Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் -மு.தமிழ்ச்செல்வன்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ad
October 22, 2018
  • Share This!

Tube-well1.jpg?resize=800%2C450

அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?!

 

இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங்கு நிலத்தடிநீரில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. நாளாந்தம் அதிகளவு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஈடாக நிலத்தில் நீர் சேமிக்கப்படுவதில்லை. பருவமழை வீழ்ச்சியும் கடந்த காலங்கள் போன்றுதற்போது இல்லை,பெய்கின்ற மழைநீரும் நிலத்தடிக்கு சென்றுசேமிக்கப்படுவதனை விட ஆறுகளில் சேர்ந்து கடலுக்கு செல்வது அதிகமாகியுள்ளது. இதனால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே எண்பதுகளில் பத்து பதினைந்து அடி ஆழத்தில் காணப்பட்ட நிலத்தடிநீர் தற்போது நூறு அடிவரை சென்றிருக்கிறது.

உலக அளவில் உள்ள தண்ணீரில் வெறும் 04 வீத நீர் மட்டுமே குடிநீராக உள்ளது. அந்த நீரும் தற்போது குறைந்தும்இ மாசுபட்டும் வருகின்றமை உலக உயிரினத்திற்கே விடுக்கப்பட்டிருக்கும் சவலாகும். 1995 இற்குப் பின்பு புவியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது என ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.இதன் தாக்கமே புவியின் சாதாரண வெப்ப அளவின் விகிதம் பெருமளவுக்கு கூடியிருக்கிறது. கரியமிலவாயுஇ ஓசோன் மண்டலத்தாக்கம்இ என்பவற்றோடு காடுகளை அழிப்பதும் எரிபொருட்களின் வெப்பநிலை என்பன புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புவியில் காபனீரொட்சைட் அதிகரித்திருக்கிறது எனவும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கரியமில வாயுவினால் புவிக்கும்இ சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வலயம் பாதிப்படையும் என்றுமு் அதன் விளைவு துருவப் பனி வேகமாக உருகும் எனவும் இதனால் துருவ நன்னீர் வளமும் குறைவடையும் ஆய்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த நிலைமைகள் பொதுவாக உலக நன்னீர் நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற எச்சரிக்கையுடனான ஆய்வுகள் ஆகும். நன்னீர் நிலைமைகள் தொர்பில் வடக்கிலும் இதே நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. வடக்கின் நிலத்தடி நீர் மிக மோசமான அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. வருடத்திற்கு வருடம் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டு வருவது வெளிப்படையாக தெரிவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பொறியிளலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலத்தடி நீர் தொடர்பில் கவணிக்கப்பட்ட, கணிக்கப்பட்ட சில விடயங்களை இப் பத்தி சுட்டிக்காட்ட விளைகிறது.

Tube-well-constructed-at-Vellankulam-DRC

கிளிநொச்சி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் முப்பது மீற்றருக்கு குறைவான உயரத்தை கொண்ட ஒரு மாவட்டம். கிளிநொச்சி நகரும், இரணைமடு உட்பட நகரை அண்டிய சில பகுதிகளுமே முப்பது மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்கள் அதனிலும் குறைவான உயரத்தில் உள்ளன குறிப்பாக பூநகரி,பளை, கண்டாவளையின் சில பகுதிகளில் கடல் மட்டத்திற்கு நிலத்திற்குமான உயரம் ஜந்து அடிகள்,பத்து அடிகள் எனும் அளவிலே காணப்படுகிறது. எனவே கடல் மட்டத்தில் இருந்து சொற்ப அளவு உயரம் கொண்ட மாவட்டமே கிளிநொச்சியாகும்.

அவ்வாறான ஒரு மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்துகின்ற முறையும், பயன்படுத்துகின்ற அளவும் நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும். நிலத்தடி நீர் என்பது வரையறுக்கப்பட்ட அளவாகும். நிலத்தடி நீர் வளம் பெருகி வருகின்ற வளம் அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். பத்து பதினைந்து அடிகள் ஆழத்தில் காணப்பட்ட நிலத்தடி நீர் நூறு அடிகள் வரை சென்றிருப்பதன் காரணம் அதுவே. மேலே குறிப்பிட்ட பல்வேறு காரணங்களே நிலத்தடி நீரை பாதிக்கின்ற காரணிகளாக அமைந்து வருகின்றன. மேற்படி இந்தக் காரணிகள் மனித நடவடிக்கையின் விளைவே.

கிளிநொச்சியின் தரைத்தோற்ற அம்சங்களை பொறுத்தவரை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொடர்ச்சியான தரைத்தோற்றத்தின் அடிப்படையில் நிலத்திற்கு கீழ் நீர் பாறைகளில் தேங்கி நிற்கிறது. பாhறைகளின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அதேவேளை தொடராக அருவிகள் போன்றும் நிலத்திற்கு கீழ் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலத்தடி நீரையே மனித குலம் தனது அனைத்து தேவைகளுக்கும் பெற்று வருகிறது. ஆனால் நீரை பெறுகின்ற. பயன்படுத்துகின்ற வழிமுறைகளில் இன்னமும் பொறுப்பான ஒரு நிலையினை அடையவில்லை. நீர் முகாமைத்துவம் கொஞ்சமும் கடைப்பிடிக்கப்படவில்லை. குடிநீர் தொடக்கம் விவசாயம், தொழிற்சாலைகள் வரை அளவுக்கு அதிகமான நீர் பயன்பாடே இடம்பெற்று வருகிறது. இது நிலத்தடி நீரை வேகமாக குறைத்து வருகிறது. மேலும் மழை நீர் சேமிப்பு திட்டங்கள் என்பதும் மிக குறைவான அளவிலேயே ஆங்காங்கே காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து செல்லும் அதேவேளை கரையோரங்களில் இருந்து நிலம் படிப்படியாக உவராகியும் வருகின்றது. நிலம் உவராகி வருகின்றமைக்கு பிரதான காரணம் நிலத்தடி நீர் இன்மையே. நிலத்தடி நீர் இன்மைக்கு கிளிநொச்சியில் மிக முக்கிய காரணியாக அன்மைக்காலங்களில் உணரப்பட்ட ஒரு விடயம் குழாய் கிணறுகள்.

Tube-well2.jpg?resize=800%2C600
கடல் மட்டத்தில் இருந்து மிக குறைந்த உயரத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நாளாந்தம் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் கிணறுகள் குறைந்தது 100,150 அடிகளாக காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றருக்கு மேற்படாத ஒரு நிலப்பரப்பில் 100,150 அடிகளில் குழாய் கிணறுகள் அமைக்கப்படுவது. நிலத்தடி நீருக்கான புதைகுழிகளாகவே கருதப்படுகிறது.

சீரான பருவமழை இல்லை இதனால் பாரிய மற்றும் சிறிய குளங்களில் நீர் வற்றிப்போய் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலைமைகளை சமாளிக்க நாளாந்தம் மாவட்டத்தின் பல பிரதேங்களில் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் சுமார் பத்து வரையான குழாய் கிணறுகள் அமைக்கும் தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன இவர்கள் நாளாந்தம் மாவட்டத்தின் எங்கோ ஒர் இடத்தில் குழாய் கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களால் குறைந்து வருடத்திற்கு முன்னூறு குழாய் கிணறுகளாவது அமைக்கப்படும் என நீர்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அமைக்கப்படும் குழாய் கிணறுகள் மூலம் நாளாந்த பயன்பாடு தொடக்கம் விவசாய நடவடிக்கைகள் வரை நீர் பெருமளவு உறிஞ்சப்படுகிறது. ஒரு புறம் சீரான பருவமழை இல்லை, இதனால் நீர் சேமிப்பு அற்ற சூழல், இந்த நிலையில் ஏற்கனவே நிலத்தடியில் சேமிக்கப்பட்டிருந்த நீரை திட்டமிடாது பயன்படுத்துகின்ற பழக்கத்தோசம் என எல்லா நடவடிக்கைகளும் கிளிநொச்சியின் நிலத்தடி நீரை வெகுவாக பாதித்திருக்கிறது. பாதித்து வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து முப்பது மீற்றர்களே உயரமான கிளிநொச்சியின் சில பகுதிகளில் நூறு அடிகளுக்கு மேல் குழாய் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சி எடுக்கின்ற நடவடிக்கைகளால் நிலத்தடி நீர் வற்றிப்போகிறது. இதன் விளைவாக உயரத்தில் இருக்கின்ற கடல் நீர் பள்ளத்தில் வெற்றிடமாக உள்ள நிலத்தை நோக்கி ஊடுருகின்றது.

Tube-well3.jpg?resize=800%2C438

. இவ்வாறு ஊடுருவி வருகின்ற கடல் நீர் நன்னீர் தேங்கி நின்ற பாறைகளில் தங்கி விடுகிறது. அவ்வாறு தேங்கி நிற்கின்ற கடல் நீர் அப்படியே மேல் நோக்கியும் ஊடுருவி பரவுகிறது. இதன் விளைவு நிலம் உவராக மாறி பயன்பாடற்று போகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் இவ்வாறு உவராகி வரும் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளன.ஆதாவது இந்த நிலைமை ஒரு புற்றுநோய் போன்று பரவி வருகிறது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் வன்னேரிக்குளத்தின் பெரும் பகுதி இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வன்னேரிக்குளத்திற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் தற்போது மக்கள் இல்லை நிலமும் விவசாய நடவடிக்கைக்கு பொருத்தமற்ற நிலமாக மாறிவிட்டது காரணம் நிலமும் நீரும் உவராக மாற்றமடைந்தமையே. அவ்வாறே மாவட்டத்தின் பல கிராமங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள நீர்த் தேவையை உடனடியாக பூர்த்தி செய்துகொள்ள மக்கள் குழாய் கிணறுகளை அமைப்பதில் அதிகம் ஆர்வாம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் தேவையை பூர்த்தி செய்யும் வழியாக குழாய் கிணறுகள் காணப்படுகின்றன. குழாய் கிணறு அமைப்பதற்கு அடிக்கு ஆயிரம் ரூபா என்ற அளவில் இருந்த கூலி தற்போது 750 ரூபாவாக குறைந்துமுள்ளது. எனவே பொது மக்கள் தங்களின் நீர்த் தேவைக்கு குழாய் கிணறு அமைப்பதனையே நாடுகின்றனர்.

ஆழமான குழாய் கிணறுகளை அமைத்து பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள கடல் நீரை நிலத்தை நோக்கி கொண்டு வரும் செயற்பாடுகளை மனிதனே மேற்கொண்டு வருகின்றான். இப்போது வாழ்கின்ற நான் நல்ல தண்ணீரை பெற்றுக்கொண்டால் போதுமானது எனது பிள்ளைகளோ பிள்ளைகளின் பிள்ளைகளே எப்படியும் போகட்டும் என்ற மனநிலை வெளிப்பாட்டின் விளைவே இது. குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் மட்டுமல்ல விவசாயத்திற்குரியதும். பெற்றோலிய வளம் எவ்வாறு அருகி செல்லும் காலம் நெருங்கி விட்டதோ அவ்வாறே நீரும் அருகி செல்லும் காலம் நெருங்கி வருகிறது. கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில் சொன்னால் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டனர் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டனர் என்பது போல் இந்த நிலத்தடி நீர் விடயத்தில் கிளிநொச்சி வழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளும்.

Tube-well4.jpg?resize=800%2C442

http://globaltamilnews.com/

  • கருத்துக்கள உறவுகள்
  1. கிளிநொச்சி கடல் மட்டத்தில் இருந்து முப்பது மீட்டருக்கும் குறைவான உயரத்தில் இருப்பதால் நிலத்தடி நீரை எடுப்பதால் கடல்நீர் உள்ளே வருகிறது என்கிறார் இந்த ஆய்வாளர். அப்படியானால் யாழ்ப்பாணம் மற்றும் தீவு பகுதிகள் கிளிநொச்சியிலும் பார்க்க குறைவான உயரத்தில் இருந்தும் அங்கு மக்கள் குடிக்க நன்னீர் கிடைக்கிறதே? நான் வாழ்ந்த வீடு கடற்கரையில் இருந்து நடைதூரத்தில் உள்ளது. அங்கே குறைவில்லாமல் இன்றும் நன்னீர் கிடைக்கிறது. 
  2. மக்களுக்கு உயிர்வாழ நன்னீர் தேவை. மழை இல்லை. குளங்கள் வற்றிவிட்டன. கிணறு வெட்டினாலும் நூறு அடிக்கு மேல் வெட்ட வேண்டும். அதிலும் நிலத்தடி நீர் தான் வருகிறது. குழாய் கிணற்றிலும் நிலத்தடி நீர் தான் வருகிறது. கிணறு வெட்டுவதிலும் பார்க்க குழாய் கிணறு அமைப்பது வேகமானதும் மலிவானதும் குறைவான நிலத்திதை பயன்படுத்துவதும் ஆகும். மக்களுக்கு குடிநீர் கிடைக்க வேறு வழி இல்லை. இந்த ஆய்வாளரும் வேறு வழி இருப்பதாக கூறவில்லை. 
  3. இவரது ஆக்கம் குழாய் நீர் அமைக்கும் நிறுவனங்களுக்கு எதிரானதாகவே தெரிகிறது. மக்கள் மீதும் மக்களின் எதிர்காலம் பற்றியும் அக்கறை இருந்திருந்தால் குடிநீருக்கு மாற்றுவழி கூறி இருப்பார்.

கிணறுகள் அமைப்பதால் வற்றாத நிலத்தடி நீர், குழாய் கிணறுகள் அமைப்பதால் மட்டுமே வற்றும் என்பதற்கு என்ன ஆதாரம்?
குழாய் கிணறுகள் அமைத்து சிறுவிவசாயம் செய்வதை எதிர்க்கும் ஒரு தந்திரமா இது?
புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Jude said:
  1. கிளிநொச்சி கடல் மட்டத்தில் இருந்து முப்பது மீட்டருக்கும் குறைவான உயரத்தில் இருப்பதால் நிலத்தடி நீரை எடுப்பதால் கடல்நீர் உள்ளே வருகிறது என்கிறார் இந்த ஆய்வாளர். அப்படியானால் யாழ்ப்பாணம் மற்றும் தீவு பகுதிகள் கிளிநொச்சியிலும் பார்க்க குறைவான உயரத்தில் இருந்தும் அங்கு மக்கள் குடிக்க நன்னீர் கிடைக்கிறதே? நான் வாழ்ந்த வீடு கடற்கரையில் இருந்து நடைதூரத்தில் உள்ளது. அங்கே குறைவில்லாமல் இன்றும் நன்னீர் கிடைக்கிறது. 
  2. மக்களுக்கு உயிர்வாழ நன்னீர் தேவை. மழை இல்லை. குளங்கள் வற்றிவிட்டன. கிணறு வெட்டினாலும் நூறு அடிக்கு மேல் வெட்ட வேண்டும். அதிலும் நிலத்தடி நீர் தான் வருகிறது. குழாய் கிணற்றிலும் நிலத்தடி நீர் தான் வருகிறது. கிணறு வெட்டுவதிலும் பார்க்க குழாய் கிணறு அமைப்பது வேகமானதும் மலிவானதும் குறைவான நிலத்திதை பயன்படுத்துவதும் ஆகும். மக்களுக்கு குடிநீர் கிடைக்க வேறு வழி இல்லை. இந்த ஆய்வாளரும் வேறு வழி இருப்பதாக கூறவில்லை. 
  3. இவரது ஆக்கம் குழாய் நீர் அமைக்கும் நிறுவனங்களுக்கு எதிரானதாகவே தெரிகிறது. மக்கள் மீதும் மக்களின் எதிர்காலம் பற்றியும் அக்கறை இருந்திருந்தால் குடிநீருக்கு மாற்றுவழி கூறி இருப்பார்.

நன்னீர் ஊற்றுக்கள் கண்டறிவது ஒரு கலை யாழ் குடாவில் வயதானவர்கள் அதில் தேர்ச்ச்சி பெற்று இருந்தார்கள் பல்கலைகழகம் செல்லாமலே சொல்வார்கள்  "கோடியக்கா மூலையில் மின்னினால்  விடியகிடையில் மழை" அங்கு  நானிருந்தவரையில் அப்படி மின்னி மழை பெய்யாமல் விட்டதில்லை   யாழ் கிழக்கில் வண்ணாம் குளம் எனும் இடத்தில் பப்பா சம்மாட்டி என்பவர் இருந்தார் இப்ப இருக்கிறாரோ தெரியவில்லை கடல் அருகில் இந்த நன்னீர் ஓட்டம்களை கண்டுபிடித்து சொல்வதில் ஆள் கிங் .

மழைநீர் சேகரிப்புகள் இன்றி அதிக குழாய் கிணறுகள் வடகிழக்கில் அமைவது எதிர்காலத்தில் ஆபத்து தான் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

கிணறுகள் அமைப்பதால் வற்றாத நிலத்தடி நீர், குழாய் கிணறுகள் அமைப்பதால் மட்டுமே வற்றும் என்பதற்கு என்ன ஆதாரம்?
குழாய் கிணறுகள் அமைத்து சிறுவிவசாயம் செய்வதை எதிர்க்கும் ஒரு தந்திரமா இது?
புரியவில்லை.

இந்த விடையம் சம்பந்தமாக விரிவாக ஆராயுங்கள் விசயம் புரியும்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வயலைச் சுற்றி அகழி, அரை ஏக்கர் குளம்... மழைநீர் மேலாண்மையில் அசத்தும் கரூர் விவசாயி!

மழைநீர் மேலாண்மையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார் கரூர் விவசாயி ஒருவர்.

வயலைச் சுற்றி அகழி, அரை ஏக்கர் குளம்... மழைநீர் மேலாண்மையில் அசத்தும் கரூர் விவசாயி!

போதிய அளவு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழை பெய்தாலும், தமிழகத்தில் குறிப்பாக டெல்டாவில் நீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது. இந்த வருடம் கர்நாடகம் மற்றும் தமிழக மேற்கு எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத தென்மேற்குப் பருவமழை பெய்து, மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பியது. காவிரியில் இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் போனாலும், காவிரியையொட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பல நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் சூழல். அந்த மாவட்டங்களில், `கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை' என்று விவசாயிகள் கண்ணைக் கசக்கி வருகிறார்கள்.

மரங்கள்

இதற்குக் காரணம், ``அரசு தரப்பில் நீர் மேலாண்மை சம்பந்தமான திட்டங்கள் என்பது அரவே இல்லாததுதான். காமராஜர் காலத்தில்தான் அதிக அளவில் அணைகள் கட்டப்பட்டன. அதன்பிறகு, நீரைச் சேமிக்க எந்த அரசும் அணைகளைக் கட்டவில்லை. நீர்நிலைகளையும் செப்பனிடவில்லை" என்று புகார் வாசிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள். இந்நிலையில்,கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வயலைச் சுற்றி அகழிகள் வெட்டியும், அரை ஏக்கரில் குளம் வெட்டியும் மழை நீரைத் தேக்கி வருகிறார். இதன்மூலம், அவரது வயல் வெள்ளாமைக்கு நீர் வழங்கும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருப்பதாக மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார். நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக அவரது முயற்சிகள் இருக்கின்றன.

 

அகழி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது குள்ளமாபட்டி. இந்தக் குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான முத்துசாமிதான் நீர் மேலாண்மையில் கலக்கும் மனிதர். 70 வயதாகும் இவருக்கு ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. கரூர் மாவட்டத்திலேயே வறட்சி மிகுந்த பகுதி அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கும் இந்தப் பகுதிகள்தாம். வானம் பார்த்த பூமி இது. அதனால், இங்குள்ள விவசாயிகள் ஒன்று மழை நீர் இல்லை என்றால் கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மழை பெய்தால்தான் மற்ற விவசாயிகளின் கிணறுகளில் தண்ணீர் தேங்கும். ஆனால், மழை பெய்யாத காலங்களிலும் இவரது கிணற்றில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. காரணம், இவர் மேற்கொள்ளும் மழை நீரைத் தேக்கும் நீர் மேலாண்மைதான். தனது வயலில் கிடந்த கடலைக் கொடி கட்டுகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த முத்துசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

 


  விவசாயி முத்துசாமி

``எங்களுக்கு பரம்பரையா விவசாயம்தான் தொழில் தம்பி. வானம் பார்த்த விவசாயம்தான். மழை பேய்ஞ்சா வெள்ளாமைங்கிற நிலைமை. கிணறும் மழைக்காலத்தில்தான் நிறையும். ஆனால், ஒரு வருஷத்துக்கு முன்பு அசலூர்ல வேலை பார்க்கிற என் மகன்தான் இப்படி நீர் மேலாண்மை பண்றதைப் பத்திச் சொன்னான். அதைச் செஞ்சேன். அதன்பிறகு, தண்ணீர்ப் பற்றாக்குறையே அதிகமா வரலை. எனக்கு மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலமிருக்கு. கடலை, கம்பு, வெங்காயம், உளுந்து, முருங்கைன்னு பயிரிடுவோம். அஞ்சு ஏக்கர் நிலத்திலும் சுத்தி அஞ்சு அடி ஆழம், அஞ்சு அடி அகலத்துக்கு அகழி மாதிரி வாய்க்கால் பறிச்சிருக்கோம். அதேபோல், அரை ஏக்கர்ல குளம் ஒன்றும் வெட்டினோம். மழை பெய்ஞ்சதும் இந்த அகழிகளும், குளமும் முழுக்க நிரம்பிட்டுது. இதனால், மழை பெய்யாத போதும் கிணற்றுல தண்ணீர் வத்தலை. அகழிகள்ல தண்ணீர் நின்றதால், வயல்ல போட்டிருந்த வெள்ளாமைக்கும் அதிக தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. இத்தனை வருஷமா தண்ணீர்ப் பற்றாக்குறையால் அரைகுறை விவசாயம்தான் பார்த்துகிட்டு இருந்தேன். 

 

 

இந்த மண் சுண்ணாம்பு மண். அதிகம் மழையை ஈர்க்காத மண். அதனால், இந்தப் பகுதியில் மழையே குறைவாகத்தான் பெய்யும். ஆனால், அப்படிப் பெய்யும் கொஞ்சநஞ்ச மழைநீரையும் நான் முறையா நீர்மேலாண்மை பண்ணி சேமித்ததால், கடந்த ஒரு வருஷமா தண்ணீர்ப் பிரச்னை இல்லாம நிம்மதியா விவசாயம் பண்றேன். இதுக்குக் காரணம் என் மகன்தான். நான் 10 வயசிலிருந்து விவசாயம் பண்றேன். ஆனால், மழை நீரைச் சேமிக்கிற கூறு எனக்குத் தெரியலை. ஆனால், என் மகன் நம்மாழ்வார் மேல உள்ள பற்றுல, என்னையும் மாத்தி, என் விவசாயத்தைச் செழிப்பாக்கிட்டான். எந்த வறட்சியிலும் என் தோட்டமும், வெள்ளாமையும் மட்டும் பச்சைப் பசேல்ன்னு செழிப்பா இருக்கு. நான் இப்படி நீர் மேலாண்மை பண்ணி விவசாயம் பண்றதைக் கேள்விப்பட்டு பல விவசாயிகளும் வந்து பார்த்துட்டுப் போறாங்க.

 முத்துசாமி

அதேபோல், நான் என்னோட வயல்ல போடுற உளுந்து, கடலை உள்ளிட்ட பொருள்களை நேரடியாக வியாபாரிகள்ட்ட விற்கமாட்டேன். அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி, நேரடியாக மக்கள்ட்ட விற்கிறேன். இதனால், எனக்கும் கணிசமா லாபம் கிடைக்குது. மக்களுக்கும் தரமான உணவுப் பொருள்கள், எண்ணெய் கிடைக்குது. இந்த யோசனையையும் என் மகன் ரவிதான் எனக்குச் சொன்னான். கரூர் மாவட்டத்தில் பெரிய பெரிய ஏரிகளும், குளங்களும்,கண்மாய்களும் இருக்கு. அவை தண்ணீரின்றி வறண்டு கிடக்கு. அவற்றை முறையாப் பராமரிக்காம எல்லாம் தூர்ந்து போய் கிடக்கு. அவற்றை அரசாங்கம் முறையா தூர் வாரினா, மழைநீர் தேங்கி விவசாயிகள் சிறப்பா விவசாயம் பண்ண முடியும். ஆனால், அரசாங்கம் நீர் மேலாண்மை விசயத்தில் ஜீரோ அளவுக்குத்தான் ஆர்வமா இருக்காங்க" என்று நொந்துகொண்டார். அரசாங்கம் யோசிக்க வேண்டிய விஷயம்!

https://www.vikatan.com/news/tamilnadu/140532-karur-farmer-expertise-in-rainwater-management.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.