Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள கவிஞர்களின் கவியரங்கம் 01: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு!

Featured Replies

yarlcom9thyearcelebratizo9.gif

யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையொட்டிய சிறப்பு நிகழ்வு!

***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 01***

தலைப்பு: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு!

கவியரங்கின் நடுவர்கள்

விகடகவி

நோர்வேஜியன்

வன்னிமைந்தன்

குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்!

குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு!

குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007

மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழிநடத்திச் செல்லுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்!

நன்றி!

spitea2.jpg

Edited by மாப்பிளை

காட்டியே கொடுக்கின்ற

கயவர் தலையிலே

காறியே துப்படா தமிழா...

எம் தமிழ் வாழ்விலே

ஏறியே வந்து

இன்னல் புரிவாரே பாரடா...

உன் தமிழ் பேசியே

உன் தமிழ் கொல்கின்ற

ஊனப் படையவர் காணடா...

எரிகின்ற தீயிலே

எண்ணையை எறிகின்ற

எட்டப்பர் கூட்டங்கள் காணடா...

அழுக்காடை போத்தியே

அலைகின்ற அவரது

அகமது இன்றது பாரடா...

நுரையது பொங்கிட

உமிழ் நீரை திரட்டியே- அவர்

முகமதில் காறியே துப்படா...!!

........................................................

தொடரட்டும் உங்களது பா...

படிக்கட்டும் எங்களது நா...

தொடக்கியே வைத்திட்டேன் யான்

தொடுத்தே வாரீர் நீர்....!!

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகளுக்குத்

துப்பிக்கொண்டிருந்தால்

துடைத்துவிட்டுப்

போய்விடுவான்

தூரநோக்கோடு

காரியம் பண்ணணும்

துரோகி மீது

தூவெனத் துப்பலாம்

தூக்கிப் போட்டு

மிதிக்கலாம்

துடைப்பம் பிடித்து

விரட்டி விரட்டி

அடிக்கலாம்

எல்லாம் செய்ய

துரோகி எவனென

துப்புத் துலக்குதலே

பெரிய செயல் ஐயா...!

காட்டியே கொடுக்கின்ற கயவரை

கண் முன்னே காண்பது இலகல்லோ..?

உன் வீட்டில் ஒருவராய் தானிருப்பார்

உடனிருந்து குழிகளை தான் பறிப்பார்...

தோழமை தாங்கியே தோள் கொடுப்பார்

தோள்மித மர்ந்தே உன் காதறுப்பார்

நட்ப்பென்றே நீயும் விட்டிடுவாய்

நாளது கழிகையில் நீ முடிவாய்...

உண்ட வீட்டிற்கே இரண்டகம்தான்..!

உன்னுடல் பேழை தான் சுமக்கும்

உறவெல்லாம் விழுந்து தான் கதறும்

அதுகண்டு அவனங்கே தான் சிரிப்பான்..

அவன் உயிரை நீயங்கு காத்திருப்பாய்

அதுகூட அவனங்கு மறந்திருப்பான்

கொட்டியே கோடிகள் தான் பெறுவார்

பட்டங்கள் பதவிகள் தனை எடுப்பார்...

இத்தனை பெற்றும் இன்றென்ன

இவ்வயிர் வாழ்வது முறையல்ல

மானம் உள்ளான் அவனென்றால்

மரணத்தை தனக்கே அழித்திடுவான்...

இதுவரை செய்யாத இவரெல்லாம்

இங்கினி இருப்பது முறையல்ல

துப்பாக்கி தூக்கியே சுட்டிடு- இல்லை

துப்பியே எனினும் கொன்றிடு...!!!

  • தொடங்கியவர்

வழிமேல் விழிவைத்து,

வாயில் நீரொழுக,

காதல் புரிகின்ற,

கவிஞர் பெருமக்களே!

நீவிர் சிந்துகின்ற வாய்நீரை -

தாய் - மண்ணிற்காய் சேமித்து,

துரோகிகளின் தலையில்,

"தூ" வெனக் காறித் துப்பிவிட -

ஏனிந்த தயக்கம்?

எப்போது விழித்தெழுவீர்?

கேணலாய் நேற்றுவரை -

இருந்த வீரன் இன்று -

கோணலாய் மாறி -

தமிழரின் கோவணத்தை பறிக்கிறான்!

பாரத தேசத்தில் அன்று -

பதுக்கியிருந்த ஒருவன் இன்று -

பீப்பீ டீப்பீயாகி -

யாழ் குடாவை

பிணக்காடு ஆக்கியுள்ளான்!

உடும்பு கறிதின்று,

உடம்பு வளர்த்து - தமிழர்

விடுதலைக்கு அன்று -

குரல் கொடுத்த வழக்கறிஞன் இன்று -

தமிழர் உடலங்களை கறிசமைத்து -

உண்ணும் மிருகங்களிற்கு -

நண்பனாய் இருக்கிறான் -

நாசவேலை செய்கிறான்!

விரதம் பிடித்த சனங்கள் முன்னால்,

வரதர் எனும் பெயரில் வந்து - அழகிய

ரதமாம் தமிழீழத்தை -

நரகமாக்கிய நயவஞ்சகன்...

திரும்பவும் வந்துள்ளான் -

திருட்டுக்கள் செய்கிறான்!

வழிமேல் விழிவைத்து,

வாயில் நீரொழுக,

காதல் புரிகின்ற,

கவிஞர் பெருமக்களே!

நீவிர் சிந்துகின்ற வாய்நீரை -

தாய் - மண்ணிற்காய் சேமித்து,

துரோகிகளின் தலையில்,

"தூ" வெனக் காறித் துப்பிவிட -

ஏனிந்த தயக்கம்? எப்போது விழித்தெழுவீர்?

வழிமேல் விழிவைத்து,

வாயில் நீரொழுக,

காதல் புரிகின்ற,

கவிஞர் பெருமக்களே!

நீவிர் சிந்துகின்ற வாய்நீரை -

தாய் - மண்ணிற்காய் சேமித்து,

துரோகிகளின் தலையில்,

"தூ" வெனக் காறித் துப்பிவிட -

ஏனிந்த தயக்கம்?

எப்போது விழித்தெழுவீர்?

கேணலாய் நேற்றுவரை -

இருந்த வீரன் இன்று -

கோணலாய் மாறி -

தமிழரின் கோவணத்தை பறிக்கிறான்!

பாரத தேசத்தில் அன்று -

பதுக்கியிருந்த ஒருவன் இன்று -

பீப்பீ டீப்பீயாகி -

யாழ் குடாவை

பிணக்காடு ஆக்கியுள்ளான்!

உடும்பு கறிதின்று,

உடம்பு வளர்த்து - தமிழர்

விடுதலைக்கு அன்று -

குரல் கொடுத்த வழக்கறிஞன் இன்று -

தமிழர் உடலங்களை கறிசமைத்து -

உண்ணும் மிருகங்களிற்கு -

நண்பனாய் இருக்கிறான் -

நாசவேலை செய்கிறான்!

விரதம் பிடித்த சனங்கள் முன்னால்,

வரதர் எனும் பெயரில் வந்து - அழகிய

ரதமாம் தமிழீழத்தை -

நரகமாக்கிய நயவஞ்சகன்...

திரும்பவும் வந்துள்ளான் -

திருட்டுக்கள் செய்கிறான்!

வழிமேல் விழிவைத்து,

வாயில் நீரொழுக,

காதல் புரிகின்ற,

கவிஞர் பெருமக்களே!

நீவிர் சிந்துகின்ற வாய்நீரை -

தாய் - மண்ணிற்காய் சேமித்து,

துரோகிகளின் தலையில்,

"தூ" வெனக் காறித் துப்பிவிட -

ஏனிந்த தயக்கம்? எப்போது விழித்தெழுவீர்?

தேசத்தின் கோரத்தை

தெருவிலே எறிந்திட்டு

பாவைக்கு பா வடிக்கும்

பா வலரை உமிழட்டும்...

காட்டியே கொடுக்கின்ற

கரியார்க்கு ஓப்பாணான்

கை தட்டி நீயவனை

கை கூப்பி அழைத்தாலும்...

கா..தூவென உன்னில்

காறியே உமிழ்வான்

எட்டப்பன் நீயென்றே

எங்கினும் உரைப்பான்...

தடமதா வைத்தா யென்று

தம்பட்டம் அடிப்பார்

மா பாவி நீயென்று

மரண வசை பொழிவர்...

தேச நலம் பேன

தெரு விறங்கி வந்தவரே

ஊனம் நீயென்று

உன்னையே உமிழ்வர்...

பொல்லாத காலமதில்

பொல்லாப்பு உனக்கு விழும்

செவிடரின் செவியிலே

சங்கூதி யென்ன பயன்..??

பா வதை படையென்று

பாவம் நீ யழைத்தாய்

கா..தூ..வென- உன்னில்

கறியல்லவா உமிழ்ந்தார்...

கட்டியே கொடுக்கின்ற

கரியார் கூட்டத்தை

தேச மெல்லாம் ஓடியேன்

தேடியே அலைந்தாய்...???

இங்கே பார் ஒர் கூட்டம்

இதற்காக இருக்கு

யாழதில் என்று

யான் சொல்ல மாட்டேன்..

உன்னறிவை நீ கொண்டு

உற்றே பார்த்திடு

ஆனாலும் என்ன

அடியேனிலும் துப்பல்...

காட்டு வைரவனைக் காவலுக்கே நிறுத்தி வைப்போம்

பாட்டு தாளங்கள் சின்ன மேளம் சேர்த்தடிப்போம்

வேட்டு வாணங்கள் விடிந்தாலும் வினோதங்கள்-நல்ல

ஆட்டுக் கறிப்பங்கு வேள்வியை நாம் முடித்துவைப்போம்

நெல்லிடை பதர்காணக் காற்றிடையே தூற்றிடுவோம்

கல்லிடை மணல்காணச் சல்லடை தான் போட்டெடுப்போம்

புல்லிடை பயிர்வளர களையெடுத்தே அதை அழிப்போம்

நம்மிடை சிலகயவர் இனிக் கண்டறிவோம் அதுபோல

பல்லிடை உமிழ்ந்தெச்சில் துரோகிக்கோர் அபிசேகம்

தூஎன்று துப்பிவிட்டேன் துவண்டதுஎன் பாவிமனம்

உமிழ்ந்தெறிந்த எச்சிலுக்கே இணையற்ற பாதகர்தாம்

சொர்க்கத்துக் அவர் வந்தால் அதுவும்இனி நரகந்தான்

ஊர்ந்திங்கு திரிகின்ற விடப்பாம்புக்கும் தண்ணிவிடாய்

வார்க்கத்தான் நீரில்லை உமிழ்நீரளித்தால் புண்ணியமாம்

வர்க்கதில் ஜந்துக்கள் அவர் அடிமட்டஜீவன்கள்

தர்க்கத்துக் இடமில்லை தயைகாட்ட இதயமில்லை.

யாழ்களத்தின் பாவலர்காள் பாடுங்கள் சேதிதனை

பாழ்கிணற்றில் தள்ளிவிட்டார் சாடுங்கள் துரோகிகளை

வீழ்ந்தவரை விதையாக்கி தாயகத்தை வென்றெடுப்போம்

ஊழ்வினையை மாற்றிடுவோம் சூழ்உரைத்தே போரிடுவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூ என்று துப்பினால் போதுமா?

துரோகிகள் மூஞ்சியில்!

துட்டகைமுனு வாரிசுகளுக்கு

கு......கழுவும் குரங்குகழுக்கு!

எச்சில் ஒரு பரிசோ?

அது எச்சிலுக்கு இல்லையோ இழுக்கு!

துரோகி கரிநாயை இழுத்து வாருங்கள்

அவன் உடலை கண்ட துண்டமாக்கி காக்கைக்கு வீசுங்கள்!

டக்கிளசையும் கொண்டு வாருங்கள்

நடுரோட்டில் கட்டிவைத்து கல்லால் அடித்து கொல்லுங்கள்!

ஆனந்த சங்கரி அவனை நயமாய் அழைத்து வந்து

சிறுவர்களைக்கொண்டு அவன் வயிற்றை நையப்புடையுங்கள்!

வரதன் அவனை இழுத்து வாருங்கள்

அவனை விரதம் போட்டு உயிரை போக்குங்கள்!

காக்கை வன்னியனை

அன்று கொன்றிருந்தால்!

இந்த காட்டி கொடுப்போரின் பிறப்புக்கு

ஜீவ அணு கிடைத்திருக்காது!

ஒன்றே செய்வோம்

அதை நன்றே செய்வோம்!

வரும்காலம் அதில் துரோகிகள்

இனத்தை இல்லாதொழிப்போம்!

மழைத்துளி வீழ்ந்தால்

மண்மணம் மாறும்

பனித்துளி வீழ்ந்தால்

மண்மனம் குளிரும்

எச்சில் துளியிலே

சில உயிரினம் வாழும்

வீணாக்கமாட்டேன்

எச்சில் துளிக்கே

பொருத்தமற்ற கயவர்களே

உம்மேல் மானிடக்கழிவால்கூட

வீசியெறிய மாட்மோம்

அதற்கும் பொருத்தமற்ற

தேசத் துரோகிகள் நீங்கள்

வார்த்தைகளாலும்

வையத்தகாதவர்கள்

வாழ்ந்திட்டுப் போங்கள்

மன்னித்து அனுப்புகின்றோம்

விருந்தோம்பி வாழ்ந்தவர்கள் நாங்கள்

உம்மை விருப்புடன்

வாழ விடுகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

கவிபேரசுகள் மத்தியில் அடியேன் கருமி சிறு கவிதை போல் தெறிகிறது சொல்லுகிறேன் சரியாயின் ஏற்று கொள்ளுங்கள் பிழையாயின் மன்னிக்கவும்.

துன்பபடும் தமிழினத்தின்

துயரில் குளிர்காயும் ஈனர்களே

துட்டுக்காக பிணத்தையும் அணைக்கும்

துஷ்டர்களே நீங்கள் மனிதர்களா

துறவு கொண்டான் மனித அவலம் கண்டு,அத்

துறவியின் பெயரால் தமிழர்களை

துன்புறுத்தும் காடையர்களுக்கு

துணைபோகும் ஈனர்களே

துணை இராணுவ குழு நீ என்று

துணையின்றி தவிர்க்கும் காலம் உண்டு சீக்கிரம் உனக்கு

துப்பறிகிறாய் புலத்திலும் நீ

துஷ்டர்களுக்காக

துவேசம் பண்ணுகிறாய் எம்மவரை

துண்டைக்காணோம் துணியை காணோம்

ஓடும் காலம் வெகு விரைவில்

துயிலவில்லை எம்படை

துரோகிகளே எம்

துப்பலையும் பணமாக்குவீர்

அறிந்தும் துப்புகிறோம்

கா சீ தூ தூ தூ தூ

கள முனை ஏறியே

கவிதனை பாடியே

விதிமுறை ஏற்றே

விருந்தோம்பல் செய்தார்...

நடு நிலை தவறா

நடப்புடன் பாடியே

கவியா அரங்கத்தை

களைகட்டி வைத்தீர்...

வஞ்சகர் அகமதில்

வசையடி கொடுத்தீர்

தூ..வென..வந்தே

துப்பியே ..போனீர்...

''கரு..வென வந்தவர்

காறியெ துப்பிட

''கவியது ரூபன்''

கசையடி கொடுத்தார்...

''மாப்பிள்ளை'' வந்தங்கு

மனு நீதி உரைத்தார்

''நடுவர்'' வந்தங்கு

நறுக்குகதாய் கொட்டினார்...

பாரது வந்து

''பரணி''யும் பாடிட

''சித்தரும் ''வந்தல்லோ

சீ..தூ..வென..துப்பினார்..

காவி உடையதை

களைந்திட்டு வந்து

''புத்தரும்'' வந்தல்லோ

துப்பிட்டு போனார்....

பா..வலர் கூடியே

பா..வதை பாடிட

தூ..வென..துப்பியே

துரோகிகள்..ஓடினர்...

எழுகவே..எழுகவே

பா..வலர்..எழுகவே

எட்டப்பர்.. முகமதில்

எகிறியே..துப்பவே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Norwegian கவிதை நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். எடுத்தோம் கவிழ்த்தோமென எந்த வார்த்தையையாவது நிரப்பி ஸ்கிரீனை நிரப்பினால் போதுமென்றல்லாது வார்த்தைகளை நிதானத்துடனும் பொருத்தமாகவும் இட்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்களை இந்த இடத்தில் சொல்லலாமா தெரியாது. எனினும் எங்கு சொல்வதென தெரியாததால்.. வாழ்த்துக்கள்.

Edited by காவடி

ஈகச் சுடர் ஒளியாம்

ஈழத்தின் மைந்தர்களே

இன்னுயிரை தந்திங்கு

ஆகுதியாய் ஆனவரே

சாதல் வலிந்தழைத்து

தாயகத்தைக் காத்தவரே

வீரத்தின் விழைநிலமே-உம்

பாதம் பணிகின்றேன்

நித்தமும் கவிபடைத்து

அர்த்தமுடன் வரிஅமைக்கும்

நம் மண்ணின் மதுரகவி

வன்னிமைந்தா வணங்குகிறேன்

சத்தமே இல்லாமல்

சித்தம் தெழியவைக்கும்

வித்தகராம் விகடகவி

தொழுகின்றேன் பாவலரே

யாழின்நல் உறவுகளே

யாரோநீர் நானறியேன்

நேசக்கரம் நீட்டியும்மை

கைகூப்பி அழைக்கின்றோம்

உமிழ்நீர் கொண்டிங்கு

துரோகிகள்மேல் துப்பிடுங்கள்

கவிதைக் களம் காண்பீர்

கலைந்து பின் செல்லீர்

நாலைஞ்சு நாளாக

இடக்கண்ணும் துடிச்சிடுச்சு

பட்டப் பகலினிலே

சொப்பனமும் வந்திடுச்சு

தென்றல் காற்றடிக்க

தென்னைமரம் சரிஞ்சிடுச்சு

தேனீ குந்திடவே

தேர்வடமும் அறுந்திடுச்சு

சகுனம் பிழையெண்டு

சாத்திரியை பாத்திருக்க

தருணம் அதுகண்டு

தனிமடலும் வந்தாச்சு

சோக்கான கவியரங்கு

ஜோராத்தான் படைச்சாரு

மாப்பிளை அழைச்சிட்டா

மறுபேச்சு அதுக்கேது

கவிதைப் பொருள் காண

வயித்தைக் கலக்கிடுச்சு

தூக்கம் இல்லாமை

இரவுமே கழிஞ்சிடுச்சு

துப்பிறது ரெக்னிக்கு

துரோகிக்கது டானிக்கு

அண்ணாந்து பார்த்தே-தினம்

துப்பி வந்த வீணருக்கு

குண்டுக் கட்டாக

எனைநீர் தூக்கிவந்து

நட்ட மரம் போலே

நடுவராய் இறக்கிவிட்டீர்

நடுக்கம் தீராமல்

அடக்கமாய் நிற்கின்றேன்

பொறுப்பை தந்தீரே

கச்சிதமாய் முடித்து வைப்பேன்

என்னைப்போல் இங்கிருக்கார்

பொன்னான பலகவிகள்

சின்னப்பொடி என்னை நீர்

அழைத்தீரே ஏன் அறியேன்

பொன்னும் மணியுமிங்கு

கொட்டிக் கிடக்கையிலே

சில்லறைக் காசை ஏன்

சிறுகையால் அள்ளுகிறீர்

விட்டில் பூச்சியைப்போல்

விளக்கின்மேல் விழுந்தவனை

விண் தொட்டு திரும்பிவர

வல்லூறின் சிறகு தந்தார்

பையப் பொதிசுமக்கும்

சோம்பேறிக் கழுதை நான்

பாய்ந்தெழுந்து பறந்துசெல்ல

புரவி கொண்ட கால்கொடுத்தார்

பேசாமடந்தையரும் இது

கேட்டு பொங்கியெழக்

கவிதை வரும்-ஒரு தூசாய்

துரோகிகள் தான் தொலைந்தனரே

துப்பிவிட்டார் தூ என்றே

தொல்லை இனிஇல்லை

யாழ்களத்தில் வலம் வந்த

பீடைகளை நாமொழித்தால்

கறுவுடன் கவிரூபன்

மாப்பிளை தான் வந்தார்

சித்தன் பரணியுடன்

புத்தனும் கவி தந்தார்

காவடியும் வந்திருந்து

காரியத்தை முடிக்கையிலே

நடுவரும் துணையிருக்க

நானுமிங்கு பாடினனே

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரோகிகள் முகத்தில் காறியே துப்படா"

அடிமைத்தளை அறுக்க கரிகாலன் அவதாரம்

ஈழத்தின் விடுதலையே எம்அண்ணன் முதல்தாரம்

உலக அரங்கினிலே தமிழ் மானம் நாட்டினான்

வீரமே தமிழென்று அண்ணன் நிலைநாட்டினான்

நற்பயிர்களின் உரம் தின்று களைகளும்

வளர்வதுண்டு! மானத்தை விற்கின்ற ஈனரும்

அதுபோலென்று வீணர்கள் வேரறுத்து அவர்

முகத்தில் காறியே துப்படா மறத்தமிழா!

எட்டப்பர் கூட்டங்கள் இன்றல்ல! நேற்றல்ல!

கால்பிடித்து கைபிடித்து காசுக்கு அடிபணியும்

காக்கை வன்னியன்கள் ஒன்றல்ல! இரண்டல்ல!

இனமறுக்கும் கருங்காலிகள்மேல் காறியே துப்படா!.

பாதகம் செய்பவரை மோதி மிதித்தெழுந்து

முகத்தில் உமிழ்ந்துவிடு என்று சொன்னான்

அஞ்சாக்கவி! தன் சுகத்திற்காய் இனம் காட்டி

பிழைக்கின்ற பேடிகள் மேல் துப்படா "தூ" வென்று!

எரிமலைக்கு விசிறிவிட என்றும் தேவையில்லை

விடுதலையை வென்றெடுக்கும் எங்கள் அண்ணன்படை

துரோகிகளாய் முளைத்தெழுந்த நஞ்சுகளை நசுக்கிவிட

எஞ்சுகின்ற எச்சில் எல்லாம் எடுத்துவைத்து துப்புங்கள்!

தூ!! தூ...தூ!!!....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூவென்று துப்புகின்ற

தூய கவிஞர்களே

துப்புவதால் தூர்ந்திடுமா

துரோகிகள் நிழல் இங்கே?

உமிழ்கின்ற நேரத்துள்

தூக்குங்கள் துப்பாக்கி

தூ என்னும் வேகத்தில்

தூக்கிவிடு எதிரி உயிர்தன்னை

ஓடிவந்து ஒழிந்து நின்று

ஒப்பாரி அங்கே வைக்காமல்

ஓடியே சென்றவனை

ஒழித்திடுவாய் மகாகவியே

சங்கத்துப் புலவன் அன்று

போர்க்களம் புகுந்து நின்று

போரிட்டு கவி படைத்தான்

புறமுடன் அகமும்

அடுப்பங்கரைதனிலே

குளிர்காயும் புலவர்களே

புறப்பட்டு வாரும் இங்கே

புதுயுகம் சமைத்திடுவோம்

வன்னியின் குரலொன்று

Edited by thamilanpu

தாயகத்திற்க்காய் உயிரைக் கொடுத்து

களமதிலே உறவுகள் போராடுகையிலே

திரையரங்கிலிருந்து எவனொ ஒருவன்

செய்யும் பொய் சாகாசத்தைப் பார்த்து

விசிலடிக்கும் எம்மவர்களை பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

ஈரைந்து மாதம் சுமந்து பெற்றெடுத்த வீர

மக்கள் தன்னை மகிழ்ச்சியுடனே பெற்ற

தாயவள் போர்கள்த்திற்க்கு அனுப்புகையில்

தொலைக்காட்சி முன்னிருந்து மெகா

சீரியல் பார்த்து நீலிக் கண்ணீர் வடிக்கும்

தாய்க் குலங்களைப் பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

எதிரிகளின் பிண்ந்தின்னிக் கழுகுகள்

வட்டமிட்டு வட்டமிட்டு பிஞ்சுகளின்

உயிர்களை காவெடுக்கையிலே

மைதானத்திலிருந்து எவனோ

ஒருவன் காட்டும் வான் வேடிக்கையை

பார்த்து கை தட்டி ரசிக்கும் நம்மின

ரசிகர்களைப் பார்த்து

காவெண்க் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

எதிரியினதும் கருநாய்களினதும்

வஞ்சகத்தால் கணவனையும்,

பிள்ளைகளையும் பறிகொடுத்து

மனைவியர்டும்,தாயாரும்

கதறியழும்போது கூடிச் சேர்ந்து

ஊர்க்கதை பலபேசி எகத்தாளமிடும்

பெண்மணிகளைப் பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

கள்முனையிலே ஆயுதமேந்தி

கண்விழித்து தாயகத்தை

வீரப் போராளிகள் காக்கையிலே

தெருவீதியில் குட்டிச்சுவரேறி

வெட்டிக் கதை பேசி வம்புகள்

பல பண்ணும் இளைஞர்களைப்

பார்த்து காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

திறந்தவெளி சிறையதனில்

நம்முறவுகளை அடைத்துப்

பட்டினி போட்டு கொலைகள்

பல நடக்கும் போது கணனி

முன்னிருந்து அரட்டைகள் பலபேசும்

உன்னையும் என்னையும்

பார்த்து காவெணக் காறித்துப்பிவிடு

கா............... தூ..................ஊ

கூடவிருந்து கை கோர்த்து

யுத்தம் பல செய்துவிட்டு

எதிரியிடம் மண்டியிட்டு

அவன் கூட சேர்ந்து நம்

மக்களையெதிர்த்து

அழிக்கும் துரோக

கருநாய்க் கூட்டங்களைப்

பார்த்து காவெணக்

காறித் துப்பி விடாதே

அது உன் எச்சிலிற்க்கே கேவலம்

தாயகத்திற்க்காய் உயிரைக் கொடுத்து

களமதிலே உறவுகள் போராடுகையிலே

திரையரங்கிலிருந்து எவனொ ஒருவன்

செய்யும் பொய் சாகாசத்தைப் பார்த்து

விசிலடிக்கும் எம்மவர்களை பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

ஈரைந்து மாதம் சுமந்து பெற்றெடுத்த வீர

மக்கள் தன்னை மகிழ்ச்சியுடனே பெற்ற

தாயவள் போர்கள்த்திற்க்கு அனுப்புகையில்

தொலைக்காட்சி முன்னிருந்து மெகா

சீரியல் பார்த்து நீலிக் கண்ணீர் வடிக்கும்

தாய்க் குலங்களைப் பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

எதிரிகளின் பிண்ந்தின்னிக் கழுகுகள்

வட்டமிட்டு வட்டமிட்டு பிஞ்சுகளின்

உயிர்களை காவெடுக்கையிலே

மைதானத்திலிருந்து எவனோ

ஒருவன் காட்டும் வான் வேடிக்கையை

பார்த்து கை தட்டி ரசிக்கும் நம்மின

ரசிகர்களைப் பார்த்து

காவெண்க் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

எதிரியினதும் கருநாய்களினதும்

வஞ்சகத்தால் கணவனையும்,

பிள்ளைகளையும் பறிகொடுத்து

மனைவியர்டும்,தாயாரும்

கதறியழும்போது கூடிச் சேர்ந்து

ஊர்க்கதை பலபேசி எகத்தாளமிடும்

பெண்மணிகளைப் பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

கள்முனையிலே ஆயுதமேந்தி

கண்விழித்து தாயகத்தை

வீரப் போராளிகள் காக்கையிலே

தெருவீதியில் குட்டிச்சுவரேறி

வெட்டிக் கதை பேசி வம்புகள்

பல பண்ணும் இளைஞர்களைப்

பார்த்து காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

திறந்தவெளி சிறையதனில்

நம்முறவுகளை அடைத்துப்

பட்டினி போட்டு கொலைகள்

பல நடக்கும் போது கணனி

முன்னிருந்து அரட்டைகள் பலபேசும்

உன்னையும் என்னையும்

பார்த்து காவெணக் காறித்துப்பிவிடு

கா............... தூ..................ஊ

கூடவிருந்து கை கோர்த்து

யுத்தம் பல செய்துவிட்டு

எதிரியிடம் மண்டியிட்டு

அவன் கூட சேர்ந்து நம்

மக்களையெதிர்த்து

அழிக்கும் துரோக

கருநாய்க் கூட்டங்களைப்

பார்த்து காவெணக்

காறித் துப்பி விடாதே

அது உன் எச்சிலிற்க்கே கேவலம்

வர்ணங்கள் பலவடக்கி

வந்திட்ட வானவில்லின்

கவிதனை பார்திந்த

கல் மனங்கள் உதிராதோ...??

வார்த்தை அம்பெடுத்து

வலிந்திழுத் தெய்திய

கணையது பட்டிந்த

கயவரின்னும் இறக்கலயோ...??

நயவஞ்சம் நா விருத்தி

நடப்புடன் அலையுமந்த

கோ மாளி கூட்டங்களின்

கொக்கரிப்பு அடங்கலயோ...??

திரை அரங்கினிலே

திரழெடுத்து அலைபவரே

மன கண் திறந்து

மாண்பதை காணீரோ...??

ஏறியே ஓடி வந்து

ஏற்றங்கள் பல கண்டீர்

அதனாலோ நீர் இன்று

அன்னை மண் தனை மறந்தீர்...??

சின்னத் திரை பார்த்து

சினுங்கி அழுகின்ற

பவையவர் மீது

பா வலன் உமிழ்கிறான்..

துண்டு துணியெடுத்து

துடைத் தெறிந்துவிட்டு

பார்த்து சிரிக்கின்ற

பர தேசி கூட்டமது....

என்றும் திருந்தாது

எம் மண்ணை பாராது

துப்பாக்கி யெடுத்தவரை

துரத்தியே கொன்றிடனும்..

வெட்டத் தெருவிலே

வெட்டி கதை பேசும்

காவலி கூட்ட மீது

காறியே துப்பிடு...

தூக்கம் தொலைத்தங்கு

துணிந் தெழுந்தொருவன்

எல்லை காக்கின்றான்- இங்கு

என்னவ இவர் உரைக்கிறார்..??

எட்டியே உதைத்து

எகிறியே துப்படா..

உண்மையை எடுத்து

உதைந்தாய் நீயடா...

முட்டி இழுத்து

மூச்சை அடக்கி

கா..வென...இழுத்து

காறியே..துப்படா...

வார்ண வரி யெடுத்து

வளமாய் நீ தந்தாய்

தாய் மண் விடிவிற்காய்

தன்; பங்கு நீயழித்தாய்...

விருந்தோம் பல்

அளித்து னக்கு

விருப்புடனே பாராட்டுகிறேன்....!!

தூவென்று துப்புகின்ற

தூய கவிஞர்களே

துப்புவதால் தூர்ந்திடுமா

துரோகிகள் நிழல் இங்கே?

உமிழ்கின்ற நேரத்துள்

தூக்குங்கள் துப்பாக்கி

தூ என்னும் வேகத்தில்

தூக்கிவிடு எதிரி உயிர்தன்னை

ஓடிவந்து ஒழிந்து நின்று

ஒப்பாரி அங்கே வைக்காமல்

ஓடியே சென்றவனை

ஒழித்திடுவாய் மகாகவியே

சங்கத்துப் புலவன் அன்று

போர்க்களம் புகுந்து நின்று

போரிட்டு கவி படைத்தான்

புறமுடன் அகமும்

அடுப்பங்கரைதனிலே

குளிர்காயும் புலவர்களே

புறப்பட்டு வாரும் இங்கே

புதுயுகம் சமைத்திடுவோம்

வன்னியின் குரலொன்று

மானம் உள்ளான் அவனென்றால்

மரணமது தான் செய்வான்

துப்பாக்கி மேல் உயர்வாம்

துப்புதல் இங்காம்...

எதிரி எமக்கின்று

எதிரி தானில்லை

காலமது வந்தால்

கை கோர்த்து போகலாம்..

ஓடி வந்திங்கு

ஒழிந்து நிற்காமல்

தேச துரோகத்தார்

தேகமதில் துப்புறார் காண்...

பகைவர் அரணுடைய

பார்த்த பாவலர் தான்

படை படையாய் இங்கு

பா வடிப்பதை அறியாயயோ...??

கூப்பிட்டு அழைத்தாலும்

கூடியே வரார்

கரியார் அகமதில்

காறி உமிழ்வது முறையே...

சூடு கலன் கூடங்கு

சூட்டு பொசுக்காத

துரோ..கணர் மீது

துப்புதல் பிழையாமோ...??

தங்கு தடையின்றி

தப்பா மல் நீயுரைத்தாய்

தமிழன்பு காண்- உன்

பா வது பார் மேலழகு....

துரோகிகள் முகத்தில் காறியே துப்படா"

அடிமைத்தளை அறுக்க கரிகாலன் அவதாரம்

ஈழத்தின் விடுதலையே எம்அண்ணன் முதல்தாரம்

உலக அரங்கினிலே தமிழ் மானம் நாட்டினான்

வீரமே தமிழென்று அண்ணன் நிலைநாட்டினான்

நற்பயிர்களின் உரம் தின்று களைகளும்

வளர்வதுண்டு! மானத்தை விற்கின்ற ஈனரும்

அதுபோலென்று வீணர்கள் வேரறுத்து அவர்

முகத்தில் காறியே துப்படா மறத்தமிழா!

எட்டப்பர் கூட்டங்கள் இன்றல்ல! நேற்றல்ல!

கால்பிடித்து கைபிடித்து காசுக்கு அடிபணியும்

காக்கை வன்னியன்கள் ஒன்றல்ல! இரண்டல்ல!

இனமறுக்கும் கருங்காலிகள்மேல் காறியே துப்படா!.

பாதகம் செய்பவரை மோதி மிதித்தெழுந்து

முகத்தில் உமிழ்ந்துவிடு என்று சொன்னான்

அஞ்சாக்கவி! தன் சுகத்திற்காய் இனம் காட்டி

பிழைக்கின்ற பேடிகள் மேல் துப்படா "தூ" வென்று!

எரிமலைக்கு விசிறிவிட என்றும் தேவையில்லை

விடுதலையை வென்றெடுக்கும் எங்கள் அண்ணன்படை

துரோகிகளாய் முளைத்தெழுந்த நஞ்சுகளை நசுக்கிவிட

எஞ்சுகின்ற எச்சில் எல்லாம் எடுத்துவைத்து துப்புங்கள்!

தூ!! தூ...தூ!!!....

வா ..வா...என

வள்ளல்களை..அழைக்கிறாய்...

தூ...தூ..வென....

துப்பிவிட..சொல்கிறாய்...

உள்ளம் விட்டொரு

உண்மையது சொன்னால்

உண்மையில்

உன் கவிய ழகுதான்...

விழுந்தோடும்

வார்த்தை வெள்ளத்தில்

வளைந்தோடும் உன்

பா வழகுதான்...

தேதி முடிவிற்க்குள்

செய்தி பல சொல்

கவியா அரங்கத்தை

களை கட்டி வை.....

வாழ்த்தியே உன்னை

வணங்கியே விடை பெறுகிறேன்...!

"காக்கைச் சிறகினிலே நந்தலாலா - உன்

கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா"

என்ற பாடலின் மெட்டில் இக்கவிதையைப் பாடவும்.

சிறுதுளியே பெருவெள்ளம் நந்தலாலா

பலரிங்கே கூடி வந்தால் நந்தலாலா

விழும் எச்சில் துளிசேர்த்தால் நந்தலாலா - பெரும்

கடலாகி பொங்கிவரும் நந்தலாலா

துரோகிகளைத் தள்ளிவிடு நந்தலாலா - அதில்

நீச்சல் அடித்திடுவார் நந்தலாலா

தலை தோஞ்சு குளித்தாலும் நந்தலாலா - அவர்

பழிதீர்ந்து போகாதடா நந்தலாலா

சுடுகாடு அழைத்தாலும் நந்தலாலா - இவர்

வடுஎன்றும் நீங்காதடா நந்தலாலா

பல நாட்கள் இனியில்லை நந்தலாலா

ஆவலுடன் நீ வருவாய் நந்தலாலா

தூக்கம் கலைந்தெழுவாய் நந்தலாலா

ஏக்கம் கொண்டலையாய் நந்தலாலா

ஒருவீட்டுக்கொரு துப்பல் நந்தலாலா

கேட்டெடுத்து தருவாயாடா நந்தலாலா

நடு உச்சந் தலையினிலே நந்தலாலா - அதை

மிச்சமின்றி தேய்த்துவிடு நந்தலாலா

தமிழ்தங்கை வந்தாளடா நந்தலாலா - நன்கு

உமிழ்ந்துவிட்டு சென்றாளடா நந்தலாலா

தமிழன்பும் வந்தாரடா நந்தலாலா - அவர்

தந்ததும் வீண்போகவில்லை நந்தலாலா

வானவில்லும் வளைய வந்தார் நந்தலாலா - அது

கண்கொள்ளாக் காட்சியடா நந்தலாலா

உமிழ்நீர்தானம் செய்தவர்க்கோ நந்தலாலா - அது

புண்ணியமாய் போகுமடா நந்தலாலா

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டுத் திக்கும் கொட்டு முரசே

வெல்வோம் ஈழம் என்று! பகை

முட்டித் தெறிக்கும்! அனைத்தும்

முறிக்கும் புலிகளின் சேனை இன்று!!

துட்டுக்காக விட்டில் ஆன!

துரோகிகள் கூட்டத்தை! எட்டி

விரட்டு! எச்சில் கொண்டே

துப்பி விரட்டி விடு!

பன்றிகள் பெயரை புலி என

வைத்தால் “புலி” என்றாகிடுமோ?

"நெருப்பென்று” சும்மா வாயால்

சொன்னால் வாயென்ன வேகிடுமோ?!

நஞ்சுகள் தன்னை நெஞ்சிலே

தாங்கும் எம் ஈழ வீரர்கள்முன்

நஞ்சென முளைத்த அரளிபோலும்

முரளியின் முகத்தில் உமிழ்!

பதவியில், பணத்தில் பெண்ணில்

மோகமும் கொண்டவர் வாழ்ந்ததில்லை!

கொள்கை உறுதியில் ஒன்றாய்! நின்றவர்

தம்மை சரித்திரம் மறந்ததில்லை!

போரென வந்ததும் பேடிகள் ஆன

பேயர்கள் கூட்டத்தை! மானத்

தமிழா! இன்றே நன்றே

காறி உமிழ்ந்து விடு!.

இனத்தின் வேரைக் கெடுக்க

வந்த கோடாரிகள் தன்னை!

அடித்து நொறுக்கு அருவருத்தே

தமிழா துப்பிக் கொன்றுவிடு!

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்!

நன்றி.

  • தொடங்கியவர்

கவியரங்கில் பங்குபற்றிய, பங்குபற்றும், பங்குபற்றப் போகும் அனைத்து யாழ்கள கவிக் குயில்களிற்கும், கவியரங்க நடுவர்களிற்கும், யாழ் கள கவியரங்க ஒழுங்கமைப்பாளர் என்ற முறையில் எனது நன்றிகளும்! பாராட்டுக்களும்!

உங்கள் யாழ் குழந்தை நாளை அகவை ஒன்பதில் காலடி வைக்கின்றது!

நன்றி!

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

போட்டி நடுவர்களினால் முதல் மூன்று இடங்களைப் பெறும் பாடல்கள் அறிவிக்கபட்டுள்ளன!

கவியரங்கில் பங்குபற்றிய அனைத்து யாழ்கள கவிக் குயில்களிற்கும், கவியரங்க நடுவர்களிற்கும், மற்றும் யாழ் கள நிருவாகத்திற்கும், யாழ் கள கவியரங்க ஒழுங்கமைப்பாளர் என்ற முறையில் எனது நன்றிகளும்! பாராட்டுக்களும்!

நன்றி!

மூன்றாமிடம் : பரணி

மழைத்துளி வீழ்ந்தால்

மண்மணம் மாறும்

பனித்துளி வீழ்ந்தால்

மண்மனம் குளிரும்

எச்சில் துளியிலே

சில உயிரினம் வாழும்

வீணாக்கமாட்டேன்

எச்சில் துளிக்கே

பொருத்தமற்ற கயவர்களே

உம்மேல் மானிடக்கழிவால்கூட

வீசியெறிய மாட்மோம்

அதற்கும் பொருத்தமற்ற

தேசத் துரோகிகள் நீங்கள்

வார்த்தைகளாலும்

வையத்தகாதவர்கள்

வாழ்ந்திட்டுப் போங்கள்

மன்னித்து அனுப்புகின்றோம்

விருந்தோம்பி வாழ்ந்தவர்கள் நாங்கள்

உம்மை விருப்புடன்

வாழ விடுகின்றோம்

இரண்டாமிடம் : தமிழ்தங்கை

துரோகிகள் முகத்தில் காறியே துப்படா"

அடிமைத்தளை அறுக்க கரிகாலன் அவதாரம்

ஈழத்தின் விடுதலையே எம்அண்ணன் முதல்தாரம்

உலக அரங்கினிலே தமிழ் மானம் நாட்டினான்

வீரமே தமிழென்று அண்ணன் நிலைநாட்டினான்

நற்பயிர்களின் உரம் தின்று களைகளும்

வளர்வதுண்டு! மானத்தை விற்கின்ற ஈனரும்

அதுபோலென்று வீணர்கள் வேரறுத்து அவர்

முகத்தில் காறியே துப்படா மறத்தமிழா!

எட்டப்பர் கூட்டங்கள் இன்றல்ல! நேற்றல்ல!

கால்பிடித்து கைபிடித்து காசுக்கு அடிபணியும்

காக்கை வன்னியன்கள் ஒன்றல்ல! இரண்டல்ல!

இனமறுக்கும் கருங்காலிகள்மேல் காறியே துப்படா!.

பாதகம் செய்பவரை மோதி மிதித்தெழுந்து

முகத்தில் உமிழ்ந்துவிடு என்று சொன்னான்

அஞ்சாக்கவி! தன் சுகத்திற்காய் இனம் காட்டி

பிழைக்கின்ற பேடிகள் மேல் துப்படா "தூ" வென்று!

எரிமலைக்கு விசிறிவிட என்றும் தேவையில்லை

விடுதலையை வென்றெடுக்கும் எங்கள் அண்ணன்படை

துரோகிகளாய் முளைத்தெழுந்த நஞ்சுகளை நசுக்கிவிட

எஞ்சுகின்ற எச்சில் எல்லாம் எடுத்துவைத்து துப்புங்கள்!

தூ!! தூ...தூ!!!....

எட்டுத் திக்கும் கொட்டு முரசே

வெல்வோம் ஈழம் என்று! பகை

முட்டித் தெறிக்கும்! அனைத்தும்

முறிக்கும் புலிகளின் சேனை இன்று!!

துட்டுக்காக விட்டில் ஆன!

துரோகிகள் கூட்டத்தை! எட்டி

விரட்டு! எச்சில் கொண்டே

துப்பி விரட்டி விடு!

பன்றிகள் பெயரை புலி என

வைத்தால் “புலி” என்றாகிடுமோ?

"நெருப்பென்று” சும்மா வாயால்

சொன்னால் வாயென்ன வேகிடுமோ?!

நஞ்சுகள் தன்னை நெஞ்சிலே

தாங்கும் எம் ஈழ வீரர்கள்முன்

நஞ்சென முளைத்த அரளிபோலும்

முரளியின் முகத்தில் உமிழ்!

பதவியில், பணத்தில் பெண்ணில்

மோகமும் கொண்டவர் வாழ்ந்ததில்லை!

கொள்கை உறுதியில் ஒன்றாய்! நின்றவர்

தம்மை சரித்திரம் மறந்ததில்லை!

போரென வந்ததும் பேடிகள் ஆன

பேயர்கள் கூட்டத்தை! மானத்

தமிழா! இன்றே நன்றே

காறி உமிழ்ந்து விடு!.

இனத்தின் வேரைக் கெடுக்க

வந்த கோடாரிகள் தன்னை!

அடித்து நொறுக்கு அருவருத்தே

தமிழா துப்பிக் கொன்றுவிடு!

முதலாமிடம் : வானவில்

தாயகத்திற்க்காய் உயிரைக் கொடுத்து

களமதிலே உறவுகள் போராடுகையிலே

திரையரங்கிலிருந்து எவனொ ஒருவன்

செய்யும் பொய் சாகாசத்தைப் பார்த்து

விசிலடிக்கும் எம்மவர்களை பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

ஈரைந்து மாதம் சுமந்து பெற்றெடுத்த வீர

மக்கள் தன்னை மகிழ்ச்சியுடனே பெற்ற

தாயவள் போர்கள்த்திற்க்கு அனுப்புகையில்

தொலைக்காட்சி முன்னிருந்து மெகா

சீரியல் பார்த்து நீலிக் கண்ணீர் வடிக்கும்

தாய்க் குலங்களைப் பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

எதிரிகளின் பிண்ந்தின்னிக் கழுகுகள்

வட்டமிட்டு வட்டமிட்டு பிஞ்சுகளின்

உயிர்களை காவெடுக்கையிலே

மைதானத்திலிருந்து எவனோ

ஒருவன் காட்டும் வான் வேடிக்கையை

பார்த்து கை தட்டி ரசிக்கும் நம்மின

ரசிகர்களைப் பார்த்து

காவெண்க் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

எதிரியினதும் கருநாய்களினதும்

வஞ்சகத்தால் கணவனையும்,

பிள்ளைகளையும் பறிகொடுத்து

மனைவியர்டும்,தாயாரும்

கதறியழும்போது கூடிச் சேர்ந்து

ஊர்க்கதை பலபேசி எகத்தாளமிடும்

பெண்மணிகளைப் பார்த்து

காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

கள்முனையிலே ஆயுதமேந்தி

கண்விழித்து தாயகத்தை

வீரப் போராளிகள் காக்கையிலே

தெருவீதியில் குட்டிச்சுவரேறி

வெட்டிக் கதை பேசி வம்புகள்

பல பண்ணும் இளைஞர்களைப்

பார்த்து காவெணக் காறித்துப்பி விடு

கா............... தூ..................ஊ

திறந்தவெளி சிறையதனில்

நம்முறவுகளை அடைத்துப்

பட்டினி போட்டு கொலைகள்

பல நடக்கும் போது கணனி

முன்னிருந்து அரட்டைகள் பலபேசும்

உன்னையும் என்னையும்

பார்த்து காவெணக் காறித்துப்பிவிடு

கா............... தூ..................ஊ

கூடவிருந்து கை கோர்த்து

யுத்தம் பல செய்துவிட்டு

எதிரியிடம் மண்டியிட்டு

அவன் கூட சேர்ந்து நம்

மக்களையெதிர்த்து

அழிக்கும் துரோக

கருநாய்க் கூட்டங்களைப்

பார்த்து காவெணக்

காறித் துப்பி விடாதே

அது உன் எச்சிலிற்க்கே கேவலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டியை மிகவும் அருமையாக வழி நடத்திய மாப்பிள்ளை. மற்றும் நடுவர்கள் திரு.விகடகவி. நோர்வேஜியன் அண்ணா, ஐயா வன்னிமைந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

முதலாமிடம் பெற்ற வானவில்லுக்கு என் வாழ்த்துக்கள்!.

மூன்றாம் இடம் பெற்ற பரணிக்கு என் பாராட்டுக்கள்.

நன்றி.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.