Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

Featured Replies

கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த விடயம் ஊடகவியலாளர் சிவராமிற்கு தெரியும் என இரா.துரைரத்தினம் தனது நூலில் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுகவிழா சுவிஸ் நடைபெற்றுள்ளது.

கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்.. ( காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்)

  • கருணா பிரிவதற்கு முன் சிவராம் எதற்காக கொக்கட்டிச்சோலைக்கு சென்றார்?

  • நீண்ட கால நண்பனான நூலாசிரியர் இரா.துரைரத்தினத்திடம், சிவராம் கொக்கட்டிச்சோலை பயணத்தை மறைத்தது ஏன்?

  • உண்மையில் சிவராமின் நிலை என்ன எனும் பல மர்ம முடிச்சுக்களுக்கு பதில் வழங்குகின்றார் செய்திகளின் மறுபக்கம் நூலின் ஆசிரியர் இரா.துரைரத்தினம்.

இந்த புத்தகத்தில் இன்னும் 29 சிறப்பு அரசியல் தொகுப்புக்கள் உள்ளன.

அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.

இரா.துரைரத்தினம்
0041795556902
thurair@hotmail.com

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/192948?ref=imp-news

  • தொடங்கியவர்

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தேகத்தை இந்நூலாசிரியர் துரைரத்தினமும் எழுப்பியிருக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகு. குணசீலன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போது நூல் விமர்சன உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான அழகு குணசீலன் இதனை தெரிவித்தார்.

வைத்தியகலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அழகு குணசீலன் தொடர்ந்து உரையாற்றுகையில்...

நாங்கள் ஏற்கனவே அறிந்த செய்திகளில் அவர் சொல்லாமல் விட்ட சம்பவங்களை அல்லது தன்னால் காலச்சூழல் கருதி சொல்ல முடியாமல் போன சம்பவங்களை இப்போது சொல்ல வேண்டும் என்ற மன உறுத்தலின் வெளிப்பாடாகவே இந்த நூலை அவர் எழுத தூண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

இது அவரின் நேர்மையான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த நூலை வசித்த போது அவர் மீது எனக்கிருந்த விமர்சனங்கள் இல்லாமல் போய்விட்டது.

கருணாவின் பிளவு, அந்த பிளவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், இந்த பிளவின் பின்னணியில் சிவராமிற்கு இருந்த பங்கு, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இருந்த பங்கு புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்கள் வழங்கிய துரோகி பட்டங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம், என பல விடயங்களை இந்த நூலில் உள்ளடக்கி இருக்கிறார்.

இனந்தெரியாத நபர்கள் என தான் செய்திகளில் சொன்ன விடயங்கள் யார் அந்த இனந்தெரியாதவர்கள் என்பதை இந்த சம்பவங்களை விபரிக்கும் போது தெளிவாக சொல்கிறார்.

இந்த கொலைகளை விடுதலைப்புலிகள் செய்தார்கள், இந்த கொலைகளை ஏனைய இயக்கங்கள் செய்தார் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆதாரத்துடன் அந்நம்பவங்களை விபரிக்கின்றார்.

ஒரு பத்திரிகையாளன் காலம் கடந்த சூழலில் நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து தன்னை சுயவிமர்சனம் செய்கிறார்.

நான் இந்த செய்தியை மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும், இனத்தின் நன்மைகருதி இதனை சொல்லாமல் விட்டிருக்கிறேன். பத்திரிகையாளன் என்ற நிலையில் இது தவறு என தன்னை சுயவிமர்சனம் செய்கிறார். இந்த சுயவிமர்சனம் நேர்மையான பத்திரிகையாளனுக்கு அவசியமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் பிளவு என்பது தொடர்ந்து வந்திருக்கிறது. ஜி.ஜி.பொன்னம்பலம்- செல்வநாயகம், பிரபாகரன் - உமாமகேஸ்வரன், பிரபாகரன் மாத்தையா, யோகி, கருணா என தொடர்ந்து பின்னர் கருணா பிள்ளையான் பிளவு என்று தொடர்கிறது.

ஏனைய இயக்கங்களுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் என அனைத்து இயக்கங்களும் பிளவு பட்டிருக்கின்றன. இந்த பிளவுகள் என்பது தமிழ் அரசியலில் புதிய விடயங்கள் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் தான் உருவாக்கினார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல கிழக்கில் இருந்த பத்திரிகையாளர் சங்கம் தான் இந்த உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது. பின்னர் 2004ல் தான் விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் என்ற விடயத்தை இந்நூல் விளக்குகிறது.

விடுதலைப்புலிகள் தேர்தல் அரசியலை நம்பியிருந்தவர்கள் அல்ல. தமது இலக்கை தேர்தல் அரசியல் மூலம் அடையலாம் என அவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. இது விடுதலைப்புலிகளின் அரசியலை தெரிந்தவர்களுக்கு புரியும் என அழகு குணசீலன் தெரிவித்தார்.

இந்த நூல் அறிமுக விழாவில் விமர்சன உரையை ஊடகவியலாளர் சண்.தவராசாவும் நிகழ்த்தினார்.

நூல் அறிமுக உரையினை மார்க்கண்டு ஜெயமோகனும் சிறப்புரைகளை ஐ.பி.சி தொலைக்காட்சி செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரேம் சிவகுரு, தமிழ் ஆரவலர் கிருஷ;ணா அம்hலவாணர், கவிஞர் கல்லாறு சதீஸ் போன்றவர்கள் நிகழ்த்தினார்கள்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/launch/80/105979?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இந்த நூல் வாங்கினால் ரதிக்கும் சேர்த்து வாங்கவும் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 2:50 PM, ரதி said:

கிருபன் இந்த நூல் வாங்கினால் ரதிக்கும் சேர்த்து வாங்கவும் 

இரா. துரைரத்தினம் உண்மைகளை எழுதுவார் என்று நம்பவில்லை. என்றாலும் பெளசரிடம் கேட்டுப்பார்க்கின்றேன். இருந்தால் உங்களுக்கும் ஒன்றை வாங்குகின்றேன்?

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 2:50 PM, ரதி said:

கிருபன் இந்த நூல் வாங்கினால் ரதிக்கும் சேர்த்து வாங்கவும் 

ஒன்று பெளசரிடம் இருந்து வாங்கினேன்! ஆனால் திறந்தும் பார்க்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

ஒன்று பெளசரிடம் இருந்து வாங்கினேன்! ஆனால் திறந்தும் பார்க்கவில்லை!

எனக்கும் சேர்த்து ஒரு புத்தகம்  வேண்டவெல்லோ சொன்னனான்  😮
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கும் சேர்த்து ஒரு புத்தகம்  வேண்டவெல்லோ சொன்னனான்  😮
 
10 பவுண்ஸ்! பொல்லால அடிச்ச காசு! படிக்கிற உத்தேசம் இல்லையென்பதால் புத்தம் புதியதாக உங்களுக்கே தரலாம். தனிமடலில் எங்கு அனுப்புவது என்று சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

10 பவுண்ஸ்! பொல்லால அடிச்ச காசு! படிக்கிற உத்தேசம் இல்லையென்பதால் புத்தம் புதியதாக உங்களுக்கே தரலாம். தனிமடலில் எங்கு அனுப்புவது என்று சொல்லுங்கள்!

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

😲

புத்தகத்தை உங்களிடம் கொடுக்கச் சொல்லி கேட்டாலும் கேட்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

எல்லாம் ஒரு பாதுகாப்பு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

10 பவுண்ஸ்! பொல்லால அடிச்ச காசு! படிக்கிற உத்தேசம் இல்லையென்பதால் புத்தம் புதியதாக உங்களுக்கே தரலாம். தனிமடலில் எங்கு அனுப்புவது என்று சொல்லுங்கள்!

சரியான கஞ்சூசாய் இருக்கிறீங்கள்... இந்த புத்தகம் கட்டாயம் நான் வாசிக்க வேண்டும் அதான் மீரா தன்ட  வீட்டை கூப்பிட்டு இருக்கிறார் தானே! வரும் போது கொண்டு வாங்கோ 😉
 
20 hours ago, Nathamuni said:

இப்ப பாருங்க..

அங்க கொடுங்க.... இங்க கொடுங்க எண்டு விடுவா கதை.

நானும், மொளகா தூள், கேக்கிறா எண்டு... கட்டிக், காவி ஊரில இருந்து கொண்டு வந்தால், கிருபனிடம் கொடுங்கோ, அவர் கொண்டாந்து தருவார் எண்டு போட்டாவே ஒரு போடு. 

உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சரியான கஞ்சூசாய் இருக்கிறீங்கள்... இந்த புத்தகம் கட்டாயம் நான் வாசிக்க வேண்டும் அதான் மீரா தன்ட  வீட்டை கூப்பிட்டு இருக்கிறார் தானே! வரும் போது கொண்டு வாங்கோ 😉
 
உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️

உங்களை எல்லாம் நம்பி மனிசன் மி. தூள் வேண்ட வருவானே ☺️..

நீங்கள் எதோ மீ ட்டு (Me Too) அமைப்பை பற்றி எதோ சொல்கிறீர்கள் என்று நினைச்சிட்டேன்  

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.