Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் 00 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

China-Jaff1.jpg?resize=800%2C450

 

யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை, கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மேற்கொண்டிருந்தனர்.

துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாள்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய சென் ஜீ தெரிவித்தார்.

சென்னும் அவரது நண்பர்களும், அல்லைப்பிட்டிப் பகுதியில் 92.4 சதுர மீற்றர் பரப்பளவிலான இடத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, 650 வரையான மட்பாண்டத் துண்டுகளைக் கண்டெடுத்தனர். அவற்றில் 600 இற்கு மேற்பட்டவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று சென் கூறினார்.

China-Jaff2.jpg?resize=618%2C420

பெரும்பாலான சீன மட்பாண்ட துண்டுகள், 11 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப் பகுதி அல்லது, 12 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியைச் சேர்ந்தவையாகும் என்று ஷங்காய் அருங்காட்சியகத்தின், சீன மட்பாண்ட ஆய்வாளர் லூ மிங்ஹுவா தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளில் கிண்ணங்கள், தட்டுகள், பானைகள் அடங்குகின்றன. இதுபோன்ற மட்பாண்டங்கள், தற்போதைய சீன மாகாணங்களான குவாங்டொங் மற்றும் பியூஜியானில் வெளிநாட்டு விற்பனைக்காக தயாரிக்கப்படுகின்றன. பண்டைய பட்டுப்பாதை தொடர்பான ஆய்வுகளை ஷங்காய் அருங்காட்சியகம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் யாங் ஷிகாங் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சீனா தொடர்பான வரலாற்று ஆவணங்களி்ல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகின்றன.
சீனாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான ஷெங், இலங்கைக்கு பலமுறை வணிக மற்றும் நட்புறவுப் பயணங்களை மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும், கல்வெட்டு ஒன்று 1911ஆம்ஆண்டு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

China-Jaff3.jpg?resize=382%2C254

பண்டைய கடல்சார் பட்டுப்பாதை வணிக வழி, பயண வலைப்பின்னல்கள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்புகள் குறித்த ஆய்வுகளில், இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு முக்கியமான பங்கை வகிக்கும் என்று யாங் கூறினார்.பண்டைய கடல்சார் பட்டுப் பாதையின் வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்வது, இலங்கையில் முக்கியமான சிதைவுகள் உள்ள பகுதிகளில் அகழ்வாய்வில் ஈடுபடுதல், கூட்டு கண்காட்சிகளை நடத்துதல், பணியாளர்களை பரிமாற்றம் செய்தல் தொடரபாக, இலங்கை மத்திய கலாசார நிறுவகத்துடன், சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம், ஐந்து ஆண்டு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.com/

  • கருத்துக்கள உறவுகள்

விடாமல் கிண்டவேனும்  அப்பத்தான் தொடர்ந்து யாழில் இருக்கலாம்?  

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒவ்வொருமுறையும் தோண்டும்போது, கிந்தியாவின் மலவசாலை தோண்டும் அதிர்வு டெல்லிக்கு ஏற்றப்படுத்துவீர்களானால், இது வரவேற்கப்பட வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சனான்... இவங்கள் தாட்டுப் போட்டு, எடுத்து காட்டப் போறாங்கள் எண்டு...

கொய்யால,

உங்கண்ட சமான்கள் ஒரு வருசம் தாக்குப் பிடிப்பதே பெரிய விசயம் இதுக்குள்ள 11ம், 12ம் நூறாண்டு சாமான் இன்னும் இருக்குதெண்டு கதை விடுறாங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்க மக்கள் சீனச்சட்டி.. சீனப் பீங்கான் பாத்திரங்களை காலம் காலமாகவே பாவித்து வந்திருக்கிறார்கள். அதுவும் இவங்களுக்கு நல்ல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பாகப் போகுது. 

சோழர் படையெடுப்பு சீன எல்லை வரை நீண்டு சீனாவோடு சோழர் தேசம் வர்த்தகம் செய்து வந்தமையும் இங்கு நினைவு கூறத்தக்கது. 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சங்காய்  நூதனசாலை தொல்பொருள் ஆய்வாளர்கள் இலங்கையின் வடபகுதியில், பண்டைய சீன பட்டுப் பாதைக்கும்  வட பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

ஐந்து பேர் கொண்ட இந்த குழுவின்  தலைவரான சென் ஜி, தாம் வடக்கே கண்டு கொண்டதை டெய்லி மிரர் பத்திரிகைக்கு பகிர்ந்து கொண்டார். சீனாவின் பட்டுப் பாதையில் வட பகுதி ஒரு அங்கமாக விளங்கியதாக தெளிவு படுத்தினார்.

image_1544210803-22dd8be757.jpg

அவரது பேட்டியில் இருந்து சில பகுதிகள்....

யாழ்ப்பாணத்தில் என்ன கண்டுபிடித்தீர்கள்?

இலங்கை, சீன குழு ஒன்று ஆகஸ்ட், செப்டம்பர் காலப்பகுதியில் வடக்கே, குறிப்பாக ஊர்காவல்துறை பகுதியில் அல்லைப்பிட்டி எனுமிடத்தில், ஒரு பரீட்சார்த்த குழி ஒன்றை தோண்டி, 11ம், 12ம் நூறாண்டை சேர்ந்த சீனத்து மட்பாண்டங்களை கண்டெடுத்தது. இவை வட சீன சோங் வம்சத்தினை சேர்ந்தது.

யாழ்ப்பாணத்தில் இந்த ஆய்வை நடாத்திய, முக்கிய கரணம் என்ன ?

வடக்கே யாழ்ப்பாணம் மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. தென்னிந்தியாவின் துறைமுகங்களுக்கு அருகே, பழைய கடல் பாதைகளுக்கு அண்மையாக இருந்த யாழ்ப்பாண துறைமுகம் முக்கியமான ஒரு இடமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் முன்னரும் சீன மட் பாண்டங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருந்ததால், இம்முறையும் ஆய்வினை நடத்தினோம்.
 

http://www.dailymirror.lk/article/Northern-Sri-Lanka-an-important-trade-link-with-China-Archaeologist-159526.html

Edited by Nathamuni

1977 இல் எமது பல்கலைக்கழக விரிவுரையாளரான ashley De Vos ஜெர்மனில் இருந்து வந்த மண்பாண்ட தொல்பொருள் ஆய்வாளர் ஒருவருடன் கள வேலை செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு உதவி செய்ய எங்களை அழைத்திருந்தார். அல்லைப்பிட்டியில் கட்டட வேலைகளுக்கு தேவையான மணல் தோண்டும்போது மிகப் பெரிய சிறிய வகையான சீன மண்பாண்டங்கள் வந்ததாகவும் அதை அறிந்து ஆய்வு செய்யவும் வந்திருந்தார்கள். இரண்டு வாரமாக மணலை தோண்டி நிறைய பாத்திரங்களின் பகுதிகளை சேர்த்து ஒருங்கிணைத்து அவற்றை ஜெர்மனிக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தால் யாழ் நூதனசாலைக்கு வழங்கியிருந்தார். இது பற்றி எதுவும் குறிப்பிடாமல் எதோ இப்போதுதான் சீனாவில் இருந்து வந்து தோண்டி கண்டுபிடித்ததாக சொல்வது அபத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, hasan said:

1977 இல் எமது பல்கலைக்கழக விரிவுரையாளரான ashley De Vos ஜெர்மனில் இருந்து வந்த மண்பாண்ட தொல்பொருள் ஆய்வாளர் ஒருவருடன் கள வேலை செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு உதவி செய்ய எங்களை அழைத்திருந்தார். அல்லைப்பிட்டியில் கட்டட வேலைகளுக்கு தேவையான மணல் தோண்டும்போது மிகப் பெரிய சிறிய வகையான சீன மண்பாண்டங்கள் வந்ததாகவும் அதை அறிந்து ஆய்வு செய்யவும் வந்திருந்தார்கள். இரண்டு வாரமாக மணலை தோண்டி நிறைய பாத்திரங்களின் பகுதிகளை சேர்த்து ஒருங்கிணைத்து அவற்றை ஜெர்மனிக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தால் யாழ் நூதனசாலைக்கு வழங்கியிருந்தார். இது பற்றி எதுவும் குறிப்பிடாமல் எதோ இப்போதுதான் சீனாவில் இருந்து வந்து தோண்டி கண்டுபிடித்ததாக சொல்வது அபத்தம். 

இதை எல்லாம் ஈழதத தமிழரை கருவறுக்க வந்த ஹிந்தியை படைகள் ஒன்றில் அழித்தன அல்லது மூட்டை கட்டி கிந்தியவிடற்கு சரக்காக கப்பலில் அனுப்பி வைத்துவிட்டது.

இதன் நோக்கம், ஈழத்தமிழரின் பூர்விகத்தையும், ஆட்சி உரிமை வரலாற்றையும் மறைத்தது, ஈழத்தமிழ் தேசத்தை அழிப்பதத்திற்கு.

இதை செய்த ஹிந்தியை அதிகாரி,மலையாள கேர்ணல் ஹரிஹரன் என்பதுவும் ஓர் ஊகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இப்போது அவசரப்பட்டு தனது பண்டைய பாத்திரங்களைத் தேடுவதன் மர்மம் என்ன?

சீனாவுக்கும் இலங்கைக்கும் புராதன காலத்திலிருந்தே தொடர்பிருந்தது என்று நிறுவுவதால் என்ன லாபம் அதற்குக் கிடைக்கப் போகிறது?

இது, அகல்வாராய்ச்சி என்கிற போர்வையில் வடக்கில் நிரந்தரமாகவே சீனாவின் பிரசன்னத்தை அமைக்கும் நோக்கமாக இருக்கக் கூடாது?

அநேகமான வெளிநாட்டு அரச நிறுவங்கள் தமது உழ்ழியர்கள் என்கிற போர்வையில் அனுப்பிவைப்பது உளவாளிகளைத்தான். ஆகவே, இப்போது பாத்திரம் தேடும் சீனர்கள், உளவாளிகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு பிரச்சனையாக இருக்குமா என்பது சந்தேகமே. முதலில், சீனாவின் பிரசன்னம் தனது தென்கோடியில் இருப்பதாக அவர்கள் உணரவேண்டும். ஆனால் அப்படி அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. 

 இரண்டாவது, சீனாவின் பிரசன்னம் தமது தென்கோடியில் இருப்பதை உணர்வதன் மூலம் அதுபற்றி அவர்கள் செய்யவேண்டியவை தொடர்பான புரிதல். இதுகூட அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையில், சீனாவின் பிரசன்னத்தை முதன் முதலில் வரவிட்டவர்கள் இந்தியர்களே. தமிழர்கள் மீதான போருக்கு சீனாவிடமிருந்து நீங்கள் உதவிகளைக் கேட்கலாம் என்று சிங்களத்திற்கு அனுமதியளித்தவர்கள் அவர்கள் தான். தமிழ்நாட்டு அழுத்தத்தினால், தம்மால் ஆயுத ரீதியாக பெருமளவில் உதவ முடியாது என்று இலங்கையிடம் கூறியதாகவும், அதன்பொழுது, தாம் சீனாவிடம் உதவி கேட்பதால் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனையில்லையே என்று இந்தியாவிடம் இலங்கை கேட்டபோது, தாராளாமகாப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தியா கூறியதாகவும் கோத்தா முதல் இந்திய பத்தி எழுத்தாளர்கள் வரை சொல்கிறார்கள். ஆக, சீனாவிடம் இலங்கை பெறும் ஆயுத உதவியென்பது வெறும் ஆயுதங்களுடன் மட்டும் நிற்கப்போவதில்லை என்று நன்றாகத் தெரிந்திருந்தும்கூட, சீனாவை அன்று வரவிட்டார்கள். 

தமிழர்களை அழித்து தனது சொந்தப் பழிவாங்கலை நிறைவுசெய்யும் சபதத்தின் முன்னால், இலங்கையில் சீனாவின் பிரசன்னம் என்பதோ அல்லது தனது தென்கோடியில் சீனாவின் நிரந்தர இருப்பென்பதோ ஒரு பொருட்டாக சோனியா எனும் விதவைக்கும், அவரின் வேட்டை நாய்களான மலையாளிகள்  சிவ்ஷங்கர் மேனன், நாராயணன், அந்தோனி மற்றும் பிரணாப் முகர்ஜிக்கோ இருக்கவில்லை.

எவன் கழுத்து அறுபட்டால் என்ன, தனது சொந்தப் பழிவாங்கல் முடிந்தால்ச் சரி. இது இந்தியாவின் அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்லாமல், சாதாரண போலித் தேசியவாத இந்தியர்களுக்கும் பொருந்தும்.

தமிழர்களைப் பொறுத்தவரை இனி இழப்பதற்கு எதுவுமில்லை. மீளப் பெறுவதற்கான சாத்தியமுமில்லை. சர்வதேச பலப்பரீட்சையில் நாம் அடிபட்டுப் போவதே நடக்கப்போகிறது. ஆனால், இந்தியாவுக்கு அப்படியல்ல. இழப்பதற்கு நிறையவே இருக்கிறது. தனது அகம்பாவத்தாலும், சிற்றினங்களைப் பழிவாங்கும் எண்ணத்தாலும், சுயநலத்தாலும், நாட்டின் பாதுகாப்பை விடவும் சொந்த நலன்களை முன்னிறுத்தும் அரசியல் தலைவர்களாலும் இந்தியா அழிக்கப்படும். ஈழத்தமிழினம் முற்றாக அழியுமுன்னர் இது நடக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.