Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு எதிர்நோக்கும்  ”வியாழேந்திரன் சிக்கல்” - வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VIYALENDRAN DILEMMA OF THE EAST
கிழக்கு எதிர்நோக்கும்  ”வியாழேந்திரன் சிக்கல்”
- வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞன்
.
நண்பர் வியாழேந்திரன் மகிந்த அரசில் இணைந்தமை எதிர்பார்க்காத அதிற்ச்சிச் சேதியாகும். நான் எதிர்ப்பவர் அணி வண்டியில் தொற்றிக்கொள்ளமுன்னம் கொஞ்சம் சிந்திக்க முனைகிறேன்.

அதே சமயம் சோமாலியாவை விட வறுமையில் உழலும் படுவான்கரையை தண்ணீர் மணல் மாபியாக்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்ச்சியில் அவர் தன் பாதுகாப்பைப் பணயம் வைத்துப் போராடியவர் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த “வியாழேந்திரன் சிக்கல்” கிழக்கில் பல தமிழ்த் தலைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைதான். இதனை சம்பந்தர் நன்கு அறிவார். 
.
வியாழேந்திரன் என்னிடம் பேசும்போது தான் கூட்டமைப்பின் கொள்கைகளைத் தொடர்ந்தும் ஆதரிப்பதாகவும் படுவான் கரையை பாதுகாக்கும் வெறியில் வேறு வழிதெரியாது அரசில் இணையும் முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 
.
தமிழர் உரிமை தொடர்பான பிரச்சினையில் தொடர்ந்தும் வியாழேந்திரன் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும். இதனை வியாழேந்திரன் தெளிவுபடுத்த வேண்டும். கூட்டமைப்பு வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை பின்போட்டுவிட்டு அவருடனும் கிழக்கு தலைவர்களோடும் ’வியாழேந்திரன் சிக்கல் தொடர்பாக’ பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
.
கூட்டமைப்பு கிழக்கின் நெருக்கடிகளையும் கிழக்கு தலைவர்கள் எதிர்நோக்கும் விசேட கழ நிலமைகளையும் புரிந்துகொள்வது தொடர்பாக அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். 

கிழக்கின் பிரச்சினைகளை வடபுல தமிழர்கள் புரிந்துகொள்ளுவதில்லை. கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பு கட்ச்சி முடிவின்படி திரும்பப்பெறக்கூடிய விசேட சலுகை வளங்க வேண்டும். உரிமைப் பிரச்சினையில் கூட்டமைபில் தீவிரமாக இயங்கிக்கொண்டே அரசுடன் செயல்பட அவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இதுபற்றி கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும்.

.
இதுபற்றி என் சிந்தனையை மேலும் தெளிவுபடுத்த ஒரு தீர்மானத்துக்கு வர ”வியாழேந்திரன் சிக்கல் “ பற்றிய தமிழர் கூட்டமைபின் சிந்தனைகளையும் கருத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன். கூட்டமைப்போடு பேசுங்கள் என வலியுறுத்தும் அதே சமயம் நான் வியாழேந்திரனிடம் கேட்டுக்கொள விரும்புவது என்னவெனில்.

“ உங்கள் நிலைபாடு முஸ்லிம்களுக்கு கிழக்கில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நட்போடு புரிய வைப்பதாகவும் முஸ்லிம்களின் நியாயமான கவலைகளை தமிழருக்கு எடுத்துச் சொல்வதாகவும் மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இதையே எப்போதும் கிழக்கின் சகல தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு வற்புறுத்திக் கூறி வந்திருக்கிறேன். மீண்டும் அதனை உரத்த தொனியில் கூற விரும்பிகிறேன். 
.
வியாழேந்திரன் தமிழர்களது நிலம் நீர் அபிவிருத்தி பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஆற்றும்போது தான் கிழக்கு தமிழரதும் முஸ்லிம்களதும் தலைமைப் பணியில் இருபவர் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது” என்பதையும் வலியுறுத்துகிறேன். இதனையே கிழக்கு மாகான முஸ்லிம் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கூற விரும்புகிறேன். கிழக்கு முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்கள் முஸ்லிம் மக்களின் நலன்களை பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் அதே தருணம் தாம் கிழக்கு முஸ்லிம்களதும் தமிழரதும் தலைமைப் பணியில் இருக்கிறவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இது கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பேசி தீர்த்தல் மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்பதை வலியுறுத்துவதாகும்.
.
வியாழேந்திரன் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை சந்தித்து பேசவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சோனகரின் நலனில் வந்து நிற்கிறீங்களே அது தான் உங்கள் சுயரூபம். இனியும் சோனகருக்காக குனிவதை நிறுத்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சோனகரின் நலனில் வந்து நிற்கிறீங்களே அது தான் உங்கள் சுயரூபம். இனியும் சோனகருக்காக குனிவதை நிறுத்துங்கள். 

இந்தாளுக்கு இந்தியர்களால் கொடுக்கபட்ட வேலை அது திறம்பட செய்யுது அந்தாள் அடுத்த வாய்ப்பு கிடைக்கணும் எல்லே சும்மா வாயை பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் முடியாது அவரால் .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவாயிரம் தமிழ் மக்களின் காணிகளும்.. சொத்துக்களும்.. பரம்பரை உரிமைகளும்.. கிழக்கில்.. முஸ்லீம் மதவாத அரசியல் மற்றும்... காடைக்குழுக்களால்... முஸ்லிம்.. அமைச்சர்களால்.. அரசியல் வாதிகளால்... அபகரிக்கப்படும் போது... கபளீகரம் செய்யப்படும் போது.... கம் என்று இருந்தவை எல்லாம்.. இப்ப வியாழேந்திரன் என்ற தமிழருக்கு வகுப்பெடுக்கினம்.

ஹிஸ்புல்லா.. தமிழ் மக்கள் மீது அதிகாரம் செய்ய.. மகிந்த பக்கம் சாய முடியும் என்றால்.. வியாழேந்திரனும் அதையே முஸ்லீம்கள் மீது பிரயோகிக்க.. அமைச்சராவதில் தவறில்லை.

ஆனால்.. மகிந்த என்ற இரத்தக் காட்டேரியோடு சேர்ந்து.. முஸ்லீம் மதாவத அரசியல் பூதத்தை நசுக்க முடியுமா என்பது கேள்விக் குறியே..?!

கடந்த காலம் உணர்த்திய உண்மைகளை இன்னும் முஸ்லிம் சமூகக் குழுமமும்.. தமிழினமும்.. இன்னும் சரியான உணர்ந்து கொள்ளவில்லை. ?

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு அவசரப்படாமல் 
தீர்க்கதரிசனத்துடனும் பொறுமையுடனும்

வடகிழக்கில் மையப்பட்ட ஜனநாயகத்துடனும்

செயல்பட வேண்டிய தருணமித்து

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, poet said:

கூட்டமைப்பு அவசரப்படாமல் 
தீர்க்கதரிசனத்துடனும் பொறுமையுடனும்

வடகிழக்கில் மையப்பட்ட ஜனநாயகத்துடனும்

செயல்பட வேண்டிய தருணமித்து

நீங்கள் இந்த களத்தில் கூறியதிலிருந்து நான் நினைக்கிறேன் உங்களுக்கு கூட்டமைப்புகாரர்களுடன் தனிப்பட்ட தொடர்புகள் இல்லை ஆனால் சோனக அரசியல்வாதிகளிடம் உள்ளது.

ஏன் அவர்களிடம் உங்களால் இப்படி கூற முடியாது ? வட கிழக்கில் சோனகரை ஜனநாயகத்துடன் செயற்படுமாறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீரா,  ஊகங்களை உண்மையென்று நம்பிவிடுவது தவறு. களநிலமைகளை தெரிந்து கொள்ளுங்கள் ஊகிக்கவேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
Just now, poet said:

மீரா, உங்கள் பிரச்சினையே நீங்கள் உங்கள் ஊகங்களை உண்மையென்று நம்பிவிடுவதுதான். அதற்க்கு நான் என்ன செய்வது? களநிலமைகளை கேவிசெவியனாக ஊகிக்கவேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 

இதில் ஊகம் எங்கு வந்தது? வட கிழக்கில் சோனகரின் அடாவடி உங்களுக்கு தெரியாதா? 

ஒரு சோனக அரசியல்வாதியை நோக்கி ஜனநாயகத்துடன் செயற்பட இதுவரை கூறினீர்களா?

இதை வாசியுங்கள் உங்கள் சோனகரின் கிழக்கு ஜனநாயகம்

https://www.yarl.com/forum3/topic/219643-கிழக்கு-பாஉ-வியாளேந்திரன்-கிழக்கு-மாகாண-அபிவிருத்தி-அமைச்சர்-ஆனார்-என-டெயிலி-மிரர்-செய்தி/?do=findComment&comment=1348097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி மீரா, உங்கள் சுதந்திரத்தில் நான் தலையிடவில்லை. புலுமலை பிரச்சினையில் தீவிரமாக உழைத்தவர்களில் நானும் ஒருவன். எனினும் உண்மையை தேடுங்கள் என்பதை வலியுறுத்துகிரேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

சரி மீரா, உங்கள் சுதந்திரத்தில் நான் தலையிடவில்லை. புலுமலை பிரச்சினையில் தீவிரமாக உழைத்தவர்களில் நானும் ஒருவன். எனினும் உண்மையை தேடுங்கள் என்பதை வலியுறுத்துகிரேன்.

"வியாழேந்திரன் சிக்கல்" எனும் போதே உங்கள் உண்மை புலப்படுகின்றது.

அரசில் இணைந்த பின்னர் வியாழேந்திரனுடன் கதைத்ததாக எழுதும் தாங்கள் பின்னர் ஏன் இங்கு வந்து அவருக்கு அறிவுரை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீரா, நான் எல்லா விடயங்களிலும் எல்லோருடனும் பேசி நிலமைகளை நன்கு அறிந்தபின்னரே முடிவுகள் எடுக்கிறேன். அது என் இயல்பு மீரா. தவறாயின் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு தாம் நடுநிலைமையாளர் என  நிரூபிக்க வேண்டியிருக்கிறது

அதற்கு  இவர்கள்  மிக  மிக  இலகுவாக பலியாக்குவது  தமிழர் நலனை மட்டுமே.

அதில் கவிஞர்  முதன்மையானவர்.tw_angry:

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நண்பா, உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் போராட்டத்துக்கு அணில்மாதிரியாவது நானும் பங்களித்திருக்கிறேன். பலதடவை மரணத்துழ் மூழ்கி மீண்டிருக்கிறேன்.

இதனை காலம் ஒருநாள் சொல்லும். அப்போது நான் இல்லாமல் போகலாம். கிழக்கு மாகாணம் தொடர்பாக எனக்கு மென்மையான பார்வை உண்டு. அதை என் பெலகீனமென நான் கருதவில்லை.

நான் என்னை நிரூபிக்க பிரபலமாக விரும்பியிருந்தால் வன்னியிலும் உலக அரங்கிலும் வேறு நிலையில் இருந்திருப்பேன். இப்பவும் அத்தகைய வாய்ப்புகள் உள்ளன. நான் ஒரு கர்மயோகியாக வாழ்ந்து மடியவே விரும்புகிறேன்.

நீங்கள் என்மீது அன்பு செய்தவர். உங்களுக்கு இல்லாத உரிமையா விசுக்கு.  நீங்கள் சேறடித்தால் நன் நிச்சயம் கோபிக்க மாட்டேன். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, poet said:

இல்லை நண்பா, உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் போராட்டத்துக்கு அணில்மாதிரியாவது நானும் பங்களித்திருக்கிறேன். பலதடவை மரனத்துழ் மூழ்கி மீண்டிருக்கிறேன்.

இதனை காலம் ஒருநாள் சொல்லும். அப்போது நான் இல்லாமல் போகலாம். கிழக்கு மாகாணம் தொடர்பாக எனக்கு மென்மையான பார்வை உண்டு.

நான் என்னை நிரூபிக்க பிரபலமாக விரும்பியிருந்தால் வன்னியிலும் உலக அரங்கிலும் வேறு நிலையில் இருந்திருப்பேன். இப்பவும் அத்தகைய வாய்ப்புகள் உள்ளன. நான் ஒரு கர்மயோகியாக வாழ்ந்து மடியவே விரும்புகிறேன்.

நீங்கள் என்மீது அன்பு செய்தவர். உங்களுக்கு இல்லாத உரிமையா விசுக்கு.  நீங்கள் சேறடித்தால் நன் நிச்சயம் கோபிக்க மாட்டேன். 

கருத்துக்களை  வைக்கும் போது அதை சேறு என  உதறாதீர்கள் தோழர்

கன  காலம் பொறுத்த  பின்பே  கருத்தை  வைத்தேன்

முடிந்தால் உங்களை  மீளாய்வு  செய்யுங்கள்  தோழர்

தமிழினம் குட்டக்குனிந்து  தான் வருகிறது

தொடர்  தோல்விகள்  காலால்  உதைத்தல்களுக்கு  மத்தியிலும் கதவை  தட்டித்தான் வருகிறது

ஆனால் .....???

இனி  தமிழினம் அடுத்த  கட்டங்கள்  பற்றியே  ஆராயும்

முடிவு செய்யும்

செய்யணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.