Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இரு இனங்களுக்கு இடையில் முறுகல். – பொலிஸ் பாதுகாப்பு….

Featured Replies

யாழில் இரு இனங்களுக்கு இடையில் முறுகல். – பொலிஸ் பாதுகாப்பு….

jaffna.jpg?resize=500%2C405

யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக நேற்றிரவு முஸ்லீம் – தமிழ் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் தெரியவருவதாவது ,

குறித்த பள்ளி வாசல் முன்பாக வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் தமிழ் இளைஞர் ஒருவர் தனது முச்சக்கர வண்டியினை பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வந்துள்ளார்.

அந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற முஸ்லீம் இளைஞர்கள் இனி பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்த கூடாது என எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. அவ்வேளை அங்கு நின்ற ஏனையவர்கள் இரு தரப்பினர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு வேளை கடையில் நின்றிருந்த தமிழ் இளைஞர்களுக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து அது தொடர்பில் யாழ்.காவல் நிலையத்திற்கு முறையிட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன் , அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

http://globaltamilnews.net/2018/70618/

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிய போட்டு நாலு பொடியள் பிரச்சணைப் பட்டா, இன முறுகலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைவ,இந்து,கிறிஸ்தவர்கள் எல்லாம் தமிழர்களுக்குள் அடங்குவார்கள்.
முஸ்லீம் என்பது தனியினம். அவர்களின் மொழி தமிழா? சிங்களமா? அல்லது அரபியா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சைவ,இந்து,கிறிஸ்தவர்கள் எல்லாம் தமிழர்களுக்குள் அடங்குவார்கள்.
முஸ்லீம் என்பது தனியினம். அவர்களின் மொழி தமிழா? சிங்களமா? அல்லது அரபியா?

மொழியை விட மதம் தான் அவ்ர்களுக்கு முக்கியம்.....அவர்கள் வாழும் பகுதியில் என்ன மொழியோ அதை அவர்கள் பேசுவார்கள்...மேட்டுக்குடி முஸ்லீகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், மற்றவர்கள் பிராந்தியத்திற்கு ஏற்ற் மொழி.....அரபி பேசி குடும்பம் நடத்தும் ஒரு இஸ்லாமியரும் இல்லை என்றே சொல்லலாம்....எங்கன்ட ஆட்கள் சமஸ்கிருதம் கடவுளின் மொழி என்று சொல்வது போன்று அவ்ர்களுக்கு அரபிக் கடவுளின் மொழி.

அரபிக் ,ஆங்கிலம் ,முன்னுரிமை கொடுத்து சிங்களத்திலயும் தமிழிலும் தங்களது வாழ்க்கையை கொண்டு செல்வார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, putthan said:

மொழியை விட மதம் தான் அவ்ர்களுக்கு முக்கியம்.....அவர்கள் வாழும் பகுதியில் என்ன மொழியோ அதை அவர்கள் பேசுவார்கள்...மேட்டுக்குடி முஸ்லீகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், மற்றவர்கள் பிராந்தியத்திற்கு ஏற்ற் மொழி.....அரபி பேசி குடும்பம் நடத்தும் ஒரு இஸ்லாமியரும் இல்லை என்றே சொல்லலாம்....எங்கன்ட ஆட்கள் சமஸ்கிருதம் கடவுளின் மொழி என்று சொல்வது போன்று அவ்ர்களுக்கு அரபிக் கடவுளின் மொழி.

அரபிக் ,ஆங்கிலம் ,முன்னுரிமை கொடுத்து சிங்களத்திலயும் தமிழிலும் தங்களது வாழ்க்கையை கொண்டு செல்வார்கள் 

ஐரோப்பாவில் ரோமா, சிக்கோயினார் எனும் இனங்கள் பரவி எல்லா இடங்களிலும் வாழ்கின்றார்கள். அவர்களைப்போலவே இவர்களும்........

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பாவில் ரோமா, சிக்கோயினார் எனும் இனங்கள் பரவி எல்லா இடங்களிலும் வாழ்கின்றார்கள். அவர்களைப்போலவே இவர்களும்........

ஒரு காலகட்டத்தில் சிறிலங்காவில் சிங்கள முஸ்லிம் ,தமிழ் முஸ்லிம் என்று அடிபட்டாலும் அடிபடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

சைவ,இந்து,கிறிஸ்தவர்கள் எல்லாம் தமிழர்களுக்குள் அடங்குவார்கள்.
முஸ்லீம் என்பது தனியினம். அவர்களின் மொழி தமிழா? சிங்களமா? அல்லது அரபியா?

A must watch for all Muslims

யார் சொன்னது முசுலீம் தனியினம் என்று..... ! :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2018 at 6:13 AM, putthan said:

ஒரு காலகட்டத்தில் சிறிலங்காவில் சிங்கள முஸ்லிம் ,தமிழ் முஸ்லிம் என்று அடிபட்டாலும் அடிபடுவார்கள்

அடி பட மாட்டார்கள்.

On 3/13/2018 at 6:03 AM, putthan said:

மொழியை விட மதம் தான் அவ்ர்களுக்கு முக்கியம்.....

On 3/13/2018 at 6:09 AM, குமாரசாமி said:

ஐரோப்பாவில் ரோமா, சிக்கோயினார் எனும் இனங்கள் பரவி எல்லா இடங்களிலும் வாழ்கின்றார்கள். அவர்களைப்போலவே இவர்களும்........

முஸ்லிம் என்பது ஒரு இனம் அல்ல - ஒரு மதத்தை பின்பற்றும் பல இனங்களை சேர்ந்த மக்கள். இந்துக்கள் எப்படி ஒரு மத்ததை பின்பற்றும் பல இனங்களை சேர்ந்த மக்களோ அப்படியே முஸ்லிம்களும். இந்துக்களும் எல்லா இடங்களிலும் பரவி வாழ்கிறார்கள் தானே? அதற்க்காக நாங்கள் இந்துக்கள் ரோமா இனம் போல என்றா சொல்கிறோம், இல்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.