Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல்

Featured Replies

பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல்

 

 
 

பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல்

பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார்.

நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவமும் தேர்தலில் மோசடி செய்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன; ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறையும், ராணுவமும் மறுக்கின்றன.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை, இந்தியா-சீனாவுடன் உறவு, ராணுவ அதிகாரம் ஆகியவை பற்றியும், இந்தியப் பிரதமர் மோதி பற்றியும் இம்ரான்கானின் கொள்கைகள் என்ன, அவரது ஆளுமை வளர்ந்தது எப்படி என்று பார்ப்பது சுவாரசியமானது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களில் போட்டியிட்ட மூன்று முக்கிய கட்சிகளுள் ஒன்று இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ).

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான், நாட்டில் மிகவும் பிரபலமானவர், வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்ததற்காக அனைவராலும் பரவலாக நினைவுகூரப்படுபவர் இம்ரான்கான். அதுமட்டுமல்ல, நாட்டின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக இவர் கருதப்படுகிறார்.

1996ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த இம்ரான்கான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஆனால் 2013 தேர்தலில் தான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உருவானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி.

ராணுவத்தின் மறைமுகமான ஆதரவு எப்போதுமே இம்ரான்கானுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்றும், பிடித்தமானவர் என்றும் அவரது அரசியல் போட்டியாளர்கள் குறிப்பிடுவது வழக்கம் என்றாலும், தனது கட்சியின் பிரபலத்திற்கு ராணுவத்தின் ஆதரவு இல்லை என இம்ரான்கான் கூறுகிறார்.

2018 தேர்தல்களில் ராணுவம் தனது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் மறுக்கிறார். முழுநேர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு, பிரிட்டனில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததற்காக அனைவராலும் அறியப்பட்டார் இந்த பிரபல தலைவர்.

மூன்று முறை திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையில், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுகின்றன.

தற்போது, மதப்பற்று கொண்ட, பிரபல தலைவராக திகழ்கிறார் இம்ரான்கான்.

65 வயது இம்ரான்கான் தனது நலப்பணிகளுக்காகவும் அறியப்படுகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது தாயின் பெயரில் இலவச புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அவர் கட்டினார்.

இம்ரான்கானின் தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலுக்கு எதிரான முழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தவர்களில் இம்ரான்கானும் ஒருவர்.

நவாஸ் ஷெரிஃபுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததிலும், பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக அவர் சிறைக்கு சென்றதிலும் இம்ரான்கானின் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது.

வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சித்துவரும் இம்ரான்கான், அதுவே பாகிஸ்தானின் நிர்வாகம் ஒழுங்கற்று இருப்பதற்கும், பலவீனமான நிர்வாக அமைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார்.

நாட்டின் அரசியலில் ராணுவத்தின் பங்கை பி.டி.ஐ தலைவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அரசியல் தலைவர்களுக்கும், ராணுவத் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளை முறையாக நிர்வகிப்பதுதான் சரியான நிர்வாகம் என்று இம்ரான்கான் கூறுகிறார்.

“செயல்படும், நன்மைகளை செய்யும் ஜனநாயக அரசுகளை கொண்டிருப்பது பலம். பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு இருக்கிறது. ஏனெனில் நாங்கள் மோசமான அரசாங்கங்களை பார்த்திருக்கிறோம்.

நான் அதை நியாயப்படுத்தவில்லை, ஆனால் வெற்றிடம் ஒன்று இருந்தால் அதை எதாவது நிரப்பித்தானே ஆகவேண்டும்” என்று இம்ரான்கான் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான உறவுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய இம்ரானின் கருத்துகள் பிரபலமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கைகளே காரணம் என்று இம்ரான்கான் குற்றம் சாட்டுகிறார்.

“பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிப்பதுதான் நரேந்திர மோதி அரசின் கொள்கை என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் அவர்கள் காஷ்மீரில் செய்துவரும் அனைத்து காட்டுமிராண்டித்தனத்திற்கும் பாகிஸ்தானையே குற்றம் சாட்ட விரும்புகிறார்கள்” என டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.
நன்றி : பிபிசி தமிழ்

http://www.samakalam.com/செய்திகள்/பாகிஸ்தானின்-பிரதமராகும/

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா? - என்ன சொல்கிறார் கபில்தேவ்?

 
கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாகிஸ்தான் பொதுதேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வியாழக்கிழமை மாலை ஏறத்தாழ பாதியளவு முடிவுகள் வெளியான நிலையில், தனது கட்சி ஆட்சியமைக்கப் போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இம்ரான்கானின் கட்சி முன்னிலை வகித்தாலும், அறுதிப் பெரும்பான்மை பெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவுகிறது.

இந்நிலையில், இம்ரான்கான் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணியில் விளையாடிய வீரர்கள், அவருடனான தங்களது நினைவுகள் குறித்தும், இம்ரானின் தேர்தல் வெற்றி குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிரிக்கெட் சாதனைகள் மற்றும் பங்களிப்பில், இம்ரான்கானுக்கு சமமாக கருதப்படும் கபில்தேவ் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இம்ரானின் வெற்றி குறித்து நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அவருடன் நீண்ட நாட்கள் நாட்கள் விளையாடியவன் என்ற முறையில், பாகிஸ்தானின் பிரதமராக அவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது'' என்றார்.

கிரிக்கெட் விளையாடிய காலத்தில் மிகவும் பாராட்டப்பட்ட இம்ரானின் தலைமைப்பண்பு, ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தளவு உதவியாக இருக்கும் என்று கேட்டதற்கு, ''அவர் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை நிரூபிக்க நாம் அவருக்கு தேவையான காலத்தை கொடுக்க வேண்டும். இம்ரான் சிறப்பாக பங்களிப்பார் என்று நான் நம்புகிறேன்'' என்று கபில் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேர்தல் வெற்றிக்காக இம்ரானுக்கு கபில்தேவ் வாழ்த்து தெரிவித்தாரா என்று கேட்டதற்கு, ''பிபிசி மூலமாகவே இம்ரானுக்கு தற்போது நான் வாழ்த்து அனுப்புகிறேன்'' என்றார் கபில்தேவ்.

''ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான்கான், ஒரு நாட்டின் பிரதமராக உருவெடுத்திருப்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் பெருமை தரும் '' என்று கபில்தேவ் கூறினார்.

கபில்தேவ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகபில்தேவ்

கிரிக்கெட் கேப்டன்; நாட்டின் பிரதமர் - என்ன வித்தியாசம்?

''இம்ரான் கேப்டனாக இருந்தபோது அணியில் யார் இருக்க வேண்டும், இருக்க வேண்டாம் என அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்தார்'' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனீந்தர்சிங் நினைவுகூர்ந்தார்.

ராணுவத்தை மீறி இம்ரான் எப்படி சாதிப்பார்?படத்தின் காப்புரிமைAFP

அவர், மேலும் கூறுகையில், ''ஆனால், கிரிக்கெட்டில் 15, 16 பேருக்கு மட்டும்தான் அவர் தலைவர். அவர்களை நிர்வகித்தால் மட்டும் போதுமானது. ஆனால், ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பது முற்றிலும் மாறுபட்டது''.

''அது மட்டுமல்லாமல் ராணுவம் மிகவும் பலமாக இருக்கும் பாகிஸ்தானில், அவர்களை மீறி, அவரது ஆட்சி அதிகாரம் எந்தளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று மனீந்தர்சிங் தெரிவித்தார்.

ராணுவத்தை மீறி இம்ரான் எப்படி சாதிப்பார்?

''கிரிக்கெட் கேப்டனாக அதிக உத்வேகத்துடன் இருந்த இம்ரான்கான், ஆட்சி பொறுப்பில் எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக உள்ளது. அவரது சமரசம் இல்லாத தலைமைப்பண்பு மற்றும் அணுகுமுறையை இம்ரானால் தொடர்ந்து காப்பாற்ற முடியுமா என்று போகப்போகத் தான் தெரியும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'' கிரிக்கெட்டில் தான் முடிவெடுத்ததை செயல்படுத்த அவருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், பிரதமராகி அனைத்து முடிவுகளையும் அவரால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு அவருக்கு அதிகாரம் இருக்குமா? கிரிக்கெட்டில் நாம் பார்த்த இம்ரானின் அணுகுமுறை இனியும் அவ்வாறே தொடரும் என்பதை எதிர்பார்க்கமுடியாது'' என்று மனீந்தர்சிங் மேலும் கூறினார்.

கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா? - என்ன சொல்கிறார் கபில்தேவ்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இம்ரான் விளையாடிய காலகட்டத்தில் பல டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய மதன்லால்,''அவரது தலைமைப்பண்பு மற்றும் அணுகுமுறை நிச்சயம் அரசியலில் இம்ரானுக்கு பலன் அளிக்கும். எப்போதும் நேர்மறையாக சிந்திக்கும் இம்ரான்கானுக்கு, அந்த எண்ணம் கைகொடுக்கும்'' என்று கூறினார்.

''கடும் முயற்சி மேற்கொண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்டிய புற்றுநோய் மருத்துவமனை, அவருக்கு பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை பெற்றுத் தந்திருக்கலாம்'' என்று மதன்லால் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா?படத்தின் காப்புரிமைPTI

இந்திய அணியில் இம்ரானின் நெருங்கிய நண்பர்கள் யார்?

'' அவர் பலரிடமும் நட்பாக பழகுவார். குறிப்பாக கூறவேண்டுமானால், சுனில் கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் ஆகிய இருவரும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள்'' என்று மதன்லால் கூறினார்.

https://www.bbc.com/tamil/sport-44962549

  • தொடங்கியவர்

ஆழமான புற்றுநோயை நீக்குவாரா ஆல் ரவுண்டர்?

 

 
Imran%20Khan

எதிர்பாராத வகையில் வெற்றி சிக்ஸரை அடித்திருக்கிறார் இம்ரான் கான். அம்பயர் நாட் அவுட் என்று அவருக்கு சாதகமாக தவறான தீர்ப்பு கொடுத்து விட்டார் என்று உரத்து ஒலிக்கின்றன எதிர்க்கட்சிகளின் குரல்கள்.

சில போட்டிகளில் பந்து வீசுவதற்கு முன்பாக பந்தின் ஒரு பகுதியில் சோடா பாட்டில் மூடியால் தேய்த்து பந்தை உருமாற்றியதாக பல ஆண்டுகளுக்குப் பின் இம்ரான் கான் ஒத்துக் கொண்டது உண்டு. இந்த நேர்மையை அரசியல் களத்தில் அவரிடம் எதிர்பார்க்க முடியாது.

 
 

நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம் (பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்) - இதுதான் இம்ரான் கான் 1996-ல் தொடங்கிய அமைப்பு. இது முதலில் ஒரு சமூக அரசியல் இயக்கமாகத்தான் உருவெடுத்தது. 1999-ல் அரசியல் கட்சியாக அறிவித்துக் கொண்டது. 2002 தேர்தலில் தனது சொந்த மண்ணான மியான்வாலி தொகுதிக்கு இம்ரான் கான் எம்.பி. ஆனார்.

‘சிந்தனைச் சுதந்திரம் தேவை, வருமான வரி இருக்கக் கூடாது, மதத்தை அடிப்படையாக் கொண்ட பாரபட்சம் இருக்கக் கூடாது’. இவற்றை அந்தக் கட்சி முன்

வைத்தது. 2002 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைப் பிடித்த இம்ரானின் கட்சி 2008 தேர்தலை புறக்கணித்தது. ஆனால் 2013-ல் 75 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மொத்த பாகிஸ்தான் அரசியலையும் இம்ரான் கான் தொடர்ந்து குறை கூறிவருகிறார். ஊழல் நிறைந்த, திறமையற்ற ஆட்சிகளை மட்டுமே பாகிஸ்தான்

இதுவரை கண்டிருக்கிறது என்றார். முகம்மது இக்பாலின் (தனி பாகிஸ்தானுக்கான இயக்கத்தை தீவிரமாக எடுத்துச் சென்றவர்) பாதையே சிறப்பானது எனும்

இம்ரான் கான், ஜின்னாவின் ‘இஸ்லாமிய ஜனநாயகக் கலாச்சாரத்தை’ பின்பற்றுவோம் என்றும் கூறுகிறார்.

இம்ரானின் முன்னாள் மனைவி ஜெமீமா, தெற்கு பஞ்சாபில் உள்ள உச் என்ற இஸ்லாமியக் கல்வி மையத்தின் கூரையிலிருந்த பழமையான 397 ஓடுகளை பிரிட்டனிலுள்ள தனது தாய்க்கு அனுப்ப முயற்சித்தார் என்று பாகிஸ்தான் சுங்கத் துறை 1999-ல் குற்றம் சுமத்தியது. “இது அரசியல் சதி” என்று அறிக்கை விட்டது இம்ரானின் கட்சி.

கிரிக்கெட் வாழ்க்கை

13 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் இம்ரான் கான்.1992-ல் கிரிக்கெட் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியபோது இவர்தான் அந்த அணியின் கேப்டன், வேகப்பந்து வீச்சாளர், அற்புதமான ஆல்ரவுண்டர். லாகூரில் படித்த இவர்,இங்கிலாந்திலுள்ள ராயல் கிராமர் ஸ்கூல் ஓர்செஸ்டரில் மேற்கல்வி பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

1971-ல் பர்மிங்ஹாமில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்தான் இவர் முதலில் களம் இறங்கினார். குறிப்பிடத்தக்க அளவுக்கு இவரது ஆட்டம் அப்போது இல்லை.

1974-ல் ப்ரூடன்ஷியல் கோப்பை பந்தயங்கள்தான் இம்ரானின் முதல் ஒரு நாள் போட்டிக்கு தொடக்கமாக அமைந்தது. 1976-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் ஆடிய அபாரமான ஆட்டம் அவரை மிகவும் கவனிக்க வைத்தது. 1982-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார். 28 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் வெற்றியை, இம்ரானின் தலைமையில், பாகிஸ்தான் சுவைத்தது.

தனது முகவாயில் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்ரான் கான் 2 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார். 1987-ல் மீண்டும் களத்தில் இறங்கி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். 1987-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனினும் அதற்கு அடுத்த வருடமே பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் விளையாடத் தொடங்கினார். 1992-ல் கிரிக்கெட்டிலிருந்து (மீண்டும்) ஓய்வு பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 3807 ரன்களும், 382 விக்கெட்களும் அவர் கணக்கில் இருந்தன. ஒரு நாள் போட்டியில் 3709 ரன்களும், 182 விக்கெட்களும் இருந்தன.

மிகச்சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பதற்காக விருதுகள் பெற்றவர் இம்ரான் கான். சர்வதேச கிரிக்கெட் குழுவில் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற ஒளி வட்டத்திலும் இவர் சேர்க்கப்பட்டார். சிறந்த பாகிஸ்தான் பிரதமர் என்ற பெயரை இவர் வாங்குவாரா?

திருமண வாழ்க்கை

தனி வாழ்வில் பல விமர்சனங்களுக்கு உள்ளானவர் இம்ரான். ஒரு ப்ளே-பாய் பிம்பமும் அவருக்கு உண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த யூதரான ஜெமீமா கோல்டுஸ்மித்தை மதம் மாற்றி, 1995-ல்திருமணம் செய்து கொண்டார். சுலைமான்,காசிம் என்ற இரண்டு மகன்கள். ஒன்பது வருட மணவாழ்வு விவாகரத்தில் முடிந்தது.

இதையடுத்து, பி.பி.சி.யில் பணியாற்றிய பிரிட்டிஷ் – பாகிஸ்தான் வம்சாவளியில் பிறந்த ரேஹம் கான் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான். அவர் குடும்பத்திலேயே இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஒரு வருடத்துக்குள்ளாகவே விவாகரத்து நடைபெற்றது. பின்னர் பிப்ரவரி 2008-ல் தனது ஆன்மிக குரு என்று அதுவரை கூறிக் கொண்டிருந்த புஷ்ரா மணிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான்.

இதனிடையே, அமெரிக்காவிலுள்ள பிரபல மாடல் அழகி சீட்டா ஒயிட் என்பவர் இம்ரான் கானுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், தனது மகள் டிரியனின் தந்தை இம்ரான் கான் என்றும் கூறினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதை மறுத்தார் இம்ரான் கான். சீட்டா வழக்கு தொடர்ந்தார். ஒருவழியாக சீட்டாவுடன் தனக்கு தொடர்பு இருந்ததை ஒப்புக் கொண்டாலும் டிரியன் தன் மகள் அல்ல என்று சாதித்தார். ‘மரபணு சோதனைக்கு அவர் உடன்பட்டு இதை நிரூபிக்கட்டும்’ என்று சவால் விட்டார் சீட்டா. இம்ரானின் அடுத்த அமெரிக்க பயணத்தின்போது சீட்டாவையும் டிரியனையும் இம்ரான் சந்தித்தார். அதற்குப் பிறகு இந்த விஷயம் தலைப்புச் செய்தியாகவில்லை.

புற்றுநோயால் தன் தாய் இறக்க,லாகூரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையை இம்ரான் கான் எழுப்பினார். ஏழைகளுக்கு அதில் இலவசச் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

தேர்தலுக்கு முன்பு இம்ரான் கட்சியுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி விரும்பியது. ஆனால் இம்ரான் ஏற்கவில்லை. தேர்தலுக்குப் பிறகாவது, பாகிஸ்தான் மக்கள் கட்சி அளிக்கும் ஆதரவை ஏற்று கூட்டணி ஆட்சியை இம்ரான் கான் அமைப்பாரா? அந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் ‘ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு’ எனும் புற்றுநோயை குணப்படுத்துவாரா? அதற்கு அந்த நாட்டு ராணுவம் சம்மதிக்குமா? காலம் விரைவிலேயே இந்தக் கேள்விகளுக்கான விடை கொடுக்கும்.

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article24528664.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

எப்படி வென்றார் இம்ரான் கான்? - பாகிஸ்தானின் புதிய அரசியல் பாதை

 

 

 
25THIMRANjpg

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ் தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

 
 
 
 

இதில், பிடிஐ 86 இடங்களில் வெற்றி பெற்று 34 இடங்களில் முன்னிலை வகித்து 120 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் நவாஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று 18 இடங்களில் முன்னிலை வகித்தது. பிபிபி 18 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவை வெளியிடவில்லை.

புதிய தலைவர்

 

5645148033569jpg
 

எனினும் வேறு சில கட்சிகள் ஆதரவுடன் இமரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகி விட்டது. இதன் மூலம் 30 ஆண்டுளாக கோலோச்சி வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் புட்டோ குடும்பம் இல்லாத புதிய நபர் தலைமை பொறுப்புக்கு வருகிறார்.

தேர்தலுக்கு முன்பே பாகிஸ்தான் ராணுவ தலைவர் குவாமர் ஜாவேத் பாஜ்வாவை புகழ்ந்து விட்டார் இம்ரான் கான். இதன் மூலம் பதவியேற்ற பின் அவர் எந்த வழியில் பயணிப்பார் என்பதை கோடிட்டு காட்டி விட்டார்.

அரசியலில் தனக்கு எந்த பங்களிப்பும் இல்லை என பாஜ்வா தொடர்ந்து கூறி வந்தாலும், பாகிஸ்தான் நிர்வாகத்தில் அந்த நாட்டு ராணுவத்தின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தேர்லை நடத்துவதற்கு கூட பாகிஸ்தான் ராணுவம் எந்த அளவில் உதவி புரிந்தது என்பதையும் அரசியல் நோக்கர்கள் குறிப்பட்டுச் சொல்கின்றனர்.

நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்ட பின்பே, பாகிஸ்தான் அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பது கணிக்கப்பட்ட ஒன்று தான், வாரிசு அரசியல், ஊழல், மோசமான நிர்வாகம் போன்ற காரணங்களால் நவாஸ் மற்றும் புட்டோ குடும்பத்தின் மீதான வெறுப்பு மக்களிடம் அதிகரித்து இருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தற்போதைய அரசியல்வாதிகளால் முடியாது என்ற முடிவுக்கு தீவிரவாத அமைப்புகள் ஏற்கெனவே வந்து விட்டன.

PAKISTAN1jpg
 

தீவிரவாத ஆதரவு

இந்த தேர்தலில் பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் இந்தியர்களை பொறுத்தவரை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மிக முக்கியமானவை. இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய அரசியல்வாதி ஒருவர், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு தேவை .

ஹர்கத்துல் முஜாகிதீன் தலைவர் பஸூலூர் ரஹ்மானை, தேர்தலுக்கு முன்பே இம்ரான் கான் கட்சியினர் ஆதரித்து பேசத் தொடங்கினர். இந்திய சிறையில் இருந்த மசூத் அஸா விடுவிப்பதற்காக 1999-ம் ஆண்டு காபூலுக்கு விமானத்தை கடத்தியவர் பஸூலூர் ரஹ்மான்.

இதுபோலவே சன்னிப் பிரிவு தலைவரும் சுன்னத் வால் ஜமாத் தலைவருமான அகமது லுதின்வியின் அமைப்பு தடை செய்யப்பட்டு, பின்னர் அந்த தடை ராணுவத்தின் தலையீட்டால் நீக்கப்பட்டதும் மிக முக்கியமானது.

இதுபோன்ற தலைவர்களின் ஆதரவும் இம்ரான் கானை முன்னிலை படுத்தியது. இதனால் இம்ரான் கானை பொறுத்தவரை அவரது செயல்பாடு, இந்தியா விஷயத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

காஷ்மீர் பிரச்சினை

காஷ்மீர் பிரச்சினையை சுமூகமாக, பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இந்தியா தரப்பில் ஒரு அடி முன்னோக்கி நகர்ந்தால், நாங்கள் இரு அடிகள் முன்னோக்கி வருவோம் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவரும், பிரதமராகப் பதவி ஏற்க உள்ள இம்ரான் கான் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினையை அவர் எழுப்பியுள்ளதன் மூலம் அவர் எநத அளவிற்கு சுதந்திரமாக செயல்பட அங்குள்ள தீவிரவாத அமைப்புகள் அனுமதிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. நவாஸ் ஷெரீப் காலத்திலேயே, காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் அதனை ஏற்க இந்தியா தயாராக இல்லை. ஒருபுறம் தாக்குதல், மறுபுறம் பேச்சுவாரத்தை என்ற இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாதிகளின் ஆதிக்கம் என இந்தியா சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை இம்ரான் கான் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்தே இந்தியாவின் அடுத்த நகர்வு இருக்கும்.

https://tamil.thehindu.com/world/article24528795.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாà®à®¿à®¸à¯à®¤à®¾à®©à®¿à®©à¯ பிரதமராà®à¯à®®à¯ à®à®®à¯à®°à®¾à®©à¯ à®à®¾à®©à¯ பறà¯à®±à®¿à®¯ à®à®°à¯ à®à®²à®à®²à¯

அதுசரி உவர் பொம்புளை விசயத்திலை கொஞ்சம் வீக் எண்டு கதைக்கிறாங்கள் உண்மையோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பாà®à®¿à®¸à¯à®¤à®¾à®©à®¿à®©à¯ பிரதமராà®à¯à®®à¯ à®à®®à¯à®°à®¾à®©à¯ à®à®¾à®©à¯ பறà¯à®±à®¿à®¯ à®à®°à¯ à®à®²à®à®²à¯

அதுசரி உவர் பொம்புளை விசயத்திலை கொஞ்சம் வீக் எண்டு கதைக்கிறாங்கள் உண்மையோ? :cool:

வீக் எண்டு ஆர் சொன்னது

ஆள் படு ஸ்ரோங். 

அப்ப ஆள் சும்மா ஸ்மாற்றா இருந்ததால  பெட்டையள் தான் பின்னால, முன்னால திரிஞ்சவையள்.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா எல்லாம் எனக்கு கண பிள்ளையள் இருக்கினம் எண்டு, கிட்டடில சொன்னவர் எல்லோ.

எண்ட பிள்ளைகளின்ட தேப்பன் பாகிஸ்தான் பிரதமராவது மகிழ்ச்சி எண்டுறா, இவர் டிவோஸ் பண்ணிண கோல்ட்சிமித் என்ற லண்டன் யூத கோடீஸ்வரர் மகள் ஜெமேமா.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

கிரிக்ெகட் வீரனின் அரசியல் விஸ்வரூபம்

 
 
pg-02.1-jpg.jpg?itok=lvG2yuwL

பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுள்ள இம்ரான் கானுக்கு உலகளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்த இவர், பாகிஸ்தான் நாட்டிற்கே ஒட்டுமொத்த தலைவனாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றார்.

பெர்மிங்காமில் 1971ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக தமது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார் இம்ரான் கான்.

1992ல் மெல்பனில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இம்ரான் கானின் பங்களிப்பு கணிசமானது.

கிரிக்கெட்டில் சம்பாதித்த பணத்தை தாம் மட்டும் அனுபவிக்காமல் பொதுமக்களுக்காகவும் செலவிட முன்வந்தார். இந்த முயற்சியின் முதற்படியாக1991ஆம் ஆண்டில், Shauk at khanum என்ற தமது தாயாரின் பெயரில் புற்றுநோய் சிகிச்சைக்கான அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக பணம் இல்லாமல் தவித்த ஏழைகள் பயன்பெற்றனர்.

கிரிக்கெட் களத்தில் சகலதுறை வீரராக விளையாடி பல சாதனைகளைப் படைத்த இம்ரான், 1997ஆம் ஆண்டு அரசியல் களத்திலும் கால் பதித்தார். பாகிஸ்தான் டெஹ்ரீக் ஈ இன்ஸாஃப் என்ற கட்சியைத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திலேயே ஆகச்சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக வலம் வரத் தொடங்கினார்.pg-02-2.jpg

 

2002 நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய இம்ரான், மியன்வாலி தொகுதியில் வெற்றி பெற்று, தாம் முழு நேர அரசியல்வாதி என்பதை உலகிற்கு வெளிக்காட்டினர்.

 

 
 

நவாஸ் ஷெரீஃபிற்கு எதிராக 2013ஆம் ஆண்டில் முதன்முறையாக குரல் எழுப்பினார். அப்போது, நயா பாகிஸ்தான் சொல்யூஷன் என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கி நவாஸின் முஸ்லிம் லீக் கட்சிக்கு சவால் விடுத்தார். இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், இம்ரானின் கட்சிக்கு மூன்றாமிடம் கிடைத்தது.

தோல்வியைக் கண்டு துவண்டு போகாத இம்ரான் இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். அவென்ஃபீல்டு வழக்கில் சிக்கிய நவாஸ் சிறைவாசம் அனுபவித்து வருவதால், இம்ரான் கானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

எதிர்த்தரப்பு கட்சி பலவீனமடைந்ததை சரியாக பயன்படுத்திக்கொண்ட இம்ரான், தமது காலை ஆழமாக ஊன்றி, பாகிஸ்தான் அரசியல் அரங்கில் ஆலமரமாக விருட்சம் பெற்றுள்ளார்.

ஒருபுறம், முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் மகன் பில்வால், மறுபுறம், நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷேபாஸ் என இருபெரும் வேட்பாளர்களை முந்துவதற்கு இம்ரான் எடுத்த சிரத்தை சொல்லி மாளாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த இம்ரான், இப்போது பாகிஸ்தான் நாட்டிற்கே தலைவராக விஸ்வரூபம் எடுத்துள்ளார். சிறந்த எழுத்தாளராகவும் திகழும் இவர் கூடிய விரைவில் தமது வாழ்க்கை வரலாற்றை தாமே முன்வந்து எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகலதுறை ஆட்டக்காரரான இம்ரானின் ஓட்ட வேட்டை பிரதமர் என்ற பதவியுடன் பாகிஸ்தான் அரசியல் களத்திலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vaaramanjari.lk/2018/07/29/கட்டுரை/கிரிக்ெகட்-வீரனின்-அரசியல்-விஸ்வரூபம்

  • தொடங்கியவர்

பாக்கிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் வெற்றி : விடிவெள்ளியா? கானல் நீரா?

S-03Page1Image0001-2db9b0a63102a23e997362d9392657c30e605f15.jpg

 

அதனை ஜன­நா­யக தேசம் என்­பார்கள். அது விசித்­தி­ர­மான ஜன­நா­யகம்.

ஜன­நா­யகம் என்றால், நீதி­யான நேர்­மை­யான தேர்தல் மூலம் மக்கள் அர­சாங்­கத்தைத் தேர்ந்­தெ­டுப்­பார்கள்.இந்­நாட்டில் தேர்­தல்கள் நடை­பெறும். ஆனால், நீதி­யா­ன­தாக இருக்­காது. மக்கள் பிர­தி­நி­திகள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார்கள். அவர்கள் ஆட்­சியைப் பூர்த்தி செய்ய வாய்ப்­பில்லை. இரா­ணுவப் புரட்சி நடக்கும். இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்றும்.

ஜன­நா­யகம் என்றால், சட்­ட­வாட்சி இருக்க வேண்டும். சட்­ட­திட்­டங்கள் சக­ல­ருக்கும் சம­மான முறையில் அமு­லாக்­கப்­பட வேண்டும்.இந்­நாட்டில் சட்­ட­வாட்சி பற்றி பேசப்­படும். ஆனால், குடும்ப ஆட்சி நிலவும். அதற்கு சட்­ட­திட்­டங்கள் வளைந்து கொடுக்கும். செல்­வாக்கு மிக்­க­வர்கள் கோலோச்­சு­வார்கள். அரா­ஜகம் செய்­வார்கள். ஊழல் புரி­வார்கள். அவர்­களை சட்டம் பாது­காக்கும்.

இது தனி­யொரு தேச­மாக இருந்­தாலும், இதற்­கு­ரிய குண­வி­யல்­புகள் தெற்­கா­சிய நாடு­க­ளுக்குப் பொது­வா­னவை. இவை ஜன­நா­யக மர­பு­களை கேலிக்கு உள்­ளாக்­கு­பவை. இருந்­த­போ­திலும், இந்­நா­டு­களைச் சேர்ந்த மக்கள் ஜன­நா­யகம் பற்றி பேசு­வார்கள். தமக்­கொரு விடிவு வரு­மென்ற நம்­பிக்­கை­யுடன் மீண்டும் தேர்­தலில் வாக்­க­ளிப்­பார்கள். தலை­வர்­களைத் தெரிவு செய்­வார்கள். ஏமா­று­வார்கள். மீண்டும் மீண்டும் ஏமா­று­வார்கள்.

இது­வொரு சுழலும் சக்­க­ர­மாக மாறி மாறி நிகழும். இந்தச் சக்­க­ரத்தில் பாகிஸ்­தா­னிய தேசம் விதி­வி­லக்கு அல்ல என்­பது மீண்டும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தா­னிய மக்கள் ஜன­நா­யகம் குறித்த எதிர்­பார்ப்­பு­க­ளுடன் புதிய தலை­வரைத் தெரிவு செய்­துள்­ளார்கள். குடும்ப ஆட்­சியின் கடைசி எச்­சங்­க­ளாகத் திகழ்ந்த தலை­வர்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஊழல் மோச­டி­க­ளுக்கு வாக்­குகள் பதில் அளித்­தி­ருக்­கின்­றன.

தமது நாட்­டுக்கு உலகக் கோப்­பையை வென்று கொடுத்த கிரிக்கட் நட்­சத்­தி­ரத்தை பாகிஸ்­தா­னிய வாக்­கா­ளர்கள், அர­சியல் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக பரி­ண­மிக்கச் செய்­துள்­ளனர்.

நடந்து முடிந்த பொதுத் தேர்­தலில் இம்ரான் கானுக்கு கிடைத்த வெற்றி, பாகிஸ்­தா­னிய வாக்­கா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிகப்­பெ­ரி­யது. இவ­ரது தெஹ்­ரீக்கி இன்சாப் கட்சி (PTI) என்­பது பாரம்­ப­ரிய கட்சி அல்ல. அதனை பாகிஸ்­தா­னிய மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் முத­லான பாரம்­ப­ரிய கட்­சி­க­ளுடன் ஒப்­பிட முடி­யாது.

இருந்­த­போ­திலும், பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சி­களை மண்­கவ்வச் செய்து, மக்கள் PTIஐ வெற்றி பெறச் செய்­தி­ருக்­கி­றார்கள் என்றால், அதற்கு மக்கள் மத்­தி­யி­லான மாற்றம் குறித்த எதிர்­பார்ப்புத்தான் காரணம்.

இந்த மாற்றம் சாத்­தி­யப்­பட்டு பாகிஸ்­தானில் முழு அள­வி­லான ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­ப­டுமா?அல்­லது மீண்டும் பாகிஸ்­தா­னிய தேசம் அரா­ஜக நிலைக்கே திரும்பி விடுமா? என்­பது சம­கா­லத்தின் முக்­கி­ய­மான கேள்வி.

இந்தக் கேள்­விக்கு விடை­காண கடந்த காலத்தைப் பற்­றியும் சற்று ஆராய வேண்டும்.

பாகிஸ்­தானின் அர­சி­யலில் தவிர்க்க முடி­யாத மூன்று சக்­திகள் இருந்­தன. பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சி­க­ளான பாகிஸ்தான் முஸ்லிம் மக்­கள்­கட்சி , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகி­யவை முத­லா­வது சக்­திகள். பாகிஸ்­தா­னிய இரா­ணுவம் என்­பது மூன்­றா­வது சக்தி.

பாகிஸ்தான் மக்கள் கட்­சியை பூட்டோ குடும்பம் வழி­ந­டத்­தி­யது. இது பூட்டோ குடும்­பத்தின் பரம்­பரைச் சொத்து. ஸூல்­பிக்கார் அலி பூட்டோ, அவ­ரது புதல்வி பெனாசிர் பூட்டோ, பெனா­சிரின் கணவர் ஆஸிவ் அலி சர்­தாரி என்ற வரி­சையில் சக­லரும் நாற்­காலி சுகம் கண்­ட­வர்கள்.

மறு­பு­றத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்­சியின் நவாஸ் பிரிவுத் தலைவர் நவாஸ் ஷெரீப் மூன்று தட­வைகள் பிர­த­ம­ராக பதவி வகித்­தவர்.

இவற்றில் எந்தக் கட்சி ஆட்­சிக்கு வர­வேண்டும் என்­பதைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாகத் திகழ்ந்­தது இரா­ணு­வமே. சில சம­யங்­களில், மக்கள் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஆட்­சி­யா­ளர்கள் இரா­ணுவ சதிப்­பு­ரட்­சியால் கவிழ்க்­கப்­ப­டு­வார்கள். தொடர்ந்து இரா­ணுவ ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­படும்.

தற்­போது ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக சிறை­வாசம் அனு­ப­விக்கும் நவாஸ் ஷெரீப்பும் இரா­ணு­வத்தின் துணை­யுடன் ஆட்­சி­பீடம் ஏறி­யவர் தான். எனினும், பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்ட ஊழல் கார­ண­மாக சிறை செல்ல நேர்ந்­தது.

இன்று இரா­ணுவம் நவாஸ் ஷெரீப்பின் கட்­சியை புறந்­தள்ளி, இம்ரான் கானை ஆத­ரித்து அவ­ரையே ஆட்­சி­பீ­டத்தில் அமர்த்த முனைந்­தி­ருக்­கி­றது.

இரு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர், சிறி­ய­தொரு கட்­சி­யாக அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்த பாகிஸ்தான் தெஹ்­ரீக்கி இன்சாப் கட்சி, இன்று பாரா­ளு­மன்­றத்தில் மிகப்­பெ­ரிய கட்­சி­யாக மாறி­யுள்­ளது.

இந்த வெற்றி இம்­ரா­னுக்குக் கிடைத்த வெற்றி எனலாம். ஜன­நா­ய­கத்­திற்குக் கிடைத்த வெற்­றியா என்­பது கேள்விக் குறியே.

பொதுத் தேர்­தலில் பெரும் வாக்­கு­மோ­ச­டிகள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக எதிர்க்­கட்­சிகள் சாடு­கின்­றன. தேர்தல் முறை­யாக நடக்­க­வில்­லை­யென நவாஸ் ஷெரீஃப் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இந்தக் கட்­டுரை எழு­தப்­படும் வரையில், இறு­திக்­கட்ட தேர்தல் பெறு­

பே­றுகள் வெளி­யா­க­வில்லை. சில தொழில்­நுட்ப கார­ணங்­களால் முடி­வுகள் வெளி­யா­வது தாம­த­மா­கி­யி­ருக்­கி­றது.

இருந்­த­போ­திலும், வாக்­கு­மோ­ச­டிகள் இடம்­பெற்­ற­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை தேர்தல் ஆணை­யகம் நிரா­க­ரித்­துள்­ளது.

நீதி­யான, நேர்­மை­யான தேர்தல் ஜன­நா­ய­கத்தின் முத­லா­வது கூறு என்றால், பொதுத் தேர்தல் மூலம் ஜன­நா­யகம் மீறப்­பட்­டுள்­ளதைக் காண முடியும்.

இன்று இம்ரான் கான் இரா­ணு­வத்தின் செல்லப் பிள்­ளை­யாக மாறி­யி­ருக்­கிறார். இவ­ருக்கு இரா­ணு­வத்தைத் திருப்­திப்­ப­டுத்தும் தேவை உள்­ளதால், ஜன­ரஞ்­சக தளத்தில் மக்­களைக் கவர வேண்­டிய நிர்ப்­பந்தம் இருந்­தது.

ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று, ஆங்­கில மொடலைக் கரம்­பற்றி சர்ச்­சையைக் கிளப்­பிய தலைவர். இவர் இன்று தம்மைப் பழமை வாத சிந்­தனை கொண்­ட­வ­ராக மாற்றிக் கொள்ள அல்­லது சித்­தி­ரித்துக் கொள்ள வேண்­டிய நிலை தோன்­றி­யுள்­ளது.

இந்த அர­சி­யல்­வாதி இறை­நிந்­தனை சட்­டங்­களை கடு­மை­யாக்க முயற்சி செய்­துள்ளார். இஸ்­லா­மிய நலன்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்கும் தேசம் பற்றி பேசி­யி­ருக்­கிறார். தேர்தல் பிர­சா­ரத்தில் இஸ்­லா­மிய வாக்­கா­ளர்கள் வாக்கு வங்­கியை இலக்கு வைத்­தி­ருக்­கிறார். பெண்­ணு­ரிமை அமைப்­புக்­களைக் கண்­டித்­தி­ருக்­கிறார்.

இதற்­கெல்லாம் இரா­ணு­வத்தின் நிர்ப்­பந்தம் தான் காரணம் என்றால், இம்ரான் கானின் ஆட்சி காலத்தில் முற்­று­மு­ழு­தான ஜன­நா­யகம் சாத்­தி­யப்­ப­டுமா என்ற கேள்வி எழும்.

ஏனெனில், மிகவும் செல்­வாக்கு மிக்க பாகிஸ்­தா­னிய இரா­ணுவ புல­னாய்வு அமைப்­புக்கள், எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முழு­மை­யான ஜன­நா­ய­கத்­திற்கு இட­ம­ளித்­த­தாக வர­லாறு இல்லை.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்­தாலும், பாகிஸ்­தானில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வலு­வான ஆற்றல் அவ­ருக்கு இருக்­கி­றதா என்­பதை ஆரா­யலாம்.

இன்று பாகிஸ்­தா­னிய தேசம் சீர்­கு­லைந்­தி­ருக்­கி­றது. பொது­மக்­க­ளுக்­கான சேவைகள் முதற்­கொண்டு அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வுகள் வரையில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்ட தவ­றுகள் இதற்குக் காரணம்.

இந்தத் தவ­றுகள் கார­ண­மாக இன்று பாகிஸ்­தா­னிய தேசம் ஊழல் மோச­டிகள் மலிந்து, அரா­ஜகம் தலை­வி­ரித்­தாடும் தேச­மாக மாறி­யி­ருக்­கி­றது.

இந்தத் தவ­று­களை தனி­யொரு அர­சியல் சக்­தி­யாகத் திருத்திக் கொள்ளக்கூடிய நிலையில் இம்ரான் கான் இருப்பாரா என்பது தெரியவில்லை. ஜனரஞ்சக தளத்தில் மக்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சி அவருக்கு இருந்தாலும், இராணுவத்தை உதறித்தள்ளி தனியாக எழுந்து நிற்கக்கூடிய ஆற்றலை தேர்தல் முடிவுகளும் தரவில்லை.

இன்று இம்ரான் கான் மாற்றம் குறித்து உறுதியளித்தாலும், ஜனநாயகம் சீர்குலைந்துள்ள தேசத்தில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்தே ஆக வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு அவர் கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடினால், அவர் மாற்றம் குறித்த கொள்கைகளை காற்றில் பறக்க விட வேண்டியிருக்கும்.

இது பாகிஸ்தானில் மாத்திரமல்ல, பொதுவாக சகல தெற்காசிய நாடுகளிலும் நிலவும் நிலை என்பதில் சந்தேகம் கிடையாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-29#page-3

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்?

 

 
 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் பொறுப்பேற்கவிருப்பது புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் காத்திருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சாதகமான கருத்துகளையே பிரச்சாரத்தின்போது பேசிவந்த இம்ரான், காஷ்மீர் மக்களை ராணுவம் கொண்டு இந்தியா ஒடுக்கிவருவதாகவும் குற்றம்சாட்டினார். அதேசமயம், தேர்தலுக்குப் பிறகான தனது முதல் பேட்டியில், “காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாணத் தயார்” என்று பேசியிருக்கிறார்.

பாகிஸ்தானில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்ட மன்றங்களின் பொதுத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த நிலையில், இம்ரானின் வெற்றி ஏறத்தாழ ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில், இம்ரானுக்குக் காத்திருக்கும் சவால்கள் அசாதாரணமானவை.

 

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளையும் இந்தியா போன்ற பக்கத்து நாடுகளையும் குறிவைக்கும் பயங்கரவாதக் குழுக்களைக் கட்டுக்குள் வைப்பது முதல் சவால். இத்தனைக் காலம் இந்தக் குழுக்களுக்குப் புகலிடமும் தந்து, ஆயுதம் – பயிற்சிகள் ஆகியவற்றைத் தந்ததும் பாகிஸ்தான் ராணுவமும் உளவுப் படையும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசியபோது இந்தியாவுடனான உறவு குறித்து அதிக நேரம் பேசினார். “சமாதானத்தை நோக்கி இந்தியா ஓரடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்கும்” என்றும் உறுதியளித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் பேசியதை இந்தியா ஏற்கவில்லை. இந்தியாவிடம் நவாஸ் ஷெரீஃப் அரசு மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதாகக் கூறியிருந்தார் இம்ரான் கான். நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை வலு இல்லாமல் ஆட்சியமைக்கிறார். ராணுவத்தின் தயவு அவருக்கு அதிகம் தேவைப்படும். இது இந்திய அரசால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது!

கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை நிலையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். சீன-பாகிஸ்தான் பொருளாதார நெடுவழி திட்டத்துக்கு செலவழிக்கப்படும் தொகை மூலம் விரைவில் வருவாய் வரும் என்று தோன்றவில்லை. தாலிபான்களைப் பேச்சுக்கு அழைத்து அமைதியை ஏற்படுத்துவது மற்றொரு சவால். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்று பேசிவந்ததால், ‘தாலிபான் கான்’ என்று அழைக்கப்பட்டவர் இம்ரான். இந்நிலையில், அமெரிக்க அரசுடன் அவர் எப்படி ஒத்துழைக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவருடைய பதவிக்காலமும் இருக்கும்.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்துவது, தாலிபான்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பெரிய சோதனைகள் புதிய பிரதமர் இம்ரானுக்காகக் காத்திருக்கின்றன. கூடவே, ‘ஐந்து ஆண்டுகள் முழுவதும் பதவி வகித்த பிரதமர்’ என்ற சாதனையையும் இம்ரான் கான் நிகழ்த்த வேண்டும். முடியுமா? சவால்தான். முடித்திட வாழ்த்துகள்!

https://tamil.thehindu.com/opinion/editorial/article24559809.ece

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கானின் பொறுமைக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்லனும்.

1996 இல் கட்சி தொடங்கி.. 2018 இல் வெற்றி.. 

இதே நம்மூரில் என்றால்.. இல்ல தமிழகத்தில் என்றால்.. உருப்படாதவர்களின் கட்சி என்று முத்திரை குத்தி.. களத்தில் இருந்தே கட்சியை அகற்றி இருப்பார்கள்.

நாம் தமிழர் கட்சி, தமிழீழத்தில் உருவாகி இருக்கும் இளைய தலைமுறை கட்சிகள்..  உட்பட்ட கட்சிகளுக்கு இம்ரான் கானும் அவரது கட்சியும் நல்ல உதாரணம். 

  • தொடங்கியவர்
இம்ரான் கான் எனும் ‘கொண்டாட்டம்’
 

குழப்பங்களுக்குப் பெயர் போன தெற்காசிய நாடான பாகிஸ்தானின் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்பது உறுதியாகியிருக்கிறது. பழுத்த அரசியல்வாதியான இம்ரான் கானை, கிரிக்கெட் அடையாளத்தைக் கொண்டு அழைப்பது, ஒரு வகையில் அவரது அரசியலுக்குச் செய்யும் அவமானம் என்ற போதிலும், சர்வதேச அளவில் அவரது அடையாளத்துக்காகவும், அவரைப் பிரபலப்படுத்திய பின்னணிக்காகவும், அவ்வடையாளத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.  

பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை, தனது 39ஆவது வயதில், 1992ஆம் ஆண்டில் பெற்றுக் கொடுத்துவிட்டு ஓய்வுபெற்ற இம்ரான் கான், 1996ஆம் ஆண்டிலேயே அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார். ஆனால், 2002ஆம் ஆண்டிலேயே, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.  

அதற்குப் பின்னரான காலத்தில், சிறை, வன்முறைகள் என்று, அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்த கான், 2011ஆம் ஆண்டில் தான், மிகப்பெரிய மாற்றத்துக்கான அரசியலைத் தொடங்குவதாக அறிவித்தார். அதன் பின்னர் தான், தேசிய ரீதியில், அவரது கட்சியான தெஹ்ரீக்-ஈ-இன்சாப், பேசப்படும் கட்சியாக மாறியது.  

பின்னர், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், நேரடியாகப் போட்டியிடும் 272 ஆசனங்களில் 30 ஆசனங்களை அவரது கட்சி பெற்று, வளர்ச்சியை எடுத்துக் காட்டியது. என்றாலும், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிக்க அதிகரிக்கத் தான், இம்ரான் கானின் வளர்ச்சியும் அதிகரித்தது. நவாஸ் ஷெரீப் சிறையிலடைக்கப்பட்ட பின்னர், அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்ட பின்னர், அடுத்த பிரதமராக இம்ரான் வர முடியுமென்ற பேச்சுகள் எழத் தொடங்கின. இறுதியில், அவர் பிரதமராகுவது ஓரளவுக்கு உறுதியாகியிருக்கிறது.  

மேலே குறிப்பிட்டவை தான் அவரது குறுகிய வரலாறு என்ற போதிலும், ஊழலுக்கு எதிர்ப்பானவராகத் தன்னைக் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள இம்ரான் கான் மூலமாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்குள், இம்ரான் கானை வழிபடும் கூட்டமொன்று உருவாகியிருக்கிறது. இவற்றின் பின்னணியில், இம்ரான் கானைக் கொண்டாடும் இந்த நடைமுறைகள் தொடர்பாக ஆராய வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால், பாகிஸ்தானுக்கு நெருங்கிய நாடான இலங்கையிலும், இம்ரான் கானின் வெற்றி பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது.  

இம்ரான் கானின் 22 ஆண்டுகால அரசியல் போராட்டப் பின்புலத்தை மறந்துவிட்டு, வெறுமனே கிரிக்கெட் வீரர் என்பதை மாத்திரம் நினைவில் கொண்டு, இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார வர வேண்டுமென, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபக்கமாக, 1992இல் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவர் (இம்ரான் கான்), 2018இல் பிரதமராகிறார்; 1996இல் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவர் (அர்ஜுன ரணதுங்க), 2020இல் ஜனாதிபதியாக வேண்டுமென, இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.  

இவை, இலங்கையில் காணப்படுகின்ற நிலைப்பாடுகள். மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்றால், இம்ரான் கானின் வெற்றி, நிச்சயமாகவே பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது; நம்பிக்கையை வழங்கியிருக்கிறது என்பதில் மாற்றுப் பேச்சில்லை. ஆனால், மக்களை வசப்படுத்துகின்ற அனைத்து விடயங்களும் நல்லவை தானா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதிலும், வெறுப்புப் பேச்சுகளையும் கடும்போக்கு வலதுசாரித்துவத்தையும் நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதை நாம் காணுகிறோம். இவற்றுக்கு மத்தியில், இம்ரான் கான் பிரசாரம் செய்த தேசியவாதம் எங்கே நிற்கிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சர்வதேச ஊடகங்கள் சொல்லும், “உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவர், பாலியல் ரீதியான கவர்ச்சியான ஆணாக அறியப்பட்டவர்” என்பதைத் தாண்டி, இம்ரான் கானுக்கான வாக்குகள் கிடைத்தமைக்கு, அவரது அரசியல் போக்குத் தான் காரணமென்பதை மறந்துவிடக் கூடாது.  

பாகிஸ்தான் என்பது, பிராந்தியத்தில் எப்போதுமே குழப்பகரமான நாடாகவே இருந்துவந்திருக்கிறது. பயங்கரவாதிகள் என சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளை வளர்த்துவிட்ட அல்லது பாதுகாத்த குற்றச்சாட்டு, அந்நாடு மீது தொடர்ந்தும் காணப்படுகிறது. அல் கொய்தா ஆயுதக்குழுவின் நிறுவுநரான ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவற்றை மறுத்தே வந்திருந்தது பாகிஸ்தான். ஆனால் இறுதியில், பாகிஸ்தானில் வைத்துத் தான், பில் லேடன் கொல்லப்பட்டார்.  

பாகிஸ்தானின் இராணுவ மய்யத்துக்கு அருகிலேயே, அவர் தங்கியிருந்த இருப்பிடம் காணப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் அனுசரணை, அல் கொய்தா போன்ற ஆயுதக்குழுக்களுக்குக் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.  

இப்படியான பின்னணியைக் கொண்ட பாகிஸ்தானில், தலிபான் ஆயுதக்குழுவுக்கு ஆதரவானவராகவே, இம்ரான் கான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இதுவொன்றும், தனியே ஒரு தடவை நடைபெற்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான ஆதரவு கிடைத்தது. தலிபான்களும், இம்ரான் கானை விரும்பினார்கள் என்பதை, 2014ஆம் ஆண்டு, சமாதானப் பேச்சுகளில், தம்மைப் பிரதிநிதிப்படுத்த வேண்டுமெனத் தலிபான்கள் தெரிவுசெய்த 5 அரசியல்வாதிகளில், இம்ரான் கானும் ஒருவராக இருந்தார்.  

தலிபான்கள் மாத்திரமன்றி, ஏனைய கடும்போக்குத் தீவிரவாதக் குழுக்களுக்கான ஆதரவையும், இம்ரான் கானும் அவரது கட்சியான பி.டி.ஐ-உம் வெளிப்படுத்தியிருந்தன.  

அத்தோடு, சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிரான தரப்பினரோடு, இம்ரான் கான் இணைந்து செயற்பட்டார். தேர்தல் பிரசாரத்தின் சூடு அதிகரிக்க, மதநிந்தனைச் சட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். மதநிந்தனைச் சட்டமென்பது, ஏனைய மத சிறுபான்மையினரை மாத்திரமன்றி, முஸ்லிம்களிலும் சிறுபான்மையினராக இருக்கின்ற அஹ்மாடிகள் உள்ளிட்டோரையும் இலக்குவைக்கும் ஒரு சட்டமாக இருக்கிறது. அதற்கான வெளிப்படையான ஆதரவு தான், இன்னும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

இவற்றுக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னர் இருந்த சந்தர்ப்பத்தில், 2013ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி முதல் இவ்வாண்டு மே 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 520 அமர்வுகளில், வெறுமனே 24 அமர்வுகளில் தான் (5 சதவீதம்), இம்ரான் கான் கலந்துகொண்டார். எனவே, மக்கள் மீதான அக்கறை கொண்டவர் என்ற நியாயப்படுத்தலையும் முன்வைக்க முடியாது.

இவையெல்லாம் சாதாரண விமர்சனங்களாக அமைந்தால், இராணுவத்தின் ஆதரவுடன் தான் இம்ரான் கான் வெற்றிபெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு, இன்னும் அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் வரலாறு முழுவதும், இராணுவத்தின் ஆதிக்கமென்பது அதிகரித்தே காணப்பட்டிருக்கிறது. ஆனால், இத்தேர்தலின் போது இம்ரான் கானுக்கான முழுமையான ஆதரவை இராணுவம் வெளிப்படுத்தியது என்ற குற்றச்சாட்டு, தற்போது எதிர்க்கட்சியாக மாறியிருக்கின்ற முன்னைய ஆளுங்கட்சியால் மாத்திரமன்றி, ஊடகவியலாளர்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்கள், தேர்தல் காலத்தில் போது நிலவிய அரசியல் சூழலை, கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். தெற்காசியாவின் அண்மைக்காலச் சூழலில், தேர்தலொன்றின் போது, அரசியல் சூழல் தொடர்பான விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த கட்சி மீது அதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத முதலாவது சந்தர்ப்பமாக, இது தான் அமைய வேண்டும். அந்தளவுக்கு, புறக்காரணிகளின் தாக்கம் காணப்பட்டிருந்தது.  

இப்படி, பிற்போக்கான பல விடயங்களைத் தன்னகத்தே கொண்ட ஒருவராக, பரப்பியல்வாதத்தை (populism) பயன்படுத்தி, மக்களின் பலவீனங்களையும் அச்சங்களையும் பயன்படுத்தி, வாக்குகளைப் பெற்றிருக்கிறார் இம்ரான் கான். இப்போது வெற்றிபெற்றுவிட்ட நிலையில், அவர் வாக்குறுதியளித்ததைப் போன்று, நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவாரா என்பது தான், இப்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.  

இதேவேளை, இம்ரான் கான் மீதான இந்த விமர்சனங்கள், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த நவாஸ் ஷெரீப் மீதான ஆதரவாகவும் கொள்ளப்படக் கூடாது. ஏனென்றால், மிகவும் ஊழல்மிகுந்த ஆட்சியை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டு, அவர் மீது காணப்படுகிறது. அத்தோடு, தனது மகள், சகோதரர் என, தனது குடும்பத்தை முன்னிறுத்திய வகையிலும், அவரது ஆட்சி அமைந்திருந்தது. எனவே, சிறந்த ஆட்சியை அவரால் முன்னெடுத்திருக்க முடியும் என்பது, இதன் வாதமாக அமையாது.  

மாறாக, தெற்காசியாவின் அண்மைக்கால வரலாற்றைப் பார்க்கும் போது, ஊழல்வாதிகள் அல்லது கடும்போக்குத் தேசியவாதிகள் என்ற இரு பிரிவினருக்கிடையே தான், தமது அரசியல் தலைவர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பது, கவலைக்குரியது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இம்ரான்-கான்-எனும்-கொண்டாட்டம்/91-219784

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.