Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மஹிந்தவை நம்பலாம்: சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மஹிந்தவை நம்பலாம்: சித்தார்த்தன்

maxresdefault-1-1-720x450.jpg

இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத்தருவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்தியகுழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களிற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தருவார் என நம்புகின்றோம்.

இவற்றிற்கான தீர்வினை மஹிந்த அரசு எழுத்திலே தரவேண்டும். அனால் அவருடைய பழைய நடவடிக்கைகளினால் உடனடியாக நம்புவது கடினமாக இருக்கும்.

என்றாலும் அவரினால் நிச்சயமாக செய்ய முடியும் என நம்பமுடியும். ஆனால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அவர்களுடன் இருப்பதுதான் பிரச்சனை.

இருந்தாலும் ஜனாதிபதி, மஹிந்த, ரணில் ஆகியோருடன்தான் எமது தீர்வு பற்றி கதைக்க முடியும். சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்பு ஒன்றாக இருந்த போது இவ்விடயம் நடக்காவிட்டாலும் ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பினோம். அதனால்தான் பல விடயங்களுக்காக அவர்களுடன் ஒத்துப்போயிருந்தோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://athavannews.com/இனப்பிரச்சனைக்கான-தீர்வ/

2 hours ago, கிருபன் said:

இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மஹிந்தவை நம்பலாம்: சித்தார்த்தன்

தமிழினப் படுகொலைகாரர்களை நம்பி ஈனப் பிழைப்பு நடத்தும் கேவலமான குணம் இன்னமும் சித்தார்தனிடம் ஆழமாக ஒட்டியே இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய மகிந்த போன்ற இனவாதிகளை 
சிங்களவரும் 
அவர்களின் கடந்த  கால அருவருடி தமிழ் இன 
துரோகிகளும் நம்பலாம். 

இது ஒரு செய்தியா ?? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத்தருவார்

சீடனை அனுப்பி ஆழம் பார்த்தவர், இப்போ தானும் இறங்குவதற்கு தயார் என்பதற்கான கட்டியம் இது. இன்னும் எத்தனை ஈசல்கள் வெளிவரப்போகுதோ

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என்றாலும் அவரினால் நிச்சயமாக செய்ய முடியும் என நம்பமுடியும். ஆனால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அவர்களுடன் இருப்பதுதான் பிரச்சனை.

அரசியல் விளையாட்டு விளையாட இவர்களுடன் பிக்குகளும்  சேர்ந்து கொள்வார்கள்.

கூட்டமைப்பு மகிந்தவை நிராகரித்து நாளாகி விட்டதே.

ம்ம் தனது கட்சிக்காரருக்கு வக்காலத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, கிருபன் said:
maxresdefault-1-1-720x450.jpg

இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத்தருவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் சிறிலங்கா தேர்தலில் மகிந்தவை தேர்வு செய்தபடியால் தான் ஈழத்தமிழினம்  பாரிய அழிவுகளை சந்தித்தது.

இது 2009களில் பெரிய செய்தியாக இருந்தது.

இந்த செய்தி இப்போதும் சந்தர்ப்பங்களுக்கேற்ப பகிரப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.