Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள நீதிமன்றம்: குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்! தீர்ப்பு - உலகத் தமிழர்கள் குற்றவாளிகள்!

குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்! 61 members have voted

  1. 1. "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்...

    • உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள்!
      21
    • உலகத் தமிழர்கள் குற்றவாளிகள்!
      40

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கனம் கோட்டார் அவர்களே

எனக்கு இவ்வாறான விவாதங்களில் அனுபவம் இல்லை என்றாலும் பங்குபற்றவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டிருக்கிறேன்.

திரு நெடுக்காலபோவான் அவர்களின் கடும் வார்த்தை பிரயோகங்கள் தவறானவை என்றும் அவரது குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் முதலில் கூறிக்கொள்கிறேன். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றூலும் அதனை பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்கள் சுத்தவாளிகளே என எனது வாதத்தை முன்வைக்கிறேன்.

1. புலம் பெயர்ந்தவர்கள் 3 வகையினர். ஒன்று இலங்கையில் வசதியாக வாழ்ந்தபோதும் போராட்ட அழுத்தங்களால் புலம்பெயர்ந்தவர்கள். மற்றவர்கள் தமது குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக புலம்பெயர்ந்தவர்கள். அடுத்தவர்கள் மேற்கூறிய இரு பகுதியினரின் ஒத்துழைப்புடன் புலம்பெயர்ந்தவர்கள். இவ்வாறு மூன்று வெவ்வேறு காரணங்களுக்காக வந்தவர்கள் முழுப்பேரும் தமிழ்த்தேசியத்திற்காக வேலை செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. எந்த நிர்ப்பந்தமும் இன்றி தாங்களாகவே உதவி செய்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். தாயகத்தில் கூட அனைவரையும் நாங்கள் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது. புலம் பெயர்ந்தவர்கள் செய்கின்ற உதவியால் தான் எந்த நாட்டின் உதவியும் இன்றி ஈழத்தேசியம் வாழ்ந்து வருகிறது. அதுவே நிதர்சனமான சாட்சியாகும்.

2. புலம்பெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டுதான் வாழ்ந்துவருகிறார்கள். எனவே அதற்கு அமைவாக என்ன செய்யமுடியுமோ அதனை அவர்கள் செய்கிறார்கள். செய்வார்கள். இதனை நான் சொல்லும்போது எத்தனை பேர் அஞ்சலி கூட்டத்திற்கு வந்தார்கள். எத்தனை பேர் ஊர்வலத்திற்கு வந்தார்கள் என கேட்கலாம். ஒரு வெளிநாட்டில் பல வேலைப்பளுவிற்கு மத்தியில் எவ்வளவு செய்யமுடியுமோ அதனை அவர்கள் செய்கிறார்கள்.

3. இந்திய பாட்டுக்கச்சேரிக்கு போவதையும் விடுதலைப்போராட்ட நிகழ்வுகளுக்கு வருபவர்களையும் ஒப்பிடுவதே தவறு. அவர்கள் என்ன கேடு கெட்ட வழியிலா போகிறார்கள். ஒரு பொழுது போக்குக்காக போபவர்களை நீ அங்கு போகிறாய்? ஏன் இங்கு வரவில்லை என கேட்கலாமா? புதுப்படம் என்றால் தாயகத்தில் கியூவில் நிற்கவில்லையா? அந்த போர் நடந்தபோதே உன்னால் நிற்க முடியும் என்றால் ஏனய்யா இங்கு நிற்க முடியாது? பொழுதுபோக்கு நிகழ்வுகளை தயவு செய்து போராட்ட நிகழ்வுகளோடு ஒப்பிடவேண்டாம்.

இருக்கின்றோம் நாங்கள் இருக்கின்றோம்

நம்பிக்கையோடு காய்களை நகர்த்துங்கள்...............

என்று கூறி விடைபெறுகிறேன்

  • Replies 55
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் சிட்னியை மையமா வைத்து கருத்து கூறுகிறேன்.சிட்னியில் ஒவ்வொரு கிழமையும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும் மேடை நிகழ்ச்சியாகவும் இருக்கலாம் சமய நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்,இங்கு மேடை ஏறும் எம்மவர்கள் அவர்கள் மேடை பேச்சின் போது ஈழ தமிழர் என்ற சொற்பதம் பாவிக்கமாட்டார்கள்,தமிழர்கள

  • தொடங்கியவர்

திரு. விசால், திரு. புத்தன் ஆகியோர் முன்வைத்த வாதங்கள் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

யாழ் கள நீதிமன்றத்தினையோ அல்லது யாழ் களத்தின் நீதிபதிகளையோ வழக்கில் வாதாடுபவர்கள் அவமதிக்க முடியாது என்பதையும், யாழ் கள நீதிமன்றத்தில் உங்கள் வாதங்களை வைக்கும் முன் நீதிமன்ற விதிமுறைகளை அறிந்து, நீதிமன்றத்திற்கு மதிப்பு கொடுத்து நடக்கும்படியும் வாதாடுபவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றாத வாதங்கள் யாழ் கள நீதிமன்றத்தில் செல்லுபடியற்றவையாக கருதப்படுவதோடு அவை நிருவாகத்தின் உதவியுடன் உடனடியாக அகற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

கனம் கோட்டாரே!

வாதாட்டத்தின் ஓட்டத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அவதானிகளே!

பார்வையாளர்களாக இங்கு வருகை தருகின்ற இணைய வாசகர்களே!

எதிர்க்கருத்துக்களை நியாயப்படுத்தக் கூடியிருக்கும் எதிர்த்தரப்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் ஆதியின் வணக்கம்.

குற்றவாளிக் கூண்டில் உலகத்தமிழர்.

எனது கருத்து கனடா நாட்டில் வாழும் தமிழர்களை மையப்படுத்தியே வெளிவருகிறது. தாயக நேசிப்பில் ஆழ்ந்த பணியாற்றும் ஒரு சில தேசபக்தர்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கேட்டு கனடாவில் வாழும் 95 வீதமான தமிழர்களும் சில சமயங்களில் ஆதியாகிய நான் உட்பட அனைவரும் குற்றவாளிகளே.

முதல்த்தரக் குற்றவாளிகள்

ஊடகங்கள் (பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள்)

இரண்டாந்தரக் குற்றவாளிகள்

பொது அமைப்புகள் (பெண்கள் ,கோவில்கள், பழையமாணவர் சங்கங்கள், எழுத்துத்துறைசார் அமைப்புகள், கலைக்கல்லூரிகள், ஊர்ச்சங்கங்கள்.)

மூன்றாந்தரக் குற்றவாளிகள்

பல்லினத் தொடர்புகளைக் கொண்ட உத்தியோகத்தர்கள். (கல்வியறிவால் மேம்பட்டவர்கள்)

நான்காந்தரக் குற்றவாளிகள்

எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் சாதாரண மக்கள்.

முதல்த்தரக் குற்றவாளிகளாக ஆதியின் பார்வையில் கருதப்படுபவர்கள்.

பல ஊடகங்கள் நம்மிடையே இருந்தாலும் ஒரு சில மாத்திரமே தாயகத்தின் குரலை எடுத்து வருகின்றன. அதாவது தாயகத்துத் தயாரிப்புகளை தங்கள் ஊடகத்தின் வாயிலாக வெளிக்கொணர்ந்தால் தம்பணி முடிந்ததாக கருதும் நிலை இங்கு தாராளமாக உள்ளது. அதே நேரம் மதில்மேல் பூனைபோல் தருணம் பார்த்து குதித்து தம்மை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பவாத ஊடகங்களும், இன்னொரு திசையில் போராட்டத்திற்கு வேண்டாத பிரச்சாரங்கள் என்று ஒதுக்கப்பட்ட விடயங்களை விவாதிக்கும் பொறுப்பற்ற போக்குடைய பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் மக்களைக் கவரத்தெரிந்த ஊடகங்களும், இலக்குகளற்ற விளம்பர உத்திகளைக் கொண்ட பத்திரிகைத் துறைகளும், வியாபார தந்திரமாக விடுதலைபற்றிய கருத்துக்கள் பொழியும் விடுதலை வியாபாரத்தால் வளர்ச்சியுற்ற ஊடகங்கள் சிலவும் முதல்த்தரக் குற்றவாளிகள்.

முதலில் எம்மக்களுக்குள் எங்கள் போராட்டம் பற்றிய நியாயப்படுத்தல்களைத் தரவேண்டிய இச்சமூகம் தத்தம் சுயத்தை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றன. மக்களைச் சென்றடையும் ஊடகங்களாக இருக்கும் இவ்வூடகங்கள் சுயநலமிகள் கூடாரமாகிக் கிடக்கிறது.

இரண்டாந்தரக் குற்றவாளிகள்.

பொது அமைப்புகள்

இப்பொது அமைப்புகளும் தாயகப் பயணத்தில் தங்கள் பங்களிப்பை அதாவது அமைப்பு ரீதியான பலப்பான முன்னெடுப்புகள் எதையும் பலப்பாகவோ, தொடராகவோ செய்வதாகத் தெரியவில்லை. பெண்கள் அமைப்புகள் தாயகப் பெண்களின் அவலத்திற்காக குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. இப்போதுதான் சர்வதேச மகளிர்தினத்தையொட்டி தமிழ் மகளிர் சில நூறுபேர் வீதியில் இறங்கித் தங்கள் குரலை ஒலித்தார்கள். இருப்பினும் பெரும்பலத்தைக் காட்டமுடியாததால் இக்கனடாவில் வாழும் தமிழ்பெண் சமூகம் பெரும் குற்றவாளிகளாக நிற்கின்றனர். கோவில்கள் ஆடம்பர விழாக்கள் நிகழ்த்துவதிலேயே குறியாகச் செயல்படுகின்றன. வருகின்ற வருமானத்தில் மிகப்பெரிய அளவில் கோவில்களை அழகுபடுத்துவதிலும், கோபுரம் கட்டுவதிலும் என்று கோவில்களை ஒரு ஆடம்பரக் கூடமாக மாற்றுவதிலேயே குறியாக உள்ளார்கள். தர்மத்தைப் போதிக்கவேண்டிய ஆலயங்களில் ஆடம்பரவிழாக்களுக்கு முன்னுரிமை வழங்கும் பண்பாடு மலிவாகிக் கிடப்பதும், எழுத்துத் துறைசார் நண்பர்கள் வெவ்வேறு குழுமங்களாக பயணித்தாலும் இன்றைய தாயகப் பிரச்சனைக்காக எந்த ஒரு குரலையும் தம்தரப்பால் வழங்காத பயணிப்பாக அவர்கள் நகர்வு, இந்தக் கலைகளைக் கற்பிக்கும் கலைக்கூடங்கள் தத்தமது வருமானத்தை மாத்திரமே எடுத்து செயல்படுவதும் அதாவது விடுதலைப் பாடலுக்கு நடனமாடினாலோ, விடுதலைப்பாடலை பாடிக் காட்டினாலோ தம்கடமை முடிந்தது என்று விடுதலை எழுச்சி நிகழ்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வெளியேறுவதும், பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள் தமக்கென்று ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு செயலாற்றும் தன்மைகள் என்பனவும் புலம்பெயர்ந்த உலகத்தமிழரைக் குற்றவாளியாக்கின்றது.

மூன்றாங்தரக் குற்றவாளிகளாக பல்லின சமூகத்துடன் உத்தியோக ரீதியில் நட்புறவாகியிருக்கும் படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள். இவர்கள் தாம் பணியாற்றும் இடங்களில் எம் தாயகத்தின் பிரச்சனைகளை பேசாத்தன்மைகள். பல்லின நட்பிருந்தும் பலனற்ற நிலையைத் தோற்றுவிக்கும் ஊமைகள்.

நான்காந்தரக் குற்றவாளிகள் மிகுதியான மக்கள்.

தாயகப்பணிக்கு பெயரளவில் குரல் கொடுப்பது அதற்கு மேல் இவர்களுக்கு அக்கறை என்பதெல்லாம் கிடையாது. உயிர்வலியில் எங்கள் இனம் துடிதுடிக்க இவர்கள் பனியையும், பல்வேறு காரணங்களையும் சொல்லி சோம்பேறித்தனங்களுக்கு மாலையிட்டவர்கள். தொலைபேசிகள் இருப்பதற்காக வாயால் வானத்தைப் பிளப்பது இவர்களுக்குப் பொழுது போக்கு. தாயகப் புனர்வாழ்வுக்குக் கொடுக்கும் ஐந்து டொலருக்கு காலையில் ஆயிரம் கேள்வியுடன் அழுவார்கள் அதே மாலையில் ஆடம்பரக் கூத்துகளுக்கு 500 டொலர்கள் செலவு செய்வார்கள். தாயகப் பற்றற்றவர்கள் என்று இவர்களைச் சொல்லமுடியாது. சரியான வழிகாட்டல் இல்லாக் காரணத்தால் இவர்களும் இன்று குற்றவாளிக்கூண்டில்....

எப்படிப் பார்த்தாலும் தாயகம் என்ற ரீதியில் இன்னும் புலம் பெயர்ந்த எம்மக்கள் பங்களிப்பு என்பது

'விமானத்தில் பயணிக்க வேண்டிய காலத்தில் கட்டைவண்டியில் பயணிப்பது போன்றே இருக்கிறது."

எங்கள் தாயகத்தை கந்தகம் குதறும் பொழுதுகளில் நாங்கள் கதைபேசிக் கொண்டிருப்பதே பெரும் குற்றம்.

  • தொடங்கியவர்

திரு. ஆதிவாசி முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

கனம் தமிழ்தங்கை இரண்டாவது தடவையாக முன்வைத்தவாதம், யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கம் 01 ஐ மீறுவதால் இரண்டாவது தடவையாக அவர் முன்வைத்த வாதம் செல்லுபடியற்றதாகிறது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

கனம் நீதிபதி அவர்களே,

நான் அறிந்த வகையில் ஈழத்தினை விட்டுவிட்டு புலம் பெயர்ந்தவர்களினை பெரும்பாலான்வர்கள் இப்படி ரகம்.

இலங்கையில் ஏழ்மை நிலையில் பிறந்து கஸ்டங்களினூடு தமது கடும் முயற்ச்சியினூடு முன்னேறி அவர்களும் மற்ற மேல் நிலையில் வாழ்க்கை நடத்துவோரினைப்போல தாமும் பண வசதியியுடன் வாழ வேண்டும் என்று வாழ தலைப்பட்டு இலங்கையில் வாழ்ந்து பின்பு தமது படிப்பின், வேலை அனுபவங்களினூடு வெளிநாடு வந்தவர்கள். இவர்களுக்கு இலங்கை பிரச்சனையினால் தான் வந்த வர்கள் என்று சொன்னால் ஒரு இழக்காரமான விடையம்.

ஆகவே தாம் ஆரம்பகாலங்களில் வாழ, படிக்க எப்படிக்கஸ்டப் பட்டோம் என்று உள்ளே உணர்ந்தாலும் அவர்களின் போலியான டாம்பீக வாழ்க்கைமுறை அவர்களின் பழைய காலங்களினை சிந்திக்க தடை போட்டுவிடுகிறது. எனவே அவர்கள் நேரடியாக தமிழர் போராட்ட விசயங்களில் மூக்கை நுழைக்காமல் வாழ தலைப்படுகிறார்கள்.

இவர்களினை அனுகுவது மாதிரி அனூகிகாரீயம் ஆற்ற நாம் தவறி விட்டோமா என்று எனக்கு கேட்க்கத்தூண்டுகிறது. ஆகவே இவர்களினை திருத்த முடியும். இவர்கள் வெள்ளைக்காரனுக்கு கீழே வேலை செய்தாலும் அவர்கள் இங்குள்ள வசதிகளுக்காக அதை இதுதான் தமக்கு எழுதிவைத்தது என்று பெரிதாக எடுத்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்து கடனில் பரம்பரபரம்பரையாக் பணத்தினை எப்படிக்கட்டலாம் என வாழ்கிறார்கள்.

இவர்கள் இப்படி ஆடம்பரமாக வாழ்வதே அடுத்தவனை பார்த்து தான் மேலும் போகவேண்டும் என்று. அதற்காக வங்கிகள் இவர்களின் இந்த மனோநிலையினை அறிந்து அள்ளி கொடுக்கிறது. ஒருக்காப்போய் ஒரு 500 டொலர் கேட்டா முகட்டைப்பார்க்கும் சனம் இவர்கள். கைகள் பின்புறமாக் கட்டப்பட்டு டாம்பீக வாழ்க்கை என்ற சிறையினுள் உள்ள மனிதனுக்கு 30 டொலர் மாற வசதியிருக்காது என்று கூறிக்கொள்ள வெட்க்கப்படும் அதே நேரம்.

இவர்களுக்கு இலங்கையில் உண்மையில் சிங்கள்வனால் பாரபட்ச்சம் காட்டப்படவில்லை ஆனால் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே இப்போது இங்கால படு எண்டா படுக்கவும் பணம் ரொக்கமாக அழவுக்கு மீறி வருவதால் ஒரு குசினிக்குப்பதிலாக மூன்று குசினி உள்ள பெரிய வீடு, குளிப்பதற்கு இரண்டு காலநிலைகளுக்கேற்ப நீச்சல் தடாகம். ஓடுவதற்கு லேட்டஸான கார். அதைவிட சமுதாயத்திற்குள் போட்டி இப்படி வாழவதால் அவன்.

தற்பெருமை கொண்டு தானும் இலங்கை மக்களிடையே ஒரு பெரிய காசுக்காட்ரப் என்று காட்ட தலைப்படுகிறான். வெள்ளை அடிமையாக வேலைகளில் நடத்தினாலும் வெளியில் சொல்லாது பெருமை பேசிக்கொண்டு திரிகிறான்.

இவர்கள் தான் ஜேசுதாசின் கலைநிகழ்ச்சிக்கு 250 டொலர் எப்படியும் கிறடிட் காட்டிலே எடுத்துக்குடுத்து புது உடுப்புகளுடன் பார்க்க முண்டிஅடிப்பவர்கள். ஆக்வே இவர்கள் போராட்டத்துக்கு ஏதும் செய்ய நினைச்சாலும் கையில உடன கொடுக்க பணம் இல்லை என்று காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்க்காக தெரியாதது போல திரிவார்கள்.

ஆகவே இவர்களினை ஆகா நீங்க தான் பிரபு என்று சொல்லி ஆடுர மாட்டை ஆடித்தான் கறக்கணும் பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும் என்ற பொது விதிக்கமைய அணுகவேண்டும். அப்படி அணுகாமல், அவர்களின் போலி முகங்களினை போராட்டம் நடைபெருகிறது, அதனால் பொது மக்கள் அழிகிறார்கள் என்று வீராப்புப்பேசி மாற்ற முடியாது. வாசலில நின்றும் பிரியோசன்முமில்லை.

இவர்களில் என்னைப்போல பலர் உண்டு அனால் எமக்கு ஏற்கனவே ஒரு கொள்ள்கை இருப்பதினால் போராட்டத்துக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.வருகிறார்கள் அனால் விலாச எடுவை எடுக்க வேணும் என்ற அவா அல்லாது ஆனாலும் அந்த போலியான கவுறவத்தினை விட்டுக்கொடுத்து இந்த பாலாய்ப்போன தமிழ் மனம்களை திருத்த விழையப்போய் கொட்டானால் அடிவேண்டுகிறோம்.

ஆகவே தமிழனாய் பிறந்து விட்டோம் எனியும் நாம் ஒரு வந்தேருகுடிகளாய் இருக்காது எமக்கு என்று ஒரு சொந்த நாடு வேணும் அதில போய் இருந்து தோட்டமோ அல்லது ஒரு தொழிற்சாலையோ போட்டு எமது தாய்மண்ணில் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்ற கற்பனையில் கன சனம் இங்கால் இருக்கு. ஆக ஒரு பிள்ளையை நாம் பொருப்பாய் பார்ப்போம் என்று இந்த சைவனைப்போல எல்லாரும் நினைத்து வாழ எமக்குள் வேற்றுமைகள் கழையப்பட்டு போட்டியிலும் பொறாமை வராது பார்த்து நல்லாய் உழைத்து தமிழீழ போராட்டத்திற்கு வலு சேர்க ஒரு முறையான வேலைத்திட்டம் அவசியம்.

ஆகவே நீதவான் அவர்களே உங்கள் காரில் உள்ள விளம்பரம்பரம் போல கடைக்குக்கடை வீட்டுக்கு வீடு சென்று மக்களுடன் மக்களாக பழகி அவர்களின் போலிவாழ்க்கையினை சுட்டிக்காட்டாது அவர்களினை ச்ரியான வழிக்குத்திருப்பாமல் நாங்கள் அவர்கள் குற்றவாளிகள் என்று சொல்ல முடியாது என்று தாழ்மையாகக் கோட்டுகொண்டு

மற்ற ரகமான மக்கள் இதற்கு அப்பாற்பட்டு உண்மையிலேயே கஸ்டப்பட்டு வேலை செய்தோ எப்படியும் குடுப்பவர்கள் அவர்களினை பாராட்டி விடை பெருகிறேன் வணக்கம்.

மேன்னை மிக்க நீதியாளர்களே ! களத்தில் பங்பற்றும் வாதத்திறன்மிக்க கருத்தாளர்களே !

ஏனைய நண்பர்களே ! பார்வையாளர்களே ! வணக்கம்.

யாழ்களம் உலகத் தமிழர்களை தனது நீதிமன்றில் நிறுத்தி விட்டது

தமிழர்கள் குற்றவாளியா? சுத்தவாளியா?. குற்றம் காண்பது எதிலும் எளிது. தற்கால

ஈழத்தமிழரின் அவலத்தில் கைகொடுத்துத் தூக்கிவிட மறுக்கும் ஒரு சாராரின் அதுவும்

மிகச் சொற்பமான ஒரு பகுதியினரின் பக்கம் நின்றுகொண்டு முழுத் தமிழினமும் குற்ற

வாளிதானெனக் கூறுவதை என்னாலேற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே எனது தரப்பு

நியாத்தின் படி உலகத்தமிழினம் சுத்தவாளியே என்ற வாதத்தினை இங்கு முன்வைக்கி

ன்றேன்.

கனம் நீதிபதிகளே !

1. மனிதனென்ற ஒரு பெரிய வட்டத்துள் அடங்குவதுதான் உலகத் தமிழினமும். அதனடிப்

படையில் மனிதனானவன் ஒரு சூழ்நிலைக்கைதி. அதற்கு தமிழினமும் விதிவிலக்கானத

ல்ல. களத்திலோ புலத்திலோ அந்த சூழ்நிலையின் பாற்பட்டுத்தான் அவனது செயற்

பாடுகளும் அமைகின்றது. தனக்குரிய பாதுகாப்பானதொரு சூழ்நிலை அமையும்போது

அவன் மலையையும் தகர்த்தெறிவான். உதாரணமாக புலத்தில் வாழும் ஈழத்தமினம்

இலங்கை அரசின் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கெதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்

களையும் இன்னோரன்ன பிற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றான். ஈழத்தில் வன்னி

தவிர்ந்த பிறபகுதிகளில் இச் செயற்பாட்டில் அவர்களால் ஈடுபட முடியுமா? இல்லை.

அதனூல் அவர்கள் குற்றவாளிகளாகிவிட முடியுமா? அவர்கள் சுத்தவாளிகளே.

2. களத் தமிழர் இடம் பெயர்ந்து புலத்தமிழரானாலும் அவர்களது உணர்வுகள் களத்

திலேயே உள்ளதென்பது வெளிப்படை. தமிழரென்ற உணர்வற்ற இனப்பற்றற்ற தமிழர்

மிகக் குறைவு. உலகத்தமிழினம் என்றோ ஒன்று கூடிவிட்டது. எதிரியாகப் பார்க்கப்

படக்கூடிய சில தமிழர்களிடமிருந்து வெளிப்படும் கருத்துக்களில் முரண்பாடும் தளர்வும்

தெரிகிறது. அதுமட்டுமல்ல மலரப்போகும் தமிழீத்தைத் தம் தோள் மீது தாங்கி வளர்த்

தெடுக்கத் தயாராகவேயுள்ள உலகத்தமிழினம் குற்றவாளியா? இல்லையே.

3. உலகத்தமிழினத்துள் வாழ்கின்ற புலம் பௌர் ஈழத்தமிழினம் பல சவால்களுக்கு

முகங் கொடுத்தே தனது தலையை இன்று நிமிர்தியுள்ளது. அது எதிர்கொண்ட

சவால்களை நீங்கள் அறியாதவர்களல்லர். அவர்கள் உலகின் எந்தெந்தப் பகுதி

யில் வாழ்ந்தாலும் அந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கேற்பவே தமது நடவடிக்

கைகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். ஈழமென்றொரு தேசத்திற்காக கனடா

தொட்டு நியூஸிலாந்து வரை ஒன்றாகக் கைகோர்த்துச் செயற்படும் அந்தத் தமிழி

னம் குற்றவாளியா? இல்லையே.

கனம் நீதியாளர்களே !

உலகத்தமிழினம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதன் குரல்கள்

அல்லற்படும் ஈழத்தமிழனுக்காய் ஒன்றாயொலிக்க வேண்டும். உதிரிகள் எந்த இனத்தி

ற்கும் பொதுவானர்கள். தமினத்தின் உதிரிகளும் உதிரிகளாகவே இருக்கட்டும். அவர்கள்

மனம் மாறவேண்டும். அதற்காகக் காத்திருக்கவும் முடியாது. எனவே நம் தமிழினம் உற்

சாகமடைந்து மேலும் ஊக்கத்துடன் செயற்பட அவர்கள் சுத்தவாளிகள் என்று தீப்பு

வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்

திரு. இறைவன் முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

திரு. வல்வைமைந்தன், திரு. சிவராஜா ஆகியோர் இரண்டாவது தடவையாக முன்வைத்த வாதங்கள், திரு . வானவில் முதலாவது தடவையாக முன்வைத்த வாதம் என்பன, முறையே, யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கங்கள் 01, 01, 10 ஆகியவற்றை மீறியதால் அவை செல்லுபடியற்றவையாக கருதப்பட்டு நிருவாகத்தின் உதவியுடன் நீதிமன்றத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

திரு. புலிபாசறை முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்ற விதிமுறை இலக்கம் 03 ஐ மீறியுள்ளதால், திரு. புலிப்பாசறை முன்வைத்த வாதம் செல்லுபடியற்றதாகின்றது. எனினும், திரு. புலிப்பாசறையின் கருத்து சாதாரண பொதுமகன் ஒருவன் யாழ் கள நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து பேசும் கருத்தாகக் கணிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட வாதம், நீதிமன்றம், நீதிபதிகள் பற்றிய உங்கள் கருத்துக்களை, முறைப்பாடுகளை எனக்கு தனி மடலில் அறிவிக்கும்படியும், யாழ் கள நீதிமன்றத்தில் நீதிமன்ற விதிகளை மீறும் வாதங்களை முன்வைக்க வேண்டாம் எனவும் நீதிமன்றத்தில் வாதிட்ட, வாதிடப்போகும் பெரியோர் அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

இந்த நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளை கண்டிருக்கிறது ஆனால் வாத அந்திருக்கும் நானும் விசித்திரமானவன் அல்ல இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல,எங்களின் வாழ்க்கை பாதையில் நடக்கும் ஒரு துன்பியல் சம்பவம் தான் இந்த வழக்கு.

உலக தமிழர் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் எத்தனை பேர் இன்று தங்களை தமிழர்கள் என்று வெளிபடையாக சொல்லுவார்கள் என்பது தான் என்னுடையா தாழ்மையான கேள்வி கணம் நீதிபதி அவர்களே??

உலக தம்மிழர்கள் குற்றவாளிகள் என்ற ஆணித்தரமான கருத்துகளுடன் இன்று உங்கள் முன் நான் ஆஜராகியுள்ளேன் கணம் நீதிபதி அவர்களே.பாலை எடுத்து கொண்டால் அதில் ஒரு துளி விஷம் சேர்ந்தால் அது பால் முழுவதையும் விஷமாக்கி விடுவது போல் இதில் சிலர் நல்லவர்கள் சிலர் கெட்டவர்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாகவும்,வருத்தமாகவு

  • தொடங்கியவர்

கனம் ஜமுனா அவர்கள் முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

நீதிமான்களுக்கு எனது வணக்கங்கள்.

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி"

யாரிடத்திலும்( குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுநிலைமை, பொருந்தி(செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். என்ற திருவள்ளுவரின் வாதத்தை முன் வைத்து உலகம் முழுதும் பரந்து வாளும் ஈழத்தமிழர் சுற்றவாளிகளே என்ற எனது முடிவை உங்கள் முன் வைக்கிறேன்.

"தடிமனும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்." வழக்கில் பொதுப்படையாக உலகத்தமிழர் என்று குறிப்பிட்டு இருந்தாலும் உலகம் முழுதும் பரந்து வாளும் ஈழத்தமிழரை நீதிமன்றம் குறிப்பதாக எண்ணிக் கொண்டு எனது வாதத்தை தொடங்குகிறேன்.

நாங்கள் செய்த ஒரே ஒரு குற்றம் புலம் பெயர்ந்ததுதான். வந்து இத்தனை வருடங்கள் பின்னும் யாழ்களத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 481 பார்வையாளர்கள் நேற்று வருகை தந்திருந்தனர்.

மதிப்புக்குரிய நீதிபதிகளே இந்த மேற்குலகின் ஈர்ப்புகளையும் தாண்டி எமது இனத்தின் மீது பற்றுக்கொண்டு தமிழே தெரியாவிட்டால் கூட எமது ஊர்வலங்களுக்கு உயிர் தரும் எமது இளைஞர்கள் குற்றவாளிகளா? பணம் இல்லாவிட்டால் கூட மனம் இருக்கு என்று சொல்லி தெருவெல்லாம் நின்று உண்டியல்(TRO) குழுக்கும் எமது சிறார்கள் குற்றவாளிகளா?? நாங்கள் எங்களால் முடிந்ததை எப்போதும் செய்தே வந்துள்ளோம். நாங்கள் எப்போதும் அசமந்தமாக இருந்ததில்லை. தேவைப்படும் போதெல்லாம் எமது எதிர்ப்பை பதிந்தே வந்துள்ளோம். உண்மையில் நாங்கள் மிகவும் ஆர்வமும் உணர்சியுடனும் இருந்தாலும் கூட சரியான முறையில் ஒழுங்கு படுத்தாத அமைப்புகளே இதற்கு காரணம் அன்றி நாங்கள் அல்ல.

எம்மால் முடிந்தளவு ஈழத்திற்கான எமது உதவிகளை நாங்கள் எப்போதும் செய்தே வந்துள்ளோம். மீண்டும் மீண்டும் செய்வதற்கு எப்போதும் நாங்கள் பின்னிற்கவில்லை. தயவு செய்து எங்கள் மீது குற்றம் சொல்வதை முதலில் நிறுத்தி எம்மை சரியான முறையில் ஒழுங்கு படுத்தி ஈழத்துக்கு வெளியே ஈழத்தமிழருக்காய் இயங்கும் ஓரு சுயாதீன அமைப்பாக எம்மை உருவாக்க வேண்டிக்கொண்டு நாங்கள் எப்போதும் சுற்றவாளிகளே என்று கூறி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்

திரு. வாசகன் அவர்கள் முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

தீர்ப்பு தினமான மார்ச் 30, 2007 நெருங்கி வருவதால், தமது வாதங்களை யாழ் கள நீதிமன்ற விதிமுறைகளிற்கு கட்டுப்பட்டு, முன்வைக்க விரும்புபவர்கள், தமது வாதங்களை முன்வைக்க வேண்டிய இறுதித் திகதி மார்ச் 29, 2007 என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

மேலும், இன்னுமொரு விடயத்தையும் இந்த யாழ் கள நீதிமன்றம் அறிஞர் பெருமக்களிற்கு தெளிவுபடுத்த விரும்புகின்றது. அதாவது, யாழ் கள நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1. யாழ் களத்திற்கு தினமும் வருகை தருகின்ற ஒரு அக்ட்டீவ் உறுப்பினராக இருத்தல்.

2. யாழ் களத்தில் மற்றைய உறுப்பினர்களிற்கு நன்கு பரீட்சயமான ஒரு உறுப்பினராக இருத்தல்.

3. சிறப்பான முறையில் விவாதம் செய்யக்கூடியவராய் இருத்தல் அல்லது பயனுள்ள தகவல்களை யாழ் களத்தில் பிரசுரித்து இருத்தல்.

4. தமிழ்த் தேசியத்திற்கு பயனளிக்கும் வகையில் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவராய் இருத்தல்.

5. தான் சொல்லும் கருத்தில் தடுமாற்றம் இல்லாது, நிலைத்து நிற்கக்கூடியவராய் இருத்தல்.

6. இங்கு பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்வகையில் ஓர் பெண் நீதிபதியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

7. யாழ் களத்தில் கருத்து எழுதும் நண்பர்கள் அனைவரும் முகம் தெரியாத உறவுகளே, ஆயினும், ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனைகளைக் கருத்துக்களை, கொள்கைகளைக் கொண்டு இருந்தாலும், தமிழ்த்தேசியம் என்று வரும் போது அனைவரும் ஒன்று பட்டுவிடுவார்கள்!

நேற்றைய கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான வான்புலிகளின் தாக்குதலைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான பதில் கருத்துக்களை வாசித்தவர்களிற்கு இது புரியும். எனவே ஒருவன் யாழ்கள நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதற்கு யோக்கியதை உடையவனா அல்லது மேற்குறித்த இந்த தலைப்பில் விவாதம் செய்வதற்கு யாழ் கள நீதிமன்றம் யோக்கியதை உடையதா என்ற விதண்டா வாதங்கள் செய்வதை நிறுத்திவிட்டு, யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி வைப்பதையோட்டி நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் யாழ் கள உறவுகள் அனைவரும் யாழ் கள நீதிமன்ற விதிமுறைகளிற்கு மதிப்புக் கொடுத்து, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, உங்கள் சிந்தனைகளை, உணர்வுகளை, நியாயங்களை நாகரிகமான முறையில் இங்கு பகிர்ந்து வரும் மார்ச் 30, 2007 அன்று யாழ் களத்திற்கு மறவாது, கட்டாயம் வருகை தந்து, உங்கள் யாழ் குழந்தையை வாழ்த்திச் செல்லும்படி அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

மேலும், மார்ச் 30, 2007 அன்று, யாழ் கள நீதிமன்ற விதிமுறைகளின் படி இறுதித் தீர்ப்பின் முடிவுரை என்னால் வழங்கப்பட்டபின், நீதிமன்றம் களைந்தபின், நீங்கள் வழமையான உங்கள் விவாதங்களை, வழமையாக யாழ் களத்தில் கருத்தாடும் பாணியில் தொடர்ந்து விவாதித்து உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை, எண்ணங்களை மற்றைய யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

எனவே, நீதிமன்ற விதிமுறைகளிற்கு கட்டுப்பட்டு கருத்து எழுத விரும்பாத உறவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, நீதிமன்றம் களையும் வரை பொறுமையாக இருக்கவும்.

எனினும், நீதிமன்றம் களைந்த பின், நீதி மன்ற விதிமுறைகளை பின்பற்றாது முன்னெடுக்கப்படும் விவாதத்திற்கு, யாழ் கள நீதிமன்றத்திலிருந்து நீங்கள் பதில்களை எதிர்பார்க்க முடியாது என்பதையும், இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். அனைவரினதும் ஒத்துழைப்புக்கும் நன்றிகள்!

யாழ் கள நீதிமன்ற விதிமுறைகளிற்கு மதிப்புக் கொடுத்து, தமது வாதங்களை முன்வைத்த அனைத்து அறிஞர் பெருமக்களிற்கும் யாழ் கள நீதிமன்றம் நன்றி கூறி, அவர்களைப் பாராட்டுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் சுத்தவாளிகள் என கூறிக் கொண்டு எனது சிறிய வாதத்தை முன்வைக்கிறேன்.முதலாவதாக தலைவர் ஆயுத போராட்டம் என்று தொடங்கும் போது எம்மிடம் ஆயுதம் இல்லையே ஆட்கள் இல்லையே என்று அங்கலாய்க்கவில்லை வீட்டுக்கு வீடு ஆட்கள் தேவை என்று தேடித்திரியவில்லை.எம்மைப் போன்ற முதுகெலும்பில்லாத ஆட்களெல்லாம் வெளிநாடுகளுக்கு ஓடி வர வீரம் மானம் ரோசமுள்ள சில ஆயிரம் இளையர் யுவதிகள் இனி மேல் வரப் போகும் வளரப் போகும் எமது சந்ததிக்காக உலகமே ஆயுதங்களும் பயிற்சிகளும் உளவுத் தகவல்கள் எல்லாம் கொடுத்தும் இன்னமும் புற முதுகிட்டு ஓடிக் கொண்டுதானிருக்கின்றனர்.ஆக அதில் உள்ள செய்தி என்னவென்றால் ஆட்கள் தொகையால் எதுவுமே நடை பெறப் போவதில்லை.பலருக்குத் தெரியாத விடயங்களை புள்ளி விபரங்களுடன் முன் வைக்கலாம்.பாதுகாப்புக் காரணமாக எலாவற்றையும் கூறாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எமது தேசத்தின் குரல் மாவீரர் நினைவின் போது ஒரு செய்தியை சொல்லியிருந்தார்.அதாவது எமக்கு தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து தான் கூடுதல் உதவி கிடைக்கிறதென்பதை சொல்லியிருந்தார்.ஆக கண்ணுக்குத் தெரியாத வெளியே புலப்படாத பல செய்திகள் ஆதரவுகள் இருக்கின்றன என்பது தான் உண்மை.கனடாவில் நடந்த பொங்கு தமிழின் போது கனடிய வரலாற்றிலேயே நூறாயிரம் பேர் வந்து ஒன்று கூடிய நிகழ்வாக சரித்திரம் படைத்தார்களே அது எப்படி முடிந்தது?துரோகி கருணாவின் காட்டிக் கொடுத்தலின் பின்பு தமிழ் தேசியத்திற்கு ஆதரவு இல்லாத தமிழனே இல்லை என்று எண்ணக் கூடியதாக இருந்ததை காணவில்லையா?இங்கு பலர் மற்றவர்களின் பல்லுக்குள் இருப்;பதை கிண்டி மணக்கிறார்களே தவிர தங்கள் தங்கள் பல்லுக்குள் இருப்பதை மறந்துவிடுகிறார்கள்.நேரம் போதாமையால் நாங்கள் எல்லோரும் இது வரை செய்ததை விட இன்னும் செய்வோம் என்று கூறி எனது வாதத்தை முடிக்கிறேன்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்...

உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் தான்.

தாய் நாட்டை இழந்தவர் தாயினை மறந்ததமைக்கு சமன். இவர்கள் குற்றவாளிகள். தாயின் மீது கொண்ட அன்புடன் தாய் நாட்டையும் நேசிப்போம்.

பங்களிப்பு இல்லாமல் இருப்பவாகள் மனிதநேயமற்றவர்கள் சுயநலவாதிகள். அரசன் ஆண்டால் என்ன ஆண்டி ஆண்டால் என்ன என்று இருப்பவர்கள். ஒன்றுக்கு இரண்டு மூன்று வேலை செய்து, தம் தாய்நாட்டுக்கு ஒருசதம் செலவழிக்காமலே சொகுசாய் வாழ்பவர்கள். இவர்கள் குற்றவாளிகள்.

இளைய தலைமுறையினருக்கும் எம் தமிழர் தாயகம் பற்றி எடுத்துரைக்காமலும், பங்களிப்பு பற்றி எடுத்துரைக்காமல் வளர்த்திருக்கும் முறையில் பலர் குற்றவாளிகள். எம் வருங்காலத்தூண்களாய் மிளிர இருக்கும் இளையதலைமுறையினரை இந்தச் சேவைகளில் பயன் படுத்தாமையில் முன்னேற்றம் முக்கியமாய் காணப்படவேண்டும்.

தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கும், புனருத்தாரன தேவைகளுக்கும் இப்படி பலவற்றுக்கும் அடிப்படை தேவையாய் இருப்பது பணம்.

இங்கிருப்பவர்கள் பலர் ஆனால் வீகிதாசாரத்தின் படி பார்க்கையில் 50 வீதமானவர்களே கிரமமான பங்களிப்பு தருகின்றார்கள். எல்லோரும் ஒத்து மொத்தமாக பங்களிப்பினை வழங்க வேண்டும்.

இஸ்ரேல் நாட்டை உருவாக்கியவர்கள் வெளிநாட்டில் இருந்த யூதர்கள். அதே உணர்வு எம் தமிழீழ மக்களிடையேயும் வளர வேண்டும் எம் நாட்டினையும் கட்டி எழுப்ப வேண்டும்.

தாயகத்தில் இருந்துதான் பணிகளை எம்மால் செய்ய முடியவில்லை. இங்கிருந்து கொண்டு எம்மால் ஆனவற்றை செய்ய முற்பட்டு வாழ்வோம் என்று உறுதி பூண்டுவதோடு, மற்றவர்களுக்கும் இதை வலியுருத்தி பங்களிப்புக்கு உதவ தூண்டுவது எம் ஒருவரின் தலையாய கடமையாகும்.

நான் என்று வாழாது நாம் என்று ஒருமித்து வாழ்ந்து ஓங்கி கரங்கள் விரிந்து குரல் எழுப்ப வேண்டும்.

ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது. பல கைகள் இணைந்து இறுக தட்ட வேண்டும்.

நான் என்று வாழாமல் நாம் என்று வாழ்வோம்.

வாழ்க தமிழீழம்

  • தொடங்கியவர்

திரு. ஈழப்பிரியன், கனம் கறுப்பி ஆகியோர் முன்வைத்த வாதங்கள் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

வாதங்களை முன்வைத்த அறிஞர் பெருமக்களிற்கு நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பொங்குதமிழ் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் 80000. இது கனடாவில் உள்ள ஈழத்தமிழர்களிலும் பார்க்க 3ல் ஒரு பங்கு குறைவானது. ஆகவே இங்கே 3ல் 2 பங்குக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொல்லவில்லை. லண்டனில் சென்ற மாவீரர் நாளில் கலந்து கொண்டவர்கள் 20000 பேர் ஆனால் லண்டனில் உள்ள தமிழர்களில் 5ல் 6 பங்கு வீதத்தினர் கலந்து கொள்ளவில்லை. அவுஸ்திரெலியா இதை விடக் கேவலம். கலந்து கொள்ளாதவர்கள் எல்லொரும் போராட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும், இந்த சிறிய பங்களிப்பினை செய்யாதவர்களாகவே இவர்கள் கணிக்கப்படுகிறார்கள். அப்படியானல் பெரிய பங்களிப்பு கேள்விக்குறிதான்?

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் குடிப்பது டில்மா தேனீர். கனடா சென்றபோது அங்குள்ள தமிழ்க்கடைகளுக்கு சென்று பார்த்தேன். பெரும்பாலன கடைகளில் இலங்கையில் இருந்து சிங்களவர்களின் உழைப்பினால் உருவாகப்பெற்ற பிஸ்கட்டுகள், சோடாக்களினை காணக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளோர் காசைப்பார்த்து இலங்கை விமானத்தில் பிரயாணம் செய்கிறார்கள். இந்தியா செல்லவேணும் என்றாலும் இலங்கை எயர்லங்காவில் தான் பிரயாணம் செய்கிறார்கள்.

ஆணிவேர் என்ற ஈழத்துப்படம் லண்டனில் திரையிடப்பட்டு பலர் சென்று பார்த்தார்கள். ஆனால் மற்றைய நாடுகளில் குறிப்பாக அவுஸ்திரெலியா சிட்னியில் மிகவும் குறைவானவர்களே சென்று பார்த்தார்கள். நம்ப முடியாத 50வயது கிழவன் ஒருவன் 16 வயது பெண்ணுடன் ஆடும் ஆட்டத்தையும், ஒருவர் 40,50 பேரை ஒரே நேரத்தில் அடிக்கும் காட்சிகளும் அடங்கிய தமிழகத்திரைப்படங்களுக்கு திரை அரங்கு நிறைய நின்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. குருதிச்சின்னங்கள் என்ற தாயகப்படம் சிட்னியில் 2 இடத்தில் காண்பிக்கப்பட்டது. மிகவும் தரமான படம். ஆனால் பார்த்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

ஜேசுதாஸ், ஜானகியின் இசை நிகழ்ச்சிகள் சிட்னியில் நடைபெற்றன. ஆனால் இதற்கு கட்டணமாக 50,70,100,150 வெள்ளிகள் குடுத்து அரங்கு நிறைய மக்கள் பார்த்தார்கள். தாயகத்தில் எமக்காக போரிட்டு ஊனமுற்ற போராளிகளுக்காக அதாவது நவம் அறிவுக்கூட நிதி சேகரிப்புக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குறைவாகவே உள்ளது. கேட்டதற்கு கட்டணம் 20,50 வெள்ளிகள். கூடக்காசு என்று சொன்னார்கள். ஒருவேளை திரிசா, நமிதா வந்தால் ஆ ஆ ஆ என்று பல்லைக் காட்டிக் கொண்டு 200, 300 வெள்ளிகளை கொடுப்பினம்.

தாயகத்துக்கு உதவி செய்ய பல அமைப்புக்கள் உள்ளன. நல்ல விடயம். ஒரு அமைப்பின் மீது மற்றைய அமைப்பு போட்டி போடும் போது, ஒரு அமைப்பினர் நடாத்தும் நிகழ்வுக்கு மற்றைய அமைப்பினர் போவது குறைவு. எமக்காக வை.கோ சிறைவாசம் வாழ்ந்தார். அவருக்காக சிட்னியில் ஒரு வானொலி அமைப்பினர் ஒரு நிகழ்ச்சியினை ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்தினார்கள். ஆனால் மற்றைய வானொலி அமைப்பினர் அன்னிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. லண்டன் கனகதுர்க்கை அம்மன் கோவில் தாயகத்துக்கு பல உதவிகள் செய்து வருகிறது. ஆனால் தற்பொழுது இரு பகுதியினருக்கு உள்ள போட்டி ,பொறமையினால் அவ்வூதவிகள் நிற்கப்பட்டு விட்டது. தாயகத்துக்கு உதவுவதைவிட நான் தான் பெரியவன் என்ற நினைப்புடன் இருக்கிறார்கள்.

ரி.ரி.என் தொலைக்காட்சியில் மாவீரர்தினம், தேசத்தின் குரலின் இறுதி வணக்கம் இலவசமாக ஒளிபரப்புச் செய்தார்கள். எல்லோரும் பார்க்கவே ஒளிபரப்புச் செய்தார்கள். நல்லவிடயம். ஆனால் யாழில் சன், ஜெயா தொலைக்காட்சிக்கு காசு கொடுத்து பார்க்கிறவர்கள் மாவீரர்தினத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ரி.ரி.என் கட்டாயம் இலவசமாக ஒளிபரப்புச் செய்ய வேணும் என்று கேட்டு கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். தீபம் தொலைக்காட்சி பார்ப்பவர்களை மன்னிக்கலாம் .எனென்றால் அதில் ஒலிவடிவில் தலைவரின் உரையினை வெளியிடுகிறார்கள். பிறகு சில நேரத்தின் பின்பு ஒலிஒளி வடிவிலும் ஒளிபரப்பாக்கிறார்கள். ஆனால் சன் , ஜெயா தொலைக்காட்சியில் பீடி கடத்துகிறவனையும் புலிகளாகவும் , ஈழத்தமிழர்களை குறை சொல்லும் போது, அது பற்றி கவலைப்படாமல் பார்க்கிறவர்களுக்கு ஏன் ரி.ரி.என் இலவசமாக ஒளிபரப்புச் செய்ய வேண்டும்.

எது வித பங்களிப்புச் செய்யாமல் வெளினாட்டில் சொகுசாக இருந்து கொண்டு, இராணுவம் சில இடங்களை பிடித்தால் புலிகளைக் குறை சொல்வதும், எதுக் கெடுத்தாலும் புலிகளைக்குறை சொல்லுவதும் இருக்கிறார்கள் என்றால், ஆதரவாளர்களில் பலர் தங்களது குழந்தைகளுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்காமலும், தாயகத்தினைப்பற்றி சொல்லிக் கொடுக்காமலும் இருக்கிறார்கள்.

ஒரு சிலர் குற்றவாளிகள் இல்லாது இருந்தாலும், பெரும்பான்மையோர் குற்றவாளிகளே. உலகத்தமிழர்கள் குற்றவாளிகளே ஆவர்.

  • தொடங்கியவர்

திரு. கந்தப்பு முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

இதுவரை வாதங்களை முன்வைக்காதவர்கள் - உங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டிய இறுதித் திகதி மார்ச் 29, 2007 - நாளையுடன் நிறைவடைகின்றது!

ஏற்கனவே தமது வாதங்களை யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த அறிஞர் பெருமக்களிற்கு நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

கனம் நீதிபதிகளே

உலகத்தமிழர்களை எடுத்த எடுப்பில் குற்றவாளிகள் என்று கூறுகிறேன்.

பல விடையங்களில் அவர்கள் ஒன்றுபட்டு உழைத்தாலும் பல போரட்டங்களை அவர்கள் நடத்தி பல உதவிகளை அவர்கள் செய்திருந்தாலும் குற்றம் குற்றமே. ஏன் என்ன காரணம் என்று கேட்கிறீர்கள்,சொல்கிறேன்.....இ

  • தொடங்கியவர்

திரு. Kuggoo முன்வைத்த வாதம் யாழ் கள நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றது.

இதுவரை வாதங்களை முன்வைக்காதவர்கள் - உங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டிய இறுதித் திகதி மார்ச் 29, 2007 - இன்றுடன் நிறைவடைகின்றது!

ஏற்கனவே தமது வாதங்களை யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த அறிஞர் பெருமக்களிற்கு நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • தொடங்கியவர்

மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்! இதுவரை வாதங்களை முன்வைக்காதவர்கள் - உங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டிய இறுதித் திகதி மார்ச் 29, 2007 - இன்றுடன் நிறைவடைகின்றது!

ஏற்கனவே தமது வாதங்களை யாழ் கள நீதிமன்றத்தில் முன்வைத்த அறிஞர் பெருமக்களிற்கு நன்றி!

யாழ் கள நீதிமன்றத்தின், இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும்!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • தொடங்கியவர்

யாழ் கள நீதிமன்றத்தில் வாதம் செய்பவர்கள் தமது வாதங்களை வைக்க வேண்டிய இறுதித் தினம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. யாழ் கள நீதிமன்றத்தில் தமது வாதங்களை முன்வைத்த, மற்றும் ஒத்துழைப்புத் தந்த கீழ்வரும் அறிஞர் பெருமக்களிற்கு யாழ் கள நீதிமன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கனம். லீசா

திரு. வெங்கட்

திரு. வடிவேலு

திரு. சாணக்கியன்

திரு. இன்னுமொருவன்

திரு. நோர்வேஜியன்

கனம். தமிழ்தங்கை

திரு. சிவராஜா

கனம். மாதுகா

திரு. பண்டிதர்

திரு. வன்னிமைந்தன்

திரு. வல்வைமைந்தன்

கனம். சுவி

திரு. விசால்

திரு. புத்தன்

திரு. ஆதிவாசி

திரு. புலிபாசறை

திரு. இறைவன்

கனம். ஜமுனா

திரு. வாசகன்

திரு. ஈழப்பிரியன்

கனம். கறுப்பி

திரு. கந்தப்பு

திரு. குக்கோ

உங்கள் அனைவருக்கும், கருத்துக்கணிப்பில் பங்குபற்றியவர்களிற்கும், மற்றும் பொறுமையாக இருந்து இந்த வாதத்தை அவதானிக்கும் பார்வையாளர்களிற்கும், யாழ் கள நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான திருவாளர். நெடுக்காலபோவான் அவர்களிற்கும், மேலும் இந்த விவாதத்தை திறம்பட நடாத்த உதவிகள் செய்து கொண்டிருக்கும் யாழ் கள நிருவாகத்திற்கும் மிக்க நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்!

யாழ் கள நீதிபதிகளின் தீர்ப்புக்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

யாழ் கள நீதிமன்ற நீதிபதிகள்

திருவாளர்கள் சபேசன், சாத்திரி, இ.தேவகுரு, நெடுக்காலபோவான், மற்றும் செல்வி. ரசிகை.

யாழ் கள நீதிமன்ற நீதிபதிகளை தங்கள் கருத்துக்களை கூறும்படி அன்புடன் அழைக்கின்றேன்!

குறிப்பு: திருவாளர் சபேசன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால், தனது தொகுப்புரையை உடனடியாக இன்று கொடுக்கமாட்டார். எனினும், அவர் உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்று தான் தீர்ப்பு கூறுவதாக அறிவித்துள்ளார். திருவாளர் நெடுக்காலபோவான் அவர்கள் தனது தீர்ப்பை ஏற்கனவே கூறிவிட்டார். அவரும் உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார்!

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

எல்லோருக்கும் எனது வணக்கம்

யாழ் இணையத்தின் 9 அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் மப்பிள்ளை அவர்களால் ஒருங்கமைக்கட்டு இனிதே நடந்தேறியது. இந்தப்பட்டிமன்றத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியைக் கூறுக்கொள்வதோடு இதனை சிறப்புற ஒழுங்கு செய்த மாப்பிள்ளைக்கு நன்றுகளும் பாராட்டுக்களும்.

அத்துடன் யாழ் இணையத்தின் ஒன்பதாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்திக் கொண்டு விவாவத்துக்கு செல்வோம்.

உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா?

தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?

என்ற தலைப்பிலே உலகத் தமிழர்கள் குற்றவாளிகள் என்றும் சுற்றவாளிகள் என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து என்னுடைய தீர்ப்பை முன்வைக்கிறேன்.

அதற்கு முன்பதாக தனிநபர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமூகத்தைக் குற்றஞ் சாட்ட முடியாது என்பதால் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நீதிமன்றத்திலே முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தனிநபர்கள் சேர்ந்ததே சமுதாயம் என்றும், அந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பான்மையானோரின் செயற்பாடுகளுக்கு அந்தச் சமூகம் பொறுப்பெற்றே ஆக வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுவதால் மேற்படி கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.

இனி வாதப் பிரதிவாதங்களை எடுத்து நோக்குவோம்

முதலாவதாக ஈழத் தமிழர்கள் குற்றவாளிகளே என்று வாதிட்டவர்கள் பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள்

குற்றச்சாட்டு 1

ஈழத்தில் தமிழர்கள் படும் அவலங்களையும் ஈழத் தமிழர்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அளவில் எடுத்துச் சொல்லப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை

குற்றச்சாட்டு 2

தாயகத்தில் அவலங்களை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவர்களாய் இருந்த போதும் புலம்பெயர்ந்த சில காலங்களிலேயே அவை அனைத்தையும் மறந்து களியாட்டங்களிலும் விருந்துபசாரங்களிலும் மூழ்கிவிட்டனர்

குற்றச்சாட்டு 3

இங்கே பொருளாதார ரீதியில் வளமாக இருந்த போதிலும் தாயத்திற்கு பொருளாதார ரீதியாக போதிய அளவில் உதவவில்லை

குற்றச்சாட்டு 4

தாயக அவலங்களை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு அமைதியாகி விடுகின்றனர்

குற்றச்சாட்டு 5

எமது கலைப்படைப்புக்களைப் புறக்கணித்து அன்னியக் கலைஞர்களின் பின்னால் அலைகின்றனர்

குற்றச்சாட்டு 6

தாய்மொழியாம் தமிழை தமது பிள்ளைகளுக்கு படிப்பிக்க மறந்து விட்டனர்

குற்றச்சாட்டு 7

ஈழத்தமிழர்கள் என்ற பதத்தைப் பாவிப்பதைக் கூட விரும்பாதவர்களாக இருக்கின்றனர்.

குற்றச்சாட்டு 8

ஊடகங்கள் தேசிய நலன்சார்ந்த தேசியப் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகின்ற நிகழ்ச்சிகளை விடுத்து வியாபார நோக்கத்தோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

குற்றச்சாட்டு 9

பொது அமைப்புகள் ஆலயங்கள் என்பன சமூக நலன் சார்ந்த தாயகத் தமிழர்களுக்கு பிரயோசமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆடம்பரத்தையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றன.

குற்றச்சாட்டு 10

விளையாட்டு நிகழ்வுகளில் சிங்கள அணிகளை ஆதரித்துச் செயற்படுவதன் மூலம் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்

குற்றச்சாட்டு 11

சிங்கள தேசத்துப் பொருட்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சிங்களத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.

பிரதானமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் அவர்கள் சுற்றவாளிகள் என்று வலியுறுத்தும் விதமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இங்கே ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படுத்தி பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குற்றச்சாட்டு 1 இற்குப் (ஈழத்தில் தமிழர்கள் படும் அவலங்களையும் ஈழத் தமிழர்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அளவில் எடுத்துச் சொல்லப் பொதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை) பதிலளிக்கும் விதமாக

-ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்தி எமது நிலையை சர்வதேசத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறோம்

-வேலைப்பளு, வேகமான வாழ்க்கை முறை என்பவற்றின் காரணமாக பலரால் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை

-வெளிநாடுகளில் அந்த அந்த நாட்டு சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட முடியும். அதனால் நினைத்தபடி போராட்டங்களைச் செய்ய முடியாது. ஒரு வரையறைக்குள்ளேயே செயற்பட முடியும்

போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பினவரும் கருத்துக்களை ஆராய்கின்ற போது :

எமது நாட்டு நிலமையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் சிங்களத்தின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் என்பன நடத்தப்பட்டு வருவது உண்மையே. அதிலும் அண்மைக்காலமாக இத்தகைய நிகழ்வுகள் அதிக அளவில் இடம்பெறுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இவை போதுமானது என்று இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமன்றி இந்த நிகழ்வுகளில் 10 இற்கும் குறைவானவர்களே கலந்து கொள்கின்றனர்.

வேலைப்பளு காரணமாக இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சாட்டுச் சொல்பவர்களை மன்னிக்கவே முடியவில்லை. காரணம் தாயகத்திலே எங்களது சகோதரர்கள் சிங்கள இராணுவத்தினது துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்களது அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது கடையடைப்புகள் ஆர்ப்பாட்டங்கள் என்று போராடி வருகின்றனர். இதன் காரணமாக தமது உயிர்களைக் கூடப் பறிகொடுத்தவர்கள் ஏராளம் பேர் இருக்கும் போது நாம் எமது ஒருநாள் வேலையைக் கூடத் தியாகம் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம் என்று சொல்வது வெட்கக் கேடானது

அடுத்ததாக வெளிநாட்டுச் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட முடியும் அதனால் பல போராட்டங்களையும் நடத்த முடியவில்லை என்பதும் வலுவற்ற வாதமே. காரணம் இந்த நாடுகளில் தனிமனிதனின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்துவதற்குப் பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பாவிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகின்றது.

குற்றச்சாட்டு 2 இற்குப் (தாயகத்தில் அவலங்களை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்தவர்களாய் இருந்த போதும் புலம்பெயர்ந்த சில காலங்களிலேயே அவை அனைத்தையும் மறந்து களியாட்டங்களிலும் விருந்தபசாரங்களிலும் மூழ்கிவிட்டனர்)

பதிலளிக்கும் விதமாக பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

- இந்த நாட்டில் காலூன்றி விட்ட தமிழர்களில் பலரும் தாயகத்துக்குத் திரும்பப் போவதில்லை.

- இந்த நாட்டில் வாழ்கின்ற போது இந்த நாட்டு மக்களைப் போன்ற வாழ்க்கைமுறையையே வாழ வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்படி கருத்துகளைக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதங்களாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது.

காலம் காலமாக நாம் நாடு கடந்து வாழ்ந்தாலும் இனிமேல் எமது தாய்நாட்டுக்கு மீளப் போவது இல்லை என்றாலும் கூட எமது தாயகத்தை மறப்பதானது பெற்ற தாயையே மறப்பதற்குச் சமமானது.

உலக வரலாற்றை நோக்கினால் ‘இஸ்ரேல்’ என்ற நாடு உருவாக வேண்டும் என்பதற்காக உலகின் பல நாடுகளிலும் தங்களை ஸ்திரப்படுத்தி வாழ்ந்த யூதர்கள் ஆற்றிய பங்கை யாரும் மறப்பதற்கில்லை. அதுமட்டுமன்றி அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் பெரும் பதவிகளில் ஆடம்பர வசதிகளுடன் வாழ்ந்தவர்கள் கூட தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு தமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தாயகம் திரும்பியது வரலாறு.

குற்றச்சாட்டு 3 இற்கு (இங்கே பொருளாதார ரீதியில் வளமாக இருந்த போதிலும் தாயத்திற்கு பொருளாதார ரீதியாக பொதிய அளவில் உதவவில்லை) பதிலளிக்கும் விதமாக

- பல கஷ்டங்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் மத்தியிலும் தாயகத்திற்கு எம்மாலான பொருளுதவியை செய்து கொண்டே வருகிறோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

உண்மையிலே ஈழப் போராட்டத்திற்கு அவசியமான பொருளாதார பலத்தை வழங்குவதில் உலகத் தமிழர்களின் பங்களிப்பே பிரதானமானதாகும். சர்வதேச நாடுகள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு வழங்கும் இராணுவ உபகரணங்களைக் கொண்டு போராடும் சிறிலங்கா இராணுவத்திற்கு இணையாகப் போராடுவதற்குத் தேவையான ஆயத ரீதியிலான பலத்தைப் பெறுவதற்கு உலகத் தமிழர்களே பெரும் பங்களிப்புச் செய்கின்றனர் என்பதே உண்மையாகும். இதனைக் கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு 3 இல் இருந்து உலகத் தமிழர்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

இதைத் தவிர உலகத் தமிழர்கள் சுற்றவாளிகள் என்ற கருத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாய்

- மலரப் போகும் தமிழீழத்தை தோளில் தாங்கி வளர்த்தெடுக்க இருப்பவர்கள் உலகத் தமிழரே

- தமிழ் தெரியாவிட்டாலும் கூட எமது ஊர்வலங்களுக்கு தோள் தரும் பல இளைஞர்கள் உள்ளனர்

போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவற்றுள் ‘மலரப் போகும் தமிழீழத்தை தோளில் தாங்கி வளர்த்தெடுக்க இருப்பவர்கள் உலகத் தமிழரே’

என்ற கூற்றில் அறிவியல் துறைசார்ந்து சற்றே உண்மை இருக்கிறது என்ற போதிலும் கலாச்சார பண்பாட்டு ரீதியாக இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பது இந்த நீதிமன்றத்தின் அபிப்பிராயமாகும்.

அதைவிட தமிழ் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கியது கூட தமிழர்கள் குற்றவாளிகள் என்ற கருத்துக்கே வலுச் சேர்க்கிறது.

தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்த போதிலும் மொழியறிவு இல்லாத காரணத்தால் உதவி செய்வதில் இருக்கும் தடைகளை சங்கடங்களை ‘சுனாமி’ தாக்கத்திற்கு உள்ளான மக்களுக்கு உதவி செய்யச் சென்ற எம் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதைத்தவிர உலகத்தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 4 5 6 7 8 9 10 11 என்பவற்றை மறுத்துரைக்கின்ற பொருத்தமான கருத்துக்கள் எதுவும் இந்த நீதிமன்றத்திலே முன்வைக்கப்படவில்லை.

எனவே நீதிமன்றத்திலே வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களை மட்டுமே கருத்தில் கொண்டு உலகத் தமிழர்களை பொருளாதார ரீதியாக போதிய உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு 3 இல் இருந்து விடுவிக்கின்ற போதிலும் ஏனைய பத்து விடயங்களிலும் உலகத் தமிழர்கள் குற்றவாளிகளே என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

‘தண்டனை என்பது திருந்துவதற்காகவே’ என்பதால் இதுவரை செய்த குற்றங்களுக்குப் பிராயசித்தம் செய்யும் வகையில் ஈழத்தமிழரின் விடிவிற்காக தமது அனைத்து வளங்களையும் பாவித்து முழுமையாக உழைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த வழக்கை நிறைவு செய்கிறது.

நன்றி

வணக்கம்

  • தொடங்கியவர்

செல்வி. ரசிகை அவர்கள் நீண்ட காலமாக யாழ் களத்தில் உறுப்பினராக இருந்து பல நல்ல படைப்புக்களை தந்து கொண்டிருக்கும், தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கும் ஒரு சுறுசுறுப்பான பல்கலைக் கழக மாணவி. இவர் தனது பரீட்சைகளின் மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, இதற்கென நேரத்தை ஒதுக்கி யாழ் கள நீதிமன்றத்தின் ஒரு பெண்நீதிபதியாக வந்து வாதத்தின் தனது தொகுப்புரையை, தீர்ப்பை வழங்கியமைக்கு யாழ் களத்தின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

யாழ் கள நீதிமன்ற ஒருங்கிணைப்பாளர்

யாழ்கள நீதிமன்றம்---30.3.2007

இம்மன்றத்தில் "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகளா அல்லது குற்றவாளிகளா என்னும் வழக்கில், இம்மன்றத்தின் முன் வைக்கப்பட்ட வாதங்களை முழுமையாக படித்து ஆராய்ந்து இரண்டாயிரத்தி ஏழாம் ஆண்டு பங்குனி மாதம் முப்பதாம் திகதி இம்மன்றம் தனது தீர்ப்பை அளிக்கிறது

தீர்ப்பு :-

உலகத்தமிழினம் என்னும்போது கடந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்த மலேசிய, தென்னாபிரிக்க, மொறிசியஸ் ஆகிய மற்றும் தமிழ் நாடு அத்தோடு 1983 களின் பின் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களை உள்ளடக்கியதாகும்.

ஆனால் குற்றவாளிகள் ஆக நிறுத்தப்படவேண்டியவர்கள் 1983 ஆண்டின் பின் ஈழத்தில் இருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் முதற்பரம்பரையினர்.

இவர்களை இப்படியாக வகைப்படுத்தலாம்.

1. தமது பணம் நேரம் ஆகியவற்றை அதிகளவு அர்ப்பணித்து தொண்டாற்றுபவர்கள். இவர்கள் மிக குறைந்த தொகையினர்

2. வேண்டப்படும்போது மாத்திரம் உதவி செய்பவர்கள். இவர்கள் பெரும்பான்மையினர்

3. கேட்கப்படும்போதும் உதவி செய்யாதவர்கள். இவர்களும் பெரும்பான்மையினர்தான்

4. எதிராக செயற்படுபவர்கள். இவர்கள் மிகவும் சொற்பமானவர்கள்.

ஒரு வீட்டை கட்ட பல மாதங்கள் பிடிக்கும். அதை தகர்க்க ஒரு விநாடி போதுமானது. ஒருவன் தன்னை கெட்டவன் என பெயர் எடுக்க ஒரு நாள் போதுமானது. நல்லவன் என பெயர் எடுக்க பல ஆண்டுகள் பிடிக்கும்.

தேசத்தின் குரலின் இறுதி நிகழ்வின்போது தமிழர்கள் பல நாடுகளில் இருந்தும் பறந்து வந்து அந்த புகழ்பெற்ற மாளிகையில் நடத்திய அந்த இறுதி நிகழ்வு அந்த ராஜ ஊர்வலம் ஒன்றே போதும் ஈழத்தமிழ்ர்களின் ஒற்றுமையையும், ஆர்வத்தையும் உலகத்திற்கு காட்டுவதற்க்கு. இந்நிகழ்வு காட்டுவது அசமந்த போக்கையல்ல அக்கறையை.

மலேசியத்தமிழர்கள் ஈழம் என்றால் வாத்தியமா? என கேட்கிறார்களெனில் கடந்த நூற்றாண்டில் இடம்பெயர்ந்து பெயரளவில் தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிற தென்னாபிரிக்க தமிழர்கள் செய்யும் இலை மறை காயான உதவி போற்றுதற்குரியது.

பொங்குதமிழ், உரிமைக்குரல் நிகழ்ச்சிகளை நாடுகள் தோறும் நேரம் பணம் ஆகியவற்றை செலவழித்தும் மழையிலும் கொட்டும் பனியிலும் தங்கள் பிள்ளைகுட்டிகளை சுமந்தவாறு பங்குபற்றியது தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை காட்டி நிற்கிறது.

களத்தில் வாழ்ந்த போது பணமாகவும் நகையாகவும் கொடுத்தார்கள். புலம்பெயர்ந்து அந்நாடுகளின் சட்டதிட்டத்தை அனுசரித்து டொலராக கொடுக்கிறார்கள்.

சுனாமி ஏற்பட்டபோது உலகம் வாழ் தமிழர்கள் ரீ ஆற் ஓ முலமாகவும், வேறு அமைப்புகள் மூலமாகவும், தாங்களாகவே காவிச்சென்று கொடுத்த பணமும் பொருளும் கோடி பெறும்

Ttn, tvi, ctr. இன்பத்தமிழ் வானொலி, Ibc போன்ற ஊடகங்கள் ஆற்றும் தொண்டு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். அதே நேரத்தில் சுயநல பத்திரிகைகளும் இல்லாமல் இல்லை

அமைதியாக, ஆர்ப்பரிக்காது தாம் கற்ற தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொண்டும், நாடு கிடைத்தவுடன் அதை வளப்படுத்துவதற்கான திட்டத்துடன் அங்கு செல்ல காத்திருக்கும் அறிஞர்களை என்னென்று கூறுவது.

இவையெல்லாம் தமிழினத்தை சுற்றவாளியாக்கும் காரணிகள். இருந்தபோதும்:

நிதி கேட்டு போகும்போது வசதி இருந்தும் முகம் சுழிப்பது பரவலாக காணப்படுகிற ஒரு காரணியாகும். இது பரம்பரையாக வழிவந்த பணத்தை பொத்தி பிடிக்கும் சுயநலத்தின் அடிப்படையில் தோன்றிய ஒரு காரணியாகும். இருந்தும் நட்சத்திர இரவுகளுக்கு பணத்தை செலவழிப்பது பணத்தை பொத்திப்பிடிக்கும் அதே ஆட்களா அல்லது வசதி படைத்த வேறு ஆட்களா என்பது நிரூபிக்கபடவில்லை. எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வாதம் இவ்விடயத்தில் பொருந்தாது.

ஊர்வலங்களுக்கும், கூட்டங்களுக்கும் போதியளவு சனம் வருவதில்லை என்பது உண்மைதான். விடுப்பு கிடைக்காமை, போக்குவரத்து வசதியின்மை, காலநிலை, சம்பளத்தில் வெட்டு என்பனவற்றை கருத்தில் கொண்டு பார்த்தாலும், கூட்டங்களுக்கு குறைந்தளவு சனம் பங்குபற்றுவது, வர வசதி இருந்தோரும் வரவிலை என்பதை காட்டி நிற்கிறது. எனவே இது அசமந்த போக்குத்தான்.

சிட்னியிலிருந்து பாதகமான அறிக்கைகள் பல யாழ் களத்தில் காணப்படுகின்றன. அங்கு இரு இனங்களும் ஏறக்குறைய சம பலத்தில் இருப்பதினாலோ அல்லது மற்ற நாடுகளுடன் ஒப்பீட்டளவில் கற்றோர் அதிகம் குடியேறி இருப்பதினால் அவர்கள் இங்கிதமாக நடப்பதாக எண்ணி உணர்வுகளை வெளிக்காட்ட தவறுவதனாலாகவோ இருக்கலாம். எனவே எதிர்காலத்தில் அவர்கள் அக்கறையுடன் கூடிய பங்களிப்பு செய்யவேண்டும் என இம்மன்றம் கருதுகிறது

நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமான இடம்பெயர்ந்தோரிடம் ஆங்கில புலமையின்மை காணப்படுகிறது. இது பல நேரங்களில் அவர்களுக்கு பின்னடைவை கொடுக்கின்றது. அவர்களிடம் வரையறுக்கப்பட்ட உதவியை எதிர் பார்க்கலாமே அன்றி பரப்புரை போன்ற விடயங்களில் அவர்களிடம் இயலாமையை நாம் எதிர்பார்க்கவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையினரிடம் காணப்படும் தமிழ்மொழியாற்றலின்மை, ஈழநாட்டுப்பற்றின்மை போன்றவற்றிக்கு அவர்களை அந்த வழியில் ஊக்குவிக்காத முதற்தலை முறையினர் தான் பொறுப்பேற்கவேண்டும்.

சில கோவில்கள் தமது வருவாயில் ஒரு பங்கினை ஈழநாட்ட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட்டாலும் பல அப்படி செய்வதில்லை. காரணம் பல கோவில்கள் தனியாருக்கு உரித்துடையதாக இருப்பதால். பொதுக்கோவில்களை வளர்ககாதது எமது மக்களின் குறைபாடுதான். பொது நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களை வளர்த்து அதனூடாக ஈழவளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

சரியான தருணத்தில் பொருத்தமான வழிகாட்டல் அல்லது தலைமைத்துவம் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைவாக உள்ளதும் தமிழர்கள் ஒன்று திரளாததற்கு ஒரு காரணமாகும்.கனடாவில் அண்மையில்தான் இருவர் அரசியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Edited by E.Thevaguru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.