Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா? எனக்கு இன நல்லிணக்க வகுப்பு தேவையில்லை – அமைச்சர் மனோ கணேசன்…

Featured Replies

ஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா?

எனக்கு இன நல்லிணக்க வகுப்பு தேவையில்லை – அமைச்சர் மனோ கணேசன்…

mano.jpg?resize=674%2C626

 

தனக்கு எவரும் இன நல்லுறவு பற்றி வகுப்பு எடுக்க அவசியம் இல்லை என்று முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் தளத்தில், அமைச்சர் வழமையாக எழுதும் இந்த நொடியில் என் மனதில் என்ற பத்கிவில், இதுபற்றி எழுதியுள்ள அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் கூறியதாவது.

நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட்டும் தேடி பொறுக்கி எடுத்து, நான் சொல்லாத அர்த்தத்தை சொல்லியதாக திரித்து, புரிந்துக்கொண்டு, அதை பெருத்து பூதாகரமாக்கி, எனக்கு இப்போது “நல்லிணக்க டியூசன் எடுக்கும் சில நண்பர்களுக்கு;

இன்று, முஸ்லிம் சகோதர்களின் பிரச்சினை பற்றி ஐநா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் பேசுகிறார். நல்லது.

இலங்கையில் இருந்து முஸ்லிம் சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஜெனீவாவுக்கு, தூதுக்குழுக்களை அனுப்பி, இலங்கையின் சட்டம், ஒழுங்கு சீர் குலைவு தொடர்பில் புகார் செய்கின்றன. நல்லது.

இலங்கை வரும் ஐநா மற்றும் சர்வதேச பிரதிநிதிகளிடம் முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்கள் நிலைமையை எடுத்து கூறுகின்றார்கள். நல்லது.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் புகார் செய்கின்றார்கள். நல்லது. தூதுவர்களும் தம் கண்டனங்களை, கவலையை அரசுக்கு தெரிவிக்கிறார்கள். நல்லது.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், இலங்கையில் முஸ்லிம் உடன்பிறப்புகள் மீதான வன்முறை பற்றி பேச வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. நல்லது.

உலகின் பல நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சகோதர்கள், உலக தலைநகரங்களில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நல்லது.

ஆனால், இதையேதானே அய்யா, 2009ம் வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு நிராதரவான தமிழர்கள், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டி சர்வதேச சமூகத்தை நாடி, செய்தார்கள். புலம் பெயர்ந்த தமிழர், தாயக உறவுகளுக்காக, உலக தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அவ்வேளையில் தமிழருக்கு ஆதரவாக எம்மோடு நானறிய சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, நிமல்கா பெர்னாண்டோ, பிரிட்டோ பெர்னாண்டோ, பிரியானி குணரத்ன போன்ற முற்போக்கு மற்றும் மனித உரிமை சிங்கள நண்பர்கள் மட்டுமே தெருவில் இறங்கினார்கள்.

ஆனால், அந்நேரம், இலங்கை வாழ முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள் எங்கே இருந்தார்கள்?

நிராதரவான தமிழருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சர்வதேச சமூகத்தை நாடிய தமிழரை, தேசத்துரோகிகள் என பட்டம் சூட்டும் இடத்தில் இருக்கவில்லையா?

ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலம் போகவில்லையா?

மகிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து, ஐநா சபையை, சர்வதேச சமூகத்தை, எதிர்த்து கடையடைப்புகள் செய்யவில்லையா?

அன்றைய மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையை எதிர்த்து பேரினவாதிகள் நடத்திய கோமாளி எதிர்ப்புகளில் பங்கு பற்றவில்லையா?

ஒரு சிலர், சில அடி முன்னோக்கி போய் தமிழ், சிங்கள முரண்பாட்டை தம் நலனிற்கு பயன்படுத்த முனைய வில்லையா?

ஏனையோர் பரிதவித்த தமிழரின் ஜனநாயக அரசியல் சமூக தலைவர்களால், (கவனிக்க: புலிகளின் ஆயுத போராட்டம் அல்ல..!) நடத்தப்பட மனித உரிமை போராட்டத்துக்கும், தமக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் ஒதுங்கியே இருக்க வில்லையா?

ஆக, 2010-2015 மகிந்த ஆட்சி காலத்தின் இறுதிப்பகுதியில், ஞானசாரர் முஸ்லிம் உடன்பிறப்புகளின் உடை, உணவு, மத விழுமியங்கள் ஆகியவற்றின் மீது அரச ஆசீர்வாதத்துடன் நேரடி தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு தான், முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள், அரசியல் கட்சிகள் போராட்ட உணர்வு பெற்றார்கள்.

அவ்வேளையில் நான், “பழைய வரலாற்றை’ சுட்டிக்காட்டி, ஒதுங்கி இருக்கவில்லையே? நீங்கள் எமக்காக போராடவில்லையே! அன்று எம்மை தேச துரோகிகள் என்றீர்களே! என்றெல்லாம் சுட்டிக்காட்டி குறுகிய நோக்கில் நடந்துக்கொள்ள வில்லையே?

உண்மையில் நண்பர் ஆசாத் சாலி, கிழக்கில் இருந்து, விஷயம் தெரியாத, சுமார் இரண்டு ஆயிரம் முஸ்லிம் சகோதரர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, வெள்ளை உடை உடுத்தி, மிகப்பெரும் அரச ஆசீர்வாத ஊர்வலத்தை, மிக முக்கியமான ஒரு ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மான தினத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் வழிகாட்டலின்படி, என் தேர்தல் மாவட்டம் கொழும்பின் காலி வீதியில், பம்பலபிட்டி முதல் கொள்ளுப்பிட்டி வரை நடத்தினார்.

அதை நான் மிக கவலையுடன், ஆதங்கத்துடன், அமைதியாக பார்த்துகொண்டு இருந்தேன்.

பின்னர் அதே “அரச ஆசீர்வாதம்”, ஞானசாரருக்கு வழங்கப்பட்டது.

பின் நிலைமை மாற, அதே ஆசாத் சாலிதான் அக்கால கட்டத்தில், இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரும் போராட்ட வீரராக வலம் வந்தார். நானும், விக்கிரமபாகுவும் அவருக்கு தேவையான ஆதரவை துணிச்சலுடன் வழங்கினோம்.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் மூவரும் சேர்ந்து கொழும்பில் வாராந்த அரச எதிர்ப்பு ஊடக மாநாடுகள் நடத்தினோம். போரட்டங்கள் நிகழ்த்தினோம். அதை கொழும்பு உடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள். (ஆனால், அப்போதும் பிரபல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மகிந்த அரசுக்கு உள்ளே அமைச்சர்களாக இருந்தார்கள்..!)

ஆனால், நான், முஸ்லிம் மக்கள் எம் உடன்பிறப்புகள் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைத்து நடக்கிறேன். என்னிடம் இந்த சில்லறை சின்னத்தன இனவாதம் எப்போதும் இல்லை. ஆகவே எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..!

http://globaltamilnews.net/2018/71395/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குகிறார்.... 2012ல்...

முகத்தில் தெரிகிறது.... மனதுக்கு விரோதமாக பொய் சொல்கிறார் என்று.. :rolleyes:

Lied through the teeth.

நியாயத்தின், பலவீனமானவன் பக்கம் நிற்க வேண்டாமா , அது அல்லவா அறம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதை சம்/ சும்/மாவைக்கும் அனுப்பிவிடுங்கோ.....மைத்திரிக்கு வீட்டிலை கூப்பிட்டு மகளின் பிறந்தநாள்  கொண்டாடிய அய்யாவுக்கும்  அனுப்பினால் அவரும் சந்தோசப்படுவார்....ஏனென்றால் அவர் இப்ப மூவின மக்களயும் குடியமர்த்தி புத்சா ச்ப்பிறா ய்ஹொடங்கப் போறாராம்...

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2018 at 5:22 PM, Nathamuni said:

நியாயத்தின், பலவீனமானவன் பக்கம் நிற்க வேண்டாமா , அது அல்லவா அறம்.

நியாயம்?  அறம்? எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்?

பலமும், இரு பக்க நலன்களுக்கான கூட்டுறவுகளும் தான் இந்த உலகத்த்தை ஆளுகின்றன.

என்று தான் ஈழத் தமிழருக்கு இது புரியப் போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா!

தேவையான நேரத்தில் முஸ்லீம் தலைவர்கள் செய்த தவறை விலாவாரியாகவும் மிகவும் கெளரவமாகவும் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறீர்கள். 

மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

நியாயம்?  அறம்? எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்?

பலமும், இரு பக்க நலன்களுக்கான கூட்டுறவுகளும் தான் இந்த உலகத்த்தை ஆளுகின்றன.

என்று தான் ஈழத் தமிழருக்கு இது புரியப் போகிறது?

நாடுகளுக்கு அல்லது ஓர் அரசின் நீதிப்பேராண்மை உள்ள நிலப்புலத்தில் நியாயம், நீதி  அறம் என்பவை மதிக்கப்படுகிறது.

அது  கூட, இந்த சனநாயகம் என்று வாய் கிழிய கடத்தும் அல்லது போதிக்கும் அரஸுக்களின் நிலப்புலத்தில், சட்டத்தின் அடிப்படையிலேயே  மதிக்கப்படுகிறது

ஆனால் அரசுகள் அல்லது நாடுகளுக்கிடையில் நலன்களே இவற்றை தீர்மானிக்கின்றன  என்பது  யதார்த்தம்.

ஈழத்தமிழ் தேசம், அதுவும் ஹிந்தியா விரும்பாமல் அல்லது ஆதரவு இல்லாமல், எதாவது ஓர் வடிவில் தன்னாட்சி அடைய வேண்டுமாயின், வேறு ஓர் அரசின் ஆசீர்வாதம் தேவை.  

இப்போதைய நிலையில், அமெரிக்கா எமது பக்கம் இருக்க வேண்டும். ஏனெனில், சிங்களத்திடம் இருந்து அமெரிக்காவும், மேட்டர்க்கும் இலங்கைத் தீவில் காலூன்றும் தன்மையுள்ள ஓர் தமது நலனை அடைய எதிபார்க்கிறார்கள்.

ஆனால், சிங்களம் அதை விரும்பினானும் வழங்கமுடியாத நிலையில் உள்ளது, சீனத்தின் அழுங்குப்  பிடியால்.       

இதனால் தான், அமெரிக்கா சிங்கள ராணுவத்துடன் உறவை பலப்படுத்துகிறது. ஆயினும், சட்டம், மற்றும் நீதிமன்றம் என்று வரும் போது, யுத்த காலத்திலும்அமெரிக்கா அவற்றுக்கு மதிப்பளிக்கிறது.   

இதனால் தான், அமெரிக்கா சிங்கள ராணுவத்துடன் உறவை பலப்படுத்துகிறது. ஆயினும், சட்டம், மற்றும் நீதிமன்றம் என்று வரும் போது, யுத்த காலத்திலும்அமெரிக்கா அவற்றுக்கு மதிப்பளிக்கிறது.   

அமெரிக்காவின் பாதுகாப்பு, ராணுவ, புலனாய்வு, அரசியல் கோட்பாடுகளில் ஒன்று, ஓர் அரசிட்குள் வியாபிப் பரவுதல். அதன் மூலம் அந்த அரசின் முறைசார் அணுகு முறைகள் மற்றும் தீர்மானிக்கும் வடிவங்களை இயலுமான வரை தவிர்த்து, அமெரிக்கா மற்றும் அந்த அரசின்  அணுகு முறைகள் மற்றும் தீர்மானிக்கும் சக்திகளின் தனிப்பட்ட உறவில் அடிப்படியில்  அமரிக்காவின் கொள்கையோடு ஒத்து வரக் கூடிய கொள்கைகளை அல்லது பரவிய சிறு வளைந்து கொடுக்கும் தன்மைகாலை அந்த அரசுகளில் ஏற்றப்படுத்துதல்.

சுமந்திரனின் செயல்களை உற்று நோக்கினால் இந்த தன்மை தெளிவாக  புலப்படும்.

இதுவே, பரஸ்பர ராணுவ பயிற்சி, புலமை பரிசில்கள்,மேற்கல்வி வாய்ப்பு மற்றும் பலவெற்றிக்கான முதன்மையான கரணம்.   

 

 

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

 

 

இந்த களத்தில் அறிவுபூர்வமான கருத்தாடல்களிலும் பார்க்க உணர்வு பூர்வமான கருத்தாடல்களே அதிகம். உங்கள் அறிவுபூர்வமான கருத்தாடல் பயன் தரும் பங்களிப்பு.

நாடுகளுக்கு அல்லது ஓர் அரசின் நீதிப்பேராண்மை உள்ள நிலப்புலத்தில் நியாயம், நீதி  அறம் என்பவை மதிக்கப்படுகிறது.

அது  கூட, இந்த சனநாயகம் என்று வாய் கிழிய கடத்தும் அல்லது போதிக்கும் அரஸுக்களின் நிலப்புலத்தில், சட்டத்தின் அடிப்படையிலேயே  மதிக்கப்படுகிறது

ஆனால் அரசுகள் அல்லது நாடுகளுக்கிடையில் நலன்களே இவற்றை தீர்மானிக்கின்றன  என்பது  யதார்த்தம்.

நீங்கள் எழுதியது உண்மை. 

 

 

அமெரிக்காவின் பாதுகாப்பு, ராணுவ, புலனாய்வு, அரசியல் கோட்பாடுகளில் ஒன்று, ஓர் அரசிட்குள் வியாபிப் பரவுதல். அதன் மூலம் அந்த அரசின் முறைசார் அணுகு முறைகள் மற்றும் தீர்மானிக்கும் வடிவங்களை இயலுமான வரை தவிர்த்து, அமெரிக்கா மற்றும் அந்த அரசின்  அணுகு முறைகள் மற்றும் தீர்மானிக்கும் சக்திகளின் தனிப்பட்ட உறவில் அடிப்படியில்  அமரிக்காவின் கொள்கையோடு ஒத்து வரக் கூடிய கொள்கைகளை அல்லது பரவிய சிறு வளைந்து கொடுக்கும் தன்மைகாலை அந்த அரசுகளில் ஏற்றப்படுத்துதல்.

சுமந்திரனின் செயல்களை உற்று நோக்கினால் இந்த தன்மை தெளிவாக  புலப்படும்.

இதுவே, பரஸ்பர ராணுவ பயிற்சி, புலமை பரிசில்கள்,மேற்கல்வி வாய்ப்பு மற்றும் பலவெற்றிக்கான முதன்மையான கரணம்.   

இந்த அணுகுமுறை எமது மக்களுக்கு போதுமான விடிவை பெற்று கொடுக்க வேண்டும். ஆனால் இதனை மக்களுக்கும் எனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியவைப்பது கடினமாக தெரிகிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/03/2018 at 7:10 PM, Jude said:

நியாயம்?  அறம்? எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்?

பலமும், இரு பக்க நலன்களுக்கான கூட்டுறவுகளும் தான் இந்த உலகத்த்தை ஆளுகின்றன.

என்று தான் ஈழத் தமிழருக்கு இது புரியப் போகிறது?

நியாயம். நீதி, ஆறாம் என்பவற்றை நாம் வேறு அரசுகளிடம் கோரக்கூடாது என்பது கருத்தல்ல அல்ல.

இவை, எமது முயற்சிகளில் ஓர் பகுதியாகவே இருக்க வேண்டும். அதுவும், முனைப்பு காட்டப்படவேண்டிய அரங்கிலேயே  முதன்மைப்படுத்தப்படவேண்டும்.

உதாரணமாக, பாராளுமன்ட்ர் உறுப்பின்னர் சிறிதரன் அவர்கள் இம்முறை UNHRC இல் அதை செய்திருக்கிறார், அதில் இருக்கும் சட்டப் பிரச்சனைகள் தெரிந்து கூட.   பாராளுமன்ட்ர் உறுப்பின்னர் சிறிதரன், இம்முறை சொல்லிய, சிங்கள யாப்பின் 6ம் திருத்தத்திற்கு சவால் விடும் அவரின் கோரிக்கை, சரியான தருணத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சிங்களம் மனதளவில் கூட நியாயம் வழங்க தயாரில்லை என்ற யதார்த்தத்தை இணை அனுசரணை நாடுகளே சிங்களத்தின் உண்மைஞான தோற்றத்தை அறிந்து கண்டனம் செய்யும் பொது.  

புலிகள் அழிக்கப்பட வேண்டிய தேவை ஏனைய அரசுகளுக்கு எழுந்தது  போன்று, இலங்கை தீவில் இரு அதிகார மையங்கள் உருவாக்கப்பட வேண்டிய காலம் தற்போதைய  நிலையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், இலங்கை தீவின் மிகவும் முக்கியமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளை தீர் மானிக்கும் சக்தியாக சீன   உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

புலிகளின் அதியுச்ச பலமான காலத்தில், புலிகளே  தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர், ஆனால் புலிகள் நிச்சயமாக தீர்மானிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

புலிகள் அழிக்கப்பட வேண்டிய தேவை ஏனைய அரசுகளுக்கு எழுந்தது  போன்று, இலங்கை தீவில் இரு அதிகார மையங்கள் உருவாக்கப்பட வேண்டிய காலம் தற்போதைய  நிலையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், இலங்கை தீவின் மிகவும் முக்கியமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளை தீர் மானிக்கும் சக்தியாக சீன   உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பாராட்டுக்குரிய விதத்தில் உங்கள் ஆய்வு அமைந்து இருக்கிறது. உங்கள் கருத்துகளை, நீங்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக அமையும். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.