Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கந்தப்பு said:

உங்கள் அனுபவப்பகிர்வினை வாசித்தேன். எவ்வளவு காலமாக உங்கள் பெற்றோர்களைத் தேடுகிறீர்கள். சிலவேளை அவர்கள் உங்களைத்தேடி தமிழகம் சென்றிருக்கலாம்.

கந்தப்பு இது எனது  கற்பனைக்குள் ஆனால் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் தொடர்பற்று நான் அகதியாக எங்கும் செல்லவில்லை இதுவரை அனுபவித்து இருக்கிறேன் 90 ம் ஆண்டளவில் இனக்கலவரம் கிழக்கில் அம்பாறையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் ஒரு பிடி சோற்றுக்கு ஏங்கிய காலம் என்று சொல்லலாம் அன்றைய உண்வுகள் அம்மா சொல்லுவார் மரவள்ளி கிழங்கு மாங்காய் சம்பலும்  மாத்திரம் தானாம்  

8 hours ago, ராசவன்னியன் said:
வருந்துகிறேன்.தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் நிலை இந்த கி.மு. கி.பி கோடுபோட்டு பிரிப்பது மாதிரிதான்.அதாவது 1991 முன் 1991 பின்..தமிழகத்தில் 1991 முன் ஈழத்தமிழர்களுக்கான வரவேற்பு எப்படியிருந்தது என்பதை அனைவரும் அறிவர்..அவ்வப்போது நடைபெற்ற போராளிகளின் போட்டிக் கொலைகள், குற்றங்கள் ஆகியன கெடுபிடிகள் இறுக முதல் காரணம். மிக அதிகமான கெடுபிடிகள், நெருக்குதல் இறுகியது 1991க்கு பிறகுதான். ஆனால் மற்ற நாட்டு அகதிகளை நடத்துவதற்கும், ஈழத்தமிழர்களை நடத்துவதற்கும் பாரிய பாரபட்சம் இருப்பது உண்மை. அது மத்திய அரசுக்கு பொதுவாக தமிழ்/தமிழர்கள் மீது இன்றும் நிலவும் காழ்ப்புணர்ச்சிதான்.

தமிழகம் ஒரு மூன்றாந்தர பொருளாதார நாட்டின் ஒரு பகுதி. ஆகவே வேகமாக பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான அடிப்படை பொருளாததார வசதிகளோ, வேலை வாய்ப்புகளோ இங்கே இல்லை. தனிமனித வருமானமும் குறைவு. இருக்கும் வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் போக மீதமுள்ளவையே பொதுமக்களுக்கு கிடைக்கிறது. ஆகவே இங்கு வரும் ஈழத்தமிழர்கள், ஈழத்தில் கிடைத்த/அனுபவித்த வாழ்க்கை தரத்தை தமிழகத்தில் எதிர்பார்க்க இயலாது. (உதாரணமாக, ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களை பார்த்து கூறும் வார்த்தை  "முதலில் உங்கள் ஊரில் கக்கூஸ் கட்டிக்கொள்ளுங்கள்.. இங்கே ஈழத்தில் நாங்கள் மிக வசதியாக வாழ்ந்தோம்" என ஏளனமாக சொல்வது ! :mellow:)

அதே மாதிரி புலம்பெயர் நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கிவிட்ட ஈழத்தமிழர்களும், முன்னேறிய நாடுகளில் தாங்கள் அனுபவித்துவரும் வசதிகள், சலுகைகைகளை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது. தமிழகத்தில் வாழும் தமிழர்கள் இங்கே இருப்பதை பகிர்ந்து வாழ்கிறார்கள்.

இதுவே யதார்த்தம்.

யதார்த்தமான கருத்து உன்மையும் கூட அண்ண

ஆனால் மற்ற நாட்டு அகதிகளை நடத்துவதற்கும், ஈழத்தமிழர்களை நடத்துவதற்கும் பாரிய பாரபட்சம் இருப்பது உண்மை. அது மத்திய அரசுக்கு பொதுவாக தமிழ்/தமிழர்கள் மீது இன்றும் நிலவும் காழ்ப்புணர்ச்சிதான்.

அதே மாதிரி புலம்பெயர் நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கிவிட்ட ஈழத்தமிழர்களும், முன்னேறிய நாடுகளில் தாங்கள் அனுபவித்துவரும் வசதிகள், சலுகைகைகளை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது. தமிழகத்தில் வாழும் தமிழர்கள் இங்கே இருப்பதை பகிர்ந்து வாழ்கிறார்கள்.:104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழகத்துக்கு அகதியாக படகில் போய் பட்டது போதும் என்று தமிழரசன் திரும்பினாலும் கலிய பெருமாள் போன்ற மனங்கனிந்தவர்கள் வாழும் இடம்தான் தமிழகம்.

89ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலைக்கு அடுத்து வந்த நாட்களில் எங்கையாவது உயிரோடு இருந்தால் போதும் என்று படகில் வேதாரணியம் அனுப்ப என்னையும் அண்ணனையும் தயார்படுத்தினர். ஆனால் கொழும்புக்கு விமானத்தில் போக வாய்ப்பு கிடைத்ததால் தமிழகம் போகவில்லை. போயிருந்தால் தமிழரசனின் அனுபவம் வந்திருக்கும்.

ஆனாலும்  மத்திய இலண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் கோப்பை கழுவிய அனுபவம் இருக்கின்றது. கிளவுஸ் போட்டுக் கழுவு என்று சொன்னபோதும் ஊரில் செருப்புப் போடாமல் உருகும் தார் ரோட்டில் நடந்த துணிவால் கிளவுஸ் இல்லாமல் கழுவி கையிடுக்குகள் அரிச்ச அனுபவமும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

இந்தியா செல்ல விசா எடுத்து, விமானத்தில் சென்று, பிறகு உள்ளூர் காவல்நிலையத்தில் அகதியாகச்  சென்றவர்களுக்கு பிரச்சனையிருக்கவில்லை. அவர்களின் பிள்ளைகள் உள்ளூர் பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. விமானத்தில் சென்றவர்களின் பிள்ளைகள் பெரும்பாலோர் ஆங்கில மொழியில் தனியார் பாடசாலையிலே கல்வி கற்றார்கள்.  91ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதாவினால்  92 - 96 காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் (அரச, தனியார்) ஈழத்தமிழர்களின்  கல்வி மறுக்கப்பட்டது.  96ல் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞர், மீண்டும் ஈழத்தமிழர்கள் தமிழகப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுமதி வழங்கினார். அத்துடன்  + 2 பரீட்சையில் கணிதப்பிரிவில் முதல் 20 இடங்களைப் பெற்ற ஈழத்து மாணவர்களுக்கு பொறியியல் துறையில் கல்வி கற்க இலவசக் கல்வியை வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று , மருத்துவக் கல்வி கற்க விண்ணப்பித்த முதல் 10 பேருக்கு இலவசக்கல்வியை வழங்கினார். இதில் முக்கியமான விடயம், 30 தமிழக மாணவர்களுக்கான இலவசக்கல்வி ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.  M.G. ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சியிலும், ஜானகி அம்மா ஆட்சியிலும் இவ்வாறு இலவசக்கல்விகள் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்தது. 2001ல் ஆட்சியைக்கைப்பற்றிய ஜெயலலிதா, கலைஞர் அனுமதித்த இலவசக்கல்வியை மீண்டும் தொடர்ந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, கிருபன் said:

நன்றி உங்கள் கருத்துக்கு கிருபன்  தமிழகம்  இதுவரை பல லட்சம் தமிழர்களுக்கு இடம் கொடுத்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது  இருந்தாலும் அகதிகள் மீது காட்டும் கெடுபிடிகளை தளர்த்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதும் எனது  விருப்பமும் கூட

உண்வு தட்டில் எண்னெய் தன்மையை நீக்க ஒரு வித சம்பூக்கள் ( சோப்) பாவிப்பார்கள் அது கைகளில் எந்த நேரமும் படுவதால் கழுவும் போது கை  இடுக்குகள்  கரைய ஆரம்பிக்கும் எரிச்சலுடன்  கிளவுஸ் போட்டாலும் வேலை சுத்தமா இராது ஒரு கூச்சம் போலவும் இருக்கும் 

17 hours ago, கந்தப்பு said:

இந்தியா செல்ல விசா எடுத்து, விமானத்தில் சென்று, பிறகு உள்ளூர் காவல்நிலையத்தில் அகதியாகச்  சென்றவர்களுக்கு பிரச்சனையிருக்கவில்லை. அவர்களின் பிள்ளைகள் உள்ளூர் பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. விமானத்தில் சென்றவர்களின் பிள்ளைகள் பெரும்பாலோர் ஆங்கில மொழியில் தனியார் பாடசாலையிலே கல்வி கற்றார்கள்.  91ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதாவினால்  92 - 96 காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் (அரச, தனியார்) ஈழத்தமிழர்களின்  கல்வி மறுக்கப்பட்டது.  96ல் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞர், மீண்டும் ஈழத்தமிழர்கள் தமிழகப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுமதி வழங்கினார். அத்துடன்  + 2 பரீட்சையில் கணிதப்பிரிவில் முதல் 20 இடங்களைப் பெற்ற ஈழத்து மாணவர்களுக்கு பொறியியல் துறையில் கல்வி கற்க இலவசக் கல்வியை வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று , மருத்துவக் கல்வி கற்க விண்ணப்பித்த முதல் 10 பேருக்கு இலவசக்கல்வியை வழங்கினார். இதில் முக்கியமான விடயம், 30 தமிழக மாணவர்களுக்கான இலவசக்கல்வி ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.  M.G. ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சியிலும், ஜானகி அம்மா ஆட்சியிலும் இவ்வாறு இலவசக்கல்விகள் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்தது. 2001ல் ஆட்சியைக்கைப்பற்றிய ஜெயலலிதா, கலைஞர் அனுமதித்த இலவசக்கல்வியை மீண்டும் தொடர்ந்தார்.

பலர் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டு இலவச கணணிகளும் வழங்கப்பட்டது நானும் பார்த்திருக்கிறேன் கந்தப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவம் இத்தனை இருக்கா உங்களுக்கு. மிக அருமை தம்பி. பலர் இன்னுமே முகாமில் இருக்கிறார்களே அவர்களை நினைத்தால் தான் பாவங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/15/2018 at 4:50 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அனுபவம் இத்தனை இருக்கா உங்களுக்கு. மிக அருமை தம்பி. பலர் இன்னுமே முகாமில் இருக்கிறார்களே அவர்களை நினைத்தால் தான் பாவங்கள். 

ம் கொஞ்ச அனுபவம் வெளிநாடு தந்தது. இன்னும் அகதிகளாக பல ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது அங்கு தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் கூட இந்திய நாட்டின் அகதிகள் போல் தான் வாழ்கிறார்கள் புயலில் இறந்து போன காணமல் போன தமிழனையே மீட்கமுடியாத இந்தீய ஜனநாய்யக நாடு இறந்தது தமிழன் என்றால் கண்டு கொள்ளாத நாடு இதுவே மும்பை ஹோட்ட்லல் என்றால் தமிழ்நாடு அலறியிருக்கும் காரணம் தமிழனுக்கு இரக்க குணம் அதிகம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.