Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது பற்றி நாடாளுமன்ற விவாதம்

Featured Replies

இலங்கை: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது பற்றி நாடாளுமன்ற விவாதம்

இலங்கையில் கண்டியிலும் அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்செயல்கள் நடந்துள்ள சூழ்நிலையில், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஆடையணிவது குறித்து நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஒன்று நடந்துள்ளது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

கண்டி வன்செயல்கள் குறித்த விவாதத்தில் பேசிய ஜேவிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்னாயக்கா என்பவர், இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் அதிகரித்து விட்டதாகவும், தமிழர் அடிப்படைவாதம் ஏற்கனவே அடிபட்டுவிட்டதாகவும் பேசியுள்ளார்.

இந்த நிலையில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராக முஸ்லிம் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, பள்ளிக்கூட மாணவிகள் கூட முகத்தை மறைத்துக்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு குறுக்கிட்டு பேசிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் என்பவரோ, ரத்னாயக்காவின் கருத்தை நிராகரித்துள்ளார்.

அதாவது இந்த நாட்டில் மார்புக்கச்சை தெரியும்படி ஒரு பெண்ணால் ஆடை அணிய முடியும் என்றால், தனது முகத்தை மூடும் வகையில் ஆடையணியவும் பெண்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

தனது மனைவி அப்படியாக முகத்தை மறைத்து உடையணியாத போதிலும் எவரும் முகத்தை மறைத்து உடையணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை குறித்தது என்றும், அதில் எவரும் தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு நோயின் பரவலால் பாதிக்கப்பட்ட ஊவா மாகாணத்தில் மாணவிகளுக்கு, அதிலிருந்து தப்பிக்க பஞ்சாபி உடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டதாக கூறிய ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர், அப்படி உடலை மறைத்து உடையணியும் போது கொசு (நுளம்பு) தாக்காது என்றும், திறந்த ஆடைகளை அணியும் போது பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவர், முஸ்லிம் அடிப்படைவாதத்தால் வன்செயல்கள் வரவில்லை என்றும் ஏனையோரின் அப்படியான கருத்துக்களாலேயே வன்செயல்கள் வெடித்தன என்றும் அதிருப்தி வெளியிட்டார்.

இது குறித்து பெண்ணிய செயற்பாட்டாளரான சேதீஸ்வரி யோகதாஸ் கூறுகையில், பெண்களின் உடை என்பது அவரவரது தனிப்பட்ட சுதந்திரம் என்றும் அதனை அடிப்படைவாதத்தோடோ, நன்னடத்தை வாதத்தோடோ சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றது என்றும் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-43356344

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளர், கொள்ளையர், மொள்ளமாரிகளுக்கு இந்த உடை ஒரு வரப்பிரசாதம். :grin:

  • தொடங்கியவர்

“மார்புக் கச்சையுடன் செல்வதற்கு உரிமையிருந்தல் முகத்தை மூடி ஆடை அணியவும் உரிமையுண்டு ”

 

மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  ஜே.வி.பி.யின் பிமல் ரத்நாயக்க எம்.பி.க்கு சபையில் பதில் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,

முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே  இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது,

பிமல் ரத்நாயக்கவிற்கு அவ்வாறு கூற முடியாது. முகத்தை மூடுவது மூடாமல் விடுவது அவரவர் சுதந்திரமாகும். என்னுடைய மனைவி முகத்தை மூடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் முகத்தை மூடுகின்றனர்.  அது அவர்களுக்குரிய சுதந்திரமாகும். 

அது மட்டுமா தற்போது மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு.

அண்மையில் கூட டெங்கு நோய் காரணமாக ஊவா மாகாணத்தில் பாடாசலை மாணவர்களுக்கு பஞ்சாப் ஆடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது டெங்கு நுளம்பு தாக்காது என்று கூறியுள்ளனர் . திறந்த ஆடைகளை அணிவதன் மூலம் பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றார்.

http://www.virakesari.lk/article/31464

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கள்ளர், கொள்ளையர், மொள்ளமாரிகளுக்கு இந்த உடை ஒரு வரப்பிரசாதம். :grin:

இந்த உடையை பெருமளவில் அணியும் மத்திய கிழக்கு நாடுகளில் கடைகளை திறந்து விட்டு விட்டு தொழுகைகளுக்கு அனைவரும் போய் விடுவார்கள் என்றும் யாரும் எதையும் கொள்ளை அடிப்பதில்லை என்றும் பல இடங்களில் படித்த நினைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இந்த உடையை பெருமளவில் அணியும் மத்திய கிழக்கு நாடுகளில் கடைகளை திறந்து விட்டு விட்டு தொழுகைகளுக்கு அனைவரும் போய் விடுவார்கள் என்றும் யாரும் எதையும் கொள்ளை அடிப்பதில்லை என்றும் பல இடங்களில் படித்த நினைவு. 

 

மத்திய கிழக்கு நாடுகளில் அல்லாவின் கட்டளையை சரிபிழை பார்க்காது ஏற்று ஆட்சி செய்கின்றனர். பதவிக்காக அல்லாவை வணங்குவதில்லை. எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் தவறு சொய்தால் கை, கால், தலை என்று வாங்கிவிடுவார்களே என்றபயம் உள்ளது. இலங்கையில் அப்படியா.....? புத்தரின் போதனைகள் பதவிக்காக மட்டுமே. அரசியல் செய்வதற்காகவே புத்தரை வணங்குகிறார்கள். தவறுகள் அங்கு இன, மத, மொழி சார்ந்து பார்க்கப்பட்டு பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொடுக்கிறது. இந்த நிலையில், செல்வாக்குள்ள இனத்திற்கு முகமூடியும் போடும் சந்தற்பமும் கிடைத்தால்....! சொல்லவா வேண்டும்.!! உலகத்தையே அடித்து உலையில் போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியக் கிழக்கு நாடுகளில் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை அணிவது, இந்த நாடுகளின் புவி சார்ந்த அமைப்பினை கருத்தில் கொண்டு அணிகிறார்கள்..

இங்கு வெப்பம் மிக மிக அதிகம், அதே போன்று பாலைவன கொதிக்கும் மணலை அள்ளி முகத்தில் வீசும் புழுதிசூறை காற்றுகளும் சர்வ சாதாரணம். அதனால் முகத்தையும், உடலையும் சூட்டிலிருந்து காக்க முற்றாக மறைக்கிறார்கள்.. சில சமூக குழப்பங்களை தவிர்த்து பாதுக்காப்பிற்கும் அணிவதாக இங்கே சொல்வதுண்டு.

மயிலைப் பார்த்து ஆடும் வான்கோழியாக, இலங்கையில் பேரிச்சம் பழ மரங்களை நடுவதும், நாட்டின் மிதமான தட்பவெப்ப நிலை நிலவும்போது முக்காடு போட வேண்டிய அவசியமும் ஏன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Jude said:

இந்த உடையை பெருமளவில் அணியும் மத்திய கிழக்கு நாடுகளில் கடைகளை திறந்து விட்டு விட்டு தொழுகைகளுக்கு அனைவரும் போய் விடுவார்கள் என்றும் யாரும் எதையும் கொள்ளை அடிப்பதில்லை என்றும் பல இடங்களில் படித்த நினைவு. 

 

முஸ்லிம் பெண்கள்

அவர்கள் நாட்டுக்கு அது சரியாக இருக்கும்......ஆனால் மற்ற நாடுகளுக்கு அது சரிவராது. களவுக்கும் வன்முறைக்கும் பயன்படுத்துகின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.