Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தருக்கு பகீரங்க கடிதம் - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

REMEMBER 2005 PRESIDENTIAL ELECTION. HISTORY REPEATS ITSELF. 
.
FATE OF RANIL, MAHINDA AND THE TAMILS ARE MOVING ON THE CHESS BOARD OF HISTORY. AN OPPEN LATTER TO THE TNA LEADER SAMPANTHAR 
,
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு ஒரு பகீரங்க கடிதம்.
.
2005 ஜனாதிபதி தேர்தல்கால வரலாறு திருபுகிறது. ரணிலின் தலைவிதி மகிந்தவின் தலைவிதி தமிழரின் தலைவிதி எல்லாம் மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு வழிவகுத்த அதே சதுரங்க பலகையில் நகர்த்தப்படுகிறது.
.;
சிறந்த மாற்று ஏற்பாடு உருவாகமுன்னம் இன்றுள்ள நிலையை மாற்றுவது 2005 ஜனாதிபதி தேர்தலின்போது நம்போன்றோர் எவ்வளவு சொல்லியும் கேளாமல் விடுதலைப்புலிகளால் எடுக்கபட்ட தேர்தல் பகிஸ்கரிப்பு முடிவுபோல தமிழ் இனத்தின் அழிவுக்கே வழிவகுக்கும். 
.
தமிழர் எதிர்ப்புகளூடு மகிந்த வெற்றிபெற்றல் 
இலங்கை துருவபடும் (polarization) சூழல் உருவாகும். அத்தகைய ஒரு சூழலில் மகிந்த வெற்றிபெற்றால் மட்டுமே 1987 போல சர்வதேச அழுத்தம் அதிகரித்து இணைந்த வடகிழக்கு அடிப்படையிலான தீர்வு சூழல் உருவாக வாய்ப்பு உருவாகும். இன்றுள்ள சூழல் 2005 திலும் நிலவியது. இலங்கை துருவப்படுதல் ஊடாக மகிந்த பதவியைக் கைபற்றியிருந்தால் வெளி நாடுகளின் பங்கு அதிகரித்து இலங்கை துருவபடுதல் தீவிரமாகியிருக்கும்.  ஆனால் விடுதலைப்புலிகள் தவறான முடிவை எடுத்ததால்  அதிகரித்த சீன தலையீட்டு இல்லாமல் இலங்கை துருவப்படாமல் மகிந்த பதவிக்குவரும் சூழல் ஏற்பட்டுவிட்டது.  2005ல் விடுதலைப்புலிகளின் தவறான முடிவு   இலங்கை துருவப்படுதலை (polarization) தடுத்துவிட்டது. அதுவும் முடிவு முள்ளிவாய்க்கால் அழிவுக்கு வழி வகுத்தது. 
.
இன்று நாம் செய்யக்கூடியதெல்லாம் காலம் கனியும்வரை இன்றுள்ள நிலையையாவது தக்கவைப்பதுதான். அதற்கு துரதிஸ்ட்டம் பிடித்த 2005 பாணி தேர்தல் பகிஸ்கரிப்பு ஒருவகையிலும் உதவாது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் யாழ்க் களம் படிக்கிறாரா..? :unsure::mellow:

பரவாயில்லையே..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசவன்னியன். நமக்கு  யாழிணையம் மட்டும்தானே எஞ்சி இருக்கு. கனடா நக்கீரன் ஐயாபோல சம்பந்தரின் ஆதரவாளர்கள் பலர் யாழ் இணையத்தை வாசிக்கிறார்கள் எனவே நினைக்கிறேன். ஒரு ஏழைக் கவிஞனால் வேறு என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, poet said:

நன்றி ராசவன்னியன். நமக்கு  யாழிணையம் மட்டும்தானே எஞ்சி இருக்கு. கனடா நக்கீரன் ஐயாபோல சம்பந்தரின் ஆதரவாளர்கள் பலர் யாழ் இணையத்தை வாசிக்கிறார்கள் எனவே நினைக்கிறேன். ஒரு ஏழைக் கவிஞனால் வேறு என்ன செய்ய முடியும்?

பரவாயில்லை 'பொயட்' சார், உங்கள் ஆறுதலுக்காக.. சம்பந்தர் எப்படி சிபாரிசு செய்கிறார் பாருங்களேன்..! :mellow:

 

Wigneswaran_with_Sambanthan.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியனுக்கு எப்பவுமே நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனாலும் என்னைப்போன்ற ஏழைக் கவிஞர்களின் சொல் ஏறும் அம்மபலம் யாழ்க்களம்தானே.

 

1980 களில் இருந்து வரலாற்றை நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால் இலங்கையிலுள்ள மிக மிக மோசமான அரசியல்வாதியே ரணில் விக்ரமசிங்க என்பது விளங்கும். மகிந்த கும்பல் அடுத்தபட்சம் தான். தீர்வுகாண பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவற்றை இழுத்தடித்து கோட்டைவிடுவதில் அதிக அக்கறை கொண்டவர் மற்றவர்களை விட ரணில் என்ற குள்ளநரி தான். இது வரலாறு.

அதுமட்டுமல்ல தனது குள்ளநரித்தனம் மூலம் சிங்கள இனப்படுகொலைகாரர்களை, சொறிலங்காவின் சிங்கள இனப்படுகொலை அரசுகளின் கறைகளை சர்வதேசத்தின் மத்தியில் மறைப்பதில் மிகவும் கில்லாடியாகவும் உள்ள ஒரே ஆள் ரணில் தான். இப்படிப்பட்ட ஒரு தமிழின விரோதிக்கு தமிழர் இன்னமும் முண்டு கொடுத்து இனப்படுகொலைக் கும்பல்களில் ஒரு கும்பலுக்கு சார்பாக இருக்க வேண்டும் என்று வியாக்கியானம் செய்யும் அரசியல் முட்டாள்கள் சிலர் இன்னமும் உள்ளனர் என்று தெரிகிறது.

2005ல் எடுத்த முடிவு இனப்படுகொலைக் கும்பல்களில் எந்தவொரு கும்பலுக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவு. இந்த அடிப்படை கூட விளங்காத அரசியல் முட்டாள்கள் சிலர் இன்னமும் உள்ளனர் என்று தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் 2005 ஆண்டு நடைபெற்ற சனாதிபதித்தேர்தல் 10 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் பல. விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் மகிந்த ராஐபக்ச வெல்லக் காரணம் என்றும் அதை வைத்ததே தாம் விரும்பிய ரணில் ஆட்சிக்கு வரவில்லை எனப் புலிகள் மேல் தடைகளை விதித்த மேற்கத்திய உலகம் ஒரு புறம், அது புலிகளின் உச்ச தவறு என இன்றும் சப்பை கட்டும் தமிழர் ஒரு புறம் என விவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இவர்களின் வாதங்கள் சரியானவையா? புள்ளி விபரங்களுடன் ஒரு அலசல் செய்வோம்.

முதலில் 2005 இல் போட்டியிட்ட ரணில் மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்

2005 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

மாவட்டம்                                ரணில்             மகிந்த               மொத்த வாக்குகள்

மட்டக்களப்பு                           1,21,514             28,836                  1,54,615

திருகோனமலை                    92,167               55,680                  1,52,428

அம்பாறை                                 1,59,198            1,22,329                2,88,208

யாழ்ப்பாணம்                            5,523                1,967                        8,524

வன்னி                                          65,798               17,197                     85,874

மொத்த வாக்குகள்                 4,44,200          2,26,009               6,89,649

2005 தேர்தலில் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ரணிலே வெற்றி பெற்றார் என்பதும், இதைக் கடந்து சிங்கள தேசத்தின் 16 மாவட்டங்களில் கொழும்பு, மகாநுவர (கண்டி), மாத்தளை, நுவரேலியா, புத்தளம். பதுளை ஆகிய 6 மாவட்டங்களையும் ரணில் வென்றார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரி இப்போது; 2010 இல் போட்டியிட்ட சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்

2010 சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்

மாவட்டம்                           பொன்சேகா           மகிந்த            மொத்த வாக்குகள்

மட்டக்களப்பு                          1,46,957                   55,663                    2,16,287

திருகோனமலை                   87,661                      69,752                  1,64,504

அம்பாறை                              1,53,105                     1,46,912                  3,09,474

யாழ்ப்பாணம்                       1,13,877                     44,154                      1, 85,132

வன்னி                                      70,367 2                        8,740                     1,07,680

மொத்த வாக்குகள்            5,71,967                      3,45,221                 9,83,077

ரணில் போன்றே சரத் பொன்சேகாவும் தமிழர் தாயகத்தில் அனைத்து ஆறு மாவட்டங்களிலும் மகிந்தாவை கடந்து அமோக வெற்றி பெற்றார். ஆனால் சிஙகள தேசத்தின் 16 மாவட்டங்களில் நுவரேலியா தவிர எந்தவொரு மாவட்டத்திலும் பொன்சேகா வெற்றி பெறவில்லை.

அதாவது கடந்த இரண்டு சனாதிபதித் தேர்தலிகளிலும் தமிழ் பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை ராசபக்சவால் வென்றெடுக்க முடியவில்லை என்பதையே இம்முடிவுகள் வெளிகாட்டி நிற்கின்றன.

2005 ஆண்டு தேர்தலில்; 2 லட்சத்து 18 ஆயிரத்து 191 வாக்குகளாலும் 2010 ஆண்டுத் தேர்தலில் இல் 2 லட்சத்து 26 ஆயிரத்து 446 வாக்குகளாலும் ராசபக்ச தமிழர் தாயகத்தில் பின்தங்கியே இருந்துள்ளார்.

இதில் 2005 மற்றும் 2010 தேர்தல்களில் பிரதான முஸ்லீம் கட்சியான முஸ்லீம்; காங்கிரஸ் ராசபக்சவிற்கு எதிராக முறையே ரணில் மற்றும் பொன்சேகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது என்பதும், 2010இல் தமிழர் தேசிய கூட்டiமைப்பு பொன்சேகாவிற்கு வெளிப்படையான ஆதரவு நிலையை கொண்டிருந்தது என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சரி வியடத்திற்கு வருவோம். 2010 இல் பொன்சேகா 2005 இல் ரணில் பெற்றதைவிட 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 அதிகம் வாக்குகளை தமிழர் பகுதிகளில் அதிகமாக பெற்றிருந்தார். சரி தமிழர் தரப்பில் எந்தவொரு வாக்குப் புறக்கணிப்பும் இன்றி 2010 போல் 2005இலும் வாக்களிப்பு நடைபெற்றிருந்தால் ரணில் பொன்சேகா அதிகமாகப் பெற்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 வாக்குகளைப் பெற்றார் என வைத்துக் கொள்வோம், ஆனால் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளால் ரணில் 2005இல் மகிந்தாவிடம் தோல்வியுற்ற நிலையில் எவ்வாறு அவரால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியுமா?

இதைத்தவிர விடுதலைப்புலிகள் வாக்கு புறக்கணிப்பு என்று தெரிவித்ததின் அர்த்தம் என்ன? விடுவிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் எதற்காக ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு சென்று இன்னொரு தேசத்தின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதுவும் அதைக்கடந்து யாழ் மாவட்டம் தவிர ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வாக்குப்புறக்கணிப்பை அவர்கள் பெரியளவில் முன்னெடுக்கவில்லை என்பதையும் முறையே 2005 மற்றும் 2010 தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை கவனத்தில் கொள்ளும் எவரும் அவதானிக்கலாம்.

வாக்குப்புறக்கணிப்பால் தமிழர் பகுதிகளில் யாருமே வாக்களிக்கவில்லை என்ற தோற்றப்பாடே இன்றுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தமிழர் பகுதிகளில் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 200 வாக்குகளை ரணில் எவ்வாறு பெற்றார் என்பதை யாரும் தெரிவிக்க முடியுமா?

2005 தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டபோது அவ்வாறான ஒரு தோற்றப்பாடு இருந்தது என்பது உண்மையே எனிலும் 2010 தேர்தல் முடிவுகள் அக்கணிப்பு தவறு என்பதை துல்லியமாக வெளிப்படுத்தியது என்பதை இன்றுவரை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே மேற்கண்ட புள்ளிவிபரங்கள் துலாம்பரமாக காட்டி நிற்கின்றன.

ஆகமொத்தத்தில் இனியாவது விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே 2005 இல் மகிந்த வெற்றிபெற வழிகோலியது என்ற தவறான வாதத்தை அனைவரும் முழுமையாக கைவிடுவார்களா? மாறாக எந்தவொரு சிங்களத் தலைமையும் தமிழர் மனங்களை என்றும் வெல்லவில்லை, வெல்லவும் முடியாது அவ்வாறு நடந்து கொள்ளவும் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?

நேரு குணரத்தினம்

Nehrug2015@gmail.com

ranil-an.png

 

- See more at: http://www.canadamirror.com/canada/36148.html#sthash.NWKj2eIU.f8a32UaU.dpu

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் வடக்கத்தியருக்கு சொம்பு தூக்கி பதவிசுகம் அனுபவிக்க தமிழர் நலனை அடகு வைப்பதுபோல், ஈழத்திலும் தெற்கத்தியருக்கு சொம்பு தூக்கவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்..

மொத்தத்தில் தமிழர்களுக்கு, தரங்கெட்ட தமிழ்த் தலைகளாலேயே அழிவும், பின்னேற்றமும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தலைவர்களில் யார் நல்லவர் கெட்டவர் என்கிற தெரிவு எங்கள் வேலையல்ல. வேட்டைக்குப்போகும் புலிபோல யார் பெலகீனமானவர் என்பதில் கண்ணிருக்க வேணும்.  பலமான சிங்களவர் பதவிக்கு வந்தால் சமூக பிழவை உச்சப்படுத்தினால் மட்டுமே சர்வதேச ரீதியாக காய் நகர்த்த முடியும்.  இதுதான் இராசதந்திர அணுகுமுறை. இதுபற்றி 2005ல் வன்னியில் நிறையவே பேசி இருக்கிறேன்.

.நண்பர் நுணாவிலானுக்கு 2005 தேர்தல் வேறு சூழலில் நிகழ்ந்தது. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் நடந்த 2005 தேர்தல்களையும் முள்ளிவாய்க்காலுக்கு பிந்தி நடந்த தேர்தல்களையும் ஒப்பிடுவது அடிப்படையில் தவறு. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் மகிந்தவை முதல் எதிரியென தமிழர் தேசிய கூட்டமைப்பால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

2005ல் மகிந்தவை பதவிக்கு கொண்டுவந்து விடுதலைப் போராளிகளை அழிக்க அம்மையார் முடிவெடுத்திருந்ததுபற்றி வன்னியில் மக்கள் உணர்ந்திருந்தனர். இச்சமயத்தில் வன்னியில் இருந்தேன். நான் வன்னியில் குறிப்பிடாத எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. இதனால் நான் கஸ்றோவின் கோபத்துக்கு ஆளானேன்.  புலிகள்நான் சொன்னதைக் கேட்க்காவிட்டாலும்  புலிகளின் தலமை 2005 - 2006 காலக் கட்டங்களில் கஸ்றோவின் கோபத்தில் இருந்து புலிகள் என்னைக் காப்பாற்றினார்கள். 

.

எப்பவும் நாகரீகம் காக்கும் ராசவன்னியன் ”சொம்பு தூக்கவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்..” என யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. நண்பா கம்பன் கவிதை நினைவு வருகிறது “கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கண்டேன்”

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, poet said:

..எப்பவும் நாகரீகம் காக்கும் ராசவன்னியன் ”சொம்பு தூக்கவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்..” என யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. நண்பா கம்பன் கவிதை நினைவு வருகிறது “கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கண்டேன்”

வணக்கம் பொயட்.. 

"நான் யாருக்கும் கும்பிட்டு வாழ மாட்டேன்" என்று கும்பகர்ணன் கூறியதாக கம்பர் எழுதியதை மேற்கோள் காட்டி கருத்தை பதிந்துள்ளீர்கள்..

'சுயமிழந்து அண்டிப் பிழைப்பதை இத்தமிழர்கள் என்று கைவிடப்போகிறார்களோ..?' என்ற வெறுப்பில் எழுதியது பொயட். இதை எப்படி உங்கள் பார்வையில் மிக நாகரீகமாக எழுதுவது? என சொன்னால் நன்று.

'சாமரம் வீசுவது' என எழுதலாமா..? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நுணாவிலானுக்கு 2005 தேர்தல் வேறு சூழலில் நிகழ்ந்தது. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் நடந்த 2005 தேர்தல்களையும் முள்ளிவாய்க்காலுக்கு பிந்தி நடந்த தேர்தல்களையும் ஒப்பிடுவது அடிப்படையில் தவறு. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் மகிந்தவை முதல் எதிரியென தமிழர் தேசிய கூட்டமைப்பால் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

2005ல் மகிந்தவை பதவிக்கு கொண்டுவந்து விடுதலைப் போராளிகளை அழிக்க அம்மையார் முடிவெடுத்திருந்ததுபற்றி வன்னியில் மக்கள் உணர்ந்திருந்தனர். இச்சமயத்தில் வன்னியில் இருந்தேன். நான் வன்னியில் குறிப்பிடாத எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. இதனால் நான் கஸ்றோவின் கோபத்துக்கு ஆளானேன்.  புலிகள்நான் சொன்னதைக் கேட்க்காவிட்டாலும்  புலிகளின் தலமை 2005 - 2006 காலக் கட்டங்களில் கஸ்றோவின் கோபத்தில் இருந்து  என்னைக் காப்பாற்றினார்கள். 

கிழிநொச்சி வித்தியாலத்தில் நிலாந்தன் தலமை தாங்கிய கூட்டமொன்றில் நான் கஸ்றோவை கடுமையாக விமர்சித்தேன். வன்னியில் எப்போதும் அமைப்பு தலைவர் ஒருவர் பகீரங்கமாக விமர்சிக்கப் பட்டதில்லை. கஸ்றோ எவ்வளவு முயன்றும்  எனக்கான பாதுகாப்பு வளையத்தை கஸ்றோவினால் உடைக்க முடியவில்லை.

2009ன் முற்பகுதி வரைக்கும் கஸ்றோவின் நிலைபாட்டுக்கு எதிரான எனது விமர்சனங்கள் அறிக்கைகள் வன்னிக்கு அனுப்பப்பட்டது. கஸ்றோவின் சொல்லே அம்பலம் ஏறினாலும் என் விமர்சன அறிக்கைகளை  தொடர்ந்து அனுப்பும்படி வற்புறுத்தி வந்தனர். முஸ்லிம்களின் வெளியேற்றம் 2005ல் தேர்தல் பகிஸ்கரிப்பு 2008ல் சிறி சிறு கெரிலா அணிகளாக தமிழ் சிங்கள காடுகளுக்கு பின்வாங்காமல் முல்லைத்தீவை நோக்கி முன்னேறியமை என்பவற்றை வலுவாக எதிர்த்தபோதும் என்னுடைய சொல்லை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் நான் சொல்லவேண்டும் என்பதை கடைசிவரை வலியுறுத்தி வந்தார்கள். என் பாதுகாப்பின் கரிசனையாக இருந்தார்கள். விடுதலை தீபமாக தங்களை எரித்த மகத்தான போராளிகளை தலைபணிந்து அஞ்சலிக்கிறேன்.

.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.