Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல்

Featured Replies

LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சிரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் "இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல. இவர் ஓர் அசுரனின் தாக்குதல்," என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.

கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.

  • டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
  • ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
  • ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா அமெரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

"முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மீண்டும் அச்சுறுத்தப்பட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது. அனைத்து பொறுப்புகளும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் வசம் உள்ளன," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிரியா

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் 'டோமாஹாக்' வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-43763494

  • தொடங்கியவர்

சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்

 

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா கிளம்பின.படத்தின் காப்புரிமைPA Image captionசைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா கிளம்பின.

பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

'காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்'

 

ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமையான சனா தெரிவித்துள்ளது.

சிரியா

அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை எதிர்கொள்ள, தங்கள் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், சோவியத் ரஷ்யா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய தளவாடங்களையே சிரியா பயன்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்

மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு ஏவுகணை.படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து சிரியாவை நோக்கி ஏவப்படும் ஓர் ஏவுகணை

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலை எதிர்த்து சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Syriaபடத்தின் காப்புரிமைREUTERS

"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் "இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல, ஓர் அசுரனின் தாக்குதல்," என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சிரியா அதிபர் அல்-அசாத் வழக்கமாக தமது அலுவலகத்துக்கு செல்லும் காணொளி ஒன்றை அவரது அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வரும் சிரியாவில் மேற்கத்திய நாடுகளின் இந்தத் தாக்குதல் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சிரியா Image captionதாக்குதல் நடக்கும் இடங்கள்

எங்கெல்லாம் தாக்குதல் நடந்தது?

கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.

  • டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
  • ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
  • ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

"டஜன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வரம்பு மீறப்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

டோமாஹாக் ஏவுகணை

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் 'டோமாஹாக்' வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிரியா நிறுத்தும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/global-43763494

  • தொடங்கியவர்

அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்

மாலை 4:45: சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது - சீனா

தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங், சர்வதேச உறவுகளில் ஆயுத சக்தி பயன்படுத்தப்படுவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும், ஐக்கிய நாடுகள் அவையை தாண்டிய ராணுவ நடவடிக்கை சர்வதேச கொள்கைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

ஏவுகணை

மாலை 4:45: சிரியா தாக்குதலுக்கு சட்டபூர்வ அடிப்படை இல்லை - பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர்

சிரியா மீது பிரிட்டன் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.

போர் விமானம்படத்தின் காப்புரிமைMOD

அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்படுகின்ற ராணுவ தாக்குதலுக்கு பிரிட்டனின் போர் விமானங்களை அனுப்புவதற்கு முன்னால், பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மாலை 4:14: மேற்குலக நாடுகளின் வான்வழி தாக்குதலை நிராகரித்த கிளர்ச்சியாளர்

பிரிட்டன் போர் திறன்

சிரியா அரசின் போர் திறனை பலவீனமாக்குவதற்கு போதுமானவைகளாக மேற்குலக நாடுகளின் வான்வழி தாக்குதல்கள் அமையும் என்று சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான பிரிவுகளிடம் நம்பிக்கை இருந்தது.

இதுவரை, மேற்குலக நாடுகளின் தாக்குதல் குறிப்பிடும்படியாக இல்லை என்று முன்னிலை கிளர்ச்சியாளரான முகமது அல்லுஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குற்றத்தின் கருவியைதான் தாக்கியுள்ளன. குற்றவாளியை அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 15:57 மணி: சிரியா மீதான தாக்குதல்கள் எங்களை வலிமையாக்கும் - அசாத்

சிரியா அதிபர் அசாத்படத்தின் காப்புரிமைREUTERS

சிரியாவிலுள்ள தீவிரவாதத்தை நசுக்குவதற்கு இதுவரை இல்லாத அளவுக்கான வலிமையை அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் வழங்கியுள்ளதாக சிரியாவின் அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்திருக்கிறார்.

இரான் அதிபர் ஹசன் ரூஹானியோடு தொலைபேசியில் பேசியபோது தெரிவிக்கப்பட்ட இந்த கூற்று சிரியா அதிபரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது,

மதியம் 15:53 மணி: சிரியா தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் - ரஷ்யா

வரைபடம்

சிரியா மீது தாக்குதல் தொடங்கியிருப்பது அமைதி பேச்சுவார்த்தைகளில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாக அரசின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடும்போக்காளர்களும், கிளர்ச்சியாளர்களும் சரியானதையே செய்கிறார்கள் என்ற வலுவான சமிக்கையை இந்த நடவடிக்கை வழங்கியுள்ளதாக மரியா ஸக்காரேவா கூறியுள்ளார்.

அமெரிக்க போர் திறன்

மதியம் 2:45 மணி: மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்தவிரும்புகிறது மேற்குலம் என்றார் இரான் அதிபர்

மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த மேற்குலகு விருப்பம் - இரான் அதிபர்படத்தின் காப்புரிமைEPA

அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று கூறி சிரியா மீது அமெரிக்க தலைமையில் நடைபெறும் தாக்குதலை இரான் அதிபர் ஹசன் ரூஹானி கண்டித்துள்ளார்.

சனிக்கிழமை காலை இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியுடன் நடத்திய கூட்டத்தில் இந்த தாக்குதல் மூலம் மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துளாார்.

மதியம் 2:45 மணி: சிரியா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு

சிரியா

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது வரம்பை தாண்டி செயல்படுவதாக அமையும் என்று அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

எனவே, இன்று அதிகாலையில் அமெரிக்காவின் தலைமையில் பிரான்சும், பிரிட்டனும் அந்த எதிர்ப்பை செயலில் காட்டியுள்ளன என்று இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகல் 2:44 மணி: யாரும் உயிரிழக்கவில்லை - ரஷ்யா

சிரியா மீது நடத்தப்பட்டு்ள்ள வான்வழி தாக்குதலில் பொது மக்கள் அல்லது ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பகல் 2:43 மணி: சர்வதேச விசாரணை முடிவுக்கு காத்திருக்க அவசியமில்லை - தெரீசா மே

சிரியாவில் தாக்குதல் தொடுப்பதற்கு, ரசாயன தாக்குதலை உறுதி செய்கின்ற சர்வதேச கண்காணிப்பு குழுவின் விசாரணை முடிவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

டூமா நகரில் என்ன நடந்தது என்பது பற்றி பிரிட்டனே சுய ஆய்வு செய்து கொண்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதல் பற்றிய சர்வதேச விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று தெரீசா மே தெரிவித்திருக்கிறார்.

மதியம் 2:43 மணி: ஹோம்ஸ் நகரில் அழிவுகளை காட்டும் புகைப்படங்கள்

அழிவுகள்படத்தின் காப்புரிமைAL-IKHBARIYAH AL-SURIYAH

சிரியா அரசு ஆதரவு செய்தி சேனல் ஒளிபரப்பில் ஹோம்ஸ் நகர்புறத்தில் எடுக்கப்பட்ட காணொளி பதிவில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் காட்டப்படுகின்றன.

காலை 8:23 மணி: விளைவுகளை எதிர்பார்க்கவும் - ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை இல்லாமல் போகாது என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

காலை 8:02 மணி: பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

ஏவுகணை எதிர்ப்புபடத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்கா, பிரான்சோடு சேர்ந்து பிரிட்டன் நடத்துகின்ற தாக்குதலில் பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

சிரியாவின் மீதான தாக்குதலில் பிரிட்டன் ஈடுப்பட்டுள்ளதை அறிவித்துபோது, தெரீசா மே இதனை தெரிவித்துள்ளார்.

காலை 7:48 மணி: ரசாயன சேமிப்பு கிடங்கில் தாக்குவதற்கு பிரிட்டனின் டேர்னாடோ ஜெட் விமானங்கள்

சிரியாவின் ராணுவ படைதளங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் விமான படையின் டேர்னாடோ ஜெட் விமானங்கள் அனுப்பப்படுவதாக பிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலை 7:45 மணி: தாக்குதல் தவிர மாற்று வழியில்லை - பிரிட்டன் பிரதமர்

3 நாட்டு தலைவர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக தாக்குதலை தொடங்கிய பின்னர் முதல்முறையாக பிரிட்டன் பிரதமர் இது பற்றி பேசியுள்ளார்.

சிரியா அரசால் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களை குறைத்து, அவற்றின் பயன்பாட்டை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

காலை 7:32 மணி: டூமா நகர தாக்குதல் அரக்கனால் நடத்தப்பட்டது

சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதர் ஒருவரால் நடத்தப்பட்டதல்ல. ஆனால், ஓர் அரக்கனால் நடத்தப்பட்டது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் அதிபர் அசாத்துக்கு ஆதரவு வழங்கி வரும் ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகள், அவை யாருக்கு ஆதரவு வழங்கி வருகின்றன என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 7:26 மணி: சிரியாவில் தாக்குதல் நடத்த டிரம்ப் ஆணை

அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைMIKE THEILER - POOL/GETTY IMAGES

சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏவுகணை தாககுதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.

கட்ந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஆணையிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும் டூமா நகர ரசாயன தாக்குதல் சம்பவம் புனையப்பட்டது என்றும் சிரிய அரசு கூறிவருகிறது.

http://www.bbc.com/tamil/global-43765582

  • கருத்துக்கள உறவுகள்

 

ருஷ்ய க்கும் சும்மா வாய் தான்.  Really disappointed with Russia :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமோ எல்லாரும் ரஷ்யா உட்பட பேசிப்பறைஞ்சுதான்  அடிக்கிறாங்கள் போலை கிடக்கு.....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

30706231_1797443260299201_21847498379818

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சிரியாவுக்காக அழும் அமெரிக்கா எப்படியா இரட்டை வேடம் பூண்டுள்ளது என்பதற்கு இதை விட என்ன சான்று தேவை??

 

  • தொடங்கியவர்

சிரியா: துருப்புக்களை திரும்ப பெறாமல் இருக்க டிரம்பை சம்மதிக்க வைத்தாரா மக்ரோங்?

சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்படத்தின் காப்புரிமைAFP Image captionசிரியா மீது நடத்தப்படும் தாக்குதல்களை மட்டுப்படுத்தி கொள்ள அதிபர் டிரம்பிடம் கூறியதாக அதிபர் மக்ரோங் கூறியுள்ளார்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிரியாவை விட்டு அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

ரசாயன ஆயுத தாக்குதல் என்று கூறப்படுவதற்கு பதிலடியாக சிரியா அரசு படைகளின் தளங்களை குறி வைத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தின.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை முற்றிலும் ஒழித்து விடுவதோடு, அந்த குழு மீண்டு வருவதை தடை செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது” சாரா சான்டர்ஸ், செய்தி தொடர்பாளர்

இந்த தாக்குதல்களை மட்டுப்படுத்தி கொள்ள டிரம்பிடம் கூறியதாகவும் மக்ரோங் கூறியுள்ளார்.

நட்புறவு கொண்டுள்ள இவர்கள் இருவரும், இந்த ராணுவ தாக்குதலை மேற்கொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்னர், பலமுறை பேசி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்ரோங் இவ்வாறு தெரிவித்த பின்னர், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், "அமெரிக்காவின் திட்டம் மாறவில்லை. அமெரிக்கா, படைப்பிரிவுகளை எவ்வளவுக்கு விரைவாக நாடு திரும்ப செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக இதனை நிறைவேற்ற அதிபர் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

தாக்குதல்படத்தின் காப்புரிமைAFP Image captionஎந்தவொரு நிலைமையிலும், சிரியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அமெரிக்கா விரும்பவில்லை - அதிபர் டிரம்ப்

ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை முற்றிலும் ஒழித்து விடுவதோடு, அந்த குழு மீண்டு வருவதை தடை செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

எந்தவொரு நிலைமையிலும், சிரியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளதை நாட்டு மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தபோது வாஷிங்டனில் டிரம்ப் வலியுறுத்தினார்.

'சிரியா ஜனநாயக படைப்பிரிவுகள்' என்று அழைக்கப்படும் குர்து இன மற்றும் அரபு ஆயுதப்படையினர் இணைந்து செயல்படும் கூட்டு படைக்கு ஆதரவு தெரிவித்து சிரியாவின் கிழக்கு பகுதியில் 2,000 படையினரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

http://www.bbc.com/tamil/global-43779480

  • தொடங்கியவர்

சிரியா: ரசாயன தாக்குதல் நடந்த இடத்தில் "ஆதாரங்களை அழிக்கவில்லை" - ரஷ்யா

சிரியாபடத்தின் காப்புரிமைAFP

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் உள்ள ஆதாரங்கள் எதிலும் தலையிடவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக பிபிசிக்கு பேட்டியளித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய் லவ்ரவ், "தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் உள்ள ஆதாரங்களில் ரஷ்யா தலையிடவில்லை என தாம் உத்தரவாதம் அளிப்பதாக" கூறினார்.

ஏப்ரல் 7ஆம் தேதியன்று ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மீண்டும் மறுத்துள்ளது.

சிரியாபடத்தின் காப்புரிமைAFP

"ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது என ஊடக செய்திகளை வைத்தும் சமூக ஊடகங்களின் அடிப்படையிலும்தான் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இதனை கூறுகின்றன" என்று லவ்ரவ் கூறினார்.

நடந்ததாக கூறப்படும் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாடகம் என்று கூறிய அவர், சர்வதேச அதிகாரிகள் டூமா நகரத்திற்கு சென்றடையும் ஒரு நாள் முன்பு அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ஆய்விற்காக சிரியாவில் உள்ள அதிகாரிகள் இன்னும் டூமாவிற்கு சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-43786636

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நவீனன் said:

சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்

Pornodarstellerin Stormy Daniels kommt beim Bundesgerichtsgebäude des âSouthern District of New Yorkâ (SDNY) in Lower Manhattan an

Bei der Sicherheitskontrolle muss Stormy Daniels auch die Schuhe ausziehen

பெண்வியாதி பிடித்த அரசியல் தலைவர்களுக்கு  தங்கள் வியாதி பிரச்சனைகளை மறைக்க............

தங்களை வீரதீரனாக காட்ட அனாவசியமற்ற போர்கள் அவசியமாகின்றது.

இப்படியான தரங்கெட்ட பொய்களை மறைக்க போர்/வெடிகுண்டுகளை ஆரம்பித்த பெருமை பில் கிளிண்டனையே சாரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.