Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை நியமித்து ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்ந்துள்ளது – சமந்தா பவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை நியமித்து ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்ந்துள்ளது – சமந்தா பவர்

power01.jpg

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா பவர், அதில், “மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார்.

ஆனால் இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.

அவசர இராஜதந்திரம் தேவை, இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மஹிந்தவை-நியமித்து-ஜனாதி/

  • கருத்துக்கள உறவுகள்

Samantha Power ‏@SamanthaJPower 23h23 hours ago

Democracy in #SriLanka upended by Pres. Sirisena's actions. He promised accountability but now brings back Rajapaksa, who was responsible for war crimes, disappearances.

Urgent diplomacy needed – Sri Lankans have dealt w/ too much bloodshed to go backwards

3 hours ago, கிருபன் said:

  • அவசர இராஜதந்திரம் தேவை, இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரியான மொழிபெயர்ப்பாக நான் கருதுவது:

ராஜதந்திர செயல்பாடுகளின் தேவை அவசியமாகவுள்ளது. இலங்கையர்கள் ஏற்கனவே பெருமளவு ரத்தம் சிந்தி உள்ளனர். அந்நிலைக்கு மீண்டும் செல்லக் கூடாது.

22 minutes ago, Nathamuni said:

Urgent diplomacy needed – Sri Lankans have dealt w/ too much bloodshed to go backwards

  • அவசர இராஜதந்திரம் தேவை, இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரியான மொழிபெயர்ப்பாக நான் கருதுவது:

ராஜதந்திர செயல்பாடுகளின் தேவை அவசியமாகவுள்ளது. இலங்கையர்கள் ஏற்கனவே பெருமளவு ரத்தம் சிந்தி உள்ளனர். அந்நிலைக்கு மீண்டும் செல்லக் கூடாது.

உங்கள் மொழிபெயர்ப்பு, குறிப்பாக கருத்து வெளிப்பாடு, மிகவும் சிறப்பானது!  

அவர் கூறியதை முடிந்தளவு அப்படியே தமிழில் கூறுவதாயின் பின்வருமாறு கூறலாம்.

உடனடி இராஜதந்திரம் அவசியமாகவுள்ளது - பின்னோக்கி செல்ல முடியாதளவிற்கு இலங்கையர்கள் (ஏற்கனவே) பெருமளவு இரத்தம் சிந்தலை சந்தித்துள்ளனர் / சந்தித்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

9 minutes ago, Nathamuni said:

தமிழர்களின் மிகமிகக் கேவலமான / பிற்போக்கான ஒரு செயற்பாடு - எதுக்கெடுத்தாலும் மிகமிகக் கேவலமான நிலையில் உள்ள தமிழ் சினிமாவில் இருந்து உதாரணங்களை தேடிக் கண்டுபிடித்து பதிவிடுவது!

குறிப்பாக தமிழ்நாட்டினர் / தமிழ் சினிமா பைத்தியங்கள் சொந்தமாக கருத்தெழுத வக்கில்லாமல் இவ்வாறு செயற்படுவது ஆரோக்கியமானது இல்லை என்பது எனது கருத்து.

இதை நீண்ட காலமாக சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதிலிருந்தது. இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

தமிழர்களின் மிகமிகக் கேவலமான ஒரு செயற்பாடு / பிற்போக்காகன - எதுக்கெடுத்தாலும் மிகமிகக் கேவலமான நிலையில் உள்ள தமிழ் சினிமாவில் இருந்து உதாரணங்களை தேடிக் கண்டுபிடித்து பதிவிடுவது!

குறிப்பாக தமிழ்நாட்டினர் / தமிழ் சினிமா பைத்தியங்கள் சொந்தமாக கருத்தெழுத வக்கில்லாமல் இவ்வாறு செயற்படுவது ஆரோக்கியமானது இல்லை என்பது எனது கருத்து.

ஐயா போல்,

உங்கள் மொழிபெயர்ப்பு சிறப்பானது.

மொழிபெயர்ப்பினை பலவிதமாக கருத்து புரியுமாறு சொல்லலாம். இந்த வீடீயோவில் செந்தில் சொல்வது போல, 'அண்ணே, சமந்தா சொன்னதை, நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம், நான் சொன்ன மாதிரியும் சொல்லலாம்' என்று சிம்பாலிக்காக சொல்ல வந்தேன்.

நோ டென்ஷன் ப்ளீஸ். :grin:

Just now, Nathamuni said:

இல்லை நாதமுனி! நீங்கள் பதற்றம் அடையாதீர்கள்!

இந்தக் கருத்தை சொல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததால் இப்போது சொல்லியிருக்கிறேன்.

வேறொன்றும் இல்லை.

தமிழர்கள் சொந்தமாக கருத்தெழுதுவது ஆரோக்கியமானது.

அப்படி இல்லையென்றால் மிகவும் உயர்வான பழந்தமிழ் இலக்கியங்களில் / நூல்களில் இருந்து பலவற்றை மேற்கோள் காட்டலாம்.

இதன் மூலம் எமது சமூகம் பலம் பெறும் என்ற எண்ணம் (சரியோ, பிழையோ) என்னுள் உள்ளது.

அதைத் தவிர்த்து, எனது கருத்தில், மிகமிக மட்டமான நிலையை அடைந்துள்ள பெரும்பாலான (ஓரிரண்டைத் தவிர) தமிழ் சினிமாக்ககளை அடிப்படையாக வைத்து கருத்துப் பரிமாற்றம் செய்வதுவும், தமிழ் மக்களின் கவனம் தமிழ் சினிமாக்ககளை நோக்கி திசை திருப்பப்படுவதுவும் தமிழர்களுக்கு ஆரோக்கியமற்றது.

இந்தக் கருத்தை சொல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததால் இப்போது சொல்லியிருக்கிறேன்.

அவ்வளவு தான்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்பிடி சொல்லுவா ....
பின்பு அவங்கள் அடுப்பு மூட்ட முன்னமே 
அப்பத்துக்கு போய் நிற்பதோடு 
இப்போ எல்லாம் சீராக இருக்கிறது என்று பொய் அறிக்கையும் விடுவா. 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிப்புட்டு இருந்தா எப்படி. உடனடியாக சனநாயகத்தை நிமித்தி நிறுத்த.. நாலைஞ்சு போர்க்கப்பல்களை விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புறது. பழசாப் போனதுகளை அன்பளிப்பாக்கிறது. ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை அழித்த கையுடனேயே தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் ஜனநாயகம்.25 நாடுகளாக வந்து உரிமைக்காக போராடிய இனத்தை சிதைத்துவிட்டு போவது ஜனநாயகமல்ல.உங்களால் முடியாதென்றால் அவர்களே சண்டை பிடித்து முடிவை எடுக்கட்டுமென்று விட்டிருக்கலாமே.நீங்களெல்லாம் சேர்ந்து செய்த செயல்களால் இன்று தமிழன் நாடு முழுவதிலுமே அடிமையாக இருக்கிறானே.

கடந்த மூன்று வருடங்களாக உங்களால் பலவந்தமாக அமைக்கப்பட்ட அரசு என்ன தான் செய்தது?இப்ப கூட என்ன சின்னவீடு போயிட்டுதே என்பது தானே கவலை.

இனி இலங்கைக்குள் புகுவதற்கு ஒரே வழி தமிழர் பிரச்சனை தான்.சரி அதையாவது ஒழுங்காக செய்கிறீர்களோ பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.