Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

Featured Replies

வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
 
 

image_d41bd6c0cf.jpgகிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான  அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்முறைகளினால், வீரமுனையும் அதனருகே இருந்த, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாபிட்டி, சொறிக்கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலர், தங்களது குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண மிசனரி பாடாசாலையிலும் தங்கியிருந்தனர்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி, இலங்கை இராணுவத்தினாராலும், ஊர்காவல்படை கும்பல்களாலும், நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள், துப்பாக்கியால் சுடப்பட்டும் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 55 பேரும் இந்த வெறிச் செயலால் உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை இதன்போது கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வீரமுனைப்-படுகொலைகளின்-28-ஆம்-ஆண்டு-நினைவு-தினம்-இன்று/175-220188

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் இளைஞர்கள் 
புலிகளிடம் இருந்து தம்மை பாதுக்காக்க 
ஆயுதங்களை வைத்திருந்ததாக ஹிஸ்புல்லா சொல்கிறார். 

அவர் சொல்லுவார் ..........

இங்கு ஊரில் என்ன நடந்தது என்று தெரியாத 
சிலர் வக்காளத்து வாங்கும்போது 
நாம் ஒதுங்கிப்போவது .... நேர விரயத்தை எண்ணியே.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

முஸ்லீம் இளைஞர்கள் 
புலிகளிடம் இருந்து தம்மை பாதுக்காக்க 
ஆயுதங்களை வைத்திருந்ததாக ஹிஸ்புல்லா சொல்கிறார். 

அவர் சொல்லுவார் ..........

இங்கு ஊரில் என்ன நடந்தது என்று தெரியாத 
சிலர் வக்காளத்து வாங்கும்போது 
நாம் ஒதுங்கிப்போவது .... நேர விரயத்தை எண்ணியே.

எங்கள் ஊரில் மீதி பேர் அகதிகளாக வந்து இருந்தனர் எங்கள் ஊரில் திராய்கேணி ,அட்டப்பள்ளம் , சம்மாந்துறை , வீரமுனை , வளத்தாப்பிட்டி இவர்களுக்கும் 90  களில் முகாம்கள்  அமைத்துக்கொடுக்கப்பட்டது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் காத்தான்குடி சம்பவத்தை வைச்சு வெளிநாடுகளின் அனுதாபத்தைத் தேடிக் கொண்ட அளவுக்கு முஸ்லீம் பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நாம் வெளிநாடுகளின் கவனத்தை.. அனுதாபத்தை தேடத்தவறியதும்.. மறப்போம்.. மன்னிப்போம்.. புட்டும் தேங்காய் பூவும் என்று பேசிக் காலம் கழித்தது தான்.. இன்று நாம் பயங்கரவாதிகளாக உலகின் கண் நிறுத்தப்படுவதற்கும்.. எம் மக்களும் மண்ணும் அழிக்கப்படவும் ஆக்கிரமிக்கப்படவும் முக்கிய காரணம்.

இப்படி எத்தனையோ படுகொலைகளை முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதமும்... சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தியுள்ளது. 

இவை அனைத்தும் சகல ஆதாரங்களோடும் ஆவணப்படுத்தப்படவும்.. சர்வதேச சமூகத்தின் முன் நீதி கோரியும் சமர்க்கப்பிக்கப்படுவதே.. இந்த மக்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கு.. தியாகத்திற்கு செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.