Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலாவும் விடுதலை புலிகளும்

Featured Replies

விஜயகலாவும் விடுதலை புலிகளும்

 

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ' என்று பொதுவில்  கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், 'விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ' என்று அவர் கூறியது தான் ' சட்டப்படி ' பிரச்சினையாகி விட்டதுபோலும்.

vij.jpg

விடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது.விடுதலை புலிகளுக்குப் பிறகு தமிழர் அரசியலில் அவர்களின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ' புதிய அவதாரங்கள் ' என்று தங்களைப் பாவனைசெய்துகொண்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைக் கிளறுகின்ற பெருவாரியான அரசியல்வாதிகள் வடக்கில் வலம் வருகிறார்கள்.அவர்களில் எவருமே ' விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் ' என்று வாய் தடுமாறியேனும் சொன்னதாக இதுவரை அறியவில்லை.

தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்காக ஒரு அர்ப்பணிப்பையும் செய்யாத பேர்வழிகள் எல்லாம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்ட காலத்தில் செய்த தியாகங்ளில் குளிர்காய்கின்ற ஒரு அரசியலை இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.எந்தவொரு போராட்ட வடிவமும் அந்தந்தக் காலகட்டத்தில் நிலவுகின்ற யதார்த்த சூழ்நிலைகளின் அடிப்படையில் உருப்பெறுபவையே.உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகள் அகற்றப்படாமல் இருக்கின்ற நிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் புதிய சூழ்நிலைகளில் எத்தகைய வடிவத்தை எடுக்கும் என்பதை காலம் தீர்மானிக்கும்.

ஆனால், தங்களால் ஒரு தெளிவான மார்க்கத்தை தமிழ் மக்களுக்கு காட்டமுடியாமல் , சிந்தனைத் துலக்கமின்றி வங்குரோத்துநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் விடுதலை புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டு தங்களுக்கான எதிர்கால  அரசியல்வாய்ப்புகள் குறித்து கனவுகண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அடுத்துஎன்ன செய்வதென்று தங்களுக்குள் ஒரு தெளிவான அணுகுமுறையை,  தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளாமல்  தமிழ் மக்களை அதுவும் குறிப்பாக இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.பாதை தெரியாமல் தடுமாறுகின்ற மக்கள் மத்தியில் அந்தப் போக்கு எடுபடுவகை்கண்டு விஜயகலாவுக்கும் ஒரு மருட்சி ஏற்பட்டுவிட்டது.இறுதியில் பாவம் அந்தப் பெண்மணி இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்துநிற்கிறார்.அடுத்து எனனென்ன சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.

தென்னிலங்கையில் உள்ள இனவாத அரசியல் சக்திகள் மாத்திரமல்ல, பிரதான அரசியல் கட்சிகளும் கூட ஏதோ விஜயகலா மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை கொண்டவர் போன்று பிரசாரங்களைச் செய்து தென்னிலங்கை மக்களின் ' விவேகத்தையே ' நிந்தனை செய்கின்ற ஒரு படுகேவலமான அரசியலை முன்னெடுத்திருக்கின்ற துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கிறோம்.நாட்டையும் மக்களையும் வதைக்கின்ற எரியும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு விஜயகலாவின் வீரசிங்க மண்டபத்தின் புலிப்பேச்சு தாராளமாக உதவிக்கொண்டிருக்கிறது.அதுதான் உண்மையான வேதனை.

http://www.virakesari.lk/article/36195

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையார் அண்மையில் தொலைக்காட்சியொன்றிற்கு நேரலையில் வழங்கிய செய்தியொன்றை கேட்டேன். முன்னெப்போதோ நடந்த நிகழ்வொன்றைப்பற்றி விளக்கமளித்துக்கொண்டிருந்தார். உரையாடல் பல்லாயிரம் மக்கள் கேட்கப்போகும் நிகழ்ச்சியொன்றிற்கு தேவையான வசன நேர்த்தியோ சொற்தெரிவுகளோ சிறிதும் இல்லாமல் இருந்தது. தனது வார்த்தைகளையும் சிந்தனையையும் ஒருங்கிணைத்து செவ்வியை வழங்குவதில் சிரமத்துடன் தடுமாறிக்கொண்டிருந்ததை நேயர்கள் வெளிப்படையாகவே உணரக்கூடியதாக இருந்தது. தெளிந்த அரசியல்வாதிக்கு இருக்கவேண்டிய சொல்லாடலுக்கான ஆற்றல் அவரிடம் சிறிதும் காணப்படாதது வருத்தம். கணவரின் இறப்புக்குபின் அடிப்படைத்தேவையான சுயவிருப்பையும் அரசியல் தகமைகளையும் புறந்தள்ளி அனுதாபத்தின்பேரில் அரசியல்வாதி ஆக்கப்பட்டிருக்கும் விஜயகலா ஒரு பேராண்மைகொண்ட அரயில்வாதியாக தன்னை மாற்றிக்கொள்வதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் வணங்காமுடி அவர்கள்  அழகாக அளவாகக் கூறியதைப் போல் விஜயகலா போன்றோர் விவேகமான தமிழ் அரசியல்வாதிகளாய்ப் பரிணமிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் தமிழ்ச் சமூகத்திலேயே சிலரால் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுவதிலேயோ, கிண்டலடிக்கப்படுவதிலேயோ உடன்பாடு இல்லை. அவர் சார்ந்த கட்சியிலிருந்து மாறுபட்டு தற்போதுதான் இவ்வாறு குரல் கொடுக்கிறார் என்றாலும் கூட, அதனை ஆரவாரமின்றி ஏற்பது நம் தரப்பில் விவேகமாக இருக்கலாம்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

தோழர் வணங்காமுடி அவர்கள்  அழகாக அளவாகக் கூறியதைப் போல் விஜயகலா போன்றோர் விவேகமான தமிழ் அரசியல்வாதிகளாய்ப் பரிணமிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் தமிழ்ச் சமூகத்திலேயே சிலரால் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுவதிலேயோ, கிண்டலடிக்கப்படுவதிலேயோ உடன்பாடு இல்லை. அவர் சார்ந்த கட்சியிலிருந்து மாறுபட்டு தற்போதுதான் இவ்வாறு குரல் கொடுக்கிறார் என்றாலும் கூட, அதனை ஆரவாரமின்றி ஏற்பது நம் தரப்பில் விவேகமாக இருக்கலாம்.

சுவிஸ் குமார் விடயத்தில் அவ நடந்து கொண்ட விதம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று விளக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, பெருமாள் said:

சுவிஸ் குமார் விடயத்தில் அவ நடந்து கொண்ட விதம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று விளக்க முடியுமா ?

நண்பர் பெருமாள் அவர்களுக்கு, சுவிஸ் குமாரும் போலீசும் விஜயகலா- சுவிஸ் குமார் விவகாரத்தில் மாறுபட்ட தகவல்கள் தந்ததை ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். எனினும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அன்று விஜயகலாவின் மீது நமது சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. உதாரணமாக சுவிஸ் குமார் மக்களால் கட்டிவைக்கப்பட்ட இடத்திற்கு விஜயகலா வந்ததையும் , வழக்கு விசாரணையின் போது நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பதிவினையும் எடுத்துக் கொள்ளலாம். இப்பின்புலத்தில் மாணவி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்ற வழக்கின் தீவிரத்தை மனதில் கொண்டு விஜயகலா அப்போதே பதவி விலகி தம்மை விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். கொடியவனுக்குத் துணை போவதும் கொலைக் குற்றமே. 

              மற்றபடி விடுதலைப் புலிகளின் ஒழுக்க நிலை பற்றிய அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவ்வளவே.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

விஜயகலாவின் உரைக்கு விசிலடித்தவர்களை, மன்னிப்பு கடிதம் தருமாறு...
பிரதேச செயலாளர்களால்  அறிவுறுத்தல். :grin: ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.