Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவியை 'அயர்ன்' செய்த கொடூர கணவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை 'அயர்ன்' செய்த கொடூர கணவன்

வரதட்சணை கேட்டு மனைவி உடலில் இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டுக் கொடுமை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். கணவரின் சகோதரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது உமர். இவரது மகள் முபீனா பேகம். இவருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.

ஷாநவாஸ், புளியந்தோப்புப் பகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். கல்யாணத்திற்குப் பின்னர் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த ஷாநவாஸ்முபீனா பேகம் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை எழுந்தது.

கூடுதல் வரதட்சணை கேட்டு முபீனாவை அடிக்கத் தொடங்கினார் ஷாநவாஸ். அவருடன் சேர்ந்து நவாஸின் அக்கா, அவரது கணவர், அண்ணன், அவரது மனைவி ஆகியோரும் முபீனா பேகத்தை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதில் உச்சகட்டமாக, இஸ்திரி பெட்டியால் முபீனாவின் உடலில் பல இடங்களில் சூடு போட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார் நவாஸ். இதனால் கதறித் துடித்த முபீனா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தந்தைக்குப் போன் செய்து அழுதுள்ளார்.

துடித்துப் போன முபீனாவின் தந்தை விரைந்து வந்து தனது மகளை கூட்டிச் சென்றார். நேராக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்ற இருவரும் அங்கு புகார் கொடுத்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், நவாஸின் அண்ணன் மனைவி ஷபானா, அக்கா ஷாகின், அவரது கணவர் சலீம் ஆகியோரைக் கைது செய்தனர். நவாஸ் தலைமறைவாகி விட்டார்

- சூரியன்

குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாடு திருந்தாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனுக்கும் சிங்கள படைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை !!!

வட இந்தியர்களாவது போரட்டம் , சத்தியாகிரகம் என்று சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

தமிழகம் இந்திய சுதந்திர போரட்டத்திற்கு அளித்த பங்கு மிக மிகக் குறைவே!

சுதந்திரத்தை சும்மா பெற்ற நாட்டில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்...

-கப்பல்பயணி

இவனையெல்லாம் ஆம்பிளை என்டு சொல்லவே கூட்டாது, ஏன் மனுசன் என்டே சொல்லக் கூடாது :angry: :angry:

முஸ்லிம்களும் வரதட்சனை கேட்கிறார்களா ?

இப்படியான பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது தற்ஸ்தமிழ் இணையத்தை பார்த்தால் அசிங்கம் அசிங்கமாக குற்ரத்தை விபரித்து எழுதுவார்கள்.இதுவே கண்டிக்க தக்கது இது இன்னும் குர்ற செயல்களுக்கு ஊக்கம் கொடுப்பது போல இருக்குது காவக்துறை என்ன தூங்குகிறதா

  • கருத்துக்கள உறவுகள்

இவனையெல்லாம் ஆம்பிளை என்டு சொல்லவே கூட்டாது, ஏன் மனுசன் என்டே சொல்லக் கூடாது :angry: :angry:

அடுத்தவர் வாழ்வை பார்த்து வெளில இருந்து இப்படி நல்லாவே கதையளக்கலாம். நீங்களும் ஒருவரைக் காதலிச்சு கலியாணம் முடிச்சு.. அப்புறம் அவர் கொடூரமா தன்னை மாற்றிக் கொள்ளேக்க தான்.. புரியும். பல ஆண்கள் கற்பனைல நினைக்கிறது போல பெண்கள் ஒன்றும் நல்லவங்களா தெரியல்ல...! வானிலை போல பெண்கள் மனநிலை முன்னறிவுப்பு செய்யும் அறிவியல் வளரும் வரை... ஆண்கள் பாடு கஸ்டம் தான்..! :lol:

கொடூரக்கார மனைவிமாரோடு ஆண்கள் படும் சோதனையினால் எழும் மன அழுத்தங்களின் விளைவுகளாக ஏன் இவை இருக்க முடியாது..! கொடுமை செய்வதை அங்கீகரிக்கவில்லை. அதேபோல் கொடுமைகள் செய்யத் தூண்டும் அளவுக்கு நடந்து கொள்ளும் பெண்களையும் மன்னிக்க இடமில்லை..! :o :P

வரதட்சணை வாங்குவது இன்றும் எங்கள் தமிழீழத்தில் இருக்கிறது ஆனால் இந்தியாவை போல் வரதட்சணை கொடுமை இல்லை. வரதட்சணை என்ற சொல் அகராதியில் இருந்து எப்போது அகற்ற படுமோ அன்று தான் பெண்களுக்கு எல்லாம் விடிவு காலம்.

பிள்ளை, இது சுதந்திர சந்தை விவகாரம். இருப்புக்கும், தோவைக்கும் இடையில் நடக்கும் சண்டை. நல்ல மாப்பிளை வோணும் என்றால், அவரின்ர விலையை குடுக்க தான் வோணும்.

பொ.செ, நீர் எவ்வளவு வாங்கினீர்? தமிழீழத்திலுருந்து வேளைக்கு வெளிக்கிட்டீர் போல, அது தான் இப்படி எழுதிறீர்?

என்னை விடும். நான் ஒடு காலி. ஓரு சதம் வோண்ட வில்லை. இன்றைய சூழ் நிலையின், நிஜத்தை சோன்னோன். நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையோ?

அடுத்தவர் வாழ்வை பார்த்து வெளில இருந்து இப்படி நல்லாவே கதையளக்கலாம். நீங்களும் ஒருவரைக் காதலிச்சு கலியாணம் முடிச்சு.. அப்புறம் அவர் கொடூரமா தன்னை மாற்றிக் கொள்ளேக்க தான்.. புரியும். பல ஆண்கள் கற்பனைல நினைக்கிறது போல பெண்கள் ஒன்றும் நல்லவங்களா தெரியல்ல...! வானிலை போல பெண்கள் மனநிலை முன்னறிவுப்பு செய்யும் அறிவியல் வளரும் வரை... ஆண்கள் பாடு கஸ்டம் தான்..! :lol:

கொடூரக்கார மனைவிமாரோடு ஆண்கள் படும் சோதனையினால் எழும் மன அழுத்தங்களின் விளைவுகளாக ஏன் இவை இருக்க முடியாது..! கொடுமை செய்வதை அங்கீகரிக்கவில்லை. அதேபோல் கொடுமைகள் செய்யத் தூண்டும் அளவுக்கு நடந்து கொள்ளும் பெண்களையும் மன்னிக்க இடமில்லை..! :o :P

உம்மை போல் கீழ்தரமான்வர்களிருக்கும் போது இப்படித்தான் நடக்கும், தப்பு என்று தெரிந்தும் வக்காளத்து வாங்கின்றீர்களே :angry:

ஊருக்கு உபதோசம், உன்க்கு இல்லை எடி ஜானப் பொண்ணொ?

  • கருத்துக்கள உறவுகள்

உம்மை போல் கீழ்தரமான்வர்களிருக்கும் போது இப்படித்தான் நடக்கும், தப்பு என்று தெரிந்தும் வக்காளத்து வாங்கின்றீர்களே :angry:

பெண்கள் எல்லாம் தப்பே செய்யாதவங்க போல சும்மா பிலிம் காட்டாதேங்கோ. ஆண்களை விட அதிகம் தப்புப் பண்ணுறது அவங்க தான். தப்புப்பண்ணினா தண்டனை கிடைக்கத்தான் செய்யும். இது கொஞ்சம் கொடூரமான தண்டனை. தற்ஸோல்..! :o

வரதட்சனை கொடுக்காதது பெண் செய்த குற்றமா........?

கொடுமை செய்தவனை விட அதை ஆதரிப்பவர்கள் தான் கொடுமைகாரர்கள்..இவர்களை எல்லாம்ம்...............சே... இப்படியும் மனிதர்களா? இதனால் தான் என்னவோ, மனிதரா ஏன் பிறந்தோம் என்று அடிக்கடி நினைபதுண்டு.. பேசாமல் நாய்குட்டியா இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

வரதட்சனை கொடுக்காதது பெண் செய்த குற்றமா........?

வரதட்சணையைக் கொடுத்தது குற்றமா இல்லையா..??! :o

கொடுமை செய்தவனை விட அதை ஆதரிப்பவர்கள் தான் கொடுமைகாரர்கள்..இவர்களை எல்லாம்ம்...............சே... இப்படியும் மனிதர்களா? இதனால் தான் என்னவோ, மனிதரா ஏன் பிறந்தோம் என்று அடிக்கடி நினைபதுண்டு.. பேசாமல் நாய்குட்டியா இருக்கலாம்..

கொடுமை செய்தவன் ஏன் செய்தான் என்பதன் பின்னணியை அறிவது கொடுமைகள் தொடராமல் தடுக்க உதவும்.

பெண்கள் செய்யாத கொடுமைகளா..??! கணவனையே கொல்கிறார்களே அதை விடவா..??! :P

:angry: ஏண்? கணவன்மார்கள் மனைவியரை கொல்வது இல்லையோ?

வரதட்சணையைக் கொடுத்தது குற்றமா இல்லையா..??! :o

:P

குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்,

அண்மையில் தட்ஸ்தமிழில் ஒரு நடிகையை பற்றிய செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதில் "செக்ஸ் லீலையில் நடிகை தலைமறைவு" என்று ஆரம்பித்து பின்னர் "புளுபிலிமில் நடிப்பது தப்பா என்று கேட்டார்" என்பது வரை ஏதோ அவருடன் கூட இருந்து அவரது வாழ்கையை படம் பிடித்தது போல் ரொம்ப சுவாரசியமாக டயரெக்ட் செய்து எழுதியிருந்தார்கள். அதில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்பது சம்பந்தப்பட்வருக்கே தெரியும்.

தப்பியோடிய கணவர் சரணடைந்து களிசாப்பிட்டு பின்னர் 3 வருடம் நீதிமண்றில் விசாரனை செய்யப்பட்டு விடுவிக்கப்படும் போது அவரை பேட்டி கண்டு எழுதினால், இன்று இங்கு "இவன் எல்லாம் ஒரு மனுசனா" என்று திட்டிய அதே வாய்கள் "இவள் எல்லாம் ஒரு பெண்ணா" என்று பழைய கதை மறந்து திட்டும்!

நெடுக்கால்போனவரின் வாதம் இந்த ஆண் செய்ததை குற்றமில்லை என்று கூறவில்லை. குற்றம் செய்ய தூண்டுகோலாக இருப்பது பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று கூறுகிறது. சந்திரிக்கா, ஜெயலலிதா ஆகியோரும் பெண்கள்தான் அதற்காக அவர்கள் எல்லாம் இரக்கமுள்ளவர்கள் மென்மையானவர்கள் பாவம் என்றில்லைதானே? அரக்க குணமும் சண்டித்தனமும் வஞ்சகமும் கொண்ட பல பெண்கள் பல பிரச்சனைகளுக்கும் கொலைகளுக்கும் மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். கெட்டவர்கள் நல்லவர்கள் என்பதில் ஆண்கள் பெண்கள் இடையே எந்த பாகுபாடும் இல்லை. எமது சமுகம்தான் அப்படி ஒரு தப்பவிப்பிராயத்தை வளர்த்துள்ளது. அந்த அபிப்பிராயத்தை தமக்கு கேடயமாக பாவித்துக் கொண்டு பெண்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள். ஏன் இன்று லிசா கூட குறிப்பிட்டார் "தான் ஒரு பெண் என்று எண்ணி எனது கருத்துகளுக்கு கடுமையாக பதில் எழுதாதவர்கள் இனி எழுதலாம் என்று".

ஆண்களுக்கு பலத்தையும் பெண்களுக்கு புத்தியையும் கடவுள் கொடுத்துள்ளார். அது சேர்ந்து வாழ்வதற்கே! புத்தியும் பலமும் போட்டி போட்டால் ஈற்றில் எது வெல்லும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்கள் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பாவித்து ஆண்களை அடக்கி ஆள முயற்சிக்கக் கூடாது. இதனாலேயே கோபமடைந்து ஆண்கள் புத்தி கெட்டு கைநீட்டி ஈற்றில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறான். சட்டம் கூட பெண்களுக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

ஆகவே பெண் என்பதாலன்றி இரண்டு மனிதருக்கிடையே நிகழ்ந்த போரட்டமாகவே இதனை பார்க்க முடியும். மற்றவரின் நியாயத்தையும் கேட்டே இங்கு நியாயம் வழங்கலாம். நெடுக்கால்போவான் அதனையே செய்யத் தலைப்பட்டுள்ளார்.

எனது மனைவி தங்கமானவள், நான் யாழ்களத்தில் எழுதுவதைக் கண்டதும் முறைத்து பார்பாள் அவ்வளவுதான். மற்றும்படி கையெல்லாம் நீட்டமாட்டாள். நானும் அதனை நன்கு புரிந்து கொண்டு உடனடியாகவே எழுதுவதை நிறுத்திவிடுவேன்.

பிற்குறிப்பு:

நான் இங்கே என்ன எழுதுகிறேன் என்பதை அவள் சில வேளைகளில் உளவுபார்ப்பதுண்டு.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கணவன்--மனைவி, ஆண்---பெண் என விவாதிப்பதைவிட

மனிதர்கள், அதிலும் நல்லவர்கள், நல்லது செய்ய நினைக்காதவர்கள் அல்லது முடியாதவர்கள்

(கெட்டவர்கள் அல்ல) என்றுதான் பார்க்க வேண்டும். காரணம் சந்தர்ப்ப சூழ்நிலையில் கனநேரத்தில் எடுக்கும் முடிவுகள் அல்லது செயல்கள். இந்நிலையில் சிலருக்கு சில அசாதாரண சம்பவங்கள் நடந்து விடுகின்றன. ; சாதாரணமானது எப்போதுமே செய்தியாவதில்லை. ஆகவே மனிதர்கள் நிதானம் தவறக்கூடாது. அதுதான் முக்கியம். யோசிப்போம், நானும்யோசிக்கிறேன். :unsure::blink:

யாழ்களம் அமர்க்களமாயுள்ளது.

முன்பு அழகு,

இப்போ பேரழகு.

பி.கு: எல்லோருக்கும் வணக்கம்! ஒரு வாரத்தின் பின் வருவேன்.

அதற்குள் என்னைத்தேடி புலநாயிடம் போகவேண்டாம். :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தட்ஸ்தமிழில் ஒரு நடிகையை பற்றிய செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதில் "செக்ஸ் லீலையில் நடிகை தலைமறைவு" என்று ஆரம்பித்து பின்னர் "புளுபிலிமில் நடிப்பது தப்பா என்று கேட்டார்" என்பது வரை ஏதோ அவருடன் கூட இருந்து அவரது வாழ்கையை படம் பிடித்தது போல் ரொம்ப சுவாரசியமாக டயரெக்ட் செய்து எழுதியிருந்தார்கள். அதில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்பது சம்பந்தப்பட்வருக்கே தெரியும்.

தப்பியோடிய கணவர் சரணடைந்து களிசாப்பிட்டு பின்னர் 3 வருடம் நீதிமண்றில் விசாரனை செய்யப்பட்டு விடுவிக்கப்படும் போது அவரை பேட்டி கண்டு எழுதினால், இன்று இங்கு "இவன் எல்லாம் ஒரு மனுசனா" என்று திட்டிய அதே வாய்கள் "இவள் எல்லாம் ஒரு பெண்ணா" என்று பழைய கதை மறந்து திட்டும்!

நெடுக்கால்போனவரின் வாதம் இந்த ஆண் செய்ததை குற்றமில்லை என்று கூறவில்லை. குற்றம் செய்ய தூண்டுகோலாக இருப்பது பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று கூறுகிறது. சந்திரிக்கா, ஜெயலலிதா ஆகியோரும் பெண்கள்தான் அதற்காக அவர்கள் எல்லாம் இரக்கமுள்ளவர்கள் மென்மையானவர்கள் பாவம் என்றில்லைதானே? அரக்க குணமும் சண்டித்தனமும் வஞ்சகமும் கொண்ட பல பெண்கள் பல பிரச்சனைகளுக்கும் கொலைகளுக்கும் மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். கெட்டவர்கள் நல்லவர்கள் என்பதில் ஆண்கள் பெண்கள் இடையே எந்த பாகுபாடும் இல்லை. எமது சமுகம்தான் அப்படி ஒரு தப்பவிப்பிராயத்தை வளர்த்துள்ளது. அந்த அபிப்பிராயத்தை தமக்கு கேடயமாக பாவித்துக் கொண்டு பெண்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள். ஏன் இன்று லிசா கூட குறிப்பிட்டார் "தான் ஒரு பெண் என்று எண்ணி எனது கருத்துகளுக்கு கடுமையாக பதில் எழுதாதவர்கள் இனி எழுதலாம் என்று".

ஆண்களுக்கு பலத்தையும் பெண்களுக்கு புத்தியையும் கடவுள் கொடுத்துள்ளார். அது சேர்ந்து வாழ்வதற்கே! புத்தியும் பலமும் போட்டி போட்டால் ஈற்றில் எது வெல்லும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்கள் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பாவித்து ஆண்களை அடக்கி ஆள முயற்சிக்கக் கூடாது. இதனாலேயே கோபமடைந்து ஆண்கள் புத்தி கெட்டு கைநீட்டி ஈற்றில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறான். சட்டம் கூட பெண்களுக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

ஆகவே பெண் என்பதாலன்றி இரண்டு மனிதருக்கிடையே நிகழ்ந்த போரட்டமாகவே இதனை பார்க்க முடியும். மற்றவரின் நியாயத்தையும் கேட்டே இங்கு நியாயம் வழங்கலாம். நெடுக்கால்போவான் அதனையே செய்யத் தலைப்பட்டுள்ளார்.

எனது மனைவி தங்கமானவள், நான் யாழ்களத்தில் எழுதுவதைக் கண்டதும் முறைத்து பார்பாள் அவ்வளவுதான். மற்றும்படி கையெல்லாம் நீட்டமாட்டாள். நானும் அதனை நன்கு புரிந்து கொண்டு உடனடியாகவே எழுதுவதை நிறுத்திவிடுவேன்.

பிற்குறிப்பு:

நான் இங்கே என்ன எழுதுகிறேன் என்பதை அவள் சில வேளைகளில் உளவுபார்ப்பதுண்டு.

மிகச் சரியாக இந்த விடயத்தில் நெடுக்காலபோவனை அளவிட்டு இருக்கிறீர்கள். உங்கள் விளக்கம் தெளிவடைய வைக்க வேண்டும். இது ஓவ்வொருவருக்குள்ளும் நல்ல மன மாற்றங்களை அளிக்க வேண்டும். ஆணும் பெண்ணும் இணைந்து பிறப்பிப்பதுதான் மனிதம்..! போட்டிபோடவோ.. தலைக்கணம் பிடித்து அலையவோ.. நான் என்பாடு நீ உன்பாடு என்று இரண்டு பாதையில் பயணிப்பதல்ல வாழ்வென்பது..! ஆணும் பெண்ணும் அடிபடுவதல்ல வாழ்வு. யார் உயர்த்தி யார் தாழ்த்தி என்று நோக்குவதும் ஒருவரின் குறையை /குற்றத்தை மறைத்து மற்றவரை நிறைவாகவும் / சுத்தவாளியாகவும் காட்டுவதல்ல தேவை. சமூகத்தில் பிரச்சனை ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு. அவை சரிவர இனங்காணப்பட்டு தீர்வுகள் தேடப்படும் பொது இப்படியான அசாதரண நிகழ்வுகள் ஆண்களால் பெண்களுக்கும் பெண்களால் ஆண்களுக்கும் ஏற்படுவது தடுக்கப்படும். அதற்கு ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் புரிந்து கொள்ள சந்தர்ப்பமும் முயற்சியும் செய்ய வேண்டும். நான் என்பாடு நீ உன்பாடு என்று ஒருவர் அடுத்தவர் தேவையை உணராது சுயநலத்தோடு வாழ்வதில் அர்த்தமே இல்ல. சீதனம் அதிகம் கேட்கிறான் என்றால் காரணத்தைக் கண்டறிந்து பிரச்சனையை தீர்க்க வேண்டியவரே..சீதனத்தைக் காட்டி வாழ்வை அமைத்த பெண் தான் சேர்ந்து அதற்கு தீர்வு தேட வேண்டியவர். அவர் விலகி இருந்து விடுப்புப் பார்க்க முடியாது..!

சீதனம் என்று கொடுக்கும் போதே பெண்கள் தவறிழைக்க முற்படுகின்றனர். கடையில் கிடைக்காததற்கு யாரும் விலை பேசமாட்டார்கள். சீதனம் தரமுடியாது என்றால் அதற்கு ஏற்ப வருபவரை மணந்து கொள்ள வேண்டியதுதானே. சீதனம் கொடுப்பதோடு பெண்கள் அதிகாரங்களை நிறுவ நினைப்பதால் கூட சீதனம் சினமாகிச் சீறி அவர்களையே தாக்குகிறது. சீதனத்தை ஒழிக்க ஆண்கள் வாங்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்பவர்கள் பெண்கள் வழங்கக்கூடாது என்று செய்வதில்லை.. அல்லது மறைத்துவிடுகின்றனர்..! ஒழுக்கம் இழந்த பெண்ணைக் கூட சீதனத்தால் விற்கலாம் என்ற நிலை உள்ள இந்தியாவில்.. அந்தப் பெண் மீதான சித்திரவதைக்கு அவன் மட்டுமா காரணம்.. அவளும் தான் காரணமா என்று நோக்க யாரும் முனையவில்லை.

பெண் என்றதும் இரக்கப்படும் ஆணுலகம் ஏன் ஆண் என்பவனை மனிதன் என்ற வகைக்குள் கூட வைத்துக் கருத்துரைக்க மறுக்கிறது. சும்மா ஒருவன் சித்திரவதைக்கு முயலான். அவனின் மனதில் அந்தளவுக்கு கொடூரத்தனம் வளர என்ன காரணம் என்பதை இங்கு எத்தனை பேர் அலசினர்..??! எடுத்த எடுப்பில் ஆண்கள் மீது பழிபோட்டுவிட்டு பெண்களை அப்பிராணிகளாகக் காட்டுவதால் தான் பெண்கள் பக்க தவறுகளும் குற்றங்களும் வெளிச்சத்துக்கு வராமலே ஆண்களை சமூகத்தை வதைக்க ஆரம்பித்துவிட்டன. இன்று பெருகியும் வருகின்றன. பல பெண்கள் தாங்கள் செய்வது குற்றம் என்று அறிந்தும் செய்கின்றனர். நீ உன்பாட்டைப் பார் நான் என்பாட்டைப் பார்க்கிறேன் என்று அதற்குப் பதிலும் வைத்திருக்கிறார்கள்..! இப்படியான நிலையில் பாதிக்கப்பட்ட ஆண் என்ன முடிவு செய்வான்..! சித்திரவதை செய்யத்தான் தூண்டப்படுவான்.அப்படித் தூண்டும் காரணிகளை பெண்கள் நிவர்த்திக்கும் போது ஆண்கள் திருந்துவார்கள். பெண்கள் இயல்பிலேயே நிலையற்ற மனம் படைத்தவர்கள். அது அவர்களின் உடலின் தன்மை..! கொடுத்த சீதனத்துக்காக ஒரு ஆணை தினம் கொல்லும் போது அவனும் திருப்பித் தாக்கமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்..??!

ஆக தவறுகளை குற்றங்களை ஆராயாமல் ஆண்கள் மீது பழிபோடுவதை நிறுத்திட்டு தவறுகளை இனங்கண்டு ஆண் பெண் வேறுபாடுகளுக்கு அப்பால் அவற்றைக் களைய முனைய வேண்டும். அதுவே சமூகத்தில் இப்படியான அசாதாரண நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உதவும்..! :P :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுமை செய்தவனை விட அதை ஆதரிப்பவர்கள் தான் கொடுமைகாரர்கள்..இவர்களை எல்லாம்ம்...............சே... இப்படியும் மனிதர்களா? இதனால் தான் என்னவோ, மனிதரா ஏன் பிறந்தோம் என்று அடிக்கடி நினைபதுண்டு.. பேசாமல் நாய்குட்டியா இருக்கலாம்..

ஆகா நம்ம மூக்கி வந்துட்டாய்யா வந்ந்ந்ந்துட்டா!!ஏன் பிள்ளை நாய்க்குட்டியாய் இருக்கிறதிலை என்ன விஷேசம்?அதுசரி எப்பிடி சுகமாய் இருக்கிறீரோ???? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.