Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்..

Featured Replies

சங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்..

rape-protection.jpg?resize=800%2C474

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வன்புணர்வுக்குட்படுத்தினர் என 21 வயது இளைஞர்கள் இருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

“சுழிபுரம் மத்தி, பல்லசுட்டி என்ற இடத்தில் 15 வயதுச் சிறுமியை 21 வயதான இளைஞன் தனது வர்த்தக நிலையத்துக்குள் வைத்து வன்புணர்வுக்குட்படுத்தினார். அந்தச் சிறுமி கர்ப்பவதியானார். எனினும் உறவினர்களும் அந்த இளைஞனும் சேர்ந்து சிறுமியை மிரட்டி சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்துள்ளனர். சம்பவத்தையடுத்து சிலர், அந்த இளைஞனுடன் பேசிய போது, அவர் அச்சுறுத்துகின்றார்” என்று சங்கானை சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

21 வயதுடைய இளைஞன் 14 வயதுச் சிறுமியுடன் சட்டத்துக்கு புறம்பாக இணைந்து வாழ்ந்முள்ளார்…

சங்கானை விழிசிட்டி என்ற இடத்தில் 21 வயதுடைய இளைஞன் 14 வயதுச் சிறுமியுடன் சட்டத்துக்கு புறம்பாக இணைந்து வாழ்ந்தார். ஊரவர்களின் எதிர்ப்புக் காரணமாக சில நாள்களில் அந்த இளைஞன் பிரிந்து சென்றுவிட்டார். சிறுமியின் எதிர்காலம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு வழங்கப்பட்ட மற்றொரு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சங்கானை பிரதேச பாதுகாப்பு அலுவலகர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிமன்றின் அறிவுறுத்தலைப் பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் போதுதான் சமூகத்தில் குற்றச்செயல்கள் குறைவடையும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். என ஊரவர்கள் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2018/86865/

  • கருத்துக்கள உறவுகள்

"கூடா"நாட்டில் நான் அறிய பதிண்ம வயதுப் பெண் பிள்ளை ஒருவர் இன்னுமொரு இளைஞனுடன் வாழ்ந்துவருகிறார் அதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் பூரண ஒத்துழைப்புக்கொடுக்கிறார்கள் அகைவிடக்கேவலம் அந்த இளைஞனுக்கு பெண்ணின்தாயார் நிதி நிறுவனத்தில் கடன்வாங்கி மோட்டார்சைக்கிள் வாங்கிக்கொடுத்துள்ளார் இப்போது அவ்வாலிபர் கண்டிவீதியில் இன்னுமொருவாகனத்தில் அடிபட்டு ஒருகால் முற்றிலும் வழங்காது என வைத்தியர்களால் கைவிடப்பட்டு தொடர்ந்தும் யாழ் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெறுகிறார். இப்படியான கேவலங்கெட்ட சம்பவங்கள் நிறையவே இப்போ நடக்கவே செய்கின்றன. அதுக்காக ஆமிக்காரனும் சிங்கள அரசும் இவர்களைத் துப்பாக்கி முனையில் கமல்மாதிரிக் கட்டிப்புடி வைத்தியத்தைப் பழக்கினம் என இங்க யாழ் இணையத்தில் கூறக்கூடாது. என்ன புலிகள் காலத்தில் இந்த நாய்கள் எல்லாத்தையும் கட்டிவைத்திருந்தம் இப்ப அவைகள் எல்லாம் அறுத்துக்கொண்டுபோயிட்டுதுகள், அதுதான் தெருவுக்குத் தெரு கண்ட இடங்களிலும் காணும் கல்லுகளில் மூத்திரம் பெய்வதுமட்டுமில்லை, கண்ட இடங்களிலும் "கலவியிலும்" ஈடுபடுகுதுகள். 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

பொடி படிச்சதே, வேலை வெட்டி இருக்குதே. நல்ல குடும்பமே என்ற கேள்விகள் பழசு.

வெளில யாரும் இருக்கினமே எண்டது முதல் கேள்வி.

பொடியே, சுத்துமாத்துக் கோஸ்டி என்றால், வெளிநாட்டு சொந்தக்காரர் காசு போட்டதாய், எக்ஸ்போட் கம்பனி தொடங்கிடுவார்.

பிறகென்ன, லோக்கல் அம்மாமார், பெடியை மருமோன் ஆக்க போட்டி போடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

"கூடா"நாட்டில் நான் அறிய பதிண்ம வயதுப் பெண் பிள்ளை ஒருவர் இன்னுமொரு இளைஞனுடன் வாழ்ந்துவருகிறார் அதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் பூரண ஒத்துழைப்புக்கொடுக்கிறார்கள் அகைவிடக்கேவலம் அந்த இளைஞனுக்கு பெண்ணின்தாயார் நிதி நிறுவனத்தில் கடன்வாங்கி மோட்டார்சைக்கிள் வாங்கிக்கொடுத்துள்ளார் இப்போது அவ்வாலிபர் கண்டிவீதியில் இன்னுமொருவாகனத்தில் அடிபட்டு ஒருகால் முற்றிலும் வழங்காது என வைத்தியர்களால் கைவிடப்பட்டு தொடர்ந்தும் யாழ் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெறுகிறார். இப்படியான கேவலங்கெட்ட சம்பவங்கள் நிறையவே இப்போ நடக்கவே செய்கின்றன. அதுக்காக ஆமிக்காரனும் சிங்கள அரசும் இவர்களைத் துப்பாக்கி முனையில் கமல்மாதிரிக் கட்டிப்புடி வைத்தியத்தைப் பழக்கினம் என இங்க யாழ் இணையத்தில் கூறக்கூடாது. என்ன புலிகள் காலத்தில் இந்த நாய்கள் எல்லாத்தையும் கட்டிவைத்திருந்தம் இப்ப அவைகள் எல்லாம் அறுத்துக்கொண்டுபோயிட்டுதுகள், அதுதான் தெருவுக்குத் தெரு கண்ட இடங்களிலும் காணும் கல்லுகளில் மூத்திரம் பெய்வதுமட்டுமில்லை, கண்ட இடங்களிலும் "கலவியிலும்" ஈடுபடுகுதுகள். 

விடுதலை புலிகள் காலத்திலேயே இந்த மக்களுக்கு உறுதியான தலைமைத்துவமும் நிருவாகமும் இருந்தன. ஆனால் அந்த காலத்தில் இந்த மக்களை  பண்பாட்டில் பக்குவம் மிக்க மக்களாக உருவாக்காமல், ஆயுதத்துக்கும் தண்டனைக்கும் பயந்து தவறுகள் செய்யாத அடக்கப்பட்ட விலங்குகள் போன்று கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தார்கள். இன்று அந்த கட்டுப்பாடும் இல்லை, இவர்களை இனியாவது பக்குவம் மிக்க மனிதர்களாக உருவாக்கும் அளவுக்கு இன்றைய  தலைமைத்துவமோ நிருவாகமோ இல்லை. நம்பி இருந்த முதலமைச்சரும்இன்று ஒரு புறம் சுமேந்திரனுடனும் மறுபுறம் டேன்ஸ்வரன் உடனும் வழக்காடுவதில் நேரத்தை செலவழிக்கிறார். சிறி லங்கா இராணுவத்தை நம்பி வாழவேண்டிய நிலையில் ஊனமுற்ற போராளிகளும் வறியவர்களும் இருக்கிறார்கள். இந்த பரிதாபத்துக்கு உரிய இனம் தானாக அழியப் போகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாளர்கள் தமது ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்ட பகுதிகளில் சமூக சீர்கேடுகளை நேரடியாகவோ அல்லது பிணாமிகள் மூலமாகவோ ஊக்குவிக்கிறார்கள்.

அதிகாரம் என்பது தனக்குச் சார்பான சமூக விரோத சக்திகளை ஆங்காங்கே விதைத்துக்கொள்ளும் என்பதும், பல சமயங்களில் அதிகாரத்தின் எதிரிகளைப் பழிவாங்க இந்த சமூக விரோத சக்திகளே பயன்படும் என்பதும் நாம் அறிந்ததுதான். 

தென்னிலங்கையில் மாறி மாறி வரும் சிங்கள அரசுகள் தமக்குச் சார்பான பாதாள உலகக் கும்பல்களை வளர்த்து வந்தார்கள் என்பதும், அவர்கள் மூலமாக எதிரணி அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் அவ்வப்போது கொன்று வந்தார்கள் என்பது வரலாறு. மகிந்த ஒருபடி மேலே சென்று அரச ஆணைபெற்ற ராணுவம் மற்றும் கடற்படை, விசேட அதிரடிப்படை என்று நன்கே கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரத்தை சமூகவிரோத செயல்களான, கடத்துதல், கப்பம், காணாமல்ப் போகச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுத்தினார்.

தனது சொந்த இனமான சிங்களவர்களின் வாழ்வை ஆட்டிப் படைத்த சமூக விரோதிகளையே ஊக்குவித்து வளர்த்த சிங்களப் பேரினவாதம், தான் ஆக்கிரமித்திருக்கும் எதிரி இனமான தமிழர்களை இன்று வாட்டி வதைக்கும் சமூக சீர்கேட்டு கூலிகளை தானே வழிநடத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ள இங்கே பலருக்கு கஷ்ட்டமாக இருக்குமென்பது ஆச்சரியம்தான்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்தில் இப்படியான சமூகச் சீர்கேடுகள் இருக்கவில்லை என்பதை, இன்று முற்றான சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்று ஆர்ப்பரிக்கும் சிலரே ஒத்துக்கொள்வதில் மகிழ்ச்சியே. 

ஆனால், பிரச்சினை என்னவென்றால், புலிகளின் காலத்தில் இவை இல்லாமலிருந்தமைக்கான காரணம் என்று இவர்கள் கூறுவதுதான்.

வெறுமனே ஆயுத பயத்தினால்த்தான் இந்தச் சீர்கேடுகள் இடம்பெறவில்லை என்று கூறுவது முட்டாள்த்தனமானது. உதாரணத்திற்கு, புலிகள் இருந்த காலத்தில், சமூக விடுதலைக்கான போர் நடந்துகொண்டிருந்தது. மொத்த சமூகமுமே விடுதலைக்கான சிந்தனைகளிலும், சமூக மேன்பாடு, பெண்விடுதலை ஆகிய எண்ணங்களிலுமே நிலைத்து இருந்ததினால் சீரழிவுகள் பற்றிய தேவையோ, எண்ணங்களோ இருக்கவில்லை.

ஆனால், புலிகளின் போராட்டம் முடிந்தவுடன், அரச ஆக்கிரமிப்பு ஆரம்பமாக எல்லாம் தலைகீழாக மாறியது. 

தமிழர்களின் போராட்ட எண்ணத்தை, விடுதலைக்கான தேடுதலை வெறும் ராணுவ சக்திகொண்டு அடக்கிவிட முடியாது என்பதை உணர்ந்த சிங்களப் பேரினவாதம், அவர்களின் எண்ணங்களையும், போராட்டத்தின்பாலிருந்த உறுதியையும் சிதறடிக்க, சமூக சீர்கேடுகளை இச்சமூகத்தினிடையே பரப்பி விட்டது.

போதைவஸ்த்து, மதுபானம், சமூக சீர்கேட்டு பழக்க வழக்கங்கள், ரெளடிகள் காலாசாரம் ...இவை எல்லாமே சிங்கள ஆக்கிரமிப்பினால் எமக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள். அவர்களால் தூண்டிவிடப்பட்ட  சமூக சீர்கேடுகள் இன்று பெருநெருப்பாக சுவாலை விட்டு எரிந்துகொண்டிருக்கப், பேரினவாதம் அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு விடயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். சமூக சீர்கேடுகளிலிருந்து முற்றான விடுதலை என்பது கல்வியில் தொடங்கி, தொடர்ச்சியான விழிப்புணர்ச்சியான செயற்பாடுகளினாலேயே கொண்டுவரப்பட முடியும். ஆனால் இதற்கு ஆக்கிரமிப்பு அதிகாரம் ஒத்துக்கொள்ளுமா என்பது வேறுவிடயம்.

3 hours ago, Jude said:

விடுதலை புலிகள் காலத்திலேயே இந்த மக்களுக்கு உறுதியான தலைமைத்துவமும் நிருவாகமும் இருந்தன. ஆனால் அந்த காலத்தில் இந்த மக்களை  பண்பாட்டில் பக்குவம் மிக்க மக்களாக உருவாக்காமல், ஆயுதத்துக்கும் தண்டனைக்கும் பயந்து தவறுகள் செய்யாத அடக்கப்பட்ட விலங்குகள் போன்று கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தார்கள். இன்று அந்த கட்டுப்பாடும் இல்லை, இவர்களை இனியாவது பக்குவம் மிக்க மனிதர்களாக உருவாக்கும் அளவுக்கு இன்றைய  தலைமைத்துவமோ நிருவாகமோ இல்லை. நம்பி இருந்த முதலமைச்சரும்இன்று ஒரு புறம் சுமேந்திரனுடனும் மறுபுறம் டேன்ஸ்வரன் உடனும் வழக்காடுவதில் நேரத்தை செலவழிக்கிறார். சிறி லங்கா இராணுவத்தை நம்பி வாழவேண்டிய நிலையில் ஊனமுற்ற போராளிகளும் வறியவர்களும் இருக்கிறார்கள். இந்த பரிதாபத்துக்கு உரிய இனம் தானாக அழியப் போகிறது.

பண்பாட்டில் பக்குவம் மிக்கவர்கள் இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுவதில்லை என்ற எந்த அடிப்படையும் உலகில் இல்லை.  சிறுவர் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை பெரும்பாலான நாடுகளில் கடுமையாகவே உள்ளது. அது ஒன்றே கட்டுப்படுத்துவதற்கான வழியாக உள்ளது. அரசியலில் அதிகம் மதம் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா இலங்கை பாகிஸ்தான் உட்பட்ட பல இஸ்லாமிய நாடுகளில் சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமாக உள்ளது. இவ்வாறான நாடுகளில் பாலியல் குற்றம் செய்பவர்கள் மதம் சார்ந்த ஆதரவோடு சட்டத்தில் இருந்து தப்பிக்கொள்கின்றார்கள்.  இலங்கையில் தமிழர்களை விட சிங்களவர் மத்தியிலேயே பாலியல் குற்றங்கள் பல பத்து மடங்கு அதிகம்.  சிறுவர்களை குறிவைத்தே பல உல்லாசப்பிரயாணிகள் இலங்கை வருகின்றார்கள். உல்லாசததுறை வருமானததை கருத்திக்கொண்டே நடவடிக்கை எடுக்கப்படும். 

Quote

Analysis of global tourism's role in supporting child sex tourism, with specific emphasis on the case of Sri Lanka, where there are an estimated 30,000 child sex workers.

http://www.monitor.upeace.org/innerpg.cfm?id_article=873

சாதியச் சமூகத்தில் பண்பாட்டின் வளர்ச்சி  என்பது மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே எப்போதும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளகவே பண்பாட்டு வளர்ச்சி என்பது எப்போதும் இருக்கும். இன்றும் அதே நிலையிலேயே இருக்கின்றது. பல்கலைக் கழகங்களில் படித்தாலும் சரி புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்தாலும் சரி இதுதான் இன்றைய நிலை. இன்றைய பல்கலைக் கழகமும் சரி அரசியல் தலமைகளும் சரி இந்த வட்டத்துக்குள்ளாகவே இருக்கின்றார்கள். பாலியல் துஸ்பிரயோகம் எப்போதும் சாதியச் சமூகத்தில் நடந்தே வந்துள்ளது. ஆனால் போராட்ட காலத்தோடு இந்த துஸ்பிரயோகம் சாதிய ஏற்றதாழ்வுகள் அடிப்படையில் நடப்பதில்லை. ஆனால் சிங்கள ராணுவ அதிகார ஆதரவு உட்பட்ட பல்வேறு தளங்களில் இது நிகழ்கின்றது. 

புலிகள் மக்களை அடக்கப்பட்ட விலங்குகள் போல் வைத்திருந்தார்கள் என்பது ஒரு குறுகிய பார்வை. ஏற்கனவே சாதிய வர்க்க ஏற்றதாழ்வுகள் ஊடாக அடக்கப்பட்ட மக்களை போராட்ட காலம் விடுவித்தது. ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் இருந்த பண்பாட்டுத்தளம் உடைபட்ட காலமாகவே போராட்டகாலம் இருந்தது. போராட்டத்திற்கு முற்பட்ட காலத்தில் சமூகம் போராட்ட காலத்தில் சமூகம் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான சமூகம் அதன் பண்பாட்டு நிலை எப்படி இருக்கின்றது என்பது முக்கியம். புலிகள் மீதான விமர்சனம் என்பது வேறு சமூகம் பண்பாடு சார்ந்து புலிகளை குற்றம் சுமத்துவது என்பது வேறு. உங்கள் போல் சிலர் கருத்துக்கள் எப்போதும் எங்கள் சமூகம் பண்பாடு நாகரீகம் சிறந்தது யோக்கியமானது என்ற அணுகுமுறை உள்ளது. அப்படி எக்காலத்திலும் வரலாற்றில் இல்லை. இரவல் காலாச்சாரத்தையுடைய நிரந்தர குறைபாட்டை உடைய சமூகமாகவே எப்போதும் எமது சமூகம் உள்ளது. தனக்குள் தானே இரைதேடும் தனித்துவத்தை தவிர வேறு எந்த ஒரு தனித்துவத்தையும் குறிப்பிட முடியாத சமூகம் இது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் பேராட்ட காலம் ஒன்றே விதிவிலக்கான தனித்துவமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சண்டமாருதன் said:

பண்பாட்டில் பக்குவம் மிக்கவர்கள் இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுவதில்லை என்ற எந்த அடிப்படையும் உலகில் இல்லை.  சிறுவர் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை பெரும்பாலான நாடுகளில் கடுமையாகவே உள்ளது. அது ஒன்றே கட்டுப்படுத்துவதற்கான வழியாக உள்ளது.

சண்டமாருதன், நானும் நீங்களும் பண்பாடு பற்றி வேறுபாடான வரைவிலக்கணங்களை கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. பெரும்பாலான மக்கள் தண்டனை பயந்து மட்டுமே சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதில்லை என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை. பண்பாட்டில் பக்குவம் மிக்க மக்கள் மற்றவர்களை புண்படுத்தும் எந்த செயலையும் செய்யமாட்டார்கள் என்பதே எனது கருத்து. அப்படி புண்படுத்துவதனால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் சாத்தியம் இல்லாது இருந்தாலும் அவர்கள் செய்யமாட்டார்கள். மதங்கள், கல்வி போன்றவை பண்பாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தாலும் இவற்றில் நிறைய போலி வேடதாரிகளும், ஏமாற்று பேர்வழிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பண்பாடு அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

அடக்குமுறையாளர்கள் தமது ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்ட பகுதிகளில் சமூக சீர்கேடுகளை நேரடியாகவோ அல்லது பிணாமிகள் மூலமாகவோ ஊக்குவிக்கிறார்கள்.

1995 ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தைப் பிடித்த பின்பு இராணுவ காவலரண்களுக்கு அண்மையாக மினி சினிமா என்ற பெயரில் ஆபாசப்படங்கள் தாராளமாகவே இளம் தலைமுறை முதல் எல்லோரையும் பார்க்கவிட்டார்கள்.போதாக்குறைக்கு  சோதனை என்ற போர்வையில பாடசாலை மாணவ மாணவிகளின் புத்தகம்களின் இடையே ஆபாச படங்கள் சொருவி விட்டுவிடுவார்கள்.

அத்துடன் அந்த காலகட்டங்களிலேயே இந்தக் காவலரண்களுக்குப் பக்கத்திலேயே போதைப் பொருள்களும் பெருமளவுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது.புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தம்மை முகம் காட்ட முடியாத நேரத்தில்க் கூட பெற்றோருக்கு மறைமுகமாக அறிவித்தல் கொடுத்திருந்தனர்.இருந்தும் சிங்களம் இதில் வென்றுவிட்டது.

மொத்தத்தில் 95 இல் இருந்து விதைத்ததை இன்று சந்தோசமாக அறுவடை செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உண்மை. 

பாலியல் வன்கொடுமைகள், அவற்றுடனான கொலைகள் என்கிற கலாசாரத்தை தமிழ்ப் பகுதிகளில் முதன்முதலில் செய்துகாட்டியவர்கள் ஆக்கிரமிப்பு இராணுவமும் கடற்படையும்தான். கிருஷாந்தி குமாரசுவாமி முதல், புங்குடுதீவி ...அம்பாள் வரை பல தமிழ்ப் பெண்கள் கூட்டாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதில், கிருஷாந்தியைத் தேடித்திரிந்த குற்றத்திற்காக அவரது தாயார், சகோதரர், அயல் வீட்டுக்காரர் என்று பலர் பலியிடப்பட்டார்கள். ஆக, ஆக்கிரமிக்கப்பட்ட காலம்தொட்டு சிங்களப் பேரினவாதம் ஒன்றில் தானே முன்னின்று இவற்றைச் செய்துவருகிறது, அல்லது தமிழ்க் கோடலிகளைக் கொண்டே இவற்றைச் செய்யுமாறு ஊக்குவிக்கிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

விசுவமடுவில் ராணுவக் கேணல் ஒருவரை முன்னாள் புலிகள் ஆரத்தழுவி அழுதார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த முன்னாள்ப் புலிகளை இன்றுவரை நடைபிணங்களாகவும், விசாரணை என்கிற போர்வையில் வருடக்கணக்கில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவருவதும், 2009 மேயில் ஆயிரக்கணக்கில் கண்கள் கட்டப்பட்டு, கைகள் விலங்கிடப்பட்டு நாய்களைப்போல் வன்னியின் கொலைக்களங்களில் ஆசைதீரக் கொன்றுதள்ளியதும், பெண்போராளிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் அடித்தே கொன்றதும், பெண்போராளிகளின்பிணங்களுடன் புணர்ந்ததும், தாம் செய்த மனித இனத்திற்கெதிரான குற்றங்கள் வெற்றிக் கேடயங்களாக கைய்யடக்கத் தொலைபேசிகளில் பதிவுசெய்து கொண்டதும்  இந்தக் கேணலும் அவருடன் இருந்தவர்களும்தான் என்பது இங்கே சிலருக்கு வசத்திக்காக மறக்கப்பட்டாயிற்று.

தயவுசெய்து இந்த ராணுவக் கேணலை இனிமேல் உதாரணமாகக் காட்டவேண்டாம். ஏனென்றால், 99.99% சிங்கள பெளத்த வீரர்களைக் கொண்ட ராணுவத்தில் இணயும் எவனுமே, தமிழர்கள் மேல் இரக்கம் கொண்டு, அவர்களைப் புலிகளிடமிருந்து காப்பாற்ற இராணுவத்தில் இணைவதில்லை. அவர்கள் ஆயிரக்கணக்கில் இணைவதற்கான காரணம், முதலாவது தமிழர்களை அழித்து இலங்கை முழுவதையும் சிங்கள பெளத்த நாடாக மாற்ற வேண்டும்,  இரண்டாவது வருமானம். இது இரண்டுமில்லாமல், வேறு  ஏதும் காரணம் இருந்தால், கேட்க ஆசை, பார்க்கலாம்.

Edited by ragunathan

2 hours ago, Jude said:

சண்டமாருதன், நானும் நீங்களும் பண்பாடு பற்றி வேறுபாடான வரைவிலக்கணங்களை கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. பெரும்பாலான மக்கள் தண்டனை பயந்து மட்டுமே சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதில்லை என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை. பண்பாட்டில் பக்குவம் மிக்க மக்கள் மற்றவர்களை புண்படுத்தும் எந்த செயலையும் செய்யமாட்டார்கள் என்பதே எனது கருத்து. அப்படி புண்படுத்துவதனால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் சாத்தியம் இல்லாது இருந்தாலும் அவர்கள் செய்யமாட்டார்கள். மதங்கள், கல்வி போன்றவை பண்பாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தாலும் இவற்றில் நிறைய போலி வேடதாரிகளும், ஏமாற்று பேர்வழிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பண்பாடு அற்றவர்கள்.

பண்பாடு குறித்து நிச்சயமாக வேறு வரைவிலக்கணங்களை தான் கொண்டிருக்கின்றோம்.

சிறுவர் துஸ்பியோகத்திற்கான அடிப்படையே மதத்தில் இருந்துதான் பூதகரமாக உருவாகியது வரலாறு

Quote

In Canada, the Indian residential school system[nb 1] was a network of boarding schools for Indigenous peoples.[nb 2] The network was funded by the Canadian government's Department of Indian Affairs and administered by Christian churches. The school system was created for the purpose of removing children from the influence of their own culture and assimilating them into the dominant Canadian culture. Over the course of the system's more than hundred-year existence, about 30% of, or around 150,000, Indigenous children were placed in residential schools nationally.[3][4]:2–3 At least 6,000 of these students are estimated to have died as residents.[5][6]

கனடாவின் கத்தோலிக்க சேர்சுகள் நடத்திய பள்ளியில் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டு இறந்த குழந்தைகள் ஆய்வின் படி 6000. இதன் எண்ணிக்கை பயங்கரமாக இருக்கும் என்ற அடிப்படையில் அந்த விசாரணையை 4000 த்தில் இருந்து 6000 என்றளவோடு அரசு நிறுத்திக்கொண்டாது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் மட்டும் பதிவான துஸ்பிரயோக வழக்குகள் 17000 த்துக்கும் மேல். இதில் பொரும்பான்மையானவை இஸ்லாமியப் பள்ளிகளில் மதபோதகர்களால் நிகழ்த்தப்பட்டது. இதில் குறிப்பிடவேண்டியது இக்குற்றத்தை வெளியில் சொல்பவர்கள் 50 வீதத்தையும் எட்டமாட்டார்கள். 

இந்து மதத்தில் இருந்த தேவதாசி முறையானாலும் சாரி சாதிய கட்டமைப்புக்கான சிறுவர் திருமணமானாலும் சரி இன்றைய சிறுவர் பாலியல் வியாபாரத்துக்கான தளத்தை அமைத்துக்கொடுக்கின்றது. 

இலங்கையிலும் பொளத்த பேரினவாத ஆட்சியில் மிகபபெரிய எண்ணிக்கையிலான சிறுவர் பாலியல் வியாபாரம் மறைமுக அரச அனுமதியோடுநடக்கின்றது. 

மதம் என்பதன் இருட்டுப்பக்கங்கள் மிக அதிர்ச்சியானவை. குற்றங்களின் அடிப்படையே அங்கிருந்துதான் உருவாகின்றது. 

மதம் சார்ந்த நெருக்கடிகள் ஒருபுறம் மறுபுறம் இன்றைய பாலியல் தேவைகளுக்கான உல்லாசப்பயணங்கள். பெரும்பாலான தென்னமரிக்க நாடுகள் தாய்லாந்து கம்போடிய இந்தியா இலங்கை போன்ற பல நாடுகளுக்கு சிறுவர்களை குறிவைத்து வளர்ந்த நாடுகளில் இருந்து பிரயாணம் செய்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்.  கல்வி மேன்மையின் ஊடாக அடிப்படை ஊதியத்தில் இருந்து அதிகமாக சம்பாதிக்கக் கூடிவர்களாலேயே இந்த பயணங்கள் சாத்தியமாகின்றது. மேற்குநாடுகளில் சட்டங்கள் தண்டனைகள் கடுமையாக இருப்பதால் அவர்கள் வேறு நாடுகளை நோக்கி இவ்வாறான விசயங்களுக்கு செல்கின்றார்கள்.

வறுமை பொருளாதார நெருக்கடிகள் சிறுவர்களை பாலியல் வன்முறைக்குள் தள்ளுவதற்கான பிரதான காரணமாக இருக்கின்றது. வசதியுள்ளவனுக்கு சிறுவர்கள் இரையாகின்றார்கள். இந்த எண்ணிக்கை உலகளவில் பல நூறாயிரங்களை கடந்து நிற்கின்றது. பணமுள்ளவனுக்கு சிறுவர்களை இரையாக்குவது அவர்களது வாழ்வியில் ஆசைகளுக்கு என்னுமொரு நாகரீகமாகின்றது. 

நீங்கள் சொல்லும் கல்வி பண்பாடு பக்குவம் என்பது ஒரு ஆரோக்கியமான விசயமாக உணர்ந்தாலும் மத சாதீய இறுக்கங்கள் பொருளாதரா ஏற்றதாழ்வுகள் வறுமை ஏகாதிபத்தியம் என அனைத்தையும் மேவி ஒரு நிரந்தர நிலையை எககாலத்திலும் எட்டமுடியாதவை. அதனால் இக்குற்றங்கள் இதனடிப்படையில் குறைக்க முடியாத நிலை தொடர்கின்றது. உதாரணத்திற்கு சட்ட அமுலாக்கலில் இலங்கையில் இருப்பவர்கள் நீதித்துறையானாலும் சரி காவல் துறையானாலும் சரி அரசியல் தலமைகளானாலும் சரி கல்வியில் சிறந்து பண்பாட்டில் சிறந்து இருந்தாலும் அவர்களால் குற்றங்களை தடுக்கும் வல்லமை இருந்தாலும் அதை கண்டும் காணாமலும் விடுகின்றார்கள். அதனாலேயே சிறுவர் பாலியல் தொழிலாளர் எண்ணிக்கை உயர்கின்றது. இங்கே கல்வி பண்பாடு எல்லாம் என்னவாயிற்று ? 

புலிகள் ஒரு சட்டத்தை அமுல் படுத்தக் கூடிய நிலையில் இருந்தபோது அதை எந்த பாகுபாடும் அனுசரிப்பும் இன்றி அமுல்படுத்தினார்கள். அமுல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். அதுவே குற்றங்களை தடுத்தது.  

உங்கள் பதிலுக்கு நன்றிகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.