Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்)

[08 - April - 2007]

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு வேளையில் கதவுகளை உடைத்துக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் ஆயுதக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவதுடன் குடும்பத்தவரின் கண்முன்னே பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

ஆயுத முனையில் நிர்வகிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் மாலை 6 மணியுடன் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டத்தால் மக்கள் எவரும் வெளியில் நடமாட முடியாத சூழலே நிலவி வருகின்றது. மாதகல் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, முகமாலை வீதி, தீவுகளுக்கான வீதியென குடாநாட்டின் அனைத்து பிரதான வீதிகளும் அரச படைகளின் கடுகளவும் பிசகாத கண்காணிப்பின் கீழேயே உள்ளது. அதுவும் கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வடபோர் முனையில் வெடித்த சமரையடுத்து யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் வலைப்பின்னலான சோதனைக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண நகரம் படைகளின் 24 மணிநேர கூர் விழிப் பார்வையிலேயே இருந்து வருகின்றது.

சந்தேகத்திற்கிடமான எவரது நடமாட்டம் இப் பகுதிகளில் இருந்தாலும் கணப் பொழுதில் இராணுவத்தினரின் 'உந்துருளி கொமாண்டோக்கள்' ஸ்தலத்தை சுற்றி வளைக்கும் அதீத உஷார் நிலையிலேயே அரச படைகள் குடாநாட்டில் நிலைகொண்டுள்ளன என யாழ். நகரவாசியொருவர் தெரிவித்தார்.

அதாவது இன்று யாழில் நிலவும் சூழ்நிலைகளின் படி மாலை 6 மணிக்குப் பின்னர் 'ஆட்சியாளர்'களைத் தவிர எவரும் ஊசாடக் கூட முடியாது. நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் இரவு வேளைகளில் ஆயுதம் தரித்த கும்பல்கள் எவ்வாறு நடமாடுகின்றன? இந்தக் கும்பல்களின் நடமாட்டம் மாத்திரமன்றி இவற்றின் அடாவடித்தனங்களும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தும் வருகின்றன.

மக்கள் நிலைப்பட்ட சமூகம் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் குடாநாட்டின் `துரதிர்ஷ்ட நிர்வாகி'களால் ஒடுக்கப்பட்டும் மக்களின் பாதுகாப்புக்காக பாடுபட்டோர் சுட்டுச் சரிக்கப்பட்டும் சமூகத்தின் முதுகெலும்பு உடைந்து போயுள்ள நிலையில் இவ்வாறான கொடூரச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் அத்துமீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்கக் கூட முடியாதவர்களாக யாழ்ப்பாண மக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் யாழ் மாநகரசபைக்கு சற்று வெளியேயுள்ள பிரதேசமொன்றில் ஊரடங்கு வேளையில் கதவை உடைத்துக்கொண்டு ஆயுதங்களுடன் வீடொன்றுக்குள் புகுந்த கும்பலொன்று பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டதுடன் வீட்டிலிருந்த மாணவியை வீட்டின் அறை ஒன்றுக்குள் இழுத்துச் சென்று மயக்கமுறச் செய்தபின்னர் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் மாணவியின் பெற்றோரை மற்றொரு அறையில் பூட்டி வைத்திருந்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை யாழ்ப்பாண வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேபோன்ற இன்னொரு சம்பவம் யாழ் நகருக்குச் சற்று வெளியே இடம்பெற்றதாகவும் இதன்போது ஆயுதக் கும்பலால் ஆசிரியை ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே பாணியிலான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றபொழுதும் அச்சம் காரணமாக எவரும் யாரிடமும் முறையிட முன்வருவதில்லையென கூறப்படுகின்றது.

கர்ப்பிணித் தாயிடம் இம்சை

இது இவ்வாறிருக்க, வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற கும்பல் வீட்டுக்கு நடுவே மலம் கழித்து அசிங்கப்படுத்திய சம்பவமொன்றும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கணவனும் மனைவியும் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற ஆயுதக் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு கணவனை கட்டி வைத்துவிட்டு கர்ப்பிணியாகவுள்ள மனைவியை பாலியல் இம்சை செய்துள்ளது இந்தக் காடையர் கும்பல். இவ்வாறு ஆயுதக் கும்பல்களின் அட்டகாசம் அளவற்றுச் சென்று கொண்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களில் சரளமாகத் தமிழ் கதைக்கக் கூடியவர்களும் இடம்பெற்றிருப்பதாக கும்பலின் அடாவடித்தனங்களுக்குள் அகப்பட்டு செய்வதறியாதுள்ள மக்கள் கூறுகின்றனர். கொள்ளையிடுவது பின்னர் வீட்டிலுள்ள பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துவது என்கின்ற பாணியை தற்பொழுது இந்தக் கும்பல்கள் பின்பற்றி வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய கொள்ளையர்கள் `நடந்ததை இயக்கத்திடம் போய்ச் சொல்லு' எனக் கூறிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ் விடயத்தைப் பார்க்கின்றபொழுது அரசியல் பழிவாங்கல் ஒன்று நிகழ்வது புலப்படுவதாகவும் சாதாரண கொள்ளையர்கள் இவ்வாறு சொல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் குடாநாட்டின் மனித உரிமைகள் குறித்த ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை கேட்டபொழுது;

'இந்த நாசகார வேலைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு. இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். படையினரின் உதவியின்றி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பது அனைவரும் அறிந்த விடயம். படையினருக்கு தகவல் கொடுக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த, ஈடுபடும் கும்பலும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள துணை இராணுவக் குழுவும் இச் செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் கண்டிருக்கின்றனர்' என்றார்.

உண்மையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை சுதந்திரமாக செயற்பட விட்டுவிட்டு தமக்கு வேண்டிய தகவல்களை பெறுவதில் படையினர் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய கஜேந்திரன், அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு பணத்திற்கு மேலதிகமாக மக்களை மிதிக்கும் சுதந்திரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொலை மற்றும் காணாமல்போதல் பற்றிய தகவல்களையே மக்கள் வழங்கி வருவதாகவும் வல்லுறவுச் சம்பவங்கள் உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் முறையிடுவதற்கு அச்சம் காரணமாக முன்வருவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அவலங்களை முறையிட முடியுமெனவும் அவற்றைத் தாம் இரகசியமாக பாதுகாப்பதுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஆதாரபூர்வமாக முறையிடுவதற்கு உதவியாக அமையுமெனவும் குறிப்பிட்டார். (தொலைபேசி:-021 228 5949/ தொலை நகல்:- 021 228 5854)

மேலும், இலங்கைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையே ஏற்றுக்கொள்ளும் சில சர்வதேச அமைப்புகள் இன்னமும் இருந்துவருவது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இயலுமான வரை மக்கள் ஷ்ரீலங்கா பொலிஸில் அவலங்களைப் பதிவுசெய்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்வது உறுதிப்படுத்துவதற்கு உதவும் என்றார்.

நிலைமைகள் இவ்வளவு தூரம் பயங்கரமாக உள்ளபோதும் யாழ்ப்பாணத்திலிருந்து எந்தவித எதிர்ப்புக் குரல்களும் இதுவரை எழவில்லை. சில விடயங்கள் சாத்தியப்படாதென தெரிந்தும் - சரிவராதெனப் புரிந்திருந்தும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்து யாழ்ப்பாண மக்களுக்காக குரல் கொடுப்பதாக காட்டி அரச பத்திரிகைகளில் இடம்பிடிப்பவர்கள் இவற்றுக்கெதிராக குரல் கொடுக்கலாமே.

வெள்ளைவானில் கடத்தப்படுவோர் தப்பியோடும்போது சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். பாதிரியார்கள் உள்ளிட்டோர் காணாமல் போகின்றார்கள். தாக்கப்படுகின்றார்கள். வீடு புகுந்து கொள்ளையடிக்கும் ஆயுதக் கும்பல்கள் பெண்களை குதறிச் செல்கிறது. இவற்றுக்கெதிராக குரல் கொடுக்காமல் மௌனித்திருக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதிநிதிகள், மக்கள் கேட்காத - கேட்டும் கிடைக்காத விடயங்களை கோருவது புரியாத புதிராக இருந்து வருவதுடன் வேதனைக்குரியதும் கூட.

தினக்குரல்

இது ஒன்றும் புதிதல்ல

புலி இருக்கும் வரை வலி இருக்கத்தான் செய்யும்

மே. த கு வைக்கேட்டுப்பாருங்கோ எதாவது வித்தை காட்டுவார என்று?

இல்லை என்றால் மானங்கெட்டு சாகவேண்டியது தான்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: ?????????

இது ஒன்றும் புதிதல்ல

புலி இருக்கும் வரை வலி இருக்கத்தான் செய்யும்

மே. த கு வைக்கேட்டுப்பாருங்கோ எதாவது வித்தை காட்டுவார என்று?

இல்லை என்றால் மானங்கெட்டு சாகவேண்டியது தான்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: ?????????

மேதகுவை கேட்பது இருக்கட்டும் நீர் யார் அவரை கேட்பதுக்கு?அவருக்கு பக்கபலமாய் இருந்தால் ஓகே!

புலி இல்லை எண்டால் தமிழினம் இருந்திருக்காது.எப்பயோ அழிக்கப்பட்டிருக்கும்.சாவு நெருங்க நெருங்க கொட்டமட்டிக்கும் இந்த நாய்கள் அதுக்காக இப்படி கவலைப்படலாமா வில்லன் மைந்தன்

இருங்கள் வித்தைகள் பலவுண்டு வரும் நாளில்

வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க படைத்தளத்தைத் தாக்கியபோது:

While we are all rejoicing in this GREAT achievement,

I wonder what could have happened in the below situation.

1) If STF informed the SLAF about two unknown plane's flying towards colombo

2) If any SLAF helicopters fly nearby

3) As usual indian's Air Force tipping SLAF about something flying towards colombo

கரவெட்டியில் புலிவீரர் காட்டிக்கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டபோது:

What to do "vaitherichal" , Kadavul Siththam can't help it

ஊரடங்குவேளையில் வடக்கில் நடக்கும் கொடுரங்களை விமர்சித்தபோது:

இது ஒன்றும் புதிதல்ல

புலி இருக்கும் வரை வலி இருக்கத்தான் செய்யும்

மே. த கு வைக்கேட்டுப்பாருங்கோ எதாவது வித்தை காட்டுவார என்று?

இல்லை என்றால் மானங்கெட்டு சாகவேண்டியது தான்

?????????

யார் இந்த விளான் மைந்தன்?

கருத்தின் மூலம் தன்னை தானே இனங்காட்டியுள்ளார் தெரியவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்)

தமிழீழம் வேண்டாம்

புலிகள் வேண்டாம்

வெளிநாடுகளில் வெள்ளைக்காறருடன் உங்களால் வாழ முடியுமென்றால்

ஏன் சிங்களவருடன் எம்மால் ஒன்றாக வாழ முடியாது என்று கேட்போருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

வீட்டில எல்லாத்தையும் இழக்க தயாராய் இருப்பவருக்கு ........

உயிர் மேல் இவ்வளவு பயமா???

வணக்கம் நோர்வேயிஜன்.

தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்? துரோகி என்று எதாவது பட்டம்???????

15 வருடங்களாக அரசியல்வாதி பேச்சு கேட்டு ஏமாந்து

20 வருடங்களாக புலி பேச்சு கேட்டு ஏமாந்து வருகின்ற ஒரு தமிள் மகன்

  • கருத்துக்கள உறவுகள்

15 வருடங்களாக அரசியல்வாதி பேச்சு கேட்டு ஏமாந்து

20 வருடங்களாக புலி பேச்சு கேட்டு ஏமாந்து வருகின்ற ஒரு தமிள் மகன்

உம்மை மாதிரி கனபேர் எங்களுக்க இருக்கினம்

அரசியல்வாதி செய்வினம்

புலிகள் செய்வினம்

என்று சொல்லிச்சொல்லிக்கொண்டே இருக்கினம்

நீங்கள் எப்ப செய்யப்போறியள்???

அப்ப உங்கட கேள்விக்கு பதில் கிடைக்கும்

எப்ப?????

வணக்கம் நோர்வேயிஜன்.

தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்? துரோகி என்று எதாவது பட்டம்???????

15 வருடங்களாக அரசியல்வாதி பேச்சு கேட்டு ஏமாந்து

20 வருடங்களாக புலி பேச்சு கேட்டு ஏமாந்து வருகின்ற ஒரு தமிள் மகன்

தாங்கிக் கொள்வதற்கு அவலங்கள் கடினமானதுதான். அந்தத் தாக்கந்தான் உநங்களிடம் காணப்படுகிறது. உணர்வுகளால் எதையும் சாதிக்க முடியாது. அதனால்தான் 15 வருடங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அந்த உணர்வுகளின் செயல் வடிவமாகத்தான் இன்று விடுதலைப்புலிகள் உள்ளார்கள். அவலங்கள் சிலகாலங்களுக்குத் தாங்கிக் கொள்ளற்படல் வேண்டுமென புலிகளின் பூடகமானதொரு அறிவித்தலை மிக அண்மையில் கேட்டிருந்தேன். ஆக புலிகளின் காத்திருப்புக்குக் குந்தகம் கற்பித்தல் கூடாதென நினைக்கின்றேன்.

வணக்கம் விளான் மைந்தன்,

உங்களை இனங்கண்டு துரோகி என்று பட்டம் கொடுத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல் வைத்து ஊர்பவனிக்கு அனுப்புவதல்ல எனது கேள்வியின் நோக்கம். ஒவ்வொரு முறையும் நீங்கள் கருத்துகளை முன்வைத்தபோது அவற்றில் தமிழ் தேசிய எதிர்ப்பு முலாம் பூசப்பட்டு எடுத்த எடுப்பில் மறுத்துப் பேசும் குணாதிசயம் காணப்பட்டதால் தான் நான் அக் கேள்வியைத் தொடுத்தேன்.

இங்கு களமிறங்கும் பலர் நீண்ட காலக் கருத்தாடல் வாயிலாகவோ அல்லது தமது படைப்புகள் மூலமாகவோ தங்களின் குணாதிசயங்களையும் மொழி, தாய்நாடு, தேசியம், விடுதலைப் போராட்டம், மதம் சார்ந்த விடயங்கள் என்பவற்றில் தமக்குள்ள நாட்டம் பற்றியும் நாளும் பொழுதும் வெளிப்படுத்திக்கொள்வது இயல்பு. எனவே கள நண்பர்களும் தாம் யாருடன் கருத்தாடல் செய்கிறோம் என்பதை ஓரளவுக்காவது அறிந்து செயற்படுவதும் ஒரு எழுதாத விதி தான். உங்களைப் பொறுத்த வரை இதற்கான வாய்ப்புகளை நீங்கள் கள நண்பர்களுக்கு வழங்கியிருக்கவில்லை.

நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி தமிழ் தேசியத்தின்பால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்புணர்வுக்கு உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப்போல நீங்களும் ஒரு ஈழத்தாயின் பிள்ளை என்பதை என்னால் உணரக்கூடியதாயுள்ளது. உங்கள் எதிர்பார்ப்புகள் நீங்கள் வழங்கிய காலவரையறைக்குள் நிறைவேறாததால் விரக்தியடைந்துள்ளீர்கள் என்பதும் புரிகிறது.

அரசியல்வாதிகளையும் போராளிகளையும் நம்பி ஏமாந்ததாக குறைகூறும் நீங்கள் உங்கள் பங்களிப்புகளையும் கடந்த காலங்களில் குறைபடாது செய்திருப்பீர்களென்றே நம்ப இடமிருக்கிறது. உங்கள் பங்களிப்பு என்று இங்கு நான் கூறுவது ஒரு முக்கிய விடயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்டுவதற்கே. பங்களிப்பு என்று சொல்லும்போது பொருள், பணம், நேரம் மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அங்கு தான் நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்.

காரணம், போரட்டத்திலும் போராளிகளிலும் நீங்கள் வைக்கும் நம்பிக்கையும் நீங்கள் வழங்கும் முக்கிய பங்களிப்பு என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும். உங்கள் நம்பிக்கை எவ்வளவு என்றோ அல்லது எவ்வளவு காலத்துக்கு என்றோ வரையறையிட்டு கூறமுடியாது. நம்பிக்கை இழந்த ஒருவருக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துமளவுக்கு நீங்கள் நம்பிக்கையுள்ளவராய் இருங்கள் . உங்கள் நம்பிக்கை நிறைவேறும் காலம் வரை நீங்கள் நம்பிக்கையுடனிருங்கள்.

நீங்கள் முற்றிலும் உங்கள் எதிர்பார்ப்புகளை விட்டு விடவில்லை என்று எனது உள்மனம் சொல்கிறது. எனவே உங்கள் நம்பிக்கையை நீங்களாகவே வேண்டுமென்று இழந்துள்ளீர்களே தவிர, வேறு எவரும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக நீங்கள் நினைப்பதில் எதுவித உண்மையுமில்லை. எந்தக் காரணங்களுக்காகவும் நீங்கள் தமிழ் தேசியத்தை விட்டு விலகிச் செல்லுவீர்களேயானால் உங்களை அறியாமலே நீங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் நெருங்கிச் செல்கிறீர்கள் என்பது தான் அர்த்தம்.

Edited by Norwegian

வணக்கம் நோர்வேயிஜன்.

தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்? துரோகி என்று எதாவது பட்டம்???????

15 வருடங்களாக அரசியல்வாதி பேச்சு கேட்டு ஏமாந்து

20 வருடங்களாக புலி பேச்சு கேட்டு ஏமாந்து வருகின்ற ஒரு தமிள் மகன்

அது தமிழ், தமிள் அல்ல :angry: :angry: :angry: :angry: :angry:

யாழில் கிளைமோர் தாக்குதல் - ஒரு இராணுவம் பலி – 6பேர் காயம்

யாழ்நகருக்கு வடமேற்காக 12 கிலோமீற்றர் தொலைவில் பண்டத்தரிப்பு வலிகாமம் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் ஆறு சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

காயமடைந்த இராணுவத்தினருள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. அச் சம்பவம் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்கு அண்மையில் காலை 11.45மணியளவில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

pathivu.com

அங்கு, இவை தொடரும் போது அவையும் தொடரும்!

இங்கு, இவற்றுக்கு கைதட்டல்களும் அவற்றுக்கு பெருமூச்சும் தொடரும்!

இரவில் விதைத்து விட்டு, பகலில் தாக்கிவிட்டு, வெறி கொண்ட இராணுவப் பிசாசுகள் முன் மக்களை அம்மணமாக கைவிட்டு ஒளிந்து கொள்ளும் தீரர்களுக்கே இவை சமர்ப்பணம்!

மேலே நண்பர் மிக இலகுவாக யாழில் ஆங்கிலோ தமிழில் என்னைப் போல் எழுத இங்கே சொடுக்கவும்...

http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு, இவை தொடரும் போது அவையும் தொடரும்!

இங்கு, இவற்றுக்கு கைதட்டல்களும் அவற்றுக்கு பெருமூச்சும் தொடரும்!

இரவில் விதைத்து விட்டு, பகலில் தாக்கிவிட்டு, வெறி கொண்ட இராணுவப் பிசாசுகள் முன் மக்களை அம்மணமாக கைவிட்டு ஒளிந்து கொள்ளும் தீரர்களுக்கே இவை சமர்ப்பணம்!

சணக்கியன் உங்களின் கருத்து வித்தியாசமானதாக இருப்பினும்.......

விசமமும் கலந்திருக்கிறது! அதை கலப்பதுதான் உங்களின் இலட்சியமோ தெரியாது!

இராணுவ முகாம்களுக்குள் சிங்கள காடையரை முடக்குவதனால்தான்

மக்களை விடுவிக்க முடியும் என்னபதால்தான்...... தமது இன்னுணிரையும் அர்ப்பணித்து

பல இளம் வீரர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரிந்தும் நீங்கள் இவ்வாறு எழுதுவதன் நோக்கம்?

ஓரு நாளில் சிகரத்தில் ஏறிவிட முடியாது. சில அர்பணிப்புக்களும்...... காடையரின் அட்டுளியங்களும்தான் யாழில் பல வீரிய புலிகளை பிறப்பிக்க போகின்றது என்பது கடந்த கால வரலாறுகள் சொல்லுகின்றன.........

அரக்கர்கள் ஆடியபின் அழிந்ததாகவே நான் இதுவரையில் அறிந்திருக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

அங்குஇ இவை தொடரும் போது அவையும் தொடரும்!

இங்குஇ இவற்றுக்கு கைதட்டல்களும் அவற்றுக்கு பெருமூச்சும் தொடரும்!

இரவில் விதைத்து விட்டுஇ பகலில் தாக்கிவிட்டுஇ வெறி கொண்ட இராணுவப் பிசாசுகள் முன் மக்களை அம்மணமாக கைவிட்டு ஒளிந்து கொள்ளும் தீரர்களுக்கே இவை சமர்ப்பணம்!

இதைத்தான் சிங்களம் எதிர்பாத்து

இவற்றைச்செய்கிறது.

வெற்றி அவனுக்கே

சாணக்கியா

நீயுமா தளருகின்றாய்???

வணக்கம் நோர்வேயிஜன்.

தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்? துரோகி என்று எதாவது பட்டம்???????

15 வருடங்களாக அரசியல்வாதி பேச்சு கேட்டு ஏமாந்து

20 வருடங்களாக புலி பேச்சு கேட்டு ஏமாந்து வருகின்ற ஒரு தமிள் மகன்

உங்களில் ஒருவன் தான் இதை செய்கிறான்.உம்மைமாதிரி ஒருவன் போன் செய்தபடியால் தான் எம்மைமாதிரி கொஞ்சம் சிறையிருக்குது.அவையளைவெளியே எடுக்க கொஞ்சம் தவிக்குது.உங்களையெல்லாம் இப்பபுதிசா அனுப்பி வைகிறாங்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் ஒருவன் தான் இதை செய்கிறான்.உம்மைமாதிரி ஒருவன் போன் செய்தபடியால் தான் எம்மைமாதிரி கொஞ்சம் சிறையிருக்குது.அவையளைவெளியே எடுக்க கொஞ்சம் தவிக்குது.உங்களையெல்லாம் இப்பபுதிசா அனுப்பி வைகிறாங்கள் போல

நடத்துங்கோ

ஆனால் சிறிது பிற்போடலாமேயொழிய நிறுத்தமுடியாது.

உங்களில் ஒருவன் தான் இதை செய்கிறான்.உம்மைமாதிரி ஒருவன் போன் செய்தபடியால் தான் எம்மைமாதிரி கொஞ்சம் சிறையிருக்குது.அவையளைவெளியே எடுக்க கொஞ்சம் தவிக்குது.உங்களையெல்லாம் இப்பபுதிசா அனுப்பி வைகிறாங்கள் போல

நடத்துங்கோ

ஆனால் சிறிது பிற்போடலாமேயொழிய நிறுத்தமுடியாது.

--------------------

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் ரொக்கட்ரோ(Trocadero) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன

துன்பத்தின் போது அதற்கேற்பத் தாக்கமடையும் மனநிலை எல்லோருக்கும் பொதுவானதுதான். உண்மையில் அங்கு பெருத்த அவலமே நடைபெறுகிறது. இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணமென்பது எவ்வாறு பொருந்தும். அது விடுதலைப் புலிகளின் பிரதேசமாக இருப்பின் நாம் மட்டுமல்ல மற்றைய உலக நாடுகளும் கேள்விகளை எழுப்பியிருக்கும். ஆனால் இவை நடப்பதெல்லாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில். அதுவும் இராணுவத்திற்குத் துணைபோகும் ஒட்டுக்குழுக்களே இவ்வாறான செயல்களுக்கு வழிகாட்டுகின்றன. இதிலிருந்து தமிழர்களைக் காப்பதற்கு உள்ள ஒரேயொரு தரப்பு விடுதலைப்புலிகள் மட்டுந்தான். அவர்கள் நாடியுள்ள உபாயங்கள் எவ்வாறானதாக அமையப் போகின்றதென்பதைப் பொறுமையுடனும் காத்திருப்புகளுடனும் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு, இவை தொடரும் போது அவையும் தொடரும்!

இங்கு, இவற்றுக்கு கைதட்டல்களும் அவற்றுக்கு பெருமூச்சும் தொடரும்!

இரவில் விதைத்து விட்டு, பகலில் தாக்கிவிட்டு, வெறி கொண்ட இராணுவப் பிசாசுகள் முன் மக்களை அம்மணமாக கைவிட்டு ஒளிந்து கொள்ளும் தீரர்களுக்கே இவை சமர்ப்பணம்!

அப்போ ஆமி காரரை வீட்டை கூப்பிட்டு சோறும் கறியும் கொடுத்து அனுப்பலாம். நீங்கள் இதனைத்தானே சொல்லவாறீங்கள்.

வணக்கம் எல்லாருக்கும்

உங்கள் உள்ளக்கிடக்கைகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

ஆரம்ப காலத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஒடி விடுவார்கள்

அப்பொழுது நடந்த ராணுவ அட்டூளியத்தை எல்லாரும் இது தான் ஆரம்பம் என்று ஏற்றுக்கொன்டோம்

ஆனால் இப்பொழுது விமானத்தில் குண்டு போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்

இன்னும் ஏன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று ஒன்று இரண்டு இராணுவத்தை சுட்டோ அல்லது கண்ணிவெடி வைத்து தாக்குகிறார்கள்???????

*********

********* - நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அவசரம் வேண்டாம் விளான் மைந்தன். மக்களை அழிப்பதென்பது இலகுவான காரியமல்ல. உங்கள் உட்கிடைக்கைகளும் வெளிப்படையானதுதான். நீங்கள் வெளிப்படையாக எழுதிவிட்டீர்கள். பலர் விடுதலைப்புலிகள் மேல் கொண்ட நம்பிக்கையால் அவற்றை வெளிப்படுத்தவில்லை. இவற்றிற்கு முடிவுள்ளது. இந்த உலகம் ஒருகரைக்கு ஒதுங்கி போராட்டத்தின் நியாயத் தன்மையை விளங்கிக் கொண்டுள்ளது. மிகவிரைவில் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்பு இத்தகைய கேள்விகள் உங்களிடமிருக்காது. அதுவரை ஏற்படுகின்ற நம்பிக்கையீனங்களைப் பொறுத்து தேசியப் போராட்டத்துக்கான உங்களது ஆதரவினைப் பின்னிற்காது செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாருக்கும்

உங்கள் உள்ளக்கிடக்கைகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

ஆரம்ப காலத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஒடி விடுவார்கள்

அப்பொழுது நடந்த ராணுவ அட்டூளியத்தை எல்லாரும் இது தான் ஆரம்பம் என்று ஏற்றுக்கொன்டோம்

ஆனால் இப்பொழுது விமானத்தில் குண்டு போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்

இன்னும் ஏன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று ஒன்று இரண்டு இராணுவத்தை சுட்டோ அல்லது கண்ணிவெடி வைத்து தாக்குகிறார்கள்???????

*********

எல்லா தாய்மாரும் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் பின்னொரு நாளில் இறந்துதான் போகிறார்கள்..............................

அப்போ இந்த தாய்மார்கள் ஏன் பிள்ளைகளை பெறுகிறார்கள்?

இறந்து போவதற்கென்றே பெறுகின்றார்களா?

எல்லோரும் இறந்து போய்விடுவோம்........ எனும் எண்ணம் அந்த அபயத்தில் உள்ளவர்களால் முதலில் உணரப்பட வேண்டும். அதுவே எதிரியின் முதல் தோல்வி

தனது தோல்வியை நோக்கியே எதிரி நகருகிறான். வெற்றியை நோக்கி நாம் ஈழதமிழர்கள் நகரும் நாள் விரைவில்......... அந்நாளை புலிகள் புறகணித்தாலும்

ஏதோ பாடுபட்டு எதிரி உருவாக்கிவிடுவான்.

வணக்கம் எல்லாருக்கும்

உங்கள் உள்ளக்கிடக்கைகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

ஆரம்ப காலத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஒடி விடுவார்கள்

அப்பொழுது நடந்த ராணுவ அட்டூளியத்தை எல்லாரும் இது தான் ஆரம்பம் என்று ஏற்றுக்கொன்டோம்

ஆனால் இப்பொழுது விமானத்தில் குண்டு போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்

இன்னும் ஏன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று ஒன்று இரண்டு இராணுவத்தை சுட்டோ அல்லது கண்ணிவெடி வைத்து தாக்குகிறார்கள்???????

பின்னர் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு ஊர் உலகை கூட்டி நியாயம் கேட்டு என்ன பிரயோசனம்??????

குழந்தை பிள்ளை கூட சொல்லும் அண்ணா மார் சுட்டதால் தான் இராணுவம் சுட்டுது என்று

பொறுத்திருந்து பார்க்கலாம் ஆனால் ஒவ்வொரு நாளும் 10 அல்ல்து 15 பெருக்கு மேல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.......................

ஏல்லாரும் இறந்த பின் யாருக்கு தமிழீழம் வேண்டும்????????

*********

உங்களை போன்றவர்கள் மனநிலை தளர்ந்து இப்படி புலம்ப வேண்டும் என்பதற்காக தான் ஸ்ரீ லங்கா அரசு தன் அரச பயங்கரவாதத்தை அப்பாவி தமிழ் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இராணுவ பலத்தால் அழிக்க முடியாத புலிகளின் பலத்தை மக்களின் மனவலிமையை குன்றச் செய்து அழித்து விடலாம் என்று ஸ்ரீ லங்கா அரசு நினைக்கிறது.

உங்களின் புலம்பல்கள் ஸ்ரீலங்கா அரசிற்கு தன் வழிமுறைகள் மக்களிடம் வேலை செய்யத் தொடங்கி விட்டது என்கிற செய்தியை தான் கொடுக்கும். இந்த செய்திகள் தரும் உற்சாகத்தில் ஸ்ரீலங்கா அரசு தன் இனவெறிச்செயல்களை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

உங்கள் புலம்பல்கள் தான் அரசின் இலட்சியம். புரிந்து கொள்ளுங்கள்.

அது தவிர, இன்று புலிகள் தாக்குதல்களை நிறுத்தி விட்டால், அரசு தமிழர்களுக்கு பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நாலும் கலந்து ஊட்டி விடுமா?

1956ல், 1958ல், 1965ல், 1977ல், 1981ல் தமிழர்கள் மேல் சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட கொலைவெறிக்கும் வன்முறைகளுக்கும் எது காரணம்? புலிகளின் கெரில்லா தாக்குதல்களா காரணம்?

சிங்களரின் இனத்துவேசம் அல்லவா காரணம் இத்தனை வன்முறைகளுக்கும்.

புலிகள் தாக்கினர்கள் அதனால் அரசு பொது மக்களை தாக்குகிறது என்று எவராவது சொன்னால் அவர்கள் சிங்களத்தின் அரசியலும் இனவெறியும் அறியாத முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும். பொது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இந்த அரச பயங்கரவாதத்தின் அடிப்படை காரணி புலிகள் அல்ல. சிங்களத்தின் நாடி நரம்புகளில் ஊறிப்போன தமிழினத்துவேசம்.

2001ல் இந்திய பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டு தரைமட்டமாக்க காஷ்மீர் தீவிரவாதிகள் முயன்ற போதும் இந்திய வான்படை காஷ்மீரில் குண்டுகள் போடவில்லை. இந்தியாவில் இன்னும் தேசியம் அரை குறையாகவாவது இருப்பதற்கு இந்திய அரசின் சமயோசித நடவடிக்கைகள் காரணம். அது போல் ஸ்ரீலங்காவின் இனப்பிரச்சினையின் இன்றைய நிலைக்கு சிங்களத்தின் பௌத்த பேரினவாத கொள்கையும், தமிழினத்துவேசமும் முக்கிய காரணம்.

புலிகள் தாக்கிவிட்டு செல்லும் இடங்களில் உள்ள பொதுமக்கள் மீது மட்டுமே ஸ்ரீலங்கா அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது என்று சொல்வது அறியாமை அல்லது அப்பட்டமான பொய்.

செஞ்சோலையில் 60க்கும் மேற்பட்ட சிறார்கள் ஸ்ரீலங்காவின் விமான குண்டு வீச்சால் துடிதுடிக்க செத்தார்களே அதற்கு எது காரணம்?

கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடந்த ஒரு வருட காலத்தில் காணாமல் போய் இருக்கிறார்களே அதற்கு யார் காரணம்?

கொழும்பில் தமிழ் வர்த்தகர்களிடம் அரசின் ஆசியுடன் கப்பமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் பயமுறுத்தி பெறப்படுகிறதே அதன் அடிப்படை தான் என்ன?

இவை எல்லாம் புலிகள் தாக்கி விட்டு ஓடி விடுவதாலா நடக்கிறது.

வில்லன் மைந்தன் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நாம் எவரும் 1000 வருடங்கள் வாழப்போவதில்லை. அழிவுகள் இல்லாத ஆக்கம் இயற்கையில் இல்லை. இது உலகம் கண்ட முதல் போரும் இல்லை. ஹிட்லரின் சர்வாதிகாரத்தில் இருந்து உலகை காப்பாற்ற கிட்டத்தட்ட 2 கோடி மக்களின் உயிர்கள் பலியாக தேவைப்பட்டது . இன்று உலகம் அனுபவிக்கும் ஜனநாயக அரசியலும், பொருளாதார நலன்களும் கூட அந்த 2 கோடி மக்களின் மரணத்தின் மேல் கட்டப்பட்டது தான்.

இன்று உலகமே வியக்கும் தாஜ்மஹாலும் தஞ்சை கோபுரமும் கட்டி முடிப்பதற்குள் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களை பலி எடுத்தது என்று தெரியுமா. அந்த தொழிலாளர்களின் உயிர்கள் பெறுமதியானது தான். ஆனால் அவர்களின் மரணத்திற்காக அன்றைய மனிதன் புலம்பி அழுது புரண்டிருந்தால் ஒரு தாஜ்மஹாலும், ஒரு தஞ்சை கோபுரமும் ஒரு ஈபில் டவரும் தோன்றி இருக்காது

மக்களின் உயிர்கள் பெறுமதியானது தான் மறுக்கவில்லை. இழப்புகள் கூடியவரை தவிர்க்கப்பட வேண்டியவை தான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் தியாகமும், இழப்பும் இல்லாமல் மனிதன் எதையும் எப்போதும் சாதித்தது இல்லை.

புலிகள் இருக்கட்டும். அரசுடன் கூடிக்குலாவும் டக்ளஸ், சங்கரி போன்றவர்கள் ஏன் தமிழர்கள் மீதான இப்படியான பாலியல் வல்லுறவுகளையும், இராணுவ வன்முறைகளயும் பற்றி அரசுடன் பேசுவதோ அறிக்கைகள் விடுவதோ இல்லை? அல்லது இதற்கும் சேர்த்து தான் சங்கரியும் டக்ளசும் கமிஷன் பெறுகிறார்களா? இனத்தை விற்று பிழைப்பதும் தாயை விற்று பிழைப்பதும் வேறல்ல

Edited by vettri-vel

யாழ மண்ணில் நடந்திருக்கும் கொடுமைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே அறிந்திருப்பீர்கள். பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை எங்களைப்போல் கருத்தெழுதுபவர்களின் மனநிலையுடன் ஒப்பிட முடியுமா?

1)கொலை

2)கைது

3)பாலியல் வல்லுறவு

4)காணாமல் போதல்

5)கொள்ளை

6)போக்குவரத்து(வெளியக தொடர்பின்மை)

7)கொலை மிரட்டல்

8)வேலை வாய்ப்பின்மை

9)சுதந்திரமான கல்வி இன்மை

10)பொருள் பற்றாக்குறை

இவையாவும் குறிப்pட்டுச்சொல்லக்கூடிவை இவையெல்லாவற்றையும் மீறி தேசியப் பற்றும்

அதனோடான எழுச்சியும் தோன்றுமா?

சுய சிந்தனை உடைய ஆழுமை மிக்க சமுதாயத்தை யாழ்மண் கொண்டதாயின்

இராணுவ உதவியை பெறவிரும்hதவரகளிடமும்(விருப்

Edited by karunai_nilal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.