Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்டி சம்பவம் ; தெல்தெனியவில் சுமண ரத்ன தேரர் ஆர்ப்பாட்டம்

Featured Replies

கண்டி சம்பவம் ; தெல்தெனியவில் சுமண ரத்ன தேரர் ஆர்ப்பாட்டம்

 

 

 

கண்டி, திகனயில் ஏற்பட்ட  அமைதியின்மையின்  போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

kandy-2.jpg

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது.

28471263_1970588646487160_62961160318152

இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31290

 

 

கண்டியில் ஊரடங்குச் சட்டம் 

 

 

கண்டி, திகனயில் இடம்பெற்ற அமையின்மையையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டதால் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

kandy-di.jpg

இந்நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதும் நிலைமை மோசமடைந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது கண்டி நிர்வாக மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/31289

கொலை செய்யபட்டவர் சிங்களவரா ? அப்ப காக்கா சிங்கம் விளயாட்டு இன்றோ நாளையோ இருக்கு இதைசாட்டி வடகிழக்கில் காணி தேடி அலையபோறான்களே ?

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட இளைஞன் சுமண ரத்னா தேரரின் உறவினர் – தேரரின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து திகன பற்றியெரிகிறது

 

கண்டி, திகனயில் ஏற்பட்ட  அமைதியின்மையின்  போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

28471263_1970588646487160_62961160318152

 

 

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது.

 

 

 

 

இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

28795574_1654701587949500_4665574191046371203_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=e8b931bd0f379b64d221582dcbe0db00&oe=5B415C92

 

கண்டி மாவட்டம் திகன பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக காடையர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.

 

 

 
திகன நகரில் பள்ளிவாயல் , முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கொங்கல்ல பகுதியில் பல வீடுகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
 
 
 
பாதுகாப்பு பிரிவுக்கு நிலமையை கட்டுப்படுத்த முடியாத அளவில் வன்முறைகள் வெடித்துள்ளன.

ஊரடங்கையும் மீறி முஸ்லிம்களுக்கு அடிவிழுகிறது !! ரௌடிகள் அணிவகுப்பு

2 hours ago · 

கண்டியில் சில  பகுதிகளில் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 
இந்நிலையில்  முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும் நோக்குடன் அங்கு பலநூறு சிங்களக் காடையர்கள் குவிந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PuttalamToday

  •  

 

  • கருத்துக்கள உறவுகள்

தெல்தெனிய திகன கலவரத்துக்கான காரணம் வெளியானது! [காணொளி இணைப்பு]

FotorCreated-20-696x391.jpg
 

தெல்தெனிய திகன நிகழ்வுகளின் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி முஸ்லிம் இளைஞர்களின் பொறுப்பற்ற நடத்தைகளே சிங்கள இளைஞனின் மரணத்திற்கு காரணம் என்றும் ஊகிக்க முடிகின்றது.

 

இந்தச்  சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் பின்வருமாறு, மரணமடைந்த அந்த சிங்கள இளைஞன் ஒரு லொரி சாரதி. சம்பவ தினம் நள்ளிரவு வேளை அம்பாறை நோக்கி செல்வதற்கு லொரியை எடுத்த போது, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் சிறிது மோதி அது சேதமடைந்துள்ளது.

இந்த நேரம் குடிபோதையில் முச்சக்கரவண்டியில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்ணாடியை உடனடியாக வாங்கித் தருமாறு லொறி சாரதியான இளைஞனிடம் அடம்பிடித்துள்ளனர்.

“இந்த நள்ளிரவில் எங்கும் வாங்க முடியாது. நான் இப்போது அம்பாறை செல்ல வேண்டியிருக்கிறது. எனவே இப்பணத்தை வைத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்” என 1000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு அவ்விளைஞன் அவ்விடத்திலிருந்து லொரியுடன் நகர்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(பக்கக் கண்ணாடி ஒன்றின் விலை 160 ரூபா என தகவல்)

பின்னர் இவர்கள் லொரியை பின்தொடர்ந்து சென்று பெற்றோல் நிரப்பும் நிலையமொன்றில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் குறித்த சாரதியான இளைஞனை தாக்கியதாகவும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தின் பின் நேற்று முன்தினம் (3) அவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சிங்கள இளைஞர் முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகக் கூடியவர் என்றும், உதவி ஒத்தாசைகள் புரியக்கூடியவர் என்றும் தௌபீக் ஜமாத் சகோதரர்களை பஸ் போக்குவரத்து இல்லாத சந்தர்ப்பங்களில் தனது லொரி மூலம் ஏற்றிச்சென்ற தருணங்களும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நெஞ்சை நெகிழ வைக்கும் 
சிங்கள இளைஞனின் குடும்ப பின்னணி

கால் ஊனமுற்ற தந்தை. கடுமையான நோயினால் படுக்கையில் கிடக்கும் தாய். ஒரு மாதத்திற்கு முன் மரணித்த தனது குழந்தையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மனைவி. மூளை வளர்ச்சி குன்றிய தங்கை. இது தான் அந்த இளைஞனின் குடும்பம். அவர்களை பராமரிக்கவே இரவு பகலாக உழைத்தார் அந்த இளைஞன்.

பிந்தி கிடைத்த தகவலின் படி, பிரதேச உலமா சபை மற்றும் ஊரார் ஒன்றிணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா‌ய்கள் சேகரித்து உடனடியாக அக்குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர். இன்னும் பத்து இலட்சம் சேகரித்து தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடி தலைமறைவாக இருந்த ஒரு இளைஞனை ஊரார்களே சுற்றி வளைத்து சரணடையச் செய்துள்ளனர்.

இறுதிச் சடங்குகள் தற்போது இடம்பெறுகின்றன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்குமாறும் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

www.quicknewstamil.com
  • தொடங்கியவர்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் (படங்கள்)

 

 

 

28471964_769574299906655_726762111731816576_n.jpgகண்டியின் பல்வேறு பிரதேசஙகளில் இன்று திங்கட்கிழமை (05) ஆம் திகதி பௌத்தசிங்கள காடையர்களினால் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் ஆதாரங்களே இவை.
 
 
28576573_769574133240005_7207020443286550366_n.jpg
 
index.jpg
 
28783735_769574316573320_6146362090217608630_n.jpg

http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_562.html

  • தொடங்கியவர்

இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு

இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இலங்கையில் இரு குழுக்கள் இடையே மோதல்

அங்கு நிலைமையை சீராக்கும் நோக்கில் நாளை காலை 6 ஆறு மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலிஸார் கூறுகின்றனர்.

பிப்ரவரி 22 ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான 41 வயதான ஒரு சிங்கள இனத்தவர் ஞாயிறன்று இரவு மரணமடைந்ததை அடுத்தே திஹன பகுதியில் வன்செயல்கள் ஆரம்பித்தன.

இரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மோதியதில் ஏற்பட்ட சம்பவத்திலேயே அவர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

தெல்தெனிய பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சிலரே இவரை தாக்கியதாக கூறி, திஹன பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகள் உட்பட சொத்துக்களை தாக்கி எரித்துள்ளனர்.

இலங்கையில் இரு குழுக்கள் இடையே மோதல்

அதனையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த போலிஸாரின் சிறப்பு அதிரடிப்படை அங்கு காவலில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல்

திங்களன்று பிற்பகலிலும் தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. தாக்குதலாளிகளை கலைக்க போலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் செய்துள்ளனர்.

இதனையடுத்து கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல்

தெல்தெனிய போலிஸாரினார் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை தொடர்கிறது.

கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கடைகளும், பள்ளிவாசலும் தாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-43287974

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அடிபணிய வைத்தாயிற்று, இனி தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களா?

 

தமிழ் மொழி என்னும் தொப்பில் கொடியுறவால் மனம் நோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் கொஞ்சம்கூட டீசண்ட் இல்லை,

யுத்தம் நடந்த காலத்தில் கிழக்கு பகுதியில்  தமிழர்களை அவர்கள் நிலத்திலிருந்தி விரட்டியடிக்க, அவர்கள் போராளிகளை காட்டி கொடுக்க, கைது செய்யப்பட்டவர்களை வெட்டி புதைக்க,உங்கள் படையினருடன் சேர்ந்து தமிழர்களை சுட்டு கொல்ல எவ்வளவு உதவியெல்லாம் கிழக்குவாழ் முஸ்லீம்கள் உங்களுக்கு செய்தார்கள், இப்படி நீங்கள் நன்றி கெட்டதனமா நடந்து கொள்ளலாமா?

அப்புறம் சில இடங்கள் வடிவா எரியல்ல ஏன் பெற்றோல் சரியா ஊத்தவில்லையா? 

தீ எரிவது பற்றிய ஒரு சந்தேகத்தைதான் கேட்டேன்  மற்றும்படி யார் சிறந்த  தேசபக்தி மிக்கவர்கள் என்று காண்பிக்க ஒரு காலம் தமிழரில் அடித்து பழகிய இரு வீர இனங்களின் மோதல்பற்றி எந்த கருத்தும் சொல்லவரவில்லை!

நாங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே இப்போது, இது உங்க பிரச்சனை!

  • தொடங்கியவர்

திகன பிரதேசத்துக்கு சென்று முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ரவூப் ஹக்கீம்

Hakeem-1.jpg?resize=800%2C533

கண்டி, திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

 

மேலும் கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர் எனவும் இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முஸ்லிம்கள் எவ்வித அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு வேண்டிக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற ரவூப் ஹக்கீம், அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேசி முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் சந்திகளில் காவல்துறையினரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2.jpg?resize=800%2C5333.jpg?resize=800%2C5334.jpg?resize=800%2C5335.jpg?resize=800%2C533

 

 

http://globaltamilnews.net/2018/69496/

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம்: கண்டி, காலி, அம்பாறை எண்டோடித் திரியவே நேரம் போயிருதே...

  • கருத்துக்கள உறவுகள்

 பதிலுக்கு றிஷாத்தும் தன் குழுவினருடன் களத்தில் குதித்து தனது சம  பலத்தைக் காட்ட வேண்டியதுதான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்."

On 3/5/2018 at 10:44 PM, நவீனன் said:

காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற ரவூப் ஹக்கீம்,

ஹக்கீம் நானா தனது சிங்கள பெண் நண்பியையும் கூட்டிச் சென்றிருக்கலாம்.
வன்முறைகள் விரைவில் முடிவுக்கு வந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.