்து சிங்களம் நாடகம் ஆடுவதற்கும் பெருமளவில் வாய்ப்புக்கள் உள்ளன.

புலத்திலிருந்து செய்யப்படும் பங்களிப்புக்கள் படைக்கலங்காக வன்னிக்கு வருவதைத் தடுத்து கடலிலேயே மூழ்கடித்து விடுவோம் என்று புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பை தடுப்பதற்காகவும் சிங்களம் இப்படி நாடகமாடலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு முதன்மை அயுத தளபாட வழங்குனராக இருப்பது சிங்களப் படையினரே. அவர்களளிடமிருந்து ஆயுதங்களை பெறும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் விரைவில் தொடங்குவார்கள்.

அதற்குரிய ஏற்பாடுகளில் வன்னி கடுமையாக ஈடுபட்டுள்ளது. வீட்டுக்கொருவர் நாட்டுக்காக என்ற இலட்சியத்துடன் வன்னில் அனைவரும் தமிழீழ தனியரசின் விடியலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவரின் சுட்டு விரல் காட்டும் திசை நேக்கி விரைவில் (சில நாட்கள், சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள் ஆகலாம்) புலியணிகள் பாயும். தாய் நிலம் மீளுவது மாத்திரமல்ல தமிழரின் படைகளிற்கு பல ஆண்டுகளிற்குத் தேவையான போர்க் கலங்களும் கையிற் கிடைக்ககும் வாய்ப்பு அதன்மூலம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நிற்கும் போராளிகளினதும்இ போராட்டத்திற்கு உதவும் மக்களினதும் மனவுறுதியைக் குலைக்க வேண்டுமென்ற நோக்குடனும் தனது வேண்டப்படாத அல்லது பழைய கடற் கலங்களை அழித்து சிங்களம் நாடகம் ஆடுவதற்கும் பெருமளவில் வாய்ப்புக்கள் உள்ளன.

புலத்திலிருந்து செய்யப்படும் பங்களிப்புக்கள் படைக்கலங்காக வன்னிக்கு வருவதைத் தடுத்து கடலிலேயே மூழ்கடித்து விடுவோம் என்று புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பை தடுப்பதற்காகவும் சிங்களம் இப்படி நாடகமாடலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு முதன்மை அயுத தளபாட வழங்குனராக இருப்பது சிங்களப் படையினரே. அவர்களளிடமிருந்து ஆயுதங்களை பெறும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் விரைவில் தொடங்குவார்கள்.

அதற்குரிய ஏற்பாடுகளில் வன்னி கடுமையாக ஈடுபட்டுள்ளது. வீட்டுக்கொருவர் நாட்டுக்காக என்ற இலட்சியத்துடன் வன்னில் அனைவரும் தமிழீழ தனியரசின் விடியலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவரின் சுட்டு விரல் காட்டும் திசை நேக்கி விரைவில் (சில நாட்கள்இ சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள் ஆகலாம்) புலியணிகள் பாயும். தாய் நிலம் மீளுவது மாத்திரமல்ல தமிழரின் படைகளிற்கு பல ஆண்டுகளிற்குத் தேவையான போர்க் கலங்களும் கையிற் கிடைக்ககும் வாய்ப்பு அதன்மூலம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பொழுது புலிகள் போரை தொடுப்பார்கள்...???

போரிற்கான புலிகளின் தயாரிப்புக்கள் நிறைவு பெற்றவுடன். அது மிகக் குறுகிய காலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

எப்பொழுது புலிகள் போரை தொடுப்பார்கள்...???

உங்கள் உளவுப்பிரிவு தகவல் தரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

''உலக நாடுகளை நம்பி அவை இருக்கட்டும் தாக்கப்படும் கப்பல்களில் நூற்றுக்கு எத்தனை விகிதம் புலிகளுக்கு சொந்தமானது? அல்லது தாக்கப்பட்ட செய்தி எந்த அளவுக்கு உண்மை? இதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதிப்படுத்த முடியாது."

உங்களால் ஒரு நல்ல கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது, அதுக்காக விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் பிடிபடுவதில்லை என்று விவாதிக்க நான் முன்படவில்லை. இதில் சில விடயத்தைப் பற்றி விவாதிக்க நாங்கள் முற்பட்டோமானால் அவங்களுக்கு நாங்களே உதவி புரிகிற மாதிரி விடயம் மாறிவிடும். ஆனால் ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது இந்த செய்மதியின் வேலைத்திட்டங்கள் எப்படிப் பட்டது என்பதை அறியாத புலிகளா?

தெரிந்தும் இப்படியா செய்வார்கள்? ஜயா நான் அறிந்த வரை ரணிலின் ஆட்சிக்குப் பின்பு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் எதுவும் பிடிபடவில்லை என்பது தான் உண்மை. அப்படியென்றால் விடுதலைப்புலிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்ற உங்கள் கேள்வியும் எனக்கு புரிகிறது. இதற்குரிய எனது பதில் என்ன வென்றால் அவர்களின் அமைதி தான் சிங்களவனுக்கு கலக்கம் அதாவது அரசாங்கம் பலகோடியைச் செலவழித்து செய்யும் பிரச்சாரத்தை விடுதலைப் புலிகள் அமைதியாக பணம் எதுவும் செலவழிக்காமல் செய்கிறார்கள் என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடை பெறுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.