Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!!

Featured Replies

  • உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!!
 
Capture-3.jpg

உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!!

 

இலங்கை 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உணவுக்குப் பயன்படுத்த பொருத்தமற்றவை என்று கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது. நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில மீன்கள் கருவாட்டுக்குக் கூடப் பொருத்தமற்றவை என்றும் நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான மீன் வகைகள் பிடிப்பதனை தடுக்கும் வகையில் மீனவர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நவீன படகு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தரமான ஐஸ் மற்றும் நீர் பயன்பாடு, நவீன தொழில்நுட்பத்தில் மீன்களை பிடித்தல், மீன்களை இறக்குமதி செய்வது குறித்த நவீன முறைகளை அறிமுகம் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

http://newuthayan.com/story/72682.html

  • கருத்துக்கள உறவுகள்

மீன் வெளிநாட்டுக்கு அனுப்புவதால் மீனின் விலை அறிகரித்து செல்கிறது அங்குள்ள சாதரான மக்கள் வேண்டும் விலையில் மீன் இல்லை இந்த நாரா நிறுவனம் குஜராத் பக்கம் போகணும் வடகிழக்கில் கோழிக்கு என்று கழித்துவிடப்படும் மீன்களை குஜராத்திகளில் ஒரு வகையினர் அதிக விலை குடுத்து வாங்குவதை பார்க்கலாம் . கடைசியில் மீனின் பெயரையாவது சொல்லியிருக்கணும் அதுவும் இல்லை .........

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி எங்கோ இடிக்குதே. யாரோ தீய சக்திகளுக்கு வழியேற்படுத்தி கொடுக்க முயற்சிப்பதுபோல உள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. மீன் இறக்குமதி செய்வதற்கும் மீனவருக்கும் என்ன தொடர்பு ?. அது போக மேலே குறிப்பிட்டது போல மீனவருக்கு தெளிவூட்டும் நடவடிக்கையை முன்னெடுப்பதாயின் மீன்களின் பெயர் என்னென்பது  ஏன் சொல்லப்படவில்லை. மனிதன் சாப்பிட முடியாதென்றால் அது எதற்காக (நச்சுத்தன்மை அல்லது ஊட்டச்சத்து குறைந்தது) என்பதையும் சொல்லவேண்டும் அல்லது அதுபோன்ற மீன்களை வைத்து வருமானமீட்டுவதற்கு உரிய  மாற்று உத்திகள் என்ன உன்பதை தெளிவுபடுத்த வேண்டும். உதாரமாக பயனற்ற  அல்லது கழிவு மீன்களில் இருந்து கிடைக்கும் அரைத்த மீன்மாவு  மேல்நாடுகளில் பலவிதங்களில் பயன்படுகிறது. மனிதன் உண்ண முடியாத மீன்கள் ஆயின் அவற்றைச் சந்தையில் விற்கமுடியாது அதனால் மீனவர் அவ்வகையான மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தாங்களாகவே நிறுத்திவிடுவார்கள் அவர்களை மற்றவர்கள் தடுக்கவேண்டிய தேவையே ஏற்படாது. அதுபோக தேவைையற்ற மீன்களை திருப்பி கடலில் விடவும் முடியும் அல்லது தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அந்த மீன் வலையில் அகப்படாமல் செய்யவும் முடியும்.  இங்கு மீனவ நண்பர்கள் யாராவது களத்தில் இருந்தால் முன்வந்து விபரம் சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வியாபார அரசியல் 

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் எல்லாமே இறக்குமதி,

கறுவாப்பட்டை, கஜுவிற்கு பெயர்போன சிறீலங்கா இப்போது கஜுவையும் கறுவாப்பட்டையையும் இறக்குமதி செய்கிறது,

உள்ளூர் உற்பத்திகளைவிட இறக்குமதி செய்யப்பட்டவை மிகமலிவாக சிலவருடங்களுக்கு முன்னர் கிடைத்தது ஆனால் இப்போது உள்ளூர் உற்பத்திகள் ஒருபோதும் விற்காத விலையில் இறக்குமதி ஆனவை விற்கப்படுகிறது.

இதே போல இறக்குமதி மீன்கள் முதலில் மிக மலிவாக கிடைக்கும் ஆனால் சில வருடங்களின் பின்னர் விலை எகிறி விடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பதெல்லாம் நன்மைக்கே ஏற்கனவே தடை செய்யபட்ட மீன் பிடிகள் மூலம் பெறப்பட்ட மீன் வகைகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து GST யை பறி கொடுத்தவை .முன்பு சைனா பாரிய றோலர்கள் மூலம் பெறப்பட்ட மீன் வகைககளை கடலில் மாற்றி தாங்கள் பிடித்ததுபோல் டகாடி காட்டி பலவருடங்களாக ஏற்றுமதி செய்தவை பிடிபடும் மீன்களுக்கும் கொண்டுவரும் இலங்கை படகுக்கு சம்பந்தம் இல்லாமல் போக மாட்டுபட்டவை GST பறிபோக வேறு காரனம்களும் இருந்தன .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, பெருமாள் said:

மீன் வெளிநாட்டுக்கு அனுப்புவதால் மீனின் விலை அறிகரித்து செல்கிறது அங்குள்ள சாதரான மக்கள் வேண்டும் விலையில் மீன் இல்லை இந்த நாரா நிறுவனம் குஜராத் பக்கம் போகணும் வடகிழக்கில் கோழிக்கு என்று கழித்துவிடப்படும் மீன்களை குஜராத்திகளில் ஒரு வகையினர் அதிக விலை குடுத்து வாங்குவதை பார்க்கலாம் . கடைசியில் மீனின் பெயரையாவது சொல்லியிருக்கணும் அதுவும் இல்லை .........

சிலோன்,இந்தியன் மீன் கருவாடு எண்டால் எங்கடைசனம் கண்ணை மூடிக்கொண்டு வாங்குங்கள். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.