Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் போதனா வைத்தியசாலையின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றது… 

Featured Replies

யாழ் போதனா வைத்தியசாலையின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றது… 

 

நிமலேந்திரா….

Dr.M.S.Mugunthan.jpg?resize=492%2C457

 

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் 20, 21 ஆம் திகதிகளில் திறந்த இருதய சத்திரசிகிச்சையானது முதற்றடவையாக இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினாரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஓரு முக்கிய மைல் கல்லாகும் (Milestone). இதனால் இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச மருத்துவமனைகளில் ஒன்றாக யாழ் போதனா வைத்தியசாலையும் தரம் உயர்ந்தது. இதுவரைகாலமும் இலங்கையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளிலேயே நடைபெற்றன. இவ்வைத்தியசாலைகள் குழாத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்தது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை ஆரம்பிக்க உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

கடந்த 2017 மார்கழியில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சையை ஆரம்பிக்கும் போது இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான சத்திர சிகிச்சை(Coronary Artery Bypass Graft Surgery (CABG)), இதய வால்வு மாற்று சத்திர சிகிச்சை(Valve Replacement Surgery), பிறப்பிலிருந்து இதயத்தில் ஏற்படுகின்ற அமைப்பு ரீதியான அசாதாரண மாற்றங்களுக்கான சீரமைப்பு சத்திர சிகிச்சை (Corrective Surgery for Congenital Cardiac Defect) முதலான சேவைகள் விரிவாக்கப்பட்டு சில ஆண்டுகளில் மிகச் சிறப்பான இருதய சத்திரசிகிச்சைகளை யாழ் போதனா வைத்தியசாலையால் வழங்க முடியுமென எதிர்பார்க்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவ சாதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்று மருத்துவராகி, மருத்துவத்தில் உயர் பட்டப்படிப்பினை நியூசிலாந்தில் பயின்ற இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் (MBBS (Jaffna), MD – Surgery (Colombo), MRCS (England), MRCSEd Consultant & Specialist in Cardiothoracic Surgery) இருதய வால்வில் கிருமித்தொற்று ஏற்பட்டதானால் தீவிரசிகிச்சைப் பிரிவில் 14 நாள்கள் செயற்கை சுவாசம் மூலம் உயிரூட்டப்பட்டுக் கொண்டிருந்த 41 வயதுடைய முருகையா தயானந்தன் என்பவருக்கு ஆபத்துநிறைந்த இருதய வால்வு மாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு மறுவாழ்வு தந்துள்ளார். இதனை ஒரு மருத்துவ சாதனை என்றே குறிப்பிடலாம்.

file-photo-The-very-first-Heart-surgery.

யாழ் போதனா வைத்தியசாலையில் இதுவரைகாலமும் இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான சத்திர சிகிச்சை, பிறப்பிலிருந்து இதயத்தில் ஏற்படுகின்ற அமைப்பு ரீதியான அசாதாரண மாற்றங்களுக்கான சீரமைப்பு சத்திர சிகிச்சை முதலான திறந்த இருதய சத்திரசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டன. எனினும் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களால் இருதய வால்வு மாற்று சத்திர சிகிச்சையானது முதற்றடவையாக (Valve Replacement Surgery) 21.06.2018 அன்று முருகையா தயானந்தன் எனபவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உயர் கண்காணிப்பில் இருந்த தயானந்தனுக்கு இந்த சத்திரசிகிச்சையை இருதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் மேற்கொண்டமையானது முன்னுதாரணப்படுத்தத்தக்க உன்னதமான மருத்துவப் பணியாகும்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு வாரந்தம் இருவருக்கு மாத்திரமே திறந்த இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களும் அவருடன் இணைந்து உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சுந்தரலிங்கம் பிறேமகிருஸ்ணா மற்றும் ஏனைய துறைசார் சத்திரசிகிச்சைக் குழாமும் இணைந்து 2018 ஆடி 31 வரை 44 பேருக்கு திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை (Open Heart Surgery) வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். இதைவிட 6 பேருக்கு இருதயம் நுரையீரலுடன் தொடர்புடைய ஆபத்தான சத்திரசிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்காக 750 பேர் வரையில் காத்திருக்கின்றார்கள்.

திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு ரூபா 10 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை தேவைப்படும். எனவே இலங்கையின் வடபகுதியில் மட்டுமன்றி கிழக்குப் பகுதியிலும் உள்ள ஏழ்மையான இருதய நேயாயாளிகளின் உயிர்காப்பதற்கு யாழ் போதனா வைதத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவானது விரைந்து விரிவாக்கப்பட வேண்டும். ஏழை நோயாளிகளின் உயிர்காக்க தனியார் வைத்தியசாலைகளும் தங்கள் கட்டணத்தைக் குறைத்து இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

http://globaltamilnews.net/2018/90610/

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒருத்தரும் பாராட்ட காணவில்லை.....பாராட்டுக்கள்....
தமிழன்டா.....
சிங்கள நிபுணர்கள் செய்திருந்தால் பாராட்டியிருப்போம்....tw_tounge:

  • தொடங்கியவர்

அனை­வ­ரும் கைகோர்த்து- செயற்­ப­டு­வோம் வாருங்­கள்!!

 
 

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் இரு­தய வால்வு மாற்று அறு­வைச் சிகிச்சை ஒன்று வெற்­றி­க­ர­மா­கச் செய்து முடிக்­கப்­பட்­டுள்­ளமை மகிழ்ச்­சி­யைத் தரும் செய்தி. குறைந்த மருத்­துவ வளங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் இது­போன்ற ஓர் அறு­வைச் சிகிச்­சையை மேற்­கொண்டு ஒரு ஏழை­யின் உயி­ரைக் காத்த மருத்­துவ வல்­லு­ந­ரும் ஏனைய மருத்­து­வர்­க­ளும் உத­வி­யா­ளர்­க­ளும் போற்­றத்­தக்­க­வர்­கள், பாராட்­டத்­தக்­க­வர்­கள்.

போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் போதனா வைத்­தி­ய­சா­லைக்­குத் தமிழ் மருத்­துவ வல்­லு­நர்­கள் பல­ரும் சேவை­யாற்ற வந்­தி­ருப்­ப­தும் மருத்­து­வக் கட்­டு­மா­னங்­கள் ஓர­ள­வுக்­கா­வது விரி­வாக்­கம் அடைந்­தி­ருப்­ப­தும் மகிழ்ச்­சி­யைத் தரும் வளர்ச்சி. எனி­னும் மருத்­து­வர்­க­ளி­ன­தும் மருத்­துவ வல்­லு­நர்­க­ளி­ன­தும் பற்­றாக்­குறை தொடர்­வ­தும் தாதி­யர்­கள் பற்­றாக்­குறை நில­வு­வ­தும் கவ­லை­ய­ளிக்­கி­றது.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­யா­சாலை வடக்­கில் மட்­டு­மல்ல, கிழக்கு மற்­றும் வட­மத்­திய மாகா­ணங்­க­ளி­லேயே மிகப் பெரிய வைத்­தி­ய­சாலை. போர் முடிந்த சூழ்­நி­லை­யில் வடக்­கில் இருந்து மட்­டு­மல்­லா­மல் அதற்கு வெளி­யில் இருந்­தும் நோயா­ளர்­கள் சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு வரு­கி­றார்­கள். அதி­லும் மருத்­துவ வல்­லு­நர்­க­ளின் சேவை­யைப் பெறு­வ­தற்­காக யாழ்ப்­பா­ணத்­திற்கு என்று வரு­ப­வர்­கள் பலர் இருக்­கி­றார்­கள்.

 

இத­னால் மருத்­து­வ­ம­னை­யில் நெருக்­க­டி­க­ளும் சிக்­கல்­க­ளும் அதி­க­ள­வில் இருக்­கின்­றன என்­பது கண்­கூடு. இருந்­தா­லும் அவற்­றைத் திறம்­ப­டக் கையாண்டு மக்­க­ளுக்கு முடிந்­த­வ­ரை­யில் தர­மான வைத்­தி­ய­சே­வையை வழங்­கு­வ­தற்­குப் பாடு­ப­டும் யாழ். போதனா வைத்­தி­ய­சாலை நிர்­வா­கம், மருத்­துவ வல்­லு­நர்­கள், மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், மருந்­தா­ளர்­கள்,தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­கள், சிற்­றூ­ழி­யர்­கள் அனை­வ­ருமே பாராட்­டுக்­கு­ரி­ய­வர்­கள்.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை தமி­ழர்­க­ளின் ஒரு பெரும் சொத்து. தமி­ழர்­க­ளுக்கு இருக்­கும் அர­சி­யல் வர­லாற்­றைப் போலவே இந்த வைத்­தி­ய­சா­லைக்­கும் வர­லாறு உண்டு. அது­வும் தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லு­டன் பின்­னிப்­பி­ணைந்த வர­லாறு. போதனா வைத்­தி­ய­சா­லை­யின் ஆவ­ணக் கிடங்­கு­க­ளைக் கிள­றி­யெ­டுத்­தால், அது பல வெளித்­தெ­ரி­யாத கதை­களை இந்த உல­கத்­திற்­குச் சொல்­லும். அதே­போன்று வெளியே அறி­யப்­பட்ட பல மருத்­து­வக் கதை­க­ளை­யும் அது சொல்­லும். அத­னைப் பாது­காப்­ப­தும், வளர்த்­தெ­டுப்­ப­தும், சேவை விரி­வாக்­கத்­துக்­கா­கப் பாடு­ப­டு­வ­தும் ஒவ்­வொரு தமிழ் மக­னி­ன­தும் கடமை.

அத்­த­கைய ஒரு வைத்­தி­ய­சாலை இப்­போது இன்­னும் பல உயிர்­க­ளைக் காப்­பாற்­றக்­கூ­டிய வகை­யில் சிறப்பு மருத்­துவ வச­தி­களை வளர்த்து வரு­வது இன்­னும் சிறப்பு. இந்த வளர்ச்சி தொட­ர­வேண்­டும். அதற்­குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளும் வழங்க முன்­வ­ர­வும்­வேண்­டும். அது கட­மை­யும் கட்­டா­ய­மும்­கூட.

வடக்கு, கிழக்­கில் முழு­மை­யான தனி­யார் மருத்­துவ நிலை­யங்­க­ளும் இல்­லாத நிலை­யில் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லை­தான் தமி­ழர்­க­ளுக்கு மட்­டு­மல்ல வடக்கு, கிழக்கு மற்­றும் வட­மத்­திய மக்­கள் அனை­வ­ருக்­கும் ஆபத்­தாந்­த­வன்.எனவே அதன் வளர்ச்­சி­யின் மீது அனை­வ­ருமே அக்­க­றை­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­யம்.

இரு­தய அறு­வைச் சிகிச்­சை­களை தனி­யார் வைத்­தி­ய­சா­லை­க­ளில் செய்­தால் அதற்­குப் 10 லட்­சம் ரூபா வரை­யில் தேவைப்­ப­டும் என்­கி­ற­போது இங்கு வாழும் பெரும்­பா­லான மக்­க­ளி­டம் அதற்­கான வசதி கிடை­யாது. எனவே ஏழை­க­ளும் நடுத்­தர வர்க்க மக்­க­ளும் உயிர் பிழைத்­தி­ருக்க யாழ். போதனா வைத்­தி­ய­சா­லை­யின் வளர்ச்சி இன்­றி­ய­மை­யா­தது.

தற்­போ­தி­ருக்­கும் நிலை­யில் வாரத்­திற்கு இரண்டு திறந்த இரு­தய அறு­வைச் சிகிச்­சை­க­ளையே மேற்­கொள்ள முடி­வ­தும் 750 பேர் வரை­யி­லா­னோர் சிகிச்­சைக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­து­மான புள்­ளி­வி­வ­ரங்­கள் மலைக்க வைக்­கின்­றன. இந்த நில­மை­யில் இருந்து தப்­பு­வ­தற்கு தனி­யான அறு­வைச் சிகிச்­சைக் கூடத்­து­டன் இரு­தய சிகிச்­சைப் பிரிவு விரி­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் புரி­யும். அதனை உரு­வாக்­கு­வ­தற்கு அனை­வ­ரும் கைகோர்த்­துச் செயற்­ப­டு­வோம் வாருங்­கள்.

http://newuthayan.com/story/09/அனை­வ­ரும்-கைகோர்த்து-செயற்­ப­டு­வோம்-வாருங்­கள்.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

http://ausmedaid.org.au/wp-content/uploads/2018/03/AMAF-AGM-2017-Jan2018-1.pdf

இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தியில்  புலம்பெயர்ந்த மருத்துவர்களின் குறிப்பாக அவுஸ்ரேலியா மருத்துவர்களின் பங்கும் உண்டு....என்ன சொன்னாலும் தமிழன் தன்னுடை தாய்நிலத்திற்காக பல உதவிகளை முடிந்த வரை செய்து கொண்டுதான் இருக்கின்றான்....

வாழ்த்துக்கள் இதில் பங்குபற்றிய மருத்துவர்கள் தாதிகள் அனைவருக்கும் பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இதில் பங்குபற்றிய மருத்துவர்கள் தாதிகள் அனைவருக்கும் பாராட்டுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.